GG writers
Moderator
அத்தியாயம் 1
"அழகான காலை வேளையில் கதிரவன் உலகிற்கு தன் கொடையான ஒளியைப் பரப்பிக் கொண்டு இருந்தான். இரை தேடும் பறவைகள் தத்தமது கூடுகளில் இருந்து கீச்சு கீச்சென்று சத்தம் எழுப்பிக் கொண்டே வானத்தில் பறந்து சென்றது".
அது ஒரு அழகிய கிராமம் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அமைதியான கிராமம். ஊரெங்கும் பசுமை நிறமாக இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம்.
நெற்கதிர்கள் விழைந்து அறுவடை நடைபெற்றது. பொங்கல் வர இருப்பதால் ஜல்லிக்கட்டு காளைகள் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கு தயார் படுத்தப் பட்டு இருந்தது. காளைகள் மட்டும் இல்லை காளையர்களும் ஜல்லிக்கட்டை ஒரு கை பார்த்து விடும் ஆசையில் வெறித்தனமாக பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தனர்.
"என்ன மாப்பிள்ளை ஊரெல்லாம் பயங்கரமா ஜல்லிக்கட்டு காளையை அடக்க பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்காங்க நீ இன்னும் தூங்கிட்டு இருக்க" என்றான் மணிவண்ணன்.
"காளையை அடக்கினால் என்ன பரிசு கிடைக்கும்?" என்றான் மகேந்திரவர்மன் சோம்பல் முறித்துக் கொண்டே.
"என்ன கிடைக்கும்னா ஏகப்பட்ட பரிசு வாட்ச், மோதிரம், செல்ஃபோன், கார், புல்லட்" என்று மணிவண்ணன் சொல்லிக் கொண்டே போக , "இதெல்லாம் நம்ம வீட்டிலேயே இருக்கே அப்பறம் எதுக்கு நான் காளையை அடக்கி இதெல்லாம் ஜெயிக்கனும்" என்றான் மகேந்திரவர்மன்.
"அப்போ உன் மகன் காளையை அடக்கனும்னா எவனும் பொண்ணை கட்டிக் கொடுக்கிறேன் என்று சொல்லனுமானு கேட்டு சொல்லு வைதேகி" என்றார் இராமச்சந்திரன்.
"உங்க மச்சான் பொண்ணு கட்டிக் கொடுக்கிறேன் காளையை அடக்குங்க மாப்பிள்ளை என்று சொல்லட்டும் நாளைக்கே காளையை அடக்கி என் மாமன் பெத்த மரிக்கொழுந்தை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விளக்கேத்த வைக்கிறேன் என்ன சொல்லுறீங்க" என்றான் மகேந்திரவர்மன்.
"இருந்தாலும் உன் மகனுக்கு இவ்வளவு பெரிய ஆசை இருக்க கூடாது வைதேகி உன் அண்ணன் மனசு இறங்கி அவரு பொண்ணை ,அதுவும் அவரு உயிரையே வச்சுருக்கிற பொண்ணை உன் மகனுக்கு கட்டி வைப்பாரா" என்றார் ராமச்சந்திரன்.
"கட்டி வைப்பாருப்பா அவரே அவரு பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி கொடுப்பாரு. கொடுக்க வைப்பேன் பார்க்கிறிங்களா?" என்றான் மகேந்திரவர்மன்.
"என்னங்க என் மகன் நினைத்தால் கண்டிப்பா நினைச்சதை நடத்தி முடிக்காமல் விடவே மாட்டான். அம்மாவுக்காக என் அண்ணன் பொண்ணை இந்த வீட்டிற்கு மருமகளா அழைச்சிட்டு வந்துரு சாமி அது போதும் அம்மாவுக்கு" என்றார் வைதேகி.
"வேண்டாம் வைதேகி உன் மகனை கொம்பு சீவி விடாதே ஏற்கனவே நம்ம கல்யாணத்தினால ஏற்பட்ட பகை முப்பது வருசமா இன்னும் ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை. இவன் வேற அவரு மகளை கட்டிக்க எதுனாலும் செய்து பிரச்சனை இன்னும் பெரியதாகிடுமோனு பயமா இருக்கு" என்றார் ராமச்சந்திரன்.
"அம்மா அவர் கிட்ட சொல்லுங்க நான் ராமச்சந்திரன் பையன் மகேந்திரவர்மன் நினைச்சதை முடிக்காமல் விடவே மாட்டேன் என் மாமன் பொண்ணு இந்த வீட்டிற்கு விளக்கேற்ற வந்தே தீருவாள்" என்றான்.
"உன்னால ஒரு கலகம் வந்தால் நான்" என்று அவர் ஏதோ சொல்ல வர, "அப்பா கலகம் பிறந்தால் தான் நன்மையும் வரும் அதனால எதையும் யோசிக்காமல் ஊர்ப் பஞ்சாயத்துக்கு போங்க கூட்டத்தில் ஜல்லிக்கட்டு பற்றி பேசப் போறாங்களாம் நானும் பின்னாலையே வருகிறேன்" என்றான் மகேந்திரவர்மன்.
அவர் கிளம்பிச் செல்லவும் , "மகி அம்மாவோட விருப்பம்" என்று வைதேகி இழுத்திட, "அதெல்லாம் உங்க விருப்பத்தை அண்ணன் நிறைவேற்றிடும் அம்மா" என்று வந்தாள் இந்துமதி.
"என் தங்கச்சிக்கு என் மேல இருக்கிற நம்பிக்கை கூட என்னை பெத்தவருக்கு இல்லை" என்ற மகேந்திரவர்மனிடம், "அதெல்லாம் நிறையவே இருக்கு வெளியே காட்டிக்க மாட்டாரு" என்று சிரித்தார் வைதேகி.
"அண்ணா அண்ணி இப்போ என்ன பண்ணிட்டு இருக்கும்" என்று இந்துமதி கேட்டிட , "யாருக்கு தெரியும்" என்றான் மகேந்திரவர்மன்.
"சம்மு, சம்மு" என்று கத்திக் கொண்டு இருந்தார் வானதி. "என்ன வானதி ஏன் என் பொண்ணு பெயரை இப்படி ஏலம் போட்டுட்டு இருக்க" என்றார் ராஜராஜன்.
"எனக்கு வேண்டுதல் பாருங்க, உங்க பொண்ணு கையால தானே முதல் கதிரை அறுக்கனும் நல்ல நேரத்தில் வேலையை தொடங்க வேண்டாமா? அதான் அவளை கூப்பிட்டுட்டு இருக்கேன்" என்றார் வானதி.
கண்ணுக்கு மை தீட்டிக் கொண்டு இருந்தாள், சம்மு என்ற சம்யுக்தாராணி. "இருங்கம்மா ஒரு ஐந்து நிமிடம்" என்றவள் அடுத்ததாக உறுத்தாத உதட்டு சாயத்தை உதட்டில் பூசிக் கொண்டு இருந்தாள். பிறை போன்ற நெற்றியில் வில்லென வளைந்திருந்த புருவத்திலும், வேல் போன்ற கூரிய விழிகளில் மை இட்டவள் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து விட்டு , "எல்லாம் ஓகே" என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.
ஜல், ஜல் என்று சலங்கை கொலுசு அவள் பாதங்களில் ஜதி பாடிட, கண்ணாடி வளையல்களோ கைகளில் குலுங்கிட, காதில் அணிந்திருந்த ஜிமிக்கி கம்மல் கன்னத்தை தடவிக் கொண்டு இருக்க, சங்கு கழுத்தில் சரஸ்வதி டாலர் வைத்த செயின் பளபளக்க, பச்சை நிற தாவணியில் அழகுப் பதுமையாக வந்தாள் சம்யுக்தா ராணி.
"அந்த மகாலட்சுமியே எனக்கு மகளா பிறந்து இந்த வீட்டில் உலா வருகிறாளோ என்று தான் எனக்கு தோன்றுகிறது" என்றார் ராஜராஜன். "இப்படியே சொல்லி செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து தான் அவளை கெடுத்து வச்சிருக்கீங்க. அவள் இந்த வீட்டில் பார்க்கிற ஒரே ஒரு வேலை வருசத்தில் ஒரு நாள் முதல் கதிரை அறுக்கிறது மட்டும் தான் என்ன நேரத்தில் சம்யுக்தா ராணி என்று பெயர் வச்சீங்களோ, உங்க மகள் மகாராணி மாதிரி தான் சுற்றுகிறாள்" என்று குறை பட்டுக் கொண்டார் வானதி.
"என் பொண்ணு மகாராணி தான் வானதி அதில் என்ன சந்தேகம் உனக்கு" என்றார் ராஜராஜன். "இங்கே மகாராணி சரி புருஷன் வீட்டில் இவள் தானே எல்லா வேலையும் பார்க்கனும் அங்கே என்ன இவளோட மாமியாரா இவளுக்கு எல்லா வேலையும் பார்த்து கொடுப்பாங்க" என்றார் வானதி.
"என் பொண்ணை மாமியார் வீட்டிற்கு எல்லாம் அனுப்ப மாட்டேன் அவளுக்கு வீட்டோட மருமகனா ஒரு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைத்து காலம் முழுக்க என் கூடவே வைத்துக் கொள்வேன். என் பொண்ணு எப்போதும் இந்த வீட்டோட மகாராணியாக தான் இருக்கனும்" என்றவர், "சரி நேரம் ஆச்சு கிளம்புங்க" என்று கூறிட சம்யுக்தா தன் அன்னை, தந்தையுடன் வயலிற்கு வந்து சேர்ந்தாள்.
மகள் கையால் முதல் கதிரை அறுத்து முடித்த பிறகு மற்றவர்களை கதிர் அறுக்க சொன்னார் இராஜராஜன். மகள் கையால் அறுத்த முதல் கதிரை குலதெய்வத்திற்கு படைத்து சாமி கும்பிட்டு வயலில் விளைந்த நெல் கதிரை அறுவடை செய்ய பணித்திட அறுவடை நல்லபடியாக நடந்தது.
"என்ன சம்மு கோவிலுக்கு தனியா வந்திருக்க உன் பாடிகார்ட் வரவில்லையா?" என்றாள் அவளது தோழி தேன்மொழி.
"பாடிகார்டா அது யாரு?" என்ற சம்யுக்தாவிடம், "உன்னோட அண்ணனைத் தான் சொல்கிறாள்" என்றாள் இன்னொரு தோழி சவிதா.
அதற்கு சிரித்த சம்யுக்தாவோ, "ஜல்லிக்கட்டு நடக்கப் போகுதே அதான் நம்ம ப்ரூஸ்லீயை அண்ணனுங்க இரண்டு பேரும் சேர்ந்து தயார் படுத்திக் கொண்டு இருக்காங்க. இதுவரை ப்ரூஸ்லீ எந்த ஜல்லிக்கட்டிலும் தோத்துப் போனதே கிடையாது. ஐந்து வருசமா அவனை அடக்க எவனும் வர வில்லை இந்த வருடமும் எவனும் வரப் போகிறதும் இல்லை" என்றாள் சம்யுக்தா.
"இத்தனை வருஷம் எவனும் வராமல் இருந்து இருக்கலாம் ஆனால் இந்த வருசம் உங்க வீட்டு ப்ரூஸ்லீயை அடக்கி ஆள ஒரு ஆள் வந்தாச்சு" என்றாள் இந்துமதி.
"என்ன எங்க ப்ரூஸ்லீயை அடக்க ஆளா யாரு அது?" என்றாள் சம்யுக்தா. "வேற யாரு என் அண்ணன் தான்" என்றாள் இந்துமதி. அவளைப் பார்த்து கலகலவென சிரித்தாள் சம்யுக்தா.
"உங்க அண்ணனுக்கு ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று தெரியுமா? அதுவும் எங்க ப்ரூஸ்லீயை பத்தி எதுனாலும் தெரியுமா? உங்க அண்ணன் வந்து எங்க வீட்டுக் காளையை அடக்கி எங்க காளையை அடி மாடா மாத்தப் போறாரு அப்படியா" என்று சிரித்தாள் சம்யுக்தா.
"நான் அப்படி சொல்லவே இல்லையே? என் அண்ணன் உங்க வீட்டு காளையை அடக்குவாருன்னு தான் சொன்னேன் அடி மாடா மாத்தப் போறாருன்னு நான் சொல்லவே இல்லை, இத்தனை வருஷம் பெத்த பிள்ளை மாதிரி வளர்த்த மாடு ஒரு போட்டியில் தோற்றுப் போனால் அது அடி மாடா என்ன?" என்றாள் இந்துமதி.
சம்யுக்தா ஏதோ சொல்ல வர அங்கே வந்தான் வெற்றிமாறன். "சம்மு" என்று தன் தங்கையை அழைத்த படி வந்தவன் "என்ன இங்கே வாக்கு வாதம்" என்றான் வெற்றிமாறன்.
"இவங்க அண்ணன் நம்ம ப்ரூஸ்லீயை அடக்க போறாராம்" என்று அவள் நக்கலாக சிரித்தாள். "ஒரு வேளை என் அண்ணன் உங்க ப்ரூஸ்லீயை அடக்கிட்டாரு என்ன தருவீங்க" என்றாள் இந்துமதி.
"என்ன தருவாங்க பத்து பவுன் தங்கச் சங்கிலி தான்" என்றான் வெற்றிமாறன். "அந்த சங்கிலியை உங்க தங்கச்சி கையால என் அண்ணனுக்கு போட்டு விடுவீங்களா?" என்று இந்துமதி கேட்டிட வெற்றிக்கு கோபம் தான் வந்தது.
"ஏய் என்னடி கொழுப்பா உன் அண்ணன் முகரைக் கட்டைக்கு என் தங்கச்சி அவள் கையால் செயின் போட்டு விடனுமா பொம்பளைப் பிள்ளையா இருக்க அதனால் அடிக்காமல் விடுறேன்" என்றான்.
"எங்கே அடிச்சு தான் பாருங்களேன்" என்று இந்துமதி கூறிட , "அண்ணா வாங்க அவள் வேண்டும் என்றே வம்பு இழுக்கிறாள். நாம போகலாம்" என்று தன் தமையனை இழுத்துக் கொண்டு சென்று விட்டாள் சம்யுக்தா ராணி.
"இல்லை சம்மு அவளோட வாயை உடைக்காமல் விட்டுட்டு வந்துட்டேன் எவ்வளவு கொழுப்பு இருந்தால் அவள் அண்ணனுக்கு நீ செயின் மாட்டி விடனும் என்று சொல்லி இருப்பாள். இதுவே நான் அவள் கழுத்தில் மாட்டி விடவானு கேட்டால் அவளுக்கு எப்படி இருக்கும்" என்று கொதித்தான் வெற்றிமாறன்.
"அண்ணா நீங்க அந்த மாதிரி எதுவும் சொல்லுவீங்க என்று வாய் பிடுங்க தான் அவள் அந்த மாதிரி பேசினாள் விடுங்க வீட்டுக்கு போகலாம்" என்று தன் சகோதரனை அழைத்துச் சென்றாள் மாது.
இந்துமதி சங்கிலி மாட்டி விடச் சொன்னதற்கே அவளிடம் சண்டைக்கு சென்ற வெற்றிமாறன் அவனது தந்தை கொடுத்த வாக்கு பற்றி அறிந்தால் என்ன செய்வான்...
... தொடரும்...

Attachments
Last edited: