வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இசைக்கும் இதழழகே... கதை திரி

Status
Not open for further replies.
இதழ்.. 14

இளம் கன்று பயம் அறியாது என்பார்கள்! அது பயமறியாமல் அங்குமிங்கும் அலைந்து பின் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்வதுண்டு. அவ்வண்ணமே இளமைத் துடிப்புள்ள இளையோர் தாங்கள் செய்யும் காரியத்தின் நன்மை தீமை அல்லது பின்விளைவுகள் பற்றி எண்ணிப் பாராமல் அதில் துணிவுடன் இறங்கிவிடுகிறார்கள். செய்யலாமா கூடாதா என்று ஆராய்ந்து பார்க்க இளமை அவர்களை விடாது...

இளமை... அந்த யௌவனப் பருவம் வரமும் சாபமும் கலந்தது! வரத்தை எடுத்து வாழ்வில் நல்ல நிலைமையையும் அடையலாம்... அல்லது சாபமாய் தீய குணங்களை பெற்றுக்கொண்டு சகதியில் உழன்று வீணாகவும் போகலாம்!!
ஆக இந்த இளமை பொல்லா பருவம். கண்ணாடி பாத்திரம் போல நம்மை நாமே பார்த்து கையாள வேண்டியது அவசியம்.

சிறு சறுக்கல் கூட வாழ்வின் போக்கை மாற்றிவிடும். ஏனென்றால் சிறு பொறிபோதும் மொத்த காடும் பற்றிக்கொள்ள... இளமையும் அதற்கு விதிவிலக்கல்ல...

இப்போது ஆதிரையும் அதே நிலைமையில் தான். அவன் வர சொல்லிவிட்டான் செல்ல வேண்டுமா வேண்டாமா என்பது அவளது கையில்... ஆனால் இளமை சுவாரசியத்தில் 'அப்படி என்னதான் நடக்கும் பார்த்து விடுவோமே!' என்று அது கொடுக்கும் குருட்டு தைரியத்தில் வீட்டில் பொய்யுரைத்து விட்டு கிளம்பி விட்டாள்.

"ஆதி... இன்னிக்கு ஒரு செமினார் ஒன்னு இருக்கு. நம்ம ஜென்ரல் சர்ஜன் டாக்டர் அனந்தராமன் தான் தரார். நீயும் வந்து ஜாயின் பண்ணிக்கோ‌. நைட் பத்து மணிக்கு ஸ்டார்ட்... மினிமம் ஒரு டூ ஹவர்ஸ் போகலாம்" என்றான் மித்ரன் மதியம் உணவு முடித்து வழக்கம் போல லைப்ரரியில் ரெபர் செய்துக் கொண்டிருக்கும் போது.

மதியம் உண்ட இவளோ தொண்டனுக்கே மயக்கம் உண்டு எனக்கு இருக்காதா என்ற ரீதியில் புத்தகத்திற்குள் தலையை புதைத்துக் கொண்டு நெருப்புக்கோழியாய் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
அவன் சொன்னதெல்லாம் எங்கே காதில் விழுந்தது?

"ஆதி... ஆதி... உன்னைத்தான் கேட்கிறேன், சொல்லி தொலையேன் டி! வாயில என்ன கொழுக்கட்டையா வச்சி இருக்க?" என்று கடுப்போடு கேட்டான் மித்ரன்.

"கொழுக்கட்டையா?? ஐயையோ!!! ஏற்கனவே எனக்கு மதியம் தின்னதே வயிறு ஃபுல்லா இருக்கு. இன்னும் ஏதாவது சாப்பாடோ ஸ்னாக்ஸோ ஒரு வாய் உள்ள போச்சு அது கூட வேண்டாம் ஒரு வாய் தண்ணீர் உள்ள போனா கூட வயிறு வெடிச்சிடும்டா" என்று அவனை பாவமாக பார்க்க "நான் என்ன சொன்னேன்... நீ என்னடி பதில் பேசுற?" என்று அவளை முறைத்தான்.

"டேய் நீ ஒருத்தனா என்னை பேசினாலே எனக்கு காதெல்லாம் வலிக்கும் டா. இப்ப ரெண்டு பேரா தெரியுற டா... அப்போ யோசி என் நிலைமையை" என்று அவள் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு சொல்ல பக்கு என்று சிரித்து விட்டான் மித்ரன்.

"உன்னோட முடியலடி! கொழுக்கட்டை திங்க சொல்லல பக்கி... கொழுக்கட்டை வாயில வச்சிருக்கியா? நான் கேட்டதுக்கு பதில் சொல்லுனு சொன்னேன்" என்றான் மிதரன்.

"ஆமா மித்து... நீ என்ன கேட்ட?" என்று மீண்டும் எல்லா கோட்டையும் அழித்துவிட்டு புதிதாக கோடு போட அவள் முயற்சிக்க, "ஒன்னும் இல்ல ராசாத்தி... ஒண்ணுமே இல்ல! நீ ரெஃபர் பண்ணிட்டு இல்லயில்ல இங்கேயும் தூங்கிட்டு வீட்டுக்கு போயும் படுத்து தூங்கு. நல்லா வருவ" என்றான் அலுப்புடன் மித்ரன்.

"இப்பதான் டா காதுக்குள்ள குளுகுளுனு இருக்கு" என்று சிரித்தாள்.
மீண்டும் நெருப்புக் கோழியாய் புத்தகத்துக்குள் முகத்தை புதைத்துக் கொள்ள, "இதெல்லாம் திருந்தாத கேஸ்! ஒரு டாக்டர் சீட்ட வேஸ்ட் பண்ணிட்டேன். இவங்க அப்பாவும் இவ டாக்டர்னு நம்பி பணத்தை செலவு செஞ்சுட்டார். இதெல்லாம் டாக்டருக்கு வொர்த்தான பீஸே கிடையாது. எல்லாம் என்னை சொல்லணும் இவ ப்ரண்ட் ஆனதுக்கு. இல்லை இல்லை எல்கேஜில எங்களை பக்கத்து பக்கத்துல உட்கார வச்சாங்க பாரு ரோஸி மிஸ்... அந்த மிஸ்ஸ சொல்லணும்! அவங்க மட்டும் என்னை அப்படி இவ கூட உட்கார வைக்கலனா இந்த பக்கி கூட எல்லாம் நான் பிரண்ட்ஷிப் வச்சிருப்பேனா?" என்று புலம்பிக் கொண்டு எக்ஸாமுக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தான் மித்ரன்.

"ரொம்ப புகழாதே மச்சி! எனக்கு தூக்கம் தூக்கமா வருது" என்றவள் அவனைப் பார்த்து சிரிக்க... இதுக்கு மேல் இவள் அருகில் அமர்ந்திருந்தால் கொஞ்சம் கொஞ்சம் படித்ததும் மறந்து போகும் என்று புத்தகத்தோடு எழுந்து இவளை விட்டு எவ்வளவு தூரம் தள்ளிச் செல்ல முடியுமோ... தள்ளி அமர்ந்துக் கொண்டான்.

"அப்பாடா போய்ட்டான். எவ்வளோ பிட்டு போட வேண்டியது இருக்கு இவனை துரத்துவதற்கு. இனிமே எதுக்கு தொறந்து வச்சிட்டு தூங்கணும். புக்க மூடி வைச்சிட்டு தூங்கலாம்" என்று புத்தகத்தை மூடி வைத்தவள் அதன் மேலேயே கை தாங்கியவாறு உறக்கம் கொண்டாள்.

