GG writers
Moderator
அத்தியாயம் 10
"உனக்கு வரப்பில் ஒழுங்கா கால் வைத்து நடக்க தெரியாதாடீ" என்ற மகேந்திரனை முறைத்தவள் ஏதோ சொல்ல வர, "சரி சரி நேரம் ஆச்சு வா" என்று அவளை தூக்கிக் கொண்டு வரப்பில் நடந்து சென்றான்.
"ப்ளீஸ் என்னை இறக்கி விடு நீ இப்படி என்னை தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்தால் தப்பா பேசுவாங்க" என்ற சம்யுக்தாவை முறைத்தவன், "அடியே சண்டி ராணி நீ என் பொண்டாட்டி டீ உன்னை தூக்கிட்டு போக எனக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. எவன் என்னை கேள்வி கேட்கப் போகிறான்" என்றான் மகேந்திரவர்மன்.
"நமக்கு இன்னும் கல்யாணம் முடிய வில்லை" என்ற சம்யுக்தாவிடம், "பரிசம் போட்டாலே பாதிக் கல்யாணம் முடிஞ்ச மாதிரி தானே அப்படி இருக்கும் போது நான் ஆல்ரெடி உன் புருஷன் தான்" என்றவன் அவளது நெற்றியில் முத்தமிட அவளோ கண்களை மூடிக் கொண்டாள்.
அவன் சிரித்துவிட்டு அவளை இறக்கி விட கேள்வியாக அவனைப் பார்த்தாள் சம்யுக்தா. "என்ன பொண்டாட்டி வீடு வரை உன்னை நான் தூக்கிட்டு போகனுமா" என்று அவன் கேட்டிட அவனை முறைத்து விட்டு அவள் நகரப் போக அவளது கையை பிடித்தவன், "பைக்ல உட்காரு" என்றான்.
"இல்லை என் அண்ணன் வரும்" என்று அவள் தயங்கிட , "இதோ பாரு டீ உன் அண்ணன் எல்லாம் இனிமேல் வர மாட்டான் . இனி உன் வாழ்க்கையில் எல்லாமே நான் மட்டும் தான் சரியா" என்று அவன் அழுத்தமாக கூறிட அவளும் அமைதியாக அவனது பைக்கில் அமர்ந்தாள்.
வீட்டிற்கு வந்தவன், "இறங்கு" என்றிட, "இது என்ன உங்க வீட்டிற்கு கூட்டிட்டு வந்து இருக்க" என்றாள் சம்யுக்தா. "உன் மாமியார் தான் உன்னை கூட்டிட்டு வரச் சொன்னாங்க" என்று அவன் கூறிட, "அப்பாவுக்கு தெரிந்தால் சங்கடப் படுவாங்க நான் நடந்தே என் வீட்டுக்கு போய்க்கிறேன்" என்று அவள் கூறிட, "ஏய் என்ன ஓவரா பண்ணிட்டு இருக்க இன்னும் ஒரு வாரம் கழித்து நீ இங்கே தான் இருக்கப் போகிற அப்பறம் என்ன" என்றான் மகேந்திரவர்மன்.
"ஒரு வாரத்தில் நீ செத்துப் போய் விட்டால் இந்த கல்யாணம் நின்று போய் விடும் தானே" என்ற சம்யுக்தாவை முறைத்தவன், "ஓஓ உன் மனசுல இப்படி ஒரு ஆசையா ஒரு வேளை உன் கழுத்தில் தாலி கட்டாமல் நான் செத்துப் போய் விட்டேன்னு வச்சுக்கோயேன் ஆவியா வந்து தினம் தினம் உன் கூட குடும்பம் நடத்த ஆரம்பிச்சுருவேன்.
ஆவிங்கிறதால உன்னால என் கிட்ட இருந்து தப்பிக்கவும் முடியாது .என்னை யாராலையும் உன்னை விட்டு பிரிக்கவும் முடியாது எப்படி வசதி" என்று அவன் கூறிட அவளோ அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள்.
அந்த ஊரில் வயதான பாட்டி ஒருவர் சிறு வயதில் கூறிய பேய்க்கதை அவள் மனதிற்குள் தோன்றி அவளை பயமுறுத்தியது. "சில வருடங்களுக்கு முன்பு கல்யாணம் ஆகாத இளவட்டம் ஒருவர் இறந்து விட்டார். அவரது ஆத்மா ஆசை நிறைவேறாமல் இறந்து போனதால் ஊரில் உள்ள கன்னிப் பெண்களுடன் பேயாகவே அவர்களுடன் குடும்பம் நடத்தி நான்கு பெண்கள் கர்ப்பமாக இருந்தார்கள். அந்த பெண்களும் செத்துப் போய் விட்டனர்" என்று அந்த பாட்டி கூறியது அவளுக்கு நியாபகம் வர சம்யுக்தா பயந்து போய் விழித்துக் கொண்டு இருந்தாள்.
