வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இதயத்தில் தைத்தாய் இதமான முள்ளை...(12)

GG writers

Moderator
அத்தியாயம் 12

"என்ன நடக்கிறது மாறா என் பையன் நீ ஒரு பொண்ணை கடத்திட்டு வந்து இருக்கியா" என்ற இராஜராஜனின் குரலில் அதிர்ந்து திரும்பினான் வெற்றிமாறன். "அப்பா" என்று அவன் அதிர்ந்து போய் இருக்க வேகமாக வந்த மகேந்திரவர்மன் அவனை தீயென முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். தன் அண்ணனைக் கண்ட இந்துமதி ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.


"அண்ணா ப்ளீஸ் என்னை கொன்னுருங்க என்னால வாழவே முடியாது எனக்கு இன்னும் என்னென்ன அவமானத்தை தான் இவன் கொடுப்பானோ தெரிய வில்லை" என்று அழுதாள் இந்துமதி.

கோபத்துடன் வந்த இராஜராஜன் மகனை கண்டபடி அடித்து வெளுத்து விட்டார். தன் இடைவாரை கழட்டி அவனை அடி வெளுத்து விட்டார். அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டு அவன் அமைதியாக நின்றிருக்க , "என்ன பண்ணுறீங்க நீங்க அவனை அடித்தே கொல்ல போறிங்களா" என்றான் மகேந்திரவர்மன்.

"என் மானத்தை வாங்கிய இவனை அடித்துக் கொன்றால் தான் என்ன" என்று இராஜராஜன் கூறிட , "என்ன இராஜராஜன் உங்க மகனை கொன்று விட்டால் அந்த பொண்ணு பட்ட அசிங்கம் இல்லை என்று ஆகிடுமா" என்ற குரலில் திரும்பினார் இராஜராஜன்.

ஊர் பஞ்சாயத்து ஆட்களுடன் இன்னும் சிலரும் வந்திருக்க இந்துமதி தான் கூனிக் குறுகிப் போனாள். "அவள் வெற்றிமாறனை அடித்தாலும் விடியும் முன் யாருக்கும் தெரியாமல் தன் வீட்டிற்கு சென்று விடலாம்" என்றே நினைத்தாள். "ஆனால் ஊரே திரண்டு அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க அவளுக்கு இந்த நிமிடமே செத்துப் போய் விட்டால் என்ன" என்று தான் தோன்றியது அவளுக்கு.

தன்னை ஒருவனை வைத்து சீரழிக்க இருந்ததை நினைத்தாலே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. இனி அந்த விசயத்தை ஊரார் முன்னிலையில் கூறினால் அதை நினைத்தாலே அவளுக்கு அவமானமாக இருந்தது.


கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டு இருந்த தன் தங்கையை அணைத்து ஆறுதல் கூறினான் மகேந்திரவர்மன். தன் தங்கையைப் பற்றி நன்கு அறிந்தவனாயிற்றே அவளது இந்த எண்ணங்கள் அவளை கட்டாயம் தற்கொலை செய்ய தான் தூண்டும் என்று நினைத்து கவலை அடைந்தான்.

அவனுக்கு வெற்றி மாறனின் மீது கோபம் தான் ஆனாலும் அவன் மீது கை வைத்திட அவன் நினைக்க வில்லை. இராஜராஜன் வேறு அவனை அடித்து இருக்க இவனோ அமைதியாகி விட்டான்.


ஊரார் எதுவாக இருந்தாலும் நாளை பஞ்சாயத்தில் பேசலாம் என்று கூறிவிட்டு சென்று விட இராஜராஜனுக்குத் தான் அவமானமாக இருந்தது.

வீட்டிற்கு வந்த இந்துமதியை கட்டிக் கொண்டு, "எங்கே போன இந்து" என்று அழுதார் வைதேகி. அவள் எதுவும் பேசாமல் மௌனமாக கண்ணீர் வடிக்க, "வைதேகி அவளை விடு நான் சொல்கிறேன்" என்று இராமச்சந்திரன் கூறிட வைதேகியும் மகளை அறைக்குள் அனுப்பி வைத்தார்.

தங்கையை விட்டு பிரியவே கூடாது என்று மகேந்திரவர்மன் அவள் அருகிலேயே இருந்தான். "அண்ணா நீ போ என்று அவள் கூறிட எதற்கு நீ தற்கொலை செய்து கொள்ளவா இதோ பாரு இந்து நீ மட்டும் சாக நினைத்த அப்படீன்னா உன் கூடவே நான், அம்மா, அப்பா மூன்று பேரும் சேர்ந்து செத்துப் போய் விடுவோம்" என்று கூறினான் மகேந்திரவர்மன்.

"அண்ணா" என்று அவள் ஏதோ சொல்ல வர , "அவன் உன்னை கடத்திட்டு போனான் அவ்வளவு தான் உனக்கு எதுவுமே நடக்கவில்லை. அப்பறம் ஏன் நீ சாகனும். தப்பே பண்ணாமல் நீ ஏன் சாக நினைக்கிற எனக்கு புரியவில்லை. என் தங்கச்சி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு நீ தற்கொலை முயற்சி பண்ண மாட்டன்னு" என்று அவன் கூறிட அவள் அவனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளை ஒருவாறு சமாதானம் செய்து விட்டு வெளியே வந்தான் மகேந்திரவர்மன்.

