வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இதயத்தில் தைத்தாய் இதமான முள்ளை...(7)

GG writers

Moderator
அத்தியாயம் 7

கோபமாக வீட்டிற்கு வந்த வெற்றி, "வேந்தா" என்று கத்திட அங்கு வந்தான் எழில் வேந்தன். "என்ன அண்ணா ஏன் கத்திட்டு இருக்க" என்ற வேந்தனின் கன்னம் பழுக்க அறைந்தான் வெற்றிமாறன்.

"அண்ணா" என்று அதிர்ந்தவனிடம், "எதுக்கு டா மாட்டுக் கொம்பில் விஷத்தை தடவி வச்ச" என்று வெற்றி கேட்டிட அதிர்ந்து விழித்தான் எழில் வேந்தன். "என்ன சொல்லுற மாறா" என்ற வானதியிடம், "ஆமாம் அம்மா அந்த மகேந்திரனை சாகடிக்க மாட்டுக் கொம்பில் விஷத்தை தடவி இருக்கான்" என்று கோபமாக கத்தினான் வெற்றிமாறன்.

"என்ன வேந்தா இதெல்லாம் உன் அப்பாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்" என்ற வானதியிடம், "விஷத்தை தடவ சொன்னதே நான் தான் வானதி" என்றார் இராஜராஜன்.

"என்னங்க சொல்றீங்க" என்ற வானதியிடம், "என் பொண்ணு அந்த ஓடுகாலி வீட்டுக்கு போய் வாழனுமா அப்படி மட்டும் நடக்க கூடாது அதனால் தான் அந்த மகேந்திரவர்மன் சாகனும் என்று நினைத்து மாட்டு கொம்பில் விஷத்தை தடவ சொல்லி வேந்தன் கிட்ட சொன்னேன்" என்றார் இராஜராஜன்.

"அப்பா என்ன இது நீங்களா இப்படி பண்ண சொன்னீங்க இது மட்டும் ஊர்க் காரங்க யாருக்கும் தெரிந்தால் எவ்வளவு பெரிய பிரச்சினை ஆகும் அதை எல்லாம் யோசிக்காமல் ஏன் இப்படி பண்ணுனீங்க" என்றான் வெற்றிமாறன்.

"அதற்கு முன்னே நான் செத்துப் போய் விடுகிறேன்" என்று இராஜராஜன் கூறிட, "அப்பா என்ன பேசுறீங்க நீங்க" என்றான் வெற்றிமாறன். "இல்லை மாறா அவனுக்கு விஷம் வச்சு கொலை பண்ண பார்த்த விஷயம் தெரிந்து அவமானப் பட்டு சாகுறதை விட" என்று இராஜராஜன் கூறிட, "உங்களுக்கு எந்த அவமானமும் வராது அவன் வரவும் விட மாட்டான்" என்ற வெற்றிமாறனை கேள்வியாக பார்த்தார் இராஜராஜன்.

"மகேந்திரன் உங்களை அசிங்கப் பட விட மாட்டான் அவனோட அப்பா, அம்மா, தங்கச்சி எல்லோரிடமும் இரத்தம் அதிகம் போனதால் தான் மயங்கினான் என்று தான் சொல்லி இருக்கிறான். டாக்டர் கிட்ட கூட தன் உடம்பில் விஷம் ஏறின விசயத்தை வெளியே சொல்லக் கூடாது என்று தான் சொல்லி இருக்கிறான்" என்ற வெற்றிமாறனிடம், "உனக்கு எப்படி தெரியும் மாறா" என்றார் இராஜராஜன்.


"நான் ஹாஸ்பிடல் போனேன் அங்கே அவன் டாக்டர் கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன்" என்றான் வெற்றிமாறன்.


இராஜராஜன் அவமானத்தில் கூனி குறுகி இருந்தார். "அவனுக்கு தெரியுமா மாறா" என்ற இராஜராஜனிடம், "தெரியும் அப்பா நீங்க தான் வேந்தன் கிட்ட சொன்னீங்க என்று கூட தெரியும்" என்று வெற்றிமாறன் கூறிட அவருக்கு மேலும் மேலும் அவமானமும், குற்றவுணர்ச்சியும் தான் அதிகரித்தது.


"என்னங்க நீங்க இப்படி ஒரு காரியத்தை செய்து இருக்கீங்க" என்ற வானதி, "ஆயிரம் தான் இருந்தாலும் மகேந்திரன் உங்கள் சொந்த தங்கச்சி பையன் அவனைப் போய் கொலை பண்ண நினைத்து இருக்கீங்களே" என்ற வானதி கோபமாக சென்று விட்டார்.

"அப்பா நீங்க ஏன் குற்றவுணர்ச்சியோட இருக்கீங்க நீங்க செய்தது ஒன்றும் தப்பே இல்லை "என்ற சம்யுக்தா, "சரி வாங்க சாப்பிடலாம்" என்று அவரை அழைத்துச் சென்றாள்.

"ஏன் அண்ணா அவனை சாகடிக்க நினைத்தால் நீ சந்தோசம் தான் படுவன்னு நினைத்தேன் ஆனால் நீ அவனுக்காக இங்கே வரிஞ்சு கட்டிட்டு வந்து பேசிட்டு இருக்க .என்னையும் அடிச்சுட்ட" என்ற எழில் வேந்தனிடம், "அவன் சாகனும் என்று என்னைக்குமே நான் நினைத்ததே இல்லை. அவன் தோற்கனும் என்று தான் நினைத்தேன் நீ பண்ணின காரியம் அப்பா சொன்னது என்று எனக்கு தெரியாது" என்ற வெற்றி, "அப்பாவே சொல்லி இருந்தாலும் நீ இதை செய்து இருக்க கூடாது" என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.


இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்த மகேந்திரவர்மன் நேராக வந்ததோ தன் மாமனார் வீட்டிற்கு தான்.

"இங்கே எதற்குடா வந்த" என்ற எழிலிடம், "இதோ பாரு மச்சான் நான் உன் கூட மல்லுக் கட்ட வர வில்லை என் மாமனார் கிட்ட பேச வந்திருக்கேன் அதனால் நீ கொஞ்சம் ஓரமா போறியா" என்றான் மகேந்திரவர்மன்.

"நான் ஏன் டா ஓரமாக போகனும்" என்று எகிறிய எழிலிடம் , "இதோ பாரு வேந்தா என்ன இருந்தாலும் நீ நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணோட அண்ணன். உன்னை அடிக்க கூடாதுன்னு நான் முடிவு பண்ணி தான் வந்து இருக்கிறேன் ஆனாலும் என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு நீ விஷம் வைத்து விஷயத்தை ஊரில் நான் சொன்னால் கூட உன் குடும்ப மானம் மொத்தமாக போயிரும். என் மாமனாரோட மரியாதையை காப்பாற்ற வேண்டியது என்னோட கடமைன்னு தான் நான் அமைதியாக இருக்கிறேன்" என்றான் மகேந்திரவர்மன்.

எழில் வேந்தன் ஏதோ சொல்ல வர, "வேந்தா உள்ளே போ" என்று வந்தார் இராஜராஜன். "என்ன விஷயம்" என்று கேட்டார் இராஜராஜன்.

"என்ன விஷயமா சரி சொன்ன மாதிரி உங்க வீட்டு காளை மாட்டை அடக்கி ஆம்பளைன்னு நிரூபிச்சுட்டேன். இப்போ உங்க மகளை எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பிங்களா மாடு உங்க காலை வாரி விட்டது போல உங்க மகளும் வாரி விட மாட்ங்களே" என்று கேட்டான் மகேந்திரவர்மன் கண்களில் திமிரோடும் பேசும் தொணியில் ஏளனத்தோடும்.

"தன் முன் வந்து ஒருவன் ஏளனமாக பேசிக் கொண்டு இருக்க அதுவும் உன் வீட்டு காளை மாட்டை அடக்கி உன் பொண்ணை கட்டிக்க வந்து இருக்கேன் உன் மாடு தோற்றுப் போய் உன்னை சிக்க வைத்தது போல உன் மகளும் ஓடிப் போய் விடுவாளோ" என்று ஏளனமாக கூறிட கொடுத்த வாக்கு மட்டும் தன் முன் தடையாக இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் எதிரில் நிற்பவன் பிணமாகத் தான் கிடந்திருப்பான். தன் ஒட்டு மொத்த கோபத்தையும் அடக்கிக் கொண்ட ராஜராஜன் , "நான் கொடுத்த வாக்கு செப்பு பட்டயத்தில் எழுதினது போல எப்பவுமே மாறாது. என் பொண்ணு உனக்கு தான்" என்றவர், "மாறா" என்று மகனை அழைத்து மாறனிடம் , "அடுத்த முகூர்த்தத்திலேயே உன் தங்கச்சியை இவருக்கு கல்யாணம் பண்ணி வைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்" என்று கூறிவிட்டு கோபமாக சென்று விட்டார்.

"அது" என்று நினைத்தவன், "ஓய் சண்டி ராணி" என்று அவளை அழைத்திட, அவளோ முகத்தை வெட்டிக் கொண்டு செல்ல எத்தனிக்க அவளது கையை பிடித்து தன் புறம் இழுத்தான் மகேந்திரவர்மன்.

அவனை முறைத்தவள் , "அறிவு இல்லை பொம்பளைப் பிள்ளை கையைப் பிடித்து இழுக்கிற இது தான் உன் வீட்டில் உன்னை வளர்த்த லட்சணமா?" என்றாள் சம்யுக்தா தன் கையை உருவ போராடிக் கொண்டே.

"கட்டிக்கப் போற புருஷனை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசுற இது தான் உன் அப்பன் உன்னை வளர்த்த லட்சணமா?" என்றவன், "அப்புறம் நான் உரிமைப் பட்டவள் கையைத் தானே பிடிக்கிறேன் அதான் உன் அப்பாவே சொல்லி விட்டாரே அடுத்த முகூர்த்தம் நமக்கு கல்யாணம். அப்பறம் சாந்தி முகூர்த்தம்" என்று கூறிக் கொண்டே அவளைப் பார்த்து அவன் கண்ணடிக்க அவனைத் தீயென முறைத்தவள், "அது சாந்தி முகூர்த்தம் இல்லைடா உன் வாழ்க்கையில் நீ பார்க்கிற கடைசி முகூர்த்தம்" என்று சொல்லி விட்டு தன் கையை உருவிக் கொண்டாள்.

"அப்படியா பொண்டாட்டி என் பொண்டாட்டி சொன்னால் சரியாக தான் இருக்கும்" என்றவன் அவளை தன் புறம் இழுத்து, "நம்ம கல்யாணத்துக்கு என்னோட முதல் அச்சாரம்" என்று தன் உயரத்திற்கு அவளைத் தூக்கி அவள் இதழில் தன் இதழை பதித்தான் .


அவனைத் தள்ளி விட்டவள் , "பொறுக்கி" என்று அவனது கன்னத்தில் அடிக்க வர அவளது கையை பிடித்தான் மகேந்திரன். "என்ன டீ புருஷனை அடிக்க கை ஓங்குற ஓங்கின கையை உடைத்து விடுவேன். ஆமாம் என் தங்கச்சி கிட்ட சத்தியம் பண்ணுனியாமே என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு" என்று கண்ணடித்தான் மகேந்திரவர்மன்.

அவனை முறைத்த சம்யுக்தா ஏதோ சொல்ல வர, "சம்மு" என்று வானதியின் குரல் கேட்கவும் அவனை முறைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் சம்யுக்தா.


"என்ன மகி சொல்லுற அடுத்த முகூர்த்தத்திலே உனக்கும், சம்யுக்தாவுக்கும் கல்யாணமா நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா" என்ற வைதேகி தன் அண்ணனின் உறவு மீண்டும் தனக்கு கிடைக்கப் போகிறது என்று மகிழ்ச்சியில் இருந்தார்.

"என்னங்க நாளைக்கு நல்ல நாள் சொந்த பந்தங்கள் எல்லோருடனும் போயி மகிக்கும், சம்யுக்தாவுக்கும் நிச்சயம் பண்ணிட்டு வந்து விடுவோம். கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு" என்ற வைதேகி சந்தோஷமாக இருந்தார்.


மனைவியின் சந்தோசத்தைக் கண்டு ராமச்சந்திரனும் சந்தோசமாக மகனின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தார்.

சம்யுக்தாவோ கோபமாக அமர்ந்து இருந்தாள். "என்ன சம்மு ஏன் இப்படி உம்முன்னு இருக்க" என்ற வெற்றியிடம் ஒன்றும் இல்லை என்றாளே தவிர மகேந்திரவர்மன் தன்னிடம் எல்லை மீறி நடந்து கொண்ட விஷயத்தை பற்றி மூச்சே விடவில்லை.


..... தொடரும்...
 
ராஜராஜன் யோசிக்காம வாக்கு குடுத்துட்டு இப்படி குறுக்கு வழில மகிய தோற்கடிக்க விஷம் வச்சிருக்கீங்க 😡😡
 
Top