வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இராவணனே என்னை சிறை எடு - கதை திரி

Status
Not open for further replies.
"நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி வேணி, நல்ல இடம் அமைஞ்சிருக்கு. எப்பவும் சந்தோஷமா இருக்கணும்." என்றவர்,

"அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் நல்ல வரன் வந்துருச்சுன்னா நான் நிம்மதியா இருப்பேன்." என்று அஜூதியாவையும் இந்திராவையும் பார்த்து சொல்ல,

"என்னது கல்யாணமா? ஆள விடுங்க, இன்னைக்கு நைட் பாம்பே கிளம்புறேன். இந்த இன்டெர்வியூவ் மட்டும் ஓகே ஆச்சு, உங்க யார் கண்ணுலையும் நான் படவே மாட்டேன்." என்ற இந்திரா வழக்கம் போல துடுக்காக பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, ஒரு பெருமூச்சுடன் அஜூதியாவைப் பார்த்தார் ஜானகி.

"நீ என்ன முழிக்கிற? அவளை மாதிரி நீயும் ஏதாவது சாக்கு சொல்ல போறியா?"

"கல்யாணம் இப்போ வேண்டாம்மா, நான் வேலைக்கு போகணும்னு இருக்கேன்." என்று சொல்ல,

"வேலைக்கு போனா கல்யாணம் பண்ண கூடாதுன்னு ஏதும் இருக்கா என்ன? வேலை கிடைச்சா பாரு, ஆனா கல்யாணம் பண்ணியே ஆகணும். உனக்குன்னு ஒருத்தன் வந்தா அவன் உன்னை பார்த்துக்க போறான்."

"ஏய் உனக்கே உனக்காக ஒருத்தன் வேணும், அவன் உனக்காக எதை வேணும்னாலும் செய்யணும், உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும் இப்படியெல்லாம் உனக்கு ஆசையே இல்லையா அஜூ?" என்று வேணியும் ஜானகியுடன் இணைந்துகொண்டு சொல்ல,

'உனக்கே உனக்காக ஒருத்தன் வேணும், அவன் உனக்காக எதை வேணும்னாலும் செய்யணும்' என்று வேணியின் சொற்களைக் கேட்ட மறுநொடி, பெண்ணவளின் மனதிற்குள் மின்னலைப் போல ராவணனின் இறுகிய முகம் சட்டென்று வந்து மறைய அஜூதியா அதிர்ந்து விட்டாள்.

"அப்படித்தான் நல்லா சொல்லு வேணி. நீதான் இந்திராவுக்கும் அஜூதியாவுக்கும் எடுத்து சொல்லணும்." என்ற ஜானகி அஜூதியாவின் தலையை வாஞ்சையுடன் தடவி,

"உனக்கும் இதுபோல எல்லாம் நடக்கணும், புடவையில உன்னை பார்க்கணும்னு எனக்கும் ஆசை இருக்கும்ல..." என்று சொல்ல, அஜூதியா மீண்டும் அதிர்ந்தாள்.

அவளின் அவன் அவள் கண் முன்னே நின்று கொண்டு வசீகரமாய் சிரிக்க, சட்டென்று பெண்ணவள் கண்களை மூடிக்கொள்ள, இப்பொழுது அவளது மனக்கண்ணிலும் அவளின் மாயவனே! ஒற்றை கண்ணடித்து அழகாய் சிரித்தான், அஜூதியா அசந்துவிட்டாள்.

"அஜூ நான் சொல்றது புரியுதா?" இரண்டு, மூன்று முறை ஜானகி உலுக்கவும், "ஹான்!" மாயவன் காட்டிய மாயாஜாலத்தில் இருந்து விழித்துக் கொண்டவள் மலங்க விழிக்க,

"அதான் இதுவரை இரண்டு, மூன்று சம்பந்தம் வந்துச்சு, நீ வேண்டாம்னு சொன்னதுனால உன்னை கட்டாயப்படுத்த விரும்பாம நான் விட்டுட்டேன். ஆனா இனிமே அப்படி இல்லை, நல்ல சம்பந்தம் வந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கணும் ஓகேவா? வேலை கூட எப்பவும் கிடைக்கும், ஆனா கல்யாணம் அப்படி கிடையாது." என்று இன்னும் ஜானகி பேசிக்கொண்டே இருக்க, எங்கே அது அஜூதியாவின் காதில் விழுந்தால் தானே...

அவள்தான் ஜானகியின் பின்னால் நின்றுகொண்டு தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாய் சிறையெடுத்துக் கொண்டிருக்கும், தன் மாயவனை அல்லவா தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

'என்ன இது? திடிரென்று எங்கு பார்த்தாலும் அவன் உருவமே தெரிகிறது' என்று எண்ணி, விட்டால் போதும் என தான் இருக்கும் அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டவளுக்கு, எதை பற்றியும் சிந்திக்காது அந்த பரந்தாமனிடம் இருந்து தன்னைக் கம்பீரத்துடன் காப்பற்றி சென்றது, தன் தேவையைப் புரிந்து தனக்காக ஆடை வாங்கி கொடுத்தது என அன்று ராவணன் செய்த ஒவ்வொன்றும், இன்று இந்த நொடி நினைக்க நினைக்க, ஆணவனின் நிமிர்வு பெண்ணவளைப் பயங்கரமாக ஈர்த்தது.

பரந்தாமனை அனல் தெறிக்க பார்த்தபடி துப்பாக்கியால் சுட்டது அன்று பயத்தைக் கொடுத்தது. ஆனால் இப்பொழுது பிடித்தது. கொலை செய்வது பாவம் என தெரிந்தும் பிடித்தது. அந்த பாவத்தை செய்தவனை மிகவும் பிடித்தது. அதுவும் தனக்காக, தனக்காக மட்டுமே செய்தவனை இதோ அளவுக்கு அதிகமாக பிடிக்கிறது. தன்னை அழுத்தமாக பார்த்த அந்த கனல் விழிகள் அன்று அச்சத்தைக் கொடுத்தது. ஆனால் இந்த நொடி மிகவும் பிடித்தது. ஆக அவன் கழுத்தில் சர்ப்ப வடிவில் இருந்த டாட்டூ துவங்கி, அவன் முதுகில் பாதி தெரிந்த ராஜாளி ரெக்கை வடிவு டாட்டூ, வலது காதோரத்தில் இருந்த மச்சம் என அவன் தொடர்புடைய அனைத்தும் அவளது நினைவுகளை நிறைத்து, முதல் முதலாக பெண்ணவளுள் என்னென்னவோ செய்தது.

விழி மூடினால், விழி திறந்தால் என தன்னை விடாமல் துரத்தும் ராவணனையும் அவனது நினைவுகளையும், அவனின் கம்பீரம் நிறைந்த முகத்தையும் விரட்ட முயன்று வெற்றி கண்டவள், 'தேவையில்லாததை யோசிக்க கூடாது அஜூ, இது சரியில்லை' என தன்னைத் தானே திட்டிக்கொண்டு கண்களை மூடிய பிறகு சில மணிநேரத்தில் உறங்கினாள்.

பாழடைந்த கட்டிடம்! அதில் இருக்கும் அழுக்கு படிந்த சுவர்கள்! அந்த இரவு நேரத்தில் தனிமையில் அங்கு நின்றிருந்த அஜூதியாவுக்கு பயத்தில் உடல்லெல்லாம் வியர்வையில் குளித்திருக்க, அங்கிருந்து தப்பிக்கும் வழி தெரியாது தவிக்கிறாள். அப்பொழுது, "தப்பிக்கலாம்ன்னு நினைக்கிறியா அது நடக்காது, உன்னால முடியாது." என்று கேட்ட பரந்தாமனின் குரலில் சர்வமும் அடங்கி போக,

'நீயா? நோ! யாரவது வாங்க, காப்பாத்துங்க...' என கத்திக்கொண்டு ஓடுகிறாள். அவன் எக்காளமாய் சிரித்தபடி அவளை விடாமல் துரத்துகிறான். அவளும் விடாமல் ஓடுகிறாள். ஒரு கட்டத்தில் தடுக்கி கீழே விழுகிறாள். அவன் மெல்ல மெல்ல நிதானமாய் அவளை நெருங்கி வர,

"காப்பாத்துங்க..." என வாய்விட்டு கத்தியபடி அஜூதியா கட்டிலில் இருந்து கீழே விழுந்தாள். பெண்ணவள் அச்சத்துடன் கண்விழித்தாள். அங்கே பரந்தாமனும் இல்லை, பழைய கட்டிடமும் இல்லை. வழக்கமாக அவளும் இந்திராவும் உறங்கும் அறையில், இந்திரா இன்டெர்வியுவிற்காக மும்பை கிளம்பியிருந்ததால் அவள் மட்டும் இருந்தாள்.

அந்த சம்பவத்திற்கு பிறகு இது போல அடிக்கடி வரும் கனவுதான். ஆனால் துணைக்கு இந்திரா இருந்ததால், அவள் சமாதானம் செய்து பார்த்துக்கொள்ள, அஜூதியா கொஞ்ச தைரியமாக இருப்பாள். ஆனால் இப்பொழுது மிகவும் பயமாக இருந்தது. 'இந்த பாதிப்பில் இருந்து எப்பொழுதுதான் தனக்கு விடுதலை கிடைக்கும்' என்று எண்ணியவளை அவள் இப்பொழுது இருக்கும் அறையே பயத்தைக் கொடுத்தது.

ஒருவித அச்சத்துடன் அமர்ந்திருந்தவளுக்கு காற்றில் ஜன்னல் படபடவென அடிக்கும் சத்தம் கூட நடுக்கத்தைக் கொடுக்க, எழுந்து ஜன்னலை மூடியவளின் கண்களில் டேபிளில் மடித்து வைக்கப்பட்ட துணிகள் பட, மெல்ல நடந்து அங்கே சென்றவள் ஒருகணம் தன் விழிகளை மூடி திறந்து, அங்கே இருந்த ராவணனின் கருப்பு நிற சட்டையை, சில நொடிகள் தயக்கத்திற்கு பிறகு தன் கரத்தில் எடுத்தாள்.

சிறையெடுப்பானா?
FOR COMMENTS PLEASE CLICK HERE

 
Last edited:
ராவணனே என்னை சிறை எடு 8
1.jpg

மக்கள் கூட்டம் அலைமோத ஈகிள் பிளாசாவில் திலீப்பின் கரத்தைத் தயக்கம் இன்றி, பிடித்துக்கொண்டு கடை கடையாக வேணி சுற்றிக் கொண்டிருக்க, அவளுக்கு துணையாக வந்த அஜூதியாவோ இரண்டு கடை ஏறி இறங்கியதுமே சோர்ந்து போனவள், "நான் வரல, நீங்க மட்டும் போங்க." என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, அங்கே ஓரமாக போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று கண்களை மூடி அமர்ந்தாள்.

மறுநொடி அவன் வந்தான்; சிரித்தான்; கண் சிமிட்டினான்; முறைத்தான்; அவள் திணற திணற விதவிதமாய் காட்சி தந்தான். ஆனால் பெண்ணவள் இம்முறை அதிர்ச்சியெல்லாம் அடையவில்லை. ஆனால் அவன்மேல் செல்ல கோபம் மட்டும் கொண்டாள்.

