GG writers
Moderator
அத்தியாயம் 4
"என்னங்க நீங்க வாக்கு கொடுத்து விட்டு இப்போ யோசிச்சுட்டு இருக்கீங்க ஒருவேளை அந்த பையன் நம்ம காளையை அடக்கி ஜெயித்து பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டால் என்ன பண்ணுறது. உங்க தங்கச்சி வீட்டில் உங்க மகள் வாழ உங்களுக்கு சம்மதமா?" என்றார் வானதி.
"வானதி தயவு செய்து அப்படி சொல்லாதே என் மகள் கண்டிப்பா அந்த வைதேகி வீட்டுக்கு போக கூடாது. என் மகளை பார்க்காமல் என்னால இருக்கவே முடியாது" என்று வருந்தினார் இராஜராஜன். "வாக்கு கொடுக்கும் முன்பு கொஞ்சம் யோசித்துப் பார்த்து இருந்தால் இப்போ நீங்க புலம்ப வேண்டிய அவசியம் இருந்திருக்காதே" என்றார் வானதி.
"அவனைப் பார்த்தாலே கோபம் தான் வருது. அவன் பேசுறதைக் கேட்டாலே எரிச்சல் மண்டிக் கொண்டு வந்து நான் என்னோட நிதானத்தை இழந்து விடுகிறேன். அவன் அப்பனே என் முன்னால் பேச பயப்படுவான் ஆனால் இந்த சின்னப் பையன் எப்போ பார்த்தாலும் என் கிட்ட வம்பு வளர்ப்பது போலவே பேசி என் கோபத்தை தூண்டி விடுகிறான். இன்னைக்கும் அப்படித் தான் அவன் நக்கலாக பேசவும் எனக்கு இருந்த ஆத்திரத்தில் இப்படி ஒரு வாக்கு கொடுத்து விட்டு வந்துட்டேன்" என்றார் இராஜராஜன்.
"கவலைப் படாதீங்க நல்லதே நடக்கும் நம்புவோம் நம்ம ப்ரூஸ்லீ நம்ம மகன் வேந்தன் ரெடி பண்ணி வச்சுருக்கிற காளை . அதை அவ்வளவு சீக்கிரம் மகேந்திரனால அடக்க முடியாது அதனால் நீங்கள் எதையும் யோசிக்காமல் படுத்து தூங்குங்க" என்று கூறிவிட்டு கணவனின் பாதங்களை பிடித்து விட்டார் வானதி.
"வானதி என்ன பண்ணுற" என்ற இராஜராஜனிடம், "காலைப் பிடித்து விட்டால் நீங்கள் தூங்கிருவிங்க தானே" என்றார் வானதி. "ஏய் அதுக்காக என் காலை பிடித்து விடுவியா?" என்ற இராஜராஜனிடம், "இதற்கு பெயர் அடிமைத்தனம் கிடையாது எனக்கு உங்க மேல இருக்கிற பாசம்" என்று வானதி கூறிட இராஜராஜன் அமைதியாக கண்களை மூடி உறங்க முயன்றார்.
"என்னங்க ஏதோ யோசனையாக இருக்கீங்க" என்ற வைதேகியிடம், "இன்னைக்கு பஞ்சாயத்துல என்ன நடந்துச்சு தெரியுமா வைதேகி. உன் மகன் ஏன் இப்படி இருக்கிறான். நான் தான் எந்த கலகமும் பண்ணக் கூடாது என்று அவன் கிட்ட சொல்லி இருந்தேனே அப்புறமும் அவனோட கூட்டாளிகளோட சேர்ந்து உன் அண்ணனை தூண்டி விட்டு அவர் வாயாலையே காளை மாட்டை அடக்கி ஜெயித்து வருபவனுக்கு பொண்ணு கட்டிக் கொடுக்கிறேன் என்று சொல்ல வச்சுட்டான்" என்றார் ராமச்சந்திரன்.
"ஏன் உங்களுக்கு என் அண்ணன் மகள் நம்ம வீட்டுக்கு மருமகளாக வருவதில் விருப்பம் இல்லையா?" என்றார் வைதேகி. "புரியாமல் பேசாதே வைதேகி உன் அண்ணன் பொண்ணு நம்ம மகனை விரும்பி கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு வந்து வாழ்ந்தால் உன்னை விட அதிகமாக நான் சந்தோஷப் படுவேன். ஆனால் உன் மகன் காளையை அடக்கி ஜெயித்து பொண்ணை கல்யாணம் பண்ணி வருவது எனக்கு சரியாக படவில்லை. சம்யுக்தா பொண்ணு பொருள் இல்லை பந்தயம் வைத்து ஜெயிக்க , உன் பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு கல்யாணம் நடந்தால் நீ சந்தோஷப் படுவியா?" என்றார் ராமச்சந்திரன்.
