வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இதுவும் கடந்து வாழ வேண்டும் அத்தியாயம் 2

GG writers

Moderator
அத்தியாயம் 2
குமரன் வீட்டில் இருந்து ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க வந்திருந்தனர்...
குமரன், குமரனின் அம்மா , அப்பா, தங்கை மற்றும் தங்கையின் கணவர் என ஐந்து பேரும் தாம்பழ தட்டுடன் காரில் இருந்து இறங்கினர்...
காரில் இறங்கி இறங்கியதும் "என்ன மாப்ள வீடு ரொம்ப வசதி கம்மியா தெரியுது" இன்று முகத்தைச் சுழித்துக் கொண்டு வீட்டை பார்த்து கூறினார் வெங்கட்...
‌"இல்ல மச்சான் நல்ல குடும்பம்னு சொன்னாங்க நான் தான் அம்மாகிட்ட வசதி எல்லாம் பார்க்க வேணாம் பொண்ணோட குணம் நல்லா இருந்தா போதும் சொன்னேன், பார்க்கத்தானே போறோம் பிடிச்சா அப்புறம் பாத்துக்கலாம் மச்சான்" என்று சட்டையை இன் பண்ணிக் கொண்டே கூறினான்...
"நான் பார்க்க ஓகேவா இருக்கேனா மச்சான்"...
"அண்ணா உனக்கு என்ன சும்மா சூப்பரா இருக்க" என்று அவன் தங்கை ப்ரியா கூறினாள்...
வெளியவே நின்று எவ்ளோ நேரம் பேச போறீங்க வாங்க உள்ளே போவோம் என்று சொல்லி கொண்டே முன்னாள் நடந்தனர் ரத்னம் ஜான்சி தம்பதியினர்...
அதே நேரம் செல்வராஜ் ரேணுகா தம்பதியினர் வெளியே வந்து அவர்களை வாங்க வாங்க சம்மந்தி எல்லாரும் உள்ளே வாங்க என்று அழைத்து உள்ளே சென்று முன் அறையில் நாற்காலியில் அமர வைத்தனர்...
வெங்கட் ப்ரியாவிடம் ஒரு சோபா கூட இல்லையே என்று புலம்பினான்...
"கொஞ்ச நேரம் சும்மா இருங்க நம்ம வீட்ல போய் பேசிக்கலாம்" என்று மெதுவான குரலில் கூறினாள்...
இனிப்பு காரம் ஜூஸ் அனைத்தையும் கொடுத்து உபசரித்தனர்...
அதெல்லாம் மெதுவா சாப்பிட்டுக்கலாம் பொண்ணு வர சொல்லுங்க நல்ல நேரத்துக்குள்ள பாத்துடலாம் என்று ஜான்சி கூறினார்...
ரேணுகா வேகமாக உள்ளே சென்று நித்திலாவை அழைத்து வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லுமா என்றார்...
அவள் குனிந்த தலை நிமிரவே இல்லை, குனிந்த வண்ணமே அனைவருக்கும் வணக்கம் சொன்னால் கை கூப்பி...
நிமிர்ந்தால் தான்மா மாப்பிள்ளை உன்ன பாக்க முடியும் கொஞ்சம் நிமிர்ந்து பார்க்கலாம்னு வெங்கட் சொல்லியும் தலையை நிமிரவே இல்லை...
இந்த காலத்திலும் இவ்வளவு வெட்கப்படும் பொன்னுங்க இருக்காங்களா?...
குமரன் அவளை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்...
"பொன்னு பிடிச்சிருக்கா"னு ஜான்சி கேட்கவும்
முதலில் பொன்னு கிட்ட கேளுங்க என்னை பார்க்கவே இல்லைனு குமரன் சொல்லவும்...
மெதுவாக நிமிர்ந்தாள் ஆனாலும் பார்க்காமல் வெக்கத்தில் தலை குனிந்தாள்...
"ப்ரியா உனக்கு வெக்கம்னா என்னான்னு தெரியாது சொன்னதானே இதான் பார்த்து கத்துக்கோ " என்று சொல்லவும் வெங்கட் காலில் கிள்ளினாள் ப்ரியா ஆஆஆ ஆ... என்று கத்தவும் ரத்னம் "என்ன மாப்ள" என்று கேக்கவும் "ஒன்னுமில்லை மாமா கொசு கடிச்சிருச்சி இந்த கொசு தொல்லை தாங்கலைனு" ப்ரியாவை பார்த்து சொல்லவும் அனைவரும் சிரித்தனர்...
நித்திலாவும் சுற்றம் மறந்து சிரித்தால் அந்த சிரிப்பு குமரன் மனதில் பதிந்தது அவனுக்கு அவளின் அடக்க குணம் மிகவும் பிடித்திருந்தது...
ரேணுகா நித்திலா விடம் "மாப்பிள்ளை பிடிச்சிருக்கா? நித்தி" என்று சத்தம் இல்லாமல் மெதுவாக கேட்டார்
