GG writers
Moderator
2)
பெண்கள் மூவரும் கூட்டத்தை விட்டு சென்ற சில நிமிடங்களில் அவ்விடம் வந்து சேர்ந்தான் ஆர்யன்.
சிவஞானம் மற்றும் ஜெகன் இருவரும் தங்களது கண்களால் அவனை எரிக்க அவனோ அவர்களை சிறிதும் ஏறெடுத்து பாராமல் வள்ளியின் உடல் அருகே சென்றான்.
சொந்தபந்தங்கள் அனைவரும் ஆர்யனை கண்டுவிட்டு தங்களுக்குள் பேச ஆரம்பித்துவிட்டனர்.
‘இந்த கொலைகாரனை நினைச்சே பாவம், அந்த அம்மா போய் சேர்ந்துருச்சு’
‘நல்லவேளை, இவனோட இந்த செயல பார்க்கமா, அவங்க அப்பாவும் அம்மாவும் போய் சேர்ந்துட்டாங்க இல்லைனா பாவம் ரொம்ப வருத்தப்பட்டு இருப்பாங்க’
‘எல்லாம் அவங்க அப்பா அம்மாவ சொல்லனும் பிள்ளைய எப்படி வளர்த்துவிட்டு இருக்காங்க’
‘அவங்க அம்மாவ மாதிரியே வந்து பிறந்து இருக்கான். அவள் ஓடிப்போய் குடும்பமானத்தை வாங்குனாள். இவன் கொலையே செஞ்சு இருக்கான். என்ன குடும்பமோ?’
இப்படியாக பல ஏச்சு பேச்சுகள் கூட்டத்தில் எழுந்தும் அடங்கியும் கொண்டிருந்தது. இவர்களின் சலசலப்பின் காரணமாக திரும்பி பார்த்த. கியாராவின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தான் ஆர்யன்.
அவனை கண்ட அடுத்த நொடி “பையா” என்று கத்தியபடி கூட்டத்தில் இருந்து எழுந்து ஓடினாள் கியாரா.
தன் உடன் பிறந்தோனை கட்டி அணைத்துக் கொண்டவள் பாட்டி இருந்த திசையை சுட்டிக் காட்டி அழுதாள்.
ஆண் மகன் அவனுக்கு அழுக தோன்றினாலும் அதனை செய்யாமல் கல்லென இறுகி நின்றான்.
இறுதி சடங்குகள் ஆரம்பம் ஆனது. ஆர்யன் முன் நின்று அனைத்தையும் செய்வது அங்கிருந்த யாருக்கும் பிடிக்கவில்லை. இதில் கிருஷ்ணசாமியின் குடும்பம் மட்டும் விதிவிலக்கு.
சிவஞானத்தின் மனைவி சாந்தியோ எல்லோர் முன்னிலையிலும் ஆர்யனை பேச்சுகளால் குத்தி கிழித்தார்.
“இவனால தான் என் அத்தை இறந்தே போனாங்க. இவன் முன்னாடி நின்னு எல்லாம் செய்யனுமா? இவன் மகள் வயித்து பேரன் தான, என் புள்ள ஜெகனுக்கு தான் எல்லாம் உரிமையும் இருக்கு. நீ எதுவும் செய்ய கூடாது. கொலைகார பாவி. நீ செஞ்ச பாவம் தான்டா மொத்த குடும்பத்தையும் சீர் கெடுத்துச்சு”
“அக்கா போதும் எதுக்கு துக்க வீடுனு கூட பார்க்காம அவனை வார்த்தையால குத்தி கிழிக்கிறீங்க” என தன் ஓரகத்தியிடம் மல்லுக்கு நின்றாள் கிருஷ்ணசாமியின் மனைவி ருக்மணி.
“உனக்கென்ன? மகராசி, நல்லா இருக்க. என் குடும்பம் தான இப்போ கஷ்டப்படுது” என கூறி அவரது வாயையும் அடைத்தார் சாந்தி.