"என்னங்க அது" என்று வைதேகி தயங்க, "தப்பு வைதேகி நம்ம சுயநலத்திற்காக ஒரு பொண்ணு வாழ்க்கையில் விளையாடக் கூடாது" என்றார் ராமச்சந்திரன். "மகிக்கு சம்யுக்தா மேல் விருப்பம்" என்று வைதேகி ஏதோ சொல்ல வர, "மகேந்திரனுக்கு சம்யுக்தா மேல விருப்பம் இருக்கான்னு எனக்கு தெரியவில்லை ஆனால் அவன் சம்யுக்தாவை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறது உனக்காக மட்டும் தான் அது உனக்கு தெரியும் தானே. உனக்கு உன் அண்ணனோட உறவு வேண்டும் அதற்காக நீ உன் பையன் கிட்ட எப்படியாவது என் அண்ணன் பொண்ணை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வாடா மகனேன்னு சொன்ன. உன் மகன் காளையை அடக்கப் போகிறேன் என்று களத்தில் இறங்கி விட்டான்.
உன் அண்ணன் வீட்டில் வளரும் அந்த காளை மாட்டை பற்றி தெரியும் தானே அது இதுவரை எந்த ஜல்லிக்கட்டிலுமே தோத்ததே கிடையாது. அது மட்டும் இல்லை அதோட கொம்பால லேசா கீறினாலே சதை கிழிந்து விடும். உன் மகனோட உடம்பில் ஒரு முள் குத்தின காயம் கூட இதுவரை இருந்ததில்லை ஆனால் இப்போ எனக்கு சொல்லவே பயமா இருக்கு. அவன் கிட்ட பேசு இந்த காளையை அடக்குற வேலை எல்லாம் வேண்டாம். ஒழுங்கா ரைஸ் மில்லில் உள்ள கணக்கு வழக்குகளை பார்க்க சொல்லு இல்லையா, அவனுக்கு போலீஸ் ஆகனும் என்று தானே கனவு அதற்கான வேலையை பார்க்க சொல்லு" என்றார் ராமச்சந்திரன்.
கணவன் சொன்ன விஷயங்களைப் பற்றி தானும் யோசித்துக் கொண்டு இருந்தார் வைதேகி. "என்னம்மா அப்பா என்னமோ என் மாமனாருக்கு சப்போர்ட் பண்ணி என்னை குறை சொல்லி பேசிட்டு இருந்தாரு" என்று வந்தான் மகேந்திரவர்மன். "இல்லை மகி நீ அவசியம் இந்த ஜல்லிக்கட்டில் கலந்துக்கனுமா?" என்றார் வைதேகி.
"என்ன கேள்விம்மா இது நான் இந்த போட்டியில் கலந்து கொள்வதே உங்க விருப்பத்தை நிறைவேற்ற தான்" என்றான் மகேந்திரவர்மன். "அப்பா கூட பேசினதுக்கு அப்பறம் தான் மகி எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. சம்யுக்தாவுக்கு உன்னை பிடிக்காமல் நீ அவளை கல்யாணம் பண்ணிக் கொண்டால் அது உங்க இரண்டு பேருக்குமே சந்தோஷம் இல்லாத ஒரு வாழ்க்கையா அமையுமே" என்று வருந்தினார் வைதேகி.
"அம்மா நீங்க ஏன் அதைப் பற்றி எல்லாம் யோசிக்கிறீங்க உங்கள் அண்ணன் பொண்ணு கட்டிக் கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்காரு . கட்டாயம் அவரு பொண்ணை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் என்னை நீங்க நம்புங்க. சும்மா அப்பா பேச்சைக் கேட்டு குழம்பிட்டு இருக்காதீங்க" என்றவன் தன்னறைக்கு சென்று விட்டான்.
"எனக்கு கூட அந்த சண்டி ராணியை கட்டிக்க அவ்வளவா விருப்பம் இல்லை தான் அம்மா இன்னைக்கு பஞ்சாயத்துல கூட விளையாட்டுக்கு தான் உங்க அண்ணனைத் தூண்டி விட்டேன். எப்போ அந்த வெற்றி பொறுக்கி என் இந்து கிட்ட தப்பா நடந்துக்கிட்டானோ அப்பவே முடிவு பண்ணி விட்டேன் அவன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி நம்ம வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வர வேண்டும்" என்று நினைத்த மகேந்திரவர்மன் இன்னும் இரண்டு நாட்களில் வரும் ஜல்லிக்கட்டில் அந்த ப்ரூஸ்லீயை எப்படி அடக்குவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.
"என்ன சம்மு உம்முன்னு இருக்க உன் அப்பா அவசரப் பட்டு வாக்கு கொடுத்து விட்டார் என்று நினைக்கிறியா?" என்றாள் தேன்மொழி. "இல்லை தேனு எங்க ப்ரூஸ்லீயை பத்தி அந்த மகேந்திரனுக்கு தான் தெரிய வில்லை அவசரப் பட்டு அது கிட்ட குத்து வாங்கி சாகப் போகிறான்" என்று சிரித்தாள் சம்யுக்தா. "அப்பறம் ஏன் உம்முன்னு இருக்க" என்றாள் தேன்மொழி.
"அந்த இந்துமதி வரட்டும் அவளுக்கு இருக்கு நேற்று அவள் பண்ணின வம்புனால என் அண்ணன் இன்னும் அப்செட்டாவே இருக்கு" என்றாள் சம்யுக்தா.
