வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் - 02

GG writers

Moderator
என்னதான் சுகமோ நெஞ்சிலே...❤️

அத்தியாயம் - (02)

அன்று!

"ஏய் யாழி சீக்கிரம்டி... சீக்கிரம்... யாராச்சும் பார்த்தா அம்புட்டு தான் நாம" என்றபடி‌‌ யாராவது வருகிறார்களா என்று வேவு பார்த்து கொண்டு இருந்த மீனா கத்தினாள்.

"ப்ச் கொஞ்சம் வாயை மூடிட்டு தான் இரேன்டி... விளையாட்டு முடிய இன்னும் நேரம் இருக்குடி... அதுக்குள்ள முடிச்சிடலாம்... ப்ச்ச்... நம்ம அவசரம் புரியாம இந்த சைக்கிள் வேற பஞ்சராகி தொலைய மாட்டுங்குதே..."

"அய்யயோ... யாழி... போச்சுடி... போ... உன் மாமன் மொவனும்... அந்த சந்தனா புள்ளையும் வந்துட்டாகடி.. விளையாட்டு முடிய நேரமாகும்னு சொன்ன... இப்போ பாரு... இன்னைக்கு செத்தோம்டி" என்ற மீனாவின் குரல் விட்டால் அழுதுவிடுவேன் என்பது போன்று ஒலித்தது.

செழியனும்... சந்தனாவும்... இவர்களை நெருங்க சட்டென்று மீனாவின் கையை பிடித்திழுத்து அங்கிருந்த மரத்தின் பின் ஒளிந்து கொண்டாள் யாழ்மொழி.

"மாமா... இன்னைக்கு கேம் சூப்பரா இருந்துச்சு தானே... நான் பார்த்தியா எவ்ளோ பேரை அவுட் ஆக்குனேன்..." என்று கோ-கோ விளையாட்டில் தான் நன்றாக விளையாடியதை கூறிட, அவனிடமோ மௌனம் மட்டுமே.

உர்ரென்ற அவன் முகத்தை பார்த்தவள், "ஏன் மாமா இன்னுமா என்மேல கோவமா இருக்க... நான் சும்மா தான் அந்த யாழியை தொட்டேன்.. அவளா போய் கீழ விழுந்ததுக்கு நானென்ன செய்ய முடியும்"

"ப்ச் எத்தனை மொறை சொல்லி இருக்கேன்... அவளோட வம்பு பண்ணாதன்னு" என்ற செழியன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தான்.

"ஹான்... அவ மட்டும் மதியம் என்னை திமிர்புடிச்சவன்னு சொன்னா தானே... அது மட்டுமில்லாம உன்னையும் நெட்டைகொக்குன்னு சொன்னா... அதுதென் எனக்கு கோவம் வந்திடுச்சு..." என்று தான் செய்ததற்கு நியாயம் கற்பித்திட, சலிப்பாக உணர்ந்தான் செழியன்.

ஏனெனில் எப்போதும் இருவரின் பஞ்சாயத்தை தீர்த்து வைக்கவே இவனுக்கு போதும் போதும் என்றாகி விடும்.

யாழியும் இவனுக்கு அக்கா மகள் தான்... ஆனால் சந்தனாவிடம் இருக்கும் நெருக்கம்... யாழியிடம் இல்லை... காரணம் அவனின் சின்ன மாமன்... அதாவது யாழியின் அப்பாவை இவனுக்கு சிறிதும் பிடிக்காது.

சரி சிறியவர்கள் தானே போக போக சரியாகிவிடும் என்று நினைத்த செழிய‌ன் அறியவில்லை... சண்டைகள் இனிதான் பிரளயத்தை உண்டாக்க போகிறதென்று.

"சரி வா சந்தும்மா போலாம்... அப்புறம் உன் ஆச்சி வைய்ய போறாக" என்றபடி சைக்கிளில் அவளை அமர்த்தியபடி ஒட்டி சென்றான்.

"ஏன்டி யாழி அந்த அண்ணா பேசுனதை கேட்டியா... அவுக நல்லவுகளா தான் இருக்காக.‌‌.."

