GG writers
Moderator
உயிராடும் உணர்வே!
அத்தியாயம் 1
அது ஒரு திருமண மண்டபம். இரவு எட்டு மணி இருக்கும். மண்டபத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே சலசலப்பும் பரபரப்புமாக இருந்தது. சிலர், மறுநாள் காலையில் நடக்க இருக்கும் திருமணத்துக்கு பம்பரமாக சுழன்று வேலை செய்து கொண்டு இருந்தனர். தோரணம் கட்டுவது, வாழை மரம் கட்டுவது, மண்டப அலங்காரம், மண்டப வாசலில் கோலம் போடுவது, மண்டபத்தில் இருப்பவர்களுக்கு சிற்றுண்டி கொடுப்பது என்று வேலைகள் விறுவிறுவென நடந்து கொண்டு இருந்தன. இருந்தாலும் ஆங்காங்கே கூட்டம் கூடி கதைப்பதும், கலகலப்பதுமாக இருந்த அந்த மண்டபத்தின் மணமகள் அறைக்குள் இளம் பெண்களின் சிரிப்புச் சத்தம் தான் ஓங்கி ஒலித்துக்கொண்டு இருந்தது.
அந்த மணமகள் அறையில் இருந்த கட்டிலில், கண்ணைப் பறிக்கும் நீல நிற பட்டுச்சேலையில் அழகாக கையில் பதிந்துவிட்ட மருதாணியுடன் கன்னங்களில் வெட்கச் சிவப்பேற அமர்ந்து இருந்தாள் பெண் ஒருத்தி. நாளைய திருமணத்தின் நாயகி. அவள் கயல்விழி. கயல்விழி சந்தானம்.
இப்போது அவளால் சத்தியமாக முடியவில்லை. வெட்கம் பிடுங்கித் தின்றது. எங்காவது ஓடிவிடலாம் போலிருந்தது. அந்தளவுக்கு அவளின் தோழிகள் அவளை கேலியும் கிண்டலும் செய்து கொண்டு இருந்தனர். மணப்பெண் என்றால் கேட்டவும் வேண்டுமா. ஒரு வழி செய்துவிடமாட்டார்கள்?
இதே மண்டபத்தில் மணமகன் அறையில் மணமகன், அதான், நாளைய நாளின் நாயகன், அவனோடு அவன் தோழர்களும் கலகலத்துக்கொண்டு இருந்தாலும் பெண்கள் அளவுக்கு இல்லை. ஒரு அமைதியான கலகலப்பே அங்கு நிலவியது.
“டேய்! போதும்டா நிறுத்துக்க. கல்யாணம் முடிஞ்சா, ஒன் வீக்ல நான் ஆபிஸ் போகணும். ஒன் வீக் தான் எனக்கு லீவே. இந்த ஒன் வீக்குக்குள்ள தான், நான் அங்க வீடு மாற வேண்டிய வேலைகளையும் பார்த்தாக வேணும். இதுக்குள்ள நீங்க வேற ஏன்டா”
என்று ஒரு சின்ன சிரிப்புடனே சலித்துக்கொண்டான் அவன். அவன் கார்த்திக். கார்த்திக் வேல்முருகன்.
“ஏன் டா, உன் அபீஸ்ல, கல்யாணத்துக்காகவாவது ஒரு டூ வீக்ஸ் லீவ் தரமாட்டாங்களாடா.” என்றான். அவன் ஊர் நண்பன் ஒருவன்.
“இல்லடா. இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள முடிக்க வேண்டிய ஒரு ஒர்க் இருக்கு. அது நம்ம கம்பனிக்கு ரொம்ப முக்கியமான ப்ராஜக்ட் . அதுக்காக தான்டா ஒன் வீக் லீவ் எடுத்துக்கிட்டேன் .” என்றான் கார்த்திக், அவன் அலுவலகத்தை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல். ஆனாலும் அவன் சொன்ன விசயம் என்னவோ உண்மை தான்.
அவன் மேனேஜர் அவனை இரண்டு வாரங்கள் விடுமுறை எடுத்துக்கோள் என்று சொன்னாலும் அவன் தான் மறுத்தான். ஏனெனில் அந்த வேலையின் பொறுப்பாளனும் அதை வழிநடத்துபவனும் அவனே என்பதால், அதில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் அது அவன் தலையில் தான் வந்து விழும். அதைவிட தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை உரிய நேரத்துக்குள் செவ்வனே செய்து முடிப்பதில் அதீத கவனம் எடுப்பான் அவன். வேலை நேர்த்தியாக முடியாவிட்டால் அவனுக்கு அதிருப்தி தான். அதனாலேயே தன் திருமணம் என்றாலும் பரவாயில்லை , தனக்கு ஒரு வார விடுமுறையே போதும் என்று விட்டான்.
“சரிடா நாங்க போய்ட்டு காலையில வர்றோம்” என்றுவிட்டு அவன் நண்பர்கள் சென்றுவிட , கயலை பற்றிய யோசனையில் ஆழந்தான் கார்த்திக்.
இங்கு மணமகள் அறையிலும் பெண்கள் அனைவரும் சென்றிருக்க தனித்திருந்த கயல் முகத்தில் மாறாத புன்னகைக் கீற்று ஒன்று தங்கியிருந்தது. அவள் இருக்கும் அந்த அறையை பார்வைகளால் ஒரு சுற்றுச் சுற்றினாள். இதே திருமண மண்டபத்தில் தானே எல்லாம் ஆரம்பித்தது. அவர்கள் இருவரும் சந்தித்தது , அறிமுகமாகியது ,முட்டிக்கொண்டது , மோதிக்கொண்டது என எல்லாமே. அதை நினைக்கும் போதே சிறு சிரிப்பு அவளுக்கு .
தன் நினைவலைகளினூடு , தான் முதன் முதல் கார்த்திக்கை சந்தித்த அந்த நாளுக்குச் சென்றிருந்தாள் கயல்விழி .
இதே திருமண மண்டபம் . அன்று கயலின், ஊர்த் தோழி மட்டுமல்ல, சிறு வயதில் இருந்தே இன்று வரை மிக நெருங்கிய தோழியுமான அமுதாவுக்கு திருமணம்.
“ அம்மு , உன்னோட நகை, திங்க்ஸ் எல்லாமே அந்த பச்சைப் பைக்குள்ள போட்டு இருக்கேன்.”
கழுத்தில் மஞ்சள் தாலி அழகாய் தொங்க புதுப் பெண்ணின் அத்தனை பொழிவுடனும் , தன் கணவனுடன் புகைப்படம் எடுக்க தயாராகிக்கொண்டு இருந்தவளிடம் , காதுக்குள் அவசரமாக ரகசியம் பேசிவிட்டு வேக நடையுடன் மேடையை விட்டு இறங்கச் சென்றாள் கயல்விழி.
அந்த அவசர வேகத்தில் யாரோ ஒரு வளர்ந்தவன் மேலே மோதுண்டு , தோள்ப்பட்டை வலிக்க நின்றுவிட்டாள் அவள்.
மோதிய அந்த வளர்ந்தவனோ, இவளை திரும்பிக் கூட பார்க்க இல்லை. மோதிய வேகத்திலேயே அமுதாவிடம் விரைந்த அவனை “கார்த்திக் அண்ணா!” என்று அச்சிரியமும் பரவசமுமாக கைக்குலுக்கிக் கொண்டாள் அமுதா.
இதை பார்த்திருந்த கயலுக்கு , சுறுசுறுவென்று மண்டைக்குள் கோபம் ஏறியது. மோதியவன் ஒரு மன்னிப்பு கேட்டானா, திரும்பி என்ன ஆனது என்று ஒரு பார்வை ?, அது கூட இல்லை. ஏதோ கல்லிலோ மரத்திலோ இடித்தவன் போல போகிறான், வளர்ந்து கெட்ட திமிர் பிடித்தவன் என்று முகம் கோபத்தில் சிவக்க மனதுக்குள் அர்ச்சித்துக் கொண்டு அவனை வெறித்தப்படி நின்றாள்.
அப்போது தான் அமுதாவின் ‘கார்த்திக் அண்ணா’ என்ற அழைப்பு அவளை தீண்டியது. ஓ... அமுதா அடிக்கடி சொல்லும் நல்லவன் வல்லவன் இவன் தானா. ரொம்பத் தான் நல்லவன். இடித்து விட்டு ஒரு மன்னிப்புக் கூட கேட்காதவன் என்று எரிச்சலலுடன் நினைத்துக் கொண்டு , அந்த மேடையில் இருந்து விறுவிறு என்று சென்றவள் தானும் வேகமாக வந்து அவன் மீது மோதியதை மறந்து போனாளோ என்னவோ.
“அண்ணா…! வார மாட்டீங்கன்னு சொன்னீங்க” என்று அச்சிரியமாக கேட்டாள் அமுதா.
“அது எப்படி டா? என் ஃப்ரெண்ட் தங்கச்சினா , என் தங்கச்சி இல்லையா?, அது மட்டுமா, என் தங்கச்சிய கட்டிக்கப்போறதும் என் ஃப்ரெண்ட் இல்லையா. அப்புறம் எப்படி நான் வராம இருக்குறது” என்று மனமார சிரித்துக்கொண்டே அமுதாவின் அருகில் நின்ற அவள் கணவன் சுரேஷின் தோளில் தட்டியப்படி சொன்னான் கார்த்திக்.
“ஏன்டா , இவ்வளவு பேசுறியே .. உன் தங்கச்சி கல்யாணத்துக்கு இப்பவாடா வருவ?” என்று இவ்வளவு நேரமும் சிரித்துக் கொண்டு இருந்த சுரேஷ், இப்போது இவனை முறைத்தப்படி கேட்டான். அவன் அறிவான் இவனுக்கு வேலைப்பழு அதிகம் என்று. தான் இந்த திருமணத்துக்கு வர தாமதம் ஆகலாம் என்று கார்த்திக் முன்பே சொல்லிவிட்டான் தான். என்றாலும் இவனை விடுவதா என்று இவனை சீண்டும் எண்ணத்தோடு கேட்டான் சுரேஷ்.
“டேய், நான் நீ தாலி கட்டமுன்னுக்கே வந்துட்டேன்டா. அங்க வாசல்ல வாழை மரம் விழுந்துடிச்சின்னு அத கட்டி கொடுத்துட்டு , இன்னைக்கு காலையில தான் ஊருக்கு வந்தேன். சோ எல்லார் கூடவும் பேசிட்டு இருந்தேன்டா.” என்று இன்னும் சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தவன் மணமக்களுக்கு பரிசுகளையும் கொடுத்து அவர்களுடன் குடும்பமாக புகைப்படங்களும் எடுத்து விட்டு மேடையில் இருந்து சென்று விட்டான்.
கயல், அமுதா, கார்த்திக் எல்லோரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். அமுதாவின் நெருங்கிய தோழி கயல் என்றால், அமுதாவின் அண்ணனின் நெருங்கிய தோழன் கார்த்திக். கார்த்திக்குக்கு தங்கை இல்லாத காரணத்தால் தன் உற்ற நண்பனின் தங்கை அமுதாவே இவனுக்கும் தங்கையாகிப் போனாள். அந்த உரிமையில் தான் அமுதாக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்றவுடன் தன் அலுவலகத்தில் தன்னுடன் ஒன்றாக பணி புரியும் தன் நல்ல அருமையான நண்பனான சுரேஷப் பற்றி சொல்லி இந்த சம்பந்தத்தை அவனே ஏற்பாடு செய்தான். அமுதாக்கும் தன் அண்ணனைப் போலவே கார்த்திக்கையும் மிகப் பிடிக்கும்.