"என்னன்னு தெரியலை சம்மு நேற்று சாயங்காலம் கூட அவள் கோவிலுக்கு வர வில்லை. காலை, மாலை இரண்டு வேளையும் கோவிலுக்கு வந்து விடுவாள் நேற்றிலிருந்து அவள் வீட்டை விட்டே வெளியே வர வில்லை" என்றாள் தேன்மொழி.
"அவள் வந்தாள் என்றால் அவளை நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கனும்னு நினைச்சேன் தப்பிச்சுட்டாள்" என்ற சம்யுக்தா முன் வந்து நின்றான் மகேந்திரவர்மன்.
"என் தங்கச்சி கிட்ட என்ன வாங்கப் போறீங்க மேடம்" என்று அவன் கேட்டிட அவனை முறைத்தவள் , "ஹூம் உங்க தங்கச்சி கிட்ட சொத்து எழுதி வாங்கப் போறேன்" என்றாள் முகத்தை வெட்டிக் கொண்டு.
"யப்பா பார்த்தும்மா நீ வெட்டும் வெட்டில் கழுத்து சுளுக்கிக்க போகுது" என்றான் மகேந்திரவர்மன். "என் கழுத்து சுளுக்கு பிடித்தால் எனக்கு வைத்தியம் பார்க்க என் அப்பா இருக்காரு கண்டவங்க எல்லாம் கவலைப் பட வேண்டாம்" என்றாள் சம்யுக்தா.
திமிரைப் பாரேன் , "நான் கண்டவனா ஓய் சண்டி ராணி நான் கண்டவன் இல்லை உன்னை கட்டிக்கப் போறவன்" என்றான் மகேந்திரவர்மன்.
"ஆசை தான் போடா வேலை இல்லாத வெட்டிப் பயலே ,உன் முகரைக் கட்டைக்கு நான் வேண்டுமோ?" என்றாள். "என்ன டீ சண்டி ராணி கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் பேசுற போடானு சொன்ன வாயை உடைத்து விடுவேன்" என்றான் மகேந்திரவர்மன்.
"நீ என் வாயை உடைக்கும் வரை என் கை என்ன புளியங்காய் பறிக்குமா நான் கொடுக்கிற கொடுவுல உன் முகரை உடைஞ்சு போய் விடும்" என்று அவள் கூறிட , "உனக்கு உன் அப்பன் சரியான பெயர் தான் வைத்து இருக்காரு சண்டி ராணின்னு" என்றான் மகேந்திரவர்மன்.
"என் பெயர் சம்யுக்தா ராணி" என்றாள் அவள். "இரண்டும் ஒன்று தான்" என்றான் அவன். அவனை முறைத்து விட்டு கோபமாக சென்றவளை வம்பு செய்ய நினைத்தான் மகேந்திரவர்மன்.
"ஓய் சண்டி ராணி" என்றவனை முறைத்தவள், "என் பெயர் சண்டி ராணி இல்லை சம்யுக்தா ராணி" என்றாள் பெண்ணவள் பற்களை கடித்தபடி.
"உங்க அப்பா உனக்கு என்ன பெயர் வைத்தாலும் எனக்கு நீ எப்போவும் சண்டி ராணி தான்" என்றவனை மேலும் முறைத்தாள் சம்யுக்தா.
"உன் வீட்டுக் காளையை அடக்கினால் உன்னை கல்யாணம் பண்ணி தருவதாக உங்க அப்பா வாக்கு கொடுத்து இருக்காரே! இந்த மாமனை கட்டிக்க உனக்கு சம்மதமா" என்றவனை ஏளனமாக பார்த்தவள் , "என் மாடு இதுவரை எந்த ஜல்லிக்கட்டிலுமே தோத்ததே கிடையாது. இந்த ஜல்லிக்கட்டிலும் அதை அடக்க எவனும் பிறக்கவே இல்லை. அதனால நான் மாடு பிடிக்கிற எவனையும் கல்யாணம் பண்ணிக்க போறதில்லை குறிப்பாக உன்னைப் போல் வெட்டிப் பையனை" என்றாள் சம்யுக்தா.
"உன் மாட்டை அடக்கி உன்னை கல்யாணம் பண்ணிக்க போறேன் பார்க்கிறியா?" என்றவனைப் பார்த்து நக்கலாக சிரித்தவள் , "உன்னால முடிஞ்சா நீ ஆம்பளையா இருந்தால் என் மாட்டோட திமிலை இல்லை அதோட வாலைத் தொட்டு விடு பார்ப்போம் இவரு என் ப்ரூஸ்லீயை அடக்கி என்னை கல்யாணம் பண்ணிப்பாராம் போயா போயி இரண்டு நாளில் நடைபெறும் ஜல்லிக்கட்டை வேடிக்கை பாரு" என்றாள் சம்யுக்தா.
"உன் மாட்டோட திமிலை மட்டும் இல்லைடீ உன்னோட திமிரையும் சேர்த்து அடக்குறேன் இல்லையா என் பெயர் மகேந்திரவர்மன் இல்லைடி" என்றான்.
.... தொடரும்....

Last edited: