வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இதயத்தில் தைத்தாய் இதமான முள்ளை..(2)

GG writers

Moderator
அத்தியாயம் 2

"ஜல்லிக்கட்டுக்கு இந்த வருஷம் நீங்க என்ன பரிசு கொடுக்கப் போறிங்க இராஜராஜன்" என்று ஊர் பெரியவர் ஒருவர் கேட்டிட , "அண்ணன் என்ன பரிசு அறிவித்தால் என்ன மாமா அவரு காளையை இதுவரை எவனும் அடக்கினது இல்லையே" என்றார் கூட்டத்தில் ஒருவர்.


"அட சும்மா இருப்பா" என்ற இராஜராஜனோ , "இந்த முறையும் அதே பத்து பவுன் தங்கச் சங்கிலி தான் மாமா" என்றார்.


"வெறும் தங்கச் சங்கிலி மட்டும் பரிசா அறிவித்தால் எவன் காளையை அடக்க வருவான்" என்றான் மகேந்திரவர்மனின் தோழன் மணிவண்ணன். "அப்போ இந்த முறை என் காளையை அடக்கினால் கார் பரிசா தரேன் தம்பி" என்றார் இராராஜன்.



"ஐயா உங்க வீட்டு மாடு ப்ரூஸ்லீ குத்தினால் உயிரே போனாலும் ஆச்சரியம் இல்லை அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கிறோம் நீங்க என்னடான்னா சும்மா தங்கச் சங்கிலி, கார் தரோம்னு சொல்லிட்டு இருக்கீங்க உங்களுக்கு தான் உங்க காளை மாட்டு மேல அவ்வளவு நம்பிக்கை இருக்கே அப்போ தைரியமாக காளையை அடக்கி ஜெயித்து வருபவனுக்கு உங்க மகளைக் கல்யாணம் பண்ணி தரேன்னு சொல்லுங்க" என்றான் மணிவண்ணன்.



அவன் சொன்னதை கூட்டத்தில் இன்னும் சிலரும் கூறி கூச்சலிட மகேந்திரவர்மனோ, "டேய் அமைதியாக இருங்கடா ஒருவேளை மாடு தோத்துப் போச்சுன்னா மகள் வாழ்க்கை பாதிக்கும்னு ஒரு அப்பாவா அவரும் யோசிக்கனுமே" என்று நக்கலாக அவன் கூறி அவரது கோபத்தை தூண்டி விட்டான்.



"சரிடா இந்த வருஷம் ஜல்லிக்கட்டில் ஜெயித்து வருபவனுக்கு என் பொண்ணு சம்யுக்தாவை கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என் வீட்டு காளை மாடு மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு" என்று சொல்லி விட்டு கோபமாக அங்கே இருந்து சென்று விட்டார் இராஜராஜன்.



"மாப்பிள்ளை அவர் வாயாலையே பொண்ணை கட்டிக் கொடுக்கிறேன்னு சொல்ல வச்சுட்ட" என்ற மணிவண்ணனிடம், "என் மாமாவுக்கு என்னை பார்த்தாலே பிபி எகிறும் நான் எதுனாலும் சொன்னாலே ஏட்டிக்குப் போட்டியா தான் எதுவும் செய்வாரு அதான் நான் மாடு மேல நம்பிக்கை இல்லையான்னு கேட்டதும் பொசுக்குனு பொண்ணு கட்டிக் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டாரு" என்று சிரித்தான் மகேந்திரவர்மன்.



"மச்சான் உன் மாமா வாக்கு கொடுத்தது கூட பிரச்சனை இல்லை ஆனால் அந்த ப்ரூஸ் லீ அது கிட்ட நெருங்கவே எல்லாப் பயலும் பயப்படுவானுங்க நீ அதை பிடித்து அடக்கிருவியா" என்றான் மணிவண்ணன்.


"வா அந்த ப்ரூஸ் லீயை ஒரு எட்டு பார்த்து விட்டு வருவோம்" என்று நண்பனுடன் சென்றான் மகேந்திரவர்மன்.


