வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இசைக்கும் இதழழகே... கதை திரி

Status
Not open for further replies.
இசைக்கும் இதழழகே…

இதழ்: 1

கனவு நகரமாக விளங்கும் கனடா நாடு... அங்கே உள்ள ஒரு ரெஸ்டாரண்டில் தான் புத்தாண்டு நிகழ்ச்சிகள் களைக் கட்டியது கோலாகலமாக... விடிய போகும் நேரத்தில் பிறக்கும் புத்தாண்டில் எல்லாம் நல்லவையாக நடக்க வேண்டி நம் ஊரில் பிரார்த்தனைகள் நடக்கும் என்றால், வெளி நாட்டிலோ… அன்றைய இரவு கொண்டாட்டத்தில் தான் கழியும்! மது பான கூடத்தில் தான் புத்தாண்டும் விடியும்!!

அந்த ஹோட்டல் ஒன்றும் சாதாரணமானது கிடையாது. ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டலின் ரெஸ்டாரண்டில் நடந்துக் கொண்டிருந்தது அந்த பார்ட்டி! பெரும் செல்வந்தர்களும் மில்லினர்களும் கோலோச்சும் அந்த இடத்தில் திடீரென ஒரு அமைதி.

"நெக்ஸ்ட் சாங்... கேன் யூ கெஸ்? யா... இட்ஸ்…ஆதி!!" என்று கனடா ஆங்கிலத்தில் அறிவிக்கப்பட... பெருத்த கரகோஷம் அவ்வரங்கத்தில்.

மேடையில் சட்டென்று அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட… ஒரு வட்ட வடிவ ஒளி மட்டுமே விழுந்து, அந்த இடத்தை அலசியது. 'யார் அந்த ஆதி?' என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்த... அந்தோ பரிதாபம்! அவை கூட தோற்றுவிட... ஆனால் விக்கிரமாதித்தனாய் விடா முயற்சி கொண்ட அந்த ஒளியோ, அந்த மேடையின் அங்கங்களை காதலனாக அலசி ஆராய, அப்பொழுது வெளிப்பட்டாள் பெண்ணொருத்தி!!

ஆதி என்றல்லவா அறிவித்தார்கள்? என்று அவளை தெரியாத சிலர் தங்கள் அருகில் இருந்த நண்பர்களிடம் ரகசியம் பேச... அவளைத் தெரிந்தவர்களோ கைத்தட்டி இன்னும் ஆரவாரம் செய்தனர், அவ்வரங்கமே அதிரும் வண்ணம்...

மெல்லிய சாட்டின் ஒயின் கலர் ஃபுல் பார்ட்டி ப்ராக் அவள் அங்கத்தை தழுவி இறுக்கியிருந்தது!! அதில் தெரிந்த மெல்லிய பூக்களாலான பேட்ச் வொர்க் அணங்கவள் மேனியை பூந்தோட்டமாக காட்டியது. உயர தூக்கி போட்டிருந்த போனிடெயில்... நீண்ட காதணிகள்... வெற்று கழுத்து என்று அழகிய சின்ட்ரெல்லாவாக மைக்கை கையில் பிடித்தப்படி அசைந்து வந்தவள், பல மனங்களை அசைத்து தூக்கிப் போட்டிருந்தாள்!!

அந்த இரவு வேளையில் ஆங்கில பாடலை பாடிய அவளது குரல் அரங்கத்தை மட்டுமல்ல... அரங்கத்தின் கோடியில் அமர்ந்து டேபிளில் காலை போட்டப்படி தன் இரு விரலால் மது குப்பியை அசைத்து அசைத்து மிடறு மிடறாக குடித்துக் கொண்டிருந்தவனையும் மெல்ல விழி உயர்த்தி பார்க்க வைத்தது!!

நிமிர்ந்து அவளை பார்த்தவன் கண்களோ வஞ்சி அவள் இதழ்களில் தான் தஞ்சம் கொண்டது. அவ்வப்போது மேற்பற்களால் கடிக்கப்படும் போதும்... சற்றே விரித்து புன்னகைக்கும் போதும்...
ரோஜா நாவினால் ஈரப்படுத்தி கொள்ளும் போதும்... இசைக்கு ஏற்ப இசைக்கும் போது... அதன் அழகில் பார்ப்பவரை அத்தனை மயக்கியது அவ்விதழ்கள்!!

"இட்ஸ் டெம்ப்டிங் லிப்ஸ்... நோ மோர் ட்ரக் இஸ் நீடட்!! திஸ் லிப்ஸ் எனெஃப் டு ப்ளே!!" என்றான் போதை ஏறிய குரலில் அருகில் இருந்த நண்பனிடம். அந்த நண்பன் மைக்கேலும், "எஸ் பட்டி!" என்று சிரித்துக் கொள்ள...கையில் இருந்த குவளையை இருவரும் இடித்துக் கொண்டார்கள்.

நேரம் செல்ல செல்ல… ஆதியின் குரலும் பின்னணி இசையும் அவ்வரங்கத்தில் இன்னும் ஆர்ப்பரிப்பை கொட்ட, அடுத்த சில நிமிடங்களில் பிறக்க போகும் புத்தாண்டை வரவேற்க, கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகியது. அதுவும் "கமான் கைய்ஸ்... லெட்ஸ் ஸ்டார்ட்!" என்ற ஆதியின் குரலோடு அரங்கமே சேர்ந்து குரல் கொடுக்க ஆராம்பித்தது.

"ஃபைவ்... ஃபோர்... த்ரீ... டூ... ஒன்... ஹாப்பி நியூ இயர்!" என்று குதூகலத்தோடு ஒலித்தது அத்தனை குரல்கள், அதில் முக்கால்வாசி போதையில் தான்!! ஆனாலும் ஒரு உற்சாகத்தை வழங்கியது.

மேலும் இரண்டு பாடல்கள் பாடி விட்டு கீழே இறங்கி வந்தவள் நண்பர்கள் குழுவோடு சேர்ந்துக் கொள்ள விரைந்து ஓடினாள். சுற்றும் புறம் பார்க்கவில்லை கண்களில் நண்பர்களின் ஆர்ப்பரிப்பு மட்டுமே பட, விரைந்து அவர்களோடு இணைந்து தாமும் கொண்டாட்டத்தை கொண்டாட விழைந்தது அவளது இதயம். ஃபுல் பார்ட்டி கவுனை இரு கைகளாலும் உயர தூக்கியப்படி ஓடினாள் ஆதி.

அவளுக்கு எதிர்ப்படும் அனைவரும் "ஹாப்பி நியூ இயர்" என்றும்... "நைஸ் வாய்ஸ்" என்றும்... "குட் ஒன்!" என்றும்... "வெரி நைஸ் பட்டி!" என்று பல பேர் வாழ்த்துக்கள் கூறி கையசைக்க... ஓடிக் கொண்டே அனைத்தையும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள். பதிலுக்கு "ஹேப்பி நியூ இயர்" "இந்த நாள் நல்ல நாளாகாட்டும்" என்று விட்டு நண்பர்கள் குழுவை நோக்கி ஓடினாள் ஆதி.

பாவம் அவளுக்கு தான் தெரியவில்லை... இந்த ஆண்டு வச்சு செய்யப்போகிறது என்று, அதுவும் குறிப்பாக அவளை!

வேகமாக ஓடியவளின் கை சட்டென்று இழுத்து நிறுத்தப்பட திரும்பி பார்த்தாள். அங்கே விரித்து விட்ட ஜடா முடி... நீண்ட தாடி... கழுத்திலும் கைகளிலும் ஏதோ மணிகள் கோர்த்த மாலை... உருண்ட புஜங்கள் அதில் குத்தியிருக்கும் டேட்டூ என்று அவ்வரங்கத்துக்கும் அவனுக்கும் சம்மந்தமில்லாத ஒருவன் அமர்ந்திருந்தான்.

அனைவரும் பாடல் நன்றாக இருக்கிறது என்று சொன்னது போல இவனும் செல்வான் என்று நினைத்தபடி எஸ் என்று இவள் திரும்பிப் பார்த்தாள்.

டேபிள் மீது காலை போட்டு இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவாக்கில் அவளது கையை விடாமல் பிடித்திருந்தான், மெல்ல தலையை மட்டும் உயர்த்தி அவன் கண்கள் சென்று நின்ற இடம் அவளது இதழ்கள்!!

"நைஸ் லிப்ஸ்" என்று சொல்லி சிரிக்க... அவனின் விரிந்த புன்னகையை அவனது அடர்ந்த மீசை மறைத்தது.

'இவன் என்ன காட்டுமிராண்டி மாதிரி இருக்கிறான்' என்று தான் ஆதியின் எண்ணம்.

அந்த புத்தாண்டு இரவு கொண்டாட்டத்தின் சத்தத்தில் இறைச்சலில் அவனது வார்த்தைகள் சரியாக அவளது காதில் விழவில்லை. ஏதோ பாராட்டுகிறான் போல என்று நினைத்தவள், "தேங்க்ஸ்" என்று விட்டு அவள் திரும்பி செல்ல முயல, அவனது கையின் அழுத்தம் கூடியது.

யோசனையோடு அவன் முகத்தை நெற்றி சுருங்க இவள் பார்க்க அவளின் இதழ்களில் தான் அவனின் கண்களை உறவாட விட்டான். அருகில் இருந்த மைக்கேலும் அவன் முதுகில் தட்டி "ஹே... மிஷ்ரா" என்று ஊக்கப்படுத்தினான்.

அதற்குள் இவர்களது நண்பர்கள் குழுவும் இன்னும் இவள் வராததை கண்டு இவளை கண்களால் தேட ஒரு இடத்தில் இவள் நின்றுக் கொண்டதை பார்த்து "யாரிடம் இவ பேசுறா?" என்று கேட்டான் ரிஷி.

"யாருன்னு தெரியலையே... யாராவது இவள் வாய்ஸ்க்காக கூப்பிட்டு பேசி இருப்பாங்களா இருக்கும்" என்றாள் ஜெனி.

"இல்ல... பார்த்தா அப்படி தெரியல! அவள் உடல்மொழி சரி இல்லை. என்னனு போய் பார்ப்போம்" என்றவாறு முதலில் நடந்தான் மித்ரன். அவன் கூடவே மற்றவர்களும் இணைந்துக் கொண்டனர்.

"ஐ வான்னா ப்ளே வித் தெம்!" என்றான் இன்னும் கண்களால் அவள் இதழ்களை மென்று தின்று.

"பர்டன்!" என்று கோபமாக கேட்டதும், எங்கே எதுவும் பிரச்சனை ஆகி விடுமோ என்று பயந்த மைக்கேல் "ஹி லைக்ஸ் யுவர் வாய்ஸ்... சோ... ஹி வான்ட் டு ஹியர் ஒன்ஸ் அகைன்!" என்றான் அவசர அவசரமாக சமாளிக்க...

ஆதியோ நம்பாத பார்வை அவனை பார்க்க...அப்படியே தான் என்பது போல திரும்பி பார்த்தான் அவளை.
அதற்குள் நண்பர்கள் குழு அவளிடம் வந்துவிட...

"என்ன... என்ன பிரச்சனை ஆதி?" என்றவாறு மித்ரன் அவள் அருகில் வர... அதற்குள் ஆதியின் கைகளை பற்றி இருந்த அந்த காட்டானை பார்த்து ரிஷிக்கு கோபம் முகிழ்த்தது.‌ "ஹவ் டேர் யூ மேன்?" என்று அவனது கைகளை தட்டி விட்டான்.

அந்த ஜடாமுடிகாரனும் அரை போதையில் இருந்ததால் அவன் கைதட்டி விட... கையை விட்டவன், திரும்பி ரிஷியை ஒரு பார்வை மட்டுமே பார்த்துவிட்டு பின்பு கையை தலைக்கு பின்னால் கட்டிக்கொண்டு இன்னும் சாவதானமாக அவளை தான் பார்த்தான்.

"இவன் பார்வையும் ஆளுமே சரியில்ல! எதுக்கு இவனோட எல்லாம் நீ பேசிட்டு இருக்க? போலாம் ஆதி!" என்று ரிஷி அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு போனால் போதும் என்று நின்றான்.

மித்ரன், "ஆமா... அவன் பார்வையே சரி இல்ல தான். விட்டா உன்னை கொத்திட்டு போற மாதிரியே பார்க்கிறான்... போதும்! அதான் பாடி முடிச்சிட்ட இல்ல... வா போகலாம் நாம போய் சேர்வதற்கு மிட்நைட் ஆயிடும். டே ஆப்டர் டுமாரோ வீ ஹேவ் எக்ஸாம்" என்று மித்ரன் கூற, "ஆதி வீ மூவ்..." என்று ஜெனியும் கூறினாள்.

இவர்களின் சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருந்த அந்த விரித்த தலைமுடிகாரன், ஆதியை மேலும் கீழும் பார்த்து, "கொத்திட்டு போக போறானா?" என்று தனக்குள் சிரித்தவன் "கொத்திட்டா போச்சு!!" என்று மெல்லிய குரலில் கூறி கண்களை சிமிட்ட... அதே நேரம் ஏதோ உந்துதலில் திரும்பிப் பார்த்த ஆதியின் கண்கள் அவனின் இதழ் அசைவை கண்டுக் கொண்டன. கூடவே இந்த கண் சிமிட்டலும்!

அதுவரை இருந்த சந்தோஷமெல்லாம் வடிந்தது போல இருந்தது. இனம் புரியாத ஒரு பயம் கவ்வியது அவளது தொண்டையை... நண்பர்கள் சொல்வது போல இங்கே அதிகம் இருப்பது தேவையில்லாத பிரச்சனையை விளைவிக்கக்கூடும் கூடவே இம்மாதிரி பிரச்சனை என்று வீட்டுக்கு தெரிந்தால் அவ்வளவுதான்!! அவ்வப்போது இப்படி பாடுவது கூட இனி நடக்காமல் போய்விடும் என்று பயந்தவள் வேகமாக "போலாம்" என்று அவர்களுடன் இணைந்து நடந்தாள்.

போகும்போது திரும்பி அவனை ஒரு முறை பார்க்க... 'அவ்வளவு பயமா?' என்று அவன் கண்களில் கேள்வி தொக்கி நிற்க... இவளும் கண்களால் கூர்ந்து "பயமா எனக்கா? அதுவும் உன்னிடமா?" என்பது போல நக்கலாய் இதழ்களை வளைத்து சுழித்து விட்டுச் சென்றாள்.

உண்மையில் அவளது பயம் எல்லாம் இந்த புதிதாக கண்ட ஆடவன் பற்றி அல்ல... இவன் ஏதும் பிரச்சனை செய்தால் கூட இவர்களுக்கு என்று இருக்கும் பௌன்சர்ஸ் காப்பாற்றி விடுவார்கள்‌. ஆனால் அதன் பின் அவை அப்படியே அவர்களது பெற்றோர்களுக்கு செல்லும் அதுதான் பிரச்சனை!!

வெறும் நியூ இயர் பார்ட்டி... நண்பர்களோடு கொண்டாட்டம் என்றால் கூட போனா போகுது... பிள்ளைகள் என்ஜாய் செய்யட்டும் என்று விடுபவர்கள், இவள் பாட்டு பாடினாள்... அதனால் வந்த பிரச்சனை என்று தெரிந்தால் அவ்வளவுதான்!! படிப்புக்கு பெரிய முழுக்காக போட்டு இந்தியா அழைத்து போவது உறுதி என்பதால் தான்!!

இத்தனை பயம் அவனிடம் இல்லை என்று தான் கண்களில் காட்டியதே! இதை அவனிடம் நேரடியாக சொல்லிவிட்டு சென்று இருப்பாள் இந்தியாவாக இருந்தால்... ஆதி அலைஸ் ஆதிரை!!

அந்த ஜடா முடிகாரனும் செல்லும் ஆதிரையை தான் பார்த்துக் கொண்டிருந்தான. அவளை சுற்றி பாதுகாப்பு வளையம் போல நண்பர்கள் மூவரும் பின்னே செல்ல... அவர்களுக்கு சற்று இடைவெளி விட்டு அவர்களது பௌன்சர்ஸும் சென்றனர்.

நண்பனின் பார்வையை உணர்ந்த மைக்கேல் "மிஷ்ரா..." என்று ஆதிரையை கண்களால் காட்டி சிரித்தவன், ஆனால் வேண்டாம் என்றும் தலையசைத்தான்.

"இதுவரை கொத்த எண்ணம் இல்லை.. இனி கொத்திட்டு போக தடை இல்லை!" என்று நினைத்தவன் சிரிக்க..

"வாட் நெக்ஸ்ட்!" என்ற மைக்கேலிடம் விசில் அடித்தபடி கையை உயரே எழுப்பியவன், "இந்தியா..." என்றான்.

இதழ்கள் இசைக்கும்…
 
இதழ்: 2

ஆதிரை, ரிஷி, மித்ரன் ஜெனிஃபர் நால்வரும் நண்பர்கள். அதிலும் ஜெனிபர் இங்கே படிக்க வந்த இடத்தில் இவர்களுக்கு தோழியாக அறிமுகமானவள். மித்ரன் ஆதிரையின் பள்ளிக்கால தோழன். கூடவே மித்ரனின் தந்தை யோகேந்திரன் ஆதிரையின் அப்பா சண்முகவேல் ராஜனும் மல்டி ஸ்பெஷாலிட்டி பங்குதாரர்கள்.

ரிஷி இவர்களுக்கு சீனியர்... இவர்கள் மூவரும் தங்கள் இளங்கலை மருத்துவ படிப்பின் இறுதியாண்டில் இருக்க... ரிஷி மேனெஜ்மெண்ட் முதுகலை படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கிறான்.

ரிஷி, வீட்டினரால் ஆதிரைக்கு பார்த்து வைக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை. அரசியல்வாதி கனகரத்தினத்தின் தவப்புதல்வன்!! அவர் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து சேர்த்து வைத்த திரண்ட சொத்தினை ஆளப்பிறந்தவன், உள்ளூரில் இவனது பருப்பு வேகாததால் பெரும்பணம் கொடுத்து இளங்கலை படிப்பு பட்டத்தை வாங்கியவர், பேருக்காக ஊருக்காக முதுகலை மேனேஜ்மென்ட் படிக்க கனடா அனுப்பி வைத்தார்.

அவர் என்னவோ கனடாவுக்கு அவனை படிக்க வைக்க தான் அனுப்பினார். அவனோ ஆதிரைக்கு காவலாக தான் இங்கு வந்தான். பின்னே அழகும், அறிவும், சொத்தும் நிறைந்த பெண்ணை வேறு யாரும் கொத்திக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்... அவனுக்கு எப்பொழுதும் உண்டு.

கிளிக்கு வேடனாக அருகில் இருந்து இவன் காவல் காக்க நினைக்க... ஆனால் ராஜாளி ஒன்று கிளியை கொத்திச் செல்ல பறந்து வந்தது.

ஆதிரை, தனியே வீடு ஒன்று எடுத்து அதில் தான் ஜெனிபரோடு தங்கி இருக்கிறாள். அவளுக்கு கல்லூரி கேம்பஸில் இருக்கும் ஹாஸ்டல் அந்தளவு பிடிக்கவில்லை, உணவு பிடிக்கவில்லை, உபச்சாரம் பிடிக்கவில்லை என்று அவ்வளவு கம்ப்ளைன்ட் செய்திருந்தாள் தந்தையிடம். ஆனால் உண்மையான காரணம் என்னவோ..! அவளுக்கு இசையின் மீது இருந்த நாட்டம். அது அவளது உயிர் மூச்சு!

சண்முகவேல் ராஜன் தங்கள் ராஜன் குரூப்பில் இருக்கும் மருத்துவமனையில் ஒன்றின் பொறுப்பை மகளுக்கு கொடுப்பதற்கு அவளை தூரத்தில் இருக்கும் வெளிநாட்டிற்கு பணத்தை கொட்டி படிக்க வைக்க ஏற்பாடு செய்ய... அவளோ கிடைத்தது சாக்கு என்று இங்கே ஒரு இசைக்குழுவோடு சேர்ந்து தனது இசை பயணத்தை யாரும் அறியாமல் தொடர்கிறாள்.

அவள் சேர்ந்திருக்கும் அந்த இசை குழுவின் பெயர் "த பீட்டில்ஸ்"
காலங்காலமாக இருக்கும் அவ்வூரின் பாப் பாடல்களையும் ரெட்ரோ பாடல்களையும் ஃப்யூஷன் முறையில் தற்காலத்துக்கு தகுந்த மாதிரி பாடும் குழு அது. அதில் ஆதிரையின் க்ளாசிக் டச் தான் சிறப்பே! எப்படிப்பட்ட பாடல்களையும் அதன் சுவை குறையாமல், லயம் தவறாமல், பாடுவதில் வல்லலள் ஆதி!! வெறும் க்ளாசிக் மட்டுமல்ல திடீரென்று ராக்கும் கலந்து அடிப்பாள்... அக்குழுவும் ஆதியும் அத்தனை ஃபேமஸ் அங்கே!!

இதற்கு மித்ரனும், ரிஷியும் துணை. மித்ரனுக்கு தோழி எது செய்தாலும் சரிதான்! ஆனால் ரிஷிக்கோ எங்கே தான் மறுப்பு சொன்னால் தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுத்து விடுவாளோ என்ற பயத்தில் தான் விட்டுப் பிடிப்போம் என்று காத்திருக்கிறான்.

காத்திருப்பு கானல் நீர் தான் என்று தெரியவில்லை அவனுக்கு.

ஒரு பக்கம் தனது மருத்துவ படிப்பு, மறுபக்கம் தனது இசை குழுவோடு சேர்த்து அவளது இசை பயணம் என்று வெரி வெரி பிஸி ஆதிரை! பெரும்பாலும் வார இறுதி நாட்கள் அவர்களது பேண்ட் என்பதால் இவளுக்கு படிப்பில் பெரிய பிரச்சனை வரவில்லை.

கூடவே பிள்ளைகள் பார்ட்டி, பப் என்று சுற்றுவது இப்போதைய ஹைபை சொசைட்டியின் வாழ்வியல் அங்கமாக போய்விட, அதை பெரிதாக யாரும் அவர்கள் குடும்பத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர்களுக்கு பாதுகாப்புக்கு என அந்த சமயத்தில் மட்டும் பௌன்சர்ஸ் அனுப்பி வைத்து விடுவார் சண்முகவேல்ராஜன்.

ஆதிரை தங்கி இருக்கும் அதே அப்பார்ட்மெண்டில் மற்றொரு வீட்டில் தான் மித்ரனும், ரிஷியும் இருக்கிறார்கள். ரிஷிக்கும் மித்ரனுக்கும் எப்பவுமே எதிலுமே ஒத்தே போகாது. ஆனால் ஒத்துப் போகும் ஒரு இடம் ஆதிரை! வேறு வழி இன்றி ரிஷியின் தொல்லையை தாங்கிக் கொண்டிருக்கிறான் மித்ரன்.

மித்ரனின் கனவு ஸ்பைனல் சர்ஜன் ஆவதுதான். அதற்காக அவன் தன் மேற்படிப்புக்கு தேவையானவற்றையும் கிடைக்கும் இடைவெளியில் செய்வான். ஆனால் அவனைப் பேசியே கடுப்பாக்குவான் ரிஷி. "எங்களை விட்டு வெளியே போய் தொலை!" என்ற வார்த்தைக்காய்.

மித்ரனும் கத்தாத குறை தான். சில சமயம் விரட்டியும் விட்டு விடுவான். நன்றாக ஊர் சுற்றிவிட்டு நடு ஜாமத்துக்கு வருவான். சில சமயம் வரவே மாட்டான். கையில் கட்டுப்பாட்டற்ற பணம்... பின் இன்பங்களுக்கா பஞ்சம் அங்கே? அவனது சொர்க்கம் பெரும்பாலும் மதுவிலும்... சிலசமயம் மாதுவிலும். ஆனால் அதை யாரும் தெரியாதபடி மறைத்து வாழ்வது ரிஷியின் சாமர்த்தியம்.

ஜெனிஃபரின் கதையோ வேறு... காதலித்து மணந்த பெற்றோர் இருவரும், இப்பொழுது பிரிந்து வேறொரு குடும்பத்தோடு இணைந்து விட... தனித்திருக்கும் அவளுக்கு காதல் நோய் பீடித்திருக்கிறது. அன்பு, நேசம், பாசம் என்று விட்டால் உருகும் பெண் அவள்.

இதுவரை மூன்று முறை பிரேக் அப் செய்துவிட்டாள், இவளின் எதிர்பார்ப்பை அவர்கள் பொய்யாக்குவதினால்... அன்னை தந்தை பிரிவினால் பலத்த அடிபட்டவளுக்கு, தன்னுடைய இணை காலம் முழுவதும் வர வேண்டும் என்று ஆசை, அவா, விருப்பம்! ஆனால் விதியோ அவளை சுற்றி விளையாட்டு காட்ட... இதோ இப்போது மூன்றாவது பிரேக்கப்பை முடித்துவிட்டு அந்த சோகத்தில் ஜின்னை டின் டின்னாக உள்ளே தள்ளிவிட்டு, போதை உச்சியில் ஏறி நிலைத்தடுமாறி அவர்கள் வீட்டு கதவை தட்டிக் கொண்டிருந்தாள் ஜெனி.

கதவை திறந்த ஆதி தொப்பென்று தன் மேலே விழுந்த ஜெனியை பார்த்ததுமே புரிந்து போனது.

"அடுத்த பிரேக்கப்பா? உன்னை எல்லாம்!!" என்றவாறு தோழியை அவளது அறையில் படுக்க வைத்து விட்டு ஆறுதலாக சிறிது நேரம் அவள் போதையில் உளறியதை எல்லாம் கையைப் பிடித்த படி கேட்டுக் கொண்டிருந்தாள். இம்மாதிரி பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு தேவை அன்பும் அரவணைப்பும் தான். அதை தேடி தேடித்தான் கானலில் எல்லாம் காதலைத் தேடி களைத்துப் போய் கட்டிலில் போதையில் உளறிக் கொண்டு இருக்கிறாள் ஜெனி.

தோழியின் கதறல் புலம்பல் எல்லாத்தையும் அமைதியாக கேட்டு, அவளுக்கு ஆறுதல் அளித்து, அவள் தூங்கிய பிறகு பெருமூச்சு ஒன்றை விட்டபடி தனது அறைக்கு வந்தாள் ஆதிரை.

இப்பொழுது அவர்களுக்கு எக்ஸாம் போய்க் கொண்டிருக்கிறது. முழுதாக இன்னும் இரண்டு மாதத்தில் அனைத்து தேர்வுகளையும் முடித்துவிட்டு இந்தியா செல்ல வேண்டும். அதுவே அவளுக்கு திகில் அடித்தது.

வீட்டுக்குள் போனால்... பிரம்மாண்டத்தில் அது மாளிகை தான் வீடு என்றெல்லாம் சொல்ல முடியாது. மாளிகை பெருசு தான், அதில் தங்க கூண்டுக்குள் கிளியாக மாறி போவாளே என்று அச்சம். ஆனால் நண்பன் இருக்க கவலை ஏன்? அவன் எப்படியும் மேல் படிப்புக்காக வெளிநாடு தான் வருவான். அவனோடு தொத்திக் கொண்டு வந்து விடலாம் என்று பெரும் கனவு அவளுக்கென்று இருந்தது.

கனவெல்லாம் நனவானால் கடவுள் ஒன்று எதற்கோ? இல்லை அவன் கட்டமைத்து வைத்த கோள்களும் கோட்பாடுகளும் விதிகளும் தான் எதற்கோ?

அனைத்தும் விதிப்படி தான்!!
விதிப்படிதான் பயணம் என்றால் மதி என்பது எதற்கோ? விதியை மதியால் வென்றாலும் சதி செய்யும் கூட்டம் இருக்கையில்... மதி விதியை வெல்லுமா அல்லது சதி இரண்டையும் வெல்லுமா?

அந்த விதி செவ்வனே தன் ஆட்டத்தை ஆரம்பித்தது. அடுத்த வாரத்தில் அவளுடைய பேண்டோடு அவள் வாசித்த பப்பில் அவனும் இருந்தான் அந்த ஜடாமுடி காரன்!!

இன்று ஏதோ நல்ல மூடில் இருந்திருப்பான் போல அனைத்து முடியையும் தூக்கி, உச்சியில் ஒரு கொண்டையிட்டு, கீழே விரித்து விட்டிருந்தான். தொழதொழவென்று
பூ போட்ட கையில்லா பனியன் அணிந்து, அரை பேண்டா முக்கால் பேண்டா என்று கணிக்க முடியாத அளவில் ஒரு பேண்ட். கையில் குட்டி குட்டியான குப்பியில் வீரியமிக்க மது இருக்க... கணக்குவழக்கு இல்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டே அவளது பாடல்களை ரசித்தான் இல்லை இல்லை அப்பாடல்களைப் பாடும் அச்செவ்விதழ்களைத் தான் ரசித்தான்.

இன்று ஆதியோடு ஜெனி மட்டுமே வந்திருந்தாள். முக்கியமான கான்ஃபரன்ஸ் கால் தவிர்க்க முடியாது என்று மித்ரன் பாவமாய் ஆதியை பார்க்க, சிரிப்போடு அட்டென்ட் பண்ணு என்று அவனை துரத்தி விட்டாள். எங்கே மித்ரன் இல்லாமல் ரிஷி மட்டும் கூட வந்தால் ஜொல்லுவிட்டு பப்பை மிதக்க வைப்பானோ என்று பயந்து அவனிடம் கூறாமல் ஜெனியோடு எஸ்கேப்பாகி விட்டாள்.

ஜெனியும் ஆதி கூட வந்திருந்ததால் கொஞ்சமாக உள்ளே இறங்கியது ஓட்கா. பாடலை முடித்து ஆதி இறங்கி வர... ஜெனி அருகில் இருந்தவன், இன்றும் அதே போல, "நைஸ் ப்ளே... யுவர் லிப்ஸ்" என்றான்.

எதே என்று அதிர்ந்து அவள் திரும்ப, அவன் பார்வை அவளிடம்... அவளிடம் மட்டுமே!

அவளின் மூளை அடுக்குகளில் அந்த ஆகுதியான உடம்பும், அமேசான் காடு போன்ற முடியும், டாட்டூ குத்திய புஜங்களும்... புத்தாண்டு அன்று பார்த்தவன் என்பதை அறுதியிட்டு கூற... 'இவன் என்ன விவகாரமாகவே நம்ம கிட்ட பேசுவான் போல?!' என்றபடி அவனை தவிர்த்து ஜெனியிடம் திரும்பியவள், "லெட்ஸ் மூவ் ஜெனி" என்றாள்.

"ஐ வான்னா ப்ளே வித்..." என்று அவள் காதருகே கேட்ட விஸ்கி சாப்பிட்ட ஹஸ்கி வாய்ஸில்
அவள் இதயம் நின்று விட்டது போல் ஓர் உணர்வு.

"என்ன சொல்ல விளைகிறான்? இவன் எதுவும் தப்பர்த்தமா சொல்லி விடுவானோ?" என்று கண்கள் நெருப்பு கோழி முட்டை போல விரிய, அவள் இதழ்கள் மீனை போல பிளக்க அவனை பார்த்தாள்.

"ஹே மிஸ்டர் மைண்ட் யுவர் டங்" என்று இவள் கூறி ஜெனியை எழுப்ப முயல...

"ஹாங்... தட் டூ வான்னா ப்ளே..." என்று கூறி முடிக்கும் முன்
அவளின் இளம் விரல்கள் அவன் கன்னத்தை நோக்கி பாய, அதை அசால்டாக பிடித்தவன், "ஐ ஜஸ்ட் அப்ரீஷியேட் யுவர் சிங்கிங் ஸ்கில்! நாட் யூ பேப்...பட்... இஃப் யூ வான்னா... ஐ அம் ரெடி!" என்று அவள் கையை பின்னால் இறுக்கி பிடித்தப்படி கேட்டவனை கண்டு பேச்சு மூச்சு அற்று போனாள்.

“இன்ட்ரஸ்டெட்??" என்று விஷம புன்னகையுடன் அவன் கேட்க...
அவள் தலை மட்டும் இல்லை என்று அங்கும் இங்கும் அசைய… அவள் வாயில் வார்த்தைகள் இல்லை.

“பட் ஐ அம் இன்ட்ரஸ்ட்!" என்றவன் பிடித்திருந்த அவளது கையை ஒரு சுழட்டு சுழட்டி விட அவள் தட்டு தடுமாறி நிற்கும் முன் அந்த ஜடாமுடி காரனை காணவில்லை. அரை போதையில் இருந்த ஜெனியை எழுப்பி ஒரு வழியாக அவளை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். பௌன்சர்ஸை அழைக்காமல் அவர்களுக்கு தெரியாமல் சென்ற தன் மடத்தனத்தை எண்ணி தனக்குத்தானே நொந்துக் கொண்டாள்.

அவன் பின்னால் இருந்து அணைத்த வாக்கில் நின்றிருந்த போது உடலுக்குள் அதிர்வை உணர்ந்தாள். அவள் வாழ்நாளில் ஒரு நாள் கூட… இந்த மாதிரி நிகழ்ந்தது இல்லை...
அதிர்ந்தது இல்லை... பயந்ததில்லை
எப்பொழுதும் அரணாக மித்ரனோ, ரிஷியோ இருக்க, போதாத குறைக்கு பௌன்சர்ஸூம் இருக்க, யாரும் இவளை நெருங்கவே பயப்படுவார்கள் விஷம எண்ணத்தோடு...

தன் அறைக்குள் வந்தவள் அவன் பின்னின்று அணைத்த அந்த உடை ஏதோ செய்ய அவசரமாக களைந்து விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள். பதினைந்து நிமிடம் சுவற்றில் சாய்ந்து நின்றாள் உதட்டை கடித்தப்படி... ஜில்லென்ற தண்ணீர் தலையில் சீறி பாய்ந்து... அவள் உடல் முழுதும் நனைத்துக் கொண்டிருக்க… வெளியே கதவு தட்டப்படும் சத்தம்.

“வரேன்…” என்றவள், வேக வேகமாக… அரைகுறையாக துவட்டிய படி உடையை மாட்டிக் கொண்டு கதவைத் திறக்க… வெளியே இருந்த டீபாயில் சுட சுட ஆவி பறக்க டீ! சுற்றும் முற்றும் பார்த்தாள், மித்ரனை காண வில்லை. கொண்டை இட்ட தலையை அவிழ்த்து விட்டப்படி… டீயை இதழில் பதித்தாள்.

அவன் கூறிய "வான்னா ப்ளே வித் திஸ்..." என்ற வார்த்தைகள் ரீங்காராமாய் மீண்டும் கேட்க, தொண்டையில் மீண்டும் பய பந்து அடைத்தது.

'அவனது கூரிய பார்வையும், பேச்சும் கொஞ்சமும் சரியில்லை. இனி கொஞ்ச நாள் பேண்டுக்கு லீவ் போட வேண்டியது தான்' என்று முடிவு எடுத்தவள் தேர்வுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டாள்.

அவனும் அவளை நெருங்க ஆயத்தங்களை மேற்கொண்டான்!!

இதழின் இசை பயணம் தொடரும்..
 
It's teaser time....


பேசிக் கொண்டே ஓடியவன் யார் மேலையோ மோத, "நல்ல வேளை ஆம்பள தான்.. இல்லன்னா பிரச்சனை ஆகியிருக்கும்" என்று நினைத்த மித்ரன் மெல்ல நிமிர்ந்து பார்க்க, அங்கே அவனை ஒரு மாதிரியா பார்த்தப்படி நின்றிருந்தான் ஒய்யாரமாக ஒரு ஆடவன்.

நல்ல முறுக்கேறிய உடம்பும், விரிந்து பரந்த மார்பும், திரண்ட புஜங்களும், ஒற்றை காதில் வளையமும் கைகள் கழுத்தில் எல்லாம் டாட்டூக்கள் அள்ளி தெளித்து இருக்க, அத்தனை ஆண்மை மிடுக்கோடு இருந்தான். ஆனாலும் மித்ரனை பார்த்த மாத்திரத்தில் மையல் அவன் கண்களில்!!

"ஹாய் ஹாண்டசெம்.." என்று கை நீட்டவனிடம், தயங்கியப்படி கையை நீட்டிய மித்ரன் அவன் புறங்கையில் இருந்த வித்தியாசமான இரண்டு முக்கோண டாட்டூவை பார்த்தான். ஒன்று மேல் ஒன்று இருக்கும் பிங்க் மற்றும் ப்ளூ கலர் முக்கோணங்கள், அதை விசித்திரமாக பார்த்தவன் கையை விலக்கிக் கொள்ள முற்பட, அவனோ விடாமல் அழுத்தி பிடிக்க, அப்போதுதான் புரிந்தது எதிரில் இருப்பவன் வேற மாதிரி ஆள் என்று.. "ஐயோ மித்ரா.. இன்னைக்கு இப்படியா வந்து இவனுங்கள்ட்ட எல்லாம் மாட்டிக்கனும் நீ?" என்று வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்து விட்டான் மித்ரன்...#############
அந்நேரம் பார்த்து "எக்ஸ்கியூஸ் மீ மிஸ்.. கேன் ஐ ஹெவ் சம் டைம் வித் திஸ் ஹாண்ட்சம்" என்று மித்ரனை இடித்தவன் ஆதியிடம் கேட்க, வாயை பொத்தி சிரிப்பை அடக்கியவள் "உன் லவ்வர் உன்னை கூப்பிடறான்.. நான் எதுக்கு காதலர்களுக்குள் கரடி மாதிரி.." என்று கண்ணடித்து விட்டு, அவனிடம் "வித் ப்ளஷர்.. டேக் யுவர் ஓன் டைம்" என்றவள் சற்று தள்ளி தின்று கொண்டாள்.

தனக்கு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்து கொண்டாள் இவர்களை பார்த்தபடியே.. அந்த இடித்தவன் கையில் எதையோ எடுத்துட்டு வந்து மித்ரன் முன்னால் அதை விரிக்க மித்ரன் புரியாமல் அதை பார்த்தான்.

"இட்ஸ் லெமன் பார்!" என்றான் சிறு வெட்கத்தோடு.. 
இதழ் : 3

பப்பில் வந்தவனை நினைத்தபடியே, ஆதி டீயை சூட்டுடன் இதழில் பதிக்க.. "ஸ்ஸ்ஆ.." என்று மெல்ல கத்தினாள். அவளது மெல்லிய இதழை நன்றாகவே பதம் பார்த்து விட்டது.

"ச்ச.. அவனைப் பார்த்தாலே நமக்கு நேரம் சரியில்ல, டெவில் அதுவும் அமேசான் டெவில்!" என்றபடி ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் சென்று தனது இதழ்களை ஆராயந்தாள். ஏற்கனவே சிவந்த உதடு, சுட்டதினால் இன்னும் அடர் சிவப்பாக இருந்தது.

"உனக்கு அவசரம்.. அவசரம்" என்று தன் தலையில் தானே கூட்டிக்கொண்டு, பின் மெதுவாக ஊதி ஊதி அந்த டீயை குடித்து குளிரை மட்டுமல்ல அந்த ஜடாமுடிக்காரன் நினைவுகளையும் விரட்டி அடித்துக் கொண்டிருந்தாள் ஆதி.

வெளியில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, அவளோ அமைதியாகவே அந்த டீயை பருகிக் கொண்டிருந்தாள் ஆதி. சற்று பொறுத்து கதவை திறந்து கொண்டு வந்தான் மித்ரன். ஆதி அப்பவும் அப்படியேதான் அமர்ந்திருந்தாள். அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. மித்ரன் எப்போதும் அவளின் அறைக்கு வரும்பொழுது கதவை தட்டி விட்டு தான் வருவான். தோழி என்றாலும் பெண் அல்லவா? அவள் ஏதேனும் முக்கிய வேலையாக இருந்தால் மட்டுமே குரல் கொடுப்பாள், மத்தபடி அவள் அமைதியாக இருந்தாலே வரலாம் என்று பொருள்.

குனிந்த வாக்கில் டீயை அறிந்து கொண்டிருந்தவள் முன்னே ஒரு மோடாவை போட்டு இருந்தான் அவன். "சொல்லு மா இன்னைக்கு என்ன பிரச்சனை?" என்றான் தோழியே நான் அறிவேன் உன்னை என்னும் விதமாய் மித்ரன்.

"எனக்கு என்ன பிரச்சனை? எனக்கு ஒன்னும் இல்லையே.." என்றாள் அமைதியாக, ஆனால் அவனின் கண்களை தவிர்த்து..

"பொய் சொல்ல கூட வரல பக்கி உனக்கு.." என்று தன் உள்ளங்கையால் அவளது நெற்றியை ஒரு தட்டு தட்ட, பின்னால் சரியப் போனவள் "லூசு..!" என்றவாறு சமாளித்து அமர்ந்தாள்.

"உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லன்னா… நேரா இந்நேரத்துக்கு கான்செர்ட் முடிச்சிட்டு வந்து எல்லாத்தையும் என்கிட்ட நீ ஒப்பிச்சிட்டு தான் மறு வேலை பார்க்க போயிருப்ப.. இப்படி நேரடியா வந்த உடனே ஷவர்ல போய் நெனச்சிட்டு வர மாட்ட.. உன் உள்ள கொதிப்பை ஏற்றிய அந்த கள்வன் யாரோ?" என்று கையை தொடையில் குற்றி அதில் கன்னத்தை தாங்கிவாறு அவன் சுவாரசியமாக கதை கேட்பது போல அமர்ந்திருந்தான் மித்ரன்.

நண்பனின் தன்னைப் பற்றியே சரியான கணித்தலில் உள்ளுக்குள் அவளுக்கு மகிழ்ச்சி, ஆனால்.. இதே போல் ஏன் ரிஷி இருக்கவில்லை? பாதி நேரம் வீடு தங்குவதே இல்லை. ஊர் சுற்றுகிறான்.. கேட்டால் 'உங்க அளவுக்கு எனக்கு படிப்பதற்கு இல்லை' என்பான். என்னிடம் அவன் சாதாரணமாக பேசும்போது எனக்கு ஏன் ஒரு ஒவ்வாமை ஏற்படுகிறது' என்று மித்ரனிடம் இருந்து ரிஷிக்கு அவள் மனது தாவியது. மனம் ஒரு குரங்கு என்பது உண்மைதான் போல…

"ஓய் மேடம்.." என்று அவள் முன்னால் சொடுக்கு இட்டவன், "விஷயம் என்னானு சொல்லு ஆதி.. நாம ஊரு விட்டு ஊரு இல்ல.. நாடு விட்டு நாடு வந்திருக்கோம். பத்தாக்குறைக்கு நீ வேற பாட்டு கச்சேரினு இராக்கோழி போல சுத்திட்டு இருக்க.. அதுக்கும் இன்னைக்கு நீ பௌன்ஸர்ஸை அழைச்சிட்டு போல.. ஏதாவது எங்காவது தவறாக நடந்துச்சுன்னா அவ்வளவுதான்!! ரெண்டு பேர் அப்பாவையும் பத்தி உனக்கு தெரியும் தானே?? உன் கனவும் காலி என் கனவும் காலி!" என்றவுடன் அவள் கண்களில் அவ்வளவு கலக்கம்.

"டோண்ட் பேனிக் ஆதி.. நீ அமைதியா இருந்தா தான் அடுத்த ரெண்டு வருஷம் பீஜி பண்ண வரும் போது உன்னையும் இங்க கூட்டிட்டு வருவேன். நீயும் உன் பாட்டோட படிப்புனு சந்தோசமா இருக்கலாம். அதுக்கு முதல்ல எது நடந்தாலும் மறக்காமல் என்னிடம் சொல்லவேண்டும்" என்று சொல்லி அவளை பாரத்தவனின் பெரிய விளக்கத்தில் பெருமூச்சு ஒன்றை விட்டவள், குடித்த கப்பை அருகில் இருந்த மேசையில் வைத்து விட்டு அவனை பாவமாக பார்த்தாள்

"அந்த அமேசான் மண்டகாரன் தாண்டா…" என்றாள்.

"எந்த அமேசான் மண்டைக்காரன்?" என்று இவன் புரியாமல் விழிக்க "அதான் மித்து அன்னைக்கு நியூ இயர் பார்ட்டியில ஒருத்தன பார்த்தோம் இல்லையா? முடிய விரிச்சி போட்டுட்டு சீரியல் வில்லகளுக்கு டஃப் கொடுத்தானே ஒருத்தன்.. அவனே தான்! இன்னைக்கு அவன் கொண்டை போட்டுட்டு வந்து உட்கார்ந்து என்கிட்ட வம்பு வளர்த்தான்" முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க கூறினாள்.

நடந்ததை அவள் சொல்லி முடிக்க யோசனையோடு அவளை பார்த்தவன் "அவன் என்னமோ உன்னையே சுத்தி வருவது போல இருக்கு. அது எனக்கு கொஞ்சம் பயமாவே இருக்கு அதி" என்றதும் அவளும் பயத்துடன் அவனை பார்த்தாள்.

"எதையும் இப்பொழுதே நாம் யோசிச்சு கன்ஃப்யூஸ் பண்ணிக்க வேண்டாம் ஆதி.. எக்ஸாம் இன்னும் இரண்டு மாதத்தில் முடியுது. முடிச்சிட்டு ஊரப்பாக்க கிளம்புவோம். அதுக்கு இடையில் எந்த கமிட்மெண்ட்ஸும் நீ வச்சுக்காத…"

சரி என்று மௌனமாக தலையாட்டியவளின் தலையில் கை வைத்து ஒரு ஆட்டு ஆட்டியவன் "எதையும் இதுல போட்டு குழப்பிக்காதே.. எக்ஸாம முடி! பாட்டு எங்கேயும் போகாது.. அப்புறம் பார்க்கலாம்.. ஏன் ஊரில் போய் கூட ஆன்லைன் மூலம் கான்செர்ட் பண்ண ஏற்பாடு பண்றேன்!" என்றதும் அவள் முகம் மலர.. அதன் பின்னே அவனது அபார்ட்மெண்டுக்கு சென்றான் மித்ரன். ஆதி எழுந்து வந்து ஜெனிஃபரை பார்க்க அவளோ அரை போதையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

குடிமகனுக்கு சட்டென்று குடியை நிறுத்தினால் கை கால் எல்லாம் அந்நேரம் குடிக்க செல்.. குடிக்க செல் என்று நடுங்குவதுபோல ஆதிக்கும் வார இறுதி நாட்களில் பாட செல்ல.. கை கால்கள் எல்லாம் துருதுருக்க, கடின பாட்டு அதனை அடக்கி வேற வழியில் மனதை செலுத்துவாள்.

இவ்வாறு முயன்று முதல் வாரம் கடத்தி விட்டாள். ஆனால் அடுத்த வாரமும் அவளால் முடியவே இல்லை. மித்ரன் பாவமாக தன் முன் அமர்ந்தவளை பார்த்து "சரி.. எங்கையாவது வெளியில் ட்ரிப் போகலாம்" என்று அவளை அழைத்துச் சென்றான். வழக்கம் போல கூடவே ரிஷி ஜெனி, இம்முறை ஜெனியின் தற்போதைய காதலன் ஹென்றி அவனின் இரு நண்பர்கள் என்று எழுவர் கூட்டம் சென்றது.

ஹென்றியும் அவனது இரு நண்பர்களும் கூட நீண்ட தலைமுடி தாடியுடன் தான் இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உடனே அழைக்காமல் அமேசான் முடிக்காரன் ஆதியின் அமிழ்ந்து போன நினைவு அடுக்குகளில் இருந்து மேல எழும்பி வந்தான்.

அவனையே நினைத்துக் கொண்டிருந்தாலோ என்னவோ ஆங்காங்கே அவனைப் போன்ற உருவம், போகிற வழிகளில் எல்லாம் இவள் கண்களில் பட்டது. "உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு ஆதி!" என்று தலையை உலுக்கி கொண்டாள்.

மித்ரன் ரிஷி ஆதி ஒரு குழுவாகவும் ஜெனிபர் தன் காதலன் ஹென்றியுடனும், ஹென்றியின் இரு நண்பர்கள் தனியாகவும் என்று குழுகுழுவாக சுற்றிக் கொண்டு இருந்தார்கள்.

இடைப்பட்ட இடைவெளியில் எல்லாம் ஜெனியும் ஹென்றியும் தங்கள் காதல் பசியை தின்று தீர்த்து கொண்டிருந்தார்கள் இதழ்களாலும் இணைப்புகளாலும், பார்க்க பார்க்க ஜெனி மீது சற்றே கடுப்பு வந்தது ஆதிக்கு.

முதல் முறை அவர்கள் இருவரும் தங்கள் காதலை முத்தத்தின் மூலம் படித்துக் கொண்டிருக்கும் போது இது இந்நாட்டில் அவர்களுக்கு வழக்கம் என்று கடந்து சென்றாள் ஆதி. ஆனால் ஒவ்வொரு முறையும் அதுவும் அருகில் அவர்கள் இருக்கும் போதே.. காதலர்கள் தங்கள் லீலைகளை தொடர, கொஞ்சம் அருவருத்து தான் போனது ஆதிக்கு.

இதைவிட அவர்களைக் கண்டு ரிஷியும் இவளை ஒரு மார்க்கமாகவே பார்த்துக் கொண்டே உரசி உரசி நின்றான். இவள் பயந்து வெளிறி மித்ரனை இடையில் நிறுத்திக் கொண்டாள்.

முதலில் புரியாமல் பார்த்த மித்ரனுக்கும் ரிஷியின் கண்களில் கண்ட மயக்கமும், தோழியின் ஒதுக்கமும் புரிந்து போக.. "அய்யோ இது என்னடா எனக்கு வந்த சோதனை? இதுகளுக்கு நடுவுல மாட்டிக்கிட்டேனே?" என்று அலறினான்.

'என்ன இருந்தாலும் நாளை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்கள்' என்று அவர்களுக்கு தனிமை விட்டு இவன் விலகினாலும் ஆதி பயந்து அவனை பிடித்து வைத்துக் கொண்டாள். இவன் கண்களாலே ரிஷியிடம் மன்னிப்பு கேட்க.. அவனும் மித்ரனை வெட்டவா குத்தவா என்று பார்த்தான்.

அன்றி இரவு அவர்கள் அங்கே ஒரு ரெஷாட்டில் தங்குவதாக ஏற்பாடு. மறுநாள் காலையில் இன்னும் சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மதியத்திற்கு மேல் தங்கள் அப்பார்ட்மெண்டுக்கு திரும்புவதாக திட்டம் வகுக்கப்பட்டது.

ஆதலால் ஆதியும் ஜெனியும் ஒரு அறையிலும், ஹென்றியும் அவன் நண்பர்களும் மற்றொரு அறையிலும் வழக்கம் போல ரிஷியும் மித்ரனும் ஒரு அறையிலும் இருந்தார்கள்.

"முதல்ல ஊருக்கு போன உடனே கல்யாணத்தை பண்ணும்டா.. இப்படி கைக்கு பக்கத்துல அவள வச்சுக்கிட்டு.. அதுவும் வெளிநாட்டில் இருந்து ஒரு சின்ன டச்சிங் கூட பண்ண முடியல" என்று மித்ரன் காதில் ரத்தம் வர வர புலம்பி தீர்த்தான் ரிஷி.

தலையணையை ஆதியாக பாவித்து அவன் அடித்த அலப்பறையிலும் காதல் மீறிய மோக பித்துக்களிலும் பதறி போன மித்ரன், "டேய் நாதாரி.. நாறச்சிடிடாத டா.. பாத்ரூம் போய் தொல" என்று தலைத்தெறிக்க ஓடினான் ரெஸ்டாரன்ட்டை நோக்கி.. போகும் போதே ஆதிக்கு அழைத்து ரெஸ்டாரண்ட் வரச் சொன்னான்.

பேசிக் கொண்டே ஓடியவன் யார் மேலையோ மோத, "நல்ல வேளை ஆம்பள தான்.. இல்லன்னா பிரச்சனை ஆகியிருக்கும்" என்று நினைத்த மித்ரன் மெல்ல நிமிர்ந்து பார்க்க, அங்கே அவனை ஒரு மாதிரியா பார்த்தப்படி நின்றிருந்தான் ஒய்யாரமாக ஒரு ஆடவன்.

நல்ல முறுக்கேறிய உடம்பும், விரிந்து பரந்த மார்பும், திரண்ட புஜங்களும், ஒற்றை காதில் வளையமும் கைகள் கழுத்தில் எல்லாம் டாட்டூக்கள் அள்ளி தெளித்து இருக்க, அத்தனை ஆண்மை மிடுக்கோடு இருந்தான். ஆனாலும் மித்ரனை பார்த்த மாத்திரத்தில் மையல் அவன் கண்களில்!!

"ஹாய் ஹாண்டசெம்.." என்று கை நீட்டவனிடம், தயங்கியப்படி கையை நீட்டிய மித்ரன் அவன் புறங்கையில் இருந்த வித்தியாசமான இரண்டு முக்கோண டாட்டூவை பார்த்தான். ஒன்று மேல் ஒன்று இருக்கும் பிங்க் மற்றும் ப்ளூ கலர் முக்கோணங்கள், அதை விசித்திரமாக பார்த்தவன் கையை விலக்கிக் கொள்ள முற்பட, அவனோ விடாமல் அழுத்தி பிடிக்க, அப்போதுதான் புரிந்தது எதிரில் இருப்பவன் வேற மாதிரி ஆள் என்று.. "ஐயோ மித்ரா.. இன்னைக்கு இப்படியா வந்து இவனுங்கள்ட்ட எல்லாம் மாட்டிக்கனும் நீ?" என்று வெடுக்கென்று கையை இழுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்து விட்டான் மித்ரன்.

தனியாக அமர்ந்திருந்த ஆதியின் முன் மூச்சி இறைக்க நின்றான் மித்ரன். அவனை பார்த்து என்னவென்று கேட்டவளிடம், ரூமில் நடந்தது முதல் எதிரில் எதிர்பட்டவனின் நடவடிக்கைகள் என்று அனைத்தையும் கூற, விழுந்து விழுந்து சிரித்தாள் ஆதி.

"ஓஹ் நோ.. மித்து… அய்யோ முடியல டா.. பாவம் டா நீ!" என்று ஒவ்வொரு வார்த்தைக்கு இடையிலும் அவ்வளவு சிறப்பு பெண்ணிடத்தில். காலையில் இருந்து ஏதோ ஒரு சுணக்கமாக இருந்தவளின் முகத்தில், இத்தனை மகிழ்ச்சியை பார்த்தவனுக்கும் சற்று நிம்மதியாக இருந்தாலும், தன்னை கலாய்த்து சிரிப்பவளை பார்த்து கடுப்பானவன் "போதும்..போதும்! ரொம்ப சிரிக்காத வாய் சுளிக்கிக்க போகுது" என்று கடிந்து வைத்தான்.

அந்நேரம் பார்த்து "எக்ஸ்கியூஸ் மீ மிஸ்.. கேன் ஐ ஹெவ் சம் டைம் வித் திஸ் ஹாண்ட்சம்" என்று மித்ரனை இடித்தவன் ஆதியிடம் கேட்க, வாயை பொத்தி சிரிப்பை அடக்கியவள் "உன் லவ்வர் உன்னை கூப்பிடறான்.. நான் எதுக்கு காதலர்களுக்குள் கரடி மாதிரி.." என்று கண்ணடித்து விட்டு, அவனிடம் "வித் ப்ளஷர்.. டேக் யுவர் ஓன் டைம்" என்றவள் சற்று தள்ளி தின்று கொண்டாள்.

தனக்கு ஒரு கூல் ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்து கொண்டாள் இவர்களை பார்த்தபடியே.. அந்த இடித்தவன் கையில் எதையோ எடுத்துட்டு வந்து மித்ரன் முன்னால் அதை விரிக்க மித்ரன் புரியாமல் அதை பார்த்தான்.

"இட்ஸ் லெமன் பார்!" என்றான் சிறு வெட்கத்தோடு..

யுனைடேட் ஸ்டேட்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் எல்லாம் இருப்பால் ஈர்ப்பு உள்ளவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் கோட்வேடாக இந்த லெமன் பார் என்ற சாண்ட்விச் உபயோகப்படுத்தப்படுகிறது. அதனை அந்த மனிதன் குறிப்பால் உணர்த்த.. புரியாது விழித்து தவித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

அப்போது கூல்ட்ரிங்ஸ் கொண்டு வந்து சர்வரிடம் அந்த சாண்ட்விச்சை காட்டி "என்ன அது?" என்று ஆதி விளக்கம் கேட்க.. அவனும் அதை பார்த்து நமட்டு சிரிப்போடு அதனை பற்றி விளக்கம் கொடுத்தான். பார்த்துக் கொண்டிருந்த ஆதிக்கு இன்னும் சிரிப்பு பீறிட்டது.

அப்போது "எக்ஸ்கியூஸ் மீ!" என்றவனின் குரலில் இவள் திடுக்கிட்டு திரும்ப.. அவளை நோக்கி தான் ஆழ்ந்த பார்வையோடு வந்துக் கொண்டிருந்தான் அந்த ஜடாமுடிக்காரன் மிஷ்ரா!!

அவனின் பரந்து விரிந்த மாநிற மார்பிள் வெள்ளை டீஷர்ட், முட்டி வரை அரை பேண்ட்.. முடியை மேல் குடுமி போட்டு, கீழே விரித்து விட்டுருந்தான்.

அவன் ஆதியை நெருங்க நெருங்க, அவளின் விழிகள் அகண்டு விரிந்தது. அவளின் பின்பக்கம் சுவற்றில் தடுக்க, இதழில் பதித்த கோப்பை எடுக்க மறந்தாள். கூல்ட்ரீங்க்ஸ் கோப்பையில் அவளின் மூச்சு காற்று புஸ் புஸ் என்று பாய, அதுவும் தகித்தது அவளை போல..

தொடரும் இசையின் பயணம்…
 
Last edited:
It's teaser time... 2

ஆதியின் கை முடிகள் கூட பயத்தில் சிலிர்த்து இருக்க, மிஷ்ராவின் எதிரே சுவற்றில் சாய்ந்தப்படி சிலையென சமைந்திருந்தாள். மிஷ்ரா பார்வையால் அவள் உடலைத் துளைத்தெடுக்க, அவள் நின்றபடி தவியாய் தவித்தாள், தப்பித்து போக முடியாமல்..


“டேய்… ஏன் டா இப்படி பார்த்து தொலையுற? போடா அந்த பக்கம்!" என்று அவளின் ஆழ் மனது பட படக்க, ஆதியை நெருங்கிய மிஷ்ரா அவளின் கன்னத்தில் சுருண்டு விழுந்த கூந்தலை தன் விரலால் விலக்க, அவன் தீண்டலில் உடல் அருவுருக்க.. முகத்தை திருப்பி கொண்டாள். "டோண்ட் டச்.. மிஸ்டர்!"

"மிஸ்டர்.. நோ..! மிஷ்ரா.." என்றான் கரகரத்த குரலில்..

அவளின் இரு கைகளுக்கிடையே இருந்த கோப்பையை மிஷ்ரா மெதுவாக பறிக்க..அவளோ சட்டென்று தர மறுத்தாள்.

ஆதியின் இதழ்கள் முழுவதும் ஜூஸில் நனைந்து செவ்விதழ்கள் மிளிரியது. அவள் பயத்தில் எச்சில் முழுங்க, அவள் தொண்டைக் குழி சுருங்கி விரிந்தது.

மிஷ்ரா அவளின் இதழை நெருங்க, அவனின் சூடான மூச்சுக் காற்று அவள் முகத்தில் படர, அவளின் சிவந்த முகம் மேலும் சிவக்க, ஆதியின் உதடுகள் நடுங்க ஆரம்பித்தது.

அவளல நெருங்கியவன் இன்னும் நடக்கும் விரல்களில் பிடித்திருந்த அவரது குளிர்பானத்தை வாங்கி அருகில் வைத்தான், அவளோ கோபத்தோடு முறைத்தாள்.

"வெரி சாரி பேப்.. இட்ஸ் மைன்" என்று கூற, எதை சொல்கிறான் என்று புரியாமல் வெறுத்தவளிடம் கண்களால் அவளுடைய குளிர்பானத்தை காட்டிவிட்டு இது என்னுடையது என்று சொல்லிவிட்டு அகன்றான் அவன்


"அச்சோ.. மானம் போச்சு குமாரு!" என்றபடி தலையில் கை வைத்த படி நின்றிருந்தாள் ஆதி‌.
 
It's teaser time .. 3


இன்னும் ரெஸ்டாரன்ட் திறக்கவில்லையே.. சரி ஒரு ரவுண்ட் போவோம்.. சிறிது நேரம் நடக்கலாம் என்று அங்கிருந்து மரங்கள் பக்கம் நடக்கத் தொடங்கினாள். அந்த ரெஷார்ட் ஒரு காடு என்று சொல்ல முடியாத ஹைவே பாதையில் தான் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் மரங்களாக இருந்த போதிலும் அதையே அங்க அங்கே திருத்தி இருக்கைகளாகவும் மேசைகளாகவும் இன்னும் அழகுறவும் மாற்றி அமைத்திருந்தாலும், முழுதாக எதையும் வெட்டாமல் வைத்த நிர்வாகத்தை பாராட்டிப்படியே மெல்ல நடந்து சென்றவள், கண்கள் பார்த்ததை நம்ப முடியாமல் விழி விரித்து நின்றாள் இதயம் துடிக்க நின்றாள்.

செவிப்பறவை கிழிந்து விடும் அளவுக்கு மனம் கூப்பாடு போட.. தான் கண்டது கனவா என்று மீண்டும் மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டு பார்த்தவளுக்கு, நிதர்சனம் நெற்றியில் அறைய.. அந்தக் குளிரிலும் அவளுக்கு வியர்வை வழிய தொடங்கியது.

மெல்ல கிட்டே நடந்தவள் க்ளே குனிந்து உற்றுப் பார்த்தாள் ஆம் அவள் கண்டது பொய்யல்ல என்று உண்மை புரிய.. இதயமும் இரு மடங்கு அல்ல இருநூறு மடங்கு அதிகமாக துடிக்க.. தன் கையை உடம்போடு இறுக்க பற்றி கொண்டு நடுங்கும் மேனியுடன் நின்றவள் முன் ஒரு கொடூரம் சம்பவம் நடந்தேறிந்ததை அம்பலப்படுத்தியது அங்கிருந்த சடலம்!!
 
இதழ்: 4


மிஷ்ரா மெதுவாக காலடி எடுத்து வைத்தான் ஆதிரையை நோக்கி... முதலில் மித்ரனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ஏதோ உள்ளுணர்வு தோன்ற... முகத்தை மட்டும் திருப்பி பார்க்க... தன்னை நோக்கி அழுத்தமான நடையில் வரும் அந்த ஜடாமுடிக்காரனை கண்டு திக் என்று ஆனது ஆதிரைக்கு.

மிஷ்ராவின் பரந்து விரிந்த மாநிற மார்பை வெள்ளை டீஷர்ட் கவ்வி பிடித்திருக்க... அதன் மீது உலா வரும் அவன் தாடியும்... கழுத்தில் இருக்கும் மாலைகளும்... ஏதோ சாமியாரை போல தோன்றினாலும் அவன் கண்கள் நான் சம்சாரி ஆவது உறுதி என்று தொணி!

அவன் ஆதிரையை நெருங்க நெருங்க, அவளின் விழிகள் அகண்டு விரிந்தது. அவளின் பின்புறம் சுவற்றில் நசுங்க, இதழில் பதித்த ஜூஸ் கப்பை எடுக்க மறந்தாள். கோப்பைக்குள் அவளின் மூச்சு காற்று புஸ் புஸ் என்று பாய, நுரைகள் சிதறி ஓட... அதுவும் அவளை போல தகித்தது. பயந்தது!

ஆதிரையின் கை முடிகள் கூட பயத்தில் சிலிர்த்து இருக்க, மிஷ்ராவின் எதிரே சுவற்றில் சாய்ந்தப்படி சிலையென சமைந்திருந்தாள். மிஷ்ரா பார்வையால் அவள் உடலைத் துளைத்தெடுக்க, அவள் நின்றபடி தவியாய் தவித்தாள், தப்பித்து போக முடியாமல்...


“டேய்… ஏன் டா இப்படி பார்த்து தொலையுற? போடா அந்த பக்கம்!" என்று அவளின் ஆழ் மனது பட படக்க, ஆதிரையை நெருங்கிய மிஷ்ரா அவளின் கன்னத்தில் சுருண்டு விழுந்த கூந்தலை தன் விரலால் விலக்க, அவன் தீண்டலில் உடல் அருவருக்க... முகத்தை திருப்பிக் கொண்டாள். "டோண்ட் டச்... மிஸ்டர்!"

"மிஸ்டர்... நோ..! மிஷ்ரா..." என்றான் கரகரத்த குரலில்...

அவளின் இரு கைகளுக்கிடையே இருந்த கோப்பையை மிஷ்ரா மெதுவாக பறிக்க... அவளோ சட்டென்று தர மறுத்தாள்.

ஆதிரையின் இதழ்கள் முழுவதும் ஜூஸில் நனைந்து செவ்விதழ்கள் மிளிரியது. அவள் பயத்தில் எச்சில் முழுங்க, அவள் தொண்டைக் குழி சுருங்கி விரிந்தது.

மிஷ்ரா அவளின் இதழை நெருங்க, அவனின் சூடான மூச்சுக் காற்று அவள் முகத்தில் படர, அவளின் சிவந்த முகம் மேலும் சிவக்க, ஆதிரையின் உதடுகள் நடுங்க ஆரம்பித்தது.

அவளை நெருங்கியவன் இன்னும் நடுங்கும் விரல்களில் பிடித்திருந்த அவளது குளிர்பானத்தை வாங்கி அருகில் வைத்தான், அவளோ கோபத்தோடு முறைத்தாள்.

"வெரி சாரி பேப்... இட்ஸ் மைன்" என்று கூற, எதை சொல்கிறான் என்று புரியாமல் வெறித்தவளிடம் கண்களால் அவளுடைய குளிர்பானத்தை காட்டிவிட்டு இது என்னுடையது என்று சொல்லிவிட்டு அகன்றான் அவன்.

"அச்சோ.. மானம் போச்சு குமாரு!" என்றபடி தலையில் கை வைத்த படி நின்றிருந்தாள் ஆதி‌ரை.

அப்புறம் தான் நினைவு வந்தவளாய் எங்கே மித்ரன் என்று பார்க்க... அவனை அங்கு டேபிளில் காணவில்லை. "ஒரு வழியா தப்பிச்சிட்டான் போல..." என்று சிரித்துக் கொண்டே அவள் நிற்கையில்... மிஷ்ரா சற்று தள்ளி நின்று அவள் குடித்த கோப்பையில் மீதமிருந்த ஜூஸை வெகு நிதானமாக குடித்துக் கொண்டிருந்தான். அதுவும் அவள் இதழ் வைத்த அந்த இடத்தில் இதழ்கள் வைத்து...

அவளுக்கோ ஒரு மாதிரியாக.. 'முதல்ல இங்கிருந்து ரூமுக்கு சென்று விடுவோம்' என்று அவள் நகர முனையும் நேரத்தில்...
"ஆதி" என்றபடி அவளை நெருங்கினான், அவளது வீக் எண்ட் பேண்ட் குழுவில் இருக்கும் ஒருவன்.
அவன் வில்லியம்.

"ஹாய்..!" என்று அவளும் கூற...

"என்ன தனியா வந்திருக்க? எப்பொழுதும் உன் பிரண்ட்ஸ் கூட தான் வருவ... எங்கே காணும் உன் பார்டிகார்ட்ஸ்?" என்று கேலியாக வினவ...

"ஜஸ்ட் நாங்க ஒரு அவுட்டிங் வந்தோம். அவங்க ரூம்ல இருக்காங்க..." என்றபடி அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, "ஆதி, இங்கே ஒரு பார்ட்டி! நான் அவங்க கூட ஜாயின் பண்ணியிருக்கேன். இங்கு மியூசிக் ப்ரோக்ராம் அரேஞ்ச் பண்ணி இருக்காங்க. நீ ஏன் வந்து பாட கூடாது?" என்று கேட்கவும்... அவளுக்கு 'பாடினால் தான் என்ன?' என்று எண்ணம் தோன்றியது.

மனதும் வெகு நாளைக்கு பிறகு பாடலை பாட ஆயத்தமாக 'எங்கே போனான் இந்த மித்ரன்? அவனிடம் சொல்லிவிட்டு செய்வோமே?' என்றபடி அவனுக்கு அழைக்க... ரிங் முதலில் போய்க்கொண்டிருந்ததே தவிர எடுக்க காணும் என்று சலித்துக் கொண்டவள், 'சரி... ஒரே ஒரு பாட்டு மட்டும் பாடிட்டு வந்து விடுவோம்' என்று நினைத்து அவனிடம் சரி என்று கூட சென்றாள்.

வெறும் பாட்டு மட்டுமல்லாமல் இசைகளின் ஃப்யூஷன் என்று இடை இடையே அதுவும் நடத்த... மூன்றாவதாக தான் அவளுக்கு வாய்ப்பு கிடைத்தது. வில்லியம் அவ்வளவு சொன்ன பிறகு அவளை பாட விட்டார்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு பிடித்திருந்தாள் மைக்கை... சற்று நேரம் அந்த நேரத்தை ஆழ்ந்து அனுபவித்தவள், பின்பு அவளுக்கு தெரிந்த வித்தைகளை அள்ளிவிட அரங்கமே குதூகலத்தில் நிறைந்தது.

ஒரு பாட்டுடன் முடித்துவிட்டு வந்து விடுவேன் என்று கறாராக வில்லியமிடம் சொல்லியேச் சென்றவள், அடுத்தடுத்து என்று இரண்டு மூன்று பாட்டுகள் பாடிவிட்டாள். பிறகு தான் இன்னும் இருட்டி நேரம் ஆகிவிட்டது என்பதை புரிந்தவள், "ஓகே நான் கிளம்புறேன்!" என்று அவள் முடித்துக் கொள்ள, அவன் இவ்வளவு தூரம் வந்து பாடி கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி என்று அவளுக்கு விடை கொடுத்தான்.

அதோடு மட்டுமின்றி அக்குழுவினரிடம் கூறிவிட்டு, "என்னால்தான் உனக்கு இவ்வளவு லேட்... நான் உன் கூட வருகிறேன்" என்று அறை வரை வந்து விட்டு தான் போனான். அவனுக்கும் தெரியும் பௌன்சர்கள் அல்லது இவளது நண்பர்கள் இல்லாது இவள் தனியே எங்கும் வரமாட்டாள், இன்று தனக்காக வந்தவளின் பாதுகாப்பை தானே பார்த்து அறை வரை விட்டுட்டு வந்தான். ஏற்கனவே நள்ளிரவு தாண்டிய நேரம் ஆதலால்…

அறை கதவு பார்க்க சரியாக மூடாமல் திறந்துதான் இருந்தது. "என்ன இப்படி திறந்து வைத்துவிட்டு எங்கே போய்விட்டா இவ? ஜெனி... ஜெனி..." என்று அவளை அழைத்தப்படி உள்ளே வந்தவள், விளக்கை போட்டு பார்க்க, அறைக்குள் ஜெனி இல்லை.


"எங்க போனா? லவ்வர் கூட போய்ட்டாளா?" என்று படுத்துக் கொண்டே ஜெனிஃபர்க்கு அழைக்க அவளது கால் போகவே இல்லை. "எங்க போன இவ? ஃபோன் போகலையே?" என்று அவளை திட்டிக்கொண்டு மித்ரனுக்கு அழைக்க... அவன் நம்பரும் செல்லவில்லை.

"இரண்டு பக்கியும் எங்க போச்சுனு தெரியலையே?" என்று கடைசியாக அவள் ரிஷிக்கு அழைக்க... அவனோ உறக்கத்தின் பிடியில் இருந்திருப்பான் போல, தூக்க கலக்கத்தில் "ம்ம்ம்... ம்ம்..." என்று வெறும் உம் போட...

"உனக்கு ஃபோன் போட்டேன் பாரு! போடா தண்ணி வண்டி... எங்கே தண்ணி அடிச்சிட்டு கவுந்து கிடக்குறானோ!" என்று அவனையும் திட்டி விட்டே இவள் படுக்க ஆயத்தமானாள்.

இவ்வளவு நாட்களாக ஒரே வீட்டில் தனி தனி அறையில் இருந்தாலும் அடுத்த அறையில் தான் ஜெனி இருக்கிறாள் என்ற எண்ணம் அவளுக்கு ஒரு தைரியத்தை கொடுத்திருந்தது‌ கூடவே கூப்பிடும் தூரத்தில் மித்ரனும் ரிஷியும் இருக்கிறார்கள் என்பதும் கூட தைரியம்.

இவர்களுக்கான பௌன்ஸர்கள் வெளியில் இருந்து வருபவர்கள். அதுவும் முக்கியமாக இவர்கள் வெளியில் செல்ல வேண்டும் என்றால்தான்... மற்றபடி வீட்டிலும் கல்லூரிக்குச் செல்லும் போதெல்லாம் அவர்கள் வருவதில்லை. மேலும் விரும்பத்தக்காத செயல் எதுவும் இவளுக்கு இதுவரை நடந்ததில்லை. எப்போதும் ஒரு பெரும் பாதுகாப்புடன் இருந்தவளுக்கு இன்று ஏதோ ஒரு ரிசார்ட்டில் இப்படி தனியாக தூங்குவது ஒரு சிறு கலக்கத்தை மனதில் விதைத்தது.

அந்த விதையானது மெல்ல மெல்ல முளைவிட்டு... இலை விட்டு‌ வளர்ந்து... கிளை பரப்ப... அதற்கு மேல் அவளால் தூங்க முடியாமல் போனது.

ஃபோனை எடுக்காத மித்ரனையும் ஜெனிஃபரையும் வாய் வலிக்கும் மட்டும் திட்டிக் கொண்டே இருந்தாள். "மீண்டும் ஒருமுறை ரிஷிக்கு அழைப்போம்... தூக்கத்தில் உளறினாலும் அவன் இருக்கிறான் என்ற பாதுகாப்பு இருக்குமே!" என்று அவனுக்கு கால் செய்ய இம்முறை அவனும் ஃபோனை கட் செய்தான்.

"தூக்கத்தில் இருக்கிறானா? போதையில் இருக்கிறானா? தெரியலையே! இப்படி நம்மள தனியா புலம்ப விட்டுட்டு மூணு பக்கிகளும் போய் சேர்ந்திருச்சு!"
என்று தவித்தாள்.

சரி இருக்கும் இடத்தில் டிவியாவது பார்ப்போம் என்று போட்டால்... ஒன்று மிட் நைட் மசாலாவாக போட்டு இவளை கண், காது மட்டுமல்லாமல் உடம்பையே கூச வைத்தனர். அப்படி இல்லாவிட்டால் டெரர், திரில்லர் என்று மற்றொரு பக்கம் தனியாய் இருக்கும் இவளை அலற விட்டனர்.

டிவியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று அதையும் ஆப் செய்துவிட்டு மொபைலை நோண்டலாம் என்றால் அடுத்த வார்த்தை 'இரண்டு மணிக்கு மேல் யார் இருக்கப் போகிறார்கள்? வீட்டுக்கும் போன் செய்ய முடியாது!' என்று நொந்தவள் ஃபோனையும் அணைத்து தூக்கிப்போட்டு விட்டு 'ரூமுக்குளேயே உலாத்துவோம் தூக்கம் வரும் வரை' என்று கால் கடுக்க கடுக்க நடந்தவளுக்கு ஒரு கட்டத்தில் தூக்கம் கண்ணை சுழற்ற, "ஆ வந்துருச்சு...வந்துருச்சு... தூக்கம் வந்துருச்சு! அப்படியே கவுந்து படுத்து டி கட்டதுரை" என்று போர்வைக்குள் ஒளிந்து தூக்கத்தை தொடர்ந்தாள்.

அவளின் ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் இன்றோடு தொலைவது தெரியாமல்...

இரவில் நேரத்தோடு தூங்கவில்லை என்றாலும் காலையில் அதிகாலையில் இல்லை என்றால் காலையிலேயே எழுந்து விடும் பழக்கம் உடையவள் ஆதிரை. இன்றும் ஏதோ ஒரு அசௌகரியமான உணர்வோடு புதிதான இடமும் சேர்ந்துக் கொள்ள முழுமையான தூக்கம் இல்லாவிட்டாலும் ஆறு மணி போலவே எழுந்துக் கொண்டாள்.

இன்னும் சரியாக விடிந்திடாத நிலையில் தனது ஓவர் கோட்டை போட்டுக் கொண்டு அப்பொழுதுதான் பனி பொழிய காத்திருக்கும் இளங்காலை நேரத்தில் வெளியே வந்தாள் ஆதிரை.

கொஞ்சம் இருள் கொஞ்சம் வெளிச்சம் என்று பிரித்தறிய முடியாத அந்த காலை நேரத்தில் குளிர் அடிக்க... கைகளை தேய்த்துக்கொண்டு தனது பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டவள், ரெஸ்டாரன்ட் போய் ஒரு டீ சாப்பிட்டா பரவாயில்லை என்றபடி மெல்ல நடக்க... நேற்று இரவு கொண்டாட்டத்தின் மிச்சமாய் ஆங்காங்கே குப்பைகளை தூர்வாறிக் கொண்டிருந்தார்கள் துப்புரவாளர்கள்...


இன்னும் ரெஸ்டாரன்ட் திறக்கவில்லையே... சரி ஒரு ரவுண்ட் போவோம்... சிறிது நேரம் நடக்கலாம் என்று அங்கிருந்து மரங்கள் பக்கம் நடக்கத் தொடங்கினாள். அந்த ரெஸார்ட் ஒரு காடு என்று சொல்ல முடியாத ஹைவே பாதையில் தான் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் மரங்களாக இருந்த போதிலும் அதையே அங்கே அங்கே திருத்தி இருக்கைகளாகவும் மேசைகளாகவும் இன்னும் அழகுறவும் மாற்றி அமைத்திருந்ததாலும், முழுதாக எதையும் வெட்டாமல் வைத்த நிர்வாகத்தை பாராட்டியப்படியே மெல்ல நடந்துச் சென்றவள், கண்கள் பார்த்ததை நம்ப முடியாமல் விழி விரித்து நின்றாள் இதயம் துடிக்க நின்றாள்.

செவிப்பறவை கிழிந்து விடும் அளவுக்கு மனம் கூப்பாடு போட... தான் கண்டது கனவா என்று மீண்டும் மீண்டும் கண்களை துடைத்துக் கொண்டு பார்த்தவளுக்கு, நிதர்சனம் நெற்றியில் அறைய... அந்தக் குளிரிலும் அவளுக்கு வியர்வை வழிய தொடங்கியது.

மெல்ல கிட்டே நடந்தவள் கீழே குனிந்து உற்றுப் பார்த்தாள் ஆம் அவள் கண்டது பொய்யல்ல என்று உண்மை புரிய... இதயமும் இரு மடங்கு அல்ல இருநூறு மடங்கு அதிகமாக துடிக்க... தன் கையை உடம்போடு இறுக்க பற்றிக் கொண்டு நடுங்கும் மேனியுடன் நின்றவள் முன் ஒரு கொடூரம் சம்பவம் நடந்தேறி இருந்ததை அம்பலப்படுத்தியது அங்கிருந்த சடலம்!!

மை இருட்டு வேளை அகலாத அந்த இளம் காலை பொழுதில் கண்கள் கிறுகிறுத்து போக... மெல்ல குனிந்து தன் முன்னால் கிடந்தவளை பார்த்தாள் ஆதிரை மனம் கனக்க, ஆம் அது ஜெனிஃபர் தான்!!

மரணிக்கும் தருவாயில் ஏற்படும் திகில் அவள் மனதை கவ்வ... கீழே எந்தவித அசைவும் இன்றி உடலில் ஒரு பிட்டுத் துணியும் இன்றி நிர்வாணமாய் நிதாரவாய் கிடந்த ஜெனிஃபரின் உடல் அவளுக்கு அவ்வளவு மரண பயத்தை தான் கொடுத்திருந்தது.

பெரும் அகோர அரக்கனிடம் சிக்கி சீரழிந்தது போல அவளது உடலில் காணப்பட்ட காயங்களும், உறைந்து இருந்த ரத்தங்களும், கன்னி கருத்து போயிருந்த காயங்களும்... அவள் அனுபவித்த வலியையும் கொடூரத்தையும் எடுத்துக் கூற... பெரும் திகிலில் இருந்தவளின் கண்களில் இருந்து கரகரவென்று கண்ணீர் வழிந்து இறங்கியது.

மருத்துவரான அவள் பலவித உடல்களை அட்டாப்ஸி செய்யும் போது பார்த்திருக்கிறாள் தான்... ஏன் இவளே செய்திருக்கிறாள் தான். ஆனால் இவ்வளவு கொடூரத்தோடு தன் தோழியை பார்த்த மாத்திரத்தில்... அவளே அந்த கொடூரத்தை அனுபவித்தது போல உடல் சில்லிட... அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றவளின் தோளை ஒரு முரட்டு கை தொட... திடுக்கிட்டு திரும்பிவள், தொட்டவனை திரும்பி பார்த்தவள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள், அவன் கரங்களில்...


இசையின் பயணம் தொடரும்…
 
Last edited:
Status
Not open for further replies.
Top