வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இதயத்தில் தைத்தாய் இதமான முள்ளை...(9)

GG writers

Moderator
அத்தியாயம் 9

"என்ன உன் பிரச்சனை" என்ற வெற்றியை முறைத்தவள், "உனக்கு என்ன வேண்டும் எதற்கு என் பின்னாலையே சுத்திட்டு இருக்க" என்றாள் இந்துமதி.


"நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லவில்லை அதனால் தான்" என்று வெற்றிமாறன் கூறிட , "நீ இப்போ எதற்கு என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற , நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க தான் சுத்துறியா இல்லை அன்னைக்கு ஒரு வார்த்தை சொன்னியே என் பிள்ளையை வேண்டும் என்றாலும் உன் வயிற்றில் சுமக்க வைப்பேன் உன் அண்ணனுக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் என்று அதை உண்மையாக்க தான் என்னையே சுத்துறியோ" என்று கேட்டாள் இந்துமதி.

அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தான் வெற்றிமாறன். "என்னடீ கொழுப்பா என்னை பார்த்தால் பொறுக்கி மாதிரி தெரியுதா ஆமாம் டீ அன்னைக்கு கோவத்தில் அப்படி சொன்னேன். உன் கிட்ட தப்பாவும் நடந்து கிட்டேன் எப்போ நீ அவமானம் தாங்க முடியாமல் கிணற்றில் குதிச்சியோ அப்பவே நான் செத்துட்டேன்டீ . நான் முத்தம் கொடுத்த முதல் பொண்ணு நீ தான் கடைசி பொண்ணும் நீ மட்டும் தான் அதை உன் மனசுல நல்லா பதிய வச்சுக்கோடி" என்ற வெற்றி , "இனிமேல் நீயா வந்து என்னை பிடித்து இருக்குன்னு சொல்லுற வரை உன் பின்னாடி வரவே மாட்டேன் டீ" என்று கோபமாக கூறி விட்டு சென்று விட்டான் வெற்றி.

"அவன் சொன்ன விஷயத்தை தானே சொன்னேன் அதற்கு போய் இப்படி அடிச்சிட்டு போறான் ஐயோ கன்னம் எல்லாம் எரியுதே" என்று புலம்பிக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டாள் இந்துமதி.

"என்ன பொண்டாட்டி தனியா இங்கே சுத்திக் கொண்டு இருக்க" என்ற மகேந்திரவர்மனை முறைத்த சம்யுக்தா அவனைக் கடந்து செல்லப் பார்க்க, "என்ன டீ புருஷன் நான் கேட்டுட்டு இருக்கேன் பதிலே சொல்லாமல் போயிட்டு இருக்க" என்றான் மகேந்திரவர்மன்.

"ரொம்ப தாகமாக இருக்கிறது அதான் இளநீர் குடிக்க வந்தேன் போதுமா இப்போ தான் எங்கே போனாலும் வந்து தொல்லை பண்ணிகிட்டு இருக்கான்" என்று பற்களைக் கடித்தாள் சம்யுக்தா.


அவ்வளவு தானே இரு ஒரு ஐந்து நிமிடம் என்றவன் கட கடவென தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து விட்டு வந்தான். பறித்து வந்ததோடு மட்டும் இல்லாமல் தன்னவளுக்காக சீவியும் கொடுத்தான்.

அவன் சீவிக் கொடுத்த இளநீரை வாங்கி அவள் பருக தன் வாயருகே கொண்டு செல்ல, அவனோ "என்ன பொண்டாட்டி வெறுமனே ஒன்றும் சொல்லாமல் இளநீரை குடிக்க போற" என்றான்.

அவனைத் தீயென முறைத்தவள் "இன்னும் நமக்கு கல்யாணம் நடக்க வில்லை" என்றாள் பற்களைக் கடித்துக் கொண்டு கண்களில் கோபம் தெறிக்க.

"ஆத்தி என்னடி இந்த முறை முறைக்கிற நான் உனக்கு முறை மாமன் தான் அதுக்காக இப்படியா முறைப்ப கோவத்தில் ஏற்கனவே சிவந்து இருக்கிற உன்னோட மூக்கு ரொம்ப சிவக்குது" என்றான் அவன்.

"இப்போ என்ன வேன்டும் உனக்கு?" என்றாள் கோபமாக.

"உனக்காக தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறிச்சு அதை சீவி வேற கொடுத்திருக்கேன் என்னைப் பார்த்து அந்த பாட்டு பாட வேண்டாமா நீ " என்றான் புன்னகையுடன்.

"எந்த பாட்டு பாடனும்" என்றவளிடம், "அதான் டீ அந்த மம்முட்டி பாட்டு" என்றவன்

"செவ்விளநீர் நான் குடிக்க
சீவி அதை நீ கொடுக்க
சிந்தியது இரத்தம் அல்ல
எந்தன் உயிர் தான்"

என்று அவன் பாடி முடிக்க அவன் சீவிக் கொடுத்த இளநீரை அவன் மீதே தூக்கி எறிந்தாள் அவன் மாமன் பெத்த மரிக்கொழுந்து.