"ம்க்கும் நல்லவங்களா இருந்து என்ன பிரியோஜனம்... அதுதான் அந்த சந்தனா கூட இருக்காகளே"

"ஏட்டி அப்போ சைக்கிள்ளல காத்தை புடுங்கிவுட்டியா..."

"பின்ன... யாழியா கொக்கா... அதெல்லாம் புடிங்கியாச்சு... புடிங்கியாச்சு" என்று இருவரும் பேசியபடியே நடந்து செல்ல... சிறிது தூரத்திலே சைக்கிள் பஞ்சரோடு நின்றிருந்தனர் இவர்கள் பேச்சுக்கு சொந்தகாரர்கள்...

"என்ன மாமா... இப்படி சைக்கிளு பஞ்சராகி நிக்குது... இப்போ எப்படி வீட்டுக்கு போறது" என்ற சந்தனாவிற்கு இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது. ஏனெனில் அவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் அவ்வளவு தொலைவு...

அவ்வளவு தூரம் நடக்க முடியாது என்பதாலே தந்தையிடம் அடம்பிடித்து சைக்கிள் வாங்கி‌‌... தனக்கு ஓட்டத் தெரியாது என்ற காரணத்தை வைத்து செழியனை டிரைவர் ஆக்கியது.

"தெரியலையே சந்து... மதியம் நிறுத்தும் போது கூட நல்லாதானே இருந்துச்சு..." என்று யோசித்தபடி நிற்க மழையும் படபடவென்று தூரல் போட ஆரம்பித்தது.

"அடியேய் சந்து...பொந்து... என்ன சைக்கிள் பஞ்சரா... அப்போ இன்னைக்கு நடராஜ சர்விஸ் தான் போல... மதியம் பழிப்பாடி காட்டுன பழிப்பு... இப்போ காட்டு பாக்கலாம்... யாருகிட்ட இந்த யாழிகிட்டவா" என்று நாக்கை துருத்தி காட்டியவளை சந்தனா அடிக்க பாய்ந்திட... அவளை இழுத்து பிடித்தான் செழியன்...

"அமைதியா இரு சந்து..." என்றவன் யாழை முறைத்தபடி இருக்க... அதில் லேசாக பயந்தாலும் காட்டி கொள்ளாது நிற்க...

"ஏய் யாழ்மொழி... என்ன பழக்கம் இது... எதுக்கு சைக்கிள்ள பஞ்சர் பண்ணி வைச்சிருக்க... உன் அம்மைக்கிட்ட சொல்லனுமோ" என்று அதட்டியவனை கண்டு உண்மையில் பயந்து தான் போனாள். இருந்தும்...

"இங்காருங்க நீங்க மிரட்டுன நான் பயப்படனுமா... அதெல்லாம் இந்த யாழி பயபடமாட்டா... என் அம்மைக்கிட்ட சொல்றதுன்னா சொல்லிக்கோங்க... நானும் நீங்க ரெண்டு பேரும் என்னைய சேத்துல தள்ளி விட்டதை சொல்லுவன்..." என்றவளின் பேச்சு இவனுக்கு திமிராக தோன்றிட... இருப்பினும் இருவரையும் சேர்த்து வைக்க பொறுமையாகவே பேசினான்.

"இங்க பாரு யாழி... அது ஏதோ தெரியாம நடந்துடுச்சு..." என்றவன் முடிக்கும் முன்பே...

"அப்போ நானும் தெரியாம தான் சைக்கிள்ளை பஞ்சர் பண்ணேன்"

"ஏய் கொஞ்சமாச்சும் புரிஞ்சுக்கிறயா... உன் பெரியம்மா பொண்ணு தானே அவ... ரெண்டு பேரும் கூட்டா இருந்தா என்ன"‌

"ஹான் இதை அவக்கிட்ட சொல்லு... எனக்கிட்ட சொல்லாத... ப்பே.."
என்றவளின் பேச்சு இவனுக்கு கோபத்தையும்... சலிப்பையும்... தான் கொடுத்தது... சந்தனாவிடம் சொன்னால் கேட்கவில்லை..‌. இவளாவது கேட்பாள் என்று பார்த்தால்... 'ம்ஹூம்' பெருமூச்சொன்று தானாக கிளம்பிட தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் யாழ்மொழியை கண்டு,

"இப்போ எதுக்கு என்னைய வைச்சக்கண்ணு வாங்காம பார்த்திட்டு இருக்க" என்று எரிந்து விழுந்தான் செழியன்.