"என்ன சொல்றீங்க நீங்க, என் அண்ணன் பையன் இவ்வளவு மோசமானவனா" என்ற வைதேகியிடம், "உன் அண்ணன் மட்டும் யோக்கியமா" என்று இராமச்சந்திரன் ஏதோ சொல்ல வர, "அப்பா" என்று வந்தான் மகேந்திரவர்மன். "என்ன என் அண்ணன் யோக்கியமான்னு ஏதோ சொல்ல வந்தீங்க" என்ற வைதேகியிடம், "ஒன்றும் இல்லை அம்மா நிச்சயதார்த்தம் அப்போ அவரு உங்க கிட்ட கோபமாக பேசினாரே அதான்" என்று கூறியவன், "அம்மா எதையும் யோசிக்காமல் நீங்க தூங்குங்க" என்று கூறினான்.

"பஞ்சாயத்தில்" என்று வைதேகி ஏதோ சொல்ல வர , "அதை எல்லாம் இப்போது பேச வேண்டாம்" என்று மனைவியை அழைத்து சென்றார் இராமச்சந்திரன்.

அவனது மொபைல் ஃபோன் ஒலித்திட அதில் அவளது எண் தெரிய அவன் கட் செய்து விட்டான். மீண்டும் மீண்டும் ஃபோன் ஒலித்திட கடுப்பானவன் ஃபோனை அட்டன் செய்தவன், "என்ன விஷயம் ஏன் திரும்ப திரும்ப ஃபோன் பண்ணிட்டு இருக்க நான் தான் கட் பண்ணி விடுகிறேன்ல" என்றான் மகேந்திரவர்மன்.

"மகி நான் சொல்லுறதைக் கொஞ்சம் காது கொடுத்து கேளு" என்றாள் சம்யுக்தா. "எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமே நீதான் சம்யுக்தா. நீ மட்டும் உன் முட்டாள் அண்ணன் கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க நீயும் விருப்பப்படுறன்னு சொல்லி இருந்தால் அந்த முட்டாள் என் தங்கச்சியை கடத்தி இருக்க மாட்டான்" என்று அவன் பொரிந்து தள்ளிட, "நான் பண்ணினது தப்பு தான் ஆனால் எனக்கு உன்னை பிடிச்சிருக்குங்கிறதே நீ என்னை அடிச்சதுக்கு அப்பறம் தான் நானே முழுசா உணர்ந்தேன் அப்படி இருக்கும் பொழுது எப்படி அவங்க கிட்ட சொல்ல முடியும்" என்றாள் சம்யுக்தா.

"சரி உன் அண்ணன் இப்படி ஒரு விசயம் பண்ண போறான்னு உனக்கு தெரியும் தானே அட்லீஸ்ட் அதை என்கிட்டயாவது சொல்லி இருக்கலாமே டீ இதோ பாரு சம்யுக்தா உன் அண்ணன் பண்ணின காரியத்தால என் இந்து எதுவும் தப்பான முடிவு எடுத்துவிட்டாள்னுவை காலத்திற்கும் உன்னை மன்னிக்கவே மாட்டேன். நீயும் ஒரு பொண்ணு தானே உன்னை யாராவது இப்படி கடத்திட்டு போயி ஏதோ ஒரு பொறுக்கியை உன் அறைக்குள் அனுப்பி உன் வாழ்க்கையை சீரழிக்க நினைத்தால் உனக்கு எப்படி இருக்கும் எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு உன் அண்ணன் வெற்றிமாறனை வெட்டி கொன்னுருப்பேன். உன் மேல ஆசை வைத்து தொலைந்து விட்டேன் அதனால் தான் அவன் உயிரோட இருக்கான்" என்றான் மகேந்திரவர்மன்.

"மாறன் அண்ணனா என்ன பேசுற மகி வேந்தன் அண்ணன் தானே இந்துமதியை கடத்தப் போறேன்னு சொன்னுச்சு" என்று சம்யுக்தா கூறிட , "என்னடீ சொல்லுற" என்றான் மகேந்திரவர்மன்.

"சும்மா ஒரு பேச்சுக்கு வேந்தன் அண்ணா இந்துமதியை கடத்தனும் என்று சொன்னதுக்கே அவரை மாறன் அண்ணா அடிச்சுருச்சு அது போயி எப்படி கண்டிப்பா ஏதோ குழப்பம் இருக்கிறது. என் அண்ணன் ரொம்ப நல்லவரு மகி" என்று சம்யுக்தா கூறிட , "என்னடீ புதுசு புதுசா கதை சொல்லிட்டு இருக்க" என்ற மகேந்திரவர்மன் , "சரி நீ ஃபோனை வை நான் பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தான்.

"அண்ணனும், தம்பியும் சேர்ந்து என்னையவா அடிக்கிறீங்க வச்சேனா ஆப்பு ஊரைக் கூட்டிட்டு வந்து. நாளைக்கு பஞ்சாயத்துல சாவுங்கடா" என்று நினைத்துக் கொண்டு இருந்தான் குமரன்.

"அண்ணா வா வீட்டுக்கு போகலாம் அப்பா கிட்ட எல்லா விசயங்களையும் சொல்லுவோம். உன் மேல எந்த தப்பும் இல்லை என்று சொல்லுவோம்" என்று எழில் வேந்தன் கூறிட, "எதுவும் சொல்ல வேண்டாம் விடு" என்றான் வெற்றிமாறன்.


"என்ன அண்ணா நீ தப்பு பண்ணினது நான் நீ ஏன் அடி வாங்கி அவமானம் படணும்" என்று எழில் வேந்தன் கூறிட, "விடு வேந்தா நான் தான் சொல்றேன்ல எதுவும் யாருக்கும் எப்பவுமே தெரிய வேண்டாம். அப்பா கிட்ட இப்போ இதை சொன்னால் ரொம்ப நொந்து போய் விடுவாரு. ஏற்கனவே நான் இந்துமதிகிட்ட தப்பா நடந்துக் கிட்ட விசயத்தை வேற கோபத்தில் மகேந்திரன் சொல்லி விட்டான். அதனால இந்த விசயமும் நான் செய்ததாகவே இருக்கட்டும் நீ உன்னை இதில் இழுத்து விட்டு அப்பாவை காயப் படுத்த வேண்டாம்" என்று சொல்லி விட்டு எழுந்து சென்றான் வெற்றிமாறன்.


"என்னங்க இப்படி இடிஞ்சு போய் இருக்கீங்க" என்ற வானதியிடம், "என்ன செய்ய சொல்லுற வானதி நம்ம மகன் மாறனா இப்படி ஒரு காரியத்தை பண்ணி இருக்கான் என்னால நினைச்சு கூட பார்க்க முடிய வில்லை. அந்த பொண்ணு என் வாழ்க்கையை கெடுத்துட்டியேடா பாவின்னு சொல்லி அழும் போது எனக்கு நம்ம சம்மு அழுவது போல தான் இருந்துச்சு. நம்ம சம்மு வயசு தானே அந்த பொண்ணுக்கும் நம்ம பொண்ணுக்கு இப்படி நடந்தால் நம்ம ஏத்துப்போமா எனக்கு கூட தான் சம்முவோட கல்யாணத்தில் விருப்பம் இல்லை ஆனால் அந்த பையன் நேர்மையா போட்டியில் ஜெயிச்சு தானே வந்து பொண்ணு கேட்டான் நம்ம பையன் மாதிரி பொண்ணை கடத்திட்டு போகலையே" என்று நொந்து கொண்டார் இராஜராஜன்.

"ஊரே காரித் துப்பிருச்சு எதற்காக வாழனும் என்று தான் தோன்றுகிறது" என்று இராஜராஜன் கூறிட , "என்னங்க பேசுறீங்க" என்ற வானதிக்கும் வார்த்தைகள் வரவில்லை. மௌனமாக கண்ணீர் சிந்தினார்.

"ஊரைக் கூட்டி நிச்சயம் பண்ணின சம்முவோட கல்யாணமும் நின்று போய் விடுமோ என்று வேறு எனக்கு பயமா இருக்கு வானதி" என்றார் இராஜராஜன். "அப்படி நின்று போனால் உங்களுக்கு சந்தோஷம் தானே" என்ற வானதியிடம், "என் பொண்ணு செத்துப் போய் விடுவாள் வானதி" என்று கூறினார் இராஜராஜன்.

"என்ன சொல்றீங்க" என்ற வானதியிடம், "நம்ம சம்முவுக்கு மகேந்திரனை பிடித்திருக்கு. என் மகளுக்கு அவன் கூட வாழ்வது தான் சந்தோஷம்" என்ற இராஜராஜன் , "நம்ம பையன் பண்ணின காரியத்தால்" என்று வருந்திட, "எனக்கு நம்பிக்கை இருக்குங்க கண்டிப்பா நம்ம பொண்ணு கல்யாணம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடக்கும்" என்று கூறி கணவனை சமாதானம் செய்தாலும் அவருக்குமே கவலையாகத் தான் இருந்தது.


இங்கே வெற்றிமாறனோ ஒரு முடிவுடன் தானே குற்றவாளியாக மாறிட முடிவு எடுத்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.


"இந்து கிளம்பி வா" என்று மகேந்திரவர்மன் அழைத்திட , "அண்ணா நான் பஞ்சாயத்துக்கு வந்து அசிங்கப் பட விரும்பவில்லை" என்று அவள் கூறிட, "நான் தான் சொல்றேன்ல வா" என்று தங்கையை அழைத்துக் கொண்டு சென்றான் மகேந்திரவர்மன்.


அங்கே பஞ்சாயத்தில் செய்யாத தவறுக்கு பழியை ஏற்றுக் கொண்ட வெற்றிமாறனோ...


... தொடரும்...




























 
Top