GG writers
Moderator
1)
“என்ன அம்மா பேசுறீங்க? நீங்க பார்த்து செய்துவச்ச கல்யாணம் தான?”
“அதனால தான்டி சொல்றேன், அவன் வேண்டாம்.”
“ஓ, உங்க விருப்பம் தான் எப்பவுமா? எனக்குனு மனசு இல்லையா?” என்ற ஆதங்கமான குரல் வீட்டின் வாயிலை அடையும் பொழுதே அவரது செவியில் வந்து விழுந்தது.
“ராத்திரி பத்து மணி ஆகுது. ஊரே அமைதியா இருக்கு. இவளுக்கு மட்டும் அதுக்கு அர்த்தம் தெரியாது போல” என புலம்பியபடி வீட்டிற்குள் வந்தார் சிவஞானம்
“முடியாது மா, இதுக்கு அப்புறம் என்னால உங்க பேச்சை கேட்க முடியாது. இது என்னோட வாழ்க்கை. நான்,” என அடுத்து பேசுவதற்குள் சட்டென டிவியை அணைத்துவிட்டார் சிவஞானம்.
தாய்க்கும் மகளுக்கும் இடையே காரசாரமான சண்டை நடந்து கொண்டிருந்ததும் கண்சிமிட்டாமல் வெகு ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த சாந்தி திடீரென காட்சிகள் நிறுத்தப்பட்டதும் பதறி நிமிர்ந்தார்.
தாெலைகாட்சி பெட்டியின் அருகே நின்றபடி அவரை முறைத்துக் கொண்டிருந்தார் சிவஞானம்.
“ஏன்டி, வீட்டுக்குள்ள யாரு வரா, போறானு எதுவும் தெரியாம, சீரியல் பார்த்துக்கிட்டு இருக்க? நான் வந்து டிவிய அணைக்குற வரைக்கும், நினைவு இல்லாம இருக்க?”
“இப்போ வந்ததும் எதுக்கு கத்துறீங்க? நல்ல கட்டம் போயிட்டு இருந்துச்சு. இப்படி பண்ணீட்டீங்களே?” என்று புலம்பியபடி மீண்டும் தொலைகாட்சியை உயிர்பித்தார்.
“ஏன்டி, வீட்டுல என்ன பிரச்சனை ஓடிட்டு இருக்கு, நான் ஒவ்வொரு நிமிசமும் அதையே யோசிச்சு நிம்மதி இல்லாம தவிச்சுட்டு இருக்கேன். நீ என்னடான, டிவி சீரியல் பார்த்துட்டு இருக்க?”
“எனக்கு மட்டும் வருத்தம் இல்லைனா நினைக்குறீங்க? ஏதோ இந்த நாடகம் பார்க்கும் போது மனசுல இருக்குற பாரம் குறைஞ்சு மூளை கதைய கவனிக்க ஆரம்பிச்சுருது. அது உங்களுக்கு பொறுக்கலையா?”
“ஆமா, இது ஒரு பதில். போய் சாப்பாடு எடுத்து வை.” என்றவர் பையை வைத்துவிட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள குளியலறைக்கு சென்றார்.
‘இந்தாளுக்கு ஒழுங்கா பேசவே தெரியாது. கல்யாணம் ஆன நாள் இருந்து இப்போ வரை, எதுக்கெடுத்தாலும் சிடுசிடுனு பேசிக்கிட்டு. எங்க அம்மாக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்காத மாதிரி, இந்த ஆளுக்கு கட்டிவச்சுட்டாங்க. என் தலையெழுத்து.’ என்று வாய்குள்ளே முணுமுணுத்தபடி தனது கணவரான சிவஞானத்திற்கு இரவு உணவை எடுத்து வைத்தார் சாந்தி.
சிறிது நேரத்தில் உணவருந்த அமர்ந்தார் சிவஞானம். உணவை கையில் எடுத்து வாயில் வைக்கும் சமயம் புருவங்கள் நெறிய நிமிர்ந்து மனையாளை பார்த்தவர் “பாப்பா சாப்பிட்டாளா?” எனக் கேட்டார்
“ம். அப்போவே சாப்பிட்டாள். ரூம்ல தூங்கிட்டு இருக்காள்.”
“உன் அருமை புள்ள, அவன் என்ன செய்றான்?”
“லேப்டாப் வச்சு ஏதையோ நோண்டிக்கிட்டு இருக்கான். பாப்பாவோட சேர்ந்தே சாப்பிட்டான்”
பிள்ளைகள் இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டனர் என்ற பதிலில் திருப்தி அடைந்தவர் உணவை உண்ண ஆரம்பித்தார்
இரண்டு கவளம் உண்டு இருப்பார் அதற்குள் ‘ஹர ஹர சிவனே, அருணாச்சலனே, அண்ணாமலையே போற்றி. சிவ ஓம் நமச்சிவாயா.’ என்ற வரிகளோடு அவரது கைபேசி சிணுங்கியது.
“இந்த நேரத்துல யாரு?” என வாய்விட்டே புலம்பியவர் “சாந்தி அந்த போன்னை எடுத்துட்டு வா” என்றார்.
அவரது மனைவியும் கைபேசியை கையில் எடுத்துப் பார்த்தார் அதில் கிருஷ்ணா என்று இருக்க “இந்தாங்க, உங்க தம்பி தான்” என்றபடி கைபேசியை கொடுத்தார்.
அழைப்பை ஏற்றவர் “சொல்லுடா” என்றார். இரண்டு நொடிகளுக்கு பிறகு “முடிஞ்சுருச்சா? எப்போ?” என்று அதிர்ச்சியாக கேட்டார்.
அவரது கையில் இருந்த உணவு தானாக தட்டில் விழுந்தது. அவரது அதிர்ச்சியான முகத்தை பார்த்து பதட்டம் அடைந்த சாந்தி “என்னங்க, என்னாச்சு?” என்று கேட்டார்.
“சரிடா காலையில முதல் பஸ்க்கு கிளம்பி வந்திடுறோம்” என்றவர் போனை கீழே வைத்துவிட்டு மனைவியை பார்த்தார். “அம்மா..” என்று இழுத்தவர் “முடிஞ்சுருச்சாம்” என்றார்.
“என்னங்க சொல்றீங்க? ஐயோ” என்றவர் “அத்தை” என்று கூறி அழுதிட ஆரம்பித்தார்.
சாப்பட்டை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவர் தெரு நாய்க்கு உணவை வைத்துவிட்டு மாடிக்குச் செல்லும் படிகளிலே அமர்ந்து கொண்டார்.
இரவு பத்தை தாண்டியதால் தெரு மொத்தமும் அமைதியாகவும் இருளாகவும் இருந்தது. தங்களது வீட்டு வாசலில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்திருந்தவரின் எண்ணம் எல்லாம் அவரது தாய் முருகவள்ளியே நிறைந்து இருந்தார்
கவலையின் காரணமாக சில தினங்களாகவே உடல்நிலை சரியின்றி படுத்தபடுக்கையாக இருந்தார். இன்று இறைவன் அடி சென்று சேர்ந்துவிட்டார்.
ஆண்மகன் அழுதல் கூடாது என்று எப்பொழுதும் கூறுபவர் இன்று தன்னை மீறி அழுகையில் கரைந்தார். அவரது தாயின் இறப்பிற்கு காரணமான நபரை எண்ணி உள்ளம் கொதித்தது.
தனது குடும்பத்தின் நிம்மதியை கெடுத்துவிட்டாயே என்று அந்த நபரை எண்ணி ஆத்திரம் அடைந்தார்.
தன் அறையில் இருந்து லேப்டாப்போடு ஹாலுக்கு வந்த ஜெகன் “அம்மா, பாப்பாக்கு இந்த மாப்பிள்ளை பொருத்தமா இருப்பாரானு பாரு” என்றபடி அவரது அருகே வந்தான்.
அப்பொழுது தான் கவனித்தான் தாயின் கண்களில் உற்பத்தி ஆகியிருந்த கண்ணீரை. பதறியவன் “என்னாச்சுமா? ஏன் அழுற?” எனக் கேட்டான்.
“ஜெகா, அத்தை தவறிட்டாங்கடா”
“எப்போ?”
“இப்போதான் உன் சித்தப்பா போன் செய்திருந்தாரு”
அப்படியே தரையில் அமர்ந்தவன் சுவரோடு சாய்ந்து கொண்டான். சில நொடிகளில் தன்னை மீட்டுக் கொண்டவன் தந்தை எங்கே? எனக் கேட்டு அவ்விடம் சென்றவன் அவரது தோள் தொட்டான்.
“அப்பா, அழுகாதீங்க ஆக வேண்டியதை பார்ப்போம். யார் யாருக்கு தகவல் சொல்லனும்னு சொல்லுங்க. நான் சொல்லிடுறேன்”
முகத்தை அழுந்த துடைத்தவர் “இல்லடா வேண்டாம், நானே சொல்லிக்கிறேன். நீ உங்க கம்பனிக்கு ஒரு வாரத்துக்கு லீவ் கேட்டு மெயில் பண்ணு” என்றவர் யாருக்கோ அழைப்பு விடுத்துக் கொண்டே மாடி ஏறினார்
‘ஒரு வாரமா’ என யோசித்தவன் அமைதியாக தந்தை சொன்னதை செய்வதற்கு சென்றான்.
வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது எதுவும் தெரியாமல் நித்திரையை தழுவி இருந்தாள் பிருந்தா.
விடியற்காலை நான்கு மணிக்கு அவளது அறையை திறந்துக் கொண்டு உள்ளே வந்த சாந்தி அவளது தோள் தொட்டு எழுப்பினார்.
தூக்கம் கலையாமல் அரைகுறையாக கண் விழித்த பிருந்தா, அறையின் வெளிச்சத்தால் உண்டான கண் கூச்சத்தையும் மீறி தாயின் முகத்தை பார்த்தாள்.
எப்பொழுதும் தானாக எழுந்து கொள்ளும் பழக்கம் உடையவள், இன்று தாய் வந்து எழுப்பவும் வெகுநேரம் உறங்கிவிட்டோமோ என்றபடி சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள்.
கடிகாரம் தெரிவித்த கால நேரத்தை கண்டு குழம்பியவள் தாயின் புறம் கேள்வி பொதிந்த பார்வையை செலுத்தினாள்
அவளது பார்வையின் பொருள் உணர்ந்து பிருந்தா “வள்ளி பாட்டி தவறிட்டாங்களாம்” என்றார் சாந்தி
தூக்கம் முழுவதும் கலைய அவசரமாக எழுந்து அமர்ந்தாள். “சீக்கிரம் கிளம்பு. ஊருக்கு போகனும். இப்போ கிளம்பினால் தான், எட்டு ஒன்பதுக்குள்ள ஊர் போய் சேர முடியும்” என்றவர் அறையில் இருந்து வெளியேறி இருந்தார்
அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வர தன் கண்ணீருக்கு தடை விதித்து புறப்பட தயாராக ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் குடும்பம் மொத்தமும் கிராமத்திற்கு கிளம்பினர். சில மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்களது கிராமத்திற்கு செல்லும் மினி பஸ்ஸில் ஏறி அமர்ந்தனர்.
அங்கே கேதம்(இறப்பு நிகழ்வு) விசாரிப்பதற்கு வந்த அவர்களது உறவினர்கள் சிலரும் அமர்ந்திருந்தனர்.
சிவஞானத்திடம் இப்படி நடந்துவிட்டதே என்று கூறி துக்கம் அனுசரித்தபடி இருக்க பேருந்து பயணத்தை தாெடர்ந்தது.
பேருந்து ஊருக்குள் நுழையும் போதே கொட்டு சத்தம் காதை கிழித்தது. பேருந்து நின்றவுடன் உடமைகளோடு தன் வீட்டை நோக்கி சென்றார் சிவஞானம்.
எதிர்ப்பட்ட அனைவரும் அவரை கவலையோடு பார்த்துவிட்டு கடந்து சென்றனர். துக்க வீட்டின் முன்னே வந்ததும் உடலை சுற்றி அமர்ந்திருந்தவர்கள் விலகி அவர்களுக்கு வழிவிட்டனர்.
தாயின் பின்னே வந்து கொண்டிருந்த ஜெகனின் பார்வையில் விழுந்தாள் அவள். அழுது அழுது ஓய்ந்து போய் தனது பாட்டியின் தலைமாட்டின் அருகே தலை சாய்த்து, அவரது முகத்தினையே இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தாள் கியாரா.
சிவஞானமும் ஜெகனும் முருகவள்ளியின் உடலை பார்த்துவிட்டு ஆண்கள் அணியுடன் நின்று கொண்டனர். பிருந்தாவும் சாந்தியும் உடலின் முன்னே அமர்ந்து அழுது தீர்த்தனர்.
பிருந்தா அருகில் இருந்த கியாராவின் கைகளை பற்றினாள். திரும்பி பார்த்தவள் பிருந்தாவின் தோள் சாய்ந்து அழுக, பின் ஏதோ நினைத்தவள் கூட்டத்திற்குள் யாரையோ தேடினாள்.
அவளது கண்கள் ஆண்கள் அணியின் புறம் அலைபாய்ந்து இறுதியில் ஜெகனின் கண்களோடு கலக்க அதுவரை அவளை அளவிட்டுக் கொண்டிருந்த அவனது கண்கள் பார்வைையை மாற்றிக் கொண்டன.
அவனது செய்கையின் பொருள் அறிந்த கியாரா வலியுடன் தன் பார்வையை மீண்டும் தனது பாட்டியின் புறமே திரும்பினார்.
தம்பி கிருஷ்ணசாமியின் அருகே நின்றிருந்த சிவஞானம் “டேய், தாரக், இஷானி இரண்டு பேரும் எங்க?” எனக் கேட்டார்
“அது, அண்ணே” என்று தயங்கியவர் “தாரக் நம்ம ஆரியனை கூட்டிட்டு வரதுக்கான ஏற்பாடுகளை செய்ய போய் இருக்கான். இஷானி இப்போ தான் போன் செஞ்சு இருந்தாள், ஹாஸ்டல்ல இருந்து கிளம்பிட்டாளாம். வந்துருவாளாம்.” என்றார்.
கிருஷ்ணா கூறிய முன்பாதியை கேட்டதுமே கோபத்தின் உச்சிக்கு சென்றுவிட்ட சிவஞானம் அவர் கூறிய பின்பாதியை கவனிக்கவே இல்லை.
அருகே நின்றிருந்த ஜெகனோ “அவன் எதுக்கு சித்தப்பா வரனும்?” என கோபமாக கேட்டான்.
“என்ன பேசுற ஜெகா? நீ எப்படி அம்மாவுக்கு பேரனோ, அதே போல தான் ஆரியனும் அவங்களுக்கு பேரன். அதுமட்டும் இல்லாம அம்மாவுக்கு அவன் தான் கொள்ளி போடனும்றது, அம்மாவோட ஆசை” என்றான்.
எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து விருட்டென விலகி சென்றுவிட்டார் சிவஞானம். ஜெகனும் தந்தை பின்னோடு சென்றுவிட அவர்கள் சென்ற திசையை வெறித்தார் கிருஷ்ணசாமி.
தனியே வந்ததும் தந்தையிடம் “இப்போ என்ன செய்றது அப்பா?” எனக் கேட்டான்.
“எதுவும் செய்ய முடியாதுடா? ஆனால் பாப்பா அவனை சந்திக்க கூடாது”
“அது எப்படி சாத்தியம் அப்பா?”
“நான் சொல்றபடி செய்.” என்றவர் தனது திட்டத்தை கூறினார். அனைத்தையும் கேட்டு தலை அசைத்தவன் கொட்டு சத்தம் நின்றதும் அவர்களுக்கு தேநீர் கொடுப்பதற்காக அவ்விடம் சென்றான்.
செல்பவனை அழைத்த சிவஞானம் “கவனம் ஜெகா. எச்சரிக்கையா இரு” என்றார்.
“சரிப்பா” என்றவன் வாத்திய கலைஞர்களுக்கு தேநீரை வழங்கிவிட்டு காரியம் செய்வதற்கான உதவிகளை செய்திட ஆரம்பித்தான்.
நேரம் கடந்து சென்றது. கிருஷ்ணசாமிக்கு அழைத்த தாரக் ‘அனைத்து பார்மாலிட்டிசும் முடிந்தது கிளம்பிவிட்டோம்’ என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
விஷயத்தை குடும்பத்தாரிடம் தெரிவித்தார் கிருஷ்ணசாமி. மதிய வேலையை கடந்திருந்த சமயம் கிருஷ்ணசாமியின் மகள் இஷானியும் வந்திருந்தாள்.
“ஜீப் ஊருக்கு பக்கத்துல வந்திருச்சாம் அப்பா” என்று தந்தையிடம் தகவல் தெரிவித்தவன் தனது தோழி அனிகாவை அழைத்தான்.
கிருஷ்ணசாமியின் மனைவி ருக்மணியின் அருகே அமர்ந்திருந்தவள் அவன் அருகே வந்தாள்.
விஷயத்தை அவளிடம் கூற சரியென தலை அசைத்தபடி பிருந்தாவின் அருகே வந்தாள்.
“பிருந்தா வா. உங்க சித்தப்பா வீட்டுக்கு போகலாம்”
“எதுக்கு? நான் வரல”
“எவ்வளவு நேரம் இப்படியே உக்காந்து அழுதுட்டு இருப்பீங்க, வாங்க.” என அருகில் இருந்த இஷானியையும் அழைத்தாள். அனிகாவின் பார்வை மறந்தும் கியாரா புறம் திரும்பவில்லை.
இஷானியும் வர மறுத்த அக்கா பிருந்தாவை சமாதானம் செய்து அழைத்துச் சென்றாள். ஒரு நொடி நின்று திரும்பிய இஷானி கியாராவை அழைக்க முற்பட அவளது கைபிடித்து அங்கிருந்து இழுத்து சென்றுவிட்டாள் அனிகா.
சிவஞானம் குடும்பத்தாரின் வெறுப்பை சம்பாதித்த ஆரியன் இரண்டு துப்பாக்கி ஏந்திய காவல் அதிகாரியின் பாதுகாப்போடு ஊருக்குள் அடியெடுத்து வைத்தான். அவனது கைவிழங்கு நீக்கப்பட கைகளை தேய்த்தபடி நடக்க ஆரம்பித்தான்.
தொடரும்..