"உன் மச்சான் வேந்தன் பிடிச்சுட்டு வரான் பாரு அது தான் ப்ரூஸ் லீ" என்று மணிவண்ணன் காட்டிய திசையில் ஒரு முரட்டு காங்கேயன் காளை மாடு ஒன்று வந்து கொண்டு இருந்தது. அதைக் கண்ட மகேந்திரவர்மன் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான். அதன் தோற்றமே கம்பீரமாக யாருக்கும் அடங்காத திமிரோடு தோன்றிட அதன் கயிற்றை பிடித்துக் கொண்டு வந்தவனோ மகேந்திரவர்மனை கோபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ப்ரூஸ்லீயை அழைத்துக் கொண்டு சென்றான்.



"இதை எப்படி மாப்பிள்ளை அடக்குவ அதோட கொம்பால லேசா கோடு கிழித்து விட்டுச்சுனாலே குடலெல்லாம் வெளியே வந்து விடும் டா" என்று மணிவண்ணன் சொல்லிக் கொண்டே போக, "ஜல்லிக்கட்டு அன்னைக்கு பார்ப்ப நானா இல்லை அந்த ப்ரூஸ்லீயானு" என்றான் மகேந்திரவர்மன்.
"என்ன வேந்தா ப்ரூஸ் லீ என்ன சொல்கிறான்" என்ற இராஜராஜனிடம், "கூட்டத்தில் உங்க கிட்ட வாலாட்டினவனோட குடலை உறுவி மாலையா போட்டுக் கொள்வேன் என்று சொல்கிறான் அப்பா" என்றான் எழில்வேந்தன்.



"என்ன அண்ணா சொல்லுற அப்பா கிட்ட யாரு வாலாட்டினது" என்று வந்தாள் சம்யுக்தாராணி. "வேற யாரு எல்லாம் அந்த மகேந்திரவர்மன் தான் அவனும், அவனோட கூட்டாளிகளும் தான். அவனுங்க நம்ம ப்ரூஸ்லீயை அடக்கனும்னா பரிசா பத்து பவுன் தங்கச் சங்கிலி வேண்டாமாம் கல்யாணம் பண்ணிக்க நீ வேண்டுமாம்" என்றான் எழில் வேந்தன்.




"என்ன சொல்லுற எழில் அப்படியா கேட்டான் அந்த பொறுக்கி அவனோட நாக்கை அறுக்காமலா வந்த" என்றான் வெற்றிமாறன் கோபமாக. "நான் எங்கே கூட்டத்திற்கு போனேன் எல்லாம் நம்ம பசங்க தான் சொன்னாங்க என்ற எழில் வேந்தன் அப்பாவும் நீ காளையை அடக்கு பொண்ணை கட்டித் தரேன்னு வாக்கு கொடுத்து வந்திருக்காங்க" என்றான்.



"அப்பா என்ன இது உங்க வாக்கு தங்கச்சியோட வாழ்க்கையை அழித்து விடப் போகிறது" என்று வெற்றிமாறன் ஆதங்கப் பட , "எனக்கு நம்ம ப்ரூஸ்லீ மேல் நிறைய நம்பிக்கை இருக்கு மாறா அப்புறம் உன் தம்பி வேந்தன் மேலையும் நம்பிக்கை இருக்கு. என் மகனும் அவன் ரெடி பண்ணின என் காளையும் என்னைத் தோற்கடிக்காது" என்ற இராஜராஜன் மகளைப் பார்க்க, "எனக்கும் அண்ணன் மேலையும், நம்ம ப்ரூஸ்லீ மேலையும் நிறையவே நம்பிக்கை இருக்கு அப்பா" என்றாள் சம்யுக்தா.



