GG writers
Moderator
"ஏய் நில்லுடி உன்னை தானே கூப்பிட்டு இருக்கேன் உனக்கு காது கேட்கலையா?" என்றவனை தீயென முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.
" பார்ரா இப்படிலாம் முறைச்சுக்கிட்டு தெரிஞ்சா உன்னை விட்டு விடுவேன்னு நினைச்சியா , இதோ பாரு செல்லம் உனக்கும், எனக்கும் கல்யாணம் நடந்தே தீரும். நீ என்னதான் டிராமா பண்ணினாலும் இந்த கல்யாணத்தை நிப்பாட்ட முடியாது. என் கையால் உன் கழுத்தில் ஏறும் தாலியையும் தடுக்க முடியாது" என்றான் அவன்.
அவனை கோபமாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தவள், "என் அப்பாவை ஏமாற்றி நீ என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கலாம் ஆனால் ஏன்டா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அப்படின்னு ஒவ்வொரு நாளும் உன்னை துடிக்க வைக்கலை நான் என்னோட அப்பா ராஜராஜனோட பொண்ணே கிடையாது" என்றாள் அவள் .
"என் மாமன் பெத்த மரிக்கொழுந்தே அவருக்கு நீ பொண்ணு இல்லைன்னா பையனாடி . நீ பையனாவே இருந்தாலும் உன்னை கல்யாணம் பண்ணி என் வீட்டில் விளக்கேற்ற வைப்பேன். உன்னால என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது மைனா மாமன் உன்னை கட்டிக்க காளையைவே அடக்கிட்டேன் என் சண்டி ராணி உன்னை அடக்க மாட்டேனா" என்றவன் அவள் சுதாரிக்கும் முன்பே அவளை சுவற்றோடு தள்ளி அவள் இதழில் தன் இதழை பதித்து விட்டான்.