வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 1(b)

Status
Not open for further replies.
அத்தியாயம் 1(b)

பிரமாண்டமான கட்டிடமாய் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அதற்கு காரணம் அவரின் ஒரே மகன் ஆதித்யவர்மன்..


தந்தையின் மறைவுக்குப் பிறகு,

தொழில் முழுவதும் கடனால் சரிந்து போக,
அந்த அதிர்ச்சியில் அவனின் தாயும் நெஞ்சு வலியால் அவனை தனிமையில் தவிக்க விட்டு இவ்வுலகத்தை விட்டு செல்ல ,

மிகவும் நிலைகுலைந்து போனவன் உடன்படித்த நண்பன் கிரிஷ் மூலம் சிறியதாக பணத்தை புரட்டி அதில் ஒரு கேமராவை வாங்கிக் கொண்டு, உறக்கத்தை தொலைத்து இரவு பகலும் ஓயாது நாடு நாடுகளாய் பறந்து உழைத்தானவன்..


அவனின் உழைப்புதான் அவனை இந்த அளவுக்கு வெற்றி கொடி கட்டி உலகெங்கும் அவனின் பேரும் புகழும் பறக்க விட்டது..

சென்னை மட்டுமல்ல ..

உலகமே அறிந்து கொள்ளும் வர்மன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் எவ்வளவு திறமையானதென்று..


எவ்வளவுதான் பணமும் பேரும் புகழும் அவனுக்கு இந்த உலகத்தில் இருந்தாலும், அனைவரிடமும் எந்த பாகுபாடுமின்றி மிகவும் எளிமையாகவே பழகுவானவன்..


அவனும் தந்தையைப் போலவே தொழிலில் கண்ணியமாக தான் இருந்தான். அவனின் வாழ்க்கையில் அவள் வரும் வரை..


அவன் செய்யும் தொழிலை திருமணத்திற்கு பிறகு விட வேண்டும் என ஒரு அக்ரீமெண்ட்டை போட்டாள் தான்யா..


'கட்டிய கணவன் தன்னை மட்டும் தான் உடுப்பற்ற நிலையில் பார்க்க வேண்டும். வேறு எவளையும் பார்க்க கூடாது ' என ஒரு மனைவியாய் அவள் நினைப்பது தவறொன்றும் இல்லை..ஆனால் அவள் போட்ட அக்ரீமெண்ட்டின் விதம் தான் தவறு.


திருமணத்திற்கு முன்பே பெண்களை அவனின் கேமராவின் விழிகளாலே படம் பிடித்து இருப்பான்..

அவன் அந்த தொழிலை செய்து வந்தது அவளுக்கு தெரிந்த போதிலும் ஏன் அவனை திருமணம் செய்து கொண்டாளவள்??

பணமா? ஆஸ்தியா? இல்லை ஆதித்யனின் மீதுள்ள காதலா? என்பது அவள் மட்டும் அறிந்ததே .


அவனுடன் பிஏவாக இருக்கும் போது தட்டி கேட்காதவள் , ஏன் திருமணத்துக்குப் பிறகு அவனிடம் அக்ரீமெண்ட் போட்டாள்? திருமணத்துக்கு பின்னரும் அவன் அந்த தொழில் செய்வது தவறொன்றும் இல்லை..
•••••••••••••••••••••••

அந்தத் திருமணம் மண்டபமே இரவில் மின்சார அலங்கார விளக்குகளால் அழகாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அந்த மின்சார அலங்கார விளக்குகளோடு போட்டி போட்டு நின்று கொண்டிருந்தாள் இனியா..


"நீயெல்லாம் என்ன அழகு உன்னை விட நான் எப்படி நல்லா ஜொலிக்கிறேன் பாரு. உன்னை விட என்னோட முகம் தான் ரொம்ப பிரைட்டா இருக்கு. நீ எல்லாம் சுத்த டூப்ளிகேட். என்னை பாரு நான் மனுஷ ஜென்மமா ஒரிஜினலா இருக்கேன்" தான் போட்டிருந்த தாவணி பாவாடையை பிடித்து சுற்றி சுற்றி ஆடிக்கொண்டிருந்தவளின் மண்டையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைத்தான் சிவா..


" ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ டேய் உங்கிட்ட எத்தனை டைம் சொல்லி இருப்பேன் என் தலையில கொட்டு வைக்காதன்னு, இரு அப்பா கிட்ட உன்னை போட்டு விடுறேன். சும்மா இருந்தவள எதுக்கு நறுக்குனு கொட்டுற, பைத்தியமா நீ " என்றவளின் மண்டையில் மேலும் ஒரு கொட்டு வைத்தான் தம்பியானவன்.


அதில் கோபமடைத்தவளோ, "சொல்லிட்டே இருக்கேன் மறுபடி மறுபடி தலையில் கொட்டிக்கிட்டே இருக்க, என்ன கொழுப்பா உனக்கு, எதுக்கு டா நான் எங்கே போனாலும் என் பின்னாடியே வர " என சற்று குரலை உயர்த்தி கேட்க,


" உன்னை காணோம்ன்னு உன் அருமை அப்பா தேடிக்கிட்டு இருக்காரு போ போயி என்னன்னு கேளு. உன்னை எல்லாம் அக்கான்னு மதிச்சு வந்து கூப்பிட்ட பாத்தியா எனக்கு இன்னும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும் " என அவளின் மீது கடுப்பாய் பேசியவனின்

பார்வை ஒரு இடத்தில் செலுத்தியதும், கோவமாக இருந்து விழிகள் காணாமல் போய் பளிச்சென்று சந்தோஷத்தில் மின்னியது..


ஓடினான் அந்த இடத்தை நோக்கி.. காரில் இருந்து கம்பீரமாய் அழுத்தமான முகத்தோடு இறங்கினான் அவன்...


" வாங்க சார் வாங்க சார்" என தனது முதலாளியை வாயெல்லாம் பல்லாக மதிப்பும் நிமித்தமாக மரியாதையோடு வரவேற்றான் சிவா..
 
Last edited:
Status
Not open for further replies.
Top