GG writers
Moderator
அண்ணனை அவ்விடத்தில் எதிர்பார்க்காதவளின் கால்கள் மெல்ல பின்நோக்கி நகர்ந்தது.
ஜெகனின் பின்னே இருந்து எட்டிப் பார்த்தாள் அனிகா. அவள் அறையில் இருந்து வெளியே வரும் பொழுது பிருந்தா இல்லாததை கண்டு உடனடியாக ஜெகனிற்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
அவனும் தங்கை எங்கே எனத் தேடினான். அப்பொழுது தான் பிருந்தா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இஷானியிடம் ஏதோ கேட்க குடிமகனின் கூற்றில் அதிர்ச்சி அடைந்திருந்தாள். அதன்பிறகு அவனது கூற்றை இஷானி உறுதிபடுத்திக் கொண்டிருந்தாள்.
ஜெகனிற்கு கோபம் பன்மடங்காக எகிற தங்கையின் கைகளை பற்றி இழுத்துக் கொண்டு இஷானியின் முன்பு வந்தான்.
‘என்ன சொல்லி திட்டப் போகிறானோ?’ என அவள் யோசித்துக் கொண்டிருக்க பளாரென கன்னத்தில் அறைந்தான்.
“உன்னோட விஷயத்துல தலையிடக் கூடாதுனு சொன்ன சரினு கேட்டுக்கிட்டேன். அதேபோல என் தங்கை விஷயத்துல நீ மூக்க நுழைக்காத” என கடுமையான குரலில் அவளை எச்சரித்தான்.
பயத்தில் உறைந்து போன பிருந்தா அண்ணனைவிட்டு இரண்டடி தள்ளி நின்றாள்.
ஜெகனது வலிமையான விசையால் இஷானியின் கன்னங்களில் கைரேகைகள் பதிந்து போனது. அவனது செயலால் ஆங்காங்கே நின்றிருந்த சொந்தங்கள் அனைவரும் திரும்பி பார்க்க தாரக்கும் திரும்பி பார்த்தான்.
தங்கை கன்னத்தில் கை வைத்தபடி கண்ணீர் பெருகியபடி நிற்க அவள் எதிரே ரெளத்திரமாக நின்ற ஜெகனை கண்டு நடந்ததை யூகித்துவிட்டான்.
விரைந்து அவர்கள் அருகே சென்றவன் ஜெகனை தங்கையின் அருகில் இருந்து தூர தள்ளினான்.
“இப்போ எதுக்காக என் தங்கைய அடிச்ச ஜெகா? உன்னோட காட்டுமிராண்டி தனம் எல்லாம் எங்ககிட்ட காட்டாத”
“அவள் என் தங்கச்சிக்கு மாமா வேலை பார்ப்பா, என்னை பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றீயா?” என அசிங்கமாக பேசினான்.
அவனது சொற்களில் அருவருப்பாக உணர்ந்த இஷானி அவனது முன்வந்து பளாரென அறைந்தாள்.
“வயசுல பெரியவன்ற ஒரே காரணத்துக்காக மட்டும் தான் அமைதியா இருந்தேன். இன்னொரு முறை என்னபத்தி தப்பா பேசுன, அப்புறம் உன்னோட நாக்கை அறுத்து கையில கொடுத்துருவேன். ஜாக்கிரதை” என்றாள் இஷானி.
ஒரு சின்ன பெண் அனைவர் முன்னிலையிலும் தன்னை ஓங்கி அறைந்ததில் அவமானம் அடைந்த ஜெகன் மீண்டும் ஓரடி அவளை நோக்கி முன்னேற அவனது நெஞ்சில் கை வைத்து பின்நோக்கி தள்ளினான் தாரக்.
அப்பொழுது தான் அங்கே வந்த அவர்களது பெற்றோர்கள் நிலமையின் தீவிரத்தை உணர்ந்தனர். மகளின் மேல் அளவுகடந்த அன்பை கொண்டிருந்த கிருஷ்ணசாமி அவளது கன்னத்தில் இருந்த காயத்தை கண்டு கொதித்தெழுந்தார்.
சிவஞானம் தனது மகனது செயலுக்காக மன்னிப்பை கேட்டவன் அவனை தூர இழுத்துச் சென்றான்.
அவரது மனைவி சாந்தியோ “என்ன தான் இருந்தாலும் அவன் உன் அண்ணன். ஒரு ஆம்பள. அவனை கை நீட்டி அடிக்குற, நீயெல்லாம் என்ன பொண்ணுடி? பிள்ளை வளர்த்துக்கா பாரு உன் அம்மா, நல்ல மலமாடு மாதிரி.” எனத் திட்டினாள்.
“பெரியம்மா” என கோபமாக முன்னேறிய இஷானியின் கைகளை பிடித்த ருக்மணி “நான் என் பொண்ணை நல்லா தான் வளர்த்து இருக்கேன். உங்க பொண்ணு மாதிரி பயந்தாங்கோளிய வளர்க்கல. சுயமா முடிவெடுக்க தெரியாத கோலையாவும் வளர்க்கல. அதுனால தைரியமா எப்படி இருக்கனும்னு சொல்லி உங்க பொண்ணை வளர்த்துங்க” என்றவர் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
சித்தியின் ஒவ்வொரு வார்த்தையும் பிருந்தாவை காயப்படுத்தியது. அதே அளவிற்கு அவளை குற்ற உணர்ச்சியிலும் தள்ளியது.
இரவு உணவை முடித்துக் கொண்டு பெண்கள் அனைவரும் கிருஷ்ணசாமியின் வீட்டிலும் ஆண்கள் அனைவரும் வள்ளி பாட்டியின் வீட்டிலும் தங்குவதென முடிவாகியது.
அதன்படி கியாரா சின்ன மாமாவின் வீட்டிற்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தாள். அப்பொழுது அவளது அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ஜெகன் கதவை தாழிட்டுவிட்டு அவள் புறம் திரும்பினான்.
அவள் பதட்டத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருக்க அவள் அருகே வந்தவன் “இதோ பாரு சித்தப்பா வீட்டுல என் தங்கச்சி மனசை கரைக்குற மாதிரி எந்த வேலையும் பண்ணாத” என்றான்.
விரக்தி சிரிப்பை உதிர்த்தவள் சரி என்பதாக தலை அசைத்தாள். அவள் வாய் திறந்து பதில் உறைக்காதது அவனுக்கு மேலும் சினத்தை அதிகப்படுத்த “உன்னால வாய் திறந்து பதில் சொல்ல முடியாது?” எனக் கத்தினான்.
அவனது கத்தலை பொருட்படுத்தாமல் அவனை தாண்டி கதவின் அருகே சென்றாள்.
“என்ன திமிராடி? இன்னமும் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்துன ஜெகன்னு நினைச்சியா? அதுக்கு வாய்ப்பே இல்ல. தேவையில்லாத எதையும் மண்டையில ஏத்திக்காத புரிஞ்சதா?” என நக்கலுடன் கூறினான்.
அவனது சொற்களில் சினம் கொண்டு திரும்பி அவனிடம் சண்டையிடுவாள் என எதிர்ப்பார்த்த ஜெகன் ஏமாற்றம் அடைந்தான்.
விறுவிறுவென வெளியே சென்றுவிட்டாள் கியாரா. கோப பெருமூச்சுடன் கட்டிலின் காலை எட்டி உதைத்த ஜெகன் “குள்ளச்சி” என திட்டியபடி அறையைவிட்டு வெளியேறி இருந்தான்.
இரவு பெண்கள் அனைவரும் ருக்மணியின் வீட்டில் தங்கியிருந்தனர். இஷானி கியாரா மற்றும் ருக்மணி ஒரு அறையிலும் சாந்தி பிருந்தா ஒரு அறையிலும் மற்றும் தாரக்கின் அறையில் அனிகாவும் தங்கி கொண்டனர்.
மற்ற உறவினர்கள் இரண்டு மூன்று பேர் இருக்க அறையில் தங்களோடு தங்கி கொள்ளுங்கள் என ருக்மணி கேட்க மறுத்து கூடத்தில் படுத்துக் கொள்வதாக கூறிவிட்டனர். ருக்மணி அதன்பிறகு அவர்களை வற்புறுத்தவில்லை. அவர்கள் உறங்குவதற்கான ஏற்பாடுகளை மட்டும் செய்து கொடுத்தார்.
இரவு தாய் உறங்கிய பின் அறையைவிட்டு வெளியேறிய பிருந்தா இஷானி இருந்த அறைக்கு சென்றாள்.
பாட்டியை நினைத்தும் அண்ணனை நினைத்தும் இன்னமும் தூங்காமல் இருந்த கியாராவை தேற்றியபடி மற்ற இருவரும் விழித்திருந்தனர்.
திடீரென அறை கதவு திறக்கப்படவும் மூவரும் ஒருசேர கதவின் புறம் திரும்பினர். மெளனமாக உள்ளே நுழைந்த பிருந்தா இஷானியின் அருகே வந்து “சாரி இஷா” என்றாள்.
அவள் பதில் ஏதும் சொல்லாமல் பிருந்தாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். தயக்கமாக அவளை நிமிர்ந்து பார்த்த பிருந்தா மீண்டும் தலை கவிழ்ந்து கொண்டாள்.
“ம் அப்படி தான் இன்னும் நல்லா முகத்தை பூமியில அழுந்த புதைச்சுக்கோ, நீ ஏன் அக்கா இப்படி இருக்க?” என ஆதங்கமாக கேட்டாள்.
அவள் மெளனமாக கண்ணீர் உதிர்க்க “இதோ பாரு பிருந்தா சித்தி சொல்றேனு கோவிச்சுக்காத. உன் அப்பா அண்ணா இரண்டு பேரும் உன் வாழ்க்கைய கெடுக்கல நீயே தான் உன் வாழ்க்கைய சீரழிச்சுக்குற. பொண்ணுங்க இவ்வளவு சென்சிட்டிவ்வா இருந்தால் கஷ்டந்தான்படனும். கொஞ்சமாவது அறிவா இருக்கா பாரு” என்றார் ருக்கு.
“ஆர்யன் மாமா உன் புருசன் அக்கா. இருந்தாலும் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு உன்ன வாழ சொல்லல. அவரு வேணும் வேண்டாம் அது உன்னோட முடிவா இருக்கனும்னு சொல்றோம்”
“அவரு கொலை செய்து இருப்பாருனு எனக்கு தோணல இஷா” என அவர்களது அறிவுரைக்கு பதில் வினையாற்றாமல் தனது எண்ணத்தை கூறினாள் பிருந்தா.
“அதை தான் நாங்களும் சொல்றோம் ஆனால் அவரு ஏன் அப்படி சொல்றாருனு தான் புரியல. அந்த பொம்பளைய கொலை செய்தது யாருனும் தெரியல. அது அடுத்தகட்ட பிரச்சனை அக்கா ஆனால் உன் வாழ்க்கை முடிவ நீயே தான் தேர்ந்தெடுக்கனும்.”
“எல்லாரும் ஈசியா சொல்றீங்க ஆனால் என்னோட நிலையில இருந்து யோசிக்கமாட்றீங்க. சின்ன வயசுல இருந்தே அப்பா எது சொன்னாலும் சரினு சொல்லி பழகிட்டேன். இப்போ நோ சொல்ல பயமா இருக்கு இஷா. என்ன செய்றதுனு புரியல.”
“நல்ல யோசி அக்கா. இங்க இருந்து பாேறதுக்குள்ள நல்ல முடிவா எடு. நாங்க எல்லாரும் உனக்கு துணையா இருக்கோம்”
சரி என்பதாக தலை அசைத்து தன் அறைக்கு வந்துவிட்டாள் பிருந்தா.
அன்றைய பொழுது முடிந்து அடுத்த நாள் தொடங்க மறுநாள் கடலுக்கு செல்வது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்தது.
பேச்சுகள் நீண்டு திசை மாறி கியாராவின் திருமண விஷயத்திற்கு வந்து நின்றது. ஜெகன் ஒருமுறை கியாராவை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.
“கெட்டது நடந்துருச்சு, அதை மாத்த முடியாது. அவங்க பாட்டியோட ஆதரவுல இருந்த புள்ள. இப்போ அவங்க இல்லாம போய்ட்டாங்க. என்னதான் அண்ணன் கொலைகாரனா இருந்தாலும் அந்த புள்ளைக்கு நல்லது செஞ்சு பார்க்க வேண்டியது சொந்தமான நம்மளோட கடமை” என்றார் ஒரு பெரியவர்.
அனிகா சலிப்பாக கண்களை மேல்நோக்கி சுழற்றினாள்.
“என்னப்பா சிவஞானம், கிருஷ்ணசாமி உங்க தங்கச்சி பொண்ணு உங்களுக்கு தான் உரிமை இருக்கு என்ன சொல்றீங்க?”
சிவஞானத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே கியாராவை ஜெகனுக்கு மணமுடிக்க ஆவல் இருந்தது. ஆனால் ஆர்யன் விவகாரகம் அவரது முடிவை என்றோ கைவிடச் செய்துவிட்டது. அதனால் அமைதி காத்தார்.
“என் புள்ள தாரக் அவளை கல்யாணம் செய்யனும்னு ஆசைப்பட்டோம் ஆனால் அவன் மனசுல அப்படி எந்த நினைப்பு இல்லனு சொல்லிட்டான். பொறுமையா தான் யோசிக்கனும் பெரியப்பா” என அந்த பெரியவரிடம் உரைத்தார் கிருஷ்ணசாமி.
“ஐயா கிருஷ்ணா தப்பா எடுத்துக்கலனா நான் ஒரு விஷயம் சொல்றேன். நேத்து கேதத்துக்கு வந்த என் சின்ன மகன் புள்ளைகக்கு நம்ம கியாராவ கேட்டாங்க. உங்ககிட்ட கேட்காம என்னால உறுதி சொல்ல முடியாது இல்லையா, அதான் அவங்கள பேச அனுமதிக்கல. இப்போ என்னையா சொல்றீங்க?”
கிருஷ்ணசாமி பதில் அளிக்கும் முன் “பரவா இல்லை கொலைகாரனோட தங்கச்சினு தெரிஞ்சும் ஒத்துக்கிட்டாங்களா, ஆச்சரியமா இருக்கே?” என குத்திக் காட்டி பேசினான் ஜெகன். அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள் கியாரா.
ஜெகனது பேச்சில் அனைவரும் சங்கடம் அடைந்தனர். “இப்போதைக்கு எந்த பேச்சும் வேண்டாம் பெரியப்பா பொறுமையா பார்த்துக்கலாம்” என அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தார் கிருஷ்ணசாமி. அவரது பதிலில் அனைவரும் அமைதியாகினர்.
அவர்களது அசாத்தியமான அமைதியை கலைக்கும் விதமாக “எனக்கு சம்மதம் மாமா” என்ற கியாரா தாரக் புறம் திரும்பி “அண்ணன்கிட்ட இதை பத்தி பேசு தாரக் மாமா” என்றவள் விறுவிறுவென வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
செல்லும் அவளை வெறித்துக் கொண்டிருந்த ஜெகனின் பார்வைக்கு பாெருள் தான் விளங்கவில்லை.
உறவுகார பெரியப்பாவோ அவளது கூற்றில் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் தற்போது பேச்சு வார்த்தை ஏதும் வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளிப்போட்டனர்.
இங்கே அனைவரும் பேசிக் கொண்டிருக்க அறையில் இருந்து வெளிவராத பிருந்தா தன் கணவன் ஆர்யனை முதன்முதலாக சந்தித்த தினத்தை நினைத்துப் பார்த்தாள்.
அத்தை காதல் திருமணம் புரிந்து பிரிந்து சென்றுவிட்டார் என்று தெரிந்த பிருந்தாவிற்கு திடீரென அவர்களது வருகை ஒருவித ஆர்வத்தை உண்டுபண்ணியது.
அன்று வியாழன் பிருந்தா பள்ளிக்கு சென்றுவிட்டாள். மாலை வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்த பிருந்தாவிடம் நாளை பாட்டி ஊருக்கு செல்ல போகிறோம் என்ற செய்தி கிடைத்தது.
அதனால் நாளை ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள் அதனோடு சேர்த்து சனி ஞாயிறு என மூன்று தினங்கள் தங்கிவிட்டு வருவோம் என்றார் தந்தை.
திடீரென ஊருக்கு செல்வதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் குழம்பிய பிருந்தா அண்ணன் ஜெகனிடம் கேட்க “பல்லவி அத்தை ஊருக்கு வந்திருக்காங்களாம். அம்மாவும் அப்பாவும் பேசும் போது கேட்டேன். அதான் எல்லாரும் ஊருக்கு போறோம்” என்றான்.
பிறந்ததில் இருந்து அவர்களை பார்க்காத பிருந்தா ஆர்வமாக கிளம்ப ஆயத்தமானாள். உடனடியாக நாளை தனக்கு விடுமுறை வேண்டும் என லீவ் லெட்டர் எழுதியவள் தன் உடன் பயிலும் பக்கத்துவீட்டு பெண்ணிடம் கொடுத்துவிட்டு வந்தாள்.
அன்று இரவு முழுவதும் நாளை ஊருக்கு செல்ல இருப்பதை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள்.
தொடரும்