வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இராவணனே என்னை சிறை எடு - கதை திரி

Status
Not open for further replies.

ராவணனே என்னை சிறை எடு 1

1.jpg
அருணாச்சல கவிராயர் இயற்றிய "கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை

கண்டேன் ராகவா நான் (கண்டேன்)

அண்டரும் காணாத இலங்காபுரியில்

அரவிந்த வேதாவை தரவந்த மாதாவை" பாடல் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் இனிமையாக அலைபேசியில் மூலமாக ஒலித்து கொண்டிருக்க, அந்த பாடலின் ராகத்திற்கு ஏற்ப அஜூதியாவின் அஞ்சன விழிகள் அபிநயம் பேச, அவளது அசைவுக்கு ஏற்றபடி அவளின் காலில் கட்டியிருந்த சலங்கை இனிமையான ஒலியெழுப்ப, மிகவும் நளினமாக அவள் ஆடிக்கொண்டிருக்க, அவளை பார்த்து அவளுக்கு எதிரே இருக்கும்

சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது பாட்டை நிப்பாட்டியவள் அவர்களை பார்த்து,"லாஸ்ட் ரோ லாஸ்ட் கேர்ள் முத்திரை சரியா இல்லை டா மா. என்னை பார்த்து பண்ணுங்க, மிடில் ரோ ஃபர்ஸ்ட் பொண்ணு ஃபுள் பாடி ரொடேட் ஆக கூடாது பா" என்று அவர்கள் அருகே சென்று அவர்களின் தவறை சரி செய்தவள், "நெஸ்ட் ஃபுள் சிட்டிங்" என்று கூறி அதையும் செய்து காட்டி, மீண்டும் பாட்டை ஒலிக்கவிட்டு தன் மை விழிகள் கதை பேச, தேகம் வளைத்து, தனது பின்னலிட்ட கார்குழல் அசைந்தாட, குழந்தைங்களுக்கு அவள் ஆடி காட்ட, அவர்களும் ஒன்றுபோல அவளை பின்பற்றி ஆடியதை பார்க்க அவ்வளவு அற்புதமாக இருக்க, அஜூதியாவுக்கும் குழந்தைகளின் இன்முகம் பார்த்து சந்தோஷமாக இருந்தது.

ஏழு மணியானதும் நடன வகுப்பை முடித்து கொண்டவள்,

"சரி குழந்தைங்களா எல்லாரும் போய் உங்க உங்க செடிக்கு தண்ணி ஊத்துங்க, கார்டெனிங் முடிஞ்சதும் ஏழரை மணிக்கு கிச்சனுக்கு போய் சமையல் அக்காக்கு காய்கறி கட் பண்ணி கொடுக்கணும், ஒர்க் முடிச்சிட்டு சீக்கிரம் ஃபிரஷ் ஆகி, சரியா ஒன்பதரை மணிக்கு ஸ்கூலுக்கு வந்திரனும்" என்று சொல்ல,

"சரி டீச்சர் அக்கா" என்று சிறுவர் சிறுமிகள் அனைவரும் தங்களின் கால்களில் இருந்த சலங்கையை கழற்றி தங்களின் இடத்தில் வைத்துவிட்டு, வழமை போல தங்களுக்காக ஒதுக்கப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற செல்ல, இல்லத்தின் நிர்வாகி ஜானகி தேவி அஜூதியாவிடம் வந்தார்.

"குட் மார்னிங் தேவிமா" என்று புன்னகை நிறைந்த முகத்துடன் அஜூதியா காலை வணக்கம் கூற, பதிலுக்கு புன்னகைத்தபடி காலை வணக்கம் கூறியவர், "அஜூதியா நீ படிச்ச காலேஜ்ல இன்னைக்கு தானே கல்ச்சுரல்ஸ், உன்னை ஆட கூப்பிட்டிருக்காங்கல்ல"

"ஆமா மா, ஓப்பனிங் அண்ட் க்ளோஸிங் டான்ஸ்"

"ப்ராக்டிஸ் பண்ணிட்டியா"

"ம்ம் பண்ணிட்டேன் மா, ஈவினிங் அவங்களே வந்து பிக் அப் பண்ணிக்குவாங்கலாம் காலேஜ் சேர்மென் எக்ஸ் மினிஸ்டர் மிஸ்டர் பரந்தாமன் சார் தான் சீஃப் கெஸ்ட்டாம் சோ பங்க்ஷன் க்ராண்ட்டா இருக்குமாம். முடிய லேட் ஆகும்ங்கிறதுனால காலேஜ் ஹாஸ்ட்டல்ல தங்கிக்க சொன்னாங்க மா, அடுத்த நாள் காலையில அவங்களே இங்க டிராப் பண்ணிருவாங்கலாம்" என்று அஜூதியா அனைத்தையும் கூற,

"சரி மா கவனமா போய்ட்டு கவனமா வா" என்றவர் அங்கிருந்து சென்றுவிட,

"மாரி அக்கா உங்க கைவண்ணத்துல சாம்பார் இங்க வர மணக்குது போங்க" என்று சமயலறையில் இருந்து வந்த வாசனையை நுகர்ந்தபடி கூறியவள், சமையலறையை நோக்கி நடந்தாள்.

சமயலறையில், "ஏய் அந்த தேங்காவை திருவியாச்சா" என்று அதட்டியபடி இடுப்பில் கரி துணி சொருகியிருக்க, அந்த பெரிய வாணலியில் கொதிக்கும் சாம்பாரை ராச்சஸ கரண்டியால் கிண்டிக்கொண்டிருக்கும் மாரியின் அருகே வந்த அஜூதியா,

"என்னாச்சு என் மாரி பேபி ஏன் டென்க்ஷனா இருக்காங்க?" என்று வியர்வையில் குளித்தபடி அனைவரிடம் கத்திக்கொண்டிருந்த அவரிடம் இருந்து கரண்டியை வாங்கி கொண்டு தான் கிண்ட ஆரம்பிக்க,

"தொடர்ந்து கிண்டிக்கிட்டே இரு, அடிபுடிச்சிடாம" என்றவர்,

"ஒரு சின்ன வேலை சொன்ன கூட இவங்களுக்கு முடிக்க இவ்வளவு நேரம் ஆகுது. ஒவ்வொரு வேலையையும் கத்தி கத்தி தான் வாங்க வேண்டியிருக்க, நேரத்துக்கு சாப்பாடு செய்யலைன்னா என்ன தான் திட்டுவாக, இதே இவங்களை உட்கார்ந்து பேச சொல்லு நாள் முழுக்க பேசுவாளுக" என தாளிப்பதில் கவனமாய் இருந்து கொண்டே மாரி புலம்ப,

"விடு அக்கா" என்று அவரை அஜூதியா ஆறுதல் படுத்த,

"சொல்லுவ டி சொல்லுவ, என் இடத்துல இருந்து பாரு அப்போ உனக்கு புரியும்" என்று அஜூதியாவிடம் பாய்ந்தவர் அடுத்த வேலையை பார்க்க போய்விட, பெண்ணவள் மெலிதாய் சிரித்தாள்.

இது தினமும் நடக்கும் வாடிக்கை என்பதால் மாரியை சமாதானம் செய்பவள் அவர் திட்டுவதையும் வாங்கிக்கொண்டு, தன்னால் முடிந்த உதவியை அவருக்கு செய்துவிட்டு செல்வாள்.

விபரம் தெரிந்த நாட்கள் துவங்கி அஜூதியாவும் பார்த்து கொண்டுதானே இருக்கிறாள். மாரியிடம் அங்கு வளரும் சிறுவர் சிறுமிகளும், வாலிப பெண்களும் வம்பிழுப்பதையும் அதற்கு அவர் காச் மூச் என்று கத்துவதையும்.

தாய் தந்தையரின் மறைவுக்கு பிறகு ஐந்து வயதில் இந்த இல்லத்திற்கு வந்த அஜூதியாவுக்கு முதலில், எதுக்கெடுத்தாலும் கத்தும் மாரியை பார்த்தால் பயமாக தான் இருக்கும். ஆனால் என்ன தான் கத்தினாலும் ஆரம்ப காலத்தில், தாய் தந்தையை பறிகொடுத்த சோகத்தில் அவள் இருந்த பொழுது தாய்க்கு தாயக அஜூதியாவை அரவணைத்து அவர் பார்த்து கொள்ள, அவளுக்கு அவரை அப்பொழுதே பிடிக்கும்.

அதே போல் தனக்கு உடம்பே முடியாமல் போனாலும், ஒரு வலி மாத்திரையை மட்டும் போட்டு கொண்டு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காது இத்தனை ஆண்டுகளாக இதே அடுப்படியில் வியர்வை வழிய மூன்று வேளையும், இங்கு உள்ளவர்களுக்கு வயிறார உணவு சமைத்து கொடுக்கும் மாரி மீது நாளடைவில் உள்ள பிடித்தம், மரியாதையுடன் கூடிய அன்பாக மாற, மாரி என்னதான் திட்டினாலும் அஜூதியா பெரிதாக எடுத்து கொள்ள மாட்டாள், "நம் அக்கா தானே" என சிறுவயதில் இருந்தே புன்னகையுடன் கடந்துவிடுவாள். அவர் என்று இல்லை சிறுவயதிலே உறவுகளை இழந்து பாசத்திற்காக ஏங்கிய அனாதையான தனக்கு இன்றுவரை உணவு கொடுத்து, பாதுகாப்பு கொடுத்து ஆதரித்து வரும் ஜானகி தேவி மற்றும் இங்கு வேலை பார்க்கும் அனைவர் மீதும் அஜூதியாவுக்கு மரியாதையுடன் கூடிய அன்பு உண்டு. அவர்கள் கோபப்பட்டாலோ இல்லை கண்டித்தாலோ வருத்தப்பட மாட்டாள். உணர்வுகளை காட்ட உறவுகள் இல்லாத அவளுக்கு அவர்களின் கோபமான கண்டிப்பு கூட

"நம்மை கேள்வி கேட்கவும் ஆள் இருக்கிறதே" என்று மகிழ்ச்சியை கொடுக்க அவர்களில் யார் என்ன சொன்னாலும் சந்தோஷப்பட்டுக்கொள்வாள். அவர்களுக்கும் அஜூதியா என்றால் மிகவும் பிடிக்கும்.

ஆனால் அனைவரும் அவளை போல் கிடையாது அல்லவா, பலர் இங்கு கை குழந்தைகளாகவே வளர்ந்தவர்கள், மேலும் சிலர் உறவுக்காரர்களின் கொடுமை தாங்காது வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். எனவே இவர்களின் பலரது மனம் சிறுவயதிலே ரணப்பட்டிருப்பதால், அவர்களில் நிறைய பேர் பாசம், அன்பு என்னும் உணர்வுகளுக்கெல்லாம் பெரிய முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.

அதையெல்லாம் எப்பொழுதோ கடந்துவிட்டவர்கள், கொஞ்சம் கரடு முரடாக தான் இருப்பார்கள். இவர்களில் பலரது எண்ணங்களும், குறிக்கோள்களும் எந்த பணத்திற்காக உறவுகளால் புறக்கணிக்கப்பட்டார்களோ, எந்த பணம் இல்லாமல் சிறுவயதில் உண்ணும் உணவு துவங்கி உடுத்து ஆடை வரை பிறர் கையை எதிர் பார்த்து நின்றார்களோ. அந்த பணத்தை சம்பாதித்து சுகந்திர பறவைகளாக கட்டுப்பாடற்ற வாழக்கையை எப்படி அமைத்துக்கொள்ளலாம் எனபதை பற்றி தான் இருக்கும்.

ஆனால் அவர்களில் அஜூதியா மிகவும் வித்யாசமானவள் ஐந்து வயது வரை தாய் தந்தை குடும்பம் என்று அவர்கள் காட்டிய பாசத்தை திணற திணற அனுபவித்து வந்தவள் என்பதால், அன்பின் அருமையையும் உறவின் உன்னதத்தையும் நன்கு அறிந்தவள். இன்றைக்கு இருப்பார் நாளைக்கு இல்லை என்பதால், வாழ்க்கையில் இதுவரை யாரையுமே அவள் காயப்படுத்தியதும் இல்லை வெறுத்ததும் இல்லை.

தன்னால் முடிந்த வரை அனைவர்க்கும் உதவி செய்யும் அவளை பொறுத்தவரை பணமோ செல்வமோ நிரந்தரமற்றது, அன்பு ஒன்றே நிலையானது. ஆக அனைவரையும் நேசித்து தன்னிடம் இருக்கும் அன்பை பிறருக்கு வாரிவழங்கும் அவள், தன்னை மட்டும் நேசிக்கும் உறவு ஒன்று தனக்கே தனக்கென்று எப்பொழுது வரும் என்று இன்று இந்த நொடி வரை ஆசையுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறாள்.

!!!!!

அவனது குருதி வழியும் கரங்கள் இரண்டும், ஒன்றாக இணைத்து உயிர்த்தியபடி மேலே இருந்த இரும்பு ராடில் பிணைக்க பட்டு, உடலில் பாதி உயிர் மட்டுமே மீதி இருக்க, இமைகளை கூட பிரித்து பார்க்க வலுவில்லாது தலை தொங்க கிடந்தான் மத்யுவ்.

நேற்று காலை வரை சென்னை சிட்டி காங்ஸ்டர்களில் முதன்மையானவனாக இருந்தவன் இன்று இங்கு பிணைக்கைதியாக, போட்டிருந்த உள்ளாடையை தவிர வேற எதுவும் தேகத்தில் இல்லாது, உடலில் காய்ந்த ரத்த கறைகள் பாதி, வழியும் செங்குருதி மீதி என்று குத்துயிரும் கொலையுயிருமாக கிடக்கிறான். நொடிகள் நொடிகள் கடக்க கடக்க உயிர் பிழைப்போம் என்கிற நம்பிக்கையை மொத்தமாக இழந்திருந்தவன், தன் குடும்பத்தை எண்ணி பார்த்தபடி கண்களை மூடி கொண்டு கிடந்தான்.

அப்பொழுது அவன் இருந்த அறையின் கதவு திறக்கப்பட, கருப்பு நிற ஜாக்கெட்டில் ஆறடி உயரத்தில் மலை போன்ற முரட்டு தோற்றத்தில் வரிசையாக ஒரு மூன்று பேர் அவன் அருகில் வந்தனர்.

"சரக்கு எங்க?" என்று அந்த மூவரில் ஒருவன் மத்யூவிடம் கேட்க, அந்த நிலைமையிலும் மத்யூவ்,

"தெரியாது" என தன் தலையை அசைக்க,

"டேய் செத்துருவ டா உண்மைய சொல்லு" என மற்றொருவன் அவனது கன்னத்தை வலிக்க பிடித்து கொண்டு கேட்டான்.

ஆனால் அப்பொழுதும் அவன் உண்மையை சொல்லாமல் இருக்கவும், பொறுமையை இழந்த மூன்றாவது முரடன் மத்யூவின் மொத்த முடியையும் கொத்தாக பிடித்திழுத்து அவனது முகத்தில் தன் விரலைகளை மடித்து குத்த, வலியில் அலறியவனின் நாசியில் இருந்து ரத்தம் வடிந்தது.

"சொல்ல போறியா? இல்லை அடிவாங்கிய சாக போறியா டா?" மீண்டும் அவன் மத்யூவின் தலை முடியை வலிக்க பற்றிக்கொண்டு கேட்கவும், "அவனை விடு" என தன் அலைபேசியை அணைத்தபடி கூரிய முதலாமவன்,

"பாய் வாராரு, அதுவரையாவது அவன் உயிரோட இருக்கட்டும்" என்று கூறி இகழ்ச்சியாக சிரிக்க, அவனை தொடர்ந்து மற்ற இருவரும் சிரித்தனர்.

அந்நேரம், காதுக்கு நெருக்கமாக கேட்ட உறுதி நிறைந்த, வேகம் கூடிய அழுத்தமான காலடியின் சத்தம் அங்கே சூழ்ந்திருந்த அமைதியை கிழித்தெறிய, அறையின் கதவு திறக்கப்பட உள்ளே வந்தான், அந்திரன் ராவண ஈஷ்வரன், நிஜ உலக தொழில் வட்டாரத்துக்கு அந்திரன். நிழல் உலகத்திற்கு ராவண ஈஷ்வரன்.

இவன் அதிசயித்து பார்க்கும் அளவிற்கு அசாத்திய உயரம் இல்லை தான், ஆனால் இவனது கூரிய விழிகளை சந்தித்து பேசவேண்டும் என்றால் இவனை நிமிர்ந்து தான் பார்க்க வேண்டும்.

அடர் நீல நிற ஜீன், கருப்பு நிற வி நெக் மடக்கிவிடப்பட்ட முழுக்கை டி ஷர்ட். அதில் அடங்காமல் முறுக்கி திமிறி நிற்கும் அவனது புஜங்கள். ஜெல் தடவி அடக்கப்பட்ட சிகை, சிவந்த நிறம், ஆரோக்கியமான உடற்கட்டு. ரோமங்கள் அற்ற இறுக்கமான முகம். அதில் அழுத்தமான தேவைக்கு சிரிக்கும் சிவந்த இதழ்கள்.

ராவணன் பணத்திற்காக கடத்தல், பொருள் மீட்டல் மற்றும் கொலைகள் செய்யும் காண்ட்ராக்ட் கில்லர் கம் வளர்ந்து வரும் லோக்கல் காங்ஸ்டர். பொதுவாக ராவணனுக்கும் அவனால் கொலையோ இல்லை கடத்தலோ செய்யப்படும் எதிராளிகளுக்கும் நடுவே எந்த தனிப்பட்ட பகையும் இருக்காது.

வரத பெருமாள் என்னும் சென்னை சிட்டியின் புகழ் பெற்ற பைனான்ஷியரும் நிழல் உலக தாதாவுமான அவர் தனக்கு தரும் அசைன்மெண்டுக்கு கூலியை முடிவு செய்துவிட்டு, வேலையை சரியாக முடிப்பவன் அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போய்க்கொண்டே இருப்பான். ராவணனின் டீலிங் எல்லாம் வரதனுடன் மட்டும் தான்.

பல தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பினாமியாக இருக்கும் வரத பெருமாளின் முக்கிய வேலையே ராவணனை போன்ற திறமையானவர்களை தன்னோடு வைத்து கொண்டு, அவர்களை வைத்து அந்த அரசியல்வாதிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் வேண்டிய சட்டவிரோதமான காரியங்களை கனகச்சிதமாக அவர்கள் பெயர் வேலையே வராது செய்து கொடுப்பது தான்.

வரத பெருமாளின் கீழ் ராவணனை போல பலர் இயங்குகின்றனர். ஆனால் ராவணன் அளவுக்கு திறமைசாலி இது வரை யாரும் இருந்ததில்லை. அந்த அளவுக்கு திறமையானவன். ஒருவேலையை ஏற்றுக்கொண்டால் என்ன ஆனாலும் சொன்ன தேதியில் முடித்து கொடுப்பான். அதிகம் பேச மாட்டான். எதற்கும் பயப்பட மாட்டான். தேவையில்லாமல் எதிலும் தலையிட மாட்டான். என்ன மற்றவர்களை விட அதிக பணம் கேட்பான், ஆனால் வேலை எவ்வளவு ரிஸ்க்காக இருந்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்து முடிப்பதில் அவனுக்கு நிகர் அவன் தான்.

அசராமல் வேலையை முடித்து, அலட்டிக்கொள்ளாமல் சம்பாதிக்கும் பணத்தை ஆர்ப்பாட்டம் இல்லாமல் வாரி வழங்கவும் தயங்கமாட்டான்.

அவனோடு சேர்த்து அவனுடன் இருப்பது மொத்தம் பத்து பேர். ராவணனின் வாழ்க்கை பயணத்தில் எதோ ஒரு தருணத்தில் அவனுடன் இணைந்தவர்கள். இலங்கை வேந்தனுக்கு பத்து தலை உண்டாமே கேள்விப்பட்டிருக்கிறேன், அது போல தான் இவர்களும் இவனுக்கு. 'பையா பையா' என்று அவனுக்காக உயிரையே விடுவார்கள். ஆனால் ராவணனை பொறுத்த வரை அவர்கள் அவனுடன் இருப்பவர்கள் அவ்வளவு தான், அவர்கள் யாருடனும் நெருக்கமாகவெல்லாம் உறவாட மாட்டான். ஆனால் அதே நேரம் அவர்களுக்கு எந்த குறையும் வைத்தது இல்லை.

அதே போல், 'எட்டி நில்' என எச்சரிக்கும் அவனது முகத்தில் இருக்கும் இறுக்கம் கண்டு அவர்களும் அவன் மீது தாங்கள் கொண்ட பாசத்தை பெரிதாக வெளிப்படுத்த மாட்டார்கள்.

அவனின் பொழுது போக்கு, தொழில் அனைத்துமே அவன் பார்க்கும் நிழல் உலக வேலை மற்றும் அவன் வைத்திருக்கும் கார் ஷோரூமும் மட்டும் தான். அதை தாண்டி மது, மாது, சூது என வேறு எது மீதும் அவனுக்கு நாட்டம் கிடையாது. அவனை கட்டுப்படுத்தும் எதுவும் அவனுக்கு பிடிக்காது, அவன் உயிரை பணயம் வைத்து சம்பாதிக்கிறானே பணம்! அதையும் சேர்த்து தான். திகட்ட திகட்ட சம்பாதிப்பான் ஆனால் யோசிக்காமல் செலவும் செய்வான்.

உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் கட்டுப்படாமல் வாழும் தனி மனிதன் தான் அந்திரன் ராவண ஈஷ்வரன்!!!

அலைபேசியில் யாருடனோ பேசியபடி அவன் வர, உள்ளே வந்த தங்களின் முதல்வனை கண்டதும் அவர்கள் மூவரும் அவன் அருகே செல்ல, "பயங்கரமா அடிச்சு பார்த்துட்டோம் சொல்ல மாட்டிக்கிறான் பாய்" என்று அதீத சினத்துடன் மூவரில் ஒருவன் கூற, அவனது கோபத்தை உள்வாங்கியபடி மத்யூவை நோக்கி நடந்தவன், தன் சகாக்களுக்கு அவனது கட்டை அவிழ்த்து விடுமாறு கண்ணை காட்ட, அவனது கண்ணசைவுக்கு உடனே செயலாற்றியவர்கள் மத்யூவின் கட்டை அவிழ்த்து ராவணனின் உத்தரவின் பெயரில் மத்யூவின் ஆடைகளை அவனுக்கு அணிவித்து விட்டு, அவனை ஒரு நாற்காலியில் அவர்கள் உட்கார வைக்க,

தனது கரங்களை கட்டிக்கொண்டு மேஜை மேல் சாய்ந்தபடி தன் முன்னால் அமர்ந்திருந்த மத்யூவை அழுத்தமாக பார்த்தான் ராவணன்.

