GG writers
Moderator
அத்தியாயம் 11
"என்ன இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ திட்டம் போட்டுட்டு இருக்கீங்க போல" என்று வந்தான் வெற்றி மாறன். "திட்டமா அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே" என்று வேந்தன் கூறிட, "என்ன மாப்பிள்ளை நீ உன் அண்ணன் கிட்ட ஏன் மறைக்கிற எல்லாம் நம்ம சம்மு கல்யாணத்தை நிப்பாட்ட தான் திட்டம் போட்டுட்டு இருக்கிறோம்" என்று உலறிக் கொட்டினான் போதையில் இருந்த குமரன்.
"என்ன சம்மு கல்யாணத்தை நிப்பாட்ட திட்டமா என்ன திட்டம்" என்று கேட்ட வெற்றிமாறனிடம் அந்த பண்ணை வீட்டின் உள்ளே கை காட்டினான் குமரன்.
அங்கு கை, கால்கள் கட்டப்பட்டு மயங்கி கிடந்தாள் இந்துமதி. "என்ன வேந்தா இதெல்லாம்" என்ற வெற்றிமாறனிடம், "இன்னும் இரண்டு நாளைக்கு இவள் இங்கே தான் இருக்கப் போகிறாள் குமரனோட பாதுகாப்பில்" என்றான் எழில் வேந்தன்.
"முட்டாளா டா நீ" என்ற வெற்றியிடம், "ஆமாம் அண்ணா முட்டாள் தான் என் தங்கச்சி கண்டிப்பா அந்த மகேந்திரன் வீட்டில் வாழக் கூடாது என் அப்பாவோட கவலையை போக்கனும்" என்று கூறினான் வேந்தன்.
"இவளை இரண்டு நாள் கடத்தி வச்சிட்டு குமரன் கூட ஓடிப் போய் விட்டாள் என்று கதை கட்டி விடுவோம். அப்பறம் அதையே சாக்காக வச்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுவோம். குமரனுக்கு அவள் மேல் காதலாம். அவன் காதலை சொன்னதற்கு அவளோட அண்ணன் கிட்ட சொல்லி குமரனை அடடிக்க வைத்து இருக்கிறாள். அதான் குமரனோட காதலும் ஜெயிக்கும், நம்ம சம்முவோட கல்யாணமும் நிற்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்ற வேந்தனின் கன்னம் பழுக்க அறைந்தான் வெற்றிமாறன்.
"ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்து தான் நம்ம தங்கச்சி வாழ்க்கையை காப்பாற்ற போறியா மனுசனாடா நீ" என்று கத்தினான் வெற்றிமாறன்.
"நான் மிருகம் தான் என் தங்கச்சியோட கல்யாணம் என் அப்பா விருப்பப்படி நடக்கனும் அதற்காக யாரை வேண்டுமானாலும் பழி கொடுக்க நான் தயங்க மாட்டேன்" என்று கூறினான் எழில் வேந்தன்.
"எங்கே டா இங்கே இருந்த அந்த குடிகார நாயைக் காணோம்" என்று வெற்றி கேட்டிட அந்த நேரம் பண்ணை வீட்டின் உள்ளே இருந்து இந்துமதியின் அலறல் சத்தம் கேட்டது.
"பொறுக்கி ,பொறுக்கி நீ பண்ணின காரியம்" என்று தம்பியை தள்ளி விட்டு அந்த வீட்டின் கதவினைத் தட்டிட உள் தாழ்ப்பாள் போட்டு இருக்கவும் கோபத்தில் தம்பியை நான்கு அடி அடித்து விட்டு தன் மொத்த பலத்தையும் திரட்டி கதவினை உடைக்கப் போராடினான்.
"பார்த்தியா நீ கூட்டிட்டு வந்த பொறுக்கியோட லட்சணத்தை" என்று கூறிவிட்டு கதவை உடைக்க போராடினான் வெற்றிமாறன். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வேந்தனும் தன் அண்ணனுடன் சேர்ந்து கதவினை உடைத்தான். இருவரும் தங்களது பலம் கொண்ட மட்டும் முட்டிட கதவு திறந்து கொண்டது.
அண்ணனும், தம்பியும் பேசிக் கொண்டு இருந்த நேரத்தில் அந்த வீட்டிற்குள் நுழைந்த குமரன் கதவினை தாழ் போட்டுவிட்டு இந்துமதியை நெருங்கினான்.
அன்று மகேந்திரவர்மன் தன்னை அடித்தது நினைவுக்கு வரவும் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்தான். மயக்கம் தெளிந்து அவள் கண் விழித்து பார்த்திட அவளது கை, கால்கள் கட்டப்பட்டு கிடப்பதை உணர்ந்து அவள் பார்வையை சுழல விட அவள் மீது மிருகம் போல பாய்ந்தான் குமரன். அவன் தன் மீது விழ பதறிப் போய் அலறினாள் இந்துமதி.
"என்னை எதற்கு இங்கே தூக்கிட்டு வந்து இருக்க" என்ற சம்யுக்தாவிடம் , "இதற்கு தான் டீ என் சண்டி ராணி" என்றவன் அந்த தோட்டத்து வீட்டின் மின் விளக்கினை ஒளிரச் செய்ய வீடு முழுவதும் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. பலூன்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டு வீட்டின் நடு ஹாலில் ஒரு மேஜையில் கேக் இருக்க, "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சம்யுக்தா ராணி" என்று அவன் கூறிட அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவனை அணைத்துக் கொண்டாள் சம்யுக்தா.
"என் அப்பா கூட நடு ராத்திரி பனிரெண்டு மணிக்கு எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது இல்லை" என்ற சம்யுக்தாவின் நெற்றியில் முத்தமிட்ட மகேந்திரவர்மன், "இந்த மாதிரி சர்ப்ரைஸ் எல்லாம் உன் அப்பாவுக்கு தெரியாது டீ அவரெல்லாம் ஓல்டு பீஸ். உன் மச்சான் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் பையன் டீ" என்றிட அவனை முறைத்தவள், "ஏதோ சொல்ல வர சரி , சரி வா எப்படி தூக்கிட்டு வந்தேனோ அப்படியே உன்னை உன் வீட்டில் விடனும் சீக்கிரம் கேக் வெட்டு" என்றான் மகேந்திரவர்மன்.
அவளும் கேக் வெட்டி அவனுக்கு ஊட்ட வர அதை வாங்கி அவளுக்கு ஊட்டி விட்டான். அவள் சுதாரிக்கும் முன் அவள் இதழில் தன் இதழை பதித்து அவள் வாயில் இருந்து கேக்கை தான் உண்டவன், "மாமனுக்கு கேக் நீ இப்படி ஊட்டி விடனும் கையால எடுத்து ஊட்டினாள் யாரு சாப்பிடுவாங்க" என்று அவன் கூறிட அவனை அடிக்க விரட்டினாள் சம்யுக்தா.
"பொறுக்கி ,பொறுக்கி எப்போ பாரு அசந்த நேரம் முத்தம் கொடுத்து கொண்டே இருக்கான்" என்று அவனை அடிக்க விரட்டியவள் அவன் பிடி படாமல் போய் விட அவன் மீது கேக்கை எறிந்தாள். அது அவன் முகத்தில் பட்டதும் அவள் கை தட்டி சிரிக்க ஆரம்பித்தாள்.
"அடிப்பாவி உன்னை" என்று அவனும் கேக்கை எடுத்து அவள் மீது எறிய அது அவள் முகத்தில் பட்டது. இப்படியே இருவரும் மாறி மாறி கேக்கை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டு இருந்தனர்.
இறுதி பீஸ் கேக்கினை அவள் வாயில் திணிக்க வந்தவன் தன் வாயில் திணித்திட இப்பொழுது அவன் இதழை தன் வசப்படுத்தி இருந்தாள் சம்யுக்தா.
அவளது முதல் முத்தம் அவளாகவே கொடுக்கும் இதழ் முத்தம் அவனுள் மின்சாரத்தைப் பாய்ச்சிட தன்னிலை மறந்து அவளது இடையில் கை வைத்தான். அவனது கை அவள் மேனியில் எல்லை மீறி பயணிக்க நினைக்க அவனது மொபைல் போன் ஒலித்திட அந்த சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தனர் இருவரும்.
"ஸாரிடீ" என்று அவன் அவளை விலகிட அவளுக்குத் தான் வெட்கம் பிடிங்கித் தின்றது. "ச்சே என்ன சம்மு நீ" என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள் சம்யுக்தா.
"என்ன சொல்றீங்க அம்மா நல்லா தேடிப் பார்த்தீங்களா" என்று கேட்டவன் , "ஒரு பத்து நிமிசத்தில் வீட்டுக்கு வரேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தவன், "சம்மு வா உன்னை வீட்டில் விடுகிறேன்" என்று கூறினான்.
"என்ன ஆச்சு ஏன் பதட்டமா இருக்க" என்ற சம்யுக்தாவிடம், "இந்துவை வீட்டில் காணோமாம் அம்மா போன் பண்ணி அழுதாங்க" என்று அவன் கூறிட, "ஐயோ ச்சே" என்றாள் சம்யுக்தா.
"என்ன" என்று அவன் கேட்டிட , "இந்துவை என் அண்ணா தான் கடத்தி வச்சுருக்கு" என்றாள் சம்யுக்தா. "என்ன உன் அண்ணன் கடத்தி வச்சிருக்கானா உனக்கு எப்படி தெரியும்" என்ற மகேந்திரனிடம், "நம்ம கல்யாணத்தை நிறுத்த இந்துவை கடத்தப் போறேன்னு என் அண்ணன் சொன்னுச்சு நான் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் அது இப்படி பண்ணிருச்சு போல" என்று அவள் கூறிட அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தான் மகேந்திரவர்மன்.
"உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் தான்னு அவன் கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே டீ , ஏற்கனவே அந்த பொறுக்கி பண்ணின வேலையால் தான் என் தங்கச்சி சாகவே துணிந்தாள் ச்சே" என்று கத்தியவன் வந்து தொலை என்று அவளை தன்னோடு அழைத்துச் சென்று அவள் வீட்டில் இறக்கி விட்டவன், "இராஜராஜன்" என்று கத்தினான்.
"இந்த நேரத்தில் யாரு இப்படி கத்துவது" என்று உறக்கம் கலைந்து எழுந்தார் இராஜராஜன். "மகி ஏன் கத்துற நீ கிளம்பு என் அண்ணன் பண்ணை வீட்டில் தான் இருக்கும்" என்று அவள் கூறிட அவளைத் தீயென முறைத்தவன் மீண்டும் கத்திட இராஜராஜன் எழுந்து வந்தார்.
தந்தையின் அறையில் விளக்கு எரிவதைக் கண்டதுமே வீட்டிற்குள் ஓடிச் சென்றாள் சம்யுக்தா.
"இந்த நேரத்தில் இங்கே வந்து ஏன் கத்திட்டு இருக்க" என்ற இராஜராஜனிடம், "நீங்கள் எல்லாம் ஒரு பெரிய மனுசனா அன்னைக்கு போட்டியில் என்னை தோற்கடிக்க மாட்டுக் கொம்பில் விஷத்தை தடவுனீங்க, இன்னைக்கு என் கல்யாணத்தை நிறுத்த என் தங்கச்சியோட மானத்தோடு விளையாடுறீங்க அசிங்கமா இல்லை" என்றான் மகேந்திரவர்மன்.
"மகேந்திரா என்ன சொல்லுறப்பா நீ" என்ற வானதியிடம் , "உங்க மகன் வெற்றிமாறன் எங்கே அத்தை" என்றான் மகேந்திரவர்மன். "எங்கேயோ வெளியே போறேன்னு சொன்னான்" என்று வானதி கூறிட , "என் தங்கச்சியை கடத்திட்டு போய் இருக்கிறான்" என்று கூறினான் மகேந்திரவர்மன்.
"என்ன உலறிட்டு இருக்க என் மகன் மாறன் கண்டிப்பா உன் தங்கச்சியை கடத்தி இருக்க மாட்டான்" என்று இராஜராஜன் கூறிட , "உங்க பொறுக்கி பையன் கண்டிப்பா கடத்தி இருப்பான் ஏற்கனவே ஒரு முறை என் தங்கச்சி கிட்ட தப்பா நடந்துக்கிட்டவன் தான் உங்க உத்தமபுத்திரன்" என்ற மகேந்திரவர்மன் எல்லாவற்றையும் கூறிட இராஜராஜன், வானதி இருவரும் அதிர்ந்து போயினர்.
"இப்போ என் கூட வாங்க உங்க மகனோட இலட்சணத்தை காட்டுகிறேன்" என்று அழைத்திட, "இப்போதும் சொல்கிறேன் என் மகன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றார் இராஜராஜன்.
குமரனை ஒரு எத்து விட்டான் வெற்றிமாறன். அவன் சுருண்டு போய் விழ அவனை மேலும், மேலும் மிதிக்க ஆரம்பித்தான். "என்னடா இவளை கடத்திட்டு வந்து இரண்டு நாள் வச்சுக்க சொல்லிட்டு இப்போ இப்படி அடிக்கிறீங்க" என்று குமரன் கூறிட இந்துமதி அதிர்ச்சியில் உறைந்து விட்டாள்.
"நல்லவன் மாதிரி என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி விட்டு எவ்வளவு மோசமான ஒரு விசயத்தை பண்ணி இருக்கிறான்" என்று அவள் வெற்றிமாறனை அருவருப்பாக பார்த்துக் கொண்டு இருந்தாள். அவனோ அவளது கை, கால்களில் கட்டி இருந்த கட்டுக்களை அவிழ்த்து விட்டுக் கொண்டு இருந்தான்.
வேந்தனோ குமரனை வெளியே இழுத்துச் சென்று அடி பிரிக்க ஆரம்பித்தான். "ஏன்டா பொறுக்கி அவளை பத்திரமாக பார்த்துக்க சொல்லி தானே டா உன்னை அழைத்துக் கொண்டு வந்தேன் இப்படி அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்க பார்க்கிற" என்று வெளுக்க ஆரம்பித்தான்.
வெற்றி மாறனின் சட்டையைப் பிடித்து "ஏன் டா இப்படி ஒரு கேவலத்தை எனக்கு பண்ண துணிந்த" என்று அடித்துக் கொண்டு இருந்தாள் இந்துமதி. அந்த நேரம் சரியாக மகேந்திரவர்மன், இராஜராஜன் இருவரும் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர்.
.... தொடரும்....