வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இதயத்தில் தைத்தாய் இதமான முள்ளை...(14)

GG writers

Moderator
அத்தியாயம் 14


"உன்னை நம்புறதுனால தான் சாகவே முடிவு பண்ணினேன்" என்றாள் சம்யுக்தா. "என்ன சொல்லுற டீ" என்றவனிடம், "உன்னை ரொம்ப நம்புகிறேன் மகி உன் அப்பா பேச்சை மீறி நீ என்னை கல்யாணம் பண்ணி உன் வீட்டில் இன்னும் பிரச்சனை வந்து விடக் கூடாது அதனால் தான் நான் செத்துப் போய் விட்டால் என்ன என்று நினைத்தேன்" என்றாள் சம்யுக்தா.


"பைத்தியமாடீ நீ இதோ பாரு உன்னை இப்போ நான் கல்யாணம் பண்ணி அழைத்துக் கொண்டு போனால் கூட என் அப்பா ஏத்துப்பாரு ஆனால் அவரு வருத்தப்படுவாரு. அது மட்டும் இல்லை இப்போ இருக்கிற சூழ்நிலையில் நம்ம கல்யாணம் தள்ளிப் போனது தான் நல்லது. இரண்டு குடும்பத்திலும் இருக்கிற கசப்பு கொஞ்சம் குறையட்டும் அப்பறம் நம்ம கல்யாணம் நடக்கட்டும். இதோ பாரு டீ இந்த ஜென்மத்தில் நீ மட்டும் தான் என் பொண்டாட்டி அதை உன் மனசுல நல்லா பதிய வச்சுக்கோடி. இன்னொரு முறை சாகப் போறேன்னு சொன்ன அவ்வளவு தான் உன் கழுத்தை நெறிச்சு நானே கொன்னுருவேன்" என்றான் மகேந்திரவர்மன்.


"என் மேல உனக்கு கோபமா மகி" என்று அவள் கேட்டிட, "உன் மேல இருக்கிற கோபத்திற்கு உன்னை அடிச்சே கொல்லனும் போல தான் இருக்கு. இப்போ நடந்த எல்லா பிரச்சினைகளுக்கும் மூலக் காரணம் நீ தான். நீ மட்டும் உன் அண்ணன் முட்டாள் பையன் அந்த வேந்தன் கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கிறதில் முழு சம்மதம் தான் என்று சொல்லி தொலைந்து இருந்தால் அவன் இந்துவை கடத்தி இருக்க மாட்டான். உன் மூத்த அண்ணன் தியாகச் செம்மல் தம்பியை காப்பாத்துறேன்னு என் தங்கச்சி கழுத்தில் தாலி கட்டி இருக்க மாட்டான். தம்பியை காப்பாற்ற பழி ஏத்துக்கிட்டான் சரி ஏன் இந்து கழுத்தில் தாலி கட்டினான் இவனை எல்லாம் என்ன செய்வது இப்படியா டி குடும்பமே முட்டாளா இருப்பீங்க. பிடிக்காத பொண்ணுக்கு கட்டாயத் தாலி கட்டினால் அவள் எப்படி அவன் கூட சேர்ந்து வாழுவாள்" என்ற மகேந்திரவர்மனிடம் , "அதான் உன் தங்கச்சி புருஷன் கூட தான் போவேன்னு சொல்லிட்டாளே" என்றாள் சம்யுக்தா.

"நம்ம கல்யாணம் நல்லபடியா நடக்கணும் அதுக்கு தான் என் தங்கச்சி உன் அண்ணன் கையை பிடித்துக் கொண்டு போனாள். என் அப்பா மட்டும் நமக்கு நடந்த நிச்சயதார்த்தை முறிந்து போச்சு என்று சொல்லாமல் இருந்திருந்தால் உன் அண்ணன் கட்டின தாலியை கழற்றி எறிந்துவிட்டு இந்து வந்திருப்பாள். என்ன ஒன்று அதற்கு பிறகு அவள் வாழவே மாட்டாள் செத்துப் போய் இருப்பாள்" என்றான் மகேந்திரவர்மன்.

"உன் அண்ணன் அவளுக்கு முத்தம் கொடுத்ததுக்கே கிணற்றில் குதித்து சாகப் பார்த்தவள்" என்று அவன் கூறிட, "எனக்கு கூட தான் நீ முத்தம் கொடுத்த அதுவும் என் விருப்பம் இல்லாமல் அப்போ நான் எந்த கிணற்றில் குதிக்கனும்" என்று சம்யுக்தா கேட்டிட , "ஏன் டீ" என்றான் மகேந்திரவர்மன்.

"பின்னே என் அண்ணன் பண்ணினது தப்புனா அப்போ நீ பண்ணியது மட்டும் சரியா" என்று அவள் கேட்டிட , "நீ என் பொண்டாட்டி டீ" என்றான் மகேந்திரவர்மன். "உன் தங்கச்சி கூட என் அண்ணனுக்கு பொண்டாட்டி தான் உன் தங்கச்சி கிட்ட சொல்லி வை ஒருவேளை நம்ம கல்யாணம் முடிந்த பிறகு அவள் மட்டும் என் அண்ணன் கட்டுன தாலியை கழட்டி கொடுத்து விட்டு சாகனும்னோ, இல்லை வாழாவெட்டியாகவோ உன் வீட்டிற்கு வந்தாள் அவ்வளவு தான் காலம் முழுக்க உனக்கு திண்ணையில் தான் தூக்கமே" என்று எச்சரித்தாள் சம்யுக்தா ராணி.

"அடிப்பாவி சண்டி ராணி உன் புருஷன் பாவம் இல்லையா" என்று கேட்ட மகேந்திரவர்மனிடம் , "என் அண்ணன் கூட தான் பாவம்" என்ற சம்யுக்தா ஏதோ சொல்ல வர , "முதலில் கையை கழுவுடீ அரளி விதையை அரைத்து வச்சுருக்க தெரியாமல் என் வாயில் தடவி விட்டுறாதே ஏற்கனவே உன் அப்பனும், அண்ணனும் வச்ச விஷத்தில் பிழைத்து வந்துட்டேன் இப்போ நீயும் வைக்காதே" என்று அவன் கூறிட அவனை முறைத்தாள் சம்யுக்தா.


"உன்னை எல்லாம் உயிரோட விட்டது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம்" என்று அவள் கூறிட, "என்ன பண்ணட்டும் செல்லம் உன் தாலி கெட்டி போல "என்ற மகேந்திரவர்மன், "சரி ஒழுங்கா வீட்டுக்கு போய் சேரு" என்றான்.

"நீ என்னை வீட்டில் கொண்டு வந்து விட‌ மாட்டியா மகி" என்று அவள் கேட்டிட , "சரி வா" என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றான் மகேந்திரவர்மன்.

"சரி டீ நீ உள்ளே போ" என்று அவன் கூறிட , "நீயும் வா" என்றாள் சம்யுக்தா. "இல்லை டீ புரிஞ்சுக்கோ" என்று அவன் கூறிட அவளும் அமைதியாக வீட்டிற்குள் சென்றாள்.

"இந்து" என்று அவன் அழைத்திட அவனது கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தாள் இந்துமதி. "பொறுக்கி, பொறுக்கி உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன். என் வாழ்க்கையில் நான் பண்ணின ஓரே தப்பு அன்னைக்கு உன் கிட்ட வம்பு இழுத்தது மட்டும் தான் அதற்காக இப்படி என் வாழ்க்கையையே பழி வாங்கிட்டியேடா" என்று அழுதாள் இந்துமதி.

"இந்து நான் சொல்லுவதை" என்று அவன் கூறிட , "இதோ பாரு நான் உயிரோட இருக்க வேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து என் கிட்ட நெருங்காதே" என்று எச்சரித்தவள் , "உன் வீட்டிற்கு நான் வாழ வந்ததுக்கு ஒரே ஒரு காரணம் என் அண்ணனுக்கு உன் தங்கச்சி கூட கல்யாணம் நடக்க வேண்டும் . என் அப்பா மட்டும் என் அண்ணன் கல்யாணம் நடக்காது என்று சொல்லாமல் இருந்திருந்தால் நீ கட்டுன இந்த சுறுக்கு கயிறை கழற்றி உன் மூஞ்சியிலேயே விட்டு எறிந்து விட்டு என் உயிரை மாய்ச்சுருப்பேன். இப்போவும் சொல்கிறேன் கேளு என் அண்ணன் கல்யாணம் நின்று போகனும் என்று தானே அண்ணனும், தம்பியும் சேர்ந்து என்னை கடத்தி என் வாழ்க்கையை அழிச்சீங்க. என் அண்ணனுக்கும், உன் தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணி வைக்காமல் நான் விடவே மாட்டேன். உன்னையும், உன் தம்பியையும் ஜெயிக்க விடவே மாட்டேன்" என்று கூறிவிட்டு அவள் முழங்கால்களை கட்டிக் கொண்டு அழுது கொண்டே இருந்தாள்.


"என்ன சம்மு எங்கே போன" என்ற வானதியிடம், "மனசு சரியில்லை அதனால கோவிலுக்கு போயிட்டு வந்தேன்" என்று சொல்லி விட்டு தன் அறைக்குள் அடைந்து கொண்டாள் சம்யுக்தா.


"அண்ணா ஏன் அந்த பொண்ணு கழுத்தில் தாலி கட்டினீங்க நான் பண்ணின தப்புக்கு நீங்கள்" என்ற வேந்தனிடம், "விடு வேந்தா இதைப் பற்றி மேலும் பேச வேண்டாம்" என்று கூறிவிட்டு , "சம்மு எங்கே" என்றான் வெற்றிமாறன்.

"ரூம்ல இருப்பாள்" என்ற எழில் வேந்தன் "கெட்டதிலும் ஒரு நல்லது நம்ம சம்முவோட கல்யாணம் நின்று போனது" என்று கூறிட , "சம்மு மனசுல அவன் இல்லை என்று நீ நினைக்கிறியா" என்றான் வெற்றிமாறன்.

"ஆமாம்" என்று வேந்தன் ஏதோ கூற வர, "சம்மு மகேந்திரனை விரும்புகிறாள்" என்றான் வெற்றிமாறன்.

"என்ன சொல்றீங்க அண்ணா" என்று அவன் அதிர்ந்து போய் கேட்டிட, "ஆமாம் நம்ம சம்முவோட மனசுல அவன் தான் இருக்கிறான். நீ அவசரப் படாமல் இருந்திருக்கலாம் வேந்தா நம்ம சம்முவோட கல்யாணம் நின்று போய் இருக்காது" என்று வருந்தினான் வெற்றிமாறன்.

"இன்னைக்கு சம்முவோட பிறந்த நாள் ஆனால் அதை கொண்டாட முடியாமல் எல்லாம் கை மீறிப் போச்சு" என்று வருந்தினான் வெற்றிமாறன். "எழில் வேந்தனும் வருந்தினான் தங்கையின் விருப்பம் முன்னமே தெரிந்து இருந்தால் இத்தனை பிரச்சினைகளை இழுத்து விட்டு இருக்க மாட்டேனே அவள் ஏன் கூறவில்லை" என்று பலவாறு யோசித்துக் கொண்டிருந்தான்.


"என்ன மாப்பிள்ளை இங்கே வந்து இருக்க வீட்டுக்கு போக வில்லையா" என்ற மணிவண்ணனிடம் , "அந்த நாயி எங்கே" என்றான் மகேந்திரவர்மன். "அவனை அடித்து தோலை உரித்து வைத்து இருக்கிறேன்" என்று மணிவண்ணன் கூறிட , "அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் தங்கச்சி மேல கை வைக்க நினைத்து இருப்பான் அவன் கையை என் கையாலையே முறிச்சு போடனும்டா" என்றான் மகேந்திரவர்மன்.

"மாப்பிள்ளை ஏற்கனவே அவனை நான் அடித்த அடியில் சுருண்டு கிடக்கிறான். நீ இருக்கிற கோபத்திற்கு அவனை கொன்று விடுவ அதனால் நீ வீட்டுக்கு போ அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றான் மணிவண்ணன்.

"இல்லைடா" என்று அவன் ஏதோ சொல்ல வர , "அம்மா, அப்பா சாப்பிட்டு இருக்க மாட்டாங்கடா தங்கச்சியை நினைத்து அழுதுட்டு இருப்பாங்க இந்த நேரத்தில் நீ தான் அவங்களுக்கு ஆறுதலா இருக்கனும்" என்று தோழனை அனுப்பி வைத்த மணிவண்ணன் ஏற்கனவே அடி வாங்கி கிடக்கும் குமரனை அடித்து தூக்கி ஊர் கோடியில் எறிந்து விட்டு சென்று விட்டான்.

போதையில் இருந்த காரணத்தால் குமரனுக்கு தன்னை யார் அடித்தார்கள் என்று எதுவும் தெரியவில்லை. தன் தங்கை நடந்த விஷயங்களை கூறவுமே மகேந்திரவர்மன் அந்த குமரனை தூக்கி விட்டான். போதை தெளிய விடாமல் சரக்கை கொடுத்து கொடுத்து ஒரு நாள் முழுக்க அவனை அடித்து உறித்து விட்டான் மணிவண்ணன்.


கதவு தட்டும் ஓசை கேட்டதும் எழுந்து கொண்ட இந்துமதி சென்று கதவைத் திறந்தாள்.‌ வானதி நின்றிருந்தார். "என்னம்மா நீ வந்ததில் இருந்து ரூம் உள்ளேயே அடைந்து கிடக்க சாப்பிட வா" என்றார் வானதி.

"எனக்கு வேண்டாம் அத்தை" என்றாள் இந்துமதி. "ஏன் வேண்டாம்" என்ற வானதியிடம், "பசி இல்லை அத்தை" என்றாள் இந்துமதி.

"இதோ பாரு இந்து எனக்கு புரியுது உனக்கு என் பையன் பண்ணினது பெரிய அநியாயம் அதை உன்னால அவ்வளவு சீக்கிரம் மன்னித்து ஏற்றுக் கொள்ள முடியாது தான் ஆனால் அதற்காக பட்டினி கிடந்து உன் உடம்பை ஏன் கெடுத்துக்கிற நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை எல்லோருக்கும் பசிக்க தான் செய்யும் நீ என்ன இரும்பு மனுசியா உனக்கு பசிக்காமல் போக அதனால் ஒழுங்கா வந்து சாப்பிடு" என்று அவளை அழைத்தார் வானதி.

அவளும் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருப்பதால் பசி எடுக்க தான் செய்தது இருந்தாலும் சாப்பிட மனம் இல்லை. அவர் வற்புறுத்திட வேறு வழி இல்லாமல் அவருடன் சென்றாள்.

... தொடரும்...
 
அது எப்படி சண்டிராணி எல்லா தப்புக்கு மூல காரணமாக இருந்துட்டு இப்போதும் தெரியாது மாதிரி நான் சாகுறேன்னு சொல்லிட்டு இருக்க.
எல்லாருமே சேர்ந்து இந்தவ பலியாடா மாத்திட்டாங்க பாவம் இந்து
 
Top