வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இதயத்தில் தைத்தாய் இதமான முள்ளை...(8)

GG writers

Moderator
அத்தியாயம் 8

"என்ன வானதி இவங்க எல்லாரும் ஏன் நம்ம வீட்டுக்கு வந்து இருக்காங்க" என்ற இராஜராஜனிடம், "நம்ம சம்முவை பரிசம் போட வந்திருக்காங்க நீங்கள் தானே சொன்னீங்க அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் நடக்கும் என்று" அதான் என்றார் வானதி.


"கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுக்கிறது போல ஆசை ஆசையாய் என் பொண்ணை பெத்து உயிரா வளர்த்து கடைசியில் அவளை அந்த ஓடுகாலி வீட்டில் கட்டிக் கொடுக்கப் போகிறேன் அதை நினைத்தாலே என் இதயம் வெடித்து விடும் போல் இருக்கு வானதி" என்றார் இராஜராஜன்.

"வாக்கு கொடுக்கும் முன்னே நீங்க யோசிச்சு இருக்கனும் இப்போ கவலைப் பட்டு பிரயோஜனம் இல்லை" என்று கூறிய வானதி, "ஊருக்காரங்க எல்லோரும் வந்து இருக்காங்க அதனால கொஞ்சம் சபைக்கு வாங்க" என்றார். இராஜராஜனும் அமைதியாக சபைக்கு வரவும் ஊர்ப் பெரியவர் ஒருவர் கல்யாணம் பற்றிய பேச்சை ஆரம்பித்தார்.

திருமணத்திற்கு நாள் குறித்து சொந்த பந்தங்கள் முன்னிலையில் தாம்பூலம் மாற்றப் பட்டது. இராஜராஜன் வேண்டா வெறுப்பாக அமர்ந்து இருந்தார்.

இந்துமதி சம்யுக்தாவின் அறைக்கு சென்றாள். தேன்மொழி, கவிதா என்று தோழிகள் அவளுக்கான ஒப்பனையை செய்து கொண்டு இருந்தனர். "அண்ணி" என்று வந்த இந்துமதியை முறைத்துக் கொண்டு இருந்தாள் சம்யுக்தா.

"ரொம்ப அழகா இருக்க அண்ணி வா உன்னை சபைக்கு அழைத்துக் கொண்டு வரச் சொன்னாங்க" என்ற இந்து விடம் "அண்ணி, நொண்ணி எல்லாம் சொல்லாதே கடுப்பா இருக்கு" என்றாள் சம்யுக்தா.

"என் அண்ணன் மனைவியை அண்ணி என்று தான் கூப்பிடனும்" என்று இந்துமதி கூறிட சம்யுக்தா ஏதோ சொல்ல வர , "சம்மு" என்று வந்த வெற்றி, "சம்மு கீழே வா" என்றிட தேன்மொழி, கவிதா இருவரும் அவளை அழைத்துக் கொண்டு சென்றனர்.

இந்துவும் கிளம்ப எத்தனிக்க அவளது கையை பிடித்தான் வெற்றிமாறன். அவனை தீயென முறைத்தவள் தன் கையை உதறிடப் பார்க்க அவனது பிடி இறுகியது.

"பொறுக்கி" என்று பற்களைக் கடித்தாள் இந்துமதி. "பொறுக்கி தான் உனக்கு மட்டும்" என்று அவள் காதருகே குனிந்து அவன் கூறிட அவள் பற்களைக் கடித்துக் கொண்டு கோபமாக அவனை முறைத்தாள்.

"கையை விடு" என்று அவள் பற்களைக் கடித்திட , "நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லவில்லை" என்று அவன் கூறிட , "என்ன பதில் சொல்லனும்" என்று அவள் ஏதோ சொல்ல வர, "அண்ணா" என்று எழில்வேந்தன் வர அவளது கையை விட்டான் வெற்றிமாறன்.

அவன் பிடித்த இடம் சிவந்து விட்டது. தன் கையை பார்த்து அவனை முறைத்தவள் அங்கிருந்து செல்ல எதிரே வந்த எழில்வேந்தனோ அவளை எரிப்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான்.

"திமிர் எடுத்த பொறுக்கிங்க" என்று வாய்க்குள் முனங்கி விட்டு இந்துமதி சென்று விட்டாள்.


"எங்கே போன இந்து" என்ற வைதேகி மகளிடம் மாலையை கொடுத்து, "உன் அண்ணி கழுத்தில் போட்டு விடு" என்றார். அவளும் சந்தோஷமாக சம்யுக்தாவின் கழுத்தில் மாலையை அணிவித்தாள்.

"மாறா" என்று வானதி மகனை அழைத்திட வேந்தனும், மாறனும் வந்து சேர்ந்தனர். "மாப்பிள்ளை கழுத்தில் மாலை போட்டு விடு" என்று வானதி கூறிட வெற்றிமாறன் மகேந்திரவர்மனின் கழுத்தில் மாலை அணிவித்து உடன் மோதிரத்தையும் அணிவித்தான்.

இந்துமதி தன் அண்ணியின் கழுத்தில் தங்கச் சங்கிலியை அணிவித்து விட்டவள் பூவையும் சம்யுக்தாவின் தலையில் சூட்டி விட்டாள். நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்தது. விருந்து உபசாரங்களும் நல்ல விதமாக நடந்தது.

"அண்ணா" என்று வைதேகி தன் அண்ணனை அழைத்திட அவரைத் தீயென முறைத்த இராஜராஜன் அங்கு இருந்த ஊர் பெரியவரிடம், "மாமா முறிந்து போன எந்த உறவையும் நான் புதுப்பிக்க விரும்ப வில்லை காளையை அடக்கினால் என் பொண்ணை கல்யாணம் பண்ணி தரேன்னு வாக்கு கொடுத்து இருந்தேன். அதனால மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கப் போகிறது இந்த கல்யாணத்தை சாக்காக வச்சுகிட்டு யாரும் அறுந்து போன உறவை தூக்கிட்டு என் முன்னால் வர வேண்டாம் என்று சொல்லி விடுங்கள்" என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

வைதேகி யின் கண்கள் குளமாகிட , "விடு வைதேகி இதெல்லாம் எதிர்பார்த்தது தான்" என்ற ராமச்சந்திரன் சரிங்க நாங்க கிளம்புறோம் என்று வானதியிடம் கூறிட, "என்ன அண்ணா சாப்பிடாமல் கிளம்புகிறேன் என்று சொல்லுறீங்க நிச்சயம் முடிந்த பிறகு கை நனைக்காமல் போனால் அது நல்லா இருக்காது" என்றார் வானதி.

"வைதேகியும் கணவனிடம் சாப்பிட்டு போகலாமுங்க" என்றிட அவரும் சரியென்று சாப்பிட அமர்ந்தார்.


மகேந்திரவர்மன் தன்னவளைத் தேடிட அவளோ தோட்டத்தில் கடுகடுவென நின்றிருந்தாள். "ஓய் சண்டி ராணி "என்று அவன் அழைத்ததும் கோபமாக அவனை முறைத்து விட்டு அவள் செல்லப் பார்க்க
"ஏய் நில்லுடி உன்னை தானே கூப்பிட்டு இருக்கேன் உனக்கு காது கேட்கலையா?" என்றவனை தீயென முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் சம்யுக்தா ராணி.

" பார்ரா இப்படிலாம் முறைச்சுக்கிட்டு தெரிஞ்சா உன்னை விட்டு விடுவேன்னு நினைச்சியா , இதோ பாரு செல்லம் உனக்கும், எனக்கும் கல்யாணம் நடந்தே தீரும். நீ என்னதான் டிராமா பண்ணினாலும் இந்த கல்யாணத்தை நிப்பாட்ட முடியாது. என் கையால் உன் கழுத்தில் ஏறும் தாலியையும் தடுக்க முடியாது" என்றான் அவன்.

அவனை கோபமாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தவள், "என் அப்பாவை ஏமாற்றி நீ என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கலாம் ஆனால் ஏன்டா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டோம் அப்படின்னு ஒவ்வொரு நாளும் உன்னை துடிக்க வைக்கலை நான் என்னோட அப்பா ராஜராஜனோட பொண்ணு சம்யுக்தா ராணி கிடையாது" என்றாள் அவள் .

"என் மாமன் பெத்த மரிக்கொழுந்தே அவருக்கு நீ பொண்ணு இல்லைன்னா பையனாடி . நீ பையனாவே இருந்தாலும் உன்னை கல்யாணம் பண்ணி என் வீட்டில் விளக்கேற்ற வைப்பேன். உன்னால என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது மைனா மாமன் உன்னை கட்டிக்க காளையைவே அடக்கிட்டேன் என் சண்டி ராணி உன்னை அடக்க மாட்டேனா" என்றவன் அவள் சுதாரிக்கும் முன்பே அவளை அங்கு இருந்த பெரிய மரத்தோடு தள்ளி அவள் இதழில் தன் இதழை பதித்து விட்டான்.

தன் பலம் மொத்தமும் திரட்டி அவனை தள்ளி விட்டவள், "பொறுக்கி" என்று சொல்லி விட்டு நகர அவளது கையை பிடித்தவன், "பொறுக்கி இல்லைடி உன் வருங்கால புருஷன்" என்று கூறிட அவனது கையை தட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.


"பொறுக்கி எப்போ பாரு முத்தம் இவன் மூஞ்சியும், முகரையும் கல்யாணம் முடியட்டும் டா அப்பறம் இருக்கு உன்னையும், உன் குடும்பத்தையும் நொந்து நொந்து சாக வைக்கிறேன்" என்று நினைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள் சம்யுக்தா ராணி.


"என்ன அண்ணா நடக்குது நீ ஏன் அந்த மகேந்திரன் தங்கச்சி கிட்ட பேசிட்டு இருந்த, அவள் கிட்ட எல்லாம் என்ன பேச்சு எனக்கு வரும் கோபத்திற்கு அவளை கடத்திட்டு போயி இரண்டு நாள் எங்கேயாவது அடைச்சு வச்சு அவள் ஓடிப் போய் விட்டாள் என்று ஊரெல்லாம் பரப்பி அசிங்கப் படுத்தி அந்த கேவலமான குடும்பத்தில் சம்மந்தம் வேண்டாம்" என்று சொல்லி சம்முவோட கல்யாணத்தை நிறுத்தனும் என்றான் எழில் வேந்தன்.

"வேந்தா என்ன பேச்சு இது அந்த பொண்ணுக்கும் நம்ம சம்முவோட வயசு தான் இருக்கும் நம்ம தங்கச்சிக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால் நாம தாங்கிப்போமா யோசிச்சு பேசு" என்றான் வெற்றிமாறன் கோபமாக.

"வேற எப்படி அண்ணா இந்த கல்யாணத்தை நிப்பாட்டுவது எனக்கு கோபம் கோபமாக வருது நம்ம சம்முவோட கல்யாணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று கனவு கண்டு வச்சுருந்தோம் ஆனால் நம்ம வீட்டில் யாருக்குமே சந்தோஷம் இல்லாமல் இந்த கல்யாணம் இது தேவையா" என்றான் எழில் வேந்தன்.

"தேவை தான் அண்ணா" என்றாள் சம்யுக்தா. "சம்மு என்ன சொல்லுற அப்போ அவனை நீ ஆசைப் பட்டு தான் கல்யாணம் பண்ணிக்க போறியா" என்றான் எழில் வேந்தன்.

"அவனை நான் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்க போறேனா ஏன் அண்ணா உனக்கு இப்படி ஒரு சந்தேகம் எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு அவனை துண்டு துண்டாக வெட்டியே கொன்று விடுவேன் நம்ம அப்பாவை சாமர்த்தியமாக மடக்கி வாக்கு கொடுக்க வைத்தான் தானே அவனோட குடும்பத்தில் நுழைந்து அவனோட நிம்மதியை சின்னா பின்னமாக்கிட்டு அவனை நடை பிணமாக மாத்திட்டு நம்ம வீட்டுக்கு திரும்பி வந்துடுவேன் அவன் வாழும் ஒவ்வொரு நாளும் நரகத்தில் வாழனும்" என்றாள் சம்யுக்தா.

"சம்மு பைத்தியமா நீ இதனால் அவனோட வாழ்க்கை மட்டும் இல்லை உன்னோட வாழ்க்கையும் சேர்த்து தான் அழியும்" என்ற வெற்றிமாறனிடம், "இதற்கு மேல அழிய என்ன இருக்கிறது அண்ணா" என்றாள் சம்யுக்தா.

"அண்ணா நீ எதுவும் சொல்லாதே சம்மு அவன் குடும்பமே தூக்கில் தொங்கி சாகணும் அந்த மாதிரி எதனாலும் செய்து இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டியது என் பொறுப்பு நீ உன் வாழ்க்கையை பணையம் வைக்காதே" என்று எழில் வேந்தன் கூறிட, "இரண்டு பேரும் சேர்ந்து அப்பாவோட மரியாதையை கெடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பிங்களா நீ மகேந்திரனை சாகடிக்க மாட்டுக் கொம்பில் விஷம் வைத்த விசயம் வெளியில் தெரிந்தாலே மானம் போய் விடும் என்று பயந்தாரு அப்பா ஆனால் நீங்க ரெண்டு பேரும் செய்ய போகிறேன்னு சொல்லுற காரியம் எல்லாம் செய்தால் கண்டிப்பாக உயிரையே விட்டு விடுவாரு இரண்டு பேரும் கொஞ்சம் அமைதியாக இருங்க" என்றான் வெற்றிமாறன்.

"அண்ணா" என்று சம்யுக்தா ஏதோ சொல்ல வர, "உனக்கு மகேந்திரவர்மனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லையா" என்றான் வெற்றிமாறன். அவள் பதிலேதும் சொல்லாமல் மௌனமாக இருந்தாள். என்ன தான் வாய் பிடிக்க வில்லை என்று சொன்னாலும் மனதிற்கு பிடித்த காரணம் தானே அவன் தன்னிடம் அத்து மீற அனுமதித்தாள். அவன் மீது கோபம், வெறுப்பு எல்லாம் இருந்த போதிலும் மனதின் மூலையில் விருப்பமும் இருக்கத் தான் செய்கிறது அதை அவளால் மறுக்கவும் முடிய வில்லை.

"சொல்லு சம்மு" என்று வெற்றிமாறன் மீண்டும் கேட்டிட, "வாக்கு கொடுத்திருக்கேன் அண்ணா என்னாலையும் கொடுத்த வாக்கை மீற முடியாது" என்று கூறி விட்டு சென்று விட்டாள் சம்யுக்தா ராணி.


.... தொடரும்...
































 
சம்மு உள்ளுக்குள்ள ஆசையை வச்சிக்கிட்டு வெளிய ஏன் இந்த கோவம்?
 
Top