அவன் அதை பிடித்து விட்டு, "என்னடி மாமா கூட வாலிபால் விளையாடனுமா?" என்று கூறிவிட்டு கண்ணடிக்க, "டேய் நீ எல்லாம் என்ன பிறவி டா" என்றாள் சம்யுக்தா.

"மனித பிறவி தான் டீ ஏன் உனக்கு கண்ணு தெரியாதா" என்றவனை என்ன தான் செய்வாள் அவளும் கவுண்டர் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவன் அவளை வெறுப்பேத்துவது மேலும், மேலும் அவளுக்கு எரிச்சலைக் கொடுக்க அவனை முறைத்துக் கொண்டே நின்றாள். "சரி சரி முதலில் இந்த இளநீரைக் குடி" என்றான்.

"ஒன்றும் வேண்டாம்" என்றவளிடம் , "சரி டீ ஸாரி குடி உனக்காக தானே பறிச்சுட்டு வந்தேன்" என்று கொடுத்திட அவளும் அதை வாங்கி பருகினாள்.

"என்ன டீ குடிச்சுட்ட அச்சச்சோ அதில் பாதி தான் இளநீர் நீ தூக்கிப் போட்டதால் இளநீர் கொட்டிருச்சு சரின்னு அதில் கொஞ்சம் தென்னங்கள்ளை கலந்து கொடுத்து விட்டேன்" என்றான் மகேந்திரவர்மன்.

"என்ன" என்று அதிர்ந்த சம்யுக்தாவிடம், "ஆமாம் செல்லம்" என்று அவன் கண்ணடிக்க, "அடப்பாவி உன்னை" என்று இளநீர் கூடினை எடுத்து அவன் மீது எறிய அவன் விலகி விட்டான். பிறகு அங்கு கிடந்த தென்னை மட்டையை தூக்கிக் கொண்டு அவள் விரட்டிட, "அடியே பார்த்து டீ போதையில் தள்ளாடி விழப் போற" என்று அவன் சொல்லி முடிக்க வில்லை அவள் வரப்பு மேட்டில் சறுக்கி விழுந்து விட்டாள்.



"புருஷன் பேச்சை கேட்கிறியாடீ" என்று வந்து அவளுக்கு கை கொடுத்து தூக்கி விட்டான். அவளது புடவை ஈரமான வரப்பில் விழுந்த காரணத்தால் சகதியாகி விட சரி வா என்று அங்கு இருந்த பம்புசெட்டிற்கு அவளை அழைத்துச் சென்றான்.


"இங்கே எதற்குடா கூட்டிட்டு வந்த" என்ற சம்யுக்தாவிடம், "உன் கூட குடும்பம் நடத்த கேட்கிறாள் பாரு கேனைச் சிறுக்கி கேள்வியை" என்றவன் போயி சேலையை அலசுடீ என்றான்.

"சேலையை நான் வீட்டுக்கு போயே அலசிக்கிறேன்" என்று அவள் கூறிட, "சொல்லுறேன்ல கேளுடீ" என்றான். "முட்டாள் சேலையை கழட்டி தான் அலச முடியும்" என்று அவள் கூறிட அவ்வளவு தானா என்று தன் சட்டையை கழற்றி அவளிடம் கொடுத்தவன். "இந்த சட்டையை போட்டுக் கொண்டு சேலையைக் கொடு" என்று கேட்டான்.

அவளும் அவனது சட்டையை அணிந்து கொண்டு அவனிடம் சேலையைக் கொடுத்திட அதை அவன் சென்று அலசி வெயிலில் காய வைத்தான்.

அவளோ கூச்சத்தில் நெளிய, "நான் தானே டீ இருக்கேன் எதற்கு பயப்படுற" என்று கேட்டிட, "நீ இருக்கிறதால தான் டா பயமாகவே இருக்கு" என்றாள் சம்யுக்தா.

"ஏய் சண்டி ராணி சத்தியமா நீ குடிச்சது இளநீர் தான்" என்று அவன் கூறிட, "என் பெயர் சம்யுக்தா ராணி" என்றாள் கோபமாக.

"இருக்கட்டும் எனக்கு எப்பவுமே நீ சண்டி ராணி தான்" என்றான் மகேந்திரவர்மன். "போடா மக்குவர்மன்" என்று அவள் கூறிட அவனோ சிரித்து விட்டு, "சொல்லிக்கோ நான் உன்னை மாதிரி எல்லாம் கோவிச்சுக்க மாட்டேன் என் பொண்டாட்டி என்னை எப்படி கூப்பிட்டாலும் எனக்கு ஓகே தான்" என்றான்.

"நமக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை" என்று அவள் மீண்டும் கூறிட , "நடக்க தானே டீ போகுது ஏன் கல்யாணத்திற்கு முதல் நாள் நீ ஓடிப் போகப் போறியா என்ன" என்றான் மகேந்திரவர்மன். "நான் ஓட மாட்டேன் உன்னை ஓட விடுவேன் பார்க்கிறியா" என்றாள் சம்யுக்தா ராணி.

"அடியே நீ சவால் விட்டால் தோத்துப் போயிருவடீ அதனால் இந்த சவாலை எல்லாம் ஓரம் கட்டி வச்சுட்டு என் கூட எப்படி ரொமான்ஸ் பண்ணுறது என்று யோசி டீ" என்றான் மகேந்திரவர்மன்.

அவனை முறைத்த சம்யுக்தா ஏதோ சொல்ல வர ஏய் என்று அவளை அணைத்துக் கொண்டு தூக்கி சுற்றி இறக்கி விட்டான். "டேய் பொறுக்கி" என்று அவள் கூறிட, "லூசு நட்டுவாக்காலி டீ" என்று அவன் கூறிட அவளும் திரும்பி பார்க்க அங்கே ஒரு பெருந்தேள் இருக்க பயத்தில் அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் சம்யுக்தா.

"அது போயிருச்சா" என்று அவள் கேட்டிட, "போயிருந்தால் தான் இறக்கி விட்டு இருப்பேனே" என்று அவன் கள்ளமாக சிரித்திட அவளோ தன் முகத்தை அவன் மார்பில் இன்னும் புதைத்துக் கொண்டாள்.

"நட்டுவாக்காலி கூட நமக்கு சாதகமாக தான் வந்திருக்கு" என்று நினைத்தவன் அவளை கொஞ்ச தூரம் தூக்கி வந்து, "இப்போ இறங்குறியா இல்லை இப்படியே இருக்கியா எனக்கு சந்தோஷம் தான்" என்று கூறிட பட்டென்று அவனை விட்டு இறங்கினாள் சம்யுக்தா.

"ச்சீ போடா எருமை" என்று அவள் கூறிட "சேட்டையை பார்த்தியா இவளுக்கு ஏய் சண்டி ராணி பாவம் நம்ம பொண்டாட்டி தேள் கடித்து செத்துப் போய் விடுவாளேன்னு உன்னை தூக்கிட்டு நின்றால் ச்சீன்னு சொல்லி விட்டு போற அம்புட்டு எகத்தாளம் உனக்கு" என்றான் மகேந்திரவர்மன்.

"என் புடவை காய்ந்து விட்டதா இல்லையா எவ்வளவு நேரம் இங்கேயே இருக்கிறது இங்கே தேள், பூரான் எல்லாமே இருக்கும் போல" என்று பயந்து கொண்டே அவள் கூறிட அவனும் அவளது புடவையை எடுத்து வந்து கொடுத்தான்.

அதை அணிந்து கொண்டவள் அவனது சட்டையை கொடுக்க, "என்னடி என் சட்டையை திரும்ப கொடுக்கிற" என்றான் மகேந்திரவர்மன். "அதான் புடவை கட்டி விட்டேனே இனி எதற்கு உன்னோட சட்டை" என்று அவள் கேட்டிட, "அடிப்பாவி நீ சினிமா எல்லாம் பார்க்க மாட்டியா. ஹீரோயின் தன்னோட மானத்தை காப்பாத்தின ஹீரோவோட சட்டையை பத்திரமா எடுத்து பீரோவில் வைத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதை போட்டு பார்த்து கண்ணாடி முன் நின்று ரசித்து ரசித்து பார்ப்பார்களே" என்று மகேந்திரவர்மன் கூறிட, "போடா எருமை ஆளையும், மூஞ்சியும் பாரு இப்போ தான் இவரு பெரிய ஹீரோ இவங்க சட்டையை நாங்கள் முகர்ந்து பார்த்து இவரு வாசனை வருதான்னு தேடிட்டு இருக்கோம். சட்டை வேண்டாம் என்றால் சொல்லு கரித்துணிக்கு உதவும்" என்றாள் சம்யுக்தா.

"ஆயிரம் ரூபாய் சட்டை டீ நீ பாட்டுக்கு கரித்துணிக்கு போடுறேன்னு சொல்லுற மவளே உன்னை கொன்னுருவேன்" என்ற மகேந்திரவர்மன் சட்டையை வாங்கி அணிந்து கொண்டான்.

"சரி வா உன்னை வீட்டில் விடுகிறேன்" என்றவனிடம், "ஏன் எனக்கு என் வீட்டுக்கு வழி தெரியாதா போவியா" என்றவள் கிளம்ப மீண்டும் வரப்பில் கால் இடறி விழப் போக இந்த முறை அவள் விழும் முன்னமே அவளைத் தாங்கிப் பிடித்தான் மகேந்திரன்.



... தொடரும்...






































 
சண்டி ராணி மகேந்திர வர்மன் காதல் சண்டை ரொம்ப நல்லா இருக்கு 😍😍😍
 
Top