"யார் நீ? உன் பேரு என்ன? எதுவும் தெரியாது. அன்னைக்கு புயலா மறைஞ்சு போன, இப்போ என் கண்ணு முன்னாடி வந்து வந்து மாயாஜாலம் செய்யிற. எங்க இருக்க நீ? உன்னை நான் எப்படித்தான் கண்டுபிடிக்கிறது? படுத்துறடா நீ..." என ராவணன்மீது ஊடல் கொண்டவள் மெல்ல கண்விழிக்க,

அப்பொழுது அவளைக் கடந்து சென்ற அனைவரின் பார்வையும் அவள்மீதே இருக்கவும், முதலில் புரியாது விழித்த அஜூதியா, பின்புதான் தன் மனதிற்குள் பேசுகிறோம் என்று எண்ணி சத்தமாக பேசியிருக்கின்றோம் என்பது புரிந்து தன்னைத் தானே திட்டிக்கொண்டு, ‘பைத்தியமாகிட்ட அஜூ, அவன் உன்னை பைத்தியமாக்கிட்டான்...’ என்று மனதிற்குள் புலம்பியவளின் மனதில் மீண்டும் விதவிதமாக ராவணனின் நினைவுகளே வலம் வரவும்,

"என்னாச்சு அஜூ உனக்கு?" என தனக்குத் தானே கேட்ட அஜூதியா, தன் இதழில் புன்னகை மலர நெற்றியில் வெளிப்படையாக தட்டிக்கொள்ள, அப்பொழுது ஜானகியிடம் இருந்து அழைப்பு வந்தது.

"என்னமா பண்றீங்க?" என்று கேட்ட ஜானகியிடம்,

"பிளாசால தான்மா இருக்கோம்." என்றாள்.

"ம்ம், ரொம்ப நேரம் வெளியில இருக்க வேண்டாம்மா, சீக்கிரம் வந்துருங்க."

"சரிமா."

"ரெண்டு பேரையும் தனியா அனுப்ப வேண்டாம்னுதான் நான் உன்னையும் சேர்த்து அனுப்பி வச்சேன். நீ பார்த்து சீக்கிரம் கூட்டிட்டு வந்திடு சரியா?" என மீண்டும் சொன்னவரின் குரலில் இருந்த தவிப்பைப் புரிந்து கொண்டவள்,

"கவலைப்படாதீங்க, நான் பார்த்துக்கிறேன். ரெண்டு பேரும் கடைக்குத்தான் போயிருக்காங்க. நீங்க தேவையில்லாம கவலைப்படாதீங்க ஜானகிமா." என்றவள் அவரிடம் பேசிவிட்டு, இந்திராவிடம் இன்டர்வியூவ் பற்றி கேட்பதற்காக அவளுக்கு அழைப்பு விடுத்தாள்.

"ஹாஸ்பிட்டல் பிடிச்சிருக்கா இந்து?" போடப்பட்டிருந்த கண்ணாடி தடுப்பு சுவரில் தன் கரங்களை ஊன்றியபடி, கீழே போய்வரும் ஆட்களை வேடிக்கை பார்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள்.

"ம்ம், ரொம்படி... எவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல் தெரியுமா?" என இந்து மகிழ்ச்சியுடன் கூற,

"அப்புறம் சொல்லுங்க நர்ஸ் மேடம், எப்போ ட்யூட்டில ஜாயின் பண்றீங்க?" என்ற அஜூதியா, எஸ்கலேட்டரில் தன் சகாக்களுடன் மேலே ஏறிவரும் ராவணனைப் பார்த்து, "இது சரி வராது, சீக்கிரம் பைத்தியமாக போற." என வாய்விட்டே கூறிவிட, அதைக் கேட்ட இந்திரா, "என்னாச்சுடி?" என்று கேட்க,

"ஒன்னும் இல்லை, நீ நேர்ல வா பேசலாம். இப்போ நீ சொல்லு, எப்போ ஜாயின் பண்ணணும்?" என்றவளின் கண்களுக்கு, எப்பொழுதும் காட்சி தந்த சில வினாடிகளில் மறைந்துவிடுபவன், இன்று வெகு நேரம் தெரியவும், 'எனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு போலையே' என தனக்குள்ளே கூறி, தன் பார்வையை அவனை விட்டு திருப்பியவளின் மனதிற்குள், ஏதோ தோன்றவும் திரும்பி மீண்டும் அவன் இருந்த திசை நோக்கி பார்க்க, வேக எட்டுக்களுடன் அவன் வந்துகொண்டிருந்தான். அஜூதியாவுக்கு ஒருகணம் ஒன்றுமே விளங்கவில்லை.

இது அவன் தானா? தான் பார்த்துக் கொண்டிருப்பது நிஜம் தானா? என்கின்ற குழப்பத்தில் தன்னை மறந்து அப்படியே நின்றுவிட, அவள் பார்க்க அவள் கண் முன் அவளைக் கடந்து சென்றவன்,

"ராவணன் சார்..." என யாரோ தன் பெயரை அழைக்கவும் நின்று திரும்பி பார்க்க, நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் ராவணனின் முன்பு வந்து, "கான்ஃப்ரன்ஸ் ரூம் அங்க சார்." என்க, அவர் சொன்ன இடம் நோக்கி அவன் செல்லவும், சுயம் பெற்றவளுக்கு தான் கண்டது கனவல்ல, அது நிஜம்தான் என்பதை உள்வாங்கிக் கொள்ளவே அவகாசம் தேவைப்பட, கனத்த மூச்சை வெளியிட்டவளுக்கு தன்னவனை நேரில் கண்டதில் உள்ளுக்குள் இன்ப படபடப்பு.

இந்த படபடப்பு தனக்கு சரியா? தெரியவில்லை. தன் மனதில் இருக்கும் ஆசை சரியா? தெரியவில்லை. அவன்மீது கொண்ட காதல் சரியா? தெரியவில்லை. ஆனால் இதயம் இறக்கை முளைத்தது போல பறந்துகொண்டிருந்தது. மூளை சரியா தவறா என்ற யோசனையில் இருக்க, கால்களோ தன்னிச்சையாக அவன் இருக்கும் திசை நோக்கி சென்றது.

அங்கே அலைபேசியில், "அஜூ லைன்ல இருக்கியா?" என கேட்டு ஓய்ந்து போன இந்து, தன்னை யாரோ அழைக்கவும், 'சிக்னல் கிடைச்சிருக்காது நைட் பேசிக்கலாம்' என அலைபேசியை அணைத்துவிட, இது எதுவுமே தன் கருத்தில் பதியாது அந்த கண்ணாடி அறையின் வாசலில் சென்று நின்றாள் அஜூதியா.

இதயம் வேகமாக துடிக்கத் துவங்க, மனதில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொண்டது. நேற்று வேணி பேசும் பொழுது, எப்போது இவன் முகம் மனதில் மின்னலென வெட்டி மறைந்ததோ, அப்பொழுது அவளுக்குள் எழுந்த பதட்டம் இப்பொழுது மீண்டும் அவளுடன் ஒட்டிக்கொள்ள, துடிக்கும் தன் இதயத்தை தன் கரம் கொண்டு அழுத்திப் பிடித்து மூச்சை வெளியிட்டு தன்னை நிதானப்படுத்தினாள்.

பாதி திறந்திருந்த அந்த அகலமான கண்ணாடி கதவு வழியாக தன்னவனைத் தேடி அறையை நோட்டமிட்டாள். அப்பொழுது அவளது பார்வை நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் முகத்தின்மீது படர்ந்து அப்படியே உறைந்துவிட்டது. தன்னை பகல், இரவென்றுகூட பார்க்காது மாயங்கள் காட்டி, ஒருபாடு படுத்திய தன் மாயவனின் முகத்தைப் பார்த்ததும் அவனிடம் இருந்து தன் கண்களைப் பிரிக்க முடியாமல் சிலையாக நின்றுவிட்டாள்.

"யார் நீங்க? இங்க என்ன பண்றீங்க?" என்ற முரட்டு குரலில், திடுக்கிட்ட பெண்ணவள் தன் எதிரே நின்றிருந்த ஆணவனை, "ஹான்...!" என கேள்வியாக பார்த்தாள்.

"உங்களைத்தான்? என்ன வேணும்? இங்க என்ன பண்றீங்க?"

"பார்க்கணும்."

"யாரை?" என்றவனிடம் உள்ளே இருந்த ராவணனைக் கை காட்ட,

"அந்திரன் சாரையா?"

"ம்ம்... அவர் பேர் அந்திரனா?" கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்.

"ம்ம் அந்திரன் ராவண ஈஷ்வரன்." என ராவணனின் முழு பெயரையும் கூறினான். ஆனால் அதில் ராவணன் என்ற பெயர் மட்டும் அஜூதியாவை வெகுவாய் கவர்ந்தது. அவன் ஒரு தடவைதான் கூறினான், ஆனால் பெண்ணவள் பலமுறை தனக்குள் தன்னவனின் பெயரை சொல்லி பார்த்துக்கொண்டாள். அந்த ஆடவனோ அஜூதியாவை ஒருகணம் பார்த்துவிட்டு யோசனை வந்தவனாய், "தெரியும் சொல்றீங்க, ஆனா பேரு என்கிட்ட கேட்குறீங்க?" என்று கேட்க,

"பேர் தெரியாது, ஆனா அவங்களை தெரியும், அவங்களுக்கும் என்னை தெரியும். ப்ளீஸ் உள்ள விடுங்க, பேசிட்டு போய்டுறேன்." என்று கெஞ்சி கேட்க,

அவள் கெஞ்சவும் இரக்கமுற்றவன், போதாக்குறைக்கு ராவணனைத் தெரியும், அவனுக்கும் தன்னை தெரியும், என்று அவள் சொன்னதில், "சரி பார்த்துட்டு வாங்க." என உள்ளே அனுப்பிவைக்க, சுற்றும் முற்றும் என எதைப் பற்றியும் யோசிக்காத பெண்ணவள், தன்னவனிடம் பேச போகும் மகிழ்ச்சியில் கதவைத் திறந்தாள்.

உள்ளே, "பணம் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை, எனக்கு எப்படியாவது முடிச்சு கொடுத்திருங்க அவ்வளவுதான் ராவணன்." என்றவரிடம்,

"ம்ம் வேலை முடிஞ்சதும் தகவல் சொல்றேன்." என்ற ராவணன், தன் எதிரில் இருந்தவரிடம் கை குலுக்கிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழவும், அஜூதியா உள்ளே வரவும் சரியாக இருக்க,

அனைவரின் பார்வையும் உள்ளே நடந்து வரும் அவள்மீது இருந்தது. ஆனால் பெண்ணவளின் பார்வை மொத்தமும் அங்கு இறுகிய முகத்துடன் இறுக்கிப் பிடித்த கருப்பு நிற மடக்கி விடப்பட்ட ஷர்ட்டில், கிரேக்க சிலை போல நின்றிருந்த ராவணன்மீது பதிந்திருக்க, அவள் தன்னை நோக்கி நெருங்க நெருங்க அதீத கோபம் தனக்குள் முகிழ்த்த பொழுதும், அதை அனைவரின் முன்பும் காட்டாதவன் அவளை அழுத்தமாக பார்த்தபடி, "செக்யூரிட்டி!" என்றான் சத்தமாக.

அவனது கணீர் குரலில் திடுக்கிட்டவளின் பார்வை வட்டத்துக்குள், அப்பொழுதுதான் அங்கிருந்த மற்றவர்களும் தெரிய, 'இத்தனை பேர் இருக்காங்க, ச்ச... எதையும் கவனிக்காம வந்துட்டேன்' என்று எண்ணிய பெண்ணவளின் உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது.

ஆனால் அதெல்லாம் சில நொடிகளுக்குத்தான், 'விட்டால் இனி எப்பொழுது பார்ப்ப? யார் இருந்தால் என்ன? தைரியமா பேசு.' என அவளது காதல் கொண்ட மனம் அவளுக்குத் தைரியம் கொடுக்கவும் அவள் பேச வாயெடுப்பதற்குள்,

"உள்ள மீட்டிங் நடக்குதுனு தெரியாது? யார் இவங்களை உள்ள விட்டது?" என உள்ளே வந்த சீருடை அணிந்திருந்த செக்யூரிட்டியிடம் ராவணன் கோபமாக கேட்க,

"நான்தான் சார், உங்களைத் தெரியும் சொன்னாங்க." என்றான் செக்யூரிட்டி.

"அப்படி சொன்னா என்கிட்ட கேட்காம கண்டவங்களையும் உள்ள விட்ருவியா ஹான்? எனக்கு இவங்களை தெரியாது, ஜஸ்ட் டேக் ஹேர் அவே." என்றான் காட்டமாக.

'இவனுக்கு தன்னை தெரியவில்லையா என்ன? அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டானா?' என அவன் வீசிய அந்நிய பார்வையில், ஏற்கனவே குழம்பியிருந்த அஜூதியாவுக்கு அவன் உதிர்த்த வார்த்தையில் முகம் விழுந்துவிட்டது.

ஆனாலும் எப்படியாவது பேச வேண்டும் என்ற ஆவலில், "ஏங்க நான்தான், என்னை தெரியலையா? அன்னைக்கு பரந்த..." என தொடரப்போவதற்குள், "ஷட் அப்!" என அடிக்குரலில் கத்தியவன் அனைவரும் தன்னைப் பார்க்கவும்,

"யாருங்க நீங்க? சும்மா உளறிட்டு... கிளம்புங்க." என்றான் எரிச்சலுடன்.

அஜூதியாவுக்கு கண்களெல்லாம் கலங்கிவிட்டது. 'நிஜமாகவே மறந்துவிட்டானா என்ன?' என்று எண்ணியவளுக்குள் தொண்டைகுழி அடைப்பது போல தோன்ற, "என்னை ஞாபகம் இல்லையா?" என்றாள் பரிதாபமாக.

ராவணன் தன்னிடம் கத்துவது, அனைவரும் தன்னை ஒருமாதிரி பார்ப்பது, என தனக்கு நடக்கும் அவமானம் எதுவும் அவள் கருத்தில் பதியவே இல்லை. காதல் கொண்ட பெண்ணவளின் மனம் தன்னவனை மட்டும்தான் எண்ணி எண்ணி தனக்குள் மறுகியது. அவளுடைய நோக்கம் எல்லாம் அன்று நடந்ததை சொல்லி அவனுக்கு தன்னை ஞாபகப்படுத்தி, அவனிடம் எப்படியாவது ஓரிரு வார்த்தையாவது பேசிவிட வேண்டும் என்பதில் மட்டுமே இருந்தது.

ஆனால் அவனோ அவளது கேள்வியில் எரிச்சலுடன் தன் சிகையை அழுத்தமாக கோதி, தன் உணர்வுகளைக் காட்ட விரும்பாது தனது முகத்தைத் திருப்ப, "நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க." என்று அஜூதியா விடாப்பிடியாக அவன் முன்னால் வந்து நிற்கவும்,

அறையில் சலசலப்பு ஏற்படுவதைக் கவனித்த ராவணன், "சொன்னா புரியாதா? கெட் லாஸ்ட்!" என்று வேகமாக கையசைத்து கத்தியவன் கரம், தவறுதலாக அவள்மீது பட்டு அவளைத் தட்டிவிட, நிலை தடுமாறியவள் நாற்காலியில் தன் பெருவிரல் அடிபட கீழே விழபோனவள், இறுதி நொடியில் டேபிளை பிடித்துக்கொண்டு விழாமல் தன்னை சமநிலை படுத்திக்கொள்ள, ராவணனுக்கு நிஜமாகவே ஒருமாதிரி ஆகிவிட்டது.

அந்நேரம் நிலைமையை கையில் எடுத்துக்கொண்ட சந்ரு, "சாரி! ஏதோ மிஸ்அண்டர்ஸ்டேண்டிங், நான் என்னன்னு பார்க்கிறேன்." என்றவன் ராவணனுக்கு கண்ணைக் காட்டிவிட்டு,

"வாங்க மேம்." என்று அஜூதியா திரும்பி திரும்பி ராவணனை பார்க்க, வலுக்கட்டாயமாக அவளை அழைத்துக்கொண்டு வெளியேறினான்.

"அண்ணா உங்களுக்கும் என்னை தெரியலையா?" சந்ருவைப் பார்த்து கண்ணீர் வடிய அஜூதியா கேட்க, அவளது எந்த கேள்விக்கும் பதில் சொல்லாதவன், அவளை கீழே ஆள் அரவமற்ற கார் பார்க்கிங்கிற்கு அழைத்து சென்றான்.

"தெரிஞ்சவங்களா ராவணன்?" என அவனுடன் டீல் பேசவந்தவன், ராவணனைத் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே சென்ற அஜூதியா போன திசையைப் பார்த்தபடி ஆர்வத்துடன் கேட்க, அவனைத் தன் பற்களைக் கடித்தபடி அழுத்தமாக பார்த்த ராவணன், "இல்லை" என்றான் எரிச்சலுடன்.

ஆனால் அவனோ, "ஹான்! என்ன..." என்று ராவணனிடம் கேட்டுவிட்டு, அஜூதியாவையே எட்டி எட்டி பார்க்க, ஆத்திரத்தில் கண்ணாடி டேபிளை தட்டிய ராவணன், "இல்லை..." என்று இன்னும் சத்தமாக சொல்ல, டேபிள் அதிர ராகமாய் வந்த ராவணனின் அடிக்குரல் சீற்றத்தில், உடல் லேசாக அதிர ராவணனைப் பார்த்தவன், அவனது அனல் பார்வை கண்டு பயத்துடன் அவனைப் பார்க்க,

"இல்லைன்னு சொன்னேன்." என்றான் ராவணன்.

"ஓ" 'இதற்கு ஏன் இத்தனை ஆக்ரோஷம்' என்று எண்ணியவனுக்கு சில நொடிகளில் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.

"என்ன பண்றது சில விஷயத்தை சில பேருக்கு கத்தி, தட்டி புரியிறமாதிரி சொல்ல வேண்டியிருக்கு." தான் அடித்ததில் கீறல் விழுந்த அந்த தடித்த கண்ணாடி டேபிளை பார்த்தபடி எள்ளலாக கூறினான் ராவணன்.

'அந்த பெண்ணை பார்த்ததிற்கான எதிர்வினைதான் இது. ஆக டேபிளில் விழுந்த அடி தனக்கு விழவேண்டியது' என்பதை புரிந்து கொண்டவனின் முகம் கருத்துவிட, அதை திருப்தியாக பார்த்த ராவணன்,

"அவ்வளவுதான் வேலை முடிஞ்சதும் நான் கால் பண்றேன்." 'என்கிட்ட வேலையோட நிப்பாட்டிக்கணும்' என்னும் தொனியில் பேசிவிட்டு அங்கிருந்து வேக நடையுடன் வெளியேறினான்.

"சொல்லுமா என்ன விஷயம்? எந்த பிரச்சனையும் இல்லையே?" என அஜூதியாவிடம் தன்மையாக வினவினான் சந்ரு.

"நல்லா இருக்கேன் அண்ணா, அவருக்கு என்னை நிஜமாவே நியாபகம் இல்லையா அண்ணா?"

"அதெல்லாம் இருக்கு, அதுக்காக அங்க வந்தா நீ அப்படி பேசுவ? எங்களை பார்த்தா நாங்க யாருன்னு தெரியுதுல?" அவன் என்ன கேட்கிறான் என்று புரிந்து அஜூதியா தலையசைக்க,

"ம்ம்ம்... நாங்க கெட்டவங்கன்னா அங்க இருந்தவனுங்க எங்களைவிட ரொம்ப மோசமானவங்க. நீ அங்க வந்து அவங்க முன்னாடி ராவணன்கிட்ட ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசினா உனக்கு தான்மா பிரச்சனை."

"ஓ எனக்காகதான் அவர் அப்படி நடந்துக்கிட்டாரா?" என பெண்ணவள் இதழ் மலர கேட்க, சந்ருவுக்கு இவ்வளவு நடந்தும் புன்னகைக்கும் அஜூதியாவைப் பார்த்து சிரிப்புதான் வந்தது.

"ம்ம், சரி சொல்லுமா எதுக்கு வந்த?"

"அவரைப் பார்க்கணும் ண்ணா."

"அவருன்னா ராவண் பையாவையா?" வேண்டுமென்றே கேட்டான்.

"ம்ம்..." என்று அவள் முகம் சிவக்க தலையையசைக்கும் பொழுதே,

"உனக்கு என்ன வேணும் ஹான்?" என்று சீறியபடி வேகமாக அங்கே வந்த ராவணன், அஜூதியாவின் முழங்கையை இறுக்கமாக பிடித்து சுவற்றில் அவளை சாய்த்தபடி வினவினான்.

"அது வந்து... அது..." அவன் போட்ட சத்தத்தில், அவளால் பேச முடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போல வார்த்தைகள் வர மறுத்தது.

"சொல்லு..." தன் வலக்கரத்தை ஓங்கி சுவற்றில் குத்தியபடி அதட்ட, திடுக்கிட்டவள் இன்னும் சுவற்றுடன் ஒன்றி நிற்க தேவராஜ், விக்கி, சந்ரு என அவனது ஆட்களுக்கே அஜூதியாவைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆனாலும் ராவணன் இருக்கும்பொழுது ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் அமைதியாக இருக்க, ராவணனின் பார்வை மொத்தமாக அஜூதியா மீதுதான் பதிந்திருந்தது.

அத்தனை பயத்திலும் தன்னை அடிக்கடி தொட்டு தொட்டு மீண்டு கொண்டிருந்த, அவளது படபடத்த பெரிய விழிகளும் அது சிந்திய பார்வையும், இத்தனை ஆண்டுகள் அவனுக்குள் அடங்கிக்கிடந்த வாலிப உணர்வுகளைத் தட்டி எழுப்பி, ஆணவனை எங்கோ திசை தெரியா அடர்ந்த வனத்திற்குள் அழைத்துச் சென்று அவனைத் தவிக்க வைத்தது.

'நோ நோ... இவ என்னை என்ன பண்ணிட்டு இருக்கா?' என உள்ளுக்குள் திணறினாலும், வெளியே அதே அழுத்தமான பார்வையோடுதான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளது பிறை நுதலில் சிறிய கீற்றாய் இருந்த குங்குமம், உச்சந்தலையில் இருந்து வழிந்த வியர்வையில் களைந்து செந்நிற துளியாய் அவளின் புருவத்தின் ஓரத்தில் விழவா, வேண்டாமா என நின்றுகொண்டிருக்க, தன்னை மறந்து அதை துடைக்கப் போன தன் விரல்களை சிரமப்பட்டு அடக்கியவன், தன் பார்வையைத் திசை திருப்ப முயற்சித்தபொழுது, அவளின் உதட்டிற்கு மேல் குட்டி குட்டியாக அரும்பியிருந்த வியர்வைத் துளிகளைப் பார்த்தவன்,

தன் கரம் கொண்டு அவளின் இடை வளைத்து, அப்படியே மடியில் அமரவைத்து, தன் இதழ் கொண்டு துடைத்து, அவள் விலக, இவன் மறுக்க என விடாப்பிடியாக அவளை இன்னும் தன்னுடன் நெருக்கமாக இழுத்தணைத்து, அவள் கெஞ்ச, இவன் மிஞ்ச என அவளின் செந்நிற இதழையும் மூச்சுமுட்ட சேர்த்தணைத்து, அவளது வளைந்த கழுத்தில் இளைப்பாற முகம் புதைத்து, தன்னவளின் நீண்ட அடர்ந்த கேசத்தின் சரிவில் வாசம் பிடித்து என அவனது மனதில் முகிழ்த்த பொல்லாத ஆசைகளின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்லவும்,

மிக சிரமப்பட்டு தறிகெட்டு ஓடிய தன் மனதிற்கு கடிவாளமிட்டவன், 'இனி ஒருநொடி அங்கிருந்தாலும் ஏதாவது தப்பாகிவிடும்' என்று தோன்றவும், சற்றென்று அவளிடம் இருந்து தன் பிடியை தளர்த்திவிட்டு வேகமாக அங்கிருந்து சென்றான்.

அவன் சென்றதும் தன்னை சமநிலை படுத்திக் கொண்டவளுக்கு, அன்று தன்னை காப்பற்றிவிட்டு காரில் வேகமாக அவன் மறைந்து சென்றது நினைவிற்கு வர, 'ஐயோ போறாரு விட்டா மறுபடி எப்படி பார்க்கிறது' என்று எண்ணியவள், இவ்வளவு நடந்தும் கொஞ்சமும் அசராது,

"நில்லுங்க... கொஞ்சம் நில்லுங்க." என்றபடி அவனை நோக்கி விரைந்தாள். ஆனால் அவனோ நிற்காமல் காரில் ஏறப்போகவும், "ராவணன்..." என சத்தமாக அழைத்தபடி, அவன் முன்னே லேசாக மூச்சு வாங்க அவள் வந்து நிற்க,

'இவ்வளவு கத்தியும் என்ன இவள்? கொஞ்சம் கூட அசராமல் வந்து நிற்கிறாள்' என வியப்பாக அவளைப் பார்த்தவன், “இவ என்னை ஒருவழி பண்ணாம விடமாட்டா.” என்று தனக்குள் முணுமுணுத்தபடி முன் நெற்றியைக் கோதிக்கொண்டே அவளைப் பார்த்தான்.

"என்ன உன் பிரச்சனை? உனக்கு என்னதான் வேணும்?" நிதானமாக கேட்டான்.

"நீங்கதான் வேணும்." ஆள்காட்டி விரலை அவனை நோக்கி சுட்டிக்காட்டியபடி கூறினாள்.

அவளின் பதிலில் முதலில் அதிர்ச்சியடைந்த அவனது சகாக்களுக்கு பிறகு சிரிப்பு வந்துவிட, இதழை இறுக்கமாக மூடி கட்டுப்படுத்திக் கொண்டவர்கள், தங்களின் அண்ணனின் திணறலை ஆர்வமுடன் வேடிக்கைப் பார்க்க,

அவளை ஒருகணம் இறுக்கமாக முறைத்தவன், கைக்குட்டையால் தன் நெற்றியில் சட்டென்று துளிர்த்த வியர்வையைத் துடைத்தபடி, வேகமாக தன் காரில் ஏறி கதவை அடித்து சாற்ற, "ஏங்க நில்லுங்க, ராவணன் உங்களோட வாலெட்..." என அஜூதியா தடுக்க, தடுக்க ராவணனின் ஜாகுவார் நிற்காமல் ஓடியது.


சிறையெடுப்பானா?
For Comments Please Click Here
 
Last edited:
ராவணனே என்னை சிறை எடு 9
1.jpg

"அஜூ இந்த ட்ரெஸ் எனக்கு நல்லா இருக்கா, அவரு தான் செலெக்ட் பண்ணினாரு. அப்புறம் உங்க எல்லாருக்கும் நான் கிஃப்ட் வாங்கியிருக்கேன். ஜானகி மாக்கு புடவை" என அதை எடுத்து அஜூதியாவின் கரங்களில் கொடுத்தவள், "எப்படி இருக்குன்னு சொல்லு டி, அப்புறம் இது மாரி அக்காக்கு, இது உனக்கு, இது இந்துக்கு ம்ம்ம் அப்புறம் இதெல்லாமே குழந்தைங்களுக்காக டாய்ஸ்" என இன்று திலிப் வாங்கி கொடுத்த பொருட்கள் அனைத்தையும் கட்டில் மேல் நிரப்பி, ஒவ்வொரு பொருளையும் தன் கையில் எடுத்து மகிழ்ச்சியுடன் அது யார் யாருக்காக வாங்கினது என்று கூறியவள், இறுதியாக ஒரு கவரை பிரித்து,

"இது என்னன்னு பார்த்தியா?" என்று சந்தோசம் பொங்க தன் கையில் இருந்த லேட்டஸ்ட் மாடல் அலைபேசியை காட்டி, "அவர் தான் வாங்கிக்கொடுத்தார் அஜூ, நல்லா இருக்கா? உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்" என்று அஜூதியாவின் முதுகில் ஒரு தட்டு தட்டி சொல்லவும்

"ஹான்" என்று வேணியை அஜூதியா புரியாத பார்வை பார்க்க, "சரியா போச்சு, எல்லாருக்கும் வாங்கினது இதுல இருக்கு எப்படி இருக்குனு பார்த்துட்டு சொல்லு" என மலங்க மலங்க விழித்த அஜூதியாவை பார்த்தபடி சொன்ன வேணி, "உனக்கு என்ன ஆச்சு? நானும் வந்ததுல பார்த்துட்டே இருக்கேன் நீ ஏதோ யோசனையிலே இருக்க. நல்லா இருக்கல்ல?" என்று அக்கறையுடன் கேட்க, "ம்ம் சும்மா நல்லா தான் இருக்கேன்" என்று சொல்ல, அப்பொழுது தன் அலைபேசி ஒலிக்கவும் தொடுதிரையை பார்த்த வேணிக்கு,

"இனிமே இது எப்பவும் உன் கூடத்தான் இருக்கணும். வீட்டுக்கு போயிட்டு கால் பண்றேன் நாம பேசலாம்" என்று திலிப் அலைபேசியை வாங்கி தன் கரத்தில் கொடுத்த பொழுது சொன்னது இப்பொழுது நினைவிற்கு வரவும் ஓடி சென்று கண்ணாடி முன்பு நின்று தன் சிகையை சரி செய்து, உடையை நேர்படுத்தியவள் , "ஏய் அஜூ அவரு தான் கால் பண்றாரு நான் பேசிட்டு வரேன், நீ எல்லாம் எப்படி இருக்குனு பாரு" என புத்துணர்ச்சியுடன் தன் அலைபேசியை எடுத்து கொண்டு தனது அறைக்கு செல்ல,

ஆனால் அதெல்லாம் அஜூதியாவின் காதில் விழுந்தால் தானே அவளது எண்ணமெல்லாம் தன்னவனை சுற்றியே இருக்க, சட்டென்று நினைவு வந்தவளாக தன் கைப்பையை திறந்து, ராவணன் அவசரத்தில் காரில் ஏறும் பொழுது தவறவிட்டு சென்ற அவனது வாலெட்டை எடுத்தவள் சிறு தயக்கத்துடன் அதை திறந்து பார்த்தாள்.

இரெண்டு மூன்று ஏடிஎம் கார்டுகள் உள்ளே இருக்க, "எப்படி இதை அவர் கிட்ட கொடுக்குறது?"என அவள் சிந்திக்கும் பொழுதே அவனது அடையாளட்டை அவளது விழிகளில் படவும், கண்கள் பளிச்சிட அதை மட்டும் தன் கையில் எடுத்தாள்.


பெயர், விலாசம் போக மிச்சம் இருந்த இடத்தில் வழமையான கருப்பு நிற வி நெக் டீஷர்ட் ட்ரிம் செய்யப்பட்ட தாடி மற்றும் சிவந்த இதழில் அளவாக தவிழ்ந்த புன்னகை என அந்த சின்ன சிறிய புகைப்படத்திலும் ஆளை அசத்தும் அழகனாய் ராவணன் பெண்ணவளை வசீகரிக்க, "சிரிக்க எல்லாம் வர தான் செய்யுது, ஆனா என்கிட்ட மட்டும் அவ்வளவு கோபம், ஹம் கொஞ்சம் முரடன் தான்!" என்று சலித்துக்கொண்டவள்,

"எப்போ தான் என்னை பார்த்து சிரிப்ப ஹான். இனிமே முறைச்ச அவ்வளவு தான் பார்த்துக்கோ? முரடன் முரடன்!" என போட்டோவை பார்த்து அடிப்பது போல செய்கை செய்தவள், பின்பு, "முறைச்சாலும் அழகு தான்"என்று புகைப்படத்திலே அவனது கன்னத்தை கிள்ளுவது போல பாவனை செய்து கொஞ்சு தீர்த்து, தன் இதழில் புன்னகை மலர அவனது நிழற்படத்திடம் மட்டும் காதல் பல பேசியவளுக்கு இன்று ராவணனை நேரில் சந்தித்ததே அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்திருக்க, அதே மகிழ்ச்சியுடன் தன் கருப்பு நிற டைரியை கையில் எடுத்தவள் நாற்காலியில் அமர்ந்து, தன்னவனின் முகத்தை மனதிற்குள் எண்ணிப்பார்த்தபடி அவன் மேல் தான் கொண்ட ஆழமான காதலை கவிதையாய் மாற்றினாள்!

இங்கே அவளது முரடனோ தனது சிந்தனையில் அடிக்கடி குறுக்கிட்டு, தன்னை வேலை செய்யவிடாமல் தன் கவனத்தை சிதறடிக்கும் அஜூதியாவின் எண்ணங்களை ஒதுக்கி தள்ள எவ்வளவோ முயன்றவன் அது முடியாமல் போகவும், மடிக்கணினியை மூடி தூக்கி எறியாத குறையாக ஓரமாக போட்டுவிட்டு இருக்கரங்களால் தன் தலையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு கண்களை மூடினான்.

'இது போன்ற மெல்லிய உணர்வுகளெல்லாம் உன் கொள்கைக்கு எதிரானது. தூக்கி போடு' என தனக்கு தானே கூறி, திசை மாறி ஓட துடிக்கும் மனதை கடினப்பட்டு கட்டியிழுத்து ஒருநிலைப்படுத்த முயற்சிதான். ஆனால் மனமோ மீண்டும் மீண்டும் அவளிடம் தான் செல்வேன் என குழந்தையாய் அடம் பிடிக்க, 'நோ நோ' என கத்தியவன் மனதை தன் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக போட்டிருந்த ஆம்கட் பனியனை தலை வழியாக கழட்டி எறிந்துவிட்டு குளியல் அறையில் உள்ள ஷவரை திறந்து விட்டு சுவற்றில் இரு கரங்களை ஊன்றியபடி கொட்டும் குளிர்ந்த நீருக்கு அடியில் கண்களை மூடி நின்றிருந்தான். வெளியே குளிரெடுத்தாலும் அவனுள் அவள் மூட்டிய தீ மற்றும் குறையாமல் தகித்துக்கொண்டே இருக்க, இத்தனை ஆண்டு காலத்தில் எத்தனையோ சந்தர்ப்பங்கள் வந்த பொழுதும் தன் உணர்வுகளை அடக்கி திடமாக இருந்த ராவணனால் அஜூதியா மூலம் தனக்குள் தட்டி எழுப்பப்படும் உணர்வுகளை அவ்வளவு எளிதாக கடந்து வந்துவிட முடியவில்லை. பெண்ணவளின் ஒவ்வொரு செய்கைகளிலும் ஆணவன் தடுமாறி கொண்டிருந்தான்.

இந்த உணர்வு அவனுக்குள் இன்று தோன்றியதல்ல, என்றோ பெண்ணவள் ஆணவனுக்குள் விதைத்து சென்றது தான், ஆனால் அன்று அதை கட்டுப்படுத்தி அதில் வெற்றியும் கண்டவன், பெண்ணவளையும் மறந்து நிம்மதியாக வளம் வந்தான். ஆனால் வருடங்கள் கழித்து மீண்டும் அவளை கண்டதும் அன்று அவள் விதைத்த உணர்வு இன்று அவன் கட்டுப்படுத்துவதற்குள் மிக வேகமாக அவனது இதயம் முழுவதும் படர்ந்து இப்பொழுது அவனுள் விருட்சமாக வளர்ந்து நிற்க, திடமான ஆறடி ஆண்மகன் மிகவும் தடுமாறினான்.

அன்று கல்லூரியில் வருடங்கள் கழித்து அவளை பார்த்த பொழுதே சுயம் இழந்த ராவணன், தான் தீட்டிய திட்டம் பெரிதாக சொதப்பியதில் அவ்வளவு எரிச்சல் அடைந்தான், அதிலும் அவளது நினைவுகளில் இருந்து மீள முடியாது மிகவும் தவித்தவன் ஒரு கட்டத்தில் விடாப்பிடியாக மனதை ஒருநிலை படுத்தி தான் வந்த வேலையை சிறப்பாக முடித்தவன் அஜூதியாவை பரந்தாமனின் அறையில் கோலம் களைந்து கண்ணீருடன் பார்த்ததில் வெறிகொள்ள, அதன் பிறகு எதை பற்றியும் யோசிக்கவில்லை.

பரந்தாமன் துவங்கி யாரையும் வைத்து பார்க்காது, முழுக்க முழுக்க அவளையும் அவளது எதிர்கால நிம்மதியையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றியவன், அவள் ஒருத்திக்காக மட்டும் தான் வரத பெருமாள், சக்தி வேல் என அனைவரையும் எதிர்த்து நின்றது, ஆக தனக்கு என்ன ஆனாலும் சரி, அஜூதியா நிம்மதியாக இருந்தால் போதும் என்று அத்தனையையும் பார்த்து பார்த்து செய்தவன், அவள் மேல் எல்லை இல்லா காதல் இருந்த பொழுதும், மனம் அவள் தான் வேண்டும் என்று அடங்காது தவியாய் தவித்த பொழுதும் அவளுக்கு தான் எந்த விதத்திலும் தகுதி கிடையாது என முடிவெடுத்து பெண்ணவள் மனதில் தன்னை குறித்து ஏதும் சலனம் கூட வந்துவிட கூடாது என்று தான் அவளிடம் எப்பொழுதும் கடுமையாக நடந்து கொண்டவன், முழுக்க முழுக்க அவளின் நலனுக்காக மட்டும் தான் அவளை விட்டு ஒதுங்கியும் இருந்தான். இருந்தும் அவள் இன்று அவன் முன்பு வந்து நின்றதும் மனதிற்குள்

ஒருநொடி இன்பமடைந்தவன், அடுத்த நொடி தான் இருந்த சூழலையும் அங்கிருந்தவர்களையும் பார்த்தான். உடனே முகத்தை கடுகடுவென மாற்றிக்கொண்டவன், அஜூதியாவை வெளியே அனுப்புவதற்காக செக்யுரிட்டியை சற்று சத்தமாக அழைத்தான்.

சத்தமாக அழைத்ததும் நிச்சயம் பயப்படுவாள் என்று நினைத்து ராவணன் அவ்வாறு நடந்து கொள்ள ஆனால் பெண்ணவளோ அவனை கண்ட பரவசத்தில் கண்களில் காதல் பொங்க அவனை நோக்கி பயமே இல்லாது நெருங்கி வர, அவளது கண்கள் காட்டிய மாயாஜாலத்தில் இவன் தான் மிகவும் தவித்து போனான்.

ஆனாலும் அவளை எப்படியாவது அனுப்பி விட வேண்டும் என்பதால் தன் தவிப்பை ஓரம் கட்டியவன், காயப்படுத்தும் படி பேசினால் அவள் சென்றுவிடுவாள் என்கிற நோக்கில்,

"என்னை தெரியும் சொன்னா, என்கிட்ட கேட்காம கண்டவங்களையும் உள்ள விட்ருவியா" என்று செக்யுரிட்டியிடம் கூறினான். ஆனால் அவளோ ஒருவித பரிதவிப்புடன்,

"ஏங்க நான்தான், என்னை தெரியலையா?" என்றதோடு விடாமல் ,

"அன்னைக்கு பரந்த" தாமன் என ஆரம்பிக்க ராவணனுக்கு வந்ததே கோபம். கோபத்தில் அவன் அவளிடம் தாறுமாறாக கத்திவிட, அழுதாளே தவிர அவனை அவள் விட வில்லை. மற்றவர்களின் பார்வை, சலசலப்பான பேச்சு என எதுவுமே அவள் மூளைக்கு எட்டவில்லை அவளது எண்ணம் எல்லாம் எப்படியாவது பேசியே தீரவேண்டும் என்பதில் மட்டுமே இருக்கே பெண்ணவளின் உறுதி ஆணவனின் திடமான இதயத்தை நிறையவே அசைத்து பார்க்க, அவனோ செய்வதறியாது திணற, சந்ரு வந்து நிலைமையை கையில் எடுத்தவன் அஜூதியாவை அழைத்து கொண்டு செல்ல, அவளும் போகும் வழியெல்லாம் பரிதாபமாக அவனை பார்த்து கொண்டே போக , உண்மையிலே ராவணன் அவளுக்காக வருந்தினான்.

ராவணனின் மனம் கொஞ்சம் அவளுக்காக இளகி இருந்த சமயம், அவனிடம் டீல் பேச வந்தவன் அஜூதியாவையே விழுங்கும் பார்வை பார்த்தது கண்ணில் பட்டுவிட, மனதில் மீண்டும் கோபம் குடியேற, அவளை நன்றாக திட்டி அனுப்பிவிட வேண்டும் என்று எண்ணி தான் கோபத்துடன் கீழே பார்க்கிங் ஏரியாவுக்கு வந்தான். ஆனால் மிக நெருக்கத்தில் அவளை பார்த்ததுமே அதுவரை அடங்கியிருந்த அவனது உணர்வுகள் அவனின் அடக்குமுறையை எதிர்த்து கொடிபிடித்து அவனையே உணர்வுகளின் கட்டுபாட்டுக்கீழ் கொண்டு வர, பின் எங்கிருந்து கோபம் கொள்ள?

வண்ணத்துப்பூச்சியாய் தட தடவென அடித்துக்கொண்ட அவளின் அகன்று விரிந்த விழிகள் அந்த ஆழ்கடலை அவனுக்கு நினைவு படுத்தி,

'ஆர்ப்பாட்டம் இல்லாத எத்தனை பெரிய விழிகள்! நீந்தலாமோ? ஆனால் மூழ்கி விட்டால் என்ன செய்வது? கரை சேர்வோமா? சேரவேண்டுமோ?' என கத்தியும் ரெத்தத்தையும் மட்டுமே பார்த்து வந்தவனை தனக்கு தானே கவிதை பேச வைத்துவிட, அவனுக்குள் அவளால் முகிழ்த்த வாலிப ஆசைகள் ஆணவனை திணறடிக்க இதற்கு மேல் முடியாது என்கின்ற நிலையில் அங்கிருந்து வேகமாக கிளம்பியவனை, அவளது "ராவணன்" என்ற உரிமையான விழிப்பு கட்டிப்போட அப்படியே நின்றவன்,

"உனக்கு என்ன தான் வேண்டும்?" என்று கேட்டான், ஒருவேளை தன்னிடம் உதவி ஏதும் கேட்க வந்திருப்பாளோ என்கின்ற எண்ணத்தில் தான் வினவினான். ஆனால் அதற்கு அவள் சொன்னாலே ஒரு பதில், "நீ தான் வேண்டும்" என்று, கோபத்துடன் தான் அவளை ஏறிட்டான், ஆனால் அவளது பார்வை, அதில் கொட்டிக்கிடந்த காதல் அவனுள் காதல் நெருப்பை பற்றவைக்க, ராவணனுக்கு கோபம் கொள்ளவா தோன்றும்? பேசாமல் அவளை அப்படியே தன்னுடன் கடத்தி சென்றுவிடுவோமா? என்று எண்ணியவன் தன் மனம் போகும் பாதையை நினைத்து தன்னை தானே கடிந்துகொண்டு அதற்கு மேல் தாமதிக்காமல் தன் காரில் பறந்துவிட்டான்.

பிளாசாவில் இருந்து நேராக தன் வீட்டிற்கு வந்தவன் தன் மனதை மாற்றுவதற்காக தான் மடிக்கணினியை கையில் எடுத்தான். ஆனால் எங்கே முடிந்தது? அவள் நினைவுகள் அவனை விடாமல் துரத்த, இதோ தண்ணீருக்கு அடியில் நின்றுகொண்டு புலம்பிக்கொண்டிருக்கிறான்.

"நான் தான் வேணுமாம், சின்ன பொண்ணுன்னு பார்த்தா பேச்சை பாரு" என்றவனுக்கு முகம் துவங்கி காதுமடல் முதற்கொண்டு சிவந்து, ஒருவித சிலிர்ப்பு மின்சாரமாய் உடலெங்கும் பாய, கொட்டும் குளிர் நீர் கூட அவன் மேனியில் பட்டால் வெந்நீர் ஆகுமோ என்று வியக்கும் அளவிற்கு அவனுள் இருந்த தாபதீ அணையாமல் அவளின் நினைவு வர வர மேலும் மேலும் தகித்து கொண்டே இருக்கவும், இன்னும் கொஞ்ச நேரம் தண்ணீரின் அடியில் நின்றவன், ஒருவழியாக ஆர்ப்பரித்த மனம் அமைதியாகவும், நீர் சொட்ட குளித்துமுடித்துவிட்டு, வெறும் ட்ராக்பேண்ட் மட்டும் அணிந்துகொண்டு வெளியே வந்தான்.

தன் அறையில் உள்ள கட்டிலின் மேல் அமர்ந்து, துவாலையால் தலையை துவட்டிக்கொண்டிருந்த ராவணனின் மனதிற்குள் மீண்டும் ஒருவித நெருடல்.