"இல்ல... எனக்கொரு சந்தேகம்.. நீயேன் எப்போ பார்த்தாலும் இவ கூடவே இருக்க... உனக்கு கூட்டாளிங்க யாரும் இல்லியா... இல்ல இவளை தான் கட்டிக்க போறியா" என்றவளை அதிர்ந்து பார்த்தவன்... அவள் முதிர்ச்சியில்லாத பேச்சில் சீண்ட தோன்றிட.‌..

"ஏன் அவ மட்டும் தான் எனக்கு மாமன் பொண்ணா... நீயும் தான் எனக்கு மொறை..." என்றவனை கண்டு முட்டை கண்களை விரித்தவள்...

"ஹான்... நான்லாம் உன்னை கட்டிக்க மாட்டேன்... எனக்கு உன்னை மாதிரி நெட்டைக்கொக்கை புடிக்காது" என்று அவனை முறைத்து பார்த்துவிட்டு நடக்க முற்பட்டவளை மறைத்து நின்றவன்,

"ஏன் புடிக்காது" என்று கைகட்டி நின்றவன் தோற்றத்தில் பயந்து என்ன சொல்வது என்று தெரியாது முழித்து நின்றவள்....

"ஏன்...ஏன்னா... இப்போ என்ன சொல்றது... ஹான்... என் அப்பாவுக்கு உன்ன புடிக்காது... அதுதான்..." என்றவள் தன்னை கண்டு கொதித்து கொண்டு இருக்கும் சந்தனாவை மேலும் சீண்டும் பொருட்டு...

"அப்போ இன்னைக்கு கால் கடுக்க நடந்தே வா... வரட்டா சந்து... பொந்து..." என்றவள் பேவென நின்ற தோழியை இழுத்து கொண்டு போக... சில நொடிகளிலே மழையின் வேகம் இன்னும் வலுத்ததை கண்டு

"அய் மழை... மழை..." என்று குதுகலித்தவள்,

"மழை வருது... மழை வருது நெல்லு வாருங்க... முக்கபடி அரசி போட்டு முறுக்கு சுடுங்க... ஏர் ஓட்டுற மாமனுக்கு எண்ணி வைங்க... சும்மா இருக்க மாமானுக்கு சுடுக்கு வைங்க" என்று பாடியவளோடு மீனாவும் சேர்ந்து கொள்ள... சில நிமிடம் முன் தன்னை முறைத்தவளையும்... இப்போது மழையில் குதுகலித்து செல்பவளையும் கண்டு கண்கள் சுருங்க பார்த்த செழியன் முகத்தில் சிறிதும் சிரிப்பில்லை... முகம் கல்லாய் இறுகியிருக்க...

'என் அப்பாவுக்கு உன்னைய புடிக்காது... அதுதான்' என்றவளின் வார்த்தை மட்டுமே அவன் காதில் எதிரொலித்து கொண்டிருந்தது.

••••••••••••••

இன்று!

பல கடைகளை உள்ளடக்கி கொண்டிருக்கும் மல்டி காம்ப்ளக்ஸ் மால். அதில் ஒரு கஃபே ஷாப்பில் தன் முன் அமர்ந்து இருப்பவளை விடாது பார்த்து கொண்டிருந்தான் சந்தோஷ்.

"பிளிஸ் சந்தோஷ்... கொஞ்சம் அன்ஈசியா இருக்கு" என்றபடி அவனை பாராது சுற்றம் நோக்கினாள் பெண்ணவள்.

"எனக்கு ஆன்சர் வேணும் யாழி... வீட்டுல எல்லாரும் சொன்னாங்க உங்களுக்கு என்னை பிடிச்சு இருக்குன்னு... எனக்கு உங்க வாயால அதை கேட்கனும்" என்றிட,

அவளும் மேல்பூச்சு எதுவுமின்றி... "எனக்கு உங்களை பிடிச்சு இருக்கு சந்தோஷ்" என்று தன் முன் அமர்ந்து இருப்பவன் முகத்தை பார்த்து சொன்னவள் முகத்தில் மென்புன்னகை.

