GG writers
Moderator
அத்தியாயம் 3
"என்னை மன்னித்து விடு ஏதோ கோபத்தில்" என்ற வெற்றிமாறனின் கன்னத்தில் மீண்டும் அறைந்தவள், "என் அண்ணன் உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க போகுதுன்னு சொன்னால் யாரை வேண்டுமானாலும் இப்படித் தான் பண்ணுவ அப்படித் தானே, இவருக்கு ஊரில் உலக உத்தமன்னு பெயர் வேற, எந்த பொண்ணு பின்னாடியும் சுத்த மாட்டாரு, எந்த பொண்ணு கிட்டயும் தப்பா நடந்துக்க மாட்டாரு இதே மாதிரி உன் தங்கச்சி கிட்ட ஒருத்தன் நடந்துக் கிட்டு மன்னிப்பு கேட்டால் குடும்பமா சேர்ந்து மன்னிச்சு விட்டுருவீங்களா? நீயும், உன் தம்பியும் சேர்ந்து கொன்று புதைச்சுருக்க மாட்டீங்க. உங்க தங்கச்சின்னு வந்தால் மட்டும் தான் இரத்தம் கொதிக்கும் அடுத்த வீட்டுப் பொண்ணு அதுவும் எதிரி வீட்டுப் பொண்ணு என்றால் அவளுக்கு பிள்ளை கொடுத்து கூட தூக்கிப் போடுவீங்க அப்படித் தானே" என்று அழுதாள் இந்துமதி.
"தயவு செய்து என்னை மன்னித்து விடு நீ மேலும், மேலும் வம்பு வளர்த்துக் கொண்டு இருக்கவும் கோபத்தில்" என்றவன், "கோபத்தில் செய்தாலும் தப்பு தான் உன் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன்" என்றிட அவனை முறைத்தவள், "நீ காலில் விழுந்தால் மட்டும் நீ பண்ணின அசிங்கம் இல்லை என்று ஆகிடுமா ச்சீ உன்னை நல்லவன்னு நம்பி தான் வம்பிழுத்தேன். நீ இவ்வளவு கீழ்த்தரமான ஆளாக இருப்பன்னு சத்தியமா நான் எதிர்பார்க்கவில்லை" என்றவள் எழுந்து செல்ல , "இந்து ஒரு நிமிஷம்" என்று அவள் முன்னே வந்து நின்றான் வெற்றிமாறன்.
"என்ன" என்றவளிடம் , "நான் உன் கிட்ட நடந்து கொண்ட" என்று அவன் தயங்கிட, "பயப்படாதே நான் யார்கிட்டேயும் சொல்லி என்னை இன்னும் கேவலப் படுத்திக்க மாட்டேன். ஆனால் கண்டிப்பா வாழவும் மாட்டேன். உன்னை மன்னிக்கவும் மாட்டேன்" என்று கோபமாக சொல்லிவிட்டு அவள் ஓடியே விட்டாள்.
அவனுக்குத் தான் குற்றவுணர்ச்சி அதிகமானது. "கோபத்தில் ஒரு பொண்ணு கிட்ட இப்படியா நடந்துப்ப இந்த விசயம் மட்டும் அப்பாவுக்கு தெரிந்தால் என்னை அடிச்சே கொன்று விடுவாரு, அம்மாவும், தங்கச்சியும் என்னை கேவலமா பார்ப்பாங்க" என்று நொந்து கொண்டான் வெற்றிமாறன்.
வீட்டிற்கு வந்த இந்துமதியும் அழுது அழுது கரைந்தவள் மெத்தையில் படுத்து உறங்கிப் போனாள். "இந்து, இந்து" என்று அழைத்துக் கொண்டே தங்கையின் அறைக்குள் வந்தான் மகேந்திரவர்மன்.