அனைவரும் நித்திலா பதிலுக்காக அவளையே பார்த்தனர்...
அப்போதும் அவள் நிமிரவில்லை...
"உங்களுக்கும் அப்பாவுக்கும் பிடித்திருந்தால் எனக்கு சம்மந்தம் " என்று குனிந்த தலை மெதுவாக கூறினாள்.
"அவளுக்கு சம்மந்தம் தான் மாப்பிள்ளை" என்று செல்வராஜ் கூறினார்...
"பொன்னு கூட தனியா பேச ஆசை படுகிறேன் "என்று குமரன் சொல்லவும் நித்திலாவிற்க்கு அதிர்வாய் விழி விரிந்தது...
"அம்மா எனக்கு பயமாயிருக்கு நான் தனியா பேசல இங்கேயே பேசுறேன்" சொல்லவும், ரேணுகா அவர்களிடம் அவ பயப்படுறா மாப்பிள்ளை என்று சொல்லவும், நான் என்ன‌ கடிச்ச சாப்பிட போறேன் பயமில்லாமல் வரசொல்லுங்க என்று குமரன் கூறினான்... வேறு வழியின்றி குமரனுடன் தனியாக பேச சென்றால் நித்திலா...
5 நிமிடங்கள் எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள்...
"எவ்வளவு நேரம் இப்படியே நிக்க போற என்ன பிடிச்சிருக்கா" என்று குமரன் கேட்டான்...
'அம்மா அப்பாக்கு பிடிச்சா எனக்கு பிடிக்கும்'னு சொன்னாள்...
"அவுங்க பிடிக்கல சொல்லிட்டா" என்று குமரன் கேட்டான்...
'அப்ப எனக்கும் பிடிக்காது' என்றாள்...
"சரி வாங்க கீழே போவோம் எல்லாரும் காணோம்னு நினைப்பாங்க" என்று நித்திலா கூறினாள்...
பேச தான் வந்தோம் இன்னும் பேசலையேனு குமரன் சொல்லவும்...
"எனக்கு பேச எதுவும் இல்லை பட படனு ஒரு மாதிரி இருக்கு இது வரை இப்படி பேசுனாதே இல்லை பொழுதுபோக்கு" என்று நித்தியா கூறவும்...
"என்ன இது வரை யாரும் பொன்னு பார்க்க வந்தது இல்லையா?‌ இப்படி பயப்புடுற " என்று குமரன் கேட்கவும்
"நீங்க தான் முதல் முறையா பார்க்க வந்துடுக்கீங்க" சத்தமே இல்லாமல் கூறினாள்...
எனக்கு நான் தான் எப்பவும் முதல இருக்கனும்னு ஆசை... நான் கல்யாணம் பண்ணிக்க போற உன்னை நான் மட்டும்தான் பார்க்க வந்ததா இருக்கட்டும் இது வரை யோசிச்சேன் இப்ப முடிவு பண்ணிட்டேன் உன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம் வா கீழே போகலாம் என்று குமரன் சொல்லவும் தான் அவளுக்கு மூச்சை இயல்பானது...
கீழே வந்ததும் அனைவரிடமும் எனக்கு நித்திலாவ பிடிச்சிருக்கு அடுத்து சம்ரதாயம் எல்லாம் பார்த்து அடுத்த முகுர்த்தம் பாருங்கனு சொல்லவும்... செல்வராஜ் ரேணுகாவிற்க்கு மகிழ்ச்சி...
சரி சம்மந்தி நாங்கள் நல்ல நாள் பார்த்து அடுத்த தேதி சொல்றோம் இப்ப கிளம்புறோம்னு அனைவரும் கிளம்பினர்...
நித்திலா மனதில் என்ன உணர்வு என்று தெரியாத உணர்வு...
ரேணுகா பிடிச்சிருக்கா குட்டிம்மா அடுத்து பேசலாமனு கேட்டார்...
உங்களுக்கு ஓகேவாமா என்று நித்திலா கேட்டாள்...
நல்ல இடம் மாதிரிதான் இருக்கு என்று சொல்லவும் ...
அப்ப எனக்கும் ஓகே தான் என்று வெக்கத்தோடு
சொல்லி விட்டு அவள் அறைக்கு ஓடிச் சென்றாள்...

 
Я считаю, что тема весьма интересна. Предлагаю Вам это обсудить здесь или в PM.
The palmebi team {dreams|thinks|desires|longs|wants} to thank you {from the bottom of} our hearts {for|when} you {chose|indicated|preferred} elite eskort gogoebi in {georgia|Tbilisi} {as|?????} {verified|???????} {#file_links["C:\Users\Admin\Desktop\file\gsa+ka+20kYevhenPasikovskyi104252URLBB.txt",1,N].
 
Top