அஜூதியா, ஏதோ அவனுக்கு மிக அருகில் இருப்பது போல ஒரு உணர்வு. இப்பொழுது தான் ஒருவழியாக மனம் அமைதி அடைந்திருக்கும் நிலையில், இது என்ன? திடிரென்று தனக்கு ஏன் அப்படி தோன்றுகிறது? அவனுக்கு குழப்பமாக இருக்க கண்களை மூடி திறந்து தன் மனதை ஒருநிலை படுத்தியவன், தண்ணீர் அருந்துவதற்காக ஃபிரிட்ஜின் அருகே சென்ற பொழுது திகைத்தான். ஃபிரிட்ஜ் இருக்கும் இடத்திற்கு உட்புறமாக போடப்பட்டிருந்த சோஃபாவில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள் அஜூதியா.

சற்று முன் தான் அமைதியடைந்திருந்த அவனது உணர்வுகள் எல்லாம் அவளை கண்டதில் மீண்டும் உயிர் பெற, மிகவும் புத்துணர்ச்சியாக உணர்ந்தவனுக்கு அவளது தோற்றம் அவனது சிந்தையை மயக்கி முழுதாக சிறைப்பிடித்தது. கலைந்திருந்த கற்றை குழல் அவளின் முகத்தில் வந்து விழுந்திருக்க, மெதுவாக அவளது உறக்கம் கலையாது அந்த கற்றை மூடியை எடுத்து அவளின் காதோரம் ராவணன் சொருக, அவனது விரல் தீண்டவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபடியே, "ராவணன்" என்று அவனது பெயரை உச்சரித்தவள் மெலிதாக புன்னகைக்க, அவளது கரங்களில் இருக்கும் பூனை முடி அனைத்தும் சிலிர்த்தடங்கியது.

அவள் ராவணன் என்றதும் பதறி தன் கரத்தை எடுக்க போன ராவணன், அவள் முழிக்காமல் மீண்டும் தூங்குவதை பார்த்து,

"தூக்கத்துல கூட என்ன ஃபீல் பண்றா" என்றவனுக்கு உடலெங்கும் சொல்ல முடியாது ஒன்று வெகுவாக தாக்க, அவனுக்குள் ஏதோ ஒரு தவிர்க்க முடியாது உணர்வு தோன்றி அவனை ஏதோ ஏதோ செய்ய, அவளது மாசற்ற நிர்மலமான வதனத்தை பார்த்தபடி சில நிமிடங்கள் நின்று கொண்டிருந்தான்.

அப்பொழுது "க்ரிங் க்ரிங்" என்று கீழே இருந்த அவளது கை பையில் இருந்து அலைபேசி ஒலியெழுப்ப, அலைபேசியின் சத்ததில் எழுந்து விட்டால் என்ன செய்வது? இனி இது போல ஒரு வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்று எண்ணியவன், உடனே அவசர அவசரமாக அவளது கைப்பையை திறந்து அலைபேசியை கையில் எடுத்து அதை அணைத்த விட்டு அவளை பார்க்க லேசாக இதழ் பிளந்திருக்க மெல்லிய குறட்டை சத்தத்துடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

"கும்பகர்னி" அவளை பார்த்து புன்முறுவலுடன் முணுமுணுத்த ராவணன் அலைபேசியை மீண்டும் கைப்பைக்குள் வைக்கும் பொழுது கருப்பு நிற டைரி அவனது கண்ணை கவர அதை கையில் எடுத்தவனுக்கு அவளது அனுமதியின்றி அவளின் டைரியை படிப்பது தவறு என்று தோன்ற, ஒரே ஒரு கணம் தயங்கியவன் பிறகு தன் தயக்கத்தை புறந்தள்ளிவிட்டு டைரியை புரட்டினான்.

புகைப்படங்கள் சில பின் செய்யப்பட்டிருக்க ஓவ்வொரு புகைப்படத்திற்கு கீழும் ஒவ்வொரு நிகழ்வுகளை எழுதியிருந்தாள். நிதானமாக படித்தான். அஜூதியாவின் குழந்தை பருவ புகைப்படங்களை முகத்தில் புன்முறுவலுடன் ஆர்வமாக பார்த்துக்கொண்டே வந்தவனின் கண்கள் ஒரு படத்தை மட்டும் பார்த்து குறும்பாக சிரித்தது. நீர் பாதி நிறைந்திருந்த வட்ட டப்பில் ஆடையின்றி அமர்ந்து கொண்டு நான்கு விரலையும் வாய்க்குள் போட்டு சப்பியபடி இருந்த அந்த புகைப்படத்தை மட்டும் மெதுவாக டைரியில் இருந்து எடுத்து சற்றும் தயக்கமின்றி படத்திற்கு முத்தமிட்டான்.

முத்தமிட்ட அந்த நொடி அவனது மனத்திற்குள் முகிழ்த்த அந்த ஆசை இது வரை அவன் வாழ்க்கையில் நினைத்து கூட பார்த்திராத ஒன்று. நினைத்து பார்க்கவும் கூடாது என்று அவன் எடுத்த திடமான முடிவுகளில் ஒன்று. இருந்தும் இன்று ஆசைப்பட்டான். நிறைவேறுவது சாத்தியம் இல்லை என்று தெரிந்தும் ஆசை பட்டான். தான் கொண்ட ஆசை நிறைவேறினால் நன்றாக இருக்கும் என்று பேராசை கொண்டவன் தூங்கும் அஜூதியாவை ஒருகணம் பார்த்துவிட்டு மீண்டும் டைரியை புரட்டினான். தாய் தந்தையின் மரணம், ஜானகி, மற்றும் மாரியின் அரவணைப்பு, இந்திரா மற்றும் வேணியின் தோழமை, நாட்டியத்தின் மீது தான் கொண்ட ஆசை, தாய் தந்தையின் நினைவாக இருந்த கழுத்து சங்கிலி, தவறவிட்ட தன் தாயின் சலங்கை, பரந்தாமன் வீட்டில் நடந்த சம்பவம், அதற்காக தான் செய்த உதவி என அவள் வாழ்க்கையில் நடந்த, அவளை மிகவும் பாதித்த முக்கியமான சில விடயங்களை எல்லாம் எழுதியிருக்க ஒன்று விடாமல் படித்துக்கொண்டே வந்தவனின் கண்கள் ஒரு இடத்தில் அப்படியே அசையாமல் நின்றுவிட, மிக சிரமப்பட்டு தன்னை சமாளித்தவன் டைரியில் எழுதியிருந்த அந்த வரிகளை,

"ஹே ராவணா!

நான் சீதையல்ல!

எனவே, கணை தொடுத்து எனக்கு மாலையிட ராமன் வேண்டாம்!

என் கரம்பிடித்திழுத்து என்னைக் கடத்தி செல்ல நீயே வேண்டும்! நீ மட்டுமே வேண்டும்!

ஊரார் சொல் கேட்டு என்னைத் தீக்குளிக்க வைக்கும் ராமன் வேண்டாம்!

என் ஒரு சொல்லிற்காக யுகம் தாண்டினாலும் காத்திருக்கும் நீயே வேண்டும்! நீ மட்டுமே வேண்டும்!

ராமன் செய்த போரே சீதைக்காகத் தானாம்! ஹ்ம் இருக்கட்டும்,

ஹே ராவணா! நித்தமும் உன்னையே நினைக்கும்,

எனக்காக ஒரு யுத்தம் செய்வாயா?

என்னைச் சிறையெடுத்து செல்வாயா?

இப்படிக்கு,

அந்திரன் ராவண ஈஷ்வரனின் அஜூதியா தனிய ஷக்தி "என்று வாசித்தான். மீண்டும் அதே வரிகளை வாசித்தான்! மீண்டும் மீண்டும் வாசித்தான், வாசித்துகொண்டே இருந்தான். கிட்டத்தட்ட பத்து பன்னிரண்டு வரிகளில் அவன் மேல் தான் கொண்ட மொத்த காதலையும் அஜூதியா கவிதையாகவே வடித்திருக்க, டைரியை மூடிவிட்டு அவள் முன்பு வந்து நின்றவனின் மனதை, இதமாக கால்வருடி செல்லும் கடல் அலைகள் போல அவன் கொண்ட சுகமான கடந்தகால எண்ண அலைகள் இதமாக வருட, அவன் மனமும் கடந்தகாலத்தை நோக்கி பயணித்தது.
 
அது ஒரு இரவு வேளை, கிட்டத்தட்ட இரெண்டு வருடங்களுக்கு முன்பு, அப்பொழுது தான் ராவணன் இந்த தொழிலில் தனக்கென்று பெயர் வாங்கி, உறுதியாக கால்பதித்திருந்தான்.

ராவணனின் திடீர் வளர்ச்சி, ஒருகாலத்தில் உச்சத்தில் இருந்த பலரை கீழே தள்ளிவிட்டிருக்க, அவனை எப்படியாவது ஒழித்துவிட்டு அந்த இடத்திற்கு தான் வர வேண்டும் என்று, வெகு நாட்களாக தீவிரமாக அவனுக்கு எதிராக திட்டம் தீட்டியபடி காத்திருந்த ராவணனின் தொழில் சார்ந்த எதிரி விஸ்வநாதன் சரியான சந்தர்ப்பம் அமையவும் தன் திட்டத்தை செயல்படுத்தினான்.

அன்று வேலை விடயமாக சந்ரு உட்பட அனைவரும் வெவ்வேறு இடத்திற்கு சென்றிருக்க, ராவணன் மட்டும் தனியாக தான் ஏற்றுக்கொண்ட வேலையை முடிக்க வந்திருக்க, கண்களில் கொலைவெறியுடன் ராவணனை அழிக்க காத்திருந்த விஸ்வநாதனின் செவிக்கு இந்த செய்தி வரவும் திட்டம் தீட்டியவன், ராவணன் வேலை முடித்து திரும்பி வரும் வழியில் தன் ஆட்களுடன் காத்திருந்த விஸ்வநாதன் தன் திட்டத்தை செயல்படுத்தினான்.

விஸ்வநாதனை கண்டதும் இது தனக்காக வெட்டப்பட்ட குழி என்பதை புரிந்து கொண்ட ராவணன், அந்த நிலைமையிலும் நிதானமாக செயல்ப்பட்டவன் அனைவரையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அசராமல் அடித்து வீழ்த்தினான். ஆனால் நேரம் ராவணனுக்கு எதிராக அமைந்திருக்க, அவன் சண்டையிட்டு கொண்டிருக்கும் பொழுது ஒருவன் வந்து பின்னால் இருந்து இரும்பு ராடால் அவனது பின்மண்டையில் அடிக்கவும் நிலை தடுமாறியவன் கீழே விழுந்துவிட, அதன் பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்து அவனை முகம், கை, கால் என உடம்பில் உள்ள அனைத்து இடத்திலும் சரமாறியாக தாக்கனர்.

அவ்வளவு தாக்கப்பட்டும் அவர்களுடன் போராடி உடம்பு முழுவதும் ரெத்தம் வழிய தப்பித்த ராவணன் அவர்கள் கண்ணில் படாமல் ஓடினான். இருந்தும் குருதி அதிகமாக வழியவும் சோர்வடைந்தவன் அவர்கள் தன்னை நெருங்குவது புரிந்து ரயில்வே ஸ்டேஷன் வெளியே இருந்த கார்ப்பிரேஷ்ன் குப்பை தொட்டிக்கு பின்னால் சென்று மூச்சு வாங்க சோர்ந்து அமர்ந்து, சுற்றும் முற்றும் தன் பார்வையை ஓட்டியவன் அப்பொழுது தான் தன்னையே கண்களில் மிரட்சியுடன் பார்த்து கொண்டிருந்த அஜூதியாவை பார்த்தான். தோளில் பையுடன் உடல் வெடவெடக்க நின்றிருந்தாள்.

