GG writers
Moderator
காலை உணவை முடித்துவிட்டு கிராமத்திற்கு கிளம்பினர் சிவஞானம் குடும்பத்தினர்.
அவர்களது கிராமத்தின் பெயர் வசந்தபுரம் (கற்பனை ஊர்). ஊரின் செல்வாக்கு மிகுந்த மனிதர்களில் ஒருவர் கந்தன். அவரது மனைவி முருகவள்ளி.
இந்த தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் சிவஞானம் இரண்டாமவர் கிருஷ்ணசாமி கடைசியாக பல்லவி.
பல்லவி அண்ணன்களைவிட படிப்பில் அதிகமான தேர்ச்சியை அடைந்தமையால் அவளை சென்னைக்கு அனுப்பி படிக்கவைத்தார் அவர்களது தந்தை.
அவர்களது கல்லூரியில் நடந்த விளையாட்டு போட்டி ஒன்றில் கலந்து கொள்ள சில வட இந்திய மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் வந்திருந்தனர். அதில் ஒருவர் தான் முகமது ரயான்.
விழாவின் வாலன்டரி குரூப்பில் இருந்த பல்லவிக்கும் விளையாட வந்த ரயானுக்கும் இடையே ஈர்ப்பு உண்டானது. அவை பார்வை பரிமாற்றங்களால் தொடர போட்டி முடிந்த அன்று பேச்சு வார்த்தைக்கு பரிமாற்றம் அடைந்தது.
தமிழ் தெரியாமல் அவரும் ஹிந்தி தெரியாமல் பல்லவியும் முழித்துக் கொண்டனர்.பின் ஆங்கிலத்தில் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
ஆங்கிலம் தெரிந்தாலும் பல்லவியால் சரளமாக பேச முடியவில்லை. ஆனால் ரயான் நன்றாக ஆங்கிலம் பேசினான். பல்லவியின் அமைதி அவரை மேலே பேசவிடாமல் தடுத்தது.
வெகுநேரம் என்ன பேசுவதென்று தெரியமால் நேரத்தை கடத்திக் கொண்டிருந்தனர். பின் தனது அட்ரஸை அவளிடம் எழுதிக் கொடுத்தார். இவரும் முகவரியை கொடுத்தார்.
இருவரது ஈர்ப்பு நட்பு எனும் வட்டத்திற்குள்ளே இருந்தது. கல்லூரி இரண்டாம் ஆண்டு வரை பென் பிரண்ட் ஆகவே இருந்தனர்.
பின் எந்த நிலையில் தைரியம் கிடைத்தது என்று தெரியவில்லை காதல் வார்த்தைகளை பரிமாறி கொண்டனர். இருவரும் துணையின் மொழியை கற்று கொள்ள ஆரம்பித்திருந்தனர். பல்லவி கல்லூரி முடித்து ஊருக்கு திரும்பினார்.
லெட்டர் பரிமாற்றம் தாெடர்ந்து கொண்டே இருக்க இந்நிலையில் ஒருநாள் அண்ணன் கிருஷ்ணசாமியின் கைகளில் மாட்டிக் கொண்டார் பல்லவி.
அவர் தாய் தந்தையிடம் சொல்லிவிட கந்தன் தன் மகள் பல்லவியை அழைத்து விசாரித்தார். அவரும் வேறு வழியின்றி தனது காதல் விசயத்தை உரைத்துவிட கழுத்து நரம்புகள் புடைக்க வேகமாக பல்லவி அருகில் வந்த சிவஞானம் இரக்கம் இல்லாமல் அடிக்க ஆரம்பித்தான். யார் தடுத்தும் கேட்கவேயில்லை.
அடித்து ஓய்ந்தவர் தானாக விலகிக் கொள்ள காயங்களுடன் அழுது கொண்டிருந்தார் பல்லவி.
கிருஷ்ணசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. செல்ல தங்கை அடிவாங்குவதையும் காண முடியவில்லை. வீட்டை விட்டு வெளியே சென்று திண்ணையில் அமர்ந்து கொண்டார். கண்ணீர் மட்டும் நின்றபாடில்லை.
யார் அந்த பையன்? என்ன பெயர்? எந்த ஊர்? என்று கேட்க பல்லவி பயந்து கொண்டே “முகமது ரயான்” எனக் கூறினார்.
மதம் மாறி ஒருவரை அவர் காதலித்தது அங்கிருந்த எவருக்கும் பிடிக்கவில்லை. காதலுக்கு மறுப்பு தெரிவித்து உடனடியாக அவருக்கு கல்யாண ஏற்பாடுகளை செய்திட ஆரம்பித்தனர்.
பல்லவி தோழியின் மூலம் ரயானிற்கு தகவலை பரிமாற்றினார். ரயான் உடனே பல்லவி வீட்டிற்கு புறப்பட்டு வந்து சம்மந்தம் பேசினார்.
ரயான் தமிழ் சரளமாக பேசுவதை கண்டு வீட்டினர் ஆச்சரியம் அடைந்தாலும் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
தான் படிப்பை முடித்துவிட்டதாகவும் அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். வேலை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்கிறோம் நல்ல சம்பளம் கிடைக்கும் உங்கள் மகளை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று எவ்வளவு எடுத்து கூறியும் மதம் ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு மறுத்துவிட்டனர்.
வலி நிறைந்த இதயத்தோடு புறப்பட்டார் ரயான். பின் பல்லவி திருமண தினத்தன்று வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். ரயானது குடும்பமும் அவர்களை ஏற்றுக் கொள்ளாததால் தனியாக வந்து வாழ ஆரம்பித்து இருந்தனர்.
பல்லவி ரயான் இருவருக்கும் தங்களது குடும்பதாருடன் தொடர்பே இல்லாமல் போனது. நாட்கள் வருடங்களாக இப்படியே பதினேழு வருடங்கள் உருண்டோடியது.
ஒருநாள் பல்லவியின் சொந்தகாரர் ஒருவர் அவரை சந்திக்க நேர்ந்தார். “பல்லவி” என அழைத்துக் கொண்டு அருகே வந்தவர் “பல்லவி தான?” எனக் கேட்க ஆமாம் என தலை அசைத்தார்.
பரஸ்பர நல விசாரணைகள் முடிந்ததும் “என்னமா நீ உன் அப்பா இறந்ததுக்கு கூட வராம போய்ட்டீயே?” எனக் கேட்டார்.
தந்தையின் இறப்பு செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பல்லவி அவரது அடுத்த வார்த்தையில் குற்ற உணர்ச்சி அடைந்தார்.
“உன்னேயே நினைச்சுட்டு இருப்பாரு. எப்ப பார்த்தாலும் உன்னை பத்தியே தான் பேசுவாரு. ஆரம்பத்துல உம்மேல கோபம் இருந்தாலும் அதுக்கப்புறம் எல்லாம் மாறிடுச்சு” என்றவர் கைகடிகாரத்தை பார்த்துவிட்டு “எனக்கு நேரம் ஆச்சு நான் வரேன் மா” என்றவர் அவரது மொபைல் எண்ணை கொடுத்துவிட்டு சென்றார்.
இரண்டு தினங்களாக அதே சிந்தனையில் இருந்தவர் தந்தை தான் இல்லை, தாயை மட்டுமாவது பார்த்துவிட்டு வருவோம் என முடிவு செய்து பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு வசந்தபுரம் வந்து சேர்ந்தார்.
வீட்டு வாயிலில் வந்த நின்று மகளை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார் முருகவள்ளி. கிராமம் என்பதால் உடனடியாக அவரது வருகை செய்தி கிருஷ்ணசாமியின் வீட்டிற்கு தெரியப்படுத்த அவரும் வந்து சேர்ந்தார்.