அவனது சகாக்கள் அனைவரும் அவனது கண்ணசைவிற்காக தங்களின் கைமுஷ்டி இறுக மத்யூவை ஒருவழி செய்ய காத்திருந்தனர். ஆனால் ராவணனின் பார்வையெல்லாம் மத்யு மீது தான்.

என்ன பார்வை அது! அவனது பொல்லாத பார்வையை நேருக்கு நேர் பார்த்த மத்யூவின் உடல் ஒருகணம் அதிர்ந்தடங்கியது.

இதோ இது தானே வேண்டும்! இதை தானே ராவணன் எதிர்பார்த்தான்! பயம்! எதிராளியின் பயம் தான் அவனது பலம்!

"சோ சரக்கு எங்க இருக்குன்னு சொல்லமாட்ட" இப்பொழுது மிகவும் நிதானமாக அவனிடம் கேட்டான்.

"இல்லை" தலையை இடவலமாக ஆட்டி பதில் கூறினான் மத்யூ.

"ஆல்ரைட் தென்" என தன் பெருவிரலால் தன் அகன்ற நெற்றியை நீவிய ராவணன்,

"உனக்கு நிறைய டைம் கொடுத்துட்டேன், இனிமே உன் இஷ்டம், நடக்க போறதை பொறுமையா வேடிக்கை பாரு" என்றவன், அவன் அருகே வந்து தன் அலைபேசியை காட்டி,

"மத்யூ நீ உன் பையனை ரொம்ப நேசிக்கிறல? லவ்லி பிக்ச்சர்" என்ற ஆர்ப்பாட்டம் இல்லாத ராவணனின் குரலில் நிறைந்திருந்த எச்சரிக்கை மத்யூவின் உடலை நடுங்க வைக்க,

ராவணனின் அலைபேசியின் திரையில் தன் மனைவியுடன் விளையாடும் மகனை பார்த்தவன்,

"நோ டோன்ட் டூ தட் ராவணா, நோ" என தன் உடல் அதிர, தனக்குள் மிச்சம் இருந்த மொத்த சக்தியையும் திரட்டி, உயர்ந்த குரலில்கத்தினான்.

"ஏய் யார் கிட்ட" ராவணனின் சாகாக்களில் ஒருவன் மத்யூவை அடிக்க சீற, அவனை தன் கரம் உயர்த்தி தடுத்த ராவணனின் பார்வை மத்யூ மீதே நிலைத்திருக்க,

"நோ ராவணன் என் பையனை, என் குடும்பத்தை ஒன்னும் பண்ணிராத ப்ளீஸ்" உடலில் வலுவில்லாது போக கெஞ்சினான்.

ராவணன் கொஞ்சமும் அசரவில்லை, ஒருவார்த்தை கூட பேசவில்லை. ஆனால் பார்த்தானே ஒரு பார்வை தன் பார்வையாலே அவனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தான். உண்மை சொல்லாவிட்டால் எதுவேண்டுமானாலும் செய்வேன் என சொல்லாமல் சொன்ன அந்த பார்வையை கண்டு அஞ்சிய மத்யூ,

"நான் சொன்னாலும் உன்னால ஒன்னும் பண்ண முடியாது ராவணா" என்றவன், நீண்ட பெருமூச்சை வெளியிட்டு, "சரக்கு எக்ஸ் மினிஸ்டர் பரந்தாமன் கஸ்டடியில இருக்கு, அவர்கிட்ட இருந்து தூக்கி அஞ்சு செக் போஸ்ட் தாண்டி அந்த வரதனாலையோ ஏன் அந்த சக்தி வேலால கூட இங்க கொண்டு வர முடியாது" என்று சொல்ல, அதற்கு அலட்சியமாக தன் இதழை வளைத்த ராவணன். சரக்கு பரந்தாமனிடம் இருக்கும் செய்தியை வரத பெருமாளிடம் தெரிவித்தான்.

"சரி ராவணா இன்னும் அரைமணிநேரத்துல பையன் கிட்ட பணத்தை கொடுத்து விடுறேன்" என்றவர், உடனே சரக்கை யார் எடுத்தது அது இப்பொழுது எங்கு இருக்கிறது என்பதை தன்னிடம் கண்டு பிடிக்க சொல்லி கேட்டிருந்த மினிஸ்டர் சக்தி வேலிடம் அழைத்து விடயத்தை கூறவும்,

"அந்த பரந்தாமன் என்கிட்ட நேரடியா மோதாம என்கிட்ட வேலை பார்த்தவனை வச்சு இப்படி சில்லறை வேலை பார்த்திருக்கான்" என்று பல்லை கடித்தவர், "சரக்கு முக்கியம் வரதா என்ன செலவனாலும் பரவாயில்லை சரக்கும் இன்னைக்கு நைட் என் கைக்கு வேணும். இல்லைன்னா எனக்கு பெரிய பிரச்சனையாகிடும்" என்று சொல்ல,

"பரந்தாமன் கொஞ்சம் ரிஸ்க் பா."

"பணம் கொடுத்திடலாம் வரதா இதுல என் மானம், என் செல்வாக்கு எல்லாம் அடங்கியிருக்கு" என்றவர் "இந்த ராவணனை வச்சே முடிச்சிரு" என்று சொல்ல,

"பணம் கொஞ்சம் அதிகமாவே ஆகும்" என்ற வரதனிடம்,

"அட அதெல்லாத்தையும் நான் பார்த்துகிறேன் அந்த பரந்தாமன் முன்னாடி நான் தோற்று போக கூடாது, அப்புறம் அந்த துரோகி மத்யூ அவனை கொன்னு கடல்ல வீச சொல்லிடு, கூடவே இருந்து துரோகம் பண்ணிட்டான்" என்று ஆத்திரத்தில் முகம் சிவக்க தீர்க்கமாக கூறினார்.

ராவணனின் வீட்டில் உள்ள ஹாலில் நடுநிலையாக போட பட்டிருந்த சோபாவில் விரல்களுக்கு இடையே நச்சு குழல் தகிக்க, மிக தோரணையாக அமர்ந்திருந்தான், வரதனின் தம்பி விக்ரம்.

அப்பொழுது தன் சகாக்களோடு ராவணன் அங்கே வர,

"ஹாய் ராவணா" என விக்ரம் கையசைக்கவும்,

"ஹாய்" என்று தலையை அசைத்துவிட்டு அவனுக்கு முன்னால் இருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு ராவணன் அமர,

"எப்படி இருக்க ராவணா?" என்று அவன் கேட்கவும், நலமாயிருப்பதாக தலையசைத்த ராவணன் முன்பு தான் கொண்டு வந்த கோப்பை நீட்டியவன், அவன் அதை வாங்கவும்,

"பரந்தாமன் கிட்ட இருக்கிற சரக்கு இன்னைக்கு கைக்கு வரணுமாம், இதையும் நீயே செய்யணும்ன்னு அண்ணன் சொன்னாரு, அந்த ஆளு மேலை எல்லாம் கை வைக்க வேண்டாமாம், சரக்க மட்டும் கொண்டு வந்தா போதுமாம். மத்யூ கதையை முடிச்சிட சொன்னாரு" என்றவன், "இதுல பாதி பணம் இருக்கு. சரக்கு கைக்கு வந்ததும் மீதி பணம் உன் கைக்கு வரும்" என்று சொல்லி ஒரு பெட்டியை எடுத்து ராவணனின் கரத்தில் கொடுக்க, பெட்டியை வாங்கி திறந்தவன், அதில் நிறைந்திருந்த பணத்தை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தவன், பெட்டியை தன் அருகே இருந்த தன் ஆட்களில் ஒருவனிடம் கொடுத்து விட்டு,

"வேலை முடிஞ்சதும் சொல்றேன்" என்ற ராவணனிடம்,

"ம்ம் சரக்க மட்டும் கொண்டு வந்தா போதும் பரந்தாமன் மேல எல்லாம் கை வைக்க வேண்டாம்" என்பதை கொஞ்சம் அழுத்தமாக சொல்ல,

"அது என் கையில இல்லை எனக்கோ என் கூட்டாளிங்களுக்கோ எதுவும் ஆபத்து வந்தா என் துப்பாக்கி சும்மா இருக்காது" என்றுவிட்டு ராவணன் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, 'நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது நான் இப்படி தான்' என்னும் தோரணையில் பேசும் ராவணனை கண்டு விக்ரமிற்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.

ராவணன் சிறையெடுப்பானா?
 
Last edited:

ராவணனே என்னை சிறை எடு 2

1.jpg
பார்வை படும் தூரம் வரை பெரிய பெரிய கண்டெயினர் பெட்டிகளில், நல்ல வாட்டசாட்டமான ஆண்கள் குழுக்களாக இணைத்து சிறிய சிறிய மரப்பெட்டிகளை ஏற்றி கொண்டிருக்க ,

"ம்ம் சீக்கிரம் எல்லா சரக்கையும் இன்னைக்கே டிஸ்ட்ரிபியூட் பண்ணியாகணும்" என பணியாட்களை துரிதப்படுத்தியபடி அவர்கள் செய்யும் வேலைகளை, வாயில் நச்சு குழலை வைத்து ஊதியபடி பார்வையிட்டு கொண்டு வந்தான் பரந்தாமனின் சட்டவிரோதமான வேலைகளை பார்த்துக்கொள்ளும் அவனது வலது கை ரத்தின பாண்டியன்.

அப்பொழுது அவனது அலைபேசிக்கு அழைப்பு வரவும் அதை அட்டென்ட் செய்தவன் எதிர் தரப்பில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டு ஆத்திரத்தில்,

"என்னடா ராவணன் ராவணன்னு ரொம்ப வாசிக்கிற, ராவணன்னா நாங்க பயந்திருவோமா? ஹான் அவன் வந்தா அப்படியே தூக்கி கொடுத்திருவோமா என்ன? யார்கிட்ட? இது பரந்தாமன் ஐயாவோட கோட்ட, வரட்டும் அவனையும் அவன் ஆளுங்களையும் சுறாவுக்கு இரையாக்குறேன்" என்று தன் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு ஆக்ரோஷமாக கூறி அழைப்பை துண்டித்தவன்,

"டேய் நம்ம ஆளுங்க எல்லாரையும் வர சொல்லுடா, அவனா இல்லை நாமளான்னு பார்ப்போம்" என்று தன் வேட்டியை தொடை மேல் ஏற்றி கட்டியபடி தன் ஆளுங்களிடம் கூறியவனின் கண்கள் உயிரை குடிக்கும் அகோரனாய் காட்சியளித்தது.

!!!!!!

"நவ் லெட் அஸ் வெல்கம் அவர் ஹானரபில் சேர்மென் மிஸ்டர் பரந்தாமன் சார் டு கிவ் சீஃப் கெஸ்ட் அட்ரஸ்" கல்லூரி சேர்மென் பரந்தாமனை பேசுவதற்காக மேடையில் இருந்து அழைப்பு வர, அனைவர்க்கும் கரம் கூப்பி வணக்கம் சொல்லிய பரந்தாமன், ஏற்கனவே அங்கே தயாராக எழுதி வைக்கப்பட்டிருந்த காகிதத்தை பார்த்து தன் பெருமையையும், கல்லூரி பெருமையையும் பேச துவங்க,

"விக்கி பீ ரெடி, ராவண் பாய் ஜூஸ் கிளாஸை அவன் கிட்ட கொடுக்குறது போல அவன் ட்ரெஸ் மேல கொட்டிருவாரு, ஸோ கிளீன் பண்ண அவன் ரெஸ்ட் வருவான். அப்போ நான் உனக்கு சிக்னல் கொடுப்பேன் நீயும் தேவராஜும் அவனை தூக்கியிருங்க, பசங்களை அலெர்ட் பண்ணு" என்று மேடைக்கு பின்னால் காவலாளி சீருடையில் இருந்த தன் ஆள் விக்கிக்கு, சிசிடிவி அறையில் உள்ள கண்காணிப்பாளனை அடித்து மயக்கமடையவைத்துவிட்டு அங்கு அனைத்தும் தங்களின் திட்டப்படி நடக்கிறதா என பார்வையிட்டபடி தங்களின் ஆட்கள் அனைவர்க்கும் தகவல் சொல்லிய சந்துரு, ஒருதடவை அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று பார்த்துவிட்டு,

"பையா ஆள் அண்டர் கண்ட்ரோல்" என்று ராவணனுக்கு செய்தி சொன்னான்.

வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட், கழுத்தில் கருப்பு நிற போவ் என வெயிட்டர் சீருடையில் பரந்தாமனுக்கென, சிறப்பாக தயாரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்ட மாதுளை பழச்சாறு அடங்கிய ட்ரேவுடன், பரந்தாமன் மேடையில் இருந்து கீழே வந்ததும் கொடுப்பதற்காக ராவணன் காத்திருக்க,

சில நிமிடங்களில் தன் உரையை முடித்துவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கி வந்த பரந்தாமன் தனக்கான இருக்கையில் வந்து கம்பீரமாக அமரவும்,

"ஏய் வெயிட்டர் நீ தான் போ" என்று ஈவென்ட் மேனேஜர் ராவணனை துரிதப்படுத்த, மெல்லிய கனிவான புன்னகையுடன் பரந்தாமனின் அருகே ராவணன் நெருங்கவும்,

நடனமாட அழைக்கப்பட்ட அஜூதியா மேடை ஏறி வரவும் சரியாக இருக்க, ராவணனின் விழிகள் கட்டுண்டது போல மேடையை வெறித்தது.

"அலைபாயுதே கண்ணா

என்மனம் அலைபாயுதே

உன் ஆனந்தமோகன வேணுகானமதில்

அலைபாயுதே கண்ணா ஆ ஆ" என்ற பாடலுக்கு ஏற்ப தன் உடலை வளைத்து, தன் பேசும் விழிகளை அசைத்து மிக மிக நளினமாக அஜூதியா நடனமாட,

"நிலைபெயறாது சிலைபோலவே நின்று

நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா

என்மனம் அலைபாயுதே கண்ணா ஆ ஆ" என்ற வரியில் உள்ளது போல,

அடுத்த அடி எடுத்து வைத்தால் பரந்தாமனை நெருங்கி விடலாம் என்கிற நிலையில் அவனது வலிமையான தடித்த கால்கள் தரையில் வேரூன்ற, சிலை போல அசையாது அதே இடத்திலே தன்னை மறந்து நின்றான் ராவணன்.

பெண்ணவளின் அடர்ந்த இமைகளுக்குள் இருந்த அஞ்சனம் தீட்டிய விரிந்த விழிகள், ஆணவனை கொல்லாமல் கொல்ல, தன்னை மறந்தான்! தான் வந்த நோக்கம் மறந்தான்! இந்த உலகம் மறந்தான்! அந்திரன் ராவண ஈஷ்வரன்.

வாழ்க்கையின் ஓட்டத்தில், தனக்கான பாதை அறியாமல், இலக்கில்லாமல் ஓடிக்கொண்டிருந்தவனின் ஓட்டத்தை நிறுத்தி, ஏய் ராவணா! இங்கே! என்னை பார்! என் விழிகளை பார்! பார்த்து கொண்டே இரு என சொல்ல சொல்லாமல் சொல்லி அவனை கட்டிப்போட்டு சிறைவைத்தது காரிகையின் கரிய விழிகள்.

கொஞ்சம் கொஞ்சமாக கருந்துளையாக அவளது விழிகளுக்குள் தான் விழுந்து கொண்டிருப்பது அவனுக்கு புரியவும் மிகவும் சிரமப்பட்டு தன் பார்வையை அவளிடம் இருந்து அகற்றினான். ஆனால் அதெல்லாம் சிலை நொடிகள் தான், அடுத்த கணமே மீண்டும் பார்த்தான், இப்பொழுது அவனின் பார்வை அவளது இதழை வருடியது, அவ்வளவு தான் அவன் இதழில் தீ பிடித்த உணர்வு, அந்த தீ கொஞ்சம் கொஞ்சமாக தன் இதயம் தொட்டு தனது உடல் முழுவதும் பரவுவது போல உணர்ந்தவனுக்குள் ஏதோ ஏதோ தோன்றியது.

"தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே...

கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே"

அவ்வளவு ஏசி காற்றிலும் அவனது உடல் அக்னியாய் தகிக்க, அளவுக்கு அதிகமாக துடிக்கும் தன் மார்பை தன் கரம் வைத்து அடக்கியவனுக்குள் எழுந்த பொல்லாத ஆசைகள் எல்லாம் அவனை திணறடிக்க, சுற்றி கேட்ட கரகோஷத்தில் சுயம் பெற்ற ராவணன், தன் எண்ணம் போன போக்கை எண்ணி அதிர்ந்தான். அதற்கு மேல் ஒரு நொடி அங்கே நிற்க முடியாமல் தன் கரத்தில் இருந்த டிரேவை டேபிளில் வைத்து விட்டு, தனது கழுத்தில் இருந்த போவை கழற்றி எறிந்தபடி, தன் காதில் கேட்ட எந்த குரலுக்கும் செவி கொடுக்காமல் வேகமாக அந்த அரங்கத்தை விட்டே வெளியேறினான்.

அதேநேரம் அஜூதியா அனைவரையும் பார்த்து வணங்கிவிட்டு மேடையில் இருந்து மறையும் வரை அவளை இமை தட்டாமல் பார்த்த பரந்தாமன் தன் காரியதரிசியை அழைத்து,

"யாரு டா இந்த பொண்ணு" என்று கேட்ட தோரணையில் தன் தலைவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட அவரது காரியதரிசி,

"ஏற்பாடு பண்ணிரேன் சார், லாஸ்ட் எலெக்ஷ்ன் அப்போ கஷ்டப்பட்ட பிள்ளைங்களுக்கு இலவசமா சீட் கொடுத்தோமே அதில இந்த பொண்ணும் உண்டு" என்று சொல்ல, அதையெல்லாம் எங்க அவன் காதில் வாங்கினான்,

"இன்னைக்கு நைட்" என்று பரந்தாமன் தன் எண்ணத்தை தீவிரமாக சொல்லவும், அவர் இன்னைக்கேவா என்று தயங்க,

"என்னய்யா?" பரந்தாமனுக்கு எரிச்சல் வந்தது.

"சின்ன பொண்ணு சார் பேசி அவ அதுக்கு சம்மதிக்கணும்"

"ம்ம் நீ வர வை நான் பேசிக்கிறேன்" என்றவர் பெண்ணவளை வேட்டையாட போகும் நிமிடத்திற்காக காத்திருந்தார்.

!!!!!!!!!!!!!

"சந்துரு என்னாச்சு ஏன் சிக்னல் கொடுக்கலை? அங்க என்ன நடக்குது" என பாத்ரூமில் இருந்து விக்கி தனது கூட்டாளி சந்த்ருவிடம் கேட்க,

"அதை பத்தி கேட்காத டா, பையா இப்போ வேற மூட்ல இருக்காரு, இன்னைக்கு சம்பவம் நடக்குறதெல்லாம் கஷ்டம் தான். இப்போதைக்கு பிளான் ஏ போச்சு, அடுத்த என்னன்னு பாய் தான் சொல்லணும், எல்லாருமே கிளம்பிடலாம்" என்று சிறு புன்னகையுடன் கூறியவன், அரங்கத்திற்கு உள்ளே இருக்கும் தன் மற்ற கூட்டாளிகளுக்கும் தகவல் கொடுக்க, சமையல் உதவியாளர், பாத்ரூம் கிளீனர், என வேறு வேறு வேடத்தில் இருந்த அனைவரும் வெவ்வேறு திசை வழியாக திட்டமிட்டபடி லாவகரமாக வெளியேறினர்.

!!!!

"ராவணா நீயா இது? நீ வந்த நோக்கம் என்ன? செய்வது என்ன? போட்ட மொத்த திட்டத்தையும் சொதப்பிவிட்டு ச்ச் ச்ச" இந்த உணர்வு அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, இவளுக்காக மீண்டும் தன் சுயத்தை இழந்துவிட்டேனே ஆத்திரத்தில் உடல் இறுக அமர்ந்திருந்தான்.

இதோ அரங்கத்தை விட்டு அவன் வெளியேறி பத்து நிமிடத்திற்கு மேல் ஆகிறது, ஆனால் இன்னும் அவளது நினைவுகள் அவனை சிறைபிடிப்பதற்காக சுத்தி சுத்தி வரவும் அவன் கோபத்தில் கண்களை இறுக்கமாக மூட, பெண்ணவளின் கரு விழிகள் அவன் மனக்கண் முன்பு தோன்றி இம்சை கொடுக்கவும், அதீத கோபத்தில் காரின் டேஷ்போர்டில் ஓங்கி குத்தினான்.

ஒரு முறை தான் என்றாலும் கைமுஷ்ட்டி இறுக அவன் குத்திய வேகத்தில் டேஷ்போர்ட் தானாக திறந்து கொள்ள, அதில் இருந்து கீழே விழுந்த பொருள் ஒன்று எழுப்பிய சத்தத்தில் விழிகளை திறந்து பார்த்தவன், தன் முகத்தை அழுத்தமாக தேய்த்தபடி கீழே விழுந்த தன் துப்பாக்கி மற்றும் சலங்கையையும் அவ்விரண்டையும் சேர்த்து பின்னிக்கிடந்த கழுத்து சங்கிலியையும் மொத்தமாக தன் கரத்தில் எடுத்துக்கொண்டு சலங்கையை லேசாக வருடினான். அவன் கரத்தில் இருந்த துப்பாக்கி அவனை பார்த்து சிரித்தது.

ராவணனுக்கு அஜூதியாவை பார்க்கும் பொழுதும் சரி, இப்பொழுது இந்த சலங்கையை தன் கையில் எடுத்து வருடிய பொழுதும் சரி அவன் மனம் எண்ண நினைக்கிறது? அவன் எப்படி உணர்கிறான்? என்று அவனுக்கே சரி வர புரியவில்லை.

ஆனால் தன் கையில் இருந்த பொருட்களை மீண்டும் மீண்டும் வருடியபடி அமர்ந்திருந்தவனின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியடைய அவனது இமைகள் இப்பொழுது தானாக மூடி கொண்டது.

!!!!!

"என்னாச்சு சந்துரு, பாய் ஏன் ஒருமாதிரி வந்தாரு" என அவனது கூட்டாளிகள் காருக்கு வெளியே நின்றுகொண்டு சந்துருவிடம் கேட்க,

"எனக்கும் அதான் தெரியல" என்ற சந்த்ருவிடம்,

"இப்போ நம்ம அடுத்த பிளான் தான் என்ன? இந்த மிஷன் நடக்குமா நடக்காதா" என்று ஒருவன் கேட்க, அப்பொழுது தன் கையில் முளைத்த துப்பாக்கியுடன் "நடக்கும்" என்றபடி காரின் கதவை திறந்த ராவணன் குரலில் 'எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன்' என்கிற வெறி நிறைந்திருந்தது.

!!!!

"இந்த நேரத்திலையா?!" பெண்ணவள் தயக்கத்துடன் வினவ அவளது முகத்தில் விரவியிருந்த அச்சத்தை உள்வாங்கிக்கொண்டவர்,

"இதுல பயப்பட என்னடா இருக்கு? நான் தான் கூட வரேன்ல வா, சேர்மென் வைஃப்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் ப்ரோக்ராமை ஆன்லைன்ல பார்த்திருப்பாங்க போல, உன் டான்ஸ் ரொம்ப புடிச்சு போச்சாம் உன்னை நேர்ல பார்த்து சேர்மென் வைஃப்க்கு பாராட்டனுமாம், நாளைக்கு காலையில அவங்களுக்கு ஃப்ளைட்டாம் அதான் சேர்மென் சார் இப்பவே உன்னை கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்க, வா டா போயிட்டு வந்துடலாம்" என்று கூறிய வார்டன் பெண்ணவளின் கரத்தை பிடித்துக்கொள்ள,

"ஓகே மேம்" என்றவளுக்கு முதலில் இருந்த தயக்கம் இப்பொழுது இல்லை.

பரந்தாமனை இதுவரை நேரில் சந்தித்ததில்லை என்றாலும் அரசல் புரசலாக அவர் பெண்கள் விடயத்தில் மோசம், இங்கு படித்த மாணவியை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டார் என்று ,அவள் கல்லூரியில் வந்த புதிதில் சிலர் கூறி கேள்வி பட்ட பொழுது முதலில் பயந்தவள், பிறகு நாளிதழில் அந்த பெண்ணுக்கு போதைப்பழக்கம் உண்டு ஆண் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் போதை மயக்கத்தில் கீழே விழுந்து இறந்துவிட்டாள், என்ற செய்தி வரவும், சமுதாயத்தில் அந்தஸ்தில் இருக்கும் மனிதருக்கு அவப்பெயரை ஏற்படுத்த இது போன்ற செய்திகளை அவருக்கு வேண்டாதவர் யாரோ பரப்பியிருக்க வேண்டும், நாம் படிக்க உதவியவர் அவர் , அவரை இனி தவறாக நினைக்க கூடாது என்று முடிவெடுத்தவளுக்கு லட்சங்களையும் கோடிகளையும் கொட்டி, பெரிய பெரிய பணக்காரர்கள் மட்டுமே படிக்கும் இந்த கல்லூரியில் தனக்கு ஒரு செலவும் இல்லாமல் படிக்க உதவிய பரந்தாமன் மீது மரியாதை பெருகியது. அதுவும் இப்பொழுது அவரது மனைவியே அவளை பாராட்டுவதற்காக அழைத்திருக்கிறார் என்று கூறியதும் உள்ளம் மகிழ்ந்தவள், தனக்காக காத்திருக்கும் சூழ்ச்சி பற்றி ஆராயாமல் ஏற்கனவே தங்களுக்காக ஹாஸ்ட்டலின் வாசலில் காத்திருந்த வெள்ளை நிற ஆடி காரில் வார்டனுடன் ஏறி அமர்ந்தாள்.

'சேர்மென் மனைவிக்கு என் நடனம் பிடித்திருக்கின்றதாம், அவருக்கு என்னை நேரில் சந்திக்க வேண்டுமாம்!' பெண்ணவளின் மனம் உற்சாகத்தில் துள்ளி குதித்தது. போதாக்குறைக்கு வார்டன் மேம் வராங்க ஏன் பயப்பட வேண்டும் என்று எண்ணினாளோ என்னவோ, மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் காரில் அமர்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள் அஜூதியா.

அரைமணிநேர பயணத்தின் முடிவில் கார் பிரம்மாண்டமான அந்த பங்களாவின் வாசலில் வந்து நிற்க, காரில் இருந்து இறங்கிய அஜூதியாவின் கண்கள் அந்த மாளிகையின் தோற்றத்தை கண்டு ஆச்சரியத்தில் விரிந்துகொண்டது.

அப்பொழுது அவர்களின் அருகில் வந்த காவலாளி, வார்டனிடம் விசாரித்துவிட்டு அவர்களை மேலே அனுப்ப, அஜூதியாவை அழைத்து கொண்டு வந்த வார்டன், ஒரு அறையின் வாசலில் கைகளில் துப்பாக்கியுடன் நின்றிருந்த காவலாளிகளிடம் சேர்மென்னை பார்க்க வேண்டும் என்று கூற, அஜூதியாவை மட்டும் உள்ளே அனுமதித்தவர்கள் அந்த வார்டனை வெளியேவே இருக்க சொல்லிவிட,

"போயிட்டு வா அஜூதியா, நான் வெளில தான் இருக்கேன்" என்றவர் அஜூதியாவை உள்ளே அனுப்பினார்.

!!!!

"டேய் சரக்க கண்டெயினர்ல ஏத்தியாச்சா?" என்ற ரத்தின பாண்டியனிடம்,

"இன்னும் கொஞ்சம் தான் அண்ணன்" என்று கூறிய தன் கையாளிடம், "பசங்க ரெடியா இருக்காங்கல்ல?" என வினவினார் பாண்டியன்.

அப்பொழுது பாண்டியனிடம், "ஆமா அண்ணன்" என்று அவன் சொல்லும் பொழுதே தரையில் வழுக்கிக்கொண்டு வேகமாக வந்த காரொன்று அவர்கள் முன்னால் வந்து நிற்க,

தன் கண்கள் இடுங்க காரின் நம்பர் ப்லேட்டை பார்த்த ரத்தின பாண்டியன்,

"டேய் கேட்டை இழுத்து சாத்துங்க டா, ஒரு பையன் உசுரோட போக கூடாது" என்று தன் அடியாட்களை பார்த்து கட்டளையிட்டான்.

!!!!

வெள்ளை நிறத்திலான வேலைப்பாடுகளாலும், கலை பொருட்களாலும் அலங்கரிக்க பட்ட அந்த அறை இன்னும் அழகாக இருக்க, கண்களில் ஆர்வம் மின்ன அங்கிருந்த புகைப்படங்களையும் கலை பொருட்களையும் பார்வையிட்டு கொண்டிருந்தாள் அஜூதியா.

அப்போழுது ஒரு புகைப்படம் அவளது கவனத்தை வெகுவாக ஈர்க்க, அதன் அருகே இன்னும் நெருங்கி சென்று கூர்ந்து பார்த்தவளுக்கு 'சீ' என்றாகிவிட்டது. அதன் பிறகு தான் அனைத்து புகைப்படங்களையும், சிறிய சிறிய சிலை வடிவில் இருந்த கலை பொருட்களையும் கூர்ந்து பார்த்தாள். அதை பார்க்க பார்க்க பெண்ணவளுக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட, முகத்தை சுளித்தவள், திரும்பி வந்து கதவை திறக்க முயற்சி செய்த பொழுது கதவு திறக்க வில்லை.

ஒரு முறையல்ல ஒன்று, இரெண்டு, மூன்று என்று அவள் "மேடம் யாரவது இருக்கீங்களா" என்று சத்தமாக அழைத்தபடி கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருக்க, "அஜூதியா" என்று அவளுக்கு பின்னால் இருந்து மிக அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பியவளுக்கு, நரைத்த முடியும் பெருத்த உடலுமாக தன் முன்னே வெறும் முட்டி வரை உள்ள பாத்ரோபில் நின்றிருந்த தன் கல்லூரி சேர்மென்னை பார்த்ததும் ஒருமாதிரி ஆகிவிட, வலுக்கட்டாயமாக சிரித்தவள்,

"ஹெலோ சேர் மேம் வர சொல்லிருந்தாங்களாம் அவங்கள எங்க?" என்று கேட்க,

"மேம் தானே வருவா வருவா முதல்ல நீ வா" என்றவரின் வாயில் இருந்த வெண்குழலும் இதழில் ஒட்டியிருந்த கோணல் புன்னகையும் உள்ளுக்குள் கிலியை உண்டாக்க பெண்ணவளின் மூளை அவளுக்கு விடுத்த எச்சரிக்கையில் இதயம் தடதடக்க நின்றிருந்தவள்,

"நான் போகணும் சார் கதவை திறந்துவிடுங்க" என்று கூறி அவரது முகத்தை பார்க்காது திரும்பி நின்றுகொண்டு பயத்தில் தன் உடல் நடுங்க கதவை திறக்க முயற்சி செய்துகொண்டிருக்க, சத்தமாக சிரித்த பரந்தாமன்,

"நீ என்ன செஞ்சாலும் கதவு திறக்காது அஜூ, வா வா வந்து என் பக்கத்துல உக்காரு சீக்கிரமே போய்டலாம்" என்று சொல்லி அவளை பார்த்து வஞ்சகத்துடன் சிரிக்க, தன் விழிகளில் அனல் தெறிக்க அவரை பார்த்தவள்.

"சார் உங்க பேச்சும் சரியில்ல, பார்வையும் சரி இல்லை வந்து கதவை திறந்து விடுங்க, இல்லை நான் சத்தம் போடுவேன்" என்றவள் கத்தியபடி வார்டனை அழைக்க, அவரோ காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு, ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி காரில் அமர்ந்திருந்தார்.

கதவை தட்டி தட்டி சோர்ந்து போனவளுக்கு, தான் எப்படி பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளோம் என்னும் சிந்தனை அதீத பயத்தை கொடுக்க, இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாது திணறினாள்.

அப்பொழுது தன் கரத்தில் இருந்த வெண்குழலை அஷ் ட்ரேவில் போட்டு நசுக்கிவிட்டு மெல்ல அஜூதியாவை நோக்கி அந்த பரந்தாமன் நடந்து வர, தன்னை நெருங்கி வரும் அந்த துஷ்டனின் காலடி சத்தம் பெண்ணவளின் காதில் இடியாய் முழங்க அவளது கால்கள் பயத்தில் தள்ளாடியது.

அவர் அவளை நெருங்கி அவளது கரத்தை பிடிப்பதற்குள் விலகியவள்,

"சார் என்ன இது? உங்க மேல அவ்வளவு மரியாதை வச்சிருக்கேன். என்ன பண்றீங்க? என்னை போக விடுங்க இல்லை நடக்குறதே வேற" என்று மிரட்டியவளை பார்த்து அலட்சியமாக சிரித்தவன்,

"அட என்ன மா நீ? பயப்படாத நூறு சதவீத எண்டெர்டெயின்மெண்ட்டுக்கு நான் உத்தரவாதம் தரேன்.கொஞ்சம் நேரம் சத்தம் போடாம, அமைதியா அடம் பண்ணாம இருந்தீன்னா சொர்க்கத்தை காட்டுறேன்" என்று கூற, அவனை அருவருப்பாக பார்த்தவள்,

"சீ பொறுக்கி" என்றுவிட்டு மீண்டும் கதவை திறக்க முயற்சி செய்ய,

"என்னடி சொன்ன?" என்று தன் பற்களை கடித்தவர், அவளது கரத்தை வந்து பிடிக்கவும், பரந்தாமனை பிடித்து அஜூதியா தள்ளிவிட, கீழே விழாமல் தன்னை சமாளித்து கொண்டு கட்டிலை பிடித்து எழுந்தவர் ஆத்திரத்தில்,

"ஹவ் டேர் யு" என்று கத்தியபடி அஜூத்தியாவின் கன்னத்தில் ஓங்கி அறைய, சுவற்றில் மோதி கீழே விழுந்தவளுக்கு ஏற்கனவே இருந்த மனஅழுத்ததில் தலை சுற்றி மயக்கம் வருவது போலவும் இருக்க, மிகவும் சிரமப்பட்டு தன் தலையை இடவலமாக அசைத்து, தன்னை நிலைப்படுத்தி கொண்டு சுவற்றை பிடித்தபடி எழுந்து நின்றவள் மீண்டும் கதவை தட்ட போகவும்,

"வா டி" என்று அவளை பிடித்து படுக்கையில் தள்ளிய அந்த காமுகன், அவளது அலறலை ரசித்தபடி அவளை நெருங்கிவர, தன் காலால் அவனை எட்டி உதைத்தபடி வேகமாக எழுந்தவள் மீண்டும் கதவை நோக்கி செல்லவும், அவளது ஆடையை பிடித்து அந்த பரந்தாமன் இழுக்க, அவள் அணிந்திருந்த ஆடை கிழியப்பட்டு ஒரு பகுதி அவன் கரத்தோடு சென்றுவிட, தன் இழிநிலையை எண்ணி கண்ணீர் வடித்த பாவையவள், அவன் பார்க்காது தன் உடலை மறைத்து திரும்பி நின்று, தன் மனதில் தோன்றிய தெய்வங்களையெல்லாம் தன் மானத்தை காக்கும் படி வேண்டிக்கொண்டாள்.

ஏனோ அவளால தனக்கு நடக்கும் இந்த அவலத்தை எதிர்கொண்டு போராட முடியவில்லை, தனக்கு என்ன ஆகும் என்ற பயம் அவளை முழுவதும் கவ்விக்கொள்ள, தன் உடலில் உள்ள சக்தியெல்லாம் வடிந்தது போல தேகம் நடுங்க நின்றவள்,

"ப்ளீஸ் சார் விட்ருங்க" என அவனை கரம் கூப்பி மன்றாடியபடி தரையில் மடிந்தமர்ந்து கெஞ்ச,

"இப்படி கெஞ்சிறதுக்கு என்னை கொஞ்சினா உனக்கு சேதாரமாவது குறையும்" என்றவனின் கரம் அவளிடம் அத்துமீற வரவும், இந்த ராட்சசனிடம் கெஞ்சி பயனில்லை என்னும் நிலையில் வெகுண்டெழுந்தவள் "தள்ளி போடா" என்று பயங்கரமாக கத்தியபடி அவனை கீழே தள்ளி தற்சமயம் இவனிடம் தப்பித்தால் போதும் என்கிற நிலையில் சுற்றி சுற்றி பார்த்தவள் அவன் தட்டு தடுமாறி எழுந்து வருவதற்குள் ஓடி சென்று பாத்ரூம் அறையின் கதவை திறந்து கொண்டு மூச்சு வாங்க உள்ளே சென்று வெகேமாக கதவுக்கு தாளிட்டாள்.

!!!!

கரங்களில் கூர்மையான ஆயுதத்துடன் கர்ஜித்தபடி ரத்தின பாண்டியனின் அடியாட்கள் தங்களின் முன்னே நின்றிருந்த காரை நோக்கி படையெடுத்த அதே நேரம்,

பரந்தாமனின் காவலாளர்கள் கண்ணிமைக்கும் நொடியில் தாக்கப்பட்டு துப்பாக்கி முனையில் சிறைவைக்க பட்டிருக்க, "டமார் டமார்" என்ற தொடர் சத்தத்தை தொடர்ந்து பரந்தாமனின் அறையின் கதவு அதிரடியாக திறக்கப்படவும், குளியலறையின் கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்த மனித உருவத்தில் இருந்த அந்த மிருகம் வாசலை அதிர்ந்து பார்க்க, தன் வலதுகர முழுக்கை சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக்கொண்டே மிக மிக நிதானமாக தன் பார்வையை பரந்தாமன் மீது ஆழமாக பதித்தபடி சந்த்ருவுடன் உள்ளே நுழைந்தான் ராவணன்.

சிறையெடுப்பானா??
 
Last edited:
ராவணனே என்னை சிறை எடு 3
1.jpg

"டேய் யாருடா நீங்க?" என்ற பரந்தாமனுக்கு ஒன்றுமே ஓடவில்லை, ஏற்கனவே அஜூதியா தள்ளிவிட்டதில் வெறி பிடித்தது போல இருந்தவர், இப்பொழுது தன் முன் கடோத்கஜனை போல ஆஜானுபாகுவான தோற்றத்தில் கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்தவர்களைப் பார்த்து ஒருகணம் ஸ்தம்பித்துவிட்டார்.

"அது உனக்கு தேவை இல்லை, மத்யூ உன்கிட்ட கைமாத்தி விட்ட சரக்கு இப்போ எங்களுக்கு வேணும்" ராவணனின் பார்வை பரந்தாமன் மீது அழுத்தமாய் பதிந்திருக்க, சந்துரு பரந்தாமனிடம் கூறினான். அவ்வளவு தான் பரந்தாமனின் கோபம் எல்லையை கடந்துவிட்டது,

"என்ன சரக்க தரணுமா! டேய் வெளிய போங்க டா, கார்ட்ஸ் செக்யூரிட்டி" என்று கத்தியவர் ஆத்திரத்தில் வேகமாக வந்து ராவணன் நெஞ்சில் கரம் வைத்து அவனை வெளியே தள்ள, அடுத்த நொடி அவரது கரம் பட்ட தன் மேல் சட்டையை தட்டிவிட்டபடி, கீழே தன் கன்னத்தை பொத்திக்கொண்டு கிடந்த பரந்தாமனை பார்த்து,"என்ன ஹான்" என்று உறுமினான் ராவணன்.

ஏற்கனவே ராவணனின் ஒற்றை அறைக்கே ஆடிப்போன பரந்தாமன் அவனது,

"என்ன" என்ற அடிக்குரல் சீற்றத்தில் மொத்தமாக அடங்கிப்போக, எழுந்து நிற்க கூட தோன்றாமல் விழுந்த நிலையிலே அப்படியே கீழே கிடந்தார்.

பாத்ரூமில் இருந்த ஒரு டவலை எடுத்து தன் முதுகு பகுதியை மூடியபடி தன் மேனியில் போர்த்திக்கொண்ட அஜூதியா , அடுத்ததாக பாத்ரூம் வழியாக தப்பிக்க முடியுமா? ஏதும் வழி இருக்கின்றதா என்று முயற்சித்து பார்க்க அவளுக்கு எந்த வழியும் இல்லாது போகவும் பரந்தாமனை எண்ணி மிகவும் கலங்கியவள், எப்படி அவனிடம் இருந்து தப்பிச்செல்வது என்கின்ற பயத்தில் இருந்த நேரம், வெளியே ஏதோ சத்தம் கேட்கவும் தனக்கு ஏதும் உதவி கிடைக்குமா என்கின்ற ஆசையில் கடவுளை வேண்டிக்கொண்டு கதவை மெதுவாக திறந்து லேசாக எட்டிப்பார்த்தவள், ராவணன் பரந்தாமனை அடிக்கும் காட்சியை பார்த்து முதலில் கொஞ்சம் பயந்தாள் தான், ஆனால் மறுகணமே உண்மையாக மகிழ்ந்தாள்.

கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவன் தன்னிடம் நடந்து கொண்டதுக்கு இந்த ஒரு அறை எல்லாம் பத்தாது என்று தான் அவளுக்கு நினைக்க தோன்றியது. இன்னும் அவன் பட வேண்டும் என்று தன் மனதிற்குள் எண்ணி கொண்டவளுக்கு ராவணனை பார்க்கும் பொழுது தெய்வமே தன்னை காப்பற்ற ஆள் அனுப்பியது போல தோன்ற, எப்படியாவது அவன் கையில் காலில் விழுந்தாவது இங்கு இருந்து தப்பித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

நடப்பதை கிரகித்துக்கொள்ளவே பரந்தாமனுக்கு முழுதாக ஒரு நிமிடம் எடுக்க, ஆக திட்டமிட்டு தன்னை வளைத்துவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டவர். தான் யார்? தன் உயரம் என்ன? என்று தெரிந்தும் தனது இடத்திற்கே வந்து, தன்னையே அடித்து கீழே தள்ளி, தன் முன்னே அதிகாரத்தோரணையுடன் நிற்கும் ராவணனை வெறிகொண்டு பார்த்தார்.

ராவணனும் பரந்தாமனை தான் பார்த்தான்! மிக மிக அழுத்தமாக தன் பார்வையை அவர் மீது பதித்து அவரது பார்வையில் தெரிந்த வெறியை உள்வாங்கியபடி, அவர் எதிரே இருந்த சோஃபாவில் அமர்த்தலாக வந்தமர்ந்தவன், தன் அருகே நின்றிருந்த சந்துருவிடம் பரந்தாமனை கண்காட்டினான்.

மறுநொடி பரந்தாமன் எழுந்து கொள்ள தன் கரத்தை சந்துரு நீட்ட, அவனை உக்கிரமாக பார்த்தபடி அவனது கரத்தை பிடித்து கொண்டு பரந்தாமன் எழுந்து நிற்க, அப்பொழுது தன் அருகே இருந்த ஒற்றை மர சோஃபாவை தன் காலால் இழுத்து அதை பரந்தாமனை நோக்கி மிதித்துத்தள்ளிய ராவணன் தனது இருக்கையில் நன்றாக தன் தலையை சாய்த்தபடி அமர்ந்து கொண்டு பரந்தாமனிடம் பார்வையாலே நாற்காலியை காட்டினான்.