"எங்கே நீ அப்பா கிட்ட கோவிச்சுக்குவியோன்னு தான் டா பயந்தேன்" என்ற இராஜராஜனிடம், "என் அப்பா சொன்னால் ப்ரூஸ்லீயை கூட கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி தான்" என்றாள் சம்யுக்தா.
மகளின் கன்னத்தில் கை வைத்தவர் , "என் சாமியே நீ தான் தங்கம் நீ சந்தோசமா இருக்கனும்" என்றார். அவளும் புன்னகைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.



"என்னங்க இது காளையை அடக்கினால் பொண்ணு கட்டிக் கொடுக்கிறேன் என்று சொல்லிட்டு வந்து இருக்கீங்க ஒரு வேளை அந்த பையன் காளையை அடக்கி ஜெயித்து உங்க முன்னாடி வந்து நின்று பொண்ணை கட்டித் தரச் சொல்லி கேட்டால் என்ன பண்ணுவீங்க" என்றார் வானதி.



"அம்மா ப்ரூஸ்லீயை அடக்க அவனால் முடியாது சும்மா அப்பா கூட சண்டை போட காரணம் கிடைத்தது என்று அதையே பிடித்து தொங்காமல் போங்க போயி மதியம் எனக்கு பருப்பு பாயாசம் வச்சு கொடுங்க அறுப்பு வேலைக்கு வந்தவங்களுக்கு வடை , பாயாசத்தோட விருந்து சமைக்க சமையல் ஆட்களை வேலை வாங்குங்க" என்று கூறிவிட்டு அன்னையை அனுப்பி வைத்தாள் சம்யுக்தா.
"அப்பா என்ன யோசனை அம்மா சொன்ன விசயத்தை பற்றி எல்லாம் யோசிக்கவே வேண்டாம். நீங்க போயி ஓய்வு எடுங்க" என்று கூறிவிட்டு அவள் தன்னறைக்கு சென்றாள்.




"ஹலோ மிஸ்டர் உங்களைத் தான்" என்று அவள் அழைத்திட கோபமாக அவளை முறைத்துக் கொண்டே திரும்பினான் வெற்றிமாறன். "என்ன மச்சான் உங்க தங்கச்சி கையால சங்கிலி போட்டு விடச் சொன்னதுக்கே என்னை அடிக்க பாய்ஞ்சீங்க இப்போ என் அண்ணன் உங்க தங்கச்சி கழுத்தில் தாலியே கட்டப் போறாரு என்ன பண்ண போறீங்க" என்றாள் நக்கலாக.



அவளை முறைத்த வெற்றிமாறனோ, "மரியாதையா ஓடிப் போய் விடு பொம்பளைப் பிள்ளை என்று பார்க்க மாட்டேன் அடிச்சு பல்லை உடைத்து விடுவேன்" என்றான் . "எங்கே உடைங்க பார்ப்போம்" என்று அவள் அவனை நெருங்கி வர , "மரியாதையா போயிரு டீ இருக்கிற கோபத்திற்கு என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" என்றான் வெற்றிமாறன்.




அவளோ அவனை மேலும் மேலும் சீண்டிக் கொண்டே இருந்தாள். கோபம் தலைக்கேறிய வெற்றிமாறன் அவளது தலை முடியை பிடித்து தன் புறம் அவளை இழுத்து ஓயாமல் பேசிக் கொண்டு இருந்த அவளது இதழை வன்மையாக சிறை எடுத்தான். அவளோ அவனது இந்த செயலில் அதிர்ந்து போனாள். எதிர் பாராமல் நடந்த இந்த சம்பவத்தை அவளால் உணரவே சிறிது நேரம் தேவைப்பட்டது. அவனிடம் இருந்து விடு பட அவனை அவள் அடிக்க ஆரம்பிக்க அவனோ இன்னும் மூர்க்கத்தனமாக அவளது இதழை சிறை செய்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அவள் மூச்சு விடவே சிரமப் படவும் அவளை விடுவித்தான் வெற்றிமாறன்.