தங்கையை கட்டிக் கொண்டு அழுது தீர்த்தார். பல்லவியின் கணவனை பற்றி கேட்க அவர் இரண்டு வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார் என்று கூறினார். அவரை நினைத்து தற்போது வருத்தம் மேலோங்கியது. தங்கையை இனி இங்கேயே தங்கவைத்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்.
உடனடியாக தமையனுக்கு அழைப்புவிடுத்து தங்கையின் வருகையை பற்றி கூறினார். அதன் விளைவாக இதோ அவரும் வசந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
வேக வேகமாக வீட்டிற்குள் வந்த சிவஞானம் அங்கே அமர்ந்திருந்த தங்கையை கண்டு உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்.
“அண்ணன் அடிச்சது தப்பு தான்டா. என்னை மன்னிச்சுரு. அதுக்காக இத்தனை வருசமா எங்களை விட்டுட்டு போய்டீயே” என அவரது கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்தார்.
பின் ரயானின் இறப்பும் அப்பொழுது தான் சிவஞானத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது. அதன்பிறகு அவரது அழுகை அதிகமானது. ஆண்கள் அழுக கூடாது என அடிக்கடி கூறும் சிவஞானத்தின் முதல் அழுகை தங்கையின் வாழ்க்கையை எண்ணி தான் இருந்தது. தந்தை இறப்பிற்கு கூட அழுகவே இல்லை.
இப்படியே பாச போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் கியாரா.
அறையில் உறங்கி கொண்டிருந்தவள் திடீரென விழித்துவிட்டாள். கண்களை கசக்கி கொண்டு வெளியே வந்தவள் தாய் அழுது கொண்டிருப்பதை பார்த்துவிட்டு மா என்றபடி அவர் அருகே வந்து கண் துடைத்துவிட்டாள்.
“என்னாச்சுமா?” என அவள் ஹிந்தியில் கேட்க ஒன்றும் இல்லை என பதில் கூறினார் பல்லவி. அவர்கள் வட இந்தியாவில் இருந்ததால் அதிகம் ஹிந்தியே பேசி பழகி இருந்தனர். ஆனால் பல்லவி தமிழும் கற்றுக் கொடுத்திருந்தார்.
தமிழ் நன்றாக புரியும் பேசவும் செய்வார்கள் ஆனால் ஹிந்தி அளவிற்கு சரளம் இருக்காது.
சிவஞானம் பூரிப்புடன் கியாராவை பார்த்தவர் “உன் பொண்ணாடா?” என பல்லவியை பார்த்துக் கேட்டவர் “ குட்டி இங்க வாங்க” என்றார்.
அவள் பயத்துடன் தாயை பார்க்கவும் அவர் கண் செய்கை புரியவும் சிவஞானத்தின் அருகே சென்றாள்.
“நான் உன் மாமாடா தங்கம்” என்றவர் “பிருந்தா இங்க வா. பாரு, பாப்பா பாரு.” என்றார்.
பிருந்தா வேகமாக வந்து தந்தையின் அருகே நின்று கியாராவை பார்த்து சிரித்தாள். அவள் பதில் புன்னகை புரிய அவளை அழைத்துக் கொண்டு விளையாட சென்றனர்.
“பாப்பாக்கு என்ன வயசுடா?”
“பன்னிரெண்டு அண்ணா பெரியவனுக்கு பதினைஞ்சு”
“என் மாப்பிள்ளை எங்க அவனை காணோம்”
“தாரக் கூட சேர்ந்து வெளிய போய் இருக்கான் அண்ணா”
“எங்கடா கிருஷ்ணா வந்ததுல இருந்து இஷாவையும் காணோம்”
“அவங்க இரண்டு பேரும் விட்டுட்டு போகவும் அழுகை அதான் கடைக்கு கூட்டிட்டு போய் இருக்கா ருக்கு” என பதில் அளித்தார் கிருஷ்ணசாமி.
சிறிது நேரத்தில் தாயுடன் வெளியே சென்றிருந்த இஷானியும் வந்துவிட அனைவரும் ஒன்றாக விளையாட ஆரம்பித்தனர்.
ஜெகனுக்கு பதினாறு வயது என்பதால் அவன் விளையாட்டில் ஆர்வம் எதுவும் இல்லாமல் அவர்களை தள்ளி நின்று கண்காணித்துக் கொண்டிருந்தான்.
கியாரா செய்யும் செயல்கள் எல்லாம் அவனுக்கு கியூட்டாக தெரிய புதிதாக வந்த குழந்தை என்பதால் தோன்றும் உணர்வு என்று நினைத்துக் கொண்டான். உண்மையும் அதுவே.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் கடந்துவிட “கியாரா” என்ற புதிய குரலில் அனைவரும் திரும்பி பார்த்தனர்.
ஆர்யன் தான் அவளை அழைத்திருந்தான் உடன் தாரக்கும் நின்றிருக்க “சாப்பிட வா. அம்மா கூப்பிட்டாங்க” என ஹிந்தியில் கூறினான்.
பிருந்தா அவனது உயரத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். “என்ன இவன் இவ்வளவு உயரமா இருக்கான்?” என வாய்விட்டே புலம்பினாள். ஆனால் யாரும் அதனை கவனிக்கவில்லை.
“வரேன் பையா” என கூறிய கியாரா அவனுடன் சென்றுவிட்டாள். தாரக் மற்றவர்களை உணவுண்ண அழைக்கவும் அவர்களும் முன் சென்றவர்களை பின் தாெடர்ந்தனர்.
செல்லும் பாெழுது தங்களுக்குள் “அவங்க என்ன பாசை பேசுறாங்க? புரியவே இல்லை” எனக் கேட்டாள் இஷானி
“அது ஹிந்தி” என பதில் அளித்தான் ஜெகன்.
“ஓ அப்போ தமிழ் தெரியாதா?” என பிருந்தா கேட்க “இல்ல கொஞ்சம் கொஞ்சம் என்கிட்ட தமிழ்ல பேசுனான் ஆர்யா” என்றான் தாரக்
“ஆர்யா?” என ஜெகன் கேட்க “அவன் பேரு ஆர்யன் சுருக்கமா ஆர்யானு சொன்னேன்” என்றான் தாரக்.
“ஆமா இரண்டு பேரும் இவ்வளவு நேரம் எங்க போயிருந்தீங்க?”
“சும்மா அப்படியே அவனுக்கு ஊரை சுத்திக்காட்டிட்டு வந்தேன்”
“ஆள் எப்படிடா? நல்ல பையனா? நல்லா பழகுறானா?”
“ம். நல்ல பையன் தான். ரொம்ப சைலண்ட்டா இருக்கான். புதுசா பார்க்குறதால தயங்குறானோ என்னவோ?”
“இருக்கலாம்” என்ற ஜெகன் உணவருந்த அமர்ந்தான். அவனை தொடர்ந்து அனைவரும் தரையில் வரிசையாக அமர உணவு பரிமாறப்பட்டது.
அன்றைக்கு அனைவருக்கும் விருந்து சமைக்கப்பட்டிருக்க வயிரார உண்டுவிட்டு அனைவரும் ஹாலில் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தனர்.
இத்தனை வருடங்களில் நடந்த நிகழ்வுகள் தங்களது திருமணம் பிள்ளைகள் பிறப்பு என கதை நீண்டு கொண்டே இருக்க மறுநாள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவோம் என்று முடிவாகியது.
“நிச்சயமா அண்ணா” என்ற பல்லவி கியாராவின் சிரிப்பு சத்தத்தில் திரும்பி பார்த்தார். ஜெகன் ஏதோ சொல்ல சொல்ல அதற்கு குழுங்கி குழுங்கி சிரித்துக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்தவரின் கண்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது. அண்ணன் மகனை நன்றியுடன் நோக்கினார். அப்பொழுது தான் பிருந்தா மட்டும் குழந்தைகளோடு ஒன்றாக இல்லாமல் தாய் அருகே அமர்ந்திருப்பதை கவனித்தார்.