"ஏய் இந்து" என்று தங்கையை எழுப்ப அவளது முகமோ அழுது , அழுது வீங்கிப் போய் இருக்கவும் அதிர்ந்தவன் தங்கையை எழுப்பினான். தங்கையின் உதட்டிலும் புண்ணாகி இரத்தம் உறைந்து இருக்கவும் அவளை எழுப்பினான்.
கண் விழித்த இந்துமதி , "என்ன அண்ணா" என்றிட, "ஏன் அழுத" என்றான் மகேந்திரவர்மன். "நான் ஏன் அழப் போகிறேன்" என்று அவள் சமாளிக்க பார்க்க, "என்ன சமாளிக்க பார்க்கிற அதான் உன் முகமே சொல்லுதே நல்லா அழுதுருக்கன்னு சொல்லு ஏன் அழுத" என்றான் மகேந்திரவர்மன் அதட்டலாக.
"ஒன்றும் இல்லை" என்று அவள் கூறிட, "பொய் சொல்லாதே இந்து உன் உதட்டுக்கு என்ன ஆச்சு புண்ணா இருக்கு" என்று அவன் கேட்டான்.
அண்ணனின் கேள்வியில் அதிர்ந்தவள் முகத்தை திருப்பிக் கொள்ள, "தலை வேற ஈரமா இருக்கு எப்போ குளிச்ச நீ, காலையில் கோவிலுக்கு போகும் போது குளிச்சிட்டு தானே போன அப்பறம் எப்படி தலை இன்னும் காயாமல் இருக்கும்" என்று அவன் கேள்வி மேல் கேள்வி கேட்டிட ,தன் அண்ணனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் இந்துமதி.
"இந்து என்னாச்சும்மா ஏன் அழற" என்று அவன் கேட்டிட தன் அண்ணனிடம் எதையும் மறைத்துப் பழகாதவள் வெற்றிமாறன் தன்னிடம் தவறாக நடந்து கொண்ட விஷயத்தை கூறிட கோபத்தில் முகம் இறுகிப் போனான் மகேந்திரவர்மன்.
"அவனை" என்று பற்களைக் கடித்த மகேந்திரவர்மனிடம், "அண்ணா ப்ளீஸ் தயவு செய்து இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம். என்னோட மானம் தான் போகும்" என்றாள் இந்துமதி.
"அதற்காக அவனை சும்மா விட சொல்கிறாயா அவன் உயிரை எடுக்காமல் விட மாட்டேன் . அந்த பொறுக்கிக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் தங்கச்சி கிட்ட தப்பா நடந்திருப்பான். என்ன கேட்க ஆள் இல்லை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறானா" என்று பற்களைக் கடித்தான் மகேந்திரவர்மன்.
"அண்ணா ப்ளீஸ் என் மேல சத்தியம் இந்த பிரச்சினையை பெரிய விஷயமாக்கி என் மானம் போச்சுன்னா நான் செத்துப் போய் விடுவேன்" என்றாள் இந்துமதி. "இந்து" என்று பற்களைக் கடித்தவனிடம், "நீங்க அந்த ஜல்லிக்கட்டில் ஜெயித்து அந்த சம்யுக்தாவை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க அது மட்டும் தான் உன் தங்கச்சி பட்ட அவமானத்திற்கு பரிகாரம்" என்றாள் இந்துமதி.
"இந்த விஷயம் நம்ம இரண்டு பேரைத் தவிர அம்மாவுக்கு கூட தெரியக் கூடாது" என்று கூறினாள் இந்துமதி. "உன்னை அசிங்கப் படுத்தினவனோட தங்கச்சியை நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கனும் அதற்கு பதிலாக அவனை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போகலாம்" என்றான் மகேந்திரவர்மன்.
"அண்ணா என்ன பேசுறீங்க" என்ற இந்துமதியிடம் , "வேற என்ன பேசணும் இந்து என் தங்கச்சி கிட்ட தப்பா நடந்துக் கிட்ட அந்த பொறுக்கியை" என்று அவன் சொல்ல வருவதற்குள், "அவனை கொல்லப் போறீங்கனா போயி கொல்லுங்க நானும் செத்துப் போய் விடுவேன்" என்றாள் இந்துமதி.