சிறிது நேரத்தில் அவள் முன் தொப்பென்று சத்தம் கேட்க... நிமிர்ந்து பார்த்தால் மித்ரன் தான் நின்றிருந்தான். இவள் ஓரமாக வலிந்த ஜொள்ளுவை புறங்கையால் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்து சிரிக்க, "இன்னைக்கு உனக்கு டியூட்டி இல்லையா? காலையிலிருந்து இப்படி சுத்திக்கிட்டு இருக்க?"

"இல்லடா இன்னைக்கு நைட் டியூட்டி" என்றவளை அவன் யோசனையாக பார்க்க "நைட் டியூட்டியா?" என்று சந்தேகமாக கேட்டான்.

"ஆமாண்டா அந்த ஆக்சிடென்ட் கேஸ் இருக்கு இல்லையா? அவங்கள தான் பார்த்துக்க போறேன்" என்று ஏதேதோ சொல்லி அவனை சமாளித்தாள்.

"ஏதோ பண்ணி தொலை... ஆக மொத்தத்தில் இன்னைக்கும் செமினாருக்கு நீ டிமிக்கி கொடுத்துட்ட" என்று அவளை திட்டிக் கொண்டே அவனுக்கு இன்று போடப்பட்டிருந்த குழந்தைகள் பிரிவை நோக்கிச் சென்று விட்டான் மித்ரன்.

"எப்படியோ இவனையும் சமாளிச்சாச்சு!" என்றவள் வீட்டிலும் அதே பொய்யை சொல்ல அன்னை மாதவி சரி என்று சொன்னார். ஆனால் அவளுக்கு பின் பிறந்த இரட்டையர்களான ஆதன்யா, ஆர்யா இருவரும் அவளை நம்பாமல் பார்த்தனர்‌. அதிலும் அவளது தங்கை ஆதன்யா, "அக்கா டி... நிஜமா சொல்லு அம்மாவை ஏமாத்திட்டு பப்புக்கு பாடத்தானே போற?" என்று கேட்டாள்.

"என்னடா சென்னை வந்து இவ்வளவு நாளாச்சே... இன்னமும் நீ உன் சுருட்டிய வாலை நிமிர்த்தி விட்டு பாட்டு பாட போகலையேனு நினைச்சேன்... இந்தா கிளம்பிட்ட இல்ல" என்று தம்பி மறுபடியும் கேள்வி கேட்க, "அட போங்கடா! பாட்ட மறந்து போய் பாடாப்படுறேன்" என்று நொந்துக் கொண்டாள் அவள்.

"எனக்கு எங்கடா டைம் இருக்கு? நான் உண்டு... என் டியூட்டி உண்டு… எக்ஸாமுக்கு பிரபேர் பண்றதுனு எவ்வளவு நல்ல புள்ளையா இருக்கேன். தெரியுமா? பாட்டெல்லாம் விட்டுட்டேன் டா டிவின்ஸ்களா…" என்று சோகமாக ஆதிரை பேச... அவள் சொன்னதை நம்பாமல் இருவரும் அவளை ஆராய, "உங்களுக்கு டவுட்டுனா மித்துக்கு போன் பண்ணி கேளுங்க டெவில்ஸ்!" என்றாள்.

"யாரு மித்து அண்ணனா? அவர் என்னைக்கு உன்னை விட்டு கொடுத்து பேசி இருக்கார். திருடனுக்கு போலீஸ் கூட்டுங்குற மாதிரி நீ பண்ற எல்லா திருட்டுத்தனத்துக்கும் உனக்கு கூட்டா இருக்கிறதே அந்த அண்ணா தான்" என்றாள் ஆது.

"கரெக்ட் டி ஆது!" என்று தன் இரட்டைக்கு ஹைஃபை கொடுத்துக் கொண்டான் ஆர்யா.

"நீங்களும் தானடா கிரைம் பார்ட்னர்ஸ்... உனக்கு இவ இருக்கா தானே அதே போல தான் எனக்கு மித்துவும்" என்றாள் ஆதிரை கர்வமாக….

"ஆனா... அக்கா டி... இந்த விஷயம் எல்லாம் ரிஷி மாமாவுக்கு தெரியுமா?" என்று ஆது கேட்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு விக்க... திரும்பி தங்கையை முறைத்தாள்.

"அவர் தானே அக்கா டி... உன் அவர்ர்ர்!" என்று ஆர்யா கண்ணடிக்க,
"வொய் டா வொய்? தெய்வங்களா... நீங்க கேட்ட மாதிரி இந்த வீக் மித்து கை காலில் விழுந்தாவது சம்மதிக்க வைத்து உங்களை மாலுக்கு கூட்டிட்டு போறேன். நீங்க சொன்ன படத்தையும் பார்க்கலாம்" என்று அவள் கையெடுத்து கும்பிட இரட்டையர் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணடித்துக் கொண்டார்கள்.

"இவங்க என்ன நம்ம விட பயங்கர க்ரைம் பார்ட்னர்ஸா இருக்காங்க டா மித்து" என்று புலம்பிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவள் வழக்கமாக தன் உடையோடு கோட் சகிதம் மிஷ்ரா சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

அந்த ரெசார்ட் ஏதோ விழா கோலம் போல தான் இருந்தது. இதில் காரை விட்டு இறங்காமலேயே யோசனையோடு மிஷ்ராவுக்கு அழைக்க... சடாரென்று யாரோ கார் கதவை திறக்க பயந்தவள் அருகே அமர்ந்தவன், "என்ன டிரஸ் இது? பார்ட்டிக்கு தானே வர சொன்னேன் நான். அதுக்கு இப்படியா வருவ?" என்றான் துஷ்யந்த்.

"பார்ட்டிக்கு என்ன கெஸ்ட்டா வா இன்வைட் பண்ணி இருக்கீங்க? பர்சனல் டாக்டரா தானே இன்வைட் பண்ணி இருந்தீங்க... எல்லாம் பர்சனல் டாக்டருக்கு இந்த டிரஸ் போதும்! வேணும்னா கோட் வச்சிருக்கேன் அதையும் எடுத்து மாட்டிக்கவா? கூடவே ஸ்டெத் எடுத்து என் கழுத்தில் மாட்டிக்கிட்டா பக்கா பர்சனல் டாக்டரா இருப்பேன்" என்றாள் சற்று சத்தமாக கோவப்பட்டு இருப்பானோ என்று ஓர கண்ணால் அவனை பார்க்க அவனோ ஒரு கையால் சிகையை கோதியவன் தலையை மட்டும் திருப்பி அவளை பார்க்க... அத்தனை கவர்ச்சியாக இருந்தது அவனின் அந்த போஸ்.

தலையை உலுக்கிக் கொண்டாள் ஆதிரை. "இவன் என்ன திடீர்னு நம்ம கண்ணுக்கு அழகா தெரியிறான்? நோ நோ அவன் சேர்மன் நம்ம அந்த ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ற டாக்டர்! அவன் பேஷன்ட் நாம பர்சனல் டாக்டர்! இதுதான் அவனுக்கும் நமக்கும் உள்ள ரிலேஷன்ஷிப்... அதை தாண்டி போகக்கூடாது எந்த ஷிப்பும் உள்ள போக கூடாது ஆதி" என்று தனக்கு தானே எச்சரித்துக் கொண்டவளை தான் அவன் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

"சரி இறங்கு போகலாம்" என்றவனின் வேக நடைக்கு ஈடு கொடுக்க சற்று இவளும் வேகமாக ஓடினாள் அவன் பின்னால்… "அவ்வளவு பெரிய பார்ட்டியா சார்? இவ்வளவு அழகா டெக்கரேட் எல்லாம் பண்ணி இருக்காங்க?" என்று கேட்டாள்.

அவளுக்கு பதில் சொல்ல நின்றவன் முதுகில் அவள் மோதி நிற்க... இருவருக்கும் இனிமையான ஒரு அதிர்வலை... அவளின் முன் மேனி அவனின் முதுகில் அழுத்தமாய் மோதியதில்!

மிஷ்ரா அதனிலிருந்து உடனே தன்னை மீட்டுக் கொண்டவன், "இங்கே நமக்கு மட்டும் இல்லை... வேறு ஏதோ பார்ட்டி ஆர் கெட் டூ கெதர் நடப்பது போல இருக்கு. எங்களுக்கு பிசினஸ் பார்ட்டி! அதுக்கு இந்த மாதிரி டெக்கரேஷன் எல்லாம் கொடுக்க மாட்டாங்க. அது ரொம்ப டீசன்ட்டா இருக்கும்... ப்ரொஃபஷ்னலா..." என்று அவளுக்கு விளக்கியவன், அங்கே குடில் குடிலாக இருந்த நிறைய அறைகள் ஒன்றின் முன்னால் நின்றான்.

அவள் கையில் ஒரு பையை கொடுத்தவன் "உள்ளே போய் சீக்கிரம் மாத்திட்டு வா. 15 மினிட்ஸ் தான் உனக்கு டைம்" என்றான் தன் கையில் கட்டி இருந்த உயர் ரக வாட்சை சுட்டிக் காட்டி.

"நான் தான் சொன்னேனே பர்சனல் டாக்டர்…" என்ற ஆதிரையின் உதடுகளில் அழுத்தமாக தனது விரலை வைத்தவன், "டாக்டர் மட்டும் கிடையாது. அங்க வந்தா வேற ஒரு சர்ப்ரைஸை பார்ப்ப" என்றதும் இவளுக்கு உள்ளுக்குள் கிடு கிடு என்று ஆடியது.

"டைம் இஸ் ரன்னிங் பேப்... 15 மினிட்ஸ்க்குள்ள நீ வரலைனா நான் உள்ள வர வேண்டி இருக்கும்" என்றதும் அதில் அதிர்ந்து இரண்டு அடி பின்னால் நடக்க "ஜஸ்ட் உனக்கு ஹெல்ப் பண்ண தான் மா" என்றான் அப்பாவியாக, ஆனால் கண்களோ விஷமத்தில் துள்ளி குதித்தது.

அவன் சொன்னது போல கதவை அடைத்து விட்டு இருக்கும் அந்த பாட்டில் க்ரீன் ஃபுல் பார்ட்டி கவுனை பார்த்தவள், இந்த ஜடாமுடி ரசனைக்காரன் தான் என்று பாராட்டு பத்திரத்தை வழங்கிவிட்டு அந்த உடையை அணிந்தவள் தலைமுடியை தூக்கி பன்கொண்டையாக போட்டு… ஆங்காங்கே சில முடி கற்றைகளை தொங்கவிட்டு… மெல்லிய மேக்கப் போடு வெளியில் வந்தவளை ரசனை பொங்க பார்த்தவன் "கம் பேப்..." கை பிடித்து பார்ட்டி நடக்கும் ஹாலுக்கு அழைத்துச் சென்றான்.

மிகச் சொற்பம் என்று சொல்ல முடியாத அளவு 50 பேருக்குள் தான் இருந்தனர். பெண்களும் அதில் அடக்கம்.

ஹேண்ட்ஃப்ரி மைக்கில் பேச ஆரம்பித்தவன், "ஹாய் பிரண்ட்ஸ் வெல்கம்... இன்னைக்கு உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ்! என்ன சர்ப்ரைஸ்னா… இவங்க தான்..." என்று அவளை ஆழ்ந்து பார்க்க ஆதிரைக்கோ உடம்பெல்லாம் ரயில் பெட்டி போல தடதடவென்று தடத்தடத்தது.

'என்ன சொல்ல போகிறான்?' என்று ஒரு பக்கம் ஆர்வமும் மறுபக்கம் எதுவும் வம்பாக சொல்லி விடாதே என்று கெஞ்சவும் செய்தது மனது.

"இவங்க மிஸ் ஆதிரை சண்முகம் வேல்ராஜன் பிரபல இண்டஸ்ட்ரியலிஸ்ட் சண்முகவேல் ராஜனின் டாட்டர் அண்ட் டாக்டர் ஆல்சோ… அது மட்டுமல்ல…" என்று நிறுத்தி அவள் அருகே சென்றதும் இன்னும் வெடவெடத்து போனாள் ஆதிரை.

'இங்கே வந்திருப்பவர்கள் எல்லாம் பிசினஸ்மேன்கள் கண்டிப்பாக அப்பாவிற்கு தெரிந்தவர்களும் இருப்பார்கள். இதை முன்னாலே யோசிக்காமல் போயிட்டோமே ஆதி? இப்ப மாட்டிக்கிட்டியே? வேலனுக்கு இந்த விஷயம் தெரிஞ்சது அவ்வளவுதான்.. சூரசம்ஹாரம் தான்!' என்று அவள் கண்களை மூடி "ஆண்டவா..! வேலவா..! காப்பாத்து" என்று பிரார்த்தனை செய்துக் கொண்டிருக்க... அடுத்து அவன் சொன்ன வார்த்தையில் விழியில் அகல அவனைத் தான் அதிர்ந்து பார்த்தாள் ஆதிரை!!

அப்படி என்ன சொல்லி இருப்பான் துஷ்யந்த் மிஷ்ரா?
 
இதழ்… 15


"இன்ட்ரஸ்ட்ரியலிஸ்ட் சண்முகவேல் ராஜன் டாட்டர் ஆல்சோ டாக்டர்…" என்றவன் அவளைப் பார்த்துக் கொண்டே "அது மட்டுமல்ல…" என்று இன்னும் அவளை நெருங்கி நின்றான்.

ரோலர் கோஸ்டில் மெது மெதுவாக பயணித்து உயரத்தில் நிற்பது போல உடலும் மனமும் தட தடத்தது ஆதிரைக்கு. எப்போது இதில் தள்ளிவிடுவானோ என்று பயம் பிறக்க, அந்த ஏசி குளிரூட்டப்பட்ட ஹாலிலும் அவளுக்கு வியர்த்து வழிந்தது உதட்டின் மீதும் மூக்கின் மீதும்…

அவள் இந்த எஸ்ஆர் குழுமத்தில் பணிக்கு வந்து ஒரு பத்து நாள் இருக்கும். அதுக்குள்ள ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம் அவளுக்கு திகலூட்டியது என்றால் அதற்கு காரணம் மிஷ்ரா அல்லாது வேறு யார்?

துஷ்யந்த் மிஷ்ரா பேசிக்கொண்டே இருக்க வழக்கம் போல அவளுடைய மைண்ட் வாய்ஸ் "நாம இப்ப பார்ட்டியில் தானே இருக்கோம்... ஆனா நமக்கு ஏன் ரோலர் கோஸ்ட்ல போற மாதிரியே பீலா இருக்கு?" வடிவேலு போல டயலாக்கை எல்லோரையும் பார்த்து இழுத்து வைத்த புன்னகையோடு தனக்கு தானே பேசிக் கொண்டு யாரும் அறியாமல் வலது கையால் ஆல் இஸ் வெல் ஆதி என்று இடது கைக்கு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.

