GG writers
Moderator
அத்தியாயம் 1
அவள் நித்திலா...
பெயருக்கு ஏற்ப முத்து போன்ற அழகானவள்...
ஆனால் வாழ்க்கை எப்போது அழகாகும் என்று ஏக்கத்தில் அவள் மனம்...
ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கஷ்டம் கடவுள் தரனுமா? என்று அவளுக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும்...
ஆனால் வெளியில் சுற்றி இருப்பவர்களுக்கு இப்படிலாமா ஒரு பொன்னு இருப்பாள் என்று கரித்து கொட்டுவார்கள்...
அவள் தாய் தந்தையுடன் தான் இரண்டு வருடமாக இருக்கிறாள்...
விவாகரத்து கிடைத்து ஒரு மாதம் முடியவில்லை, அதற்குள் முன்னாள் கணவனின் இரண்டாம் திருமணம் பத்திரிகை...
அவனே குடுத்து கல்யாணத்துக்கு வந்துடாதே... உன் பார்வை கூட என் வருங்கால மனைவி மேல பட கூடாது என்று எரிச்சலாக கூறி சென்றான்...
பத்திரிகையை பார்த்து நிற்காமல் கண்ணீர் வடிந்தது...
"குமரன் வெட்ஸ் நந்தினி" என்ற பெயரிலேயே கண் நிலையாக இருந்தது...
இதேபோல் ஒரு பத்திரிக்கையில் இரண்டு வருடத்திற்கு முன் "குமரன் வெட்ஸ் நித்திலா" என்று இருந்தது அவளால் எப்படி மறக்க முடியும்...
20 நாளில் அவள் வாழ்க்கை திசை மாறும் என்று நினைத்திருக்க மாட்டாள்...
ஆம் வெறும் 20 நாள்தான் குமரனுடன் வாழ்ந்தாள்...
அந்த 20 நாளும் அவளுக்கு நரகம்...
அவள் மனதில் இப்போது இந்த பெண்ணோட வாழ்க்கை என் போல் இல்லாமல் நல்லா இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டது...
அவனோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் சிறு துளி கூட இல்லை...
விவாகரத்து வழக்கு முடிய இரண்டு வருடம் ஆகிவிட்டது...
இந்த இரண்டு வருடங்களும் அவள் பட்ட அவமானம் வேதனை அதிகம்...
இறந்து விடலாம் என்று கூட இரண்டு முறை முயற்சி செய்துவிட்டாள்... ஆனால் நடக்கவில்லை...
இப்போது அம்மா அப்பாவிற்காக இருக்கலாம் என்று வாழ்கிறாள்...
இன்னும் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்று அவளுக்கு நினைக்கவே முடியவில்லை...
சுற்றத்தார் யாரும் இல்லாத ஒரு இடத்தில் தஞ்சம் புகுந்து கொள்ள ஆசை...
அப்படியே கட்டிலில் படுத்தபடி மூன்று வருடத்திற்கு முன் அவளுடைய வசந்தமான வாழ்க்கையை அசை போட்டு பார்த்தாள்...
மூன்றாண்டுகளுக்கு முன்
நித்திலா பி ஏ தமிழ் பாடத்தில் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள்...
அவளது சிரித்த முகத்திற்கும் நகைச்சுவையான பேச்சிற்கும் நண்பர்கள் அதிகம்...
கல்லூரியில் நடக்கும் கட்டுரை கவிதை போட்டியில் அவள் தான் எப்பொழுதும் முதலில் வருவாள்...
தமிழ் மீது மிகுந்த ஆர்வம்...
வீட்டிலும் சுட்டி...
செல்வராஜ் ரேணுகா அவளின் தாய் தந்தையர்...
வெண்ணிலா என்ற தங்கையும்...
அவள் பிறந்த ஐந்து வருடம் பிறகு பிறந்த தங்கை...
வெண்ணிலா பத்தாம் வகுப்பு படுத்துக் கொண்டிருந்தாள்...
நித்தியா படித்துக் கொண்டிருந்தது இருபாலரும் படிக்கும் கல்லூரி...
அவளுக்கு பெண் நண்பர்களைப் போல ஆண் நண்பர்களும் சிலர் இருந்தனர்...
ஆனால் நட்பை தாண்டி அவள் பழகியது இல்லை...
அதற்குக் காரணம் அவள் தாய் ரேணுகா...
ரேணுகா மகளிடம் அடிக்கடி சொல்வது...
நித்தி குட்டி நீ இருக்கிறது தடுமாறுற வயசு காதல் அது இது உள்ள விழுந்தா உன் வாழ்க்கை மட்டும் போகாதுடா குட்டி உனக்கு அடுத்து வெண்ணிலா குட்டி இருக்கா...
அவ வாழ்க்கையும் பாதிக்கும்...
இதை அடிக்கடி கூறுவார்...
அதனால் முடிந்த அளவு நித்திலா ஆண் நண்பர்கள் யாரிடமும் நெருங்கி பழகியது கிடையாது...
இருந்தும் சில காதல் கடிதங்கள் காதலிக்கிறேன் என்று சொல்லிய வசனங்கள் எல்லாம் உண்டு...
நித்திலா அழகாக மறுத்துவிடுவாள்...
உங்க மேல காதல் எனக்கு வரலை...
நான் அம்மா அப்பாக்கு வாக்கு கொடுத்து இருக்கிறேன்... அவங்க பாக்குற மாப்பிள்ளையைதான் கல்யாணம் பண்ணிக்கிறேனு...
ஆசைய வளத்துக்காதீங்கனு நண்பர்களாக இருப்போம்...
அதனால் ஆண் பெண் இருவரிடம் நட்புடன் மட்டும் பழகுவாள் அதற்குத் தாண்டி பழகியது கிடையாது...
பிரவீன் அவளது நண்பன்...
அவள் வாழ்க்கை மாறியதற்கு மொத்த காரணமும் அவன்தான்...
அது தெரியாமல் நண்பனாக பழகி விட்டாள்...
மூன்றாம் வருட இறுதியில் பிரவீன் தன் காதலை நித்திலாவிடம் கூறினான் ...
வழக்கம்போல் நித்திலா மறுப்பு கூறினாள்...
அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை பிரவீனிடம் இல்லை...
"என்ன வேணானு சொன்ன நீ நிம்மதியா இருந்துருவியா நான் பாத்துக்குறேன்" என்று வன்மத்துடன் கூறினான்...
நித்திலாவும் "முடிந்ததை பார்த்துக்கொள்" என்று சொல்லி முடித்து விட்டாள்...
அதைப் பற்றி மறந்தும் விட்டாள்...
கல்லூரி படிப்பை முடித்து மூன்று மாதம் பின்பு நித்திலாவின் தந்தை செல்வராஜ் மகளிடம் பேசினார்...
"பாப்பா"
"என்னங்கப்பா" என்று அப்பாவிடம் கேட்டாள்...
"உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு அம்மாவும் நானும் முடிவு பண்ணி இருக்கோம்"என்று தயக்கத்துடன் கூறினார்...
"இதுக்கு எதுக்குப்பா தங்கி பேசுறீங்க" என்று நித்திலா கேட்டாள்...
"இல்லடா நீ மேல படிக்க போறியா இல்ல உன்னோட ஆசை என்னன்னு தெரிஞ்சுக்காம முடிவு பண்ணக்கூடாது இல்ல" மறுபடியும் தயங்கிக் கூறவும்...
"அப்பா உங்க இஷ்டம் எனக்கு படிக்கணும்னு ஆசை இருக்கு தான் செய்யுதுப்பா உங்க சூழ்நிலையும் பாக்கணும்" என்று தெளிவாக கூறினாள்...
"எனக்கும் உன்னை படிக்க வைக்கணும் எனக்கு ஆசை தாண்டா உன் தங்கச்சி இப்பதான் டென்த் முடிச்சு இருக்கா அடுத்து அவளோட மேற்படிப்பு பாக்கணும்" என்று வருத்தம் தேய்ந்த குரலில் கூறினார்...
"அப்பா எதுக்கு வருத்தப்படுறீங்க இப்ப எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா படிக்கிறாங்க நானும் அப்படி படிச்சிக்கிறேன் "என்று மனதார கூறினாள்...
அவர் மனதில் மகிழ்ச்சி தன்மகள் முதிர்ச்சியாக யோசிக்கிறாள் என்று...
"சரிப்பா நீங்க யாரை வேணாலும் பாருங்க உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு பிடிக்கும்" என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்...
"சரியான வாலு" என்று சிரித்து கொண்டார்...
"அதான் உங்க மகள் சரின்னு சொல்லிட்டால்ல போய் ஆகிற வேலையை பாருங்க "என்று ரேணுகா சலித்துக் கொண்டார்
"பொறாமைடி உனக்கு என் மகள் என் பேச்சு கேக்குறானு" சொல்லி காலரை தூக்கிக் கொள்ள...
"அவள் எனக்கும் தான் மகள் எனக்கு எதுக்கு பொறாமை" என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் சென்றார்...
அடுத்த இரண்டு மாதத்தில் குமரன் போட்டோ நித்திலா கையில்...
"அப்பா பார்த்து விசாரிச்சிட்டேன்டா உனக்கு பிடிச்சிருந்தா சொல்லு பார்க்க வரச்சொல்லலாம்" என்று சொல்லி புகைப்படத்தை கையில் கொடுத்தார்...
பார்த்ததும் ஈர்க்கும் தோற்றம் தந்தை விசாரித்துவிட்டார் நித்திலாவிற்க்கு மறுக்க காரணம் என்ன உடனே சம்மதித்து விட்டாள்...
பெண் பார்க்க வருகிறார்கள் எனவும் பதட்டம் சந்தோசம் வெக்கம் அனைத்தும் கலந்த உணர்வு...

Last edited: