GG writers
Moderator
அத்தியாயம் 6
இரண்டு நாட்களாக அவள் தன் அண்ணனிடம் கூட பேச வில்லை. தன் அறைக்குள்ளேயே அடைந்து கொண்டாள். அவன் கூறிய விசயத்தை யோசித்துக் கொண்டே இருந்தாள். இதுவரை அவனை திருமணம் செய்து கொள்ள துளியும் அவள் நினைக்க வில்லை. அவனை அவளால் முழுவதும் நம்பவும் முடியவில்லை. யோசனையுடனே அறையை விட்டு வெளியே வந்தாள் இந்துமதி.
"எங்கே கிளம்பிட்டிங்க அண்ணா" என்ற இந்துவை முறைத்த மகேந்திரவர்மன், "நீ தான் என்னை ஜல்லிக்கட்டில் கலந்துக்க சொன்ன இப்போ எங்கே போறேன்னு கேட்கிற விளங்கிரும்" என்றவன், "சரி நீயும் என் கூட வா" என்று தங்கையை அழைத்தான் மகேந்திரவர்மன்.
"ஏன் டீ பொங்கல் அன்னைக்கு கூட அந்த ரூமில் அடைந்து தான் கிடந்தே இன்னைக்கு உன் அண்ணன் காளையை அடக்க போகிறான்னு தெரிந்ததும் வெளியே வந்திருக்க" என்று குறை பட்டுக் கொண்டார் வைதேகி.
"விடு வைதேகி அதான் இந்துவுக்கு உடம்பு சரி இல்லை தானே" என்ற ராமச்சந்திரன், "நீ அவசியம் ஜல்லிக்கட்டு பார்க்க போகனுமா இந்து" என்றார். "ஆமாம் அப்பா நான் போயிட்டு வரேன்" என்று கூறிவிட்டு தன் அண்ணனுடன் சென்றாள் இந்துமதி.
"என்ன சம்மு நகத்தை கடிச்சுட்டு இருக்க" என்ற தேன்மொழியிடம், "எங்கே என் அண்ணன் அவங்க ப்ரூஸ்லீயை அடக்கிருமோன்னு பயந்துட்டாங்களோ என்னவோ" என்று வந்தாள் இந்துமதி.
"ஏய் இந்து என்னப்பா கொஞ்ச நாளாக உன்னை பார்க்கவே முடியலை" என்று தேன்மொழி கேட்டிட, "உடம்பு சரியில்லை தேனு" என்றாள் இந்துமதி.
"எங்க வீட்டு ப்ரூஸ்லீயை அடக்க என்ன அதோட வாலை உங்க அண்ணனால தொட முடியுமான்னு பாரு" என்று சம்யுக்தா கூறிட ,"என் அண்ணன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு கட்டாயம் என் அண்ணன் ஜெயிக்கும் ஒரு வேளை என் அண்ணன் ஜெயிச்சா நீ அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுவியா" என்றாள் இந்துமதி.
அவளைப் பார்த்து ஏளனமாக சிரித்தாள் சம்யுக்தா. "உன் அண்ணன் முதலில் உயிரோட வரட்டும் அப்பறம் பாக்கலாம்" என்றாள் சம்யுக்தா. "இதெல்லாம் சமாளிப்பு நான் கேட்டது சத்திய வாக்கு என் அண்ணன் ஜெயிச்சா நீ அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுவியா, மாட்டியா" என்றாள் இந்துமதி.
"கண்டிப்பா உன் அண்ணன் எங்க வீட்டு ப்ரூஸ்லீயை அடக்கி ஜெயித்து வந்தால் கல்யாணம் பண்ணிக்க நான் சம்மதிக்கிறேன் ஆனால் உன் அண்ணன் தோத்துப் போயிட்டான்னா அண்ணன், தங்கை இரண்டு பேரும் ஊருக்கு முன்னாடி என் காலிலும், என் அப்பா காலிலும், என் அண்ணன் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கனும் அதற்கு நீ சம்மதிக்கிறியா" என்றாள் சம்யுக்தா.
"கண்டிப்பா சம்மதிக்கிறேன் எனக்கு என் அண்ணன் மேல நிறைய நம்பிக்கை இருக்கு" என்ற இந்துமதியை ஏளனமாக பார்த்தவள், "காலில் விழ ரெடியா இரு. தேனு இன்னைக்கு ஒரு சூப்பர் சீன் இருக்கு" என்று சொல்லி விட்டு அவள் சென்று விட இந்துமதிக்கு மனதில் பயம் இருந்தாலும் தன் அண்ணன் மீது இருந்த நம்பிக்கையால் அவள் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"மாப்பிள்ளை உன்னால முடியும் தானே" என்ற மணிவண்ணனிடம், "இந்த மகேந்திரவர்மன் எப்பவுமே முன் வச்ச காலை பின் வைக்கவே மாட்டேன்" என்று கூறியவன் சீறி வந்த காளையின் திமிலை அடக்க அதை நோக்கி பாய்ந்தான்.
காளையும் சாதாரண காளை இல்லையே ஐந்தாறு வருடங்களாக ஒரு ஜல்லிக்கட்டில் கூட தோற்காத காளை ஆயிற்றே. அவன் அதன் வாலைத் தொட்டதுமே சீறி வந்து அவனை முட்டப் பாய்ந்தது. அவன் ஒரு அடி விலகி விட அவன் வயிற்றில் விழ வேண்டிய கீறல் அவன் கையில் பட்டதும் அவன் வெண்ணிற மேனியில் செந்நிற உதிரம் வழிய ஆரம்பித்தது.
அண்ணனின் கையில் இரத்தத்தைக் கண்டதும் வலித்தது என்னவோ இந்துமதிக்குத் தான். "அண்ணா" என்று அவள் பதறிட அவள் அருகில் வந்த சம்யுக்தாவோ , "என்னமோ சொன்ன உன் அண்ணன் எங்க ப்ரூஸ்லீயை அடக்க போறாருன்னு பாரு உன் அண்ணனுக்கு தோள் கிழிஞ்சு இரத்தம் வருது அடுத்து ஒரே ஒரு கீறல் சரியாக உன் அண்ணன் வயிற்றில் விழப் போகுது உன் அண்ணன் பரலோகம் போக போகிறான்" என்று சிரித்தாள் சம்யுக்தா.
"என் அண்ணன் செத்துப் போனால் உனக்கு அவ்வளவு சந்தோஷமா" என்ற இந்துவிடம் , "ஆமாம் அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என் அப்பாவை தூண்டி விட்டு என்னை கல்யாணம் பண்ணி தருவதாக அவர் வாயாலையே சொல்ல வச்சுருப்பான் அவன் சாகட்டும்" என்று கூறிவிட்டு அவள் கிளம்ப எத்தனிக்க, "என் அண்ணன் சாகாது உன் கழுத்தில் என் அண்ணன் தான் தாலி கட்டும்" என்று கூறினாள் இந்துமதி.
"பகல் கனவு பலிக்காது இந்துமதி மேடம் உன் அண்ணனோட இரத்தத்தில் ஏற்கனவே விஷம் கலந்திருக்கும்" என்று எள்ளலாக சிரித்தாள் சம்யுக்தா. அவளை அதிர்ச்சியாக பார்த்த இந்து விடம், "மாட்டோட கொம்புல ஆல்ரெடி விஷயத்தை நானும் என் அண்ணனும் தடவிட்டோம்.
உன் அண்ணன் சாகனும் நீ என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கனும்" என்ற சம்யுக்தாவை முறைத்த இந்துமதி ஏதோ சொல்ல வர , "அங்கே பாரு உன் அண்ணன் சாகப் போகிறான்" என்று சிரித்தாள் சம்யுக்தா.
இந்துவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. தன் அண்ணனை நோக்கி அவள் ஓட ஆரம்பித்தாள்.
"சம்மு நிஜமாவே மாட்டோட கொம்புல விஷம் தடவி இருக்கிங்களா" என்ற தேன்மொழியிடம், "ச்சீ சும்மா சொன்னேன் தேனு இவளை கதற விடனும் அதான்" என்ற சம்யுக்தா சிரித்தாள்.
இங்கே மகேந்திரவர்மன் ஒரு வழியாக போராடி ப்ரூஸ் லீயின் திமிலைப் பிடித்து அடக்கி ஜல்லிக்கட்டில் ஜெயித்து இருந்தான். "சம்மு மகேந்திரன் அண்ணா ஜெயிச்சுட்டாரு" என்று தேன்மொழி கூறிட , சம்யுக்தாவிற்கு தான் யாரோ சாட்டையால் அடித்தது போல இருந்தது.
"எப்படி ஜெயிச்சான்" என்று அவள் அதிர்ந்து போய் நிற்க இராஜராஜனோ துண்டை உதறி விட்டு மகன் வேந்தனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.
"உன்னை நம்பினேன் என்னை தோற்கடித்து விட்டாயே டா" என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்று விட வேந்தனின் முகமே செத்து விட்டது. ஓடி வந்த இந்துமதி தன் அண்ணனைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
"என்னாச்சு இந்து அண்ணன் தான் ஜெயிச்சுட்டேனே அப்பறம் ஏன் அழுதுட்டு இருக்க" என்றிட, "அண்ணா உன் கையில் இரத்தம் வருது வா உடனே ஹாஸ்பிடல் போகலாம்" என்று தன் அண்ணனை இழுத்தாள் இந்துமதி.
"இந்து இது லேசான காயம் தான்" என்று அவன் கூறிக் கொண்டே மயங்கி சரிந்தான். வன்மத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டு எழில் வேந்தன் மாட்டைப் பிடித்துக் கொண்டு செல்ல "மாப்பிள்ளை என்னாச்சு டா" என்று மகேந்திரனின் நண்பர்கள் அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். "அண்ணா அந்த வேந்தன் மாட்டோட கொம்பில் விஷத்தை தடவி இருக்கான் அதான் அண்ணன் மயங்கிருச்சு" என்று இந்துமதி கூறிட, "என்ன சொல்லுற இந்து" என்று பதறினான் மணிவண்ணன்.
மருத்துவமனைக்கு வந்த வைதேகி, ராமச்சந்திரன் இருவரும் மகளிடம், "அண்ணனுக்கு எப்படி இருக்கு இந்து" என்று கேட்டிட அவளோ வைதேகியை பார்த்து , "உங்க அண்ணன் மகன் தான் மாட்டுக் கொம்பில் விஷத்தை தடவி இருக்கான். அந்த மாடு குத்தினதால் தான் என் அண்ணன் மயங்கி விழுந்துருச்சு" என்று அழுதாள் இந்துமதி.
"என்ன சொல்லுற இந்து" என்ற ராமச்சந்திரனிடம், "அந்த சம்யுக்தா தான் சொன்னாள்" என்று இந்துமதி கூறிட, "அப்பா வாங்க அந்த பெரிய மனுஷன் கிட்ட நியாயம் கேட்கலாம்" என்று மணிவண்ணன் அழைத்திட ராமச்சந்திரனோ மனைவியை தான் பார்த்தார்.
"நம்ம பையன் செத்தாலும் பரவாயில்லை என்று நினைக்கிற அளவுக்கு என் அண்ணன் மோசமானவரு இல்லைங்க" என்று வைதேகி கூறிட, "உன் அண்ணன் மோசமானவரு இல்லைம்மா ஆனால் உன் அண்ணன் பசங்க பொறுக்கிங்க" என்று கூறிவிட்டு அழுதாள் இந்துமதி.
அந்த நேரம் பார்த்து மருத்துவமனைக்கு வந்தான் வெற்றிமாறன். அவனைக் கண்ட இந்துமதி வெறி பிடித்தவள் போல கோபமாக சென்று அவனது சண்டையைப் பிடித்தாள்.
"ஏன்டா இப்படி பண்ணுனீங்க உங்களுக்கு அப்படி என்னடா துரோகம் பண்ணினோம். உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப் பட்ட ஒரே காரணத்திற்காக என் அண்ணனை கொலை பண்ண துணிந்து விட்டீங்க என்ன மனுஷங்க நீங்க எல்லாம் அன்னைக்கு உன்னால நான் சாகத் துணிந்தேன். உன் தம்பி, தங்கச்சி இரண்டு பேரும் சேர்ந்து என் அண்ணனை கொலை செய்ய மாட்டு கொம்பில் விஷத்தை தடவி இருக்காங்க அப்படி என்ன தான் உங்களுக்கு இரத்த வெறி" என்றாள் இந்துமதி.
"இந்து என்ன சொல்லுற" என்ற வெற்றிமாறனிடம் ,சம்யுக்தாவிடம் பேசிய அனைத்தையும் கூறினாள் இந்துமதி.
"என்ன மாறா இதெல்லாம் என் அண்ணன் பசங்க நீங்க ஏன் இப்படி ஒரு காரியம் பண்ணி இருக்கீங்க" என்று அழுதார் வைதேகி.
"அத்தை சத்தியமா எனக்கு எதுவும் புரியவில்லை கண்டிப்பா வேந்தன் அப்படி எதுவும் செய்து இருக்க மாட்டான்" என்று வெற்றி கூறிட, "ஏன் செய்ய மாட்டான் உன் கூடப் பிறந்தவன் தானே உன்னோட கொடூர புத்தி அவனுக்கும் தானே இருக்கும்" என்றாள் இந்துமதி.
"இந்து பொறுமையா இரு" என்று ராமச்சந்திரன் கூறிட, "இல்லைப்பா உங்களுக்கு தெரியாது" என்று ஏதோ சொல்ல வர, "இந்து" என்று மகேந்திரனின் குரல் கேட்கவும் வெற்றிமாறனை விட்டு தன் அண்ணன் அருகில் ஓடிச் சென்றாள் இந்துமதி.
"அண்ணா உனக்கு ஒன்றும் இல்லையே" என்ற இந்து விடம், "எனக்கு ஒன்றும் இல்லை நீ ஏன் அவன் கூட சண்டை போட்டுட்டு இருக்க" என்றான் மகேந்திரவர்மன்.
"அந்த வேந்தனும் அவன் தங்கச்சியும் சேர்ந்து தான் மாட்டு கொம்பில் விஷத்தை தடவி உன்னை கொலை செய்ய பார்த்தாங்க" என்று அழுதாள் இந்துமதி. "இந்து பைத்தியம் மாதிரி பேசாதே இரத்தம் அதிகம் போனதால் தான் நான் மயங்கினேன் விஷம் எல்லாம் ஒன்றும் இல்லை" என்று கூறினான் மகேந்திரவர்மன்.
"அண்ணா அந்த சம்யுக்தா சொன்னால்" என்று அவள் மேலும் ஏதோ கூற வர, "நான் தான் சொல்றேன்ல" என்று அவன் கூறிட அங்கு வந்த செவிலியரோ அவனைத் திட்ட ஆரம்பித்தார்.
"என்னங்க நீங்க இப்படி ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்கும் பொழுது எந்திரிச்சு வந்து இருக்கீங்க" என்று
செவிலியர் திட்டிட , "சாரி சிஸ்டர்" என்றான் மகேந்திரவர்மன்.
... தொடரும்...