கார்த்திக் வெளியூரில் பணி புரிவதால் இந்த ஊரில் அவன் இருப்பது மிகக் குறைவு. இப்படி ஏதும் விசேஷம் அல்லது சிறு விடுமுறை கிடைத்தால் வருவானே தவிர இங்கு பெரிதாக அவன் வாசம் இல்லை.ஆனாலும் இவனைப் பற்றி எப்போதுமே கயலிடம் பெருமை பேசுவாள் அமுதா. இது சில நேரங்களில் கயலுக்கு சலித்து விட “போதும்டி உன் அண்ணன் பாட்டு” என்று விட்டு சென்று விடுவாள்.
மாப்பிள்ளையான சுரேஷ் வீடு, இவர்களின் ஊரில் இருந்து இரு மணிநேர பயணத்தில் இருப்பதால், திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீடு செல்வதற்க்கான ஆயத்தங்கள் வேறு செய்ய வேண்டி இருந்தது. அதற்கான பொறுப்பு பெரியவர்களுடன் சேர்த்து மணமக்களின் நெருங்கிய தோழர்கள் என்ற வகையில் கயல்,கார்த்திக் கைக்கும் வந்து சேர்ந்திருந்தது.
பெண் வீட்டில் இருந்து கொடுக்கப்பட்ட பொருட்கள், திருமணத்திற்கு என்று மாப்பிள்ளை வீட்டினர் கொண்டு வந்த பொருட்கள் என்று மாப்பிள்ளை வீடு செல்லும் இரண்டு வேன்களிலும் ஏற்ற வேண்டி இருந்தது. ஒரு வாகனம் பெண் வீட்டினர் செல்வது, இன்னொன்றில் மாப்பிள்ளை வீட்டினர் செல்வர். அது போக மணமக்களுக்கு கார் என்று ஏற்பாடாகி இருந்தது. பொருட்களை ஏற்றும் அவசரத்தில் மாப்பிள்ளை வீட்டினரின் சில பொருட்கள் பெண் வீட்டினர் செல்லும் வேனில் மாற்றி ஏற்றப்பட்டு விட்டது. அதை ஏற்றியது கார்த்திக் தான். அந்த ஒன்றுக்காகவே பொருட்களை மாற்றி ஏற்றிவிட்டீர்கள்; இது பெண் வீட்டினார் செல்லும் வேன் என்று கார்த்திக்கை முறைத்துக்கொண்டு அவனோடு சிடுசிடுத்தப்படி நின்றாள் கயல்.
கார்த்திக் இவளை ஒரு விசித்திர பிறவியை பார்ப்பது போல பார்த்து வைத்தான். இது என்ன, இந்த ஒரு சின்ன விஷயத்திற்காகவா இந்த பெண் , இப்படி என்னோடு சண்டைக்கு வருகிறாள் என்றிருந்தது அவனுக்கு.
பின், நேரம் வேறு போய்க்கொண்டு இருந்ததா, எல்லாம் மாப்பிள்ளை வீடு செல்லும் வாகனம் தானே. ஆகவே அது ஒன்றும் பரவாயில்லை என்று அப் பிரச்சினையை அங்கேயே முடித்து வேலையை துரிதப்படுத்தினான் கார்த்திக். இங்கு நடப்பது எதுவும் பெரியவர்களின் பார்வைக்கு எட்டவில்லை.
கயலும் யாருடனும் விடாப்பிடியாக சண்டை போட்டு சிடுசிடுத்துக்கொண்டு இருப்பவள் அல்ல தான். ஆனாலும் கார்த்திக் மேல் அவளுக்கு ஏற்கனவே இருந்த அந்த கோவம் தான் அவனோடு அப்படி மல்லுக்கு நிற்க வைத்தது. அவளுக்கு தெரியாதா, அந்த வேனும் மாப்பிளை வீட்டுக்குத் தான் போகிறது என்று. அதையே அவனும் சொல்லவும் அமைதியாகிவிட்டாள். அதோடு இதையே பிடித்துத் தொங்கி அவனோடு மேற்கொண்டு முறைத்துக்கொண்டு இருக்கவும் அவளுக்கு வரவில்லை.