"அதுக்குள்ள என்னை பிடிச்சிருச்சா யாழ்மொழி... நாம் மீட் பண்ணி பைவ் மினிட்ஸ் கூட ஆகல... அதுக்குள்ள உங்களை இம்பரஸ் பண்ணிட்டனா" என்று குறும்பு கூத்தாட கேட்வனின் குரலில் நேசம் இழையோடியது. அது அவள் மீது அவன் கொண்ட விருப்பத்தின் சாயல்.

"ஐ... மீன்... பிடிச்சு இருக்குன்னா... நீங்க நினைக்குற மாதிரி இல்ல... என் அப்பாவுக்கு உங்களை பிடிச்சு இருக்கு... அதனால எனக்கும் உங்களை புடிச்சு இருக்கு..." என்றிட‌, ஒவென்றவனின் குரலில் சுருதி இறங்கியிருந்தது.

யாழ்மொழி... இருபத்தைந்து வயது இளம்பாவை.... தற்போது மாடலாக வலம் வந்து கொண்டிருப்பவள்... சிறு சிறு விளம்பரங்களிலும் நடித்து கொண்டிருக்கிறாள்.

"ம்ம்... அப்புறம்..."

"நீங்கதான் சொல்லணும் சந்தோஷ்"

"பேச எதுவுமே இல்லையா யாழி" என்று கேட்டவன் மனதில் தனக்கென்ன பிடிக்கும் பிடிக்காது என்பதை கேட்பாளா என்ற ஆவல் எழுந்தது.

"வேறென்ன சந்தோஷ்... நீங்க தான் பேச கூப்புட்டீங்க... இப்போ என்ன கேட்டா" என்றவளின் பதிலில் புஷ் என்றானது.

யாழ்மொழியை முதன் முதலில் ஒரு திருமண வரவேற்பில் தான் கண்டான். மென் பட்டு உடுத்தி இருந்தவளின் எழில் இவனை கவர்ந்திழுக்க... பார்த்ததுமே அவள் மீது விருப்பம் கொண்டுவிட்டான்.

பின்பு யாரென்று விசாரித்தால் அவன் தந்தையின் நெருங்கிய தோழரும்... பிஸ்னஸ் பார்ட்னருமான ஊமைத்துரையின் மகள் என்றதும் தன் தந்தையிடம் விருப்பம் தெரிவிக்க... இதோ பெற்றவர்களின் சம்மதத்தோடு இவர்களின் முதல் சந்திப்பு.

பல எதிர்பார்புகளுடன் வந்தவனுக்கு பெரும் ஏமாற்றமே!

அதனை உள்ளுக்குள் மறைத்து கொண்டவன்...

"சரி யாழ்மொழி வர்றீங்களா... வீட்டுல உங்களை டிராப் பண்ணிடுறேன்..." என்றழைத்தவன் அவளை வீட்டில் விட்டுவிட்டு தன் காரை எடுத்தவன் அடுத்த திருப்பத்திலே ஒரு ஆட்டோவை இடித்திருக்க...

அதுவும் அங்கிருந்த‌ மரத்தை உரசி தடுமாறி நின்றது!

தன் கவனக்குறைவால் நடந்த விபத்தை கண்டு பதறியவன்... வேகமாக காரை விட்டு இறங்கி...‌ அவர்களை நெருங்க முயல... அதற்குள்ளே ஆட்டோவில் இருந்து இறங்கியவன் கரம் சந்தோஷின் கன்னத்தை பதம் பார்த்திருக்க... அவனை உறுத்து விழித்தபடி முறைத்து நின்றிருந்தான் செழியன்.

தொடரும்...

*********

ஹாய் மக்களே...

கதை எப்படி போகுதுன்னு சொன்னிங்கன்னா நல்லா இருக்கும்... யாருமே இல்லாத கடைக்கு டீ ஆத்துற பீல்...🙃🙃

நன்றி!
- gg_97
 
Last edited:
அடுத்த அத்தியாயம் வாசிக்க⬇️

 
Top