அவள் உதட்டின் மேல் இருந்த வியர்வை துளிகள் அவன் கழுகு கண்ணில் இருந்து கொஞ்சம் கூட தப்பவே இல்லை. அவளை பார்த்தபடி இன்னும் சற்று நெருங்கி நிற்க... கூட்டமும் அவர்களை தான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. "அது மட்டுமல்ல… ஷி இஸ் மை…" என்று இழுத்து ஒரு நிமிடம் நிறுத்தி அவளை பார்த்து ஒற்றை கண்ணடித்தவன் "மை பர்சனல் டாக்டர்!!" என்று புன்னகைடன் கூற அதற்கு அந்த அரங்கில் கரவொலியும் "வாவ்... சூப்பர்" என்ற சத்தமும் எழும்பி அவ்வறையை நிறைத்தது.

"எதுக்கு இந்த எல்லா கோட் சூட் அங்கிள்ஸூம் இப்போ ஆவுன்னு கத்துறாங்க? பர்சனல் டாக்டர்னு சொன்னது அத்தனை கேலிக்கூத்தா இருக்கிறதா இவங்களுக்கு? இருக்கும் இருக்கும்" என்று இவர்களை திட்டிக் கொண்டவள், அவன் சொன்ன விதத்தையும் அதை அவர்கள் புரிந்துக் கொண்ட விதத்தையும் ஆராயவில்லை. இவள் ஒருவிதமான பதட்டத்தில் இருந்ததால்…

'பரவால்ல வேற ஏதும் சொல்லாம பர்சனல் டாக்டர்னு சொல்லி என்னை காப்பாத்திட்டான். நல்லா இருடா.. நல்லா இருடா ஜடாமுடி' என்று இவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

"இன்னியோட சர்ப்ரைஸ் இன்னும் குறையவில்லை மை ஃபிரண்ட்ஸ்!! என் பர்சனல் டாக்டர் ஆள் மட்டும் அழகு இல்ல... ரொம்ப அழகா பாடுவாங்க. உடனே பாட்டுனா நீங்க கர்நாட்டிக் கசல்... ரொம்ப போர் அப்படியானு பார்க்காதீங்க... இவங்க வெஸ்டர்ன் ஆரம்பிச்சு அதை ஃபோக்கா மாத்தி அதுக்குள்ள கிளாசிக்கையும் கசலையும் கலந்து ஒரு சுழட்டு சுழட்டி அடிப்பாங்க... பாருங்க! ரியலி மெஸ்மரைஸிங் தெரியுமா? கனடாவில் ஷி இஸ் பேமஸ் சிங்கர்" என்றதும் இப்பொழுது ஆச்சரியத்துடன் அவளை பார்த்தார்கள். ஒரு பெண்ணுக்குள் தான் எத்தனை பரிமாணம் என்று வியந்து.

"இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? பெண் என்றாலே பல பரிமாணங்களை உள்ளடக்கியவள் தானே!! குழந்தையாய்... சகோதரியாய்... தாயாய் தமக்கையாய்... தங்கையாய்... மனைவியாய் அன்னையாய்... மருமகளாய்... மாமியாராய் என்று அத்தனை பரிமாணங்களிலும் அத்தனை நிறைவையும் செய்பவள் பெண் ஒருத்தி!!" என்று அவள் தன் கருத்தை தயக்கமின்றி கூறினாள்.

"எஸ்... எஸ்… கரெக்ட்…" என்று பல குரல்கள் ஆமோதித்தன.

"நீங்க பேசறதே பாடுறது போல தான் இருக்கு மிஸ்... சோ ஸ்வீட்!" என்று ஒருவன் கூற, அவனை மட்டும் தனியாக படம் பிடித்து வைத்துக் கொண்டது மிஷ்ராவின் கண்கள்.

"தாங்க் யூ" என்று நேரடி புகழ்ச்சியில் கொஞ்சம் தயங்கி தயங்கி அவளை அறியாமலேயே மிஷ்ராவின் அருகில் நின்றாள் ஆதிரை.

ஆதிரையின் இந்த செயல் மிஷ்ராவின் மனதில் பெரும் நிறைவை ஏற்படுத்த இதுதான் சாக்கு என்று அவளை பின்புறமாக இடையோடு அணைத்தான். பார்ப்பதற்கு ஏதோ கேஷுவல் அணைப்பு போல இருந்தாலும் அது அவ்வாறு இல்லை என்பதை அவன் அழுத்தமான பிடி உணர்த்தியது ஆதிரைக்கு.

யாரும் அறியாமல் மெல்ல அவனது கைகளை சிரித்த முகத்தோடு எடுத்து விட, அவனும் ஒரு தோள் குலுக்கலோடு தள்ளி நின்றுக் கொண்டான்.

அதன்பின் இவளுக்கு மைக் கொடுக்க... வெகு நாள் கழித்து மைக்கை பிடிக்கிறாள். மெல்ல அதை தடவினாள். வெகு நாள் பிரிந்திருந்த நண்பனை பார்க்கும்போது ஏற்படுமே ஒரு பரவசம்… திடீரென்று காதலன் நம் முன்னால் வந்து ஒரு இன்ப அதிர்ச்சியை தரும்போது ஏற்படுமே ஒரு இன்ப நிலை... அது போல தான் இருந்தாள் ஆதிரை.

பாட்டு அவளோடு ஒன்றி பிணைந்த ஒன்று. ஏனோ சண்முகவேல் ராஜனுக்கு பிடிக்காது என்பதால் தன் பாடகி அவதாரத்தை தன் அறைக்குள்ளையே சுருக்கிக் கொண்ட பெண், அதற்கான நேரம் கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொண்டாள்.

ஆனால் ஜெனியின் மறைவுக்குப் பிறகு ஏனோ அவளுக்கு பாடலே பிடிக்கவில்லை. இன்று சிறு கூட்டமே என்றாலும் அவர்கள் முன்னிலையில் தன்னை இத்தனை அழகாக அறிமுகப்படுத்தி பாட அழைக்கும் போது சிறு தயக்கத்துடன் ஒத்துக் கொண்டாள் ஆதிரை.

சிறு தயக்கத்துடனே பாட ஆரம்பித்தவள் பின்பு அதில் லயத்து விருப்பத்துடன் பாட ஆரம்பித்தாள்.

ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு தான் கலைஞர்களின் உற்சாகம் உத்வேகம்.

அங்கு வந்தவர்களும் இவ்வளவு நாள் இருக்கும் அந்த தொழில்துறை டென்ஷன் ஸ்ட்ரெஸ் அழுத்தம் அனைத்தையும் மறந்து அவள் பாட்டை ஆரவாரத்துடன் ரசிக்க ஆரம்பிக்க… இவளும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மீட்டெடுத்து பழைய ஆதிரையாய் பாடி கலக்கிக் கொண்டிருந்தாள்.

அவளின் முகத்தில் தெரிந்த அந்த தேஜஸ், கண்கள் மின்ன பாடும் அந்த இதழ்கள் என்று மீண்டும் ஒரு ரசிகனாய் அதே ஜடாமுடிகாரனாய் இருக்கையில் அமர்ந்து அவளைத்தான் விழுங்கிக் கொண்டிருந்தது மிஷ்ராவின் கூரிய கண்கள்.

இவள் பாட்டு முடிந்ததும் அத்தனை ஆரவாரம் அங்கே... வெகு மாதங்கள் கழித்து மகிழ்ச்சி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள் ஆதிரை!

அடுத்தது டிஜே மெல்லிய இசையை ஒலிபரப்ப... அனைவரும் அவளிடம் தங்கள் பாராட்டை வாழ்த்தை தெரிவிக்க, முகம் கொள்ளா புன்னகையோடு அனைத்தையும் ஏற்றுக் கொண்டவளின் கண்கள் அவ்வப்போது மிஷ்ராவை தழுவி தழுவிச் சென்றது.

அந்த மெல்லிய வெஸ்டர்ன் இசையில் அங்கிருந்தவர்கள் தங்கள் இணைகளோடு மெல்ல ஆடினர். சிங்கிளாக வந்தவர்கள் சிலர் தங்களுக்குள் மிங்கிளாக, மற்றவர்கள் அவர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினர். மெல்லிய ஒளியில் துணையோடு ஆடுபவர்களை மென் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தவள் காதில் "ஷல் வீ?" என்று மிஷ்ராவின் குரல் ஒலிக்க... கூடவே அவனின் அருகாமை அவளுள் ஏதோ செய்ய... தன்னை மீறி விசை ஆட்டுவிக்கும் பாவையாய் அவன் நீட்டிய கரத்தில் தன் கரத்தினை ஆதிரை வைத்தாள்.

அவள் கண்களை பார்த்துக் கொண்டே அவளது கரத்தினை அழுத்தமாக பற்றிக் கொண்டவன் அங்கு ஆடுபவர்களோடு இணைந்துக் கொண்டான். கவிஞர்கள் உரைப்பது போல பொய்யோ என்ற இடையாள் அல்ல அவள்… ஆனாலும் அந்த இடையினை மென்மையாக பற்றிக் கொண்டு அவளை இழுத்து அணைத்து சுழற்றி என்று அவன் ஆட… புதியவன் இல்லை தான் ஆனாலும் ஆதிரையின் மனதுக்குள் புது விதமான உணர்வுக் குவியல் இதுவரை இல்லாத ஒருவித சலனம் அவள் மனதில்!

அவனின் இடைவெளியற்ற நெருக்கம்... அவன் கைகள் அவள் உடலில் பேசும் மெல்லிய பரிபாஷைகள்... அவன் உடல் உணர்த்தும் உஷ்ணம்… அவன் கண்கள் பேசும் புரியாத பாஷைகள்... அவன் இதழ்கள் அவள் இதழ்களில் கவி பாட துடிக்கும் துடிப்பு... இவை அனைத்தும் ஆதிரையின் இளமை ஹார்மோன்களோடு கொஞ்சம் நன்றாகவே விளையாடின...

இந்த புது வித உணர்வில் கட்டுண்டு கிடந்தவளின் காதருகே துஷ்யந்த் மிஷ்ராவின் இதழ்கள் சில ரகசியங்கள் பேச… செங்காந்தளாய் சிவந்தாள் ஆதிரை. அவனின் இதழ்கள் இப்போது சற்றே உரிமையாய் தாராளமாய் அவள் காதில் இசைத்துக் கொண்டிருந்தது. அதன் ஒலி வடிவம் அவளுக்கு புரியவில்லை. அவள் தான் தனி லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாளே... பின் எப்படி அவன் சொன்னவை காதில் விழும்?
இப்போது கொஞ்சம் காதிலிருந்து முன்னேறி கன்னத்தை அவ்வப்போது தீண்டி தீண்டிச் சென்றது மிஷ்ராவின் இதழ்கள். ஆதிரையின் செப்பு இதழ்களை கொத்தி தின்னும் நேரத்திற்காய் கொக்கென காத்திருந்தன மிஷ்ராவின் இதழ்கள்!!

அவன் இதழ்களின் இசைப்பில் அவள் உடலில் மெல்லிய தாளம்.
அவன் உடலின் நெருக்கத்தில்
அவள் மனதில் மெல்லிய மோனம்.
அவனும் அவளுமாய் தனியொரு உலகில்... அவனையும் அவளையும் மறந்து தனித்திருந்த வேளையில்... அவளின் இதழ்களை நெருங்கியது மிஷ்ராவின் இதழ்கள். அவன் கண்கள் சொன்ன செய்தியில் அகல விரிந்தது அவளின் கயல் கண்கள். அவள் பின்னங்கழுத்தில் சற்றே அழுத்தம் கொடுத்த அவனின் கரங்கள்... அவளை முன்னோக்கி தள்ள... இதழ்களின் சங்கமம் அழகாய்! மொட்டு விரிந்த பூவைப் போல பாவையும் கண்களை மூடி... மலர்ந்து நின்றாள் துஷ்யந்தின் சகுந்தலையாக..

எவ்வளவு நேரம் நீடித்ததோ இதழ்களின் சங்கமம்… அதற்குள் டிஜேவின் பாட்டு முடிந்து ஓ என்ற பெரும் சத்தத்திற்கு இடையில் இருவரும் சட்டென்று விலகினர். ஒருவித கூச்சத்தோடு மிஷ்ராவின் பின்னே மறைந்துக் கொண்டாள் ஆதிரை வெட்கத்தோடு அழகாக... துஷ்யன் தனு தன் சகுந்தலையின் வெட்கத்தில் கர்வத்தோடு புன்னகைத்தவன் மெல்ல தலையை திருப்பி அவளை பார்த்தான்.

"போலாம் போலாம்... இதுக்கு மேல இங்க நின்னா எனக்கு என்னவோ போல் இருக்கும் சார்... ப்ளீஸ் போலாம்" என்று அவன் முதுகை ஆள்காட்டி விரலால் சுரண்டியப்படி அவள் சொல்லிக் கொண்டிருந்தாள். இந்த அழகு பொம்மையை அதுவும் சிணுங்கலோடு கொஞ்சலாக பேசும் இந்த அழகு பொம்மையை அப்பொழுது ஆட்கொள்ள வேண்டும் என்று உணர்வு பிடிக்குள் தத்தளித்தான் துஷ்யந்த் மிஷ்ரா.

"ம்ம், போகலாம்... ஆனா... இவங்களுக்கு எல்லாம் என்னனு பதில் சொல்லிட்டு போக பேப்?" என்று இடது கையால் நெற்றியை நீவிக் கொண்டு மெல்லிய குரலில் அவளிடம் கேட்டான்.

"ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ்... ஆனா இவங்க எல்லாம் நம்மள பாக்குறத பார்க்கவே எனக்கு ரொம்ப கூச்சமா இருக்கு" என்று மீண்டும் அவனை நெருங்கி நின்றுக் கொண்டாள்.

பெண்மையின் இந்த மென்மையும் அவளின் நெருக்கமும் அவனை அடுத்த அடி எடுத்து வைக்க சொல்லி அவனை ஆட்டி வைத்தது அவன் உணர்வுகள். பின் கழுத்தை தடவியப்படி அவளை மையலாக பார்த்தவன் பின் திரும்பிக் கொண்டான். மெல்ல மற்றவர்களை பார்க்க இப்பொழுது கூட்டம் கொஞ்சம் கலைந்து சாப்பாட்டை நோக்கி திரும்பியது.

"எப்படியும் வெறும் வயிற்றோடு போக முடியாது. சாப்பிட்டு போலாம் வா" என்ற அழைத்துச் சென்றான்.

மற்றவர்களின் கண்காணிப்பில் இருந்து விடுதலையான உணர்வோடு பெருமூச்சு விட்டாள். உணவின் பக்கம் சென்றதும் அதன் பின் மிஷ்ராவாவது பார்ட்டியாவது பப்ளிக் ஆவது என்று வழக்கம் போல தனக்கு வேண்டியவற்றை அள்ளி எடுத்துக்கொண்டு ஓரமாக டேபிளில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

அவள் முன் அமர்ந்த மிஷ்ராவை பார்த்தவள் சிக்கன் லாலிபாப்பை வாயில் வைத்து சுவைத்துக் கொண்டே "நீங்க சாப்பிடலையா?" என்று கேட்க... அவனோ இல்லை என்று இரு பக்கமும் தலையாட்டியவன், கன்னத்தை தாடையில் தாங்கிக் கொண்டு அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

"இப்படி எல்லாம் பாத்துக்கிட்டே இருக்காதீங்க சார்… சின்ன புள்ள சாப்பிடறது கண்ணு வைக்காதீங்க" என்றவள் ராஜ்கிரணுக்கும் நெப்போலியனுக்கும் டஃப் கொடுத்துக் கொண்டிருந்தாள் எலும்புகளை கடிப்பதற்கு.
அப்போதும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை கண்டவள் "உங்களுக்கு பசிக்கலையா?" என்று கேட்டாள்.

ஆம் என்று தலையாட்டியவன் அடுத்து அவள் எடுத்த ஒவ்வொரு உணவு பதார்த்தத்தையும் அவள் கையை இழுத்து தன் வாய்க்குள் வைத்துக் கொண்டான். முதலில் முறுக்கிக் கொண்டு கொடுத்தவள் அவனின் கை அழுத்தத்தில், அதற்குப்பின் வேறு வழி இன்றி அவளை அனைத்தையும் அவனுக்கு ஊட்ட வைத்தான்.

இங்கே இவர்கள் இருவரும் தனியாக அமர்ந்து சாப்பிடுவதையும் அதிலும் ஆதிரை மிஷ்ராவுக்கு ஊட்டுவதையும் அழகாக தனது ஃபோனில் வீடியோ ஆடியோ டிஜிட்டல் எஃபெக்டோடு பதிவு செய்துக் கொண்டிருந்தது ஒரு உருவம்.

"நீங்க ரொம்ப மோசம்" என்று உதடு பிதுக்கி தன் காலியான தட்டை பார்த்து அவள் கூறினாள்.

சுற்றும் முற்றும் பார்த்தவன் "இப்படி எல்லாம் பொத்தாம் பொதுவா பேசாதே பேப்... பாக்குறவங்க என்னை தப்பா நினைக்க மாட்டாங்க" என்று சிரிப்பை அடக்கியபடி கூறியவனை… கண்டதும் அவளுக்கு முணுக் என்று கோபம் வர, அவனை முறைத்தவள் "எனக்கு கோபம் கோபமா வருது சார் உங்க மேல..." என்றாள்.

அப்போதும் அவன் சிரிப்புடன் அமர்ந்திருக்க "ம்க்கும்... கோபத்தை தணிக்க நான் போய் இன்னும் எடுத்துட்டு வந்து சாப்பிட போறேன்" என்று அடுத்த ரவுண்டு சென்றவளை கையைப் பிடித்து தடுத்தவன் "ரொம்ப சாப்டா நைட் தூங்கிடுவடி!" என்றான் சிரிப்போடு.

"என்னது டி யா?" என்று அதிர்ந்தவள் அவன் சொன்னதை முழுதாக காதில் வாங்கவில்லை. அதன் பின்னேதான் அது நியூரான்களில் வழியே பயணித்து அவள் மூளையில் பதிய "ஆமா நைட்டு சாப்பிடுவதே தூங்க தானே? அப்புறம் ஏன் இந்த மாதிரி சொன்னீங்க நீங்க?" என்றதும் அவன் மர்ம சிரிப்போடு "இன்னைக்கு டெசர்ட் நல்லா இருக்கும். இரு... அதை எடுத்துட்டு வரேன்" என்றவன் குலோப்ஜாமோடு வெண்ணிலா ஐஸ்கிரீமை இரண்டு கிண்ணத்தில் கொண்டு வந்து அவள் முன்னே வைத்தான்…

"வாவ்... குலோப் ஜாமூன் வித் வெண்ணிலா மை ஃபேவரிட் சார்" என்று ஒரு கிண்ணத்தை எடுத்தவள் அதை ரசித்து சாப்பிட்டாள்.

"இந்த டெசர்ட் மட்டும்தான் உன்னுடைய ஃபேவரைட்டா? நீ சாப்பிட்டதுல உன்னோட ஃபேவரிட் எதுவுமே இல்லையா பேப்?" என்று கேட்டான் மிஷ்ரா.

அப்பொழுது தான் யோசித்து பார்த்தாள் அவள் தட்டு நிறைய அள்ளிக் கொண்டு வர காரணமே அங்கிருந்த அனைத்தும் அவளுக்கு பிடித்தவை. "ஆமாம் சார்... அங்க இருந்த எல்லா ஐட்டமும் எனக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரிட்" என்று அவள் கண்கள் சந்தோஷத்தோடு சொல்லிய விதத்தில் "சரி சாப்பிடு பேப்" என்று அடுத்த கிண்ணத்தையும் அவளை நோக்கி தள்ளினான்.

அவனின் பெருந்தன்மையில் பூரித்துப் போன ஆதிரையோ, "நெஜமா இந்த பவுலில் உள்ளதும் எனக்கே எனக்கா..." என்று கண்கள் விரித்துக் கேட்டவளை கண்டவனுக்கு அந்த குலோப்ஜாமுக்கு பதில் அவளை சாப்பிடவே ஆசை துளிர்த்தது.

"எஸ்..." என்று அவளருகே நகர்த்தி வைத்தவன், "ஆமாம் எதுக்கு இந்த பார்ட்டி? ஏன் எல்லாம் உன்னோட ஃபேவரிட் சாப்பாடா இருக்குனு நீ யோசிக்கவே இல்லையா பேப்?" என்றான். இவளோ மிக முக்கியமாக குலோப்ஜாம் மீது ஐஸ்கிரீமை கோபுரமாக வைத்தவள் அதை வாயில் வைத்தபடியே "ஆமா எதுக்கு?" என்றாள்.

"எல்லாம் உனக்காகத்தான் பேப்! உன்னோட பாட்டு கேட்டு ரொம்ப நாளாச்சு இல்ல... நீயும் பாடி ரொம்ப நாளாச்சு இல்ல... அதுக்காக தான். இந்த ஒரு சின்ன கெட் டூ கெதரை நான் தான் ஏற்பாடு பண்ணினேன்" என்றதும் கண்கள் மட்டும் அல்ல வாய் கூட அவனை அதிர்ச்சி பிளந்து பார்த்திருக்க... அவள் முன் குனிந்தவனின் வாய்க்குள் இப்பொழுது வெண்ணிலாவோடு குலோப்ஜாமும் கரைந்துக் கொண்டு இருந்தது குளிமையாக…
 
இதழ்… 16

துஷ்யந்த் மிஷ்ராவின் செய்கையில் அதிர்ச்சியில் அவள் உறைந்திருக்க… ஆனால் அவள் வாயில் இருந்த ஐஸ்கிரீமோ உருகி கரைந்து இருக்க, அவள் இதழில் வழிந்த வெண்ணிலா ஐஸ்கிரீமை ஒரு விரல் கொண்டு வழித்து எடுத்து சுவைத்தவன் "பேப்… நீ இப்படியே இன்னும் என்னை பார்த்துக்கொண்டே இருந்தால்…" என்றவன் அவள் முன் குனிந்து "அடுத்து ஐஸ்கிரீம்க்கு பதில் உன்னை தான் சாப்பிடுவேன் பேப்" என்றான் கிறக்கமான குரலில்.