மீண்டும் எதிர்வாதம் செய்ய முயன்ற ருக்மணியை தன் பார்வையால் அடக்கினார் கிருஷ்ணசாமி.
ஊரார் முன் தன் மனைவி தங்களது குடும்பத்தை காட்சிபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாத சிவஞானம் தன் மனைவியின் அருகே வந்து அவரது கையை பற்றி இழுத்துச் சென்றார்.
தன் அண்ணனை மற்றவர்கள் ஏசுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவன் தோள் சாய்ந்தே அழுதாள் கியாரா. அவளுக்கு தன் கண்களாலே சமாதானம் செய்தான் ஆர்யன்.
சாந்தியோடு நில்லாமல், அக்கம் பக்கத்தினர் உறவினர் என அடுத்தடுத்து பேசிக் கொண்டே செல்ல எதனையும் காது கொடுத்துக் கேட்காமல் அமைதியாய் நின்றான் ஆர்யன்.
அவர்களது பேச்சுக்களால் கொதிநிலைக்கு சென்ற தாரக் “வாயை மூடுங்க. இனிமே யாராவது பேசுனீங்க, சாெந்தம் பந்தம்னு எதுவும் பார்க்க மாட்டேன் மரியாதை கெட்டுடும். அவன் கொலை செய்ததை யாரவது பார்த்தீங்களா? சும்மா அதையே பேசிட்டு இருக்கீங்க” என்று கூட்டத்தை பார்த்து கத்தினான்.
இங்கே வள்ளி பாட்டியின் வீடு இருக்கும் தெருவை தாண்டி பெண்கள் மூவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்
“அனிகா நில்லு கியாராவை சேர்த்தே அலைச்சுட்டு வந்து இருக்கலாமே?” என தங்களை அழைத்துச் சென்றுக் கொண்டிருந்த அனிகாவிடம் கேள்வி எழுப்பியபடி நடந்து வந்தாள் கிருஷ்ணசாமியின் மகள் இஷானி.
அவளது கேள்வியில் சினம் துளிர்க்க அதகை மறைத்தவாறு “அவள் அங்க தான் இருக்கனும். எல்லாரும் வந்துட்டா, அப்புறம் பாட்டிக்கிட்ட ஆள் வேண்டாமா?” எனக் கூறி சமாளித்தாள்.
“அதான், அம்மா பெரியம்மா எல்லாரும் இருக்காங்களே”
“பேத்தின்ற முறைக்கு அங்க இருக்கட்டும். உனக்கு நான் சொல்ல வருவது புரியாது. வா.” என முன்னே நடக்க பின்னே பின்தங்கியவாறு நடந்து வந்த பிருந்தாவுடன் இணைந்து நடந்தாள் இஷானி.
“எனக்கு இவளை பிடிக்கவே இல்ல அக்கா. அண்ணனுக்கு என்ன டேஸ்டோ” என கூறி தன் அண்ணனை நொந்தபடி வந்தாள்.
தாரக் அனிகா இருவரும் காதலிக்கின்றனர். ஆரம்பத்தில் குடும்பம் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் தங்கள் குடும்பத்தில் நடந்த சில கசப்பான நிகழ்வுகள் நினைவிற்கு வரவும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.
இஷானியின் புலம்பல்கள் காதில் ஏறாமல் அனிகாவின் பின்னே ரோபோவை போல் நடந்து சென்றாள் பிருந்தா. இறப்பு செய்தியை கேட்ட நொடியில் இருந்து ஒருவனின் முகம் கண் முன் தோன்றி அவளை இம்சிக்கிறது.
அவனது நிலை குறித்து யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. கேட்கும் அளவிற்கு துணிச்சலும் இல்லை.
நினைவுகளுக்கு இடையே கிருஷ்ணசாமியின் வீட்டிற்கு வந்துவிட்டனர். அவரது இல்லம் தாய் முருகவள்ளியின் இல்லத்தில் இருந்து ஒரு தெரு தள்ளி இருந்தது.
தன் கையில் இருந்த சாவியின் மூலம் கதவினை திறந்த அனிகா இருவரையும் அழைத்துச் சென்று ஏற்கனவே வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தை பிரித்து இருவருக்கும் கொடுத்தாள்.
மறுத்த பெண்களை கட்டாயப்படுத்தி உண்ண வைத்தாள். சிறிது நேரத்தில் பிருந்தா உறக்கத்திற்கு சென்றுவிட அக்காவை யோசனையுடன் பார்த்தாள் இஷானி.
“அவள் தூங்கப்டும் இஷா. நீ கொஞ்ச நேரம் கழிச்சு பாட்டி வீட்டுக்கு போ. இப்போ கொஞ்சம் ஓய்வெடு”
“இல்ல நான் இப்பவே போறேன்” என்று அனிகா சொல்ல சொல்ல கேட்காமல் பாட்டி வீட்டிற்கு சென்றாள்.
அடங்காபிடாரி என அவளை திட்டிய அனிகா தனது மொபைல் மற்றும் தனக்கான உணவை எடுத்துக் கொண்டு கதவை கூட பூட்டாமல் மற்றொரு அறையில் தஞ்சம் அடைந்தாள்
அங்கே இஷானி ஆர்யனை கண்டவள் “மாமா” என்றபடி முன்னே ஓடினாள். வேகமாக சென்று அவனது கைகளை பற்றி கொண்டவள் கண்ணீரோடு அவனை பார்க்க பரிவாக அவளது தலையை தடவிக் கொடுத்தான் ஆர்யன்.
அப்பொழுது வெடுக்கென இஷானியை பின் இழுத்தான் ஜெகன். ஆர்யனை முறைத்துவிட்டு அவளை தந்தையின் அருகே இழுத்து சென்றான்.
“ஜெகா அண்ணா, விடுங்க” என்று அவன் இழுப்பிற்கு மறுத்தபடி பின் சென்றாள் இஷானி.
கூட்டத்தைவிட்டு ஒதுங்கியிருந்த தந்தையின் அருகே வந்ததும் அவளது கையைவிட்டான் ஜெகன்.
“அறிவிருக்கா இஷா? அந்த கொலைகாரன் கையை புடிச்சுட்டு நிக்குற. சுத்தி எத்தனை பேரு இருக்காங்க பாரு. எல்லார் பார்வையும் அவன் மேல தான். நீ இப்படி நடந்துகிட்டால் நாளைக்கு உனக்கு எப்படி கல்யாணம் பண்றது? தப்பா பேசமாட்டாங்க”
அவனது சொல்லில் கோபம் அடைந்தவள் “நீங்களா அண்ணா இப்படி பேசுறது? ஆர்யன் மாமாவை மத்தவங்க என்ன பேசுனாலும், நீங்க தான் எதிர்த்து கேட்டு இருக்கனும். நீங்களே அவரை பத்தி தப்பா பேசுறீங்க. சரியில்ல அண்ணா” என்றாள்.
“அவன் மேல நான் வச்சுருந்த நம்பிக்கை ஒடச்சுட்டான். நம்பிக்கை துரோகி அவன். கொலைகாரன் அவனை பத்தி என்கிட்ட பேசாத”
“ஓ அப்படியா? அப்போ நல்லா கேட்டுக்கோங்க. நீங்களும் என்னை பத்தி கவலைபட வேண்டாம். உங்களோட அக்கறை எல்லாம் உங்க தங்கச்சி பிருந்தாகிட்ட மட்டும் காட்டுங்க. எங்கிட்ட வேண்டாம்” என்றவள் விருவிருவென சென்றுவிட்டாள்.
செல்லும் அவளை தடுக்க இயலாது நின்றிருந்தனர் தந்தையும் மகனும்.
கியாராவின் அருகே வந்த இஷானிக்கு அப்பொழுது தான் பிருந்தாவை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்கான காரணம் விளங்கியது.
ஆர்யன், உறவினர் ஒருவர் சொல்வதுபடி சடங்குகளை செய்து கொண்டிருந்தாலும் அவனது பார்வை அடிக்கொரு முறை கூட்டத்தை அளந்து கொண்டே இருந்தது.
சில சடங்குகளை அவன் செய்து முடித்ததும் மகன் ஸ்தானத்திற்கான சடங்குகளை செய்திட சிவஞானம் அழைக்கப்பட்டார்.
முகம் இறுகியபடி சகோதரன் கிருஷ்ணசாமியுடன் சேர்ந்து சடங்குகளை செய்து முடித்தார்.
ஆர்யனுக்கு அனுமதித்த அவசரகால பரோல் நேரத்திற்குள் அனைத்து சடங்குகளையும் செய்து முடித்திட வேண்டும் என்பதற்காக வேலைகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டது.
பொதுவாக 1982 ஆண்டு தமிழ்நாடு தண்டனை இடைநிறுத்த விதிகளின் கீழ் சிறைவாசிகளுக்கு நெருங்கிய உறவினர்களின் மரணம், திருமணம் அல்லது கடுமையான நோய் போன்ற காரணங்களுக்கு அவசரகால பாரோல் வழங்கப்படும்.
சிறையின் உள்ளே கைதியின் நன்னடத்தையும் முக்கியமாக கருதப்படும் அதன் பொருட்டே பரோல் வழங்கப்பட்டு அதிகபட்சம் ஒரு மாதம் வரை நீட்டிக்கப்படும்.
ஆர்யன் சிறை சென்று மூன்று மாதங்களே ஆன நிலையில் அவனுக்கு ஒருநாள் மட்டுமே பரோல் கிட்டியது.
சடங்குகள் முடிந்து பிரேதத்தை எரியூட்டுவதற்கு எடுத்து செல்லப்பட்டது. சுடுகாட்டிற்கு வந்த பின்பும் ஆர்யன் கொல்லி வைப்பதை ஒரு கூட்டத்தார் எதிர்த்தனர்.
இறுதியில் கிருஷ்ணசாமியின் தலையீட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்து ஆர்யன் தன் பாட்டியின் சிதைக்கு எரியூட்டினான்.
தீயானது அவரது உடலில் பரவி எரியும் பொழுது ஆர்யனது கண்களில் இருந்த ஒரு துளி கண்ணீர் அவனது கட்டுபாடு இன்றி கீழே விழுந்தது. அதன்பிறகு அவன் கண்ணீருக்கு அனுமதி கொடுக்கவில்லை.
வீட்டிற்கு வந்ததும் காவலர்கள் அவனை புறப்பட தயராகச் சொன்னார்கள். அமைதியாக அவர்களோடு கிளம்ப ஆயத்தமானான் ஆர்யன்.
கியாரா அழுது தீர்த்தாள். தாரக் ஆர்யனின் கைகளை பற்றிக் கொண்டு “தைரியமா இருடா. கேஸ் ரீ ஓபன் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன். நீ எந்த தப்பும் பண்ணி இருக்கமாட்ட. நான் நம்புறேன். சீக்கிரம் உன்னை வெளிய கொண்டு வந்துருவேன்” என்றான்.
அவனது கைகளை தன் கைகளில் இருந்து பிரித்துவிட்ட ஆர்யன் “எதுவும் செய்ய வேண்டாம். நான் தான் கொலை செய்தேன்” என்றவன் மேற்கொண்டு பேசாமல் காவலர்களோடு புறப்பட்டு சென்றான்.
இவர்களும் அவன் பின்னோடு ஜீப் அருகே சென்றனர். கியாராவை கவலையோடு பார்த்தவன் “தாரக் அவளை பார்த்துக்கோடா” என்றான்.
இந்த மூன்று மாதங்களும் தங்கை பாட்டியோடு பத்திரமா இருக்கிறாள் என்ற நிம்மதியில் இருந்தான். இன்றோ அதற்கும் வழி இல்லாது போனது. தங்கையை எண்ணி கவலையில் இருந்தவன் தோழனிடம் உதவியை நாடிவிட்டு நிம்மதியில்லாமல் புறப்பட தயாரானன்.
ஏமாற்றத்தின் உச்சியில் இருந்த ஆர்யனது கண்கள் முயற்சியை கைவிடாது மீண்டும் ஒருமுறை தன் பார்வையை அலையவிட்டது. அவன் தேடிய நபர் அவனது கண்களில் படவேயில்லை.
கனத்த மனதோடு கையசைத்தவன் அமர்ந்திருந்த ஜீப் செல்ல ஆரம்பித்தது.
இங்கே தூக்கத்தில் இருந்த பிருந்தா மெல்ல கண்களை திறந்தாள். கண்களை கசக்கியபடி வீட்டின் வெளியே வர இருள் சூழ ஆரம்பித்து இருந்தது.
‘இவ்வளவு நேரமா தூங்கிட்டோமா சே’ என தன்னை நொந்தபடி வேகவேகமாக தனது காலணிகளை மாட்டிக்கொண்டு வள்ளி பாட்டியின் வீட்டை நோக்கி சென்றாள்.
அவளது காலணிகள் கலட்டிவிடப்பட்ட இடத்தில் இருந்து சில அடிகள் தூரத்தில் அவளை உறக்கத்தில் ஆழ்த்திய தூக்க மாத்திரையின் உறைகள் கிடந்தன.
தனது மகள் ஆர்யனை சந்திக்க கூடாது என்பதற்காக சிவஞானம் தீட்டிய திட்டம் ஜெகன் மற்றும் அனிகாவினால் நிறைவேற்றப்பட்டது. அதற்கு சாட்சியாகவே இருந்தன கீழே கிடந்த மாத்திரை உறைகள்.
இங்கே இறப்பு வீட்டிற்கு வந்தவள் இஷானியிடம் சென்றாள். அவளுக்கு அக்காவின் நிலையை எண்ணி பாவமாக இருந்தது.
“ரொம்ப நேரம் தூங்கிட்டேன் இஷா. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு. பாட்டிக்கு சடங்கு எல்லாம் எப்போ முடிஞ்சது?”
“இப்போ தான் அக்கா, கொஞ்சம் முன்னாடி.”
ஓ என தலை அசைத்தவள் தங்களது அருகே வேறு யாரும் இருக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “அவரு பத்தி எதுவும் தெரிஞ்சதா இஷா? வந்ததுல இருந்தே கேட்க நினைச்சேன். என் அம்மா பக்கத்துல இருந்ததால முடியல. சொல்லு, தாரக் அவரை போய் பார்த்துட்டு வந்தானா?” எனக் கேட்டாள்
அவள் பதில் சொல்லும் முன் அவர்களை கடந்து சென்ற ஒரு குடிமகன் “கடைசியில எங்க சின்னம்மாக்கு அந்த கொலைகாரன் கொள்ளி வச்சுட்டானே” என்று புலம்பியபடி சென்றான்.
அதிர்ச்சியில் திரும்பியவள் இஷாவை கேள்வியாய் பார்க்க ஆமாம் என்பது போல் தலை அசைத்தாள். பின் பிருந்தாவின் அடுத்த கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அனுமானித்து “கொஞ்சம் முன்னாடி தான் கிளம்பினாரு ஜீப்ல போறாங்க” என்றாள்.
உடனே குறுக்கு பாதையில் சென்று அவனை பார்க்கலாம் என வேகமாக ஓடியவள் தன் முன்னே வழிமறித்து நின்றிருந்த அண்ணனை பார்த்து ஓட்டத்தை நிறுத்தினாள்.
தாெடரும்