அதாவது, 'உட்கார்' என்று தன் வார்த்தையால் அல்ல தந்து விழியால் கட்டளையிட்டான். பரந்தாமனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது, ஆனாலும் சூழ்நிலை தனக்கு சாதகமாக இல்லாததால் கோபத்தை காட்டி காரியத்தை கெடுக்க virumbaathu, தன் வாயோரம் வழிந்த குருதியை துடைத்தபடி ராவணன் காட்டிய இருக்கையில் வந்தமர்ந்தவர்,

"சுத்தி வளச்சு பேச விரும்பல நேரடியாவே கேட்குறேன், எவ்வளவு வேணும்?" 'வேண்டியதை கேட்டு வாங்கிக்கொண்டு வந்தவழியே ஓடு *****' என்று தன் மனதில் எண்ணியதை சொல்லாமல், இல்லை இப்போதைக்கு சொல்ல முடியாமல் இவ்வாறு கூறினார்.

அதை கேட்டு முதலில் சத்தமாக சிரித்த ராவணன் பின்பு பரந்தாமனின் முகத்தை கூர்மையாக பார்த்து, "தூக்கி போடுற பணத்தை, வாங்கிட்டு ஓடு நாயேன்னு சொல்றியா பரந்தாமா" என்று நிறுத்தி நிதானமாக கேட்க, தன் மனதில் எண்ணியதை சரியாக கணித்து அவன் கூறியதில் அதிர்ந்தவர், தன் எதிரில் இருப்பவன் தான் நினைப்பது போல அல்ல, தன்னை விட ஆபத்தானவன், அவ்வளவு எளிதில் அவன் கண்ணில் மண்ணை தூவ முடியாது என்று நேரம் கடந்து அறிந்து கொண்டவர்,

"உனக்கு காண்ட்ராக்ட் கொடுத்த ஆளுங்க என்ன டீல் பேசினாங்கன்னு தெரியல, ஆனா நான் உனக்கு ஐம்பது சி தரேன், எவனும் உன்னை மாதிரி ஒரு அடியாளுக்குத் தராத டீல், நான் தரேன் பணத்தை வாங்கிட்டு போயிட்டே இரு" அதிகாரத்துடன் சொல்ல,

"நீ தர்றதெல்லாம் எனக்கு வேண்டாம், நான் கேட்குறதை குடு போயிட்டே இருக்கேன்"

"என்ன டா விளையாடுறியா? அதோட வேல்யூ தெரியுமா டா உனக்கு? ஒவ்வொன்னும் பல கோடி டா முட்டாள், பணம் வேணும்ன்னா கேளு, அதை விட ரெண்டு மடங்கு தரேன், வாங்கிட்டு போ" பரந்தாமனுக்கு எரிச்சல் வந்துவிட்டது, என்ன இவன் இவ்வளவு பணம் தருகிறேன் என்று சொல்லியும் சரக்கு தான் வேண்டும் என்பதில் குறியாகவே இருக்கிறானே! என்ற கோபத்தில் கத்திவிட, உடனே "ஏய்" என்று சீறிய சந்துருவை தன் பார்வையாலே அடக்கிய ராவணன்,

"நீ என்ன என்கிட்ட டீல் பேசுறது? ஹான், உனக்கு கொடுத்த டைம் முடிஞ்சு போச்சு" என்றவன் சந்துருவை பார்க்க மறுகணம் பரந்தாமனின் கரத்தில் அலைபேசி திணிக்க பட்டது.

பின்பு, "உன் ஆளு அந்த ரத்தன பாண்டியனுக்கு கால் பண்ணு, ஒருமணிநேரம் டைம், அதுக்குள்ள மொத்த சரக்கும் என் வண்டியில இருந்திருக்கணும் இல்லைன்னு வை" என்று தன் முதுகில் சொருகியிருந்த துப்பாக்கியை வெளியே எடுத்த ராவணன்,

"இது என்ன, என் கைக்கு வந்தா என்னென்ன செய்யும்ன்னு உனக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன்" என்று ஆர்ப்பாட்டம் இல்லாது எச்சரிக்கை விடுக்க,

"தப்பு பண்ற டா நீ, உன்னை விடமாட்டேன், கொல்லுவேன்" என தோல்வியின் உச்சத்தில் இருந்த பரந்தாமன் சத்தமாக கத்த,

"முடிஞ்சா" என்று நிதானமாக சவால் விட்ட ராவணன் இகழ்ச்சியாக புன்னகைக்க, ஆத்திரத்தில் தன் முகம் சிவக்க அவனை முறைத்த பரந்தாமன், தன் ரத்தம் கொதிக்க ரத்தின பாண்டியனுக்கு விடீயோ கால் மூலமாக அழைப்பு விடுத்தார்.

!!!!!!!!

"என்ன அண்ணன் சொல்றீங்க ஒருத்தன் தான் இருக்கான் அவனை நான் பார்த்துகிறேன்" என்று ரத்தின பாண்டியன் தன் முன்னால் காரில் சாய்ந்தபடி நின்றிருந்த தேவராஜை பார்த்து முறைத்தபடி பரந்தாமனிடம் சொல்ல,

"டேய் என் நெத்தியில துப்பாக்கி வச்சிருக்கான், சொன்னதை செய் ஒருமணிநேரத்துல சரக்கை அவன் சொல்ற வண்டியில ஏத்து" என பல்லைக்கடித்தபடி பரந்தாமன் கட்டளை விதிக்க, கண்டெயினரில் ஏற்ற பட்ட அத்தனை சரக்கும் ராவணனிடம் கைமாற்றப்பட்டது.

சரக்கு கிடைத்தும் சற்று தூரம் அங்கிருந்து தள்ளி வந்த தேவராஜ் சந்துருவுக்கு தகவல் சொல்ல, சந்துருவின் பார்வையில் இருந்தே விடயத்தை புரிந்து கொண்ட ராவணன் துப்பாக்கியை தன் முதுகில் சொருகியபடி அங்கிருந்து செல்வதற்காக ஒரு அடி எடுத்து வைத்தபொழுது, பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வேகமாக வந்த அஜூதியா ராவணனின் வலிய கரத்தை உறுதியாக பிடித்திருந்தாள்.

அஜூதியா இருந்த கோலம் கண்டு என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட சந்துரு திடுக்கிட, ராவணனின் கண்கள் கனலென தகித்தது.

"சார் ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க, இந்த ஆள் என்கிட்ட தப்பா நடக்க பார்க்குறாரு, என்னை கூட்டிட்டு போங்க ப்ளீஸ் உங்க கால்ல வேணும்னாலும் விழுறேன் ப்ளீஸ்" என்ற அஜூத்தியா எதைப்பற்றியும் யோசிக்காது அவனது காலில் விழுந்து கெஞ்ச, அவன் அப்படியே சிலை போல நிற்கவும் எங்கே விட்டுவிட்டு போய்டுவானோ என அஞ்சியவள், "ப்ளீஸ் சார்" என்று மீண்டும் கெஞ்சினாள். ஆனால் அவன் அவளை பார்க்க கூட இல்லை அவன் பார்வை மொத்தமும் பரந்தாமன் மீது இருக்க, ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள சரக்கு கைவிட்டு போன கோவத்தில் இருந்த பரந்தாமன் அஜூதியா தப்பி செல்ல பார்ப்பதை கண்டு இன்னும் வெறியனாவர்,

"ஏய் இங்க வா டி" என்று கத்தியபடி அஜூதியாவின் பின்னந்தலை கூந்தலை கொத்தாக பற்றி இழுத்து தூக்கி நிறுத்தியவர்,

"ஏய் என்ன? கிளம்புங்க டா. அதான் சரக்கு வந்துருச்சுல கிளம்புங்க, உங்களுக்கு ஒருநாள் இருக்கு டா" என ராவணன் மற்றும் சந்துருவை பார்த்து கூறிய பரந்தாமன், அஜூதியாவின் கன்னத்தை வலிக்க பிடிக்க,

"சார் ப்ளீஸ்" என ராவணனை பார்த்து தன் கரம் நீட்டியப்படி கெஞ்சினாள். அவன் தன்னை காப்பற்றுவானா!? என்ற ஏக்கத்துடன் பெண்ணவள் அவனை பார்க்க, ம்ஹூம் இப்பொழுதும் அவன் அவளை பார்க்க வில்லை பரந்தாமனை மற்றும் தான் பார்த்து கொண்டிருந்தான்.

நிர்மலமான ராவணனின் முகம் அவனின் உணர்வுகளை பிரதிபலிக்க மறுக்க, அவன் என்ன நினைக்கிறான் என்ன செய்ய போறான் என சந்துருவுக்கே கணிக்க முடியாது போக, அஜூதியா பயந்தேவிட்டாள். சற்று நேரத்திற்கு முன்பு வரை ராவணனை தன்னை ரச்சிக்க வந்த தேவனாக எண்ணி நம்பிக்கையுடன் இருந்தவள், இப்பொழுது அவனது உணர்வுகளற்ற முகம் கண்டு அவன் தன்னை காப்பற்றுவான் என்கிற நம்பிக்கையை மொத்தமாக இழந்திருந்தவள், பயத்தில் கண்ணீர் வடிய தன் கண்களை மூடி அப்படியே நின்ற நொடி, அஜூதியாவின் மெல்லிய கரங்கள் ராவணனின் வலிய கரங்களுக்குள் சிறைப்பட்டது.

அப்பொழுது பெண்ணவள் சட்டென்று கண்களை திறந்து பார்த்தாள், இந்த முறை அவனும் அவளை தான் பார்த்தான். அவனது பார்வை அவளை ஆழ துளைத்து அவளுக்குள் எதையோ கடத்திக்கொண்டிருந்தது. ஆனால் அதையெல்லாம் உணர்ந்து, புரிந்துகொள்ளும் நிலையிலா அவள் இருந்தாள்? தப்பித்தால் போதும் என்கிற மனநிலையில் இருந்தவளுக்கு வேரெதுவும் கருத்தில் பதியவில்லை.

எனவே அவள் அசையாமல் அவனை பார்த்தபடி நிற்க, தன் கரத்திற்குள் இருக்கும் அவளது கரத்திற்கு அழுத்தம் கொடுத்தவன், "வா" என்பது போல தன் கண்ணையசைத்து அவளது கரத்தை பிடித்திழுத்து கொண்டு நடக்க, பரந்தாமனின் கரம் அஜூதியாவின் கரத்தை விடாமல் பிடித்திருக்க, அவன் பிடியில் இருந்த தன் கரத்தை விடுவிப்பதற்காக பெண்ணவள் கடுமையாக முயற்சித்து கொண்டிருந்தபொழுது, தன் உடம்பில் தோட்டாபாய பரந்தாமன் தரையில் விழுந்தார்.

சிறையெடுப்பானா ??
 

ராவணனே என்னை சிறை எடு 4

1.jpg
நொடிப்பொழுதில் நடந்தேறிய சம்பவத்தால் மூச்சடைத்துப்போன அஜூதியாவின் உடல் நடுங்கவும், அவளைப் பார்த்த ராவணன் அவளது கண்களில் தெரிந்த பயத்தை புரிந்துகொண்டு, தன் துப்பாக்கியை முதுகில் சொருகிவிட்டு,

"ஹே ஈஸி, ரிலாக்ஸ் ஹீ இஸ் ஓகே, ஜஸ்ட் மயக்கமாகிருக்காரு அவ்வளவு தான்" வாழ்க்கையில் இதுவரை யாருக்கும் எதற்கும் பெரிதாக விளக்கம் கொடுத்து பழகிராதவன் அஜூதியாவிடம் எதோ குழந்தைக்குச் சொல்லுவது போல, அதுவும் புன்னகையுடன் கதை சொல்ல, அதைப் பார்த்த சந்ருவால் அதிர மட்டும் தான் முடிந்தது.

தான் சொன்னபிறகும் தனது கரங்களுக்குள் இருந்த பெண்ணவளின் கரங்கள் நடுங்குவதை உணர்ந்த ராவணன் சந்ருவிடம் கண்காட்ட, வேகமாகக் கீழே பேச்சு மூச்சின்றி கிடந்த பரந்தாமனின் அருகே சென்ற சந்ரு, அவனது நாடியை பரிசோதித்து விட்டு,

"உயிர் இருக்கு, மயக்கமா தான் இருக்காரு" என்று கூறினான்.

அவன் கூறியதும் நான் சொன்னேன்ல என்பது போல அஜூதியாவை பார்த்த ராவணன் அவளை தன்னுடன் வருமாறு செய்கை செய்ய, ஆனால் அவளோ இன்னும் ஒருவித தயக்கத்துடன் அதே இடத்தில தன் கண்களை சுழலவிட்டபடி நிற்பதை பார்த்து எரிச்சலடைந்தவன்,

"இப்போ என்னாச்சு?" என்று சற்று காட்டமாகவே கேட்டுவிட, முதுகு பக்கத்தில் கிழிந்திருந்த ஆடையை தன் ஒற்றை கரத்தால் பிடித்துக்கொண்டு, பரந்தாமன் கையில் இருந்த துண்டை எப்படி எடுப்பது என்று பார்த்து கொண்டிருந்த அஜூதியா அவன் கத்தவும் அவனிடம் எவ்வாறு தன் தவிப்பிற்கான காரணத்தை கூறுவது என்று புரியாமல் மிகவும் தயங்கினாள்.

என்ன தான் தன் மானத்தை காத்திருந்தாலும் அவனும் ஒரு ஆடவன் தானே, அவனிடம் எப்படி கூறுவது என்று புரியாமல் விழித்தவளுக்கு அவனது அதட்டலிலும் அவன் பார்த்த பார்வையிலும் கண்ணீர் வந்துவிட, அவளது கலங்கிய விழிகளை எதிர்கொண்ட ராவணனின் மனதிற்குள் ஏதோ செய்தது.

"ப்ச்" என தன் நெற்றியை நீவியவன், "என்னாச்சு" இந்த முறை மிகவும் பொறுமையாக அவளிடம் வினவினான்.

ஆனால் அவளோ, "அது வந்து அது" என சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டிருக்க, நிதானத்தை இழந்து கொண்டிருந்த ராவணன் பல்லை கடித்தான்.

இவ்வளவு நடந்த பிறகும் இங்கு நிற்பது தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே எவ்வளவு சீக்கிரம் இவளை அழைத்து கொண்டு இங்கு இருந்து செல்கிறார்களோ அவ்வளவு நல்லது! ஆக துரிதமாக செயல்பட வேண்டிய இந்த நேரத்தில், நிலைமையை உணராமல் அஜூதியா இவ்வாறு செய்வது ராவணனின் கோபத்தை அதிகப்படுத்த, தன் பொறுமையை இழந்தவன்,

"இங்க உனக்கு வேற எதுவும் வேலை இருக்கா?" நெருங்கி வந்து ஆத்திரத்துடன் வினவினான்.

அஜூதியாவின் முகமெல்லாம் பயமும், பதட்டமும் சூழ்ந்துகொள்ள, "இல்லை" தலையை மட்டும் இடவலமாக அசைத்தாள்.

"இவன் உனக்கு சொந்தமா?" பரந்தாமனை காட்டி வினவியவனது குரலில் தன்னை நம்பவில்லையோ என்ற கோபம் எட்டி பார்க்க, அவளோ கன்னத்தில் கண்ணீர் வடிய இல்லை என்று மீண்டும் தலையை அசைத்தாள்.

"அப்போ என் கூட வர்றதுக்கு என்ன?" அவள் பதில் சொல்ல வில்லை ஆனால் அவளிடம் கண்ணீரும் நடுக்கமும் இன்னும் அதிகமாக, அவனுக்கு நிஜமாகவே ஒன்றுமே புரியவில்லை.

"சொன்னா தானே தெரியும்" கட்டுப்படுத்தியும் அவனது குரலில் ஆத்திரம் எட்டி பார்த்தது. அவளுடைய கண்கள் இப்பொழுது அவனை தான் நோக்கி இருந்தது. ஆனால் பார்வை அவனிடம் இல்லை அது கீழே இருக்க,

"என் டிரஸ்" இதற்கே அவள் உளறினாள்.

"ஏய் என்ன டிரஸ்? முதல்ல வா" அவளது கரத்தை பிடித்து கொண்டு செல்ல முயன்றான்.

"இல்லை ப்ளீஸ்" பதற்றத்துடன் விலகினாள்.

இப்பொழுது அவனது பார்வை அவளை நிதானமாக ஆராய்ந்தது, அவளது இடது கரம் பின்னால் இருக்க, தன் வலது கரத்தால் முன் ஆடையை பிடித்திருக்கின்றாள், அவளின் பார்வை கீழே பரந்தாமனின் கரத்தில் இருந்த பூந்துவாலையில் நிலைத்திருக்க, இப்பொழுது அவளது நிலையை தெளிவாக புரிந்து கொண்டவனுக்கு தன் மீதே கோபம் வர, தன் முகத்தை அழுத்தமாக தேய்த்து தன்னை நிலை படுத்தி கொண்டவன்,

"ஹே ரிலாக்ஸ் எல்லாம் சரியாகிடும்" என அவளது பதற்றத்தை குறைக்க முயன்றான். ஆனால் பெண்ணவளின் கண்கள் மேலும் கலங்கவும் , ஒருகணம் யோசித்தவன் சட்டென்று தன் மேல் சட்டையை கழட்டி அவளிடம் நீட்ட, அவள் வாங்க தயங்கவும் அதை அவள் மீது தன் விரல் நுனி கூட படாது போட்டுவிட்டவன், அவளை பார்த்துக்கொண்டே "டவல்ல ப்ளட் மார்க்ஸ் இருக்கு அது வேண்டாம்" என்று சொல்ல, அதன் பிறகு அவள் மறுக்கவில்லை. சரியென்பதாய் தலையசைத்து அவனது சட்டையை இறுக்கமாக அவள் பிடித்து கொள்ள,

"இப்போ போலாமா" என்று அவன் கேட்கவும், மந்திரத்திற்கு கட்டுப்பட்ட பதுமை போல அவனுடன் அவள் கிளம்பினாள்.

அப்பொழுது போகும் முன் வெளியே நின்ற சந்ருவை பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்த ராவணன், "க்ளியர் பண்ணிடு" என்று வாயசைத்துவிட்டு செல்ல, சரி என்பதாகத் தன்தலையசைத்த சந்ரு தன் சகாக்களுடன் ராவணன் சொல்லியதை செயல்படுத்தும் வேலையில் இறங்கினான்.

விக்கியின் கரத்தில் கார் மிதமான வேகத்தில் சாலையில் சென்று கொண்டிருக்க, விழிகளில் இருந்து வழியும் கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல், தான் அணிந்திருந்த ராவணனின் மேல் சட்டையை இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தவளின் கரங்கள் மெலிதாக நடுங்க, அவளது பார்வை சாலையை வெறித்திருந்தது.

அந்த காமுகனின் பிடியில் இருந்து தப்பித்தாயிற்று! எல்லாம் முடிந்துவிட்டது! இதோ அவனை விட்டு வெகு தூரம் வந்தாயிற்று! ஆனாலும் பரந்தாமனின் முகம் அவளது எண்ண அடுக்கில் இருந்து நீங்க மறுக்க நடந்த ஒவ்வொன்று அவள் முன் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை அச்சுறுத்தி கொண்டிருக்க, இனி எந்த பிரச்சனையும் இல்லை என மூளைக்கு புரிந்தாலும், மனதளவில் அவளால் பயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. போதாக்குறைக்கு துப்பாக்கியுடன் திரியும் இவர்களை பார்த்தும் உள்ளுக்குள் உதறலாக இருக்க தன் நிலையை எண்ணி வருத்தத்தில் இருந்தவளை அவளது மனசாட்சி,

'துப்பாக்கியுடன் திரிந்தாலும், இவன் உனக்கு உதவவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்பதை மறந்துவிடாதே!' என்று சொல்ல, மனசாட்சியின் கூற்றை எண்ணும் பொழுதே அவளது உடல் ஒருமுறை அதிர்ந்தடங்க, கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள், எதில் இருந்தோ வெளிவந்தவள் போல, கன்னத்தில் வழியும் நீரை துடைத்துவிட்டு நிமிர்ந்து ராவணனை பார்க்க, முன் சீட்டில் அமர்ந்திருந்தபடி கண்ணாடி வழியாக அவனும் அவளை தான் பார்த்தான்.

அழைத்து, பெயரை கேட்டு, ஒரு நன்றியாவது கூறிவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் தான் அவள் அவனை பார்த்தாள். ஆனால் அவன் விழிகளை நேருக்கு நேர் சந்தித்த பொழுது, என்ன செய்வதென்று? அவளுக்கே தெரியவில்லை, தன்னுள் ஊடுருவி தன்னை ஏதோ செய்யும் அவனது பார்வையை கண்ட பிறகு பேசவந்ததை மறந்தவளாக அப்படியே அவனை பார்த்தபடியே பெண்ணவள் அமர்ந்திருக்க, அவளை ஒருகணம் ஆழமாக பார்த்துவிட்டு விக்கியிடம் காரை நிப்பாட்டும் படி கூறிய ராவணன், கார் நின்றதும் தன் பக்க கதவை திறந்து, கீழே இறங்கி, வேகமாக சாலையை கடந்து, மூடும் தருவாயில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்தான்.

கறுப்போ வெள்ளையோ நிறங்கள் எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை, தொங்கவிடப்பட்டிருந்த ஹங்கரில், அணிவதற்கு ஏதுவான ஒரு உடையை, தனது நிமிட நேர ஆராய்ச்சியில் வேகமாக கையில் எடுத்தவன், பில் கூட போடாது, பர்ஸை திறந்து தன் கையில் வந்து பணத்தை கடையில் இருந்தவரிடம் கொடுத்துவிட்டு, நொடி பொழுதில் சாலையை கடந்து காரில் ஏறினான்.

அப்பொழுதும் அஜூதியாவின் கரங்கள் அவனது சட்டையை விடாமல் இறுக்கமாக பிடித்திருக்க, அழுத்தமாக மூடியிருந்த அவளது விழிகளில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்து கொண்டிருந்தன.

மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளாள்! அதீத வேதனையில் இருக்கிறாள்! என்பது புரிந்தது. எப்படியாவது அவளது வேதனையை நீக்கி, இந்த பாதிப்பில் இருந்து அவளை வெளியே கொண்டு வர வேண்டும், என்று உறுதியாக நினைக்கும் தன் மனதை நினைத்து அவனுக்கே வியப்பாக தான் இருந்தது. எனினும் என்ன நேர்ந்தாலும் அவளை முழுவதும் இந்த சிக்கலில் இருந்து வெளி கொண்டு வரவேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்து, அடுத்து தான் என்ன செய்ய வேண்டும்? என மனதிற்குள் குறித்து கொண்டு,

"ம்ம் ஹெலோ" சொடக்கிட்டு அவளை அழைத்தான். திடிரென்று கேட்ட அவனது குரலில் திடுக்கிட்டு விழித்தவள்,

"என்ன?" என காற்று குரலில் அவனிடம் கேட்டாள்.

"சேன்ஜ் பண்ணிக்கோ" என்று அவளிடம் கவரை நீட்டியவன், காரில் இருந்து இறங்க, என்ன இது என்று கேட்க வந்தவள் அவனது குரலில் தெரிந்த கட்டளையில் மறுக்காமல் வாங்கிக்கொண்டு, கவரை பிரித்து பார்த்தாள். நீல நிறத்தில் ஆடை ஒன்று இருந்தது. தனக்காக தான் வாங்கி வந்திருக்கின்றான் என்று புரிந்து கொண்டவள், நன்றியுணர்வுடன் அவனை பார்த்து,

"தேங்க்ஸ்" என்றாள்.

"ம்ம்" லேசாக தலையசைத்தவன்,

"கண்ணாடியை ஏத்தி விட்டுட்டு சேன்ஜ் பண்ணு, நாங்க அங்க நிக்கிறோம், முடிச்சிட்டு கூப்பிடு" என தன் கை கடிகாரத்தை பார்த்து விட்டு அங்கிருந்து தள்ளி செல்ல போனவன், மனதிற்குள் ஏதோ தோன்றவும் நின்று திரும்பி அவளை பார்த்தான். இப்பொழுது மீண்டும் அவளது முகத்தில் சிறு பதட்டம், தான் அணிந்திருந்த தன் மேல் சட்டையை இறுக்கமாக பிடித்து கசக்கியபடி, மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தாள்.

"என்னாச்சு?" இப்பொழுது நிதானமாக கேட்டான், நிமிர்ந்து அவனை பார்த்தவளின் முகம் தயக்கத்தை பிரதிபலிக்க, அரை நொடி சிந்தனையில் காரணத்தை புரிந்து கொண்டவன், விக்கியை அழைத்து அவனின் உதவியுடன் காரின் கவர் கொண்டு காரை மூட துவங்கினான்.

அப்பொழுது அஜூதியாவின் விழிகள் ஆச்சரியத்துடன் அவனை பார்த்தது! எதுவும் சொல்லாமலே பாவையவளின் ஒற்றை பார்வை வைத்தே அவள் நிலையை புரிந்து கொண்டு அவன் செயலாற்றுவதை, பார்க்க பார்க்க பெண்ணவளின் உள்ளத்தில் இனம் புரியாத இதம் ஒன்று மிதமாக அவளுள் பரவி, அவளது காயம் பட்ட மனதை மெதுவாக வருடியது போன்ற ஒரு பிரம்மை, அவள் கொண்ட பாரத்தை லேசாக குறைக்க, பெண்ணவளின் இதயம் மெல்ல மெல்ல நழுவிக்கொண்டிருந்தது.

"விக்கி உன் சைட் ஃபர்ஸ்ட் கீழ இறக்கு" என்ற ராவணன் தன் வலது பக்கத்தில் உள்ள கவர் எதிலோ சிக்கிக்கொண்டு இழுக்க இழுக்க கீழே வராமல் இருக்கவும், "ப்ச்" என்று தன் பல்லை கடித்தபடி கவரை பிடித்து கொஞ்சம் வேகமாக கீழே இறக்கியவன், ஏதோ தோன்றவும் நிமிர்ந்து பார்த்தான்.

பெண்ணவளின் பார்வை தன் மீதே நிலைத்திருப்பதை கண்டான்! ஆச்சரியமாக இருந்தது!

'கொஞ்ச நேரத்திற்கு முன்பு, அழுது கொண்டு, தன்னை பார்க்கவே பயந்து, பேசவே தயங்கி கொண்டிருந்த பெண்ணா இவள்! நிமிட பொழுதில் அவளது விழிகளில் தான் எவ்வளவு மாற்றம்?! எத்தனை ஒளிமிக்க கூர்மையான விழிகள்!' அவனுக்கு வியப்பாக இருந்தது.

'இதுவோ கெண்டை விழிகள் ம்ஹூம் இல்லை வேல் விழிகள் ம்ஹூம் அவளது விழிகளுக்கு எதை உதாரணமாய் கூறுவது? அதன் அழகை எதை கூறி வர்ணிப்பது என்ற ஆராச்சியில் இறங்கியவனை, வர்ணனைகளை தாண்டி விஞ்சி நின்ற அவளது விழிகளின் எழில், கருந்துளையாக ஈர்த்து எங்கோ இழுத்து செல்வதை உணர்ந்தவன், முயன்றும் அதில் இருந்து மீளமுடியாது தவிக்கும் தன் நிலையை எண்ணி மிகவும் திணறினான்.

பின்பு சில நொடிகள் தீவிர முயற்சியின் முடிவில், மிக சிரமப்பட்டு அவளது விழிகளில் இருந்து தன் பார்வையை அகற்றி, காரை கவர் கொண்டு முழுவதும் மூடிவிட்டு அங்கிருந்து தள்ளி வந்து நின்றவனின் இதயம் வேகமாக துடிக்கவும், கண்களை இறுக்கமாக மூடி ஆழமாக மூச்சிழுத்து வெளியிட்டவன், அஜூதியா உடைமாற்றிவிட்டு காரின் கதவை தட்டவும், மீண்டும் காரை நெருங்கிய பொழுது சலனப்பட்டிருந்த தன் மனதை முழுவதுமாக தனது கட்டுக்குள் கொண்டு வந்திருக்க,

இப்பொழுது பெண்ணவளும் கூட சில மணிநேரத்திற்கு முன்பு இருந்தது போல அதீத பயத்தில் எல்லாம் இல்லை, அதற்காக பயமே இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது, நடந்த சம்பவத்தின் தாக்கம் அவளது இதயத்தின் ஓரம் இருக்க தான் செய்கிறது. ஆனால் முன்பு போல அதற்காக அவள் கண்ணீரெல்லாம் வடிக்கவில்லை, தன்னை காப்பற்றிய இவன் நல்லவனோ கெட்டவனோ என்கின்ற ஆராய்ச்சியை விட்டுவிட்டவள், இவன் அந்த பரந்தாமனை போல பெண்களை வேட்டையாடும் மிருமகம் இல்லை என உறுதியாக ராவணனை உறுதியாக நம்பியவள், எப்படியோ தன் மானமும், உயிரும் காப்பாற்றப்பட்டதே அதுவே போதும், என்று தனக்கு தானே தைரியம் கொடுத்து தன்னை தானே தேற்றியவள், பதற்றத்தை விடுத்து சிறு நிம்மதியுடன் சாலையை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்பொழுது,

"உங்க வீடு எங்க இருக்கு?" என ராவணன் உத்தரவின்படி விக்கி அவளிடம் வினவ, அதற்கு அவள் பதில் கூறும் முன்,

"ஆஷ்ரமத்துல உனக்கு என்ன வேலை?" தன் கட்டுப்பாட்டையும் மீறி ராவணன் கேட்டுவிட, ஆனால் அஜூதியா அவனது அழுத்தமான குரலை கேட்டு பதற்றப்படவும் இல்லை, என்ன பதில் கூறுவது என தயங்கவும் இல்லை,

"நான் அனாதை, சின்ன வயசுல இருந்து அங்க தான் வளர்றேன்" என்று மிக இயல்பாக கூறினாள்.

அப்பொழுது அதை கேட்டு, "அட நம்ம கேஸ் தான்" என்ற விக்கி ராவணன் பார்த்த ஒரு பார்வையில் அமைதியாகிவிட, இவர்கள் யார் என்று கேட்டு, நன்றி சொல்லிவிட வேண்டும் என்று வெகு நேரமாக எண்ணிக்கொண்டிருந்த அஜூதியாவும், ராவணன் விக்கியை பார்த்த பார்வையையும் அதில் இருந்த அதட்டலையும் கண்டு அவனிடம் எப்படி பேசுவது என்று தயங்கிக்கொண்டே பேசாமல் அமர்ந்துவிட, சில மணிநேர பயணத்திற்கு பிறகு கார் நிற்கவும், தனது ஆஷ்ரம பலகையை பார்த்தவள் காரில் இருந்து இறங்காது அப்படியே அமர்ந்திருக்க, அவள் இறங்காததை உணர்ந்த ராவணன்,

"நீங்க போக வேண்டிய இடம் வந்தாச்சு" என்று அவளை திரும்பி கூட பார்க்காது கூற, அவனது குரலில் தெரிந்த அழுத்தத்தில் காரில் இருந்து இறங்கியவள், கார் கிளம்பவும், வேகமாக அவன் அமர்ந்திருந்த பக்கம் சென்று,

"நீங்க உங்க பேரு உங்க கிட்ட பேசணும்" என்று தயத்துடன் நா குழற அவள் ஏதேதோ ஆரம்பிக்கும் முன்பே, தன் கரம் உயர்த்தி அவளை தடுத்தவன்,

"மறந்திரு! மொத்தமாக எல்லாத்தையும் மறந்துட்டு, உனக்கான வாழ்க்கையை சந்தோஷமா துணிவோட வாழு" என இன்று நடந்த சம்பவத்தையும் தன்னையும் சேர்த்து மறந்துவிடு என்று இரு பொருள் பட கூறிவிட்டு, அவள் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் சிறு புள்ளியாய் அவள் பார்வையில் இருந்து மறைந்திருந்தான்.


ராவணன் சிறையெடுப்பானா?
For comments please click here
 
Last edited:

ராவணனே என்னை சிறை எடு 5

1.jpg

"புல்லட் ஹார்ட் பக்கத்துல பட்டிருக்கு , ப்ளட் லாஸ் வேற அதிகமா இருக்கு உயிர் பிழைக்கிறது கஷ்டம் சந்ரு" கழுத்தில் செத்தோஸ்க்கோப் அணிந்திருந்த மருத்துவர் சந்ருவிடம் கூறினார்.

"இல்லை டாக்டர் பையாவோட ஆர்டர், ஏதாவது பண்ணுங்க ஆனா சாகக் கூடாது" என்று சந்ரு பிடிவாதமாக கூறவும் தன் புருவத்தை நீவியவர்,

"என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்றேன்" என்றுவிட்டு உள்ளே சென்றார்.

அஜூதியாவை ஆஷ்ரமத்தில் இறக்கிவிட்ட பிறகு, தன் வீட்டிற்கு வந்த ராவணன் நேராக தன் அறையின் குளியலறைக்குள் புகுந்து, தனது முகத்தை நான்கைந்து முறை தண்ணீரால் வேகமாக அடித்து கழுவிவிட்டு நிமிர்ந்து கண்ணாடியை பார்த்த பொழுது, மேல் சட்டையின்றி போட்டிருந்த கருப்பு நிற ஆம்கட் வெஸ்டுடன் தான் நிற்பதை கவனித்தவனின் மனம் எதை நினைக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருந்ததோ அதை மீண்டும் நினைக்க துவங்க, முகத்தை கூட துடைக்காது ஜன்னல் ஓரம் வந்து கண்களை மூடி அமர்ந்தான்.

ஜில்லென்ற தென்றல் காற்று அவனது ஈர வதனத்தில் வந்து வந்து மோதி சிலிர்ப்பை உண்டாக்க, தன் அறையில் தனிமையாக அமர்ந்திருந்த ராவணனின் மனம் முழுவதையும் அஜூதியாவே ஆக்கிரமித்திருக்க, இனி இது தனக்கு வேண்டாம் என்று தன் அறையில் அவன் ஒரு ஓரமாக போட்டிருந்த பழைய கிட்டார் இன்று வெகு நாட்கள் கழித்து, குழந்தையாக அவனின் கரங்களில் தவழ்ந்தபடி அவன் விரல் அசைவிற்கு இணங்க இசைத்து கொண்டிருக்க, கண்களை மூடி அமர்ந்திருந்தபடி கடந்த கால நிகழ்வுகளை, இதழில் மெல்லிய புன்னகை மலர, நினைத்துக் கொண்டிருந்தவனின் மனதில் இன்று நடந்த நிகழ்வுகளும் ஒவ்வொன்றாக வரிசை வகுக்க, முகம் மலர அமர்ந்திருந்தவனின் வதனம் திடிரென்று கடுமையாக மாறியது.

அப்பொழுது பார்த்து சந்ருவிடம் இருந்து அழைப்பு வர, சில நொடிகளில் அழைப்பை ஏற்றவனின் முகம், எதிர் தரப்பில் என்ன சொல்ல பட்டதோ அதில் இன்னும் ஆக்ரோஷமாக மாற, அலைபேசியையும் கிட்டாரையும் கீழே வைத்துவிட்டு தனது அறையில் இருந்து வெளியேறி, கீழே வந்து, பேஸ்மெண்டில் இருக்கும் சவுண்ட் ப்ரூஃப் அறையின் உறுதியான கதவை வேகமாக திறந்து கொண்டு, கொலைவெறி கண்களில் தாண்டவமாட உள்ளே நுழைந்தான் ராவணன்.

அவன் உள்ளே நுழைந்ததுமே அவனை நோக்கி வந்தது தேவராஜ் தான், சரக்கைப் பத்திரப்படுத்திவிட்டு அவனும் அங்கே வந்திருந்தான்.

"சரக்கை சேஃப் பண்ணியாச்சு பாய்" ராவணனின் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி நடந்துகொண்டே கூறினான்.

"ம்ம்" அவ்வளவு தான் அதற்கு மேல் அவன் ஒருவார்த்தை பேசவில்லை. தேவராஜும் மெளனமாக அவனுடனே நடந்தான்.

சில தூரம் நடந்த பிறகு மீண்டும் ஒரு சிறிய கதவு தெரிய, ராவணன் திறப்பதற்குள் தேவராஜ் கதவைத் திறக்கவும் உள்ளே சென்றவன், அங்கே கட்டிலில் சுவாசத்திற்கான கருவி பொறுத்தப்பட்டிருக்க மயக்கத்தில் கிடந்த பரந்தாமனை அழுத்தமாகப் பார்த்தபடி அவன் அருகே வந்து நின்றவன்,

"எப்போ முழிப்பான்?" எனச் சந்ருவை பார்த்து வினவினான்.

அதற்கு அவன், "ஒருமணிநேரம் ஆகும் பாய்" என்று சொல்லவும், பரந்தாமனை வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தான் ராவணன்.

பொதுவாகவே ராவணன் கத்தி கோபப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் ரகமெல்லாம் கிடையாது. எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் முடிந்தளவு நிதானமாகவே செயல்படுபவனின், இந்த நிமிட வேகமும், அவன் கண்களில் இருக்கும் வெறியும், அவனது சகாக்களுக்கே புதிதாக இருக்க, அதிலும் பரந்தாமனை சுடாமலே அஜூதியாவை காப்பாற்றி வர முடிந்திருந்தும், ஏன் ராவணன் அவனை சுட்டான்? சரி அவனை சுட்ட பிறகு ஏன் இப்பொழுது காப்பாற்றி வைத்திருக்கிறான்? என இப்படி பல கேள்விகளுக்கு காரணம் புரியாமல் அவர்கள் குழம்பி நிற்க, ராவணனை நன்றாக கணித்து வைத்திருக்கும் சந்ருவோ அவனது செயல்பாட்டிற்கான காரணம் தெரிந்தும், யாரிடமும் எதுவும் வாய் திறக்கவில்லை. நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அவன் இடும் கட்டளைகளை மற்றும் நிறைவேற்றிக்கொண்டிருந்தவன், மனதிற்குள் ராவணனும் அஜூதியாவும் எப்படியாவது இணைந்துவிட வேண்டும் என மனதார விரும்பினான்.

ராவணனும் அவனது ஆட்களும் திரும்பி விட்டனர், ஆனால் சரக்கு மட்டும் இன்னும் வந்து சேரவில்லை என்னும் செய்தி வரதனின் தமயன் விக்ரமின் காதுக்கு எட்டியபொழுது மிகவும் கொந்தளித்தவன், அதை தாமதிக்காமல் வரதனிடம் சென்று கூற, அவன் சொன்னதை நிதானமாக கேட்ட வரத பெருமாள் அடுத்து அழைத்தது என்னவோ ராவணனுக்கு தான். அழைப்பு போய் கொண்டே இருந்ததே தவிர, அவன் எடுக்கவே இல்லை. அவன் எடுக்காததும் தேவ்ராஜ்க்கும், சந்ருவுக்கு அவர் மாறி மாறி அழைக்க அவர்களும் எடுக்காது போக, அது வரதனின் கோபத்தை பன்மடங்காக தூண்டிவிட்டது.

பரந்தாமன் மீதிருந்து தன் பார்வையை அகற்றாது நின்றிருந்த ராவணனின் அருகே வந்த தேவராஜ்,

"பாய் வரதன் கால் மேல கால் பண்ணிட்டே இருக்காரு, சரக்குக்காக தான் இருக்கும். நான் வேணும்ன்னா சரக்க கொடுத்துட்டு வரட்டுமா?" என்று ஆர்வத்துடன் கேட்க, திரும்பி அவனை பார்த்தானே ஒரு பார்வை தேவ்ராஜ்க்கு முதுகுத்தண்டு சில்லிட்டு உடம்பெல்லாம் ஒருமாதிரி ஆகிவிட, தேவராஜை தொடர்ந்து அனைவரையும் ஒருமுறை அதே பார்வை பார்த்த ராவணன்,

"நான் சொல்ற வரை சரக்கு எங்கையும் போக கூடாது" என்றான் ஆனால் குரலையெல்லாம் உயர்த்தவில்லை இருந்தும், அவனது குரலும் அதில் இருந்த அழுத்தமும் அனைவருக்குள்ளும் கிலியை பரப்பியது.

"பார்த்தியா அண்ணா உன் ஃபோனை கூட எடுக்க மாட்டிக்கிறான். நான் தான் சொன்னேன்ல அவன் சரி இல்லைன்னு திமிரு பிடிச்சவன்" என விக்ரம் பல்லை கடித்தபடி வரதனிடம் சீறிக்கொண்டிருந்தான். ஆனால் வரதன் எதுவும் பேச வில்லை நிமிர்ந்து அமைதியாக விக்ரமை பார்த்தவன், "அங்க என்ன நடந்துச்சுன்னு நாம கண்காணிக்க அனுப்பின ஆள்ட்ட விசாரி" என்று மட்டும் கூறினார்.

"நீ கேப்பன்னு தெரியும் அண்ணன், அதான் முன்னாடியே பேசிட்டேன், இப்போ வந்திருவான்" என்று சொல்லும் பொழுதே அவர்களை நோக்கி வந்த கட்டுமஸ்தான இளைஞன் ஒருவன் வரத பெருமாளை பார்த்து வணங்கிவிட்டு விக்ரமை பார்க்க,

"இவன் தான் அண்ணன் நாம அனுப்புனா ஆளு" என வரதனின் காதில் விக்ரம் சொல்லவும், அவனை ஆராய்ந்த வரதன் அவனிடம், "சரக்கு என்னாச்சு?" என்றார்.

"சரக்கு ராவணன் கிட்ட தான் இருக்கு ஐயா" என்றதுமே வரதனின் முகம் கோபத்தில் நெருப்பாய் தகிக்க,

"அது மட்டும் இல்லை ஐயா" என தொடர்ந்த அந்த ஆடவன், "ராவணன் கூட ஒரு பொண்ணும் கார்ல இருந்துச்சு, அதுக்கப்புறம் அவன் கூடவே ஒருத்தன் இருப்பானே சந்ரு, அவனும் இன்னும் கொஞ்ச பேரும் சேர்ந்து அந்த பரந்தாமனை தூக்கி கார்ல போட்டு கொண்டு போனாங்க, நான் கண்காணிச்ச வரை இவ்வளவு தான் ஐயா எனக்கு நடந்துச்சு" என்றான்.

ராவணனுடன் ஒரு பெண்ணும் இருந்தாள், என்பதை கேட்டதும் ஆச்சரியத்துடன் அந்த ஆடவனை பார்த்த விக்ரம் அவனிடம்,

"யாரது?" என்று ஆர்வத்துடன் வினவ,

"எனக்கு தெரியாது அண்ணன், இருட்டுல முகம் தெளிவா தெரியல" என்றவன் விடைபெறுவதற்காக அவர்களை பார்க்க, அவனை செல்லுமாறு தன் தன் கரம் அசைத்து வரதன் செய்கை செய்யவும் இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு, அந்த ஆடவன் சென்ற மறுநொடி,

"சரக்கை கையில வச்சிட்டு நம்ம கிட்ட தரவும் இல்லை, ஃபோன் போட்டாலும் எடுக்க மாட்டிக்கிறான், நமக்கு எதிரா ஏதோ பண்ணிட்டு இருக்கான் அண்ணா. இவனை விட கூடாது, முதல்ல அந்த பொண்ணு யாருன்னு கண்டு பிடிக்கணும்" என தீவிரமாக கூறிய விக்ரமின் கன்னத்தில் ஓங்கி அறைந்த வரதபெருமாள்,

"முட்டாள்! சரக்கையும் தராம, பரந்தாமனையும் ஏன் தூக்கியிருக்கான்னு நான் குழம்பி போய் இருக்கேன் ஆனா உன் புத்தி பொண்ணு பின்னாடியே போகுது? ம்ம் தொலைச்சிடுவேன் வந்து வண்டியெடு" என சீற்றத்துடன் கூறிய வரதனின் கார் புயலென ராவணனின் கோட்டைக்குள் நுழைந்தது.

நொடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் நேரமாகி, கடந்த பிறகு மெல்ல கண்விழித்த பரந்தாமன், முழு சுய நினைவை அடைந்த பொழுது, மரநாற்காலியில் சோர்வாக அமர்ந்திருக்க அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி அவனை தன் கனல் விழி தகிக்க பார்த்து கொண்டிருந்தான் ராவணன். சுற்றி இருந்த அவனது ஆட்கள் அவனின் உத்தரவுக்காக காத்திருக்க, அப்பொழுது ராவணனை ஆக்ரோஷமாக பார்த்த பரந்தாமன்,

"என் பலம் என்னனு தெரியாம மோதிட்டு இருக்க நீ, கடைசியா சொல்றேன் என்னை ஒழுங்கா விட்று இல்லை ஒருத்தனும் தப்ப மாடீங்க" என்று அந்த நிலைமையிலும் அவனை மிரட்ட, பரந்தாமனின் பேச்சில் பொங்கியெழுந்த சந்த்ரு ராவணனின் கட்டளைக்காக அவனை பார்க்க, தலைவனின் கண்ணசைவில் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டவன், இரும்பு ராடால் பரந்தாமனின் முதுகை தாக்கினான். அவ்வளவு தான் வலி தாங்காமல் அலறிவிட்டான் பரந்தாமன்.