"அம்மாடியோவ்… ஆளை விடுங்க சாமி" என்று அவசரமாக டிஷ்யூவில் வாயை துடைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள். செல்லும் அவளின் முதுகை வெறித்தவனின் முகத்தில் இப்பொழுது மர்மமான புன்னகை... எதை செய்ய காத்திருக்கானோ இந்த மிஷ்ரா.

பின்பு அங்கிருந்தவர்கள் ஒவ்வொருவராக கிளம்பினர். இன்னும் சிலரோ அடுத்து ட்ரிங்க்ஸ் பக்கம் செல்ல‌‌ இவனும் தனது பிஏவிடம் தலையாட்டி அவர்களை பார்த்துக்க சொல்லிவிட்டு ஆதிரையின் பின்னால் வந்தான்.

"நாம வந்திருக்கக் கூடாது... அவசரப்பட்டு வந்து விட்டோமோ?" என்று உடலும் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் உணர்வு குவியலில் தடுமாறிக் கொண்டிருந்தவள், மெல்ல நடந்து அங்கிருந்து தோட்டத்து பக்கம் வந்தாள்.

தொண்டையை கனைத்த மிஷ்ரா "போலாமா?" என்று கேட்கவும், வீட்டுக்கு தான் போல என்று பார்க்கிங் நோக்கி நடந்தவள் கையை பற்றி தடுத்தவன் "அங்கு இல்லை பேப்... திஸ் வே..." என்று வேறு வழியில் அழைத்துச் சென்றான்.

"எங்க... எங்க அழைச்சிட்டு போறீங்க சார்?" என்று மென் குரலில் கேட்டுக் கொண்டிருந்தவளின் வார்த்தைகள் துல்லியமாக காதில் விழுந்தாலும் பதில் பேசாமல் அழைத்து வந்தவன் அவள் உடைமாற்றிய அந்த குடிலுக்கு முன்னே நிறுத்தி "இன்னைக்கு இங்கதான் ஸ்டே பண்ண போறோம் பேப்...வா" என்றது தான் தாமதம், அவன் கையை உதறி விட்டு அவனைப் பார்த்தவள் "நோ... நோ... என்னை கொண்டு போய் வீட்டில் விட்டு விடுங்க" பதட்டத்தோடு கூறினாள்.

"லூசா பேப் நீ? மணி என்னனு பாத்தியா 12க்கு மேல ஆயிடுச்சு. இதுவே ஊருக்கு தள்ளி இருக்கிற ரெசார்ட்... இங்கே இருந்து உன் வீட்டுக்கு போக மினிமம் 2 ஹவர்ஸ் ஆகும். மிட் நைட்ல வீட்டுக்கு போனா உங்க அம்மா உன்னை என்ன சொல்லுவாங்க பேப்? உங்க அப்பா கேள்வி கேட்க மாட்டாரா? நீ கண்டிப்பா பொய் சொல்லிட்டு தான் வந்து இருப்ப என்னை பார்க்க? என்ன நைட் டூட்டினு தானே சொன்ன?" என்றதும் தலை கவிழ்ந்து நின்றவள், அவனுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினாள்.

"ஆமா… ஆனா இங்க வேணாமே" என்றாள் கையை பிசைந்தவாறு கண்களால் அந்த இடத்தையே துழாவிக்கொண்டு.

"இங்க இல்லாம வேற எங்க போய் தங்கறதா உத்தேசம் பேப்?" அவள் முன்னால் இரு கைககளையும் பாக்கெட்டில் விட்டபடி நின்றான் மிஷ்ரா.

"என்னை கொண்டு போய் ஹாஸ்பிடல்ல விட்டுடுங்களேன். அங்க இருக்குற டாக்டர்ஸ் ரூம்ல ரெஸ்ட் எடுத்துட்டு காலையில கிளம்பி நான் வீட்டுக்கு போறேன். எப்படி?" என்றாள் கண்கள் விரிய ஏதோ பெரிய தீர்வை கண்டுபிடித்தது போல மகிழ்வாக.

"சரி... ஹாஸ்பிடலுக்கு நம்ப ரெண்டு பேரும் இந்த மிட்நைட்ல சேர்ந்து போறோம்... அதுவும் இந்த டிரஸ் ஓட... பாக்குறவங்க என்ன நினைப்பாங்க? அப்ப மட்டும் யாரும் தப்பா நினைக்க மாட்டாங்களா?" என்றதும் தலை கவிழ்ந்து நின்றவள், "அதாவது சமாளிக்கலாம் ஆனால் இங்கே… இப்படி... ஒரு ரூமுல வேண்டாமே" என்றாள் தவிப்போடு.

இவன் பதில் கூறாமல் கதவை திறந்துக் கொண்டு உள்ளேச் சென்றவன் கதவை திறந்து வைத்துவிட்டு நின்றான் அவளை எதிர்பார்த்து.

ஆதிரையோ கொஞ்சமும் அசையாமல் அப்படியே நிற்க, அவளை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் இவன் சென்று ஒரு குளியல் போட்டு இலகுவான உடையை மாற்றிக் கொண்டு வெளியே வந்து பார்க்க... அப்பொழுதும் அவள் அப்படியேதான் நின்று இருந்தாள். இருக்க இருக்க குளிர் வாட்டி எடுக்க கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு நின்று இருந்தாள் ஆதிரை.

"அப்போ... நீ உள்ள வர மாட்ட?"

"மாட்டேன்" என்று அவள் தலையாட்ட வெளியில் வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து "இது அவ்வளவு நல்ல இடம் இல்லை. பேமிலி வந்து தங்கி போற ரெசார்ட்னு சொல்ல முடியாது. இந்த மாதிரி பார்ட்டி தனியா இருக்க விருப்பம் உள்ளவங்க வர்றது. காலையிலிருந்து எனக்கு செம ஒர்க் நான் போய் தூங்க போறேன். உன் இஷ்டம் நீ உள்ளே வர்றதும் வராததும்... அப்புறம் நாளைக்கு என் கற்பு போச்சு சிவப்பு போச்சுனு பேசக்கூடாது" என்று அவளை நன்றாக பயமுறுத்திவிட்டு உள்ளேச் சென்று படுத்துவிட்டான்.

இப்படி பயமுறுத்தினாலாவது அவள் உள்ளே வந்து விடுவாள் என்று இவன் எதிர்பார்க்க... அவன் எதிர்பார்ப்பை எல்லாம் தகர்த்துவிட்டு "என்னை கொண்டு போய் வீட்டில் விடுங்க... நான் போகணும்" என்றவள் அதே பல்லவியை பாடிக் கொண்டு அதே இடத்தில் தான் நின்று இருந்தாள்.

"அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்ல... உள்ள வந்த உடனே உன் மேல பாய்ஞ்சு உன்னை‌ சூறையாடிடுவேன்னு நினைக்கிற? அதுக்கு எதுக்கு உன்னை இவ்வளவு தூரம் தள்ளிக் கொண்டு வரணும்? என் ஆஃபீஸ் பர்சனல் ரூம் பத்தாது பர்சனல் டாக்டருக்கு..." என்று நக்கலாக அவன் கேட்க,

"கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம எப்படி எல்லாம் பேசுறான்?" என்று இவள் தான் முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

அப்பொழுதும் அவள் அசைவதாக இல்லை "அப்புறம் உன் இஷ்டம் நைட்டு இங்கே நாலு காலு நரிங்க மட்டும் கிடையாது. ரெண்டு காலு உள்ள நரிகளும் வரும். அந்த குள்ளநரியின் வேட்டை நீயா கூட இருக்கலாம். என்ஜாய் பேப்... குட் நைட்" என்றவன் கதவடைத்து விட்டு படுத்து விட்டான்.

