ஹே ராவணா!
நான் சீதையல்ல!
எனவே, கணை தொடுத்து எனக்கு மாலையிட ராமன் வேண்டாம்!
என் கரம்பிடித்திழுத்து என்னைக் கடத்தி செல்ல நீயே வேண்டும்! நீ மட்டுமே வேண்டும்!
ஊரார் சொல் கேட்டு என்னைத் தீக்குளிக்க வைக்கும் ராமன் வேண்டாம்!
என் ஒரு சொல்லிற்காக யுகம் தாண்டினாலும் காத்திருக்கும் நீயே வேண்டும்! நீ மட்டுமே வேண்டும்!
ராமன் செய்த போரே சீதைக்காகத் தானாம்! ஹ்ம் இருக்கட்டும்,
ஹே ராவணா! நித்தமும் உன்னையே நினைக்கும்,
எனக்காக ஒரு யுத்தம் செய்வாயா?
என்னைச் சிறையெடுத்து செல்வாயா?
இப்படிக்கு,
அந்திரன் ராவண ஈஷ்வரனின் அஜூதியா தனிய ஷக்தி