“என்னாச்சு பிருந்தாமா? நீ அவங்களோட போகல”
இல்லை என தலை அசைத்தவள் தந்தையை தயக்கத்துடன் பார்க்க “போ” என தலை அசைத்தார் சிவஞானம்.
“என்ன அண்ணா பாப்பா எல்லாத்துக்கும் உன்னையே பார்க்குறா? ரொம்ப கண்டிப்பா இருக்கியா என்ன? சின்ன குழந்தை தான இந்த வயசுலதான் சந்தோஷமா விளையாட முடியும் சுதந்திரமா விடு அண்ணா” என்றார் பல்லவி.
“அது ஒன்னும் இல்ல மதினி உங்களுக்கு சுதந்திரம் கொடுத்ததால தான ஓடிப் போனீங்க. அதுமாதிரி பிருந்தாவும் செய்துடக் கூடாதுல அதான் அப்படி கண்டிப்பா இருக்காரு. அவருக்குள்ள எங்க தான் பொண்ணு அவள் அத்தை மாதிரியே இருந்துருவாளோனு சின்ன பயம்” என்று குத்திக்காட்டி பேசினார் சாந்தி.
சாந்திக்கு பல்லவி மற்றும் அவரது பிள்ளைகள் இருவரையும் பிடிக்கவில்லை. திடீரென வந்த அவருக்கு தன் மாமியார் வீட்டாரின் கவனிப்பும் பிடிக்கவில்லை.
மனைவியின் கூற்றில் சங்கடம் அடைந்த சிவஞானம் அவரை முறைப்புடன் நோக்கிவிட்டு “அப்புறம் பல்லவிமா, பசங்களுக்கு எத்தனை நாள் லீவ்” எனக் கேட்டு பேச்சை மாற்றினார்.
அண்ணியின் கூற்றில் தலை கவிழ்ந்திருந்த பல்லவி அண்ணன் கேள்விக்கு பதில் அளிக்க துவங்கினார்.
இப்படியாக அன்றைய இரவும் வர குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஒன்றாக கூடத்தில் பாய்
விரித்து படுத்துக் கொண்டனர்.
திடீரென பாதி இரவில் கியாரா சத்தமா ஹிந்தியில் ஏதோ கூறி தூக்கத்திலே அழுதுக் கொண்டிருந்தாள்.
அவளது கத்தலில் அனைவரும் முழித்துவிட மகளின் அருகே வந்த பல்லவி அவளை தன் மடியில் தாங்கி “அம்மா இங்க தான் இருக்கேன்டா” என்று கூறி சமாதானம் செய்து தூங்க வைத்தார்.
கியாரா தூங்கியதும் அனைவரும் பல்லவியை கேள்வியாக பார்க்க ஆரம்பித்தனர். சிறுவர்கள் கூட எழுந்துவிட அவர்களும் அத்தையின் வாய்மொழிக்காக காத்திருந்தனர்.
“அது ஒன்னும் இல்ல அண்ணா. அவங்க அப்பா இறந்ததுல இருந்து இப்படி தான் அடிக்கடி தூக்கத்துல அலறுவா. வேற ஒன்னும் இல்ல” என்றுக் கூறினார்.
முருகவள்ளி பாட்டி சாமி அறையில் இருந்து திருநீறு எடுத்துவந்த பேத்தியின் நெற்றியில் பூசிவிட்டார்.
ஆர்யன் புருவத்தை சுருக்கி அவரை கேள்வியாக பார்க்க எதுவும் சொல்ல வேண்டாம் என தலை அசைத்துக் காட்டிய பல்லவி படுத்துக் கொண்டார்.
உண்மை தெரிந்தால் அனைவரது எதிர்வினையும் எப்படி இருக்குமோ என்ற யோசனையுடன் ஆர்யனும் படுத்துக் கொண்டான்.
தொடரும்