"பைத்தியமா இந்து நீ தப்பு பண்ணின அவன் சாவதில் ஒரு நியாயம் இருக்கு நீ ஏன் சாகனும்" என்றான் மகேந்திரவர்மன்.
"அவனை கொலை பண்ணினதுக்கு என்ன காரணம் அண்ணா சொல்லுவீங்க என் கிட்ட தப்பா நடந்து கொண்டான் என்று தானே, அப்போ ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரிஞ்சு போயிரும் எல்லோரும் என்னை கேவலமா பார்ப்பாங்க அப்படி ஒரு பார்வையை சகித்துக் கொண்டு என்னால வாழ முடியாது அண்ணா" என்றாள் இந்துமதி.
"நடந்த விஷயத்தில் உன் மேல என்ன தப்பு இருக்கு இந்து அவன் தான் உன் கிட்ட வலுக்கட்டாயமாக தப்பா நடந்து கொண்டான்" என்ற மகேந்திரவர்மனிடம், "அண்ணா ப்ளீஸ் இதைப் பற்றி மேலும் மேலும் பேச வேண்டாம் விட்டுருங்க. நீங்க இந்த ஜல்லிக்கட்டில் அந்த வெற்றிமாறன் வளர்க்கிற காளையை அடக்கி அவன் தங்கச்சி கழுத்தில் தாலி கட்டுங்க அது தான் எனக்கு வேண்டும்" என்றாள் இந்துமதி.
"சரி இந்து உனக்காக அண்ணன் இந்த ஜல்லிக்கட்டில் அந்த காளையை அடக்குறேன்" என்று கூறிவிட்டு, "அழாதே தைரியமா இருக்கனும். என் தங்கச்சி கோழை கிடையாது நடந்தது ஒரு விபத்து அதை மறந்துட்டு நீ சந்தோஷமா இருக்கணும் அப்போ தான் உன் அண்ணன் ஜல்லிக்கட்டில் கலந்துப்பான்" என்று தங்கையை சமாதானம் செய்தான் மகேந்திரவர்மன்.
"அண்ணா" என்று வந்த சம்யுக்தாவிடம், "என்ன சம்மு" என்றான் வெற்றிமாறன். "என்ன பனியில் உட்கார்ந்து இருக்கீங்க சாப்பிட கூட வராமல் ,அம்மா உங்களை சாப்பிட வரச் சொன்னாங்க" என்றதும், "சரி சம்மு வரேன்" என்றான் வெற்றிமாறன்.
"அண்ணனை மட்டும் தான் சாப்பிட கூப்பிடுவியா சம்மு என்னை கூப்பிட மாட்டியா" என்று வந்தான் எழில் வேந்தன். "நான் கூப்பிடவில்லை என்றாலும் என் சின்ன அண்ணன் முதல் ஆளாக சாப்பிட உட்கார்ந்திடுமே அது தான் சரியான சோத்து மூட்டையாச்சே" என்றாள் சம்யுக்தா.
"நானா சோத்து மூட்டை உன்னை" என்று தங்கையின் தலையில் குட்டு வைக்க விரட்டினான் எழில் வேந்தன். அவன் கையில் சிக்காமல் அவளும் வீடு முழுவதும் ஓடினாள். "அப்பா பாருங்கள் அண்ணா என் தலையில் குட்டு வைக்க வருது" என்று தன் தந்தையின் பின்னே ஒளிந்து கொண்டாள் சம்யுக்தா.
"அப்பா விலகுங்க இன்னைக்கு அவள் தலையில் குட்டு வைக்கனும்" என்று எழில்வேந்தனும் விடாமல் விரட்ட, "வேந்தா விடு என் பொண்ணு தலையில் குட்டு வைக்க நான் விட மாட்டேன்" என்று கூறினார் இராஜராஜன்.
தந்தை சொல்லவும் தங்கையை விரட்டுவதை விட்டான் எழில் வேந்தன். "தப்பிச்சுட்டேனா" என்று தன் அண்ணனிடம் பழிப்புக் காட்டி சிரித்துக் கொண்டே தன் அறைக்கு ஓடினாள் சம்யுக்தா.
"மாறா என்ன உன் கவனம் சாப்பாட்டிலே இல்லையே" என்ற வானதியிடம், "அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அம்மா" என்றான் வெற்றிமாறன். "அண்ணன் கோபமா இருக்கு" என்றாள் சம்யுக்தா.
"என்ன கோபம்" என்ற வானதியிடம், "எல்லாம் அந்த வைதேகி இருக்காங்களே அவங்க பொண்ணு இந்துமதியால தான்" என்றாள் சம்யுக்தா.
"ஏய் சம்மு என்ன வைதேகின்னு மரியாதை இல்லாமல் பெயர் சொல்லிட்டு இருக்க அவங்க உன் அத்தை" என்றார் வானதி.
"அந்த ஓடுகாலி என் பொண்ணுக்கு அத்தையா" என்ற இராஜராஜன் கோபமாக வானதியை முறைத்தார். "நீங்க முறைத்தாலும் அவங்க உங்க கூடப் பிறந்த தங்கச்சி தான் அது எப்போதும் மாறாது" என்றார் வானதி.
"வானதி" என்று இராஜராஜன் ஏதோ கூற வர , "அப்பா தங்கச்சி சொல்ல வந்த விஷயத்தை முதலில் சொல்லட்டும் அப்புறம் அம்மா கூட சண்டை போடுங்க" என்று எழில் வேந்தன் கூறிட அவனை முறைத்த இராஜராஜன் மகளைப் பார்க்க அவள் சொல்ல ஆரம்பித்தாள்.
"காலையில் கோவிலில் நடந்த விஷயத்தை கூறி விட்டு அதனால் தான் அண்ணன் கோபமா இருக்கு" என்றாள் சம்யுக்தா.
"இதற்கு ஏன் அண்ணா நீ கோபமாக இருக்கனும் நம்ம ப்ரூஸ்லீ இருக்க பயம் ஏன்" என்றான் எழில் வேந்தன். அவனிடம் புன்னகைத்தவன் மனமோ, "இந்துமதி எதுவும் செய்து கொள்வாளோ" என்று யோசித்துக் கொண்டே இருந்தது.
அவனுக்கு உறக்கம் வரவில்லை. என்ன தான் கோபம் என்றாலும் ஒரு பெண்ணிடம் கண்ணியம் இல்லாமல் தான் நடந்து கொண்ட விதம் தவறு தான். அது குற்றவுணர்ச்சியாக அவனது மனதை அரித்துக் கொண்டு இருந்தது.
மகேந்திரவர்மனோ கோபத்தில் இருந்தான். தன் தங்கை படும் துயரத்தை நினைத்து. தன் தங்கையை பற்றி நன்கு அறிந்தவனாயிற்றே. அவள் சில விஷயங்களில் மிகவும் உணர்ச்சிவசப் படக் கூடியவள் அவள் தனக்கு நடந்த விஷயத்தை சாதாரணமாக கடந்து செல்ல மாட்டாள். மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன்னையே நொந்து கொள்வாள். அவளை எப்படி சரி செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தான்.
நம் நாயகியோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டு இருந்தாள். மகளின் தலையைக் கோதி விட்ட இராஜராஜனோ, "அவசரப் பட்டு வாக்கு கொடுத்து விட்டேனோ வானதி" என்றார் மனைவியிடம்.
"என்ன திடீர்னு" என்ற வானதியிடம், "நம்ம ப்ரூஸ்லீ மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு ஆனாலும் மனசுக்குள்ள ஒரு சின்ன நெருடல் நம்ம பொண்ணு வாழ்க்கையை பணையம் வைத்து விட்டேனோ என்று" என்றார் இராஜராஜன்.
.... தொடரும்...

Last edited: