வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

அழகிய காதல் நிலவே - கதை திரி

Status
Not open for further replies.
அழகிய காதல் நிலவே


அனைவருக்கும் வணக்கம்,

இந்த போட்டி கதையின் மூலம் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்☺️. அனைவருக்கும் கொடுக்கும் ஆதரவை எனக்கும் தரும் படி கேட்டுக்கொண்டு கதையின் டீ ஆதிரலாமா….😁😁😁😁😁 ( மை மைண்ட் வாய்ஸ்… எப்பா பார்மலிட்டீ யா பேசுறது எம்புட்டு கஷ்டமா இருக்கு….😤😤😤)



தன் உதடை குவித்து அவள் நெற்றியில் விழும் முடி கற்றயை தென்றல் காற்றை போல் மென்மையாக ஊதினான். அதை பெண்ணவள் கண் மூடி ரசிதிருந்து தன்னை மறந்து அவர்களின் உதடுகள் இணைய நூலிழை இடைவெளி இருந்த சமயம் கதவை படாரென்று திறந்து கொண்டு உள்நுழைந்தாள் அவள். இதை சற்றும் எதிர் பாராத இருவரும் ஸ்தம்பித்து இருந்தது ஓரிரு வினாடிகள் தான். முதலில் சுய உணர்வு பெற்றவன் " இடியட், டோண்ட் யூ ஹவ் யேனி காமன் சென்ஸ். ரூம் குள்ள வரும்போது டோர் கினாக் பண்ணிட்டு வரணும் பேசிக் காமன் சென்ஸ் கூட தெரியாதா. உனக்கு யார் தான் டீச்சர் வேலை கொடுத்தார்களோ" என வார்த்தைகளை கடித்து துப்பினான்.


அவன் பேசி முடிபதற்கும் அந்த அறை அதிரும் படி "பளார்" என்ற சத்தம் எதிர் ஒலிபதற்கும் சரியாக இருந்தது. அதில் தன் கன்னகளை தாங்கி நின்றிருந்தாள் அவள். அதில் தன் கவனம் கலைந்தவன் " நிகிதா ஸ்டாப் திஸ் நான்சென்ஸ். ஹவ் டர் யூ டூ ஸ்லப் மை ஸ்டாஃப். உனக்கு யார் இந்த அதிகாரத்தை தந்தது" என்று அடி குரலில் சிறியவனை கண்டு தன் வசீகர புன்னகையை பூத்து "மை ஹஸ்பேண்ட்" என்று திமிராக கூறியவளை கண்டு கேலியாக தன் உதடுகளை வளைத்தவன் கேட்ட கேள்வியில் இம்முறை அதிர்வது நிகிதாவின் மூறை ஆனது. அதனால் ஆத்திரம் அடைந்தவள் "அனிஷ்ஷ்…" என்று அலற நிதானமாக அவளை எரிட்டவன் "அனிஷ்வர்தன்" என்றான் திமிராக.


இதை பார்த்து கொண்டு நின்ற மூன்றமானவள் அந்த இடத்தில் தான் அதிகப்படி என்று உணர்ந்து இருவரிடமும் மன்னிப்பு வேண்டி வெளியேரினாள்.



பிரியமுடன்,

உங்கள் அஸ்திரம் 60😍
மறக்காம கமென்ட் பண்ணிருங்க ஃப்ரெண்ட்ஸ்...☺️☺️☺️
 
Last edited:
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,

நீங்க எல்லாரும் போன டீஸர்க்கு கொடுத்த ஆதரவ பாதுட்டு மீ வெரி ஹேப்பி. அதனால் அடுத்த டீ ஆத்த ஓடி வந்துட்டேன். போன டீக்கு கொடுத்த ஆதரவ இதுகும் கொடுங்க ஃப்ரெண்ட்ஸ்.😍😍😍☺️☺️☺️


டீஸர் 2:



"காதலிக்கும் ஆசை இல்லை

கண்கள் உன்னை காணும் வரை

உள்ளுக்குள் காதல் பூதது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும்

பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே நான் உன்னை காணும் முன்னால்


என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்

என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்

நான் தொட்டுகொள்ள கிட்ட வந்தால்

திட்டி திட்டி தித்தித்தாய்"


எனும் பாடல் வரிகள் எங்கோ ஒலிபெருக்கியில் ஒலிப்பது இவன் செவிகளை நிரப்பி கொண்டிருந்தது.

அதில் அவன் மனம் தன்னவளை நினைத்து ஊரிகி கண்களை மூடி ரசித்து கொண்டிருந்த சமயம் அவள் பேசிய பேச்சுக்கள் நரம்பின் வழி சென்று மூளையை தூண்டி விட தான் இவ்வளவு பலகினமானவான என ஆத்திரம் அடைந்தவன் அருகில் உள்ள கண்ணாடியால் ஆன சிறிய மேசையை தன் கைகளால் குத்தினான். சிங்கத்தின் முன் சிற்றேரும்பு நிற்க முடியுமா என்ன? அதை போல் அவன் வழிய கரம் பட்ட உடன் பல துகள்களாக சிதறிவிட்டது.

மனதின் வசம் சென்ற தன்னை ஒரு கட்டுகுள் கொண்டுவந்தவன் மூளையின் கட்டளைகளை நிறைவேற்ற சென்றவனின் மூகம் கனிவை தொலைத்து கற்பாறையாகா இறுகியது.


முகத்தில் கடுகு போட்டால் வெடித்து விடும் அளவு கோபத்தில் கொந்தளித்து உணவு மேசையை தாண்டி சென்றவனின் கவனத்தை திருப்பியது ஒரு தேனினும் இனிய குரல். அக்குரலில் உருகியவனின் நடை தன்னை மறந்து நின்றதுடன் மூகமும் அகமும் ஒன்றாக மலர்ந்து அக்குரலுக்கு சொந்தமானவளை வாரி அனைத்துக்கொண்டான்.


பிரியமுடன்,

உங்கள் அஸ்திரம் 60😍
 
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருகிங்க (உன் தொள்ள இல்லாம இத்தன நாள் நல்லாதான் இருந்தோம் அதான் இப்போ நீ வந்துடியேனு நீங்க நினைக்கிறது புரியுது மக்களே…😁😁😁) சாரி பிரெண்ட்ஸ் கொஞ்சம் பெர்சனல் விசயமா யூடி கொடுக்க தாமதம் ஆகிடுத்து மன்னிச்சு. சரி இப்போ கதை பத்தி சொல்லவா…



ஒரு பெண்ணிற்கு கணவனிடமும் சரி தன்னை பெற்றவர்களிடமும் சரி ஒரு சில எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு பொய்க்கும் வேளையில் அவள் படும் துயரம், மனஉளைச்சல்,சமூகத்தில் அவள் சந்திக்கும் கொடுமைகள், பேச்சுக்கள் ஏராளம். அதை கொண்டு நான் உங்களில் ஒருவராக முடிந்த வரை யார் மனதும் புண்படாத வகையில் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்க போகிறேன். நம் கதாநாயகனும் கதாநாயகியும் உங்களில் ஒருவராக நிச்சயம் வளம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் இதோ…


நிலா 1:


கல்வி என்பது மனிதனைச் சமூகப்பண்பினனாக்கும் வழிமுறை ஆகும். குழந்தையின் ஒட்டுமொத்த முழுமையான மேம்பாட்டுக்கான திரண்ட முயற்சி. குழந்தையின் உடல், மனம், உயிர் அவற்றின் உணர்வுகள், மனப்பான்மைகள், தொடர்புகள், குணநலம், ஆளுமை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழி. அப்படி பட்ட கல்வியை வியாபாரம் ஆக மாற்றிக்கொண்டிருந்த சர்வதேச பள்ளிகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையாகாது. ஏனெனில் சுமார் முப்பது முதல் ஐன்பது ஏக்கர் பரப்பளவை கொண்ட அந்த பள்ளி தமிழ் நாட்டின் தலைநகரம் என்று அழைக்கப்படும் சென்னையின் மையத்தில் அமைந்துள்ளதால் ஊரின் பெரும் புள்ளிகளின் வாரிசுகளின் பொழுது போக்க வரும் இடமாக மாற்றியமைக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை.


பெரிய பெரிய கோட்டை மதில்களும், அதை ஒட்டி அமைந்த மரங்களும், மரத்திற்கு நடுவே பாத்தி அமைத்து வளர்த்த அழகு செடிகளும், கண்ணை கொள்ளை கொள்ளும் சுவற்றில் பூசிய சாயங்களும் அப்பள்ளிக்கு அழகு சேர்க்கதான் செய்தது. மேலும் பெரிய பெரிய வகுப்பறைகள் கொண்டு மொத்தம் ஐந்து கட்டிடங்களும் ஒவ்வொன்றிலும் நான்கு மாடிகளும் கொண்டு கம்பீரமாக பணத்தின் செழுமையினால் திமிரகவும் தென்பட்டது. அப்படி இருந்த ஓர் விசாலமான அறையில் இருந்து




"ஆளுமா டோலுமா

ஐசாலங்கடி மாலுமா

தெறிச்சு கலீச்சுனு

கிராக்கிவுட்டா சாலுமா


அறிக்கல்லு கரிக்கல்லு

கொத்துவுட்டா கலக்கலு

பளுச்சினு பளபளக்குது

மிட்டா மேல Local-u…"