ஆங்காங்கே வெளிச்சத்திற்காக விளக்குகள் இருந்தாலும் அதை தாண்டியும் அந்த இருள் அவளுக்குள் ஒரு பயத்தை நடுக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகை இல்லை. இருக்க இருக்க குளிர் வேற அவளை வாட்டி எடுக்க சாட்டின் துணியாலான அந்த பார்ட்டி கவுனும் குளிருக்கு உதவி செய்ய நடுக்கத்தோடு தான் நின்று இருந்தாள் ஆதிரை.

நாம் வம்படியாக நின்றால் சிறிது நேரத்தில் அவனே மனமிறங்கி வந்து நம்மை அழைத்துக் கொண்டு ஒன்று ஹாஸ்பிடலுக்கோ இல்லை வீட்டுக்கோ சென்று விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தவளுக்கு நேரம் செல்ல செல்ல அந்த நம்பிக்கை தகர்ந்து போயிடுமோ என்று பயம். சுற்றியும் பார்த்தாள் கொஞ்சம் கொஞ்சமாக இன்னொரு பார்ட்டிலிருந்து ஆண்கள் வெளியே வருவதும் போவதுமாய் இருந்தனர்.

அவர்களின் தோற்றமே இவளுக்கு இன்னும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த பக்கம் வெறும் குடில்கள் தான் இருந்தாலும், அந்த ஆண்கள் பலர் இந்த குடிலை நோக்கி அவ்வப்போது வருவதும் போவதும் ஆகவே இருந்தனர். கிட்டத்தட்ட ஜெனியோடு கடைசியாக அவர்கள் சென்ற அந்த ரெசார்ட்டில் நடந்தது போல தான் இங்கேயும் ஆட்கள் இருக்க ஆதிரைக்கு உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது.

வேகமாக சென்று இவள் அறைக்கதவை தட்ட ஆனால் கதவு திறக்கவில்லை. "அத்தனை தடவ சொன்னானே, நமக்கு கொழுப்பு! வாய் கொழுப்பு மட்டுமல்ல உடம்பு ஃபுல்லா கொழுப்பு இருக்குனு மாதவி சொல்றதுல தப்பே இல்ல... இப்படி வந்து மாட்டிக்கிட்டோமே? சரி சிவனேனு கார்ல போய் உக்காந்துட வேண்டியது தான்" என்றவள் தனது கைப்பை எங்கே என்று தேட அதுவும் அவன் அறைக்குள் தான் இருந்தது ஞாபகம் வந்தது. "இப்படியாடி சொதப்புவ ஆதி நீ" என்று கண்கள் கலங்க அவ்விடத்தையே மெல்ல சுற்றி வந்தாள்.

"நாம வேற ஒரு ரூம் எடுத்து தங்கிடலாமா? ஆனா அதுக்கு அமௌன்ட் கேட்பாங்களே? அட்லீஸ்ட் கார்டு போன் எதாவது ஒன்னு இருந்தா கூட போதும். எதுவுமே இல்லாம இப்படி வெறும் கையோடு நிற்க மாதிரி ஆயிடுச்சே" என்று கலங்கியவள்… தன்னை சுற்றி பார்த்துக் கொண்டே மெல்ல நடந்தாள்.

அவள் நடக்க நடக்க அங்கிருந்த விளக்குகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அணைக்கப்பட "அந்த பார்ட்டியும் முடிஞ்சிடுச்சு போல அவங்களாம் வருவார்களோ?" என்று மனது தடத்தடக்க மெல்ல சென்றவள், அடுத்து முட்டி நின்றது என்னவோ ஒரு ஆணின் மீது. அதிர்ந்து பார்த்தள் அங்கே ரிஷியை கண்டதும் ஒருவித ஆசுவாசம். அதே நேரம் சிறு பயம் இவனிடம் என்ன சொல்லி சமாளிப்பது.

"ரிஷி…." என்று அவள் அழைக்க…

"டியர்... என்ன இங்க தனியா இருக்க? எப்படி இங்க வந்த? ஓஓ என்னை தேடி வந்தியா?" என்றவன் முழு குடி போதையில் இருந்தான்.

"ரிஷி... ரிஷி... பாரு இங்க இருந்து போயிடலாம். உன்கிட்ட கார் இருக்கும் தானே... கார் சாவி கொடு நான் ஓட்டுறேன்"

"கார் சாவியா? அது எங்கே வச்சேன் எங்க வச்சேன் டார்லிங்?" என்று அவளிடமே உளறிக் கொண்டே நின்றவன் தள்ளாடிக்கொண்டே வர இவனை நம்பினால் ஆகாது என்று அவன் வேலட், ஃபோன் ஏதாவது இருக்கிறதா என்று தேடி பார்க்க ஒன்றுமே இல்லை அவனிடம்.

'இவனும் இப்படி சொதப்புறானே… ஆனால் இவன் இங்க என்ன பண்றான்?' என்று யோசனையோடு மற்றவர்களை பார்க்க, அங்கிருந்து இரண்டு மூன்று பேர் கண்கள் இவள் மேலே அட்டை போல் ஒட்டி இருக்க இவள் பயந்து "ரிஷி வாங்க போகலாம்" என்று அவன் கையை பிடித்து இழுக்க, அவனோ தள்ளாடி தள்ளாடி ஆதிரை மேலே விழுந்தான்.

"இவன் நம்மை காப்பாத்துவான்னு பார்த்தா... இவன் இருக்கிற நிலைமைல இவனையும் நாமதான் காப்பாத்தணும் போல... இது ஆவுறதுக்கு இல்ல" என்று அவனை அங்கிருந்த ஒரு மரப்பெஞ்சில் அமர வைத்தவள், அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

யாரோ பின்னே அவளை தொடர்ந்து வரும் அரவம் கேட்க, இன்னும் வேகமாக நடந்தவளின் நடை இப்போது ஓட்டமாக மாறி இருக்க... தடதட என்று பின்னால் அவளை துரத்தும் சத்தங்கள் இன்னும் அதிகரிக்க… நெஞ்சுக்குழியில் உயிர்பயம் வந்து ஒட்டிக் கொண்டது. முதுகுத்தண்டு சில்லென்றாக, "இவர்கள் கையில் மாட்டினால் அய்யோ…" என்று இன்னும் வேகம் எடுத்தவள் எந்த வழி போக என்று தெரியாமல் மீண்டும் மீண்டும் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் ஓடி ஓடி களைத்து அனைத்து சக்தியும் வடிந்தாற் போல மூச்சிரைக்க நின்றிருந்தவள் முன்னே வந்து நின்றவர்களை கண்டதும்... ஆதிரைக்கு அதிர்ச்சி இல்லை பேரதிர்ச்சி என்பது கூட சின்ன வார்த்தை தான் அப்போது!

யாராக இருக்கும்?


இசை பயணம் தொடரும்…
 
வணக்கம் மக்களே 🤩

அப்டேட்ஸ் போட்டாச்சு. உங்கள் கருத்துக்களை மறக்காமல் தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..


 
Status
Not open for further replies.
Top