வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இதயத்தில் தைத்தாய் இதமான முள்ளை..(5)

GG writers

Moderator
அத்தியாயம் 5

"அப்போ உன் பெயரை மக்கு வர்மன்னு மாத்திக்கோ எப்படியும் ஜல்லிக்கட்டில் மண்ணை தான் கவ்வப் போற" என்று ஏளனமாக சிரித்தாள் சம்யுக்தா.

"சிரிடீ, சிரி நல்லா சிரிச்சுக்கோ எப்படியும் நான் தான் உன் கழுத்தில் தாலி கட்டப் போகிறேன் அப்போ இப்போ சிரிக்கிறதுக்கும் சேர்த்து கணக்கு தீர்த்துக் கொள்கிறேன்" என்றான் மகேந்திரவர்மன்.


"கணக்கு தீர்க்கப் போகிறாயா பார்ப்போம் அதற்கு நீ உயிரோட இருக்கனும்" என்று சிரித்தாள் சம்யுக்தா. "சம்மு" என்று வந்த வெற்றிமாறனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான் மகேந்திரவர்மன்.


"இவன் கிட்ட உனக்கு என்ன பேச்சு" என்ற வெற்றியிடம் , "இவரு நம்ம ப்ரூஸ்லீயை அடக்கி ஜெயித்து என்னை கல்யாணம் பண்ணிக்க போகிறாராம்" என்று சிரித்தாள் சம்யுக்தா. "உன்னை கல்யாணம் பண்ணிக்க போறவன் நான் தான் அதை உன் மனசுல நல்லா பதிய வச்சுக்கோடி சண்டி ராணி" என்ற மகேந்திரவர்மனின் சட்டையைப் பிடித்தான் வெற்றிமாறன்.


தன் சட்டையை பிடித்தவன் மீது கொலை வெறியில் இருந்தாலும் பொறுமையாக அவனிடம் பேச நினைத்தான் மகேந்திரவர்மன். அவனது சட்டையை பிடித்து இழுத்து வந்தவன் ,"என்னடா திமிரா எவ்வளவு தைரியம் இருந்தால் என் தங்கச்சி கிட்ட வம்பு வளர்த்துக் கொண்டு இருப்ப" என்றான் வெற்றிமாறன்.

"நான் உன் தங்கச்சி கிட்ட வார்த்தையால தான் வம்பு வளர்த்துக் கொண்டு இருக்கேன் உன்னை மாதிரி பொறுக்கித்தனம் பண்ணவில்லை" என்று பற்களைக் கடித்தான் மகேந்திரவர்மன்.

அவன் அவ்வாறு சொன்னதும் அவனது சட்டையை விட்டான் வெற்றிமாறன். "உன்னை கொலை பண்ண தான் டா ஆத்திரம் ஆனால் உன்னை கொன்று விட்டால் அவளும் செத்துப் போய் விடுவாள். என் தங்கச்சி உயிர் எனக்கு முக்கியம் அதனால தான் உன்னை நேருக்கு நேர் பார்த்த பிறகு கூட பொறுமையா பேசிட்டு இருக்கேன்" என்றான் மகேந்திரவர்மன்.

"மகேந்திரா" என்று அவன் ஏதோ சொல்ல வர, "அண்ணா" என்று வந்த சம்யுக்தா, "என்ன பேசிட்டு இருக்கீங்க இவன் கூட எல்லாம்" என்று தன் சகோதரனை இழுத்துச் சென்றாள்.

"இந்து ,இந்து" என்று மகளை அழைத்துக் கொண்டு இருந்தார் வைதேகி. "எதற்கு இப்போ என் பெயரை ஏலம் போட்டுக் கொண்டு இருக்கீங்க அம்மா" என்று வந்தாள் இந்துமதி. "வேண்டுதல் டீ வந்து சேர்ந்திருக்கிறாள் பாரு எருமை இரண்டு நாளாக ரூமுக்குள்ளயே அடைந்து கிடக்கிறியே என்ன சங்கதி" என்றார் வைதேகி.

"சங்கதி எல்லாம் ஒன்றும் இல்லை என்ன விஷயம் ஏன் கூப்பிட்டீங்க" என்றாள் இந்துமதி. "நாளைக்கு பொங்கல் டீ நீ இப்படியே ரூமுக்குள்ளயே அடைந்து கிடக்கிறியே அதான் வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்" என்றார் வைதேகி. "நீங்க போயிட்டு வாங்க அம்மா எனக்கு தலைவலி" என்று சொல்லி விட்டு இந்துமதி தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

"என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு இரண்டு நாளாக என் பிள்ளை முகமே அருள் கெட்டு கிடக்கு என்னன்னு கேட்டாலும் சரியான பதில் ஏதும் சொல்லாமல் இருக்கிறாள். சரியா சாப்பிடவும் மாட்டேங்கிறாள்" என்று புலம்பிக் கொண்டு இருந்தார் வைதேகி.

"என்ன அம்மா தனியா புலம்பிட்டு இருக்கீங்க" என்ற மகேந்திரவர்மனிடம், "உன் தங்கச்சிக்கு என்ன ஆச்சு மகி இரண்டு நாளா அடைக்கோழி மாதிரி ரூமுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள். கோவிலுக்கு வாடீன்னு சொன்னால் வர மாட்டேன் தலைவலின்னு சொல்லிட்டு போகிறாள்" என்றார் வைதேகி.

"அதான் இந்துக்கு தலைவலின்னு அவளே சொல்லி இருக்காளே அப்பறம் என்ன ஆச்சுன்னு ஏன் புலம்புறீங்க இப்போ என்ன உங்களுக்கு கோவிலுக்கு போக துணைக்கு ஆள் வேண்டுமா நான் வேண்டும் என்றால் வரட்டுமா" என்றான் மகேந்திரவர்மன்.

"இல்லை மகி அம்மா தனியாவே போயிட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு வைதேகி கிளம்பி விட்டார்.

அவர் சென்றதும் தன் தங்கையின் அறைக்கு சென்றான். "என்ன பண்ணிக்கிட்டு இருக்க இந்து நீ" என்ற சகோதரனை புரியாமல் பார்த்தாள் இந்துமதி.

"நான் என்ன அண்ணா பண்ணினேன் தலை வலிக்குது அதான் படுத்து இருந்தேன்" என்றாள் இந்துமதி.

அவளை முறைத்தவன் , "நீ இன்னும் அந்த பொறுக்கி பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கியா" என்றான் மகேந்திரவர்மன். "அண்ணா அவனைப் பற்றி நான் ஏன் யோசிக்க போகிறேன்" என்று இந்துமதி கூறிட, "பொய் சொல்லாதே இந்து உன்னை பற்றி எனக்கு தெரியாதா. நீ நார்மலா இருந்தால் அம்மா கிட்ட ஏன் சரியா பேச மாட்டேங்கிற அம்மா புலம்பி விட்டு போறாங்க" என்றான் மகேந்திரன் கோபமாக.

"அண்ணா அது" என்ற இந்துவிடம், "இதோ பாரு இந்து நடந்த விஷயம் ஒரு விபத்து அதை மறந்துட்டு நீ வேற வேலையை பாரு. உனக்காக அண்ணன் அந்த ஜல்லிக்கட்டில் கலந்துப்பேன் ஆனால் நீ இப்படி இருக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு தயவு செய்து டிரஸ் மாத்திட்டு கிளம்பு" என்றான்.

"எங்கே கிளம்பனும் அண்ணா" என்ற இந்து விடம் , "கோவிலுக்கு தான்" என்றான் மகேந்திரன். "அண்ணா நான்" என்ற இந்துமதியை அவன் முறைத்திட, "சரி போகலாம்" என்று கிளம்பினாள் இந்துமதி.

"என்னம்மா நீங்க எங்கே கிளம்பிட்டிங்க" என்ற வெற்றியிடம், "கோவிலுக்கு மாறா" என்றார் வானதி. "முதலிலேயே சொல்லி இருந்தால் சம்முவை கூப்பிட போகும் போது உங்களை கோவிலில் விட்டு இருப்பேனே" என்றான் வெற்றி.

"இல்லை மாறா எனக்கு என்ன கோவிலுக்கு வழி தெரியாதா நான் போயிட்டு வந்திடுவேன்" என்று கிளம்பினார் வானதி. "தனியாக எல்லாம் நீங்கள் போக வேண்டாம் நானே உங்களை அழைத்துப் போகிறேன்" என்று அவரை அழைத்துச் சென்றான் வெற்றி.

"என்ன இந்து இன்னுமா ரெடியாகிட்டு இருக்க" என்ற மகேந்திரனிடம், "வரேன் அண்ணா" என்று வந்தாள் இந்துமதி. சரி போகலாம் என்று தங்கையை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான் மகேந்திரவர்மன்.

எதார்த்தமாக வானதியை கோவிலில் பார்த்த வைதேகி புன்னகைக்க அவரும் மென்மையாக புன்னகைத்து விட்டு கடந்து சென்றார். அவருடன் வந்த வெற்றியின் கண்கள் தேடியது என்னவோ இந்துவைத் தான். அவளை தங்கையை அழைக்க வந்த பொழுதே தேடினான் அந்த சமயத்தில் மகேந்திரனுடன் வாக்கு வாதம் நடந்து அதை நினைத்தவன் அந்த நினைவை உதறி விட்டு கோவிலுக்குள் சென்றான்.

"என்ன இந்து தலைவலின்னு சொல்லிட்டு வந்துட்ட" என்ற வைதேகியின் குரலில் திரும்பினான் வெற்றிமாறன்.

அவள் முகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்த பொழிவு இல்லை. துள்ளல் இல்லை எல்லாம் தன்னால் தான் என்று நினைத்தவனுக்கு லேசாக குற்றவுணர்வாக இருந்தது.

"நான் தான் அம்மா அழைச்சிட்டு வந்தேன்" என்ற மகேந்திரவர்மன் சரி வாங்க சாமி கும்பிட போகலாம் என்று தாயையும், தங்கையையும் கோவிலுக்குள் அழைத்துச் சென்றான்.



சன்னதியில் தனக்கு எதிரே நின்று இருந்த வெற்றியை அண்ணனும், தங்கையும் கோபமாக முறைத்துக் கொண்டு இருந்தனர். "இவன் வருவான் என்று தெரிந்திருந்தால் கட்டாயம் நான் வந்தே இருக்க மாட்டேன் அண்ணா" என்றாள் இந்துமதி.


"இந்து இது கோவில் நம்ம எப்படி சாமி கும்பிட வந்தோமோ அப்படித் தான் அவனும் வந்திருப்பான் . நீ கண்டதையும் யோசிக்காமல் அமைதியாக சாமி கும்பிடு அம்மா இருக்காங்க" என்றான் மகேந்திரன்.



அவளும் அமைதியாக சாமி கும்பிட்டு விட்டு பிரகாரத்தை வலம் வர சென்று விட்டாள். மகேந்திரனும், வைதேகியும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டனர்.

"என்ன மகி உன் தங்கச்சி நான் கூப்பிட்ட பொழுது தலைவலின்னு சொன்னாள். அண்ணன் நீ கூப்பிட்டதும் வந்து விட்டாள்" என்ற வைதேகியிடம் , "என் தங்கச்சி தான் பாசமலர் சாவித்திரி ஆச்சே நான் சொன்னால் கட்டாயம் கேட்பாள்" என்று சிரித்தான் மகேந்திரவர்மன்.

"அது என்னவோ உண்மைதான்" என்று கூறிய வைதேகியின் கண்கள் கலங்கியது. "என்ன ஆச்சு அம்மா ஏன் உங்க கண் கலங்குது" என்ற மகேந்திரனிடம், "இல்லை மகி நான் கூட என் அண்ணன் என்ன சொன்னாலும் கேட்பேன். என் அண்ணன் பேச்சை நான் மீறியது ஒரே ஒரு முறை தான். உன் அப்பாவை கல்யாணம் பண்ணினது அன்றைக்கு என்னை வெறுத்தார் இது வரை என் முகத்தை கூட பார்க்க மாட்டேன் என்று வைராக்கியமாக இருக்கிறார். அதை நினைக்கும் போது மனசு வலிக்குது" என்றார் வைதேகி.

"அம்மா" என்று அவன் ஏதோ சொல்ல வர, "உன் அப்பா என்னை என் அண்ணன் பார்த்துக் கொண்டதை விட அதிகமாகவே பார்த்துக் கொள்கிறார். இருந்தாலும் என் அண்ணன் உறவு சுத்தமா அறுந்து போனது மனசுக்கு வலிக்குது" என்றார் வைதேகி.

"இந்து" என்று வெற்றி அவளை அழைத்திட அவள் கண்டு கொள்ளாமல் செல்ல , "ஏய் உன்னைத் தான் கூப்பிடுகிறேன் நில்லு டீ" என்றான் வெற்றி.



கோபமாக அவனை முறைத்தவளின் அருகில் வந்தவன் , "அதான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டேன்ல அப்புறமும் என்ன" என்றவனை தீயென முறைத்தவள் ஏதோ சொல்ல வர , "என்ன திரும்பவும் அதையே தான் சொல்லப் போற என் தங்கச்சிக்கு இது போல் நடந்தால் என்று அம்மா தாயே போதும் என்றவன் நான் உன் கிட்ட அப்படி நடந்து கொண்டது தப்பு தான் அதற்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் தாங்கிக் கொள்கிறேன் ஆனால் அந்த தண்டனையை என் மனைவியாக என் வீட்டிற்கு வந்து கொடு" என்றான் வெற்றிமாறன்.

"என்ன" என்ற இந்துமதியின் நெற்றியில் குங்குமத்தை வைத்தவன், "உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் படுகிறேன் டீ" என்றான். அவனை முறைத்த இந்து அவன் வைத்து விட்ட குங்குமத்தை அழிக்கப் போக அவளது கையைப் பிடித்தவன், "நீ மட்டும் இதை அழிக்க நினைத்தால் அன்னைக்கு தோப்பில் யாரும் பார்க்காத போது உனக்கு முத்தம் கொடுத்தேன். இன்னைக்கு கோவிலில் எல்லோரும் பார்க்கும் போது முத்தம் கொடுப்பேன் உன் உதட்டில்" என்றான். அவளோ அதிர்ந்து போய் அவனைப் பார்த்திட, "இதையும் உன் அண்ணன்காரன் கிட்டே சொல்லாதே" என்ற வெற்றி சென்று விட இந்துவிற்கு தான் அவனது இந்த பேச்சும், செயலும் அதிர்ச்சியாக இருந்தது.

"இந்து" என்று அழைத்துக் கொண்டே மகேந்திரவர்மன் வரவும் அமைதியாக அவனைப் பார்த்து ,"என்ன அண்ணா" என்றாள் இந்துமதி. "இங்கே என்ன பண்ணுற நேரம் ஆச்சு வீட்டுக்கு போகலாமா" என்றான் மகேந்திரவர்மன். சரி என்று தன் அண்ணனுடன் சென்றாலும் அவள் மூளை எங்கிலும் வெற்றிமாறனின் பேச்சு தான் பதிந்து போனது.



....தொடரும்....
 
அடேய் வெற்றி நீ பண்றது ஒன்னும் சரியில்ல இதெல்லாம் நல்லா இல்ல பாத்துக்கோ
 
Top