"உன்னை மாதிரி திமிர் பிடித்த கழுதைகள் அடித்தால் எல்லாம் திருந்த மாட்டிங்க டீ அதான் இப்படி பண்ணினேன். உன் அண்ணன் என் தங்கச்சி கழுத்தில் தாலி கட்டுவானா அது இந்த ஜென்மத்தில் நடக்காது நான் வேண்டும் என்றால் உனக்கு ஒரு பிள்ளை தரேன் அது வேண்டும் என்றால் நடக்கும்" என்று கூறிவிட்டு அவன் சென்று விட அவளுக்கு தான் அவமானமாக இருந்தது.



வெற்றிமாறனை மாமன் மகன் என்று நினைத்து தான் வம்பு இழுத்தாள். அது கூட காலையில் அவன் அவளை அடிக்க வந்த காரணம் தானே தவிர அவன் மீது அவளுக்கு வேறு எந்த ஆசையும் இருந்ததில்லை. அவனோ அவளிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொள்வான் என்று கனவிலும் நினைத்துப் பார்க்க வில்லை. அவளது உதடு கிழிந்து இரத்தம் வரும் அளவிற்கு இத்தனை மோசமாக அவன் நடந்து கொண்டது அவளுக்கு மிகப் பெரிய அவமானமாக இருந்தது.


அழுது அழுது கரைந்தவள் அங்கே இருந்த பெரிய கிணற்றில் குதித்து விட்டாள்.
கோபமாக நடந்து சென்றவன் தொப்பென்று ஏதோ கிணற்றில் விழுந்தது போல சத்தம் கேட்டதும் திரும்பி பார்க்க அங்கே இந்துமதி இல்லாமல் போக கிணற்றடிக்கு ஓடி வந்தான் வெற்றிமாறன்.



அவளது சிவப்பு நிற துப்பட்டா நீரில் மிதந்து கொண்டு இருக்க பயந்து போனவன் தண்ணீரில் குதித்து விட்டான். தண்ணீர் முழுக்க அவளைத் தேடியவன் ஒரு வழியாக அவளைத் தூக்கிக் கொண்டு மேலே வந்தான்.



அந்த கிணறு தென்னந்தோப்பிற்கு நடுவில் அமைந்துள்ளது. ஊரில் உள்ள எல்லாரும் அறுவடை வேலையாக வயலுக்கு சென்று இருந்ததால் அவன் அவளிடம் அத்து மீறி நடந்ததும் சரி, அவள் அவமானம் தாங்க முடியாமல் கிணற்றில் குதித்ததையும் யாரும் பார்க்க வில்லை.


அவளது கன்னத்தில் தட்டியவன் அவளது வயிற்றை பிடித்து அழுத்தி அவள் குடித்த நீரை வெளியேற்றி இருந்தான். அவளது பாதத்தில் சூடு பறக்க தேய்த்து விட்டான். அவள் இருமிக் கொண்டே கண் விழித்து பார்க்க , "ஏய் அறிவு கெட்ட முண்டம் ஏன் டீ தண்ணிக்குள்ள குதிச்ச" என்று அவளை அவன் அறைய கை ஓங்கிட அவனது கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தாள் இந்துமதி.



"பொறுக்கி என்னை எதுக்குடா காப்பாத்துன" என்று அவள் அழ ஆரம்பித்தாள். அவளது அழுகை அவனை ஏதோ செய்தது. தான் செய்த காரியத்தை நினைத்து தன்னைத் தானே வெறுக்க ஆரம்பித்தான். ச்சே ஆத்திரத்தில் என்ன காரியம் பண்ணிட்ட மாறா அந்தப் பொண்ணு கிட்ட வெறி பிடித்த மிருகம் மாதிரி என்று நொந்து கொண்டான் வெற்றிமாறன்.



.... தொடரும்...
 
Last edited:
சம்முவும் மகேந்திரனும் ஜோடி சேர்வதற்கு முன்னாடி இந்துவும் மாறனும் ஜோடி சேர்ந்திடுவாங்க போல 😍😍😍
 
Last edited:
Top