ஆனாலும், அதை எடுக்கவில்லை, இதை எடுக்கவில்லை, அங்கு இடமில்லை, இங்கு இடமில்லை என்று அப்பப்போ இருவரும் முட்டி மோதியப்படியே பொருட்களை ஏற்றிக்கொண்டு எல்லோருமாக மாப்பிள்ளை வீடு சென்றிருந்தனர். இப்படித் தான் அவர்களின் முதல் சந்திப்பு நேர்ந்தது.
இப்போது நினைத்தாலும், தான் அன்று நடந்துகொண்ட முறை அதிகப்படி, முதல் அப்படி சிடுசிடுக்க வேண்டிய அவசியமே இல்லை, அன்று தனக்கு என்னாயிற்று என்று தான் தோன்றியது அவளுக்கு..
“கயல்…!” என்ற வசுந்திராவின் அழைப்பில் பழைய நினைவுகளில் இருந்து மீண்ட கயல், தன் தாயை பார்த்தாள்.
“என்னம்மா ? இன்னும் தூங்காம இருக்க. சீக்கிரம் தூங்கு. நாளைக்கு நேரத்துக்கே எழுத்துருக்கணும்ல” என்றபடி அவள் அமர்ந்திருந்த கட்டிலின் விரிப்பை சரி செய்தார்.
கயலோ, தன் தாயையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாளே தவிர ஒன்றும் பேசவில்லை.
சத்தமே இல்லை என்றதும் கயலை திரும்பிப் பார்த்த வசுந்திரா ஒரு சின்ன சிரிப்புடன் “ என்னடா! ம்ம்? என்னையே பார்த்துட்டு இருக்க. ஏதும் அம்மாகிட்ட சொல்லனுமா” என்று வாஞ்சையுடன் அவள் தலையை தடவியப்படி அவள் அருகில் அமர்ந்தவருக்கு கண்கள் கலங்கிவிட்டது.
தன் மூத்த மகளுக்கு திருமணம் நடக்கபோகிறது, அதுவும் கார்த்திக் போல் ஒரு அன்பானவனோடு அவள் வாழ்க்கையை இணைக்கப் போகிறாள் என்பது அதீத சந்தோஷத்தை தந்தாலும், இனி மகள் நம்மோடு இருக்கப் போவதில்லை என்ற அந்த எண்ணம் அவரை என்னவோ செய்தது.
வசுந்திரா கேட்ட கேள்விக்கு இல்லை என்று தலையாட்டிய கயல், அவரை அவர் தோளோடு சேர்த்து இறுக்கக் கட்டிக்கொண்டாள். அவளுக்கும் இலேசாக கண்கள் குளம் கட்டியது.
என்ன தான் மனதுக்கு பிடித்தவன் , மனதுக்கு நிறைவானவன் என்று அவனோடான தன் திருமணத்தை எதிர்பார்திருந்தாலும், பிறந்தது முதல் நேற்று வரை வீட்டினரை பிரிந்து இருந்திராத அவளுக்கு தொண்டைக்குள் ஏதோ அடைத்த உணர்வு.
வசுந்திராவும் அவளை கட்டியணைத்து உச்சிமுகர்ந்து அவள் கன்னத்தில் தன் இரு கைகளையும் வைத்து “சரி சரி , நல்லாவே லேட் ஆகிட்டு, தூங்கு . நாளைக்கு நேரத்துக்கே எழுந்துருக்கணும், அப்புறம் ஒழுங்கா தூங்கலனா முகம் வீங்கின மாதிரி இருக்கும். பன் (Bun) மாதிரியா போய் நிக்க போற” என்று ஒரு சின்ன நக்கலுடன் கேட்டு கயலை சிரிக்க வைத்தவர், தன் செல்ல மகளோடு தூங்கிப் போனார்.