அவளது மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் என்பதை உணர்ந்த மகேந்திரவர்மன், தன் மக்குப் பொண்டாட்டியை நினைத்து சிரித்து விட்டு அவளது கை பிடித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
மருமகளைக் கண்ட வைதேகி, "சம்மு" என்று அவளை அணைத்துக் கொண்டு அமர வைத்தவர் அவளுக்காக காபி எடுத்து வந்து கொடுத்தார். கூடவே அவளுக்கு பிடித்த பால்கேசரி வேறு கொண்டு வந்து கொடுத்தார்.
"இல்லை வேண்டாம்" என்று அவள் மறுக்க , "ஏன் ராசாத்தி உன் அத்தை உனக்கு விஷம் எதுவும் வைத்து விடுவேன்னு பயப்படுறியா" என்று வைதேகி கூறிட, "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை" என்று அவள் கூறிட "அப்போ சாப்பிடும்மா" என்று அவளுக்கு ஊட்டி விட்டார் வைதேகி.
"எங்கே என் அண்ணன் உறவு கடைசி வரை எனக்கு இல்லாமலே போய் விடுமோ என்று பயந்து கொண்டே இருந்தேன். மகராசி நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வரும் நேரம் எல்லாமே நல்லது தான் நடக்கும்" என்று கூறிவிட்டு அவளுக்கு கேசரியை ஊட்டி விட்டார் வைதேகி.
"நேரம் ஆச்சு நான் வீட்டுக்கு போகனும்" என்று அவள் கூறிட, "ஐயோ பாரு உன்னை பார்த்த சந்தோஷத்தில் அத்தை உன்னை அழைத்து வரச் சொன்ன காரணத்தையே மறந்து விட்டேன்" என்ற வைதேகி, "இந்து அதை எடுத்துட்டு வாம்மா" என்றார்.
இந்துமதியும் ஒரு பார்சலை எடுத்துக் கொண்டு வந்தாள். அதை வைதேகி சம்யுக்தாவிடம் கொடுத்தார். "என்ன இது" என்ற சம்யுக்தாவிடம், "பிரிச்சு பாரு சம்மு" என்று வைதேகி கூறிட அவளும் பிரித்து பார்த்தாள். அழகான வேலைப்பாடுகள் நிறைந்த புடவையும், மாங்காய் மாலையும் இருந்திட, "இது எதற்காக" என்றாள் சம்யுக்தா.
"நாளைக்கு உன்னோட பிறந்த நாள் இல்லையா , அதான் இந்த அத்தையோட பரிசு" என்றார் வைதேகி. "இல்லை வேண்டாம்" என்று அவள் கூறிட , "அத்தை ஆசையா கொடுக்கிறேன் வாங்கிக்க மாட்டியா சம்மு" என்று அவர் கேட்டிட சம்யுக்தா அதை வாங்கிக் கொண்டாள்.
"சரி மகி லேட் ஆகிடுச்சு சம்முவை வீட்டில் விட்டுவிட்டு வா" என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் வைதேகி.
அவளை அழைத்துக்கொண்டு அவனும் சென்று விட, "திமிர் பிடித்தவள் அவள் வாயில் இருந்து ஒரு முறை கூட உங்களை அந்தைன்னு செல்லி வரவே இல்லை" என்றாள் இந்துமதி. "விடு இந்து இத்தனை வருஷமா அவள் என் கிட்ட பேசினது கூட இல்லை. திடீர்னு அத்தை என்று எப்படி கூப்பிடுவாள்" என்ற வைதேகி தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
"எனக்கு பால்கேசரி பிடிக்கும் என்று உங்க அம்மாவுக்கு எப்படி தெரியும்" என்ற சம்யுக்தாவிடம் , "உன் அத்தை தானே நீயே கேட்டு இருக்க வேண்டியது தானே" என்றான் மகேந்திரவர்மன்.
அவனை முறைத்த சம்யுக்தா ஏதோ யோசனையில் வர அவனும் பைக்கை நிறுத்தி இருந்தான். "சண்டி ராணி இறங்கு டீ உன் வீடு வந்து விட்டது" என்று அவன் கூறிட பைக்கை விட்டு இறங்கியவள் , "சம்யுக்தா ராணி" என்று பற்களைக் கடித்து கொண்டு கூறிட அவனோ சிரித்து விட்டு , "சரி கிளம்புகிறேன்" என்றான்.
"சரி கிளம்பு" என்றவளை முறைத்தவன், "ஏன் டீ ஒரு பேச்சுக்காகவாச்சும் வீட்டுக்கு வந்து விட்டு போங்கன்னு சொல்லுறியா" என்ற மகேந்திரனை முறைத்தவள், "எனக்கு பொய்யா நடிக்க தெரியாது" என்றாள் சம்யுக்தா.
"போடி பைத்தியம் என்று" கூறிவிட்டு அவன் கிளம்ப எத்தனிக்க, "போனால் போகுது உள்ளே வந்து தொலை" என்று அவள் கூறிட , "இல்லைடீ ஒரு வேலை இருக்கு நாளைக்கு வரேன்" என்று கூறிவிட்டு அவன் சென்று விட அவள் தான் செல்லும் அவனின் முதுகை வெறித்தபடி நின்றிருந்தாள்.
"ஏய் சம்மு வாசலிலேயே எவ்வளவு நேரம் நிற்ப" என்று வானதி கேட்டிட அவளும் உள்ளே சென்றாள்.
"என்ன டீ பார்சல்" என்ற வானதியிடம், "மகேந்திரனோட அம்மா கொடுத்தாங்க" என்றாள் சம்யுக்தா. "அது என்ன மகேந்திரனோட அம்மான்னு சொல்லுற உன் அத்தை கொடுத்ததுன்னு சொன்னால் முத்து உதிர்ந்து விடுமோ" என்றார் வானதி.
அவரை முறைத்தவள் , "எனக்கு பால் கேசரி பிடிக்கும் என்று நீங்கள் தானே அவங்க கிட்ட சொன்னீங்க" என்றாள் சம்யுக்தா. "உன் அத்தை கிட்ட நான் பேசினதே உன் நிச்சயதார்த்தம் நடந்த அன்னைக்கு தான் என்ற வானதி, உன் அத்தையும் பால் கேசரி விரும்பி சாப்பிடுவாங்கன்னு உன் அப்பத்தா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்" என்று கூறிவிட்டு வானதி சென்று விட்டார்.
"என்ன யோசனை சம்மு" என்று வந்த வேந்தனிடம் , "ஒன்றும் இல்லை அண்ணா" என்றாள் சம்யுக்தா. "எனக்கு புரியுது உனக்கு இந்த கல்யாணத்தில் சுத்தமா விருப்பமே இல்லை, என்று ஆனால் நீ கவலை படாதே இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது உன் அண்ணன் வேந்தனை நம்பு" என்று எழில் வேந்தன் தன் திட்டத்தை கூறிட, "அண்ணா இது ரொம்ப தப்பு" என்றாள் சம்யுக்தா.
"இல்லை சம்மு எனக்கு அப்பாவோட வாக்கை விட என் தங்கச்சியோட சந்தோஷம் தான் முக்கியம்" என்று வேந்தன் கூறிட , "அண்ணா ப்ளீஸ் நான் சொல்றதை கேளு" என்றாள் சம்யுக்தா.
"என்ன சம்மு என்ன அவன் நீ சொல்லுவதை கேட்கவில்லை" என்று வந்தார் இராஜராஜன். "ஒன்றும் இல்லை அப்பா" என்றவள், "ஏன் இப்போ எல்லாம் உங்க முகம் வாட்டமாவே இருக்கு" என்றாள் சம்யுக்தா.
"உனக்கு தெரியாதா சம்மு அப்பா இந்த கல்யாண பேச்சு ஆரம்பித்ததில் இருந்து வாட்டமாக தான் இருக்காங்க" என்றான் வேந்தன். "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சம்மு நாளைக்கு என் பொண்ணோட பிறந்த நாள் அப்பா கூட என் மகளாக கொண்டாடுற கடைசி பிறந்த நாள். அடுத்த வருசம் அவனோட மனைவியா கொண்டாடுவ" என்று அவர் கூறிட , "அப்பா அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் நான் எப்பவுமே உங்க பொண்ணு சம்யுக்தா தான் அதை மறந்து விடாதீங்க" என்று அவரது மடியில் படுத்துக் கொண்டாள்.
"ஆமாம் தங்கம் நீ எப்பவுமே என் பொண்ணு தான்" என்ற இராஜராஜன், "சரி வா அப்பா உனக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறேன்" என்று அவளுக்கு உணவினை ஊட்டி விட்டார்.
"என்ன யோசனை" என்று கேட்ட மகேந்திரனிடம், "இல்லை உன் கல்யாணத்தை நிறுத்த வேந்தன் என்னமோ திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறான் என்று தகவல் வந்திருக்கு மாப்பிள்ளை" என்று மணிவண்ணன் கூறிட, "அப்படியா சரி அவனால் என்ன முடியுமோ பண்ணிக்கட்டும். அவனால் கண்டிப்பா என் கல்யாணத்தை நிறுத்தவே முடியாது" என்று கூறிவிட்டு, "நான் சொன்ன ஏற்பாடுகளை நீ முதலில் செய்" என்றான் மகேந்திரன்.
"அதெல்லாம் பக்காவாக செய்து விட்டேன் மாப்பிள்ளை" என்று கூறிவிட்டு மணிவண்ணன் சென்று விட மகேந்திரவர்மன் சந்தோஷமாக வீட்டிற்கு கிளம்பினான்.
"நான் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்கு தானே" என்ற வேந்தனிடம், "எல்லா
ம் நியாபகம் இருக்கு மாப்பிள்ளை" என்றான் அவனது தோழன் குமரன்.
....தொடரும்....