என்ற பாடலுக்கு அந்த அறை அதிரும் படி மாணவர்கள் ஆளுக்கொரு பக்கம் குதித்து கொண்டிருந்தார்கள். அவர்களை எவ்வாறு சமாளிப்பது என்று அறியாமல் திணறிக்கொண்டிருந்தார் ஆசிரியர் மலர்விழி. அதை சாளரம் வழி பார்த்து நகைத்துக் கொண்டிருந்தார் அவருடன் பணி புரியும் மற்றொரு ஆசிரியை சின்மயி. ஏனெனில் மலர்விழி அண்மையில் அப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்த்துள்ளார். ஆதலால் மாணவர்கள் அவருக்கு அடங்க மறுக்க அதில் சோர்ந்தவர் சின்மயியை நோக்கி " மேடம் என்னால இந்த பசங்கள கன்ட்ரோல் பண்ண முடியல. கன் யூ பிளீஸ் ஹெல்ப் மீ" என்று தன் பலம் மொத்தமும் வடிய கெஞ்சியவளை பார்க்க பாவமாக இருந்தது. அதில் மனம் இறங்கியவர் " மலர் இங்க படிக்கிற பசங்க எல்லாரும் மரியாதை என்ன விலைனு கேக்குற பணக்கார வீட்டு பசங்க. நமக்கு அடங்க மாட்டாங்க அடக்கவும் முடியாது. என்னா இங்க அவங்களோட பணம் தான் பேசும் இன்னும் சொல்ல போனால் நம்மளோட சீனியர் ஸ்டாஃப் எல்லாரும் நம்மள தான் குறை சொல்லுவாங்க. அவ்ளோ என் நம்ம பிரின்சிபால் கிட்ட சொன்னா நாம எல்லாரும் அவங்க கிட்ட சம்பளம் வாங்குற வேலை காரங்கனு ஓபன்னாவே மூகதுக்கு நேர சொல்லுவாங்க. இது இங்க ரொம்ப சகஜம் மலர் அதுனால பழகிக்கோ". அதில் அதிர்ந்தவள் "மேம் நான் இப்போ தான் பிஎட் முடிச்சிட்டு வந்தேன் இப்படி பயம் காட்டினா நான் என்ன பண்ணுவேன்" என்று பிதியில் கலங்க. அதை கண்டு புன்னகைத்தவர் " நீ வேலை பாக்குறது சாதாரண ஸ்கூல்னு நினைச்சியா மா. இது இன்டர்நேஷனல் ஸ்கூல் இங்கு பணம் பகட்டுகு தான் மதிப்பு மனசுக்கும் மரியாதைக்கும் மானதுக்கும் மதிப்பு கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இங்கு பணம் தான் எல்லாவற்றையும் நிர்னைக்கும் அதுமட்டுமில்லை எஜுகேஷனல் பொலிடிக்ஸ் அதிகம். போக போக பழகிறும் அதுனால பயப்படாதே நாங்க இருக்கோம்". அவர் பேசியதை கேட்டு வாயை திறந்திருந்தவள் அவர் கூறிய நாங்கள் என்ற வார்த்தையில் தன் சுயதிற்கு மிண்டவள் " மேம் நாங்கனு சொன்னிகள்ள உங்களை தெரியும் அந்த இன்னொரு அவங்க யாரு" என்று தன் அதிமுக்கிய கேள்வியை கேட்டுக்கொண்டிருந்தாள். "அவங்க சைன்ஸ் டீச்சர் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் நாங்க எப்பாவும் ஒன்னா தான் இருப்போம்". "ஓ ஓ ஓ…" என்று சுறதை இறங்கி போனவளாக "அப்போ இவங்க யாருக்கும் அடங்க மாட்டாங்களா மேம்" என்று வினவ.



" என் இல்லை ஒருதங்க இருக்காங்க" அதில் மூகம் பளிச்சிட "யாரு மேம் அவங்க". "நான் சொன்ன என்னோட ஃப்ரெண்ட் தான்" என்று கூறி முடிக்கவும் "ஹை…" என்று ஆனந்த கூச்சலிட்டு "அவங்க எப்டி மேம்". அதில் மிகுந்த தீவிர மூக பாவனையோடு "நம்ம ஸ்கூல் ஜாக்கி சான், அவ ஒரு பார்வை பார்த்தா அனல் பறக்கும், கம்ப எடுத்து சுத்துனா சூறாவளி கூட நின்னுறும் அவ்வளவு என் நம்ம ஸ்டூடண்ட்ஸ், சீனியர் ஸ்டாப், பிரின்சிபால் எல்லாரும் பேசவே பயபடுவாங்க" என்று கூறிக் கொண்டிருந்தவள். மலரின் முகம் பயத்தில் வெளிறி போவதை பார்த்து பக்கென்று சிரித்துவிட்டாள். "நானும் அப்படியெல்லாம் சொல்லணும் தான் ஆசை படுறேன் ஆனா என்ன சொல்ல அதுக்கு வாய்ப்பே இல்லையே. பாக்குறதுக்கு தான் பெருசு உள்ள வெறும் புஷ்ஷு. அவ பேரோட அர்த்தம் மட்டும் தான் பலம், துணிவு, கடினம் அப்படினு அர்த்தம் ஆனா அவ அதுகெல்லாம் அப்படியே ஆப்போசிட்". உடனே மலர் ஏதோ கூற முன்வரவும் அவளை கை அமர்த்தி தடுத்தவள் " என்ன பின்ன எப்படி அவளோட கிளாஸ்ல பசங்க கன்ட்ரோல்லா இருக்காங்க அப்படினு கேட்க வர்ற அப்படி தான". மலரின் தலை தானாக "ஆம்" என்பது போல் ஆடியது. அதற்கு சின்மயியோ "எனக்கும் அந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு" என பேசி கொண்டிருந்தனர்.


அவர்களின் பேச்சின் நாயகியோ அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் ஓர் அறையில் சில மாணவிகளுடன்


"டோலா ரே டோலா ரே டோலா ரே டோலா

ஹாயே டோலா தில டோலா மந டோலா ரே டோலா

டோலா ரே டோலா ரே டோலா ரே டோலா

ஹாயே டோலா தில டோலா மந டோலா ரே டோலா


லக ஜாநே தோ நஜரியா

கிர ஜாநே தோ பிஜுரியா

பிஜுரியா பிஜுரியா கிர

ஜாநே தோ ஆஜ பிஜுரியா

லக ஜாநே தோ நஜரியா

கிர ஜாநே தோ பிஜுரியா


பாங்தகே மேங் குங்கரூ

பஹநகே மேங் பாயல

ஓஹ பாங்தகே மேங் குங்கரூ

பஹநகே மேங் பாயல

ஹோ ஜூமகே நாசூங்கீ

கூமகே நாசூங்கீ"



என்ற வட மாநில பாடலுக்கு கலை நயத்துடன் இடையை அப்பாடலுக்கு ஏற்றார் போல் வளைந்து நெளிந்து நடனத்தைக் கற்றுக் கொடுத்து கொண்டிருந்தாள்.



அப்பொழுது அதில் ஒரு மாணவி "மேம் இந்த ஸ்டெப் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. கொஞ்சம் ஈசியான ஸ்டெப் சொல்லிதாங்க பிளீஸ்" என கேட்க அதில் மனம் கனிந்தவள். "அதுக்கென்ன கண்டிப்பா மாத்திரலாம்" என்று கூறியவளை இரண்டு ஜோடி கண்கள் கண்காணித்து கொண்டிருந்தது. ஒன்று ஆசையாக மற்றொன்று குரூரமாக. இதனை அறியாத பாவை அவளோ தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள்.



ஆம் இது தான் "அஷ்மிதா". தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்பவள். எக்காரணம் கொண்டும் பிறர் விஷயத்தில் தலையிட்டு பிரச்சனையை வளர்க்க மாட்டாள். யாரிடமும் அதிகம் பேசவும் மாட்டாள்.

அவளின் அமைதியை கொண்டு தன் மாணவ மாணவிகளின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பவள்.


வாழ்வென்றால் சில பள்ள மேடுகள் இருப்பது போல் அவளின் அமைதிக்கும் நண்பர்களும் உண்டு எதிரிகளும் உண்டு. இக்குணாதிசயம் கொண்டதால் தான் மேற்கொள்ள போகும் இன்னல்களை முதலில் அறிந்திருந்தால் தன்னை மாற்றிக்கொண்டிருப்பாளோ காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


நிலா வருவாள்.


மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…😍😍😍☺️☺️☺️☺️☺️


 
நிலா 2:


அதிகாலை வேளையில் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் ஒரு ஸ்திரி. அந்த வீதியை தெய்வீக மணம் கமல செய்தது அவ்வில்லதில் ஒலித்த தெய்வீக கானம்.




"கணநாயகய கணதைவதாய

கணத்தியக்ஷய தீமஹி

குண ஷ்ரீராய குண மண்டிதாய

குணேஷனய தீமஹி

குணாதீதாயை குணாதீஷாய

குண ப்ரவிஷ்டாய தீமஹி


ஏகதந்தாய வக்ரதுண்டாய

கௌரி தனயாய தீமஹி

கஜேஷானாய பாலசந்திராயா

ஸ்ரீ கணேஷாய தீமஹி


ஏகதந்தாய வக்ரதுண்டாய

கௌரி தனயாய தீமஹி

கஜேஷானாய பாலசந்திராயா

ஸ்ரீ கணேஷாய தீமஹி


காணசதுராய காணபிராணாய

காணந்தராத்மனே

கானோட்ஸுக்ஹய கானமாட்டாய

காண்ணோட் சுக மனஸே"



என ஒலித்துக் கொண்டிருந்த அந்த கானத்தை தன் செவ்விதழ்கள் கொண்டு பின்தொடர்ந்து கொண்டிருந்தாள் மிகவும் மென்மையாக.



"குரு பூஜிதாய குரு தெய்வதாய

குரு குலஸ்தாயினே

குரு விக்ரமாய குய்ய ப்ரவராய

குறவே குண குறவே


குருதைத்ய கலக்ஸேட்ரே

குரு தர்ம சடா ரத்யாய

குரு புத்ர பரிட்ராட்ரே

குரு பாஹண்ட கண்ட காய


கீத சாராய கீத தட்வாய

கீத கோத்ராய தீமஹி

கூத குல்பாய கந்த மட்டாய

கோஜய ப்ரதாய தீமஹி

குணாதீதாய குணாதீஷாய

குண ப்ரவிஷ்டாய தீமஹி


ஏகதந்தாய வக்ரதுண்டாய

கௌரி தனயாய தீமஹி

கஜேஷானாய பாலசந்திராயா

ஸ்ரீ கணேஷாய தீமஹி


ஏகதந்தாய வக்ரதுண்டாய

கௌரி தனயாய தீமஹி

கஜேஷானாய பாலசந்திராயா

ஸ்ரீ கணேஷாய தீமஹி"


என தன் பொக்கில் பாடலை மனமுருகி பாடிக்கொண்டு முற்றத்தை சுத்தம் செய்து நீர் தெளித்து கோலம் போட ஆரம்பித்தாள்.


அப்பொழுது வாசல் தெளிக்க வந்த பக்கத்து வீட்டு கமலம் அன்று மலர்ந்த ரோஜாவை போல் பிரகாசிப்பவளை கண்டு அவளை அளவிட்டார்.


பிறை போன்ற நெற்றி அதற்க்கு ஏற்றார் போல சிறிய அரக்கு நிற பொட்டு, மை திட்டாமலே நிண்ட இமையில் நீண்ட முடி, குவளை பூவின் இதழை போன்ற கண்கள், கருவண்டை போல இங்கும் அங்குமாக ஒடும் கண்ணின் மணி, பிசைந்த கோதுமையை அளவாக வைத்த மூக்கு, நாவழ் பழம் போல சிவந்த ஊதடு,சங்கு போல கழுத்து, பெண்களுக்கே உள்ள அங்க அசைவு அடையாளங்கள் கொண்டு விளங்கினாள் பெண்ணவள் .


உடல் மட்டும் சற்று பூசினார் போன்று இருக்கும். அதுவும் ஒரு குறை என்று சொல்ல முடியாத வகையில் எப்போதும் முகத்தில் உறைந்திருக்கும் புன்னகை அவளிற்கு மேலும் அழகை கூட்டவே செய்தது.


அவளை பார்த்து கமலம் "அம்மாடி ஈஸ்வரி என்ன காலையிலே பக்தி பரவசமா இருக்க என்ன விசேஷம்" என்று கேட்டு முடிப்பதற்கும்


"தங்க மாரி ஊதாரி பூட்டுக்கின நீ நாறி


ரூட் எட்டு கோடு போட்டேன் கோடு மேல ரோட்ட போட்டேன்

ரோட்டு மேல ஆட்டம் போட்டேன் ஆட்டம் போட்டு ஆள போட்டேன்"


என்று அந்த வீதியே அலறும்படி சத்தமாக ஒலித்தது அந்த பாடல். அதை கேட்டு ஈஸ்வரி தன் நெற்றியில் அடிப்பதற்கும் கமலம் கிலுக்கி சிரிப்பதற்கும் சரியாக இருந்தது.


உடனே அவர் "அதான பாத்தேன் வானமே கிழ இறங்கி வந்திருச்சினு சொன்னா கூட நம்பி இருப்பேன். ஆனா நீ இந்த மாதிரி பக்தி பரவசதுல இருகேனு சொன்ன சான்ஸ்சே இல்லயேனு நெனச்சேன் நியே அது நிருபிச்சிடியே டி குழந்தை" என்று கூறி சிரிக்கவும் அவரையும் மீறி ஓர் சிரிப்பொலி அவர்களின் செவியை நிறைத்தது.


சிரிப்பொலி வந்த திசையை பார்த்தவர்களின் ஒருவரின் இதழ் மென்னகையில் விரிந்தது என்றால் மற்றுமொருவர் முகமோ கோவைப்பழமென சிவந்தது.


அவள் தன்னை நோக்கி முறைப்பதை பார்த்தவனு்கு புன்னகை மேலும் விரிந்தது.

அவனை கண்டு வாயினுள் முணுமுணுத்தாள் பாவை அவள் தான் கொண்டு வந்த வாளியை எடுத்து கொண்டு வீட்டினுள் நுழைந்து கொண்டாள்.


தனக்கு தினமும் கிடைக்கும் தரிசனம் இப்பொழுது பாதியில் கிடைக்காமல் போனதில் மனது வலித்து முகம் வாடியது. அதனை கண்ட கமலம் " என்ன தம்பி வட போச்சா" என்று கேட்டு நகைத்தவரை கண்டு தானும் புன்னகைத்தான்.


இந்த நிகழ்வு அங்கு தினமும் வாடிக்கை என்பதால் இருவரும் அதை எளிதில் கடந்து விட்டனர்.


ஆம், இது தினமும் அங்கு வாடிக்கை. பெண்ணவள் முற்றம் தெளிக்க வரும் முன்னரே அவளது தரிசனமும் அவள் பார்வை எனும் கரிசனமும் கிடைக்காத என எங்கி காத்திருக்கும் ஆடவன் தன் குறும்பு தனத்தின் காரணத்தால் "கண்ணன்" என்று செல்லமாக அழைக்கப்படுவான்.


கண்ணனுக்கு கண்மணியின் கரிசனம் கிடைக்குமா??

மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு போங்க ஃப்ரெண்ட்ஸ்... 🤗😊☺️

 
அழகிய காதல் நிலவே



ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்த அத்தியாயம் போட வந்துடேன்.

போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க… ☺️☺️☺️ தாமதத்திற்கு மன்னிச்சு ஃப்ரெண்ட்ஸ் 🙏🙏🙏. இனி சிக்கிரம் அடுத்த அத்தியாயம் போட முயற்சிக்கிறேன் மக்கா…,🤗🤗🤗



நிலா 3:


அதிகாலை வேலை மார்கழி மாதப்பனி அந்த தார் சாலையை புகை மண்டலமாக மாற்றிகொண்டிருந்தது. குளிர் ஊசி துளைப்பதை போல உடலை துளைத்துக் கொண்டிருந்தது.


வெயில் காலத்தில் எவ்வாறு கடும் வெயில் வாட்டி வதைக்குமோ அதை போல குளிர் காலமும் அதன் தன்மையை மக்களுக்கு எடுத்துரைத்து கொண்டிருந்தது நம் தமிழ்நாட்டின் தலைநகரமான மதராசபட்டினம் (சென்னை).


அந்த குளிரையும் மீறி சிலர் தங்கள் ஒட்ட பயிற்சி நடை பயிற்சியை கம்பளி ஆடை உதவியுடன் குளிரில் இருந்து தப்பித்து பயிற்சியை தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள்.


மக்கள் பயிற்சி செய்யும் சாலைகளின் இரு புறமும்

சூடான தேனீர், கொட்டை வடினிர் உடன் தங்கள் வியாபாரத்தை கவனித்த வண்ணம் இருந்தனர்.


சிலர் அக்குளிரை போக்க அதை பருகி அதன் ருசியுடன் இயற்கையை ரசித்த வண்ணம் இருந்தனர். ஆம், அந்த சாலை மிகப்பெரிய செல்வந்தர்கள் வாழும் இடம். பாசத்திற்கு பதில் பகட்டு மட்டுமே ஓங்கி உயர்ந்த இடம்.


அங்கே வரும் மக்களில் அனைத்து வயதினரும் அடக்கம். முதியவர்கள் இயற்கை காற்றை சுவாசிக்க வந்தனர் என்றால். இளம் வயதினர் அவர்கள் வயதிற்கே உரிய தூடுக்கு தனத்துடன் சுற்றி திரிந்தனர்.


பெரியவர்கள் செடி, கொடி, சுற்றுப்புறத்தை ரசித்தனர் என்றால். சிரியவர்கள் அவர்களின் துணையை சுற்றி திரிந்தனர். சிலர் ஆரோக்கியத்தை தேடி ஓடி கொண்டிருந்தனர். சிலர் வீட்டில் விதித்த கட்டுப்பாட்டை மீறி சூடான பொறித்த எண்ணை பலகாரம், துரித உணவுகள் போன்ற உணவுகளை தேடி ஓடினர்.


வயதான பெண்கள் சிலர் அடுத்தவரை பற்றி கிசு கிசு பேசினர் என்றால். இளம் வயது பெண்கள் ஓர பார்வை பார்த்து வைத்தனர் தங்கள் உள்ளம் கவர் கள்வனை.


இப்படியாக பல சூழ்நிலைகள் நிகழ்ந்து கொண்டிருக்க சூரியனை கண்ட பனி உருகி ஓடி விலகுவது போல் அந்த புகை மண்டலத்தை விலக்கிக்கொண்டு ஓடி வந்தான் ஓர் நெடியவன்.


இந்த பனி என்னை என்ன செய்யும் எனும் வகையில் அந்த குளிரிலும் கம்பளி சட்டையை தவிர்த்து விலை உயர்ந்த கை இல்லா சட்டை (sleeveless t shirt), ஜியார்ஜீயோ ஆர்மணி

(GIORGIO ARMANI) காற்சட்டை, மணிக்கட்டில் ப்ரைட்லிங்க் என்டுயூரன்ஸ் ப்ரோ (Breitling Endurance Pro) கடிகாரம், செவியில் சுற்றுப்புறத்தாரின் உணர்வுகளை அறிய விரும்பாமல் தன் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் பாடல்களை ஒலிக்க செய்யும் விஷன் இயர்ஸ் - போனிக் (VISION EARS - PHÖNIX) ஊடலை செவிப்பொறியுடன் (Bluetooth headset), டென்னிஸ் ரன் பவுன்ஸ் எஸ்4 போர்ஸ் (Tennis Run Bounce S4 Porsche) பாதணி அணிந்து ஒட்ட பயிற்சியில் ஈடுபட்டு இருந்தவனை நோக்கி திரும்பியது.



அதுவரை சல சலத்து கொண்டிருந்த சாலை அவனை நோக்கி நிலைத்திருந்தது. அவனை கண்டதும் சிலரின் முகம் கோவத்தில் சிவந்தது என்றால் இளம் வயது பெண்கள் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவனது கடை கண் பார்வைக்கு எங்காத பெண்களே அங்கே இல்ல எனலாம்.


மேலும் பலர் அவனை கண்டு பொறாமையிலும் பொங்கினர் என்றால் அது மிகை ஆகாது. இளம் வயது ஆண்கள் அவனது அழகின் மீது, தொழில் அதிபர்கள் அவனின் திடீர் வளர்ச்சியின் மீது.


அவனது ஓட்ட பயிற்சியை பார்த்த சில பெண்கள்,


"இந்த சாலையில் போகின்றான் மீசை வைத்த பையன் அவன்

ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே"


என்று தங்களுக்குள்ளே பாடிகொண்டனர். "எந்த" என்ற வார்த்தையே மாற்றி தங்களுக்கு ஏற்றார் போல "இந்த" மாற்றிக்கொண்டர்.

அவர்கள் பாடிய பாடலுக்கு ஏற்றார் போல தான் இருந்தான் அந்த நெடியவன்.


ஆறடி உயரம், கோதுமை நிறம், அடங்காத அலை அலையாக கேசம், படர்ந்த நெற்றி, அடர்த்தியான புருவம், எதிரிகளை ஒழிக்கும் நேர் கொண்ட பார்வை, அளவான மூக்கு, கட்டளையுடன் ஒலிக்கும் கடுமையை சுமந்த குரல், அக்குரலை தெளிவாக எடுத்துரைக்கும் அழுத்தமான உதடுகள், துள்ளி ஓடும் போது அள்ளி அணைக்க துண்டும் கட்டுக்கோப்பான உடல், ஒளியை மிஞ்சும் சிந்தனையின் வேகம், என ஆண்மைக்கு உரிய அத்தனை அம்சங்களையும் கொண்டு பயிற்சியில் இருந்தான் அவன்.


தன்னை நோக்கி பார்க்கும் பெண்களையும், பொறாமையில் பொங்குபவர்களையும் கிச்சித்தும் மதியாமல் தன் போக்கில் பயிற்சியை தொடர்ந்தான்.


அப்போது இளம்பெண் ஒருவள் " ஹேய் யாரு டி அவன் செம்ம ஹன்ட்சமா இருக்கான் பார்த்த உடனே தூக்கிட்டு போகனும் போல இருக்கு டி" என்று வழிந்த படி தன் தோழியிடம் கூறிக்கொண்டு இருந்தவளிடம் மற்றொருவள்.


"செல்லக்குட்டி அதோ அந்த மரம் பக்கத்துல ஒரு பொண்ணு நிக்குறா பாரு ஆளு பாக்க எப்படி இருக்கா?" என்று இவள் காட்டிய திசையை பார்த்தவள்.


கண்கள் அகல " ம்ம் பாக்க முகம் நல்லா புஷ்சுனு கன்னம் பண்ணு மாதிரி செக்கச்செவல்னு இருக்காங்க ஏன் டி கேக்குற" என்று கேள்வி கெட்டவளிடம்.


பெரிதாக சிரித்து கொண்டே "அது அந்த ஆணழகன் கைவண்ணம் தான். கன்னம் பண்ணு மாதிரி இருக்குனு சொன்னல அது அவர் கட்டுன டின்னு தான். அதுனால பாத்து நடந்துக்கொங்க" என்று தன் வயதை ஒத்த தன் தோழிகளுக்கு எடுத்துரைத்தாள் பெண்ணவள்.


அதை கேட்டு தன் கன்னத்தை தாங்கியவள் "அம்மாடி இனி அந்த பக்கம் சும்மா கூட தலை வச்சி படுக்க மாட்டேன். எனக்கு ஒரு சந்தேகம் ஆள பாக்க டம்மி பீஸா இருக்காரு ஆனா நீ சொல்லுறத பாத்த டெரர் பீசு போல டி. பொண்டாட்டி புள்ளைங்க இருக்காங்களா. எப்படி சமாளிபாங்க" என்று தன் அதி முக்கிய கேள்வியை கேட்டாள்.


அதில் பெருமூச்சு விட்டவள் "இங்க இருந்து இரண்டு தெரு தள்ளி ஒரு பெரிய பங்களா இருக்கு அது தன் அவரோட வீடு அது மட்டும் தான் தெரியும். அது கூட ஒரு நாள் அவர ஃபாலோ பண்ணுநேன் அப்போ தான் தெரிஞ்சது. இல்லனா அதுவும் தெரிய வாய்ப்பு இல்ல. அவரு ஒரு சிதம்பர ரகசியம் ஒன்னும் தெரியாது. அந்த கன்னம் பண்ணு பொண்ணு விசயம் கூட நடு ரோடுல நடந்தது அதான் தெரியும். என்னா விசயம்னு விசாரிச்சோம் அதுக்கு அந்த பொண்ணு ஏதோ ப்ரோபோஸ் பண்ணிசு போல அதான் அந்த கதி" என்று அவனை பற்றி தெரியவில்லை என்பதையும் தெரிந்தார் போல நீண்ட விளக்கம் அளித்தாள்.


இதனை கேட்டவள் பெருமூச்சு ஒன்றை விட்டு "எனக்கு அவரை பாக்க பாக்க கடதிட்டு போகலாம் போல இருக்கு டி" என்று கூறியவளை பார்த்து ஏகத்துக்கும் மூறைத்தவள்.


"உண்மைய சொல்லு அவரை கடத்தனுமா இல்ல கை, கால், காதுல உள்ளது எல்லாம் கலட்டனுமா" என்று கேட்டவளை பார்த்து அசடு வழிந்தவள் அங்கு இருந்து நழுவிவிட்டாள்.


இளம் வட்டங்களின் பேச்சு இவ்வாறு இருக்க பொறாமையில் பொங்கியவர்களோ "ம்க்கும் இந்த காலத்து புள்ளைங்களுக்கு யார பாக்கணும் யார பாக்க கூடாதுனு தெரிஞ்சிக்க மாட்டாங்க. அழகா இருந்தா போதும் பின்னாடியே போராங்க."


இன்னொருவரோ "ஹும்ம் அவனுக்கு வந்த வாழ்வு அப்படி பா. ஒரு பொண்ணு சொன்னாலே கை, கால், காதுல உள்ளது எல்லாம் கலட்டனுமானு அதுக்கு காரணம் என்ன தெரியுமா" என்று கேட்க மற்றவரோ தெரியாமல் விழித்தார்.


"அவன் கை, கால், காதுனு மாடிருக்குற எல்லாமே குறஞ்சது ஒன்னுல இருந்து முனு லட்சம் போகும். அவ்ளோ காசு கொடுத்து வாங்கி வச்சிருக்கான்" என்றதும் மாற்றவரோ வாயை பிளக்க.


அவர்களின் பேச்சை கெட்ட மற்றொருவன் " யோவ் சொந்தமா உழச்சி வாங்குனா தானயா பணத்தொட அருமை தெரியும். ஊரன் ஊட்டு காசு செலவு செஞ்சா எப்படியா தெரியும்".


வாயை பிளந்தவனோ "என்னயா சொல்ற மெய்யாலுமா" என்று கேட்க.


அதற்க்கு அவனோ " அட ஆமாயா பரம்பரை பணக்காரன் கூட இப்படி செலவு செய்ய மாட்டான். இவன் புது பணக்காரன். பணம் இருக்குற பவுசுல ஆடரான்" என்று கூறி முடிப்பதற்கும் அவனை தாண்டி அந்த நெடியவன் ஓடவும் சரியாக இருந்தது.


அதில் தன் மூச்சை ஒரு நொடி இழுத்து பிடித்து திரும்பி நின்று கொண்டான். சில நிமிடம் சென்றதும் அந்த நெடியவன் சென்றிருப்பான் என்ற நம்பிக்கையில் திரும்பியவனின் முகத்தின் அருகில் அந்த நெடியவனின் முகம் அனல் தெறிக்க தெரிந்ததை கண்டு சில வினாடி அவனின் இதயம் நின்று துடித்தது.


அதில் மேலும் முகம் சிவக்க " முகத்துக்கு முன்னாடி பேச தைரியம் இல்லாத நீ இனிமேல் பேசவே கூடாது" என்று கூரியவன். தனது கைத்துப்பாக்கியை எடுத்து அவன் வாயினுள் வைத்தான்.


அதில் மிரண்டு போனவன் கை எடுத்து கும்பிட்டு மண்டியிட்டு அமர்ந்தான்.

சற்றும் மனம் இறங்காமல் விசையை அழுத்த விரலை வைத்தவனின் செவியில்

" அப்போ கோவத்த குறைக்க மாடிங்க அப்படி தான" என்று ஓர் உருவம் தன்னை பார்த்து முறைப்பத்தை போன்று தோன்ற அதில் கோவத்தை குறைக்க தன் கண்களை மூடி திறந்தவன்.


"இனி ஒரு தடவை இந்த பக்கம் பார்த்தேன் உன் உயிர் உனக்கு இல்ல புரிஞ்சுதா" என்று கர்ஜித்தவனின் முன் நிற்க அவன் ஒன்றும் முடன் இல்லயே. விட்டால் போதும் என்று ஓடி விட்டான்.


தன் கோவத்தை குறைத்து கொண்டவன் சுற்றி நிற்பவர்களை கண்டு கொள்ளாமல் தன் பயிற்சியை தொடர்ந்தான்.


இந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்த கண்களுக்கு சொந்தமானவர் "கடைசி வரை நீங்க திருந்தர மாதிரி தெரியல" என்று பெருமூச்சு விட்டு சென்றது ஓர் உருவம்.


தனது பயிச்சியை முடித்து விட்டு உடல் முழுவதும் வியர்வையுடன் வரும் தன் மகனை பார்த்த அந்த தாய்

" குடிக்க ஏதாவது கொண்டு வரட்டுமா பா" என்று கேட்டவரை தன் விழிகளால் பொசுக்கியவன்.


தன் தாயை நோக்கி கெட்ட கேள்வியில் விக்கித்து நின்று விட்டாள்.



மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…😍😍😍☺️☺️☺️☺️☺️


 
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்த அத்தியாயம் போட வந்துடேன்.

போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க… ☺️☺️☺️ கதையின் போக்கு எப்படி இருக்குனு கொஞ்சம் மறக்காம சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ். அப்போது தான் என் கதையின் போக்கை உங்களுக்கு ஏற்றார் போல கையாள முடியும். யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.☺️☺️☺️🤗🤗🤗


நிலா 4:


முகம் கடு கடுக்க வீட்டின் உள்ளே சென்ற ஈஸ்வரி தன் வாய்க்கு வந்த வார்த்தையால் ஏக வசனத்தில் அவனை வசை பாடினாள்.


" ஆளையும் முகரையும் பாரு எப்ப பாத்தாலும் பல்லை பல்லை காட்டிகிட்டு. என் கையில கல்லு மட்டும் இருந்துருகனும் அவ்ளோ பல்லையும் தட்டி இருப்பேன். அவன் முஞ்சிய பாத்தாலே ஆத்திரமா வருது. அவன் மூஞ்ச பாத்தா பத்து நாளைக்கு பழைய கஞ்சி குடிக்க முடியாது. இந்த லட்சணத்தில ஐயா சைட் அடிக்காரு ஹும்ம்".


அப்பொழுது அவளுக்கு அருகே ஒரு சிரிப்பொலி கேட்டது. (அது வேற யாரும் இல்லைங்க நம்ம ஈசு குட்டி மனசாட்சி தான்) அதுவோ அவளை பார்த்து "அம்மாடி உன்ற மனசாட்சிய தொட்டு சொல்லு அவன் முஞ்ச பாக்க அவ்ளோ மோசமாக இருக்கு" என்று கேட்டது.


அதை நன்றாக முறைத்தவள் "ஆமா அப்படி தான் இருக்கு இப்போ என்ன அதுக்கு ஒழுங்கா போயிரு இல்ல பக்கெட் வச்சி மண்டைய உடைப்பேன் பாத்துக்கோ" என்று கூறவும் "நீ செஞ்சாலும் செய்வ" என்று அலறிய அவளது மனசாட்சி மறைந்தது.


ஆனால் உண்மை அதுவல்ல. காற்றில் அசைந்தாடும் அழகான கேசம், படர்ந்த நெற்றி , லேசர் பார்வை பார்க்கும் கூர்மையான கண்கள், அழுத்தமான உதடுகள் அதனுடன் எப்போதும் உறைந்திருக்கும் புன்னகை, உடற்பயிற்சி இல்லாமல் கட்டுக்கோப்பான உடல், மாநிறம், ஆண்மையின் இலக்கணம் மொத்தத்தில் பெயர்க்கு ஏற்றார் போல பெண்களை மயக்கும் மாய கண்ணன்.


ஈஸ்வரியின் வசைக்கு சொந்தமானனோ தனது அக்மார்க் புன்னகையுடன் பெண்ணவளளின் வாயிற் கதவை பார்த்திருந்தான்.


அப்பொழுது அவனின் கவனத்தை களைக்கும் விதமாக 'தட தட' வென பாத்திரம் விழும் ஒலிக்கெட்டு தன் வீட்டினுள் ஓடினான்.

ஓடி சென்று என்ன வென்று பார்த்தவன் அங்கே கண்ட காட்சியில் இத்தனை நேரம் அவன் மனதில் இருந்த இதம் மறைந்து இதயம் மறுத்து செய்வதறியாது நின்றிருந்தான்.


—--------------------------------------



வீரம் விளைந்த மண் என்றவுடன் பலர் மனதில் தோன்றுவது தூங்கா நகரமாக விளங்கும் மதுரை தான்.


அதற்க்கு சற்றும் சளைகாமல் வீரத்திலும் தீரதிலும் மிக முக்கியமாக பெண்களை மயக்கும் மல்லிகை பூவுடன் கொடுக்கப்படும் அல்வாவிற்கு பிரசித்தி பெற்ற ஊர்.


நகரைச்சுற்றி நெல் வயல்கள் வேலி போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி என பெயர் பெற்றது. தற்போது நெல்லை என மருவி வழங்கப்படுகிறது.


திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என திருஞானசம்பந்தரும் தன்பொருணை புனல் நாடு என சேக்கிழாரும் கூறியுள்ளனர்.


பச்சையாறு , மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி. திருநெல்வேலி குளத்துப்பாசனமும் கிணற்றுப்பாசனமும் பயன்பாட்டில் உள்ள நகரம். சிறுதானியங்கள் , எண்ணைய்வித்துக்கள் , காய்கனிகள் , பருத்தி, பயறு வகைகள் . நெல்லிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் திருநெல்வேலி.



இதை போல பல பெருமையை கொண்டு விளங்கும் திருநெல்வேலி பல கிராமங்களை தன்னுள் கொண்டுள்ளது.


அப்படி விளங்கும் கிராமங்களில் அனைத்து வசதிகளும் கொண்டவை சில கிராமங்கள் மட்டுமே.


சுத்தமல்லி. சுத்தமல்லி திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் ஒன்றியத்தில் உள்ள கிராமம்.


திருநெல்வேலி மாநகராட்சியின் எல்லையிலுள்ள கிராமப்புற பகுதி ஆகும். இது தாமிரபரணியின் கரையின் மீதுள்ளது. இங்கு பாசனத்திற்காக திருநெல்வேலி கால்வாய்க்கு நீரை திருப்பிவிடுவதற்காக ஒரு அணைக்கட்டு உள்ளது, அது சுத்தமல்லி அணைக்கட்டு என்றழைக்கப்படுகிறது. இதன்மூலம் 2559.69 ஹெக்டர் நிலத்தில் விவசாயம் நடைபெறுகின்றது.


விவசாயத்திற்கு மிகவும் பேர்போன ஊராக திகழ்ந்தது சுத்தமல்லி. பெயர்க்கு ஏற்றார் போல அங்கு வசிக்கும் மக்களின் மனம் சுத்தமான மல்லிகை பூ போன்று.


மாவட்டத்தின் பெயர்க்கு ஏற்றார் போன்று நெல்லை வேலியாக கொண்ட கிராமமாக அமைந்து இருந்தது.


பச்சை நிற கம்பளியை போர்த்தியது போல ஊரை சுற்றிலும் மருதநிலம் (கழனி).


ஆங்காங்கே சிற்றாறுகள் அவ்வூறுக்கு குளிர்ச்சியை வாரி வழங்கும். மக்கள் வாழும் சிறு சிறு குடில்கள் கூட அழகு சேர்க்கவே செய்தது அக்கிராமதிற்கு.


குடில்கள் மட்டும் அல்ல ஆங்காங்கே அவர் அவர் வருமானத்திற்கு ஏற்றார் போல பைஞ்சுதை (சிமெண்ட்) வீடுகளும் இருக்க தான் செய்தது.


காடுகளில் விலங்குகள் பல காணப்படும். ஆனால் அவற்றிக்கு தலைமை வகிக்கும் ராஜா சிங்கம் ஒன்று தான்.


அதே போல அக்கிராமத்தில் வீடுகள் பல உள்ளன. ஆனால் அனைத்திற்கும் அந்த கிராமத்திற்கு மகுடம் போல் விற்றிருந்தது அந்த அரண்மனை போன்ற அழகான வீடு.


பெரிய பெரிய மதில்கள் அந்த கோட்டையை சுற்றி காவல் காக்க நின்றிந்தது. இயற்க்கை உரங்களின் உதவியால் செழித்து வளர்ந்த மரங்கள், அளவிற்கு ஏற்றார் போல ஒரே அளவில் கத்தரித்து விட்ட செடிகள்.


அந்த மரமும், செடியும் தோட்டமாக காட்சி அளித்தது. அந்த தோட்டத்தின் நடுவே விற்றிறுந்தது அந்த அரண்மனை.


அதனுள் நுழைந்தால் பழமையை பறை சாற்றும் பொருட்களால் அலங்கரிக்க பட்டிருந்தது.


தோட்டம் முதல் வீட்டின் முற்றம் வரை அழகாக பராமரிக்க பட்டு சுத்தமாக இருந்தது. அவ்விட்டில் வசிக்கும் மனிதர்களே அந்த கிராமத்தின் பெரிய தல கட்டு.


நல்லது கேட்டது அனைத்தும் அவர்கள் சொல்வதே வேத வாக்காக கருதினர்.


"ஏன் கா இன்னைக்கு யாரு ஊட்டு நடவுக்கு போரவிய"


"வேற யாரு நம்ம பண்ணையாரம்மா ஊட்டுக்கு தான்"


அப்பொழுது அந்த கிராமத்திற்கு விருந்தாளியாக வந்த வெளியூர் பெண்ணொருத்தி "ஏன் எல்லாரும் அவங்கள பண்ணையாரம்மானு கூப்பிடுறிங்க. உங்க ஊருல வேற யாரும் பணம் வசதி உள்ளவங்க இல்லையா" என்று கேட்கவும்.


பொன்னரசியோ புன்னகையுடன் "அம்மணி பணம் வசதி படசவங்க இங்கன நெறய பேரு இருக்காங்க. ஆனா அது எல்லாம் செஞ்சி கொடுத்ததே எங்க பண்ணையரம்மா தான். காலம் காலமாக பவுசும் நல்ல மனசும் எங்க அம்மாக்கு மட்டும் தானுங்க இருக்கு. அதுனால தான் எங்க எல்லாருக்கும் அவங்க பண்ணையாரம்மா" என்று கூறவும்.


அதற்க்கு அப்பெண்ணோ "அப்போ உங்க பண்ணையாரம்ம ரொம்ப நல்லவங்கனு சொல்லுங்க"


"அது அவுக அவுக நடந்து கிடரத பொறுத்து இருக்கு கண்ணு" என்று கூறவும்.


"ஹையோ அவங்க நல்லவங்களா கெட்டவங்களா அது முதல்ல சொல்லுங்க" என்று புலம்ப.


"இங்கன தான கண்ணு இருக்க போர போக போக தெரியும்" என்று பிடிகை போட


அவரை ஒரு மார்கமாக பார்த்து கொண்டே அவரை பின் தொடர்ந்தாள் நடவு நடக்கும் இடம் நோக்கி.


அவர் பிடிகை பொட்டதற்கான காரணம் வெகு விரைவில் அறியபோவதை அறியாமல் பொன்னரசியை பல கேள்வி கணை கொண்டு துளைதெடுத்தாள்.


அவர்கள் அங்கே சென்றடையவும் காற்றில் இனிமையான குரலில் நாட்டுப்புற பாடல் தவழ்ந்து வந்தது.



"நடவு வேல நடக்குதுங்க


நாளும் நல்லா இருக்குதுங்க..


பொடி நடையும் ஆகாதுங்க


பொழுது கடத்த வேணாமுங்க..



கோரப்புள்ளு இருக்குமுங்க


ஓரஞ்சாரம் பாத்துக்குங்க..


சோறு போடும் சாமியிங்க


சித்த(சற்று) (பயிரை)சொமந்து வாருமுங்க.." என்று பாடினர்.


"பாட்டு ரொம்ப அருமையா இருக்கு கா. ஆனா எந்த படத்துலயும் கேட்ட நியாபகம் தான் இல்ல" எனவும்.


"இந்த மாதிரி பாட்டு படத்துல கேக்க முடியாது கண்ணு. கழனில வேலை செய்றவங்க களைப்பு தெரியாம இருக்குறதுக்கு பாடுற பாட்டு கண்ணு இது. இந்த மாதிரி கிராமங்கள்ள மட்டும் தான் கேக்க முடியும்."


"ஹோ அப்டியா கா. நடவுக்கு மட்டும் தான் பாட்டு இருக்கா."


"இல்ல கண்ணு நடவு நடுறதுல இருந்து அது அறுவட செஞ்சி நெல்லு குத்தி அரிசி மணிய ஊமி ள இருந்து பிரிக்கிறது வர பாட்டு இருக்கு கண்ணு.

அது மட்டுமில்ல கொழந்த பிறந்து அது வளந்து சமஞ்சி செத்து பாடைல போற வரைக்கும் பாட்டு இருக்கு கண்ணு" என்று கூறவும்.


பட்டணத்தில் வளர்ந்த பெண் என்பதால் இதை கேட்க கேட்க அதிசயமாக தெரிந்தது. மேலும் கிராம மக்களின் கள்ளம் கபடமில்லா அன்பில் மனம் நெகிழ்ந்து போனாள்.


மேலும் சிறிது நாட்கள் அவர்களின் அன்பு மழையில் நனைய பேராசை கொண்டாள்.


அவர்களின் உரையாடல் கழனி முதல் ஊரின் முச்சந்தி வரை மட்டுமே தொடர்ந்தது. அவர்கள் முச்சந்தியை அடையவும் அவளின் கால் அருகே ஏதோ ஒன்று விழவும் சரியாக இருந்தது.


தன் காலின் அருகே வந்து விழுந்ததை கண்டவள் அதிர்ந்து ஓரடி பின்னால் நகர்ந்தால்.



நிலா வருவாள்.


மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…😍😍😍☺️☺️☺️☺️☺️


 
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,


இதோ அடுத்த அத்தியாயம் போட வந்துடேன்.

போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க… ☺️☺️☺️ கதையின் போக்கு எப்படி இருக்குனு கொஞ்சம் மறக்காம சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ். அப்போது தான் என் கதையின் போக்கை உங்களுக்கு ஏற்றார் போல கையாள முடியும். யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.☺️☺️☺️🤗🤗🤗



நிலா 5:


கையில்லா உடலை ஒட்டிய சட்டையை அணிந்து வியர்வையில் குளித்து கம்பிர நடை போட்டு வரும் தன் மகனை பார்த்த அந்த தாயின் உள்ளம் பூரிப்பில் பொங்கியது.


(ஓவரா பொங்கிருச்சினு நினைக்கிறேன். இப்போ அவன் கேட்க போகிற கேள்விள பொங்கல் புளியோதரை ஆக போகுதுனு தெரியாம வாய் விடாதீங்க மா…. என்று விதி அலறியது கேட்காமல் போனது அவரின் துரதிஷ்டம் தான்).



தனது பயிற்சியை முடித்து விட்டு நீட்சி (stretching) செய்து கொண்டே வந்த தன் மகனை பார்த்த அந்த தாய்

" குடிக்க ஏதாவது கொண்டு வரட்டுமா பா" என்று கேட்க. அவரை தன் விழிகளால் பொசுக்கியவன்.


"ஏன் அந்த ஏதாவதுல எதையாவது கலந்து என்ன எமலோகம் அனுப்ப திட்டமா" என்று கேட்க


அவன் கேட்ட கேள்வியில் அப்படியே சமைந்து நின்றுவிட்டாள்.


தனது தாயின் முன் சொடுகிட்டவன் " என்ன பிளான்ன பக்காவா கண்டு புடிச்சேன் போல. இவ்ளோ ஷாக் ஆகுறிங்க" என தன் உதடை கேலியாக வளைக்க.


அதில் தன் உடலில் குளிர் பரவ "என் பா இப்படி பேசுற. நான் அப்படி செய்வேனா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பா நீ இப்படி பேசும் போது. நான் எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான பா செய்வேன்".


"ஓஹோ நீங்க எல்லாரும் செஞ்சது சரி நா பேசுறது மட்டும் தப்பு அப்படி தான" என கர்ஜித்தவன்.


"மனசு வலிக்குதா நான் பேசுனதே உங்களுக்கு வலிக்குதே நீங்க செஞ்ச பாவம் நான் அதை தினமும் அனுபவிக்கிறேன் எனக்கு எப்படி இருக்கும்".


"நாங்க உனக்கு எந்த துரோகமும் செய்யல பா. நீ வலி அனுபவிக்கனும்னு ஒரு நாளும் நாங்க நினைகல. அதே போல நீ நல்லா வாழ்க்கை வாழனும்னு ஆசை பட்டு அப்படி செஞ்சோம். உன் மேல உள்ள அக்கறைல தான் பா அன்னைக்கு அப்படி செஞ்சோம். எப்போவோ நடந்தது இன்னுமா அதை நெனசிகிட்டு இருக்க" என்று தன்னை மறந்து சகஜமாக பேசியவர் அவனது ஆளை பொசிக்கிவிடும் பார்வையில் வாயை முடி கொண்டார்.


"இதுக்கும் மேல ஒரு வார்த்தை பேசுனிங்க நான் மனுசனா இருக்க மாட்டேன். வாயை முடிட்டு இருக்கிறதா இருந்த இருங்க இல்ல திங்குற சோருக்கு சிங்கி அடிக்க வேண்டி வரும்" என்று எச்சரித்தவனிடம் மறு வார்த்தை பேச தைரியம் வருமா என்ன.


"நல்லது நல்லதுனு என் வாழ்கையை நரகதுல தள்ளிட்டு இப்போ தட்டுல உள்ளத உள்ள தள்ளிட்டு இருக்கிறத பாரு" தன் மனதோடு புலம்பியவன் அங்கு நிற்க புடிக்காமல் தன் அறையை நோக்கி தன் நீண்ட கால்களால் வேக எட்டு வைத்து நடந்தான்.


அறையை அடைந்தவன் கண் முன் சிரித்த முகமாக ஒரு பிம்பம் தோன்றி மறைய அவனது மனம் வெம்மையானது.


அந்த வெம்மையை தணிக்க குளிர்ந்த நீரில் குளித்தவன் தன் அரையில்(இடுப்பு) பூந்துவாலை கட்டி கொண்டு வெளியே வந்தவனிர்க்கு அறை வெறுமையாக தெரிந்தது.


கடமை தன்னை அழைக்க மற்றதை மறந்து வெள்ளை நிற மேல் கைச்சராய் (சட்டை) அணிந்து கருப்பு நிற காற்சட்டை அணிந்து, அதற்க்கு ஏற்றார் போல மேல் அங்கி அணிந்து ஆடிப்பாவை (கண்ணாடி) முன்னால் தோரணையாக நின்று தன்னை சரி பார்த்து கொண்டிருந்தான்.


அப்பொழுது,


"காதலிக்கும் ஆசை இல்லை

கண்கள் உன்னை காணும் வரை

உள்ளுக்குள் காதல் பூதது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும்

பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே நான் உன்னை காணும் முன்னால்


என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்

என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்

நான் தொட்டுகொள்ள கிட்ட வந்தால்

திட்டி திட்டி தித்தித்தாய்"


எனும் பாடல் வரிகள் எங்கோ ஒலிபெருக்கியில் ஒலித்து கொண்டிருக்க. அப்பாடல் இவன் செவிகளை நிரப்பி கொண்டிருந்தது.


அதில் அவன் மனம் தன்னவளை நினைத்து ஊருகி கண்களை மூடி ரசித்து கொண்டிருந்த சமயம் அவள் பேசிய பேச்சுக்கள் நரம்பின் வழி சென்று மூளையை தூண்ட.


கண்களை திறந்தவன் தான் இவ்வளவு பலகினமானவான என ஆத்திரம் அடைந்து அருகில் உள்ள கண்ணாடியால் ஆன சிறிய மேசையை தன் கைகளால் வேகமாக குத்தினான்.


சிங்கத்தின் முன் சிற்றேரும்பு நிற்க முடியுமா என்ன? அதை போல் அவன் வழிய கரம் பட்ட நொடி பல துகள்களாக சிதறிவிட்டது அம்மேசை.


மனதின் வசம் சென்ற தன்னை நொந்து கொண்டு ஒரு நொடியில் நிலைபடுத்தியவன் மூளையின் கட்டளைகளை நிறைவேற்ற சென்றவனின் மூகம் கனிவை தொலைத்து கற்பாறையாகா இறுகியது.


ஆம், தன்னவளை நினைக்கும் பொழுது தடுமாறும் மனதை நிலைப்படுத்த அவன் கையாளும் யுக்தி மனதை தவிர்த்து மூளையின் வழி செயல்பட தொடங்கினான் அனைத்து விடயத்திலும் தன் வாழ்க்கை உட்பட.


முகத்தில் கடுகு போட்டால் வெடித்து விடும் அளவு கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்தவன். காலை உணவை தவிர்த்து உணவு மேசையை கடந்து சென்றவனின் கவனத்தை திசை திருப்பியது ஒரு தேனினும் இனிய குரல்.


அக்குரலில் உருகியவனின் நடை தன்னை மறந்து நின்றதுடன் மூகமும் அகமும் ஒன்றாக மலர அக்குரலுக்கு சொந்தமானவளை வாரி அணைத்துக்கொண்டான்.


தன்னை எப்பொழுதும் ஒரு சக மனிதனாக உணர வைக்கும் அந்த குரலில் சுற்று புறத்தை மறந்து தன் கடமையை மறந்து அந்த தேவதை பெண்ணுடன் ஐக்கியம் ஆனான்.


ஆம், அவனை அடக்கி ஆட்டி வைப்பவள், கட்டளை இட்டு ஆளுகின்றவள் சுருங்க கூறினால் அவனின் தொலைவியக்கி அவள் தான் "அவந்திகா".

—--------------------------------------


சின்மயி மலர்விழிக்கு சில நுணுக்கங்கள் பள்ளி விதிமுறைகள் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் சமாளிக்க வேண்டும் என அந்த சர்வதேச பள்ளிக்கு தகுந்த ஆசிரியராக அவளை உருவாக்கி கொண்டிருந்தாள்.


அதை சரியாக கேட்டு கொண்டு அதன் வழி செயற்பட தொடங்கினாள் மலர்.


"மேம் எனக்கு நீங்க சொன்னது எல்லாம் கேட்ட பிறகு உடனே அஷ்மிதா மேம் பாக்கனும் போல இருக்கு" எனவும்


"அவ இப்போ டான்ஸ் பிராக்டீஸ்ல இருக்கா. போனாலும் பாக்க முடியாது. பிகாசஸ் கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு ஏதாவது சொல்லி போர் அடிப்பா. சோ லஞ்ச் டைமில் பாக்கலாம். அதுவரை பொறுமை காக்கவும் மகளே" என்று கையை தூக்கி ஆசிர்வாதம் செய்வது போல செய்தவளை கண்டு தானும் அந்த ஆஷிர்வாதத்தை பெருபவள் போல குனிந்து பெற்று கொண்டாள்.


அப்பொழுது அங்கு வந்த அலுவலக பணியாள் ஒரு சுற்றறிக்கை (circuler) கொண்டு வந்து கொடுத்தான்.


அதை வாசித்து கையெப்பம் இட்டு அவரிடம் கொடுத்த சின்மயின் முகம் யோசனையை தத்தெடுத்தது.


அதை கண்ட மலர் "என்னாச்சி மேம் இவ்வளவு நேரம் நல்லா தான இருந்திங்க திடீர்னு என்ன ஆச்சி" என்று கேட்க.


"சர்குலர் பாத்திங்கள்ள மலர் புதுசா ஒரு கரஸ்பாண்டென்ட் வர்றாங்க"


"ஆமா மேம் நானும் பார்த்தேன் அதுனால என்ன ஆக போகுது இன்பேக்ட் சொல்ல போன நமக்கு நல்லது தான புதுசா ஒருத்தர் வந்து ஏதாவது மாற்றம் நடந்தா நல்லது தான மேம்" என்று கூற


"எனக்கும் அது நெனச்சா தான் பயமா இருக்கு"


"என் மேம் அப்படி சொல்லுறீங்க"


"மலர் நம்ம ஸ்கூல்ல எனக்கு தெரிஞ்சு கரஸ்பாண்டென்ட் ரொம்ப நல்லவரு நம்ம பிரின்சிபால் மாதிரி இல்ல. அவரு உண்டு அவரு வேல உண்டுனு இருப்பாங்க. ஆனா இப்போ அவர மாத்தி வேற ஒருத்தர் வந்தா என்ன ஆகும்னு தான் யோசிச்சிஃப்யிங்" என்று கூற அந்த கலக்கம் மலரையும் தொற்றிக்கொண்டது.


அவர்களின் பேச்சின் நாயகன் அந்த பிரமாண்ட வாயிற்கதவை தாண்டி தனது விலை உயர்ந்த ஊர்த்தியான ரோல்ஸ்- ராய்ஸ் வந்து பள்ளியின் தாழ்வாரத்தின் கீழ் வந்து "க்ரீச்" என்ற சத்தத்துடன் நின்றது.


அதில் இருந்து இறங்கினான் அந்த ஆறடி நெடியவன். அந்த பள்ளியின் புதிய நிருபர் பதவியை வகிப்பவன்.


தன் அறையை நோக்கி வேக எட்டு வைத்து நடந்தவனின் காதில் விழுந்தது அந்த குரல். "எங்கோ கேட்ட குரல்" என்று அவன் மனது எடுத்துரைக்க.


அவன் அறியாமல் அந்த குரல் வந்த திசையை நோக்கி நடந்தன அவனது கால்கள்.


அந்த அறையின் சாளரம் வழியே பார்த்தவனின் விழிகள் கோவைப்பழம் என சிவந்தது. அவனின் மனமோ "இங்க தான் இருக்கியா உன்ன சும்மா விட மாட்டேன் டி" என சுளுறைத்தது.


அதை அறியாமல் அங்கே மாணவிகளுக்கு கலை நயத்துடன் நடனம் கற்று தந்து கொண்டிருந்தாள் அஷ்மிதா.


யாரோ தன்னை கவனிப்பதை போன்று தோன்ற சாளரம் பக்கம் தன் பார்வையை திருப்ப அங்கே யாரும் இல்லை.


மீண்டும் தன் நடனத்தில் கவனம் செலுத்த அதே சாளரம் வழியே அவளை தூகிலுறிக்கும் பார்வை பார்த்தான் மற்றொரு கயவன். அப்பள்ளியில் கணினி பிரிவில் பணி புரியும் ஹேம்மத் எனும் கலியுக துச்சாதனன்.


தன் மேல் வெவ்வேறு பார்வை விழுந்ததை அறியா பெண்ணவள் தன் கடமையில் கண்ணாக இருந்தாள்.


அவர்களின் பார்வையை அறிந்திருந்தால் சுதாரிதிருப்பாளோ… காலம் தான் விடை கூற வேண்டும்.


நிலா வருவாள்.


மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…😍😍😍☺️☺️☺️☺️☺️


 
அழகிய காதல் நிலவே


ஹாய் பிரெண்ட்ஸ்,


இதோ அடுத்த அத்தியாயம் போட வந்துடேன்.

போன யூடிக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி.. தொடர்ந்து உங்க ஆதரவை தாங்க மக்கா….மறக்காம உங்க கருத்த வந்து சொல்லிட்டு பொங்க…☺️☺️☺️ யாரையாவது டாக் பண்ணனுமா அதையும் சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்.☺️☺️☺️🤗🤗🤗


நிலா 6:


பாத்திரம் விழும் ஒலி கேட்டு விட்டின் உள்ளே ஓடிய கண்ணன் அங்கு கண்ட காட்சியில் ஸ்தம்பித்து நின்றது ஒரு நொடி தான். பின் தன்னை சமாளித்து சமாதானம் செய்வதற்கு சென்றான்.


என்னென்றால் அங்கு வேண்டும் என்றே பாத்திரம் தட்டி விட்டது அவனை ஈன்ற தாய் "கலைவாணி".


அறிவு, புத்தி கூர்மை, நாவடக்கம், படிப்பு, நற்பண்பு, பொறுமை என்று அனைத்திற்கும் தெய்வமாய் விளங்கும் சரஸ்வதி தாயின் மறுபெயரான கலைவாணி பெயரை சூட்டியதாலோ என்னமோ. அதற்கும் தனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை எனும் விதம் தன் நா எனும் சாட்டையால் சுழற்றி அடிப்பார்.


உலகில் பல உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் பல விஷம் அற்றவை சில உயிரினங்கள் விஷம் கொண்டவை.


அப்படி இருக்கும் விஷம் கொண்ட உயிரினத்தில் அதன் உடலில் ஏதாவது ஒரு பகுதியான கொடுக்கு, நாக்கு, தோல், கண், முழங்கை போன்ற பாகங்களில் கொடிய விஷம் காணப்படும்.


ஆனால் கலைவாணியோ உடல் முழுவதும் விஷம் நிறைந்தவர். அவர் வாய் திறந்து பேசினால் நிச்சயம் அங்கே கலகதிற்கு பஞ்சம் இருக்காது.


தனது கையில் இருக்கும் சாப்பிடும் தட்டை விசிறி அடித்தவர்.


தன் மகனை நோக்கி "வேலைக்கு போக துப்பில்ல காலங்காத்தால எவள பாக்க போரியோ தெரியல. அப்படியே எவளயாவது பாத்த 11 அழகான அறிவான பொண்ணா இல்லாம நெறய சொத்து இருக்குற பொண்ணா பாரு. அப்போ தான் நம்ம குடும்ப கஷ்டம் திறும். உன்ன பெத்த வயிறு குளிரும் புரியுதா" என்று அவனை திட்டி தீர்த்தார்.


அவனிற்கு இது தினமும் வாடிக்கை என்பதால் எப்பொழுதும் ஒரு விரக்கத்தி புன்னகையுடன் கடந்து செல்பவன். இன்று தன்னவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தனது அன்னை கூறியதை கேட்டவன் சற்று அதிரத்தான் செய்தான்.


சில நொடிகளில் தன்னை சமாளித்தவன் தன் அன்னையை நோக்கி அவனது சூழ்நிலையை எடுத்துரைக்க வாய் திறந்த சமயம்.


"பெத்து வச்சிருக்கேன் பாரு புள்ளைய பொம்பள புள்ள வேலைக்கு போயி வீட்ட காப்பாதுது ஆசையா பெத்து வச்ச ஆம்பள புள்ள வெட்டிய ஊரு சோவாருது இந்த கொடுமைய எங்கனு போயி சொல்ல" என்று வசை பாட


மேலும் நொந்து போனவன் "அம்மா நான் வேணும்னு வேலைக்கு போகாம இல்ல. சரியான வேலை கிடைக்கல கூடிய சிக்கிரம் ஏதாவது ஒரு வேலைக்கு கண்டிப்பா போறேன் கவலைப்பட வேண்டாம்" என்று ஆறுதல் கூற


அவனது தாய்யோ "பேசுறது மட்டும் நல்லா வக்கணையா பேசு. பெயருக்கு ஏத்த மாதுரி அழகா தான டா இருக்க இங்க இருந்து சோவாருவதுக்கு பதிலா ஒரு பெரிய பார், பப், ஹோட்டல்னு வசதியான பொண்ணுக வர்ற இடத்துக்கு போ. ஒரு பொண்ண வசதியானவன் மாதிரி நடிச்சு கல்யாணம் பண்ணி எல்லாரும் செட்டில் அகுறதுக்கு வழி பாரு" என கூற


அந்த எண்ணமே அவனை முகம் சுழிக்க செய்து வேப்பங்காயாக கசந்தது.


பெயருக்கு ஏற்றார் போல கண்ணனாக இல்லாமல் தன்னவழுக்கு கலியுக ராமனாக வாழ ஆசை கொண்டவனிடம். இப்படி அபத்தமான வார்த்தைகளை கூறியது தனது தாயகவே இருந்தாலும் அவரை அறைய தூடித்த தனது கைகளை கட்டு படுத்தி அங்கிருந்து நகர்தான்.


அறையினுள் சென்று கதவை சாற்றியவனின் மனம் தன்னவளை நினைத்து கதற. ஓலமிடும் தனது மனதை அடக்க பெரும்பாடு பட்டவன் கண்களை மூட அதிலிருந்து கண்ணீர் வடிந்தது.


தன்னவளை நினைத்ததாலோ என்னவோ நான் இருக்கிறேன் எனும் விதமாக ஈஸ்வரியின் புகைப்படம் அவனது அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததன் அடையாளமாக ஒளிர்ந்தது.


அவளை கண்டவனின் முகமும் ஒளிர ஓடி சென்று குறுஞ்செய்தியை பார்த்தவனின் முகம் மேலும் ஒளிர்ந்தது.

—--------------------------------------

அந்த ஊரின் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் கேட்டு கொண்டு வந்தவளின் ஆர்வம் மேலும் பல கேள்விகளை கேட்டு தெரிந்து கொண்டவள்.


பேச்சின் சுவாரசியத்தில் கிராமத்தின் முச்சந்திக்கு (மூன்று சாலைகள் இணையும் இடம்)வந்ததை கவனிக்க வில்லை.


அவர்கள் அங்குவரவும் அப்புதியவளின் காலின் அருகே ஒருவன் விழவும் சரியாக இருந்தது. அதனால் பயந்தவள் ஓர் அடி பின்னால் நகர்ந்தாள்.


வலியில் முகம் சுருங்க தன் வழியில் விழுந்து கிடந்தவனை பார்த்து அதிர்ந்தவள். நிமிர்த்து பார்க்க அங்கே துர்க்கை அம்மனின் மறு உருவமாக நின்றிந்தார் ஒரு பெண்மணி.


வட்ட முகம், நன்கு அகன்ற நெற்றி அதில் அளவோடு இருக்கும் பொட்டு, கண்களில் கனிவு ஆனால் கோவம் கொண்டு பார்த்தல் அக்னியின் ஜுவாலை தெறிக்கும், முக்கில் கல் வைத்த பெரிய முக்குத்தி, மானிறத்துக்கும் சற்று குறைந்த நிறம், விலை உயர்ந்த நூற்புடவை அணிந்திருந்தார்.


சற்று பூசினார் போன்று இருக்கும் தோற்றம், கேசம் அனைத்தையும் வாரி கொண்டை இட்டு, தனது சேலை முந்தானையை உதறி தனது இடையில் சொருகி நின்ற அவரின் தோற்றம் கிராம பெண்ணின் பெருமையை எடுத்துரைத்தது.


முகம் வெளிறி நின்றிந்த அவளை நோக்கி வந்தவர். அவளின் காலின் அருகே கிடந்தவனை அவனது சட்டையின் கழுத்து பட்டியை (ஷர்ட் காலர்) பிடித்து தூங்கி நிறுத்தியவர் மீண்டும் அவனது கன்னம் பளுக்கும் படி ஒரு அறை விட்டார்.


அதில் தனது அதிர்வில் இருந்து மிண்டவள். பொன்னரசியின் கையை சுரண்டி "அக்கா இந்த ஊருல பண்ணையாரம்மா தான பெரிய ஆளுனு சொன்னிங்க. ஆனா இந்த அம்மா அவங்கள விட பெரிய அங்காள பரமேஸ்வரியா இருப்பாங்க போல" என்று அலற


"கண்ணு நான் சொன்ன எங்க அம்மா, அதாவது பண்ணையாரம்மா அவங்க தான். அப்புறம் அவுக பேரு அங்காள பரமேஸ்வரி இல்ல நாகேஸ்வரி" என்று கூற


"அப்போ இவங்க தான் உங்க பண்ணையாரம்மா வா…." என்று நிட்டி முழங்க


"ஆமா கண்ணு" என்று கூறியவரிடம் "உங்க அம்மா எது செஞ்சாழும் நியமா தான் செய்வாங்கனு சொன்னிங்க. இப்போ எதுக்கு அந்த பாவ பட்ட ஆள போட்டு அந்த அடி அடிகாங்க. எதுக்கு அடிக்காங்கனு கேட்க மாட்டிங்களா யாரும்" என்று கேட்கவும்


அவளது கேள்விக்கு ஏற்றார் போல கீழே விழுந்தவனை வசை பாட ஆரம்பித்தார் பண்ணையாரம்மா "ஏலே என் கிட்ட என்னவே சொல்லி வட்டி வாங்குனவ. ஒழுங்கா மாசம் பொறந்தா வந்து வட்டி தரனும்னு மறந்து போயிருதாகும். இன்னைக்கு இப்போ போட்ட போடுல கரெக்டா வருது பணம் இந்த புத்தி முதல்லே இருந்துருகணும் ல. இதே மாதிரி அடுத்த மாசம் வட்டி வரல வேற மாதிரி வசூல் செய்ய வேண்டி வரும். பாத்து பத்திரமா இருந்துகல" என்று கூறி விட்டு தனக்கு சொந்தமான வாகனத்தில் சென்று விட்டார்.


பண்ணையாரம்மா கூறியதை கேட்ட அந்த பெண்ணுக்கோ கோவம் கோவமாக வர அதே ஆவேசத்துடன் "அக்கா என்ன கா இது அவனுக்கு என்ன கஷ்டமோ வட்டி கட்ட முடியல அதுக்காக இப்படியா போட்டு அடிகுறது. சுத்த காட்டு மிராண்டி தனமா இருக்கு கா. இந்த லட்சணததில ஆஹா ஓஹோனு அவங்களுக்கு சீட்டிஃபைகேட் வேற" என்று எகிற


"கண்ணு இப்படி ஒரு தல பச்சமா பாத்துட்டு பேச கூடாது. ரெண்டு பக்கமும் என்ன நடந்தது அது முதல்ல தெரிஞ்சுக்கணும் அப்புறம் தான் முடிவு பண்ணனும். அரைகுறையா கேட்டுட்டு முடிவு எடுகுறதும் பாதி கிணறு தாண்டிட்டு மீதி கிணறு தாண்டம விடுறதுக்கு சமம் கண்ணு" என்று கூறவும்.


அவர் கூறியது சரி என தோன்ற அமைதியானால் அவள்.


"எங்க அம்மா ஏதாவது செஞ்சாங்கன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கும் கண்ணு. அம்மாவுக்கு கோவம் அதிகமாக வரும் ஆனா கோவம் இருக்குற இடத்தில தான குணம் இருக்கும். அதுக்கு உதாரணமே எங்க அம்மா தான் கண்ணு. அதுனால என் கிட்ட சொன்ன மாதிரி வேற யாரு கிட்டயும் கேட்டு புடாத கண்ணு"


"சரி கா" என்று கூறியவளின் மன கண்ணில் பண்ணையாரம்மாவின் தோற்றமே வந்து போனது.


மேலும் அவர் என் அந்த ஆடவனிடம் அவ்வாறு நடந்து கொண்டார் எனும் கேள்விக்கு பதில் கிடைத்ததாக வேண்டும் என்று நினைத்தவள். ஓர் முடிவு எடுத்த பின்பே கண் அயர்ந்தாள்.


அதிகாலை யாரிற்கும் காத்திராமல் அழகாக விடிந்தது.


குளித்து முடித்து தன்னை சுத்தம் செய்து கொண்டவள் கிராமத்து பெண்களின் பாரம்பரிய உடையான தாவணி அணிந்து கொண்டாள்.


தாவணி அணிந்தவள் நாகேஸ்வரி அம்மாவை போல முந்தானையை உதறி இடுப்பில் சொருகவும் அவளது உடல் சிலிர்த்தது.


"சப்ப பீஸ் உனக்கே உடம்பு முந்தானையை உதறி சொருகின உடனே முறுக்கேருதே. பக்கா கிராமத்து ஆளு அவங்களுக்கு எப்டி இருந்திருக்கும்" என்று கண்ணாடியை பார்த்து கூறி சிரித்து கொண்டவள் வீர நடை போட்டு நடந்தால் அந்த அரண்மனையை நோக்கி.


அரண்மனையை வந்தடைந்தவள் அந்த பெரிய இரும்பினால் ஆனா வாயிற்கதவை திறந்து கொண்டு நடை பாதையில் சென்றாள்.


அவள் அந்த கதவை திறக்கவும் அங்கு குறைந்தது இருபத்தைந்து நபராவது தங்களது வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.


சில ஆண்கள் தோட்ட வேலை, மர கிளைகளை வெட்டி சரி செய்வது, ஏர் புட்டுவது, மாட்டிற்கு தண்ணி காட்டுவது போன்ற வேலையில் இடு பட்டனர்.


பெண்களோ வற்றல், வடகம் காயவைத்தல், தொழுவத்தை சுத்தம் செய்து பூஜை போடுவது, துடபத்தை கொண்டு சுத்தம் செய்வது என ஒவொருவரும் ஒரு வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.


அந்த அரண்மனையை சுற்றி ஆயிரம் மரங்கள் இருந்தாலும் வீட்டின் அருகே ஒரு பிரம்மாண்ட மா மரம் இருந்தது.


அதன் அருகே சென்று நின்றவள் அதை வியந்து பார்த்து கொண்டிருக்க.


தற்செயலாக திரும்பியவள் கண்ணில் விழுந்தனர் நேற்று பண்ணையாரம்மாவிடம் உதை வாங்கியவனும் அவன் அருகே இரு குழந்தைகளுடன் ஒரு பெண்ணும்.



அவர்கள் உரையாடி கொண்டிருந்தது பண்ணையாரம்மாவிடம் தான். அவர்கள் உரையாடுவதும் பின்பு அந்த ஆடவன் அவரின் காலில் விழுவதும் தெரிந்தது.


அதை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தவள் காதில் விழுந்தது அந்த உரையாடல்.


எலே ராசு உமக்கு அறிவில்லே உன் கூட்டாலிங்க கூட சேந்து கூத்தடிக்க நான் கூடுத்த பணத்தையாவே பயன் படுத்தினிரு. உனக்கு எம்புட்டு நெஞ்சலுத்தம் இருக்கும். உன் பொஞ்சாதி என் கிட்ட வட்டிக்கு வாங்கி புள்ளையா காப்பாத்த ஆசுபத்திரிக்கு போக வச்சிருந்த காச இப்படி சூதாடி தோலச்சி வச்சதுக்கு உன் தோல உரிகணும்லே. உன் பொஞ்சாதி வந்து கேட்டதால விடுறேன். ஒழுங்கா பொஞ்சாதி பேச்சு கேட்டு பொலப்ப பாரு இல்ல அடுத்த தடவை யாரு சொன்னாலும் கேக்க மாட்டேன் ஜாக்கிரதை" என கூறவும்


பொன்னரசி கூறியது தனது மன கண்ணில் தோன்ற "என்ன மனுஷிபா இவங்க. இவங்கள போய் தப்பா நெனசிடோமே" என்று நினைத்து கொண்டே திரும்பியவள் அதிர்ந்தாள்.


நிலா வருவாள்.


மறக்காம உங்க பொன்னான கருத்துகளை கீழே உள்ள லிங்க் கிளிக் பண்ணி சொல்லிருங்க ஃப்ரெண்ட்ஸ்…😍😍😍☺️☺️☺️☺️☺️


 
Status
Not open for further replies.
Top