அப்பொழுது அஜூதியாவின் கலங்கிய விழிகளை நினைத்து பார்த்த ராவணன்,

"இது போதாது இன்னும் இன்னும் இன்னும் சத்தமா கத்து" என பரந்தாமனின் முகத்தை பார்த்து வெறிகொண்ட மிருகம் போல உறும, ஒன்று இரெண்டு மூன்று என அடுத்தடுத்து பரந்தாமனின் முதுகு இரும்பு ராடால் தாக்கப்பட, பரந்தாமனின் அலறல் ஒலி அந்த அறையை நிரப்பியது. பரந்தாமனோ இதற்கு மேல் தாங்க முடியாது என்கிற நிலையில்,

"உனக்கு என்ன வேணும்? ஏன் இப்படி பண்ற? என்னை விட்று" என வார்த்தைகளை கோர்த்து பேச முடியாது மிகவும் தடுமாறியவர் கடினப்பட்டு ஒருவழியாக பேசி முடித்தார்.

கண்களை மூடிய நிலையில் பரந்தாமனின் அலறலை ரசித்து கொண்டிருந்த ராவணன் அவன் பேசியதை கேட்டு தன் விழிகளை திறந்த, சில நொடிகள் பரந்தாமனை வெறித்து பார்த்தவன்,

"வேணும் தான், ம்ம்"என்று யோசிப்பது போல தனது ஆள்காட்டி விரலால் நெற்றியை தட்டினான். பிறகு யோசனை வந்தவனாய் பரந்தாமனை பார்த்து,

"உன் உயிரை, தரியா?" என இலகுவாக கேட்டு அவனது அதிர்ந்த முகத்தை பார்த்து சத்தமாக சிரிக்க, தான் யார்? தன் செல்வாக்கு என்ன? இவனிடம் எல்லாம் இப்படி சிறைப்பட்டு கிடக்க வேண்டியிருக்கிறதே என்கிற இயலாமையில் அவனை பார்த்து முறைத்தவர்,

"இங்க பாரு திரும்பவும் சொல்றேன், எவ்வளவு பணம் வேணும்னாலும் வாங்கிக்கோ என்னை விட்று. நீ தப்பான இடத்துல மோதிட்டு இருக்க டா, நான் மட்டும் நினைச்சேன் நீ இருக்கமாட்ட" என முதலில் ஆவேசத்துடன் கூறியவர், 'முடிஞ்சத பண்ணிக்கோடா' என்னும் தோரணையில், எதற்கும் அசையாது தன்னை திமிரோடு பார்க்கும் ராவணனை பார்த்து மனதளவில் தளர்ந்தவர் 'இவனிடம் இனி மிரட்டியெல்லாம் ஒன்றும் வேலைக்காகாது முடிந்தளவு பணிந்துவிட வேண்டும், நமக்கான நேரம் கிடைக்கும் பொழுது ஒருத்தனையும் விட கூடாது' என மனதிற்குள் முடிவெடுத்தவர்,

“நான் உனக்கு என்ன டா பண்ணினேன்? என்கூட உனக்கு என்ன தான் பகை? எனக்கு உன்னை இதுக்கு முன்னாடி பார்த்த மாதிரி கூட நியாபகம் இல்லையே" என சோர்வுடன் சொல்ல,

"ஓ! நீ என்ன பண்ணினன்னு உனக்கு நியாபகம் இல்லையா?" என்று ஒருவித அழுத்தத்துடன் கேட்டவனிடம் என்ன பதில் கூறுவது என புரியாது விழித்த பரந்தாமன், "ஆமா நியாபகம் இல்லை" என தலையாட்டினான்.

"ம்ம் நியபாகம் இல்லைன்னா, நியாபகம் படுத்திடலாம் பரந்தாமன்" என்ற ராவணனின் குரலில் இருந்த அமைதி பரந்தாமனை மிகவும் அச்சுறுத்த, அவனது விழிகளில் தெரிந்த பயத்தை உள்வாங்கியபடி நாற்காலியில் இருந்து எழுந்து கொண்ட ராவணன், பரந்தாமனின் அருகே வந்து அவனின் வலது கரத்தை வளைத்து பிடித்து, அதை அவனது முதுகுடன் சேர்த்து அழுத்தி, வலியில் அவன் துடித்த துடிப்பை ரசித்தபடி அவனிடம்,

"தப்பான இடத்துல கைவச்சிட்ட பரந்தாமா! அஜூதியாவை யாருன்னு நினைச்ச ஹான்" என்று அவன் பார்த்த பார்வையில் பரந்தாமனுக்கு உள்ளே தட தடத்தது. ஆக அஜூதியாவுக்காக தான் இவ்வளவுமா? ஒரு பெண்ணிற்காகவா! தன்னை படுத்துகிறான்! பரந்தாமன் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, அவனது வலது கரத்தை இழுத்து பிடித்த ராவணன் "இந்த கை தானடா" என ஒருகணம் தன் விழிகளை மூடி அஜூதியா கலைந்த சிகையும், கிழிந்த ஆடையுடன் தன்னிடம் காப்பாற்றும் படி ஓடி வந்ததையும், பரந்தாமன் அவளது கரத்தை அழுத்தமாக பிடித்திருந்ததையும், நினைத்து பார்த்தவன் அதன் பிறகு எதை பற்றியும் யோசித்து பார்க்கவில்லை.

கண்களை மூடிய நிலையில் தன் மறு கரத்தை மட்டும் சந்ருவை நோக்கி நீட்டியவன் அவன் கொடுத்த அகன்ற கூர்மையான அமைப்பை கொண்ட கத்தி ஒன்றை பெற்றுக்கொண்டு, பரந்தாமனை தீக்கங்கை போல பார்க்க, “ராவணா வேண்டாம் ...”, “ஏய் வேண்டாம் டா” வரதன் மற்றும் பரந்தாமனின் குரல்கள் ஒன்றாக கேட்க, தடுக்கும் தனது ஆட்களை தள்ளிவிட்டு உள்ளே வந்த வரதனை ஒருபார்வை பார்த்துவிட்டு பரந்தாமனை பார்த்தவன், அஜூதியாவை எண்ணியபடி, நொடி தாமதிக்காது ஆயுதம் ஏந்தியிருந்த தன் கரத்தை ஓங்கி வீசியவன், முகத்தில் தெறித்த ரத்த துளிகளுடன் அகோரனாய் காட்சியளித்தான் அந்திரன் ராவண ஈஷ்வரன்.

கொலைகள் ஒன்றும் வரதனுக்கு புதிதல்ல, இதை விட பலமடங்கு செய்துவிட்டு தான் இப்பொழுது இந்த நிலையில் இருக்கிறான், இருந்தும் கத்தியை ஓங்கியபடி ராவணன் அவரது விழிகளை நேருக்கு நேர் பார்தானே அகோர பார்வை அதில் ஆடி போனவருக்கு, அதற்கு மேல் அங்கு நிற்க தோன்றவில்லை. தடுமாறிய தன்னை நிலை படுத்தி கொண்டவர், விறுவிறுவென அங்கிருந்து கிளம்பியிருந்தார்.

காரில் போகும் வழியெல்லாம் அவரது சிந்தனை ராவணனை பற்றி தான் இருந்தது. அப்பொழுது "அண்ணா அந்த ராவணன் நாம நினைச்சதை விட ரொம்ப ஆபத்தானவன்" என விக்ரம் சிறு அதிர்ச்சியுடன் சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்த வரதன்,

"ஆனா நான் அவனை விட மோசமானவன்" என தன் பற்களை நர நரத்தபடி கூறியவர் மேலும் தொடர்ந்து, "அந்த பொண்ணு அதான் அஜூதியா, அவ யாருன்னு விசாரி, அதுக்கு முன்னாடி நம்ம ஆளுங்க எத்தனை பேரை வேணும்னாலும் கூட்டிட்டு போ, சரக்கு நாளைக்கு காலையில குள்ள கைக்கு வந்தாகணும். குறுக்க எவன் வந்தாலும் விட்றாத. அவன் வந்தாலும்!" என்று இறுதி வாக்கியத்திற்கு அழுத்தம் கொடுத்து கூற, விக்ரம் ஆமோதிப்பதாக தலையசைத்தான்.

ராவணன் சிறையெடுப்பானா??
For Comments Please Click Here

 

ராவணனே என்னை சிறை எடு 6

1.jpg

"வேண்டாம் ப்ளீஸ், யாரவது வாங்க" உறக்கத்தில் தேகம் தூக்கி போட, கண்கள் மூடிய நிலையிலே, கண்ணீர் வடித்த அஜூதியாவை நெருங்கி வந்த அவளது தோழி இந்திரா, "அஜூ" அவளது தோளை தொட்டு அவளை உறக்கத்தில் இருந்து எழுப்ப முயன்றாள்.

அஜூதியாவின் அலறல் இன்னும் அதிகமாகவும், ஏதோ கெட்ட கனவு போல என்று எண்ணிய இந்திரா இன்னும் உரக்க அழைக்க, கண் திறந்த அஜூதியா தன் எதிரே இருந்த இந்திராவை பார்த்து மலங்க மலங்க விழித்தவள், சில நொடிகள் கடந்த பிறகே தான் கண்டது நேற்று இரவு நடந்த சம்பவத்தின் தாக்கத்தில் வந்த கெட்ட கனவு தானே தவிர நிஜம் ஒன்றும் இல்லை, என்பதை புரிந்து கொண்டு ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட, அவளது முதுகை வருடிய இந்திரா,

"என்னாச்சு டி ஒருமாதிரியா இருக்க? எதுவும் கெட்ட கனவா?" அக்கறையுடன் வினவினாள்.

"இந்து" என கண்ணீர் வடித்த அஜூதியா தாவி தன் தோழியை அணைத்துக்கொள்ள, இந்திராவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அஜூதியாவின் தலையை ஆறுதலாக வருடியவள்.

"என்னாச்சுன்னு சொல்லு டி, ஏன் அழுற? ஏதும் பிரச்சனையா? இன்னைக்கு மார்னிங் தான் வருவன்னு என்கிட்ட சொன்ன, ஆனா நைட்டே வந்திருக்க, அங்க எல்லாம் ஓகே தான" என இந்திரா அஜூதியாவின் கலங்கிய விழிகளை பார்த்து கேட்க, அஜூதியா நேற்றைய நிகழ்வை எண்ணி இன்னும் பதறினாள்.

!!!!!!!!

"என்ன விளையாடுறியா வரதா? எலெக்ஷ்ன் வருது அதனால அமைதியா இருக்கேன். அந்த சரக்கோட வேல்யூ என்னன்னு தெரியுமா? நேரத்துக்கு நான் அதை கொடுக்கலைன்னா சிக்கல் ஆகிடும் டா. ஆமா உங்கள யாரு அந்த பரந்தாமனை போட சொன்னது? நான் தான் அவன் மேல யாரும் கை வைக்க கூடாதுன்னு சொன்னேன்ல. இப்போ பாரு அவன் பையன் அப்பன் சாவை காட்டி ஓட்டுக்காக மக்கள் கிட்ட சிம்மதி கிரியேட் பண்ண பார்க்குறான். பத்திரிக்கைக்காரன் வேற எதிர்க்கட்சி சதின்னு கண்டதையும் எழுதி வச்சிருக்கான். வரதா சரக்கு என் கைக்கு வந்தாகணும், எங்க இருக்கு?"

"நான் என்னப்பா பண்றது? அந்த ராவணன் அப்படி பண்ணுவான்னு நினைக்கலையே, சரக்க வச்சிட்டு எதுவும் பேச மாட்டிக்கிறான். சரக்க எடுக்க போன என் ஆளுங்களையும் அடிச்சு போட்டுட்டு என் தம்பியையும் பிடிச்சு வச்சிருக்கான். என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல" இயலாமையுடன் கூறினான் வரதன்.

"என்ன ராவணன் ராவணன்னு ஓவர் பில்ட்டப்பா இருக்கு யார் அவன்? அவனுக்கு ஃபோன் போடு நான் பேசிக்கிறேன். யார்கிட்ட? ஹம் பேசுற மாதிரி பேசினா சரக்க தானா தர போறான்" என்று ஆக்ரோஷமாக சொல்ல, வேறு வழியின்றி வரதன் தன் அலைபேசியில் இருந்து ராவணனுக்கு அழைப்பு விடுத்து சக்தி வேலிடம் நீட்டினார். அதை பெற்றுக்கொண்ட சக்தி வேல் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு தன் எதிரே இருந்த கண்ணாடி டேபிளில் வைத்துவிட்டு அவன் ஏற்பதற்காக காத்திருக்க, ரிங் போய்க்கொண்டே இருந்தது. கடைசி ரிங்கில் எதிர் தரப்பில் இருந்து அழைப்பு ஏற்கப்பட்டது. ஆனால் அவன் பேச வில்லை என்றதும் வரதனை பார்த்த சக்திவேல் நீண்ட பெருமூச்சை வெளியிட்டு,

"யார் டா நீ? ம்ம் கூலிக்கு வேலை பார்க்குற வேலைக்காரங்கள்ல ஒருத்தன். என்கிட்ட உன்னை மாதிரி பலபேர் இருக்காங்க. ஒரு குரல் கொடுத்தா போதும், உன் தடம் இல்லாம பண்ண முடியும் வேண்டாம்ன்னு பார்க்கிறேன். சரக்கு என்கிட்ட வந்தாகணும், இல்லை உன்னை சும்மா விட மாட்டேன்" சக்தி வேலின் சத்தமான குரல் அறையெங்கும் எதிரொலிக்க, அனைவரும் ராவணனின் பதிலுக்காக காத்திருந்தனர். அப்பொழுது, "தாராளமா" அறையில் நிலவிய அமைதியை உடைத்துக்கொண்டு ஓங்கி ஒலித்தது ராவணனின் கணீர் குரல். 'என்னவேண்டுமானாலும் செய்துகொள்' என சொல்லாமல் சொன்ன ராவணனின் பதிலில் சக்திவேலின் முகம் இறுகியது. ஆனாலும் அவர் விட வில்லை, பொடிப்பையன் அவனுக்கே அவ்வளவு இருக்கும் என்றால், எனக்கு எவ்வளவு இருக்கும், என்று அவருக்குள் இருக்கும் அகம் அவரை தூண்டி விட,

"டேய் என்ன ஓவர் ஸீனா இருக்கு, நான் யாருன்னு தெரியுமா? உயிர் இருக்காது" காட்டுக்கத்து கத்தினார்.

ஆனால் ராவணன்,"ஏன் தெரியாது மினிஸ்டர் சக்திவேல் தானே" என எள்ளல் பொதிந்த குரலில் மிக மிக நிதானமாக கேட்டான். சக்திவேல் ஒருகணம் அசந்துவிட்டார். அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை,'என்னய்யா இது? நான் யாருன்னு எப்படி அவனுக்கு தெரியும்?' என்று எண்ணியபடி சக்திவேல் வரதனை 'நீயா சொன்ன' என்பது போல தன் புருவும் இடுங்க பார்க்க, அவன் உடனே மறுத்துவிட, ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்த சக்திவேல் தன்னை சமநிலை படுத்திகொண்டு,

"டேய் அதான் நான் யாருன்னு தெரியுதுல மரியாதையா சரக்கை நீயே வந்து குடு" என்று கட்டளையிட,

"சரக்கு தானே தந்திரலாம், அதுக்கு முன்னாடி ஒன்னும் சொல்லணும், பரந்தாமன் வீட்ல ஆதாரத்தை அழிக்கும் பொழுது நம்ம பசங்க ஒரு ஃபைலும், ஃபோனும் இருந்துச்சின்னு எடுத்துட்டு வந்துட்டாங்க ஓபன் பண்ணி பார்த்தா உள்ள நீ இருக்க! உன் மொத்த வரலாறும் இருக்கு. எலெக்ஷ்ன் வருதுல,என்கிட்ட இருக்கிற அந்த வீடியோ அப்புறம் அந்த ஃபைல் எல்லாத்தையும் மீடியாக்கு லீக் பண்ணினா ஏதும் பிரச்சனை வருமா என்ன? கொஞ்சம் சொல்லிட்டு போ" என மிக இயல்பாக அவன் ஒருமையில் பேசிவிட , சட்டென்று பொங்கிய ஆத்திரத்துடன்,

"டேய் என் பலம் தெரியாம மோதுற" என தன் ரத்தம் அழுத்தம் ஏகத்துக்கும் எகிற சக்திவேல் கத்தினார். அவன் சிரித்தான்.

எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியுள்ளேன், விடயம் மட்டும் மீடியாவுக்கு வந்தால்? சேர்த்து வைத்த செல்வாக்கு, naan இருக்கும் பதிவி என தன் மொத்த அரசியல் வாழ்க்கையும் ஆட்டம் கண்டுவிடுமே என்று மனதிற்குள் நிஜமாகவே அஞ்சியவர். இப்பொழுது ஆத்திரத்தை விடுத்து நிதானமாய் சிந்தித்து,

"ஓகே உனக்கு என்ன வேணும் சொல்லு? நான் செஞ்சி தரேன். சரக்கும் நான் சம்பந்தப்பட்ட விஷயங்களும் எனக்கு வேணும்" என ராவணனிடம் பொறுமையாக பேசினார்.

"உன்கிட்ட எல்லாம் சொல்ல முடியாது, நீயா என்கிட்ட டீல் பேசனின, வரதனை இன்னைக்கு என் ஆபிஸ்ல வந்து என்னை பார்க்க சொல்லு. எனக்கு என்ன வேணும்ன்னு அவன் கிட்ட நான் சொல்லிக்கிறேன். நான் கேட்டதை செஞ்சா, நீ கேட்டதை நான் தரேன்" என்ற ராவணன் அழைப்பை அணைத்துவிட சக்திவேல் எரிச்சலுடன் வரத பெருமாளை பார்த்தான்.

!!!!

"அந்த பரந்தாமனா! ச்ச, எல்லாம் பணம் படுத்துற பாடு, உன்ன காப்பாத்தினானே அவன் அந்த பரந்தாமனை ஒரு தடவை எல்லாம் சுட்ருக்க கூடாது, பல தடவை சுட்டுருக்கணும்" என்று கொதிப்புடன் கூறிய இந்திரா மேலும் தொடர்ந்து, "நீ அவனை விட்ருக்க கூடாது அஜூ, அவன் ஏதாவது பண்ணிருக்கணும்" என்று அறையில் பல்லை கடித்தபடி குறுக்கும் நடுக்கும் நடந்துகொண்டே கூறினாள். அப்பொழுது,

"அஜூதியா" என்று அஜூதியாவை கத்தி அழைத்தபடி அவள் அறைக்குள் கையில் செய்தித்தாளுடம் பரபரப்பாக நுழைந்த ஆஷ்ரம நிர்வாகி ஜானகியிடம்,

"மா என்னாச்சு என்று"பெண்கள் இருவரும் அவரது பதற்றத்தை உள்வாங்கிக்கொண்டு கேட்க, அஜூதியாவிடம் நாளிதழை நீட்டியவர்,

"உன் காலேஜ் சேர்மென் மிஸ்டர் பரந்தாமன் இறந்துட்டார்" என்று சொல்ல, நாளிதழை வாங்கி பார்த்தவள் அதிர்ச்சியுடன் தன் தோழியை பார்க்க அவளை அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தவள் அவள் கரத்தில் இருந்து நாளிதழை வாங்கி அதில் எழுதப்பட்டிருந்த செய்தியை வாசித்தாள்.

"உனக்கு இதை பத்தி எதுவும் தெரியுமா அஜூதியா" என்ற ஜானகியிடம் இந்திராவின் சமிக்கைக்கு இணங்க தெரியாது என்றவள் நேற்று நடந்த எதை பற்றியும் கூறவில்லை.

"நீ இன்னைக்கு தானே வருவேன்னு சொன்ன, நைட்டே வந்துட்டன்னு வாச் மென் சொன்னாங்க"

"மா அது வந்து" என்ன பதில் சொல்வது என்று அஜூதியா தடுமாறவும், "அது மேம் அங்க ஹாஸ்ட்டல்ல தங்குறதுக்கு ரூம் எதுவும் காலியா இல்லாம இருந்திருக்கு, அதான் வேற வழியில்லாம நைட்டே வந்திருக்கா" என்று இந்திரா முந்திக்கொள்ள,

"ஓ, என்னவோ நீ நல்லபடியா வந்துட்ட" என்றவர், "யாரு இப்படி பண்ணினாங்களோ? பாவம் நல்ல மனுஷன் அவருக்கு இப்படி ஆகிடுச்சு, நம்ம ஆஷ்ரமத்துக்கு நிறைய உதவி பண்ணிருக்காரு, ஹம் நல்லவர்களுக்கு இப்போ எல்லாம் காலமே இல்லை" என்று ஒருவித கவலையுடன் கூறியவர் அறையை விட்டு வெளியேறவும் வேகமாக சென்று இந்திரா கதவுக்கு தாழிட, அஜூதியாவோ கால்கள் தள்ளாட அப்படியே தொப்பென்று படுக்கையில் அமர்ந்தாள்.

"அஜூ பரந்தாமன் சாகலைன்னு சொன்ன, ஆனா கையெல்லாம் வெட்டி ஷூட் பண்ணி கொலை பண்ணிருக்காங்க"

"அதான் எனக்கு ஒண்ணுமே புரியல இந்து, என்கிட்ட பரந்தாமன் சாகலைன்னு தான் அவர் சொன்னாரு"

"உன்னை காப்பாத்தினவன் யாரு? அவன் பேர் என்ன? இப்படி ஏதாவது தெரியுமா?"

"ம்ஹூம் தெரியாது, நான் கேட்டேன், அதுக்கு எல்லாத்தையும் மறந்துட்டு நிம்மதியா போய் வாழுன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க"

"என்னாச்சு இந்து?"

"உனக்கு ஏதும் பிரச்சனை வருமோன்னு பயமா இருக்கு அஜூ"

"என்ன சொல்ற இந்திரா? எனக்கு என்ன பிரச்சனை வரும்? நான் என்ன செஞ்சேன்?" அஜூதியா கலவரமாக இந்திராவை பார்க்க அவளோ,

"ஏய் நீ ஏன் இப்போ கத்துற? நீ முதல்ல பொறுமையா, ஒரு விஷயத்தை பத்தி யோசி. பரந்தாமனை கொலை பண்ணிருக்காங்க, அவரு எக்ஸ் மினிஸ்டர், போலீஸ் இந்த கேஸை ஈஸியா விடமாட்டாங்க எல்லாரையும் விசாரிக்க ஆரம்பிப்பாங்க, நேத்து நைட் நீ அவரோட கெஸ்ட் ஹவுஸுக்கு போயிருக்க கெஸ்ட் ஹவுஸ்ல சிசிடிவி கேமெரா இல்லாம இருக்காது. கண்டிப்பா உன் முகம் அதுல ரெக்கார்ட் ஆகியிருக்க வாய்ப்பு இருக்கு. அதை வச்சு போலீஸ் உன்னை விசாரிக்க வந்தா என்ன பண்றது? எப்படி சமாளிக்கிறது? இந்த விஷயத்துல தேவை இல்லாம உன் பேரு அடிபடுமோன்னு நினைச்சு தான் பயமா இருக்குன்னு சொன்னேன். "

"ஆமா நீ சொல்லும் பொழுது தான் புரியுது, இப்போ என்ன பண்றது இந்து? ஜானகி மாகிட்டையும் எதுவும் சொல்லல, ஒருமாதிரி டென்ஷனா இருக்கு டி"

"அஜூ இப்போதைக்கு நீ ரிலாக்ஸ்சா இரு, உனக்கு ஏதாவது இதுல பிரச்சனை வர்ற மாதிரி இருந்தா போலீஸ் கிட்ட எதையும் மறைக்காம நடந்த எல்லாத்தையும் சொல்லிடு, நம்ம பக்கம் உண்மை இருக்கு, சோ நாம பயப்பட வேண்டாம். துணிவா சமாளிச்சிக்கலாம்" என்ற இந்த்ராவிடம்,

"நடந்த எல்லாத்தையும் எப்படி டி சொல்ல முடியும்" என்றாள் அஜூதியா.

"ஏன் சொன்னா என்ன? உன் மேல தப்பு இல்லாதப்போ என்ன பயம்?"

"எல்லாத்தையும் சொல்லும் பொழுது, அவரை பத்தியும் சொல்ல வேண்டி வரும். நோ அவரு மட்டும் இல்லைனா நான் இப்போ இல்லை இந்து. என்னால அவரை எப்பவுமே காட்டிக்கொடுக்க முடியாது"

"நீ சொன்னதை வச்சு பார்க்கும் பொழுது அவங்களும் ஒன்னு நல்லவங்க மாதிரி தெரியலையே, கன்ஸ் எல்லாம் யூஸ் பண்றதை பார்த்தா கேங்ஸ்டர்ஸ் போல தான் தெரியுது" என்ற இந்திரா முடிப்பதற்குள், "இந்து " என்று அவளை குறுக்கிட்ட அஜூதியா,

"அவர் கெட்டவராவே இருக்கட்டும், ஏன் கொலை செய்யுற கேங்ஸ்டராவே இருக்கட்டும், ஆனா எனக்கு அவர் தான் நல்லவர். அந்த பரந்தாமன் என்னை எப்படி பார்த்தான் தெரியுமா? என் கைய புடிச்சு என் ட்ரெஸை கிழிச்சு" என்று தன் தொண்டை அடைக்க பேச முடியாமல் திணறியவள், கண்ணீர் வடிய, "சொன்னா உனக்கு புரியுமா தெரியல இந்து, அந்த நிமிஷம் நான் அடைஞ்ச வலி இருக்கே அந்த கடுவுளுக்கு தான் தெரியும். நீ சொல்ற அந்த கேங்ஸ்டர் மட்டும் என்னை காப்பாத்தலைன்னு வச்சுக்கோயேன் இன்னைக்கு இந்த நியூஸ்பேப்பர்ல என் ஃபோட்டோ வந்துருக்கும்" என்று ஏங்கி ஏங்கி அழும் அஜூதியாவை இறுக்கமாக அணைத்துக்கொண்ட இந்திரா,

"சாரி டி, உனக்காக தான் அப்படி சொன்னேன் வெறி வெறி சாரி. நீ அழாத, எந்த பிரச்சனையும் வராது அப்படியே வந்தாலும் வரும்பொழுது பார்த்துக்கலாம்" என்று தைரியம் கூறினாள்.

!!!

அந்திரன் ராவண ஈஷ்வரனின் அலுவலகத்தின் கலந்தாய்வு அறைக்கு வரதன் வந்து இதோ கிட்ட தட்ட ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை ராவணனை அவரால் சந்திக்க முடியவில்லை. தன் தொழிலில் உச்சத்தை தொட்ட பிறகு அவர் இவ்வளவு நேரம் காத்திருப்பது இன்று தான், அதாவது சுமார் இருபது வருடத்திற்கு பிறகு வரத பெருமாள் இன்று தான் காத்திருக்கிறார். எவ்வளவு முயன்றும் அவரால் பொறுமையாக இருப்பது போல நடிக்க கூட முடியவில்லை, நேரம் கடக்க கடக்க முகத்தில் கடுமையின் அளவு கூடி கொண்டே சென்றது. அவரது கைவிரல்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட தண்ணீர் அடங்கிய கண்ணாடி குவளை, இதோ எப்பொழுது வேணுடுமானாலும் உடைந்து விடுவேன் என்கின்ற நிலையில் இருக்க, அவன் வந்தான்! அவனது சாகாக்கள் ஒன்பது பேரும் சூழ்ந்திருக்க, தன் கருப்பு நிற லெதர் ஷூ பள பிளக்க வரதனை பார்த்தபடி அவர் எதிரே உள்ள நாற்காலியில் அமர்த்தலாக வந்தமர்ந்தான் ராவணன்.

'பலே கில்லாடி தான்! இருந்த இடத்திலே இருந்து கொண்டு சக்திவேல் துவங்கி அத்தனை பேரையும் அலறவிட்டு, இதோ என்னையே நேரில் வரவழைத்து விட்டானே!' எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவரால் ராவணனின் ஆளுமையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

ஒருகணம் அவனை எண்ணி வியந்து அடுத்த நொடி தான் வந்த நோக்கத்தில் கவனம் செலுத்த துவங்கியவர் அவனிடம் பேச ஆரம்பிக்கவும்,

"என்ன வேலையும் கொடுத்துட்டு, பின்னாடியே வேவும் பார்க்குறீங்களா?" அவன் புருவம் உயர்த்தி கேட்டவிதத்தில் வரதன் லேசாக தடுமாறினார்.

"அதுவந்து ராவணா நீன்னு இல்லை எல்லாருக்கும் பண்றது தான். வேலை ரிஸ்குல, பொருளும் முக்கியம், நீயும் முக்கியம், எல்லாம் நம்ம சேஃப்ட்டிக்கு தான்" - நம்ம, பாதுகாப்பு போன்ற கவரும் சொற்களை பயன்படுத்தி தப்பிக்க பார்த்தார்.

"அப்படினா அதோட நிப்பாட்டிக்கணும், அதை விட்டுட்டு நான் யார் கூட இருக்கேன்? என் கூட யார் இருக்கா? அவங்க யார்?என்கிறதெல்லாம் வேவு பார்க்கிறது, உங்களுக்கு தேவையே இல்லாத ஆணி." தாம் தூமென்று கத்தவில்லை ஆனால் தன் கோபத்தை தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்படுத்தினான்.

"அட உன் தனிப்பட்ட விஷயம் எங்களுக்கு எதுக்குப்பா? நீ ஏதோ தப்பா புரிஞ்சி வச்சிருக்க" என்று அவர் சமாளிக்கவும் நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தவன், தேவராஜை பார்த்து கண்ணை காட்ட, அடுத்த சில நிமிடத்தில் ராவணனை கண்காணிக்க அனுப்பிய ஆடவன் மற்றும் வரதனின் தமயன் விக்ரமையும் தேவராஜ் அழைத்து வர,

முகம் ஒருபக்கம் வீங்கி, நடக்க முடியாது நடந்து வரும் தமையனை பார்த்து உள்ளுக்குள் கொதித்தவர் வெளியே கற்சிலையை போல அமர்ந்திருந்தார்.

"இவனை தானே என்னை வேவு பார்க்க அனுப்புனீங்க?இன்னைக்கு காலையில இருந்து ஆஷ்ரம வாசல்ல சுத்திட்டு இருக்கான். இவனுக்கு அங்க என்ன வேலை?" என்று கூர்மையாக அவரை பார்த்தபடி வினவ, வரதனால் சமாளிக்க முடியவில்லை, ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்கிற நிலையில் அமைதியாக இருந்தவரிடம்,

"இதுல எங்களை போட்டு தள்ளுறதுக்கு பெரிய பெரிய ரௌடிங்கள வேற அனுப்பியிருக்கீங்க" விக்ரமை ஓரக்கண்ணால் பார்த்தபடி கூறினான்.

கிண்டல் பண்றானா என்ன? உணர்வுகள் துடைக்கப்பட்ட ராவணனின் முகத்திலோ மற்றும் குரலில் இருந்தோ அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சுற்றியிருந்த ஒன்பது பேரின் இதழில் வந்து போன கோணல் புன்னகை, அவர் சந்தேகத்தை தெளிவுபடுத்த, 'நான் பார்த்து வளர்ந்து வந்தவன் இவனெல்லாம் என்னை பேசுகிறானே' என்று எண்ணியவர்க்கு அவன் முன்னால் அமர்ந்திருப்பது பற்றியெரியும் நெருப்பின் மேல் இருப்பது போல இருக்க, அவனிடம் தேவை இருக்கும் ஒரே காரணத்திற்காக பல்லை கடித்து சகித்துக்கொண்டவர்,

"ராவணா சரக்கை எடுத்ததும், நீ கொடுத்திருந்தா எந்த பிரச்சனையும் வந்திருக்காது. நான் என்ன பண்றது மேல இருந்து பிரஷர், அதான் அப்படி பண்ண வேண்டியதா போச்சு. நீ எதுவும் வருத்தப்பட்டுக்காத" என்றவரை கரம் உயர்த்தி தடுத்தவன்,

"வருத்தமா!?" என்று கோணலாக புன்னகைத்துவிட்டு, "இதுல வருத்தப்பட என்ன இருக்கு? வரதன் யாருன்னு எனக்கு தெரியும், ராவணன் யாருன்னு உங்களுக்கு தெரியும், இப்போ இன்னும் நல்லாவே தெரிஞ்சிருக்கும்." என்றவன், "விஷயத்துக்கு வாங்க" என்றான்.

"சக்தி வேல் சார் நேத்து உன்கிட்ட சொன்னது தான்"

"ம்ம்ம் அவரு சொன்னாரு, ஏதோ. நீங்க சொல்லுங்க என்ன விஷயம்?" அவன் பாவனை அவருக்கு கோபத்தை தான் ஏற்படுத்தியது, ஆனாலும் ஆத்திரப்பட்டு காரியத்தை கெடுத்து, சண்டையிடுவதற்கான நேரம் இது இல்லை. எப்படியாவது சரக்கை வாங்கி சக்தி வேலிடம் ஒப்படைக்கவேண்டும் எனவே பொறுமையும் நிதானமும் மிக முக்கியம் என்பதால் வரதன் பொறுமையாக,

"சரக்கு முக்கியம் ராவணா, நேரத்துக்கு கொடுக்க வேண்டியது. டெலிவரி சரியான நேரத்துக்கு பண்ணலைன்னா பிரச்சனை ஆகிரும்"என்றார். அங்கு அவரது வணிக புத்தி பேசியது.

"ம்ம் நீங்க சொல்றதும் சரி தான். பிரச்சனை வர கூடாது. நேரத்துக்கு குடுக்கணும், ம்ம்ம் நான் என்ன பண்ணனும்?" என்றானே பார்க்கலாம். வரதன் நொந்து விட்டார். எல்லாம் தெரிந்தும் தன்னை பேச விட்டு புதியது போல கதை கேட்கும் ராவணனை ஒன்னும் செய்ய முடியாத தன் நிலையை எண்ணி வெறுப்பானவர்,

"பேசினபடி சரக்கையும் ஆதாரங்களையும் குடு ராவணா, பேசினதை விட அதிகமா நீ கேட்கிறதை நாங்க கொடுக்குறோம்" பொறுமையை இழுத்து பிடித்து வைத்துக்கொண்டு கூறினார்.

"ஓகே தென் டீல் பேசுவோமா" நன்றாக நாற்காலியில் சாய்ந்தமர்ந்து நிதானமாக கேட்டான்.

"உனக்கு எவ்வளவு வேணும்"

"ம்ஹூம் எனக்கு பணம் வேண்டாம். அதுக்கு பதிலா பரந்தாமனோட கேஸ் நான் சொல்ற மாதிரி க்ளோஸ் ஆகணும், முக்கியமா இதுல அஜூதியா பெயரோ என் பசங்க பெயரோ வர கூடாது. கேஸ் க்ளோஸ் ஆன அடுத்த செகண்ட் பொருளும் சரக்கும் உங்க கிட்ட இருக்கும்" நான் உன்னை விட கைதேர்ந்த வணிகன் என்றது அவனது கோரிக்கை.

அவ்வளவு பெரிய விடயத்தை கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் கூறியவனை வரதனும் விக்ரமும் திகைப்புடன் பார்க்க, தன் நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டவனோ விக்ரமை பிடித்து வரதனை நோக்கி தள்ளி, "போகும் பொழுது உங்க ரௌடி சாரையும் கூட்டிட்டு போங்க" என்றவன் தன் சகாக்களுடன் அறையை விட்டு வெளியேறினான்.

சிறையெடுப்பானா ?
For Comments Please Click Here
 
Last edited:

ராவணனே என்னை சிறை எடு 7

1.jpg
பரபரப்பாக பேசப்பட்ட முன்னாள் அமைச்சர் பரந்தாமனின் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

தலைமறைவாக இருப்பதாக கருதப்பட்ட அமைச்சரின் பினாமி வீரபாண்டியன் குண்டடிபட்ட நிலையில் போலீசாரால் கண்டுபிடிப்பு.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்! கொலைக்கான காரணத்தைக் கண்டு பிடித்துவிட்டதாக தமிழக காவல் துறை அறிவிப்பு.

கிரானைட் பிஸ்னஸ், ஐந்து நக்ஷத்திர ஹோட்டல்கள், கல்லூரிகள், பெரிய மருத்துவமனை என தனது பெயரில் ஏகப்பட்ட நிறுவனங்களை நடத்திவந்த முன்னாள் அமைச்சர் பரந்தாமன், மறைமுகமாக பல சட்டவிரோதமான தொழில்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவருடன் தொழில் செய்துவந்த வெளிநாட்டை சார்ந்த டானியல் என்பவருக்கும் பரந்தாமனுக்கும் பல ஆண்டுகளாக தொழில் விடயமாக பல கருத்துவேறுபாடு இருந்து வந்த நிலையில், இப்பொழுது சில மாதங்களாக இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனை வலுப்பெற்றிருக்க,

வெறும் வாக்குவாதம் கை கலப்பாக மாறிய நிலையில் பரந்தாமன், டானியலைத் தாக்க டானியல் குண்டடிப்பட்டு இறந்துள்ளார். அதனால் கோபம் அடைந்த டானியல் தரப்பினர் பரந்தாமனைத் தாக்கியுள்ளனர். ஆக இரு பிரிவினருக்கும் நடந்த சண்டையில் பரந்தாமன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட, குண்டடி பட்டு போலீசாரால் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது பினாமி, வீரபாண்டியன் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாகக் கருதி, போலீசார் விசாரணை நடத்தி உண்மையை உறுதி படுத்தியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் பரந்தாமனின் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்ட காவல் துறை அதிகாரிகளைத் தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார்.

ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கி கட்சியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டு, பின்பு அது பொய் வழக்கு என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட பரந்தாமன்மீது ஏற்கனவே அதிருப்தியில் இருந்த பொதுமக்கள், இப்பொழுது வெளியான செய்தியில் மிகவும் கொதித்தனர். இதற்கிடையில் தந்தை குறித்து வந்த செய்தி, தேவை இல்லாது அவரது பெயரைக் கெடுப்பதற்காக எதிர்க்கட்சி செய்த சதி என்று பரந்தாமனின் மகனும், அவரது அடுத்த அரசியல் வாரிசுமான ஜிக்னேஷ் பரந்தாமன் பேட்டியளித்துள்ளார்.

இதற்கிடையில் காவல் துறை தரப்பில் கொடுக்கப்பட்ட ஆதாரம் மற்றும் விசாரணை அறிக்கை குறித்து திருப்தி தெரிவித்த நீதிபதி, பரந்தாமனின் கொலை வழக்குக்கான இறுதி தீர்ப்பை அளித்தார், என்று இன்று காலை வெளியான இந்த செய்தியை இந்திரா வாசித்து முடித்த பொழுது, தான் என்ன மனநிலையில் இருக்கின்றோம் என அஜூதியாவுக்கே புரியவில்லை.

எங்கே தன்னை தேடி போலீஸ் யாரும் வருவார்களோ? தன்னால் ஆஷ்ரமத்தில் உள்ளவருக்கு ஏதும் பிரச்சனை வந்துவிடுமோ என பயத்துடன் எத்தனை தூங்கா இரவுகளைக் கழித்திருப்பாள். இதோ சற்று நேரத்திற்கு முன்பு வரைகூட, நான் அப்படி என்ன தவறு செய்தேன்? தனக்கு ஏன் இத்தனை சோதனைகள்? என்று மனதிற்குள் வருத்தத்துடன் இருந்தவள் இப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதி அடைந்தாள்.

"என்ன நடக்குமோன்னு ரொம்ப பயந்துட்டே இருந்தேன் இந்து, இப்போதான் நிம்மதியா இருக்கு. ஆமா நீ சொன்ன மாதிரி சிசிடிவி ஃபுட்டேஜ்ல என் முகம் விழுந்திருக்கும்ல, அப்போ ஏன் போலீஸ் என்கிட்ட விசாரிக்ககூட வரல." சந்தேகத்துடன் அஜூதியா இந்திராவிடம் வினவ,

"ம்ம்... அதை பத்திதான் நானும் நினைக்கிறன் அஜூ, உன்னை ஒருத்தன் காப்பாத்தினான்ல..."

"ம்ம்..."

"அவன் வந்ததுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு, கொஞ்சம் தெளிவா சொல்லு." என்று இந்திரா கேட்கவும், அன்று நடந்ததை அஜூதியா விளக்கமாக சொல்ல அப்பொழுது சட்டென்று, "ஏய் ஸ்டாப் ஸ்டாப்..." என இடைவெட்டியவள், "அப்போ அவனோட மோட்டிவ் பரந்தாமனைக் கொலை பண்றதில்லை."

"ம்ஹ்ம்..."

"உன்னை கூட்டிட்டு போக பார்த்திருக்கான், பரந்தாமன் தடுத்திருக்கான். அவன் அவனை ஷூட் பண்ணிருக்கான் ஸோ, பரந்தாமன் மர்டர் முழுக்க முழுக்க உனக்காக நடந்தது."

"ம்ம் ஆமா இந்து."

"சரி அப்புறம் என்ன நடந்துச்சு?" இந்திரா ஆர்வத்துடன் வினவ, அஜூதியா தோழியை ஒருகணம் பார்த்துவிட்டு அதன்பிறகு நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, லேசாக புன்னகைத்தபடி அஜூதியாவைப் பார்த்த இந்திரா, "எனக்கென்னவோ இந்த கேஸ்ல உன் பேர் வராம பார்த்துக்கிட்டது அவன் தான்னு தோனுதுடி."

"அதெப்படி முடியும்?"

"நீ சொன்னதை வச்சு பார்க்கும் பொழுது அவன் ஒரு கேங்ஸ்டரா தான் இருக்கணும். ஸோ நிச்சயம் பெரிய பெரிய காண்டக்ட்ஸ் இருக்கும். அது மூலமா கூட பண்ணிருக்கலாம்."

"எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?"

"நடந்த விஷயங்கள், அப்புறம் முக்கியமா, கடைசியா அவன் உன்கிட்ட சொன்னது இதெல்லாம் வச்சு நான் சொல்றேன். எனக்கு அப்படித்தான் தோனுது. எனிவே உன் அவரு கேங்ஸ்டரா இருந்தாலும் நல்லவர்தான். எப்படியோ பிரச்சனை எல்லாம் சால்வ் ஆகிடுச்சு. இனியாவது நீ நிம்மதியா இரு." என்ற இந்திராவிடம் சரியென்பதாய் தலையாட்டிய அஜூதியாவின் மனம், 'பரந்தாமன் மர்டர் முழுக்க முழுக்க உனக்காக நடந்தது' என்ற இந்திரா பேசிய வார்த்தைகளிலே உழன்று கொண்டிருந்தது.

"என்ன திடீர்ன்னு எல்லாரும் பரபரப்பாக இருக்காங்க? என்னாச்சு வேணி?" என்ற இந்திராவிடம்,

"எனக்கு தெரியாதுபா. நீ, ஜானகிமாகிட்டையே கேளு." என்று மென்னகையுடன் கூறிய தன் தோழி வேணியை குழப்பமாக பார்த்த இந்திரா, “என்னாச்சு?” என்று அஜூதியாவிடம் கேட்க, "உன்கூட தானே இருந்தேன், எனக்கும் தெரியலடி." என்றாள்.

உடனே இந்திரா, வேணியிடம், "ஏய் வேணி சொல்ல போறியா இல்லையா? ஓவரா பண்ணாத..." என்க,

"நான் சொல்ல மாட்டேனே..." என்ற பெண்ணவள் புன்னகைத்தபடி அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொள்ள, வேணியின் விசித்திர நடவடிக்கைப் பார்த்து விழித்த பெண்கள் இருவரும்,

"ஒரு ஆறு டீ ரெடி பண்ணிரு மாரி, அப்புறம் என் ஆஃபிஸ் ரூம்ல ஒரு மூணு சேர் மட்டும் எக்ஸ்ட்ராவா போடு." என்று மாரியிடம் வேலை சொல்லிக்கொண்டிருந்த ஜானகியின் அருகே வந்து,

"என்னாச்சு மேம்? எல்லாரும் பரபரப்பா இருக்காங்க. யாரும் முக்கியமானவங்க வாராங்களா?" என்றாள் இந்திரா.

"ம்ம்... வேணிய பொண்ணு பார்க்க வராங்க. நான் மேட்ரிமோனில உங்களுக்காக பதிவு பண்ணிருந்தேன்ல, அதுல வேணியோட ஃபோட்டோ பார்த்து புடிச்சு கேட்குறாங்க. ரிஜிஸ்டர் பண்ணின புதுசுல இவங்க, அவங்க மூத்த பையனுக்கு நம்ம அஜூதியாவை கேட்டாங்க. ஆனா அஜூ வேலைக்கு போகாம கல்யாணம் வேண்டாம்னு சொன்னா, நானும் விட்டுட்டேன்.

இப்போ அவங்களோட இளைய பையனுக்கு நம்ம வேணியை கேட்குறாங்க, பெங்களூர்ல இருக்காங்க. ரொம்ப வசதியான குடும்பம். இந்த சம்பந்தம் மட்டும் முடிஞ்சது வேணி ராணி மாதிரி இருப்பா." என மகிழ்வுடன் கூறிய ஜானகி, "சரி போய் உங்க ஃபிரண்டை அலங்காரம் பண்ணுங்க." என்றவர் இதர வேலைகளைப் பார்க்க செல்ல,

"ஏய் இந்து, பார்த்தியா இந்த கள்ளிய? நம்மகிட்டையே மறைச்சிட்டா, வா போய் கலாய்க்கலாம்." என்று துள்ளிய அஜூதியாவை ஒரு பார்வைப் பார்த்த இந்திரா,

"ஏய் இப்ப இந்த கல்யாணம் ரொம்ப அவசியமா?"

"அது..."

"என்ன அது? வேலைக்கு போய்ட்டு அட்லீஸ்ட் ஒரு வருஷம் கழிச்சாவது கல்யாணம் பண்ணிக்கலாம்ல..."

"அதுக்கு அவ படிச்சிருக்கணும்ல."

"ஏன் படிச்சாதான் வேலைக்கு போக முடியுமா என்ன? அவ காலேஜ் போய் படிக்காட்டாலும் டைப் ரைட்டிங் முடிச்சிருக்காள்ல. ஒரு ஜெராக்ஸ் கடையில வேலை பார்த்தாகூட மாசம் எட்டாயிரம் தருவான்டி."

"நாம இதெல்லாம் சொல்ல முடியாதுல, ஜானகி மேம் முடிவு பண்ணிருக்காங்க அவளுக்கு வேணும்னா அவதான் பேசணும்."

"அதுக்கில்ல அஜூ நீயோ, நானோ வெளில போய் படிச்சோம், கொஞ்சம் வெளியுலகம் தெரியும். ஆனா வேணி இங்கையே இருந்து வெளியுலகம் தெரியாம இருக்கா. இப்போ உடனே கல்யாணம் பண்ணி வச்சா, அவ உலகம் குடும்பம், புருஷன், புள்ளைகுட்டின்னு முடிஞ்சு போய்டும் அதான் சொன்னேன்."

"அப்படி சொல்ல முடியாது இந்து, கல்யாணத்துக்கு அப்புறம் படிச்சு வேலைக்கு போறவங்க நிறைய பேர் இருக்காங்க. நீ எதையும் யோசிக்காம வா." என்றவள் இந்திராவின் கரம் பிடித்து வேணியிடம் அழைத்து சென்றாள்.

"எல்லாம் சரியா இருக்குல்ல..." கண்ணாடியில் தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்டபடி அஜூதியாவிடம் வினவினாள் வேணி.

"உனக்கு என்னடி வெள்ளைகட்டி மாதிரி அவ்வளவு அழகா இருக்க, மாப்பிள்ளை கையோட கூட்டிட்டு போகாம இருந்தா சரி." என்று வேணியின் கன்னத்துடன் கன்னம் வைத்து அஜூதியா கூற, வேணியின் முகம் அந்தி வானமாய் சிவந்தது.

"அதெல்லாம் இல்லை, உங்க ரெண்டு பேருக்கும் புடிச்சாதான் கல்யாணம் எல்லாம்..." என்ற வேணி, "ஆனா அவரை உங்களுக்கு கண்டிப்பா புடிக்கும்." என்று கண்களில் எதிர்கால கனவுகள் மின்ன கூற, "பாருடா ம்ம்ம்..." என்று அவளது தோளில் விளையாட்டாக இடித்த அஜூதியா, "இப்போதான் உங்களுக்கு சிரிச்சு பேசவே தோணுதுல..." என்று சொல்ல,

"ஏது நானு, அடி வாங்குவ... நான் எப்பவும் போலதான் பேசுறேன். நீதான் கொஞ்ச நாளா எதையோ பறிகொடுத்த போல திரிஞ்ச. நீ என்கிட்ட நல்லா பேசி எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? இந்துட்ட மட்டும் தனியா போய் பேசுவ, நான் வந்தா ரெண்டு பேரும் அமைதியாகிருவீங்க. ரெண்டு கூட்டு களவானிங்களும் ஏதோ பண்றீங்கன்னு போய்டுவேன்." என வேணி ஓரக்கண்ணால் இந்துவைப் பார்த்தபடி கூற,

"அதுவா, உன்கிட்ட சொன்னா ஓட்டைவாய் போல, யார்கிட்டையும் சொல்லாதீங்கன்னு சொல்லியே எல்லார்கிட்டயும் சொல்லிருவியா, அதான் சொல்லலை." என்று கேலியாக பேசி வேணியின் எண்ணத்தை திசை திருப்பினாள்.

"ஏய் அது சின்ன வயசுல பண்ணினதுடி, அதை இப்போ வரை சொல்லி கிண்டல் பண்ணுவியா உன்னை..." என்ற வேணி, இந்துவைப் பார்த்து, "இந்து ஏன் எதுவுமே பேச மாட்டிக்கிறா? என்னாச்சு?" என்று அஜூதியாவிடம் கேட்டவள், அவள் பதில் சொல்லாமல் இருக்கவும் எழுந்து இந்திராவின் அருகே சென்று அவளது கரத்தைப் பிடித்துக்கொண்டு,

"என்னாச்சு இந்து, என் மேல எதுவும் கோபமா? இந்த கல்யாண பேச்சு உனக்கு பிடிக்கலையா?" என கேட்க, அதற்கு இந்து ஏதோ சொல்ல வரவும், அவளைத் தன் கண்களாலே சொல்லாதே என்பது போல அஜூதியா தடுக்க,

"அதெல்லாம் இல்லை, உன் விருப்பம்தான் முக்கியம்." என்ற இந்திராவை அணைத்துக்கொண்டாள் வேணி.

"உன் மனசு எனக்கு புரியுது இந்து. நிச்சயம் நான் சந்தோஷமா இருப்பேன். நீ வீணா கவலைப்படாத, அப்படியே ஒரு பிரச்சனை வந்தாலும் நீங்க ரெண்டு பேரும் என்னை பார்த்துக்க மாட்டிங்க?" என்று அவள் சொல்லவும், "கண்டிப்பா!" என்று பெண்கள் இருவரும் சேர்ந்து சொல்ல மகிழ்ச்சியாக சிரித்த வேணி,

"ஏய் மூணு பேரும் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாம்." என்று சொல்ல, மூன்று பேரின் அழாகான சிரிப்பும் இந்துவின் அலைபேசியில் அழகாக பதிவு செய்யப்பட்டது.

"டென்ஷன் ஆகாத வேணி, உன்னை போய் யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா?" பதற்றத்தில் தன் கரங்களைப் பிசைந்து கொண்டு ஜானகியின் அறைக்கு வெளியே நின்றிருந்த வேணிக்கு ஆறுதல் கூறினாள் அஜூதியா.

"இல்லை அஜூ, அவங்க அம்மா பேசினதுதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு."

"என்ன அப்படி சொல்லிட்டாங்க, பொண்ணு கொஞ்சம் படிச்சிருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. ஆனா அதுக்குத்தான் உன் ஆளு படிக்கலைன்னா என்ன, கல்யாணத்துக்கு அப்புறம் படிச்சிக்கலாம்னு சொல்லிட்டாரே அப்புறம் என்ன ரிலாக்ஸா இருடி." என்று வேணியைத் திடப்படுத்திய அஜூதியா அவள் இன்னும் பதற்றமாக இருக்கவும், "ஏய் இந்து நீ கொஞ்சம் சொல்லுடி, நான் சொன்னா கேட்கவே மாட்டிக்கிறா." என்று இந்துவை அழைக்க, சலிப்பாக தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து அவர்களிடம் வந்தாள்.

"இப்போ என்ன, இவன் இல்லைன்னா இந்த உலகத்துல வேற ஆம்பளைங்களே இல்லையா? வேண்டாம்னா போறாங்க. வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம், இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?" என இந்து அலட்டிக்கொள்ளாமல் சொல்ல,

வேணி தன் கண்களில் நீர் கோர்க்க, "என்ன அஜூ..." என அஜூதியாவைப் பரிதாபமாக பார்க்க இந்துவை முறைத்த அஜூதியா,

"ஏன்டி உன்னை சமாதானம் செய்ய கூப்பிட்டா, நீ அவளை இன்னும் அழ வைக்கிற..." என்றாள்.

"நான் சொன்னதுல என்ன தப்பு? வேணி படிக்கலைன்னு தெரிஞ்சு தானே வந்தாங்க, இப்போ பொண்ணு படிக்கலைனா என்ன அர்த்தம்? இதுல அந்த மாப்பிள்ளை சார் கல்யாணத்துக்கு அப்புறம் படிச்சா போச்சுன்னு சொல்றாரு."

"ஏய் இதுல என்னடி தப்பு இருக்கு?"

"இருக்கு அஜூ, ஏன் இல்லை? வேணிக்கு விருப்பம்னா கல்யாணத்துக்கு அப்புறம் வேணும்னா படிக்கட்டும்னு சொல்றது சரி. அதை விட்டுட்டு படிச்சே ஆகணும்னு ஒருவிஷயத்தை திணிக்கிறது தப்பில்லை?"

"ஏய் வேணி படிச்சா நாளைக்கு பிறக்க போற குழந்தைங்க படிப்புக்கு நல்லதுன்னு நினைச்சு சொல்லிருக்கலாம்ல."

"இவ்வளவு பெரிய கோடீஸ்வரன் குழந்தைங்க படிப்புக்கு ஒரு ட்யூஷன் வைக்க மாட்டானா? எனக்கு என்னமோ இவங்களை புடிக்கவே இல்லை. இவன் படிக்க போன்னு சொல்றான், அந்த அம்மா இவக்கிட்ட பீரியட்ஸ் எல்லாம் ஒழுங்கா வருமா? எப்ப வரும்? தைராய்டு இருக்கா? பிசிஓடி இருக்கான்னு எல்லாம் கேட்குது எனக்கு புடிக்கலை."

"ஏய் இதெல்லாம் சில பேர் கேட்குறதுதான்."

"எப்போ? பொண்ணு பார்க்க வந்தன்னைக்கேவா? இவங்க கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறாங்களா, இல்லை குழந்தை பெத்து குடுக்குறதுக்கு மெஷின் தேடுறாங்களா? அவங்ககிட்ட நல்லா பணக்கார திமிர் தெரியுது." என்று இந்து தீவிரமாக சொல்ல,

"ஏய் இல்லதாவங்களே சிலர் திமிரா இருக்கும் பொழுது, பணம் இருக்கிறவங்க கொஞ்சம் திமிரா இருக்கிறதுல தப்பில்லையே? எல்லாத்துக்கும் மேல எனக்கு இவங்கள பார்த்தா அவ்வளவு திமிர் இருக்கிறவங்களா தெரியல. இவங்களவிட மோசமானவங்க எல்லாம் இருக்காங்க. நம்மக்கிட்ட நல்லாதான்டி பேசினாங்க. உன் கண்ணுக்குதான் எல்லாம் தப்பாவே தெரியுது." என்று சொல்ல,

'இல்லை' என்பது போல தன் தலையை இடவலமாக ஆட்டி மறுத்த இந்திரா, "பணம் உங்க கண்ணை மறைச்சிருச்சு, முக்கியமா வேணிக்கு." என்று அவள் பக்கம் திரும்பிய இந்திரா, "அவன் பணம் உன்னை யோசிக்கவே விடமாட்டிக்கிது." என்று கூறினாள்.

கண்கள் கலங்க இந்திராவைப் பார்த்த வேணி, "ஆமா பணம் என் கண்ணை மறைச்சிருச்சு, அதுல என்ன இருக்கு? நான் கட்டியிருக்க இந்த புடவை..." என தன் புடவையின் முந்தானையை உயர்த்தி அதில் தையலிடப் பட்டிருந்த கிழிந்த பாகத்தைக் காட்டியவள், "எனக்கே எனக்குன்னு ஒரு டிரஸ், நான் விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து போட்டதே கிடையாது. யாராவது வேண்டாம்னு தூக்கிப் போட்ட ட்ரெஸைதான் இப்போவரை தச்சு தச்சு போட்டுட்டு இருக்கேன். இதோ..." என தன் விரலைக் காட்டியவள்,

"இன்னைக்கு காலையில தைக்கும் பொழுது என் விரல்ல ஊசி குத்தினது. ஒன்னு இல்லை, பல தடவை குத்தியிருக்கு, காயம் சின்னதுதான்." என தன் விரலை சுருக்கி அளவைக் காட்டியவள், "ஆனா வலி ரொம்ப பெருசு." கண்ணீர் வழிய கூறினாள். வேணிக்கு தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது, பேசவே முடியவில்லை. ஆனாலும் பேசினாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேசினாள்.

"இந்த செருப்பு..." என தன் காலில் பொருந்த மறுக்கும் காலணியைக் காட்டியவள், "என் சைஸ்க்கு நான் போட்டதே கிடையாதுடி." என நீண்ட பெருமூச்சை விட்டவள்,

"ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன், இனியாவது எனக்கு புடிச்ச மாதிரி வாழணும்னு நினைக்கிறது தப்பா? உங்கள மாதிரி என் வாழ்கை இல்லை." என்றவள் அஜூதியாவைப் பார்த்து, "உனக்கு அப்பா, அம்மா இல்லைனாலும் அவர் உனக்காக விட்டுட்டு போன பணம் இருக்கு. உனக்கு..." என இந்திராவைப் பார்த்தவள், "மாமா உன்னை பார்த்துக்காட்டாலும் மாசம் மாசம் ஏதோ உன் செலவுக்காக அனுப்புறார்ல, ஆனா எனக்கு என்ன இருக்கு? அடுத்தவங்க கழிச்சு போடுற கிழிஞ்ச ட்ரஸும், வேண்டாம்னு ஒதுக்குற சேராத செருப்பையும் தவிர வேற என்ன இருக்கு? எதுவுமே இல்லை.

இதே சாபமான வாழ்க்கை என் வாழ்நாள் முழுக்க எனக்கு வேண்டாம்னு நினைக்கிறதுல என்ன தப்பு இருக்கு? நான் வசதியா வாழணும்னு ஆசைப் படுறேன்டி. இந்த சம்பந்தம் ஒன்னும் நாம தேடி போலையே, அவங்களே விரும்பி வந்திருக்காங்க. என்னை மாதிரி பொண்ணுக்கெல்லாம் இப்படிப்பட்ட சம்பந்தம் அமைவது பெரிய விஷயம். ஸோ இந்த சம்பந்தம் கிடைச்சா நான் சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு தோணுது அவ்வளவு தான்." என்றவள், அப்படியே நாற்காலியில் தோய்ந்து அமர்ந்தாள்.

வேணி பேசியதில் அஜூதியாவுக்கு கண்களெல்லாம் கலங்கிவிட, இந்திராவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவள் வேணியின் நலனுக்காக பேசியிருக்க, அது வேறுமாதிரி அவளைக் காயப்படுத்திவிட்டதே என வருந்தியவள், "சாரி வேணி இனிமே இதுபத்தி பேச மாட்டேன். உன் விருப்பம் எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே. எப்பவும் நான் உன் கூடவே இருப்பேன்." என்று கூறினாள்.

இந்திராவை அணைத்துக்கொண்ட வேணி, "தேங்க்ஸ்டி." என்று சொல்ல, தோழிகள் மூவரும் அணைத்துக் கொள்ள, "எதையும் யோசிக்காம ரிலாக்ஸா இரு. இந்த அலைன்ஸ் கண்டிப்பா நல்லபடியா நடக்கும்." என்ற இந்திரா, வேணியை ஆறுதல்படுத்தினாள்.

அதே நேரம் அங்கு வந்த ஜானகி அஜூதியாவை அழைத்து, "தம்பி வேணிக்கிட்ட தனியா பேசணும்னு சொல்றாங்க. ரெண்டு பேரையும் கார்டனுக்கு கூட்டிட்டு போமா." என்று சொல்ல,

சரி என்றவள் வேணியையும் வேணியைப் பெண்பார்க்க வந்த திலீப்பையும் அழைத்துக் கொண்டு கார்டன் சென்றவள், அவர்கள் அமர்ந்து பேச இரு நாற்காலிகளைப் போட்டுட்டு, "பேசிட்டு இருங்க." என்று இருவரையும் பார்த்து பொதுவாக கூறியவள், தன் தோழியின் காதில், "போல்டா பேசு." என்று சட்டென்று கூறிவிட்டு, நாகரிகம் கருதி விலகி சென்றுவிட்டாள்.

வேணிக்கு முதன் முறை ஒரு ஆடவனுடன் தனியாக அமர்ந்திருப்பதை எண்ணி, முகமெல்லாம் வியர்த்துவிட, தலை கவிழ்ந்த நிலையில் அமர்ந்திருந்தாள். ஒன்று, இரண்டு நிமிடங்கள் அமைதியாக அவளைக் கவனித்த திலீப், வேணி எதுவும் பேசாமலே தலை கவிழ்ந்த நிலையிலே அமர்ந்திருக்கவும் சிறு புன்னகையுடன், "என்னை புடிச்சிருக்கா?" என்று வினவினான்.

ஆணவன் திடீரென்று இவ்வாறு கேட்கவும், ஒருவித படபடப்புடன் நிமிர்ந்து பார்த்த பெண்ணவள் அவனது ஊடுருவும் பார்வையில் முகம் சிவக்க குனிந்துவிட,

"நீங்கதான் அழகுன்னு பார்த்தா உங்க வெட்கம் அதைவிட அழகா இருக்கே!" என்று குறும்பாக சிரிக்க, வேணிக்கு ஒன்றுமே ஓடவில்லை. எங்கையாவது சென்று ஒளிந்து கொள்ளலாம் போல இருக்க, முகம் நன்கு சிவந்து விட்டது.

"எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு, உங்களுக்கும் என்னை புடிக்கும்ன்னு நினைச்சுதான் வந்தேன். ஆனா நீங்க பதில் சொல்லாமல் இருக்கிறதை பார்த்தா உங்களுக்கு என்னை பிடிக்கலை போல? சரிங்க, நான் கிளம்புறேன்." என திலீப் வேண்டுமென்றே தன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள,

"அச்சோ புடிச்சிருக்குங்க..." என்று வேணி பதற்றத்தில் சொல்லிவிட, தன் கரங்களைக் குறுக்கே கட்டிக்கொண்டு அவளை அழுத்தமாக பார்த்த திலீப்,

"ம்ம்... உங்களை பேச வைக்க ஏதாவது ஷாக் ட்ரீட்மெண்ட் தேவைப்படுது." என்று சொல்லி சிரிக்க, இப்பொழுது வேணியும் சிரித்தாள். பெண்ணவளை சில நொடிகள் இமை தட்டாமல் பார்த்தான்.

"அழகா இருக்கீங்க வேணி! வெட்கப்படும் பொழுது, சிரிக்கும் பொழுது, இதோ இப்படி பார்க்கும் பொழுதுகூட அவ்வளவு அழகா இருக்கீங்க. வேணி யு ஆர் டம் கார்ஜியஸ்!" மனம் உருகி கூறினான்.

ஆணவனின் கவிதை பேச்சில் பெண்ணவளும் மயங்கினாள். இப்பொழுது அவளது மென்கரங்களை மென்மையாக பற்றி, தன் கரங்களுக்குள் வைத்துக் கொண்டவன், பெண்ணவள் அதிர்ந்து தன் கரத்தை எடுத்துக் கொள்ளும் முன்பே,

"இனிமே உங்களுக்காக யார் இருக்காங்கன்னு நீங்க நினைக்காதீங்க, நான் இருக்கேன். சகலமுமா நான் இருக்கேன் வேணி. கண்ணுல வச்சு பார்த்துக்கிறேன். ஐ லவ் யு வேணி." என்று அவள் முன்பு மண்டியிட்டு சொல்ல, அவளது விழிகளின் ஓரம் துளிர்த்த கண்ணீர், அவளது மனப்போராட்டத்தை சொல்ல அதை துடைத்துவிட்டவன்,

"இனிமே இந்த கண்ணீரை நான் பார்க்கவே கூடாது." என்றான். ஆக ஆணவனின் உருக்கமான காதல் பேச்சில் முதலில் சிந்தனை இழந்தாள். அவன் கரங்களுக்குள் தன் கரம் சிறைப்பட்டிருப்பதை மறந்தாள். பின் தன்னையே மறந்தாள். இறுதியில் காதலில் விழுந்தாள்!

"இதோ வேணியும் திலீப்பும் வந்துட்டாங்க." என்ற திலீப்பின் தாய் மகேஷ்வரி, "அப்புறம் நாங்க கிளம்புறோம்மா, வீட்டுக்கு போய்ட்டு பெரியவங்ககிட்ட பேசிட்டு என்னைக்கு நிச்சயம் வச்சிக்கலாம்னு சொல்றோம்." என்று ஜானகியிடம் கூறியவர், "வேணி கிளம்புறேன்மா." என்றவர் அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு, தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து செல்ல, அவரை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்த ஜானகிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.
 
Last edited:
Status
Not open for further replies.
Top