அந்நேரம் பார்த்து தங்கள் கரங்களில் ஆயுதங்களுடன் அஜூதியாவை நோக்கி வந்த விஸ்வநாதனின் ஆட்கள்,

"ஏய் பொண்ணு, ரெத்த காயத்தோட யாரவது இந்த பக்கமா போறதை பார்த்தியா?" என்று அஜூதியாவிடம் ஆக்ரோஷமாக கேட்டார்கள்.

அப்பொழுது தனிமையும், இரவும் பெண்ணவளை பயங்கரமாக பயமுறுத்த நடுங்கியவள், பேசாமல் காட்டிக்கொடுத்துவிடலாமா என்ற யோசனையுடன் குப்பை தொட்டி பக்கம் தன் பார்வையை சுழற்றியபொழுது அவனை பார்த்தாள். அவனும் பார்த்தான் காப்பற்ற சொல்லி கெஞ்சவெல்லாம் இல்லை. வலியை மட்டும் பல்லை கடித்தபடி சமாளித்து கொண்டிருந்தான். அதை பார்த்ததும் என்ன நினைத்தாளோ,

"ஆமாம், கொஞ்ச தூரம் ஓடினான் அப்போ ஒரு கார் வந்து அவனை கூட்டிட்டு போச்சு" என பயத்தை மறைத்துக்கொண்டு உண்மை போல கூறினாள்.

அதை கேட்டு, "ச்ச" என்று ஒருவன் தாங்கள் வந்த காரியம் முடியாததில் எரிச்சல் பட, மற்றொருவன்,

"எங்க அண்ணன் போயிருக்க போறான் வாங்க புடிச்சிடலாம்" என்று சொல்ல, யாருக்கோ அலைபேசியில் அழைத்தவர்கள் கார் வந்த அடுத்த நொடி அதில் ஏறி புயலென மறைந்தனர்.

அப்பொழுது ஒருகணம் அவளை பார்த்த ராவணன் அவர்கள் சென்ற எதிர் திசை நோக்கி ஓட ஆரம்பித்து சட்டென்று சாலையை கடக்க முயற்சிக்க, அந்த நேரம் வேகமாக வந்த லாரி அவன் மீது மோத தூக்கி எறியப்பட்டான்.

இது அத்தனையும் அஜூதியா பார்க்க நொடி பொழுதில் நடந்திருக்க பெண்ணவளுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருநொடி அப்படியே உரைந்துவிட்டவளின் கண் முன் தன் தாயும்], தகப்பனும் இது போல ஆக்சிடெண்டில் ரெத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்து போனது காட்சியாக வந்து போக, கண்களில் இருந்து கண்ணீர் வடிய தன் தாயையும் தந்தையையும் எண்ணிப்பார்த்தவள், அதன் பின்பு எதையுமே யோசிக்கவில்லை, தன்னை ஆஷ்ரமத்திற்கு அழைத்து செல்ல வந்துகொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனருக்கு அழைப்பு விடுத்து வேகமாக வருமாறு அழைத்ததவள் அவர் வந்ததும் அவரிடம் கெஞ்சி அவரை சம்மதிக்க வைத்து அவரின் உதவியுடன் அவனை ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனை நோக்கி விரைந்தாள்.

"கேஸ் ரொம்ப சீரியஸ் மா, இது போல போலீஸ் கேஸெல்லாம் முன் பணம் கெட்டாம ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ண மாட்டோம்" என்று மருத்துமனையில் கூறிவிட, என்ன செய்வதென்று தெரியாமல் திணறியவள் பின்பு தனக்குள் எழுந்த நெருடலை ஒதுக்கிவிட்டு, தனது கழுத்தில் தன் தாய் தந்தையின் நினைவாய் கிடந்த தங்க சங்கிலியை கழற்றிய அஜூதியா ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம் கொடுக்க, அவளோ பணம் தான் வேண்டும் என்று சொல்லி அதை மறுக்கவும்,

"இந்த செயின் வச்சு நீங்க ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ணுங்க, அடுத்த நாள் நான் பணம் கட்டி செயின் வாங்கிக்கிறேன் ப்ளீஸ்" என்று யாரென்று கூட தெரியாத ராவணனுக்காக அந்த பெண்ணிடம் அஜூதியா மிகவும் கெஞ்ச, அஜூதியாவை பார்த்து மிகவும் இறக்கமுற்ற அப்பெண்ணும் சரி என்று சொல்லிவிட,

அஜூதியாவிடம் ஃபார்முடன் வேகமாக வந்த செவிலிய பெண் நோயாளியின் பெயர் என்ன என்று கேட்டாள்.

செவிலிய பெண் அவனது பெயரை கேட்கவும் என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கிவள், பேசாமல் யாரென்று தெரியாது என்கின்ற உண்மையை சொல்லிவிடலாமா என யோசித்தாள். பின்பு ஒருவேளை தான் இப்படி கூறினால் ட்ரீட்மெண்ட் செய்ய மாட்டோம் என்று கூறிவிடுவார்களோ என்று பயந்தவள்,

சிறு தயக்கத்திற்கு பிறகு தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமான ராவணனின் பெயரை சொல்ல அதை எழுதியவர், அவளது பெயரை கேட்க அஜூதியா என்று அவள் கூறவும் அதையும் எழுதியவர், வீட்டு அட்ரெஸை கேட்க, ஆஷ்ரமத்தின் பெயரை கூற யோசித்தவள் குத்துமதிப்பாக ஒரு விலாசத்தை கூற, அதை எழுதியவர், அஜூதியா கெஞ்சியதை வைத்து இவள் ராவணனின் மனைவி என தவறாக நினைத்த நர்ஸ் ஒப்புதல் வழங்கியவர் என்னும் இடத்தில் மனைவி என்று இவளை கேட்காமலே எழுதிவிட்டு அவளிடம் கையெழுத்து போடும் படி கூற, இவளும் பதற்றத்தில் சரியாக கவனிக்காமல் கையெழுத்து போட்டுக்கொடுத்துவிட, ராவணனுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மருத்துவம் ஆரம்பமானது.

அவனுக்கு ரத்தம் அதிகம் போயிருந்ததால் தன் ரத்தம் முதற்கொண்டு கொடுத்து அவனுக்கு உதவியவள், அவன் ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டான் என்று தெரிந்த பிறகு அவ்வளவு நிம்மதி அடைந்தாள்.

"இன்று நான் இவனை காப்பாற்றியது போல, அன்று யாராவது என் தாயையும் தந்தையும் காப்பாற்றியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என ஆதங்கப்பட்ட அஜூதியா தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு,

"எப்படியோ நாம் வந்த கடமை முடிந்து விட்டது, இனி இவன், இவனது வீட்டினரின் பொறுப்பு, ஏற்கனவே ரௌடிகள் வேறு இவனை தேடி கொண்டிருக்கிறார்கள் இதற்கு மேல் இருந்தால் தேவை இல்லாத பிரச்சனை வரலாம்" என்று முடிவெடுத்து, ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம், வீட்டிற்கு சென்று பணத்தையும், மாற்று உடையையும் எடுத்து கொண்டு வருவதாக கூறியவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் சென்ற சில மணி நேரத்திலே மிக சிரமப்பட்டு கண் திறந்து எழுந்துகொள்ள முயற்சித்த ராவணனிடம் ,

"முழிச்சிடீங்களா சார் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க, பெயின் இருக்கும் ரெஸ்ட் எடுங்க" என்ற செவிலிய பெண், "உங்க வைஃப் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வர இங்க தான் இருந்தாங்க" என்று சொல்லவும், "வைஃபா" என மனதிற்குள் குழம்பியவன் அவரிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல், "ம்ம்" என்று மட்டும் சொல்ல, "ரொம்ப அழுதுட்டே இருந்தாங்க, நீங்க நல்லா ஆகிட்டிங்கன்னு தெரிஞ்சதும் வீட்டுக்கு போயிட்டு ட்ரெஸ் எடுத்துட்டு வரேன்னு போயிருக்காங்க" என்று அவனுக்கு ஏறிக்கொண்டிருந்த ட்ரிப்ஸை சரி செய்தபடி சொல்லவும் சின்ன புன்னகையுடன் தலையை மட்டும் அசைத்தவன், தன் உடமைகளை பற்றி கேட்க, அதை அவர் கொண்டு வந்து அவனிடம் கொடுத்துவிட்டு சென்றதும் தன் அலைபேசியில் இருந்து உடனே சந்ருவுக்கு தான் தகவல் கொடுத்தான்.

ராவணனிடம் இருந்து தகவல் வந்த அடுத்த நொடி விரைந்து செயல்பட்ட சந்ரு அடுத்த சில மணிநேரத்தில் அவன் முன்னே நின்றிருந்தான்.

"விட கூடாது ராவண் பாய், ஒருத்தனையும் விட கூடாது" என தன் முன் அதீத கோபத்தில் சீறிய சந்ருவை அமைதியாக இருக்கும்படி செய்கை செய்த ராவணன்,

"கண்டிப்பா யாரும் தப்ப போறதில்லை, கொடுத்ததை திருப்பி கொடுக்கலைனா எப்படி? ஆனா அதுக்கு முன்னாடி இங்க இருந்து போகணும், பில்லை செட்டில் பண்ணிடு. அப்புறம் என்னை யாரு அட்மிட் பண்ணினதுனு எனக்கு தெரியணும் சிசிடிவி புட்டேஜ் ரெடி பண்ணு" என்ற ராவணனின் சொல்படி செயலாற்றிய சந்ரு அவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதியும் வீட்டிலே கிடைக்கும் மாறு ஏற்பாடு செய்ய ராவணன் தன் வீட்டிற்கு கிளம்பினான்.

கட்டுபோடப்பட்டிருந்த ராவணனின் விரல்கள் அஜூதியாவின் கழுத்து சங்கிலியை உறுதியாக பிடித்திருக்க, அவனது கூர் விழிகளோ தொலைக்காட்சி திரையில் ஓடிக்கொண்டிருந்த மருத்துவமனை சிசிசிடிவ் பதிவின் மீது அழுத்தமாக பதிந்திருந்தது.

அப்பொழுது,

"பேரு அஜூதியா தனிய ஷக்தி, என்ஜினீயரிங் ஃபைனல் இயர், ரொம்ப புடிச்சது பரதநாட்டியம்" என்று கூறிய சந்ருவை நிமிர்ந்து பார்த்த ராவணன்,

"என்ன டா உளறிட்டு இருக்க?" என்று தன் கணீர் குரலில் அழுத்தமாக கேட்கவும்,

"இதோட நான் பார்க்க ஒரு அஞ்சு தடவையாவது நீங்க இந்த விடிவோவை பார்துடீங்க, அதான் அண்ணியை பத்தி விசாரிக்கலாம்ன்னு" என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறிய சந்ருவிடம்,

"டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லை, நீயா எதையும் கிளப்பிவிடாத" என்று ராவணன் கூறினான்.

அதற்கு,"சும்மா சொல்லாதீங்க பாய், ஒன்னும் இல்லாமலா அந்த பொண்ணு உங்க பெயரை கரெக்ட்டா சொல்லிற்கு."

"டேய் சும்மா அவசரத்துல ஏதாவது சொல்லிருக்கும் அது சரியா இருந்திருக்கு,நீ வேற"

"சரி அது ஓகே, ஆனா நீங்க ஏன் இந்த விடீயோவை பார்த்துட்டே இருக்கீங்க? மனசுக்குள்ள ஒன்னும் இல்லாமலா பார்த்துட்டே இருக்கீங்க, கூச்சப்படாதீங்க பாய், பசங்க கிட்ட சொல்லி அண்ணியோட மொத்த டீட்டையில்ஸையும் எடுத்துடலாம்" எனக் கண்சிமிட்டி கூறிய சந்ருவை தன் பல்லைக்கடித்தபடி பார்த்த ராவணன் அவனைத் தன் அருகில் வருமாறு அழைக்க, அவன் தன் அருகில் வந்து நிற்கவும் தன் கரம் கொண்டு அவனது கரத்தை வலிக்க பிடித்துத் திருகினான்.

ராவணன் பிடித்த பிடியில், "ராவண் பாய் வலிக்குது" என்று அலறிய சந்ருவிடம்,

"டேய் உன் சேட்டையெல்லாம் இன்னையோட நிப்பாட்டிக்க, இந்த பேச்செல்லாம் இனி இருக்க கூடாது பசங்க கிட்ட ஏதும் உளறி வைக்காத அப்புறம் அந்த பொண்ணை பத்தி விசாரிக்கிறதெல்லாம் இதோட நிப்பாட்டிக்க" என்று ராவணன் எச்சரிக்கை விடுக்க, "சரி பையா நிப்பாட்டிக்கிறேன், வலிக்குது" என்று ராவணன் கூறிய அனைத்திற்கும் தலையாட்டிய சந்ரு வலியில் முகத்தை சுருக்கவும், அவனை ஒருமுறை பார்த்துவிட்டுத் தன் கரத்தை விடுவித்த ராவணன் அன்றோடு அஜூதியாவை பற்றி நினைப்பதை விட்டுவிட, சந்ருவும் ராவணனின் சொல்படி அமைதியாகிவிட்டான்.

நாட்கள் நகர்ந்து வாரங்கள் ஆகியிருக்க, உடலளவில் நன்றாகத் தேர்ச்சியடைந்திருந்த ராவணனின் முகம் வழமையை விட அதிகமாக இறுகியிருந்தது.

அஜூதியா உதவவில்லை என்றால் இந்நேரம் செத்திருப்பான், இருந்தாலும் போனால் போகட்டும் என்று அவன் விஸ்வநாதனை விட்டிருக்க, ஆனால் அவனோ நேற்று வெளியே சென்றிருந்த ராவணனின் ஆட்கள்மீது தாக்குதல் நடத்தியிருக்க, ராவணனின் பொறுமை எல்லையைக் கடந்திருந்தது.

"இனி ஒருத்தனுக்கும் தயவு காட்ட கூடாது. சீக்கிரம் நான் யாருன்னு காட்டுறேன், வாங்கியதை பல மடங்கா திருப்பித் தரேன் விஸ்வநாத்" எனத் தீவிரமாகக் கூறிய ராவணன் அதற்கான திட்டத்தையும் தீட்டி அதைச் செயல்படுத்தும் வேலையில் இறங்கியிருந்தான்.

மிருதங்கம் மெலிதாகத் தாளகதியுடன் ஒலிக்க, மக்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக இருளில் கரைய துவங்கியிருக்க, கண்ணதாசனின் கவிப்பேசும் கரம்போலக் கவி பேசும் அஜூதியாவின் விழிகளில் ஆயிரம் அபிநயங்கள் அலைமோத, வீசும் காற்றுக்கு வளைந்து அசையும் மரம்போலப் பெண்ணவளின் தேகம் சிரிக்கும் சலங்கை ஒலிக்கு வளைந்து, சிதறும் பரல் இசையோடு சேர்ந்து அசைந்தாடும் அதிசயம் சிதம்பர தில்லை நடராஜர் கோயிலில் அரங்கேறிக்கொண்டிருக்க, அனைவரும் மகிழ்ச்சியுடன் அவளது நடனத்தை ரசித்துக் கொண்டிருக்கு அந்த இன்பமான வேளையை கெடுக்கும் விதமாக அங்கே கேட்ட "டுமீல்" என்னும் துப்பாக்கி சுடும் சத்தம் மக்கள் கூட்டத்தினரை பயமுறுத்தியது.

திடீர் என்று கேட்ட துப்பாக்கி சத்தில் பதறிய மக்கள் அங்கும் இங்கும் பயத்தில் கோயிலை விட்டு வெளியே ஓடப் பார்க்க, உடலில் காயத்துடன் கூட்ட நெரிசலுக்கு இடையே சிக்கிக்கொண்ட விஸ்வநாதன், தடுமாறி கீழே விழுந்து, எழுவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்க, இதைக் கவனித்த அஜூதியாவோ மனம் கேளாமல் விஸ்வநாதனை நோக்கிச் செல்ல, அப்பொழுது,

"ஏய் அஜூ எங்க போற வா?" என்று தன்னை அழைத்த இந்துவிடம், "இந்து அந்த ஆளு பாவம் டி, எழுந்துக்க முடியாம இருக்காரு" என்றவள், வேகமாக அவன் அருகில் சென்று அவனை எழுப்பி விட்ட மறுநொடி அஜூதியா பனியில் உறைந்த சிலைபோலக் கண்கள் விரிய நின்றாள்.

கரங்களில் துப்பாக்கியுடன், முகமூடி அணிந்து சிவந்த விழிகள் இடுங்க, துஷ்ட பார்வை பார்த்தபடி தன் எதிரே வில்லனைப் போல நின்ற ராவணனை பார்த்து அஜூதியாவின் உடல் நடுங்கி விட, அவளையும் அவளது கண்களில் தெரிந்த பயத்தையும் ஒருகணம் இறுக்கமாகப் பார்த்தவன் தன் கையில் முளைத்த துப்பாக்கியை விஸ்வநாதனை நோக்கி நீட்ட, அடுத்த கணமே கேட்ட துப்பாக்கி சத்தத்தில் காதை மூடிகொண்டவள் தரையில் மடிந்தமர்ந்து பயத்தில் அழுது விட,

"யாருக்கும் நான் செகண்ட் சான்ஸ் கொடுத்தது இல்லை ஆனா உனக்குக் கொடுக்குறேன், இனிமே என் லைன்ல நீ வரக் கூடாது போ" என்று ராவணன் விஸ்வநாதனை பார்த்துக் கூற, அவனை நோக்கி "மன்னிச்சுடு" என்று கரம் கூப்பிய விஸ்வநாதன் நடக்க முடியாது நடந்து செல்ல, இதை உடல் வெடவெடக்க பார்த்துக் கொண்டிருந்த அஜூதியாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன், அவளை அழைத்துச் செல்ல வந்த இந்துவைப் பார்த்து, அழைத்துக்கொண்டு போகும்படி செய்கை செய்ய, சிலையென உறைந்திருந்த அஜூதியாவின் கரத்தைப் பிடித்த இந்து அவளை அழைத்துக் கொண்டு வெளியே ஓட, அப்பொழுது அஜூதியாவின் ஒற்றை காலில் உள்ள சலங்கை மட்டும் கழன்று கீழே விழ, செல்லும் அவளையே பார்த்தபடி சலங்கையைத் தன் கரத்தில் எடுத்தவன் அதை மென்மையாக வருட அவன் இதயத்தில் இறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்தது.

"ஏன் ராவண் பாய் அவனை விட்டீங்க" என்ற அவனது சகாக்களிடம் எந்த பதிலும் கூறாதவன் அவர்களை அடுத்த வேலையை பார்க்கும் படி சொல்லிவிட்டு, தனிமையில் மிகவும் தவித்தான். அஜூதியாவை சந்தித்ததில் இருந்து அவனிடம் முகிழ்த்த ஒவ்வொரு மாற்றமும் அவனை புயலென சுழற்றியெடுத்து , அவனது உறுதியை அசைத்தது.

விஸ்வநாதனை கொலை செய்ய வேண்டும் என்கின்ற முடிவுடன் களம் இறங்கியவன் அஜூதியாவின் கண்களில் இருந்த பயத்திற்காக மட்டும் தன் முடிவை மாற்றிக்கொண்டு விஸ்வநாதனை விட்டுவிட்டான். அந்த நிமிடம் ஒன்றுமே தோன்றவில்லை, ஆனால் கொஞ்ச நேரம் கழித்து சிந்திக்கும் பொழுது அவனது இந்த மாற்றம் அவன் மீதே அவனுக்கு கோபத்தை ஏற்படுத்த, வேண்டும் வேண்டாம் என்பதற்கு இடையே சிக்கி கொண்டு தவித்தவன், அன்று போல இன்றும் தவிக்கின்றான். என்ன அன்று அவன் மட்டும் விரும்பினான் அது ஒரு கை ஓசை சத்தமின்றி அடங்கியிருந்தது. ஆனால் இன்று அவளும் அவனை நேசிக்கிறாள். அவளது காதலின் ஆழத்தையும், அதன் அழகையும் அறிந்த பிறகு அவள் மீது காதல் இன்னும் பெருகுகிறது, இருந்தும் அவள் காதலை அனுபவிக்க அவனுக்குள் ஒருவித தயக்கம்.

அவள் முகத்தையே பார்த்தபடி மேலும் சில நொடிகள் நின்றிருந்தவன் கண்களில், லேசாக சிவந்திருந்த அவளது பெருவிரல் பட, தான் ஆவேசத்தில் வேகமாக தன் கரத்தை அவள் மீது தவறுதலாக வீசியதில் அவள் கீழே விழ போனது, பின்பு விழாமல் அவளது பெருவிரலில் மட்டும் லேசாக அடிபட்டது என

இன்று நடந்த சம்பவத்தை அவனது மூளை அவனுக்கு நினைவுபடுத்தி காயத்திற்கான காரணத்தை சொல்லாமல் சொல்ல, அவள் கால் பக்கம் வந்தமர்ந்தான்.

பின்பு மிருதுவான அவளின் விரலை இன்னும் மென்மையாக வருடியவன் என்ன நினைத்தானோ சட்டென்று குனிந்து அவளது காயம் பட்டிருந்த பெருவிரலில் இதழ் பதித்துவிட, அவளது உடலில் மெல்லிய அசைவுகள். அவனுக்கு ஒன்றுமே ஓட வில்லை ஒருவித படபடப்புடன் அவளது முகத்தை பார்த்தான். இதழோரம் புன்னகை தளும்ப ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். 'நல்லவேளை முழிக்கல' என தன் துடிக்கும் இதயத்தில் கரம் வைத்து ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவன், 'ச்ச என்னடா பண்ணிட்டு இருக்க' என்று தன்னை தானே கடிந்து கொண்ட பொழுது, அவளின் மேல் உதட்டில் அரும்பியிருந்த வியர்வை துளிகளை கண்டு அவனுக்குள் எழுந்த தவிர்க்க வேண்டிய ஆனால் தவிர்க்க முடியா ஆசைகளை எண்ணி அவனது இதயம் அதி வேகமாக துடிக்க, மிகுந்த தயக்கத்துடன் அவள் இதழை நெருங்கியவனின் இதயம் அவன் நெருங்க நெருங்க அதிகமாக துடிக்க, தன் விரல் கொண்டு அவளது இதழ் மேல் இருந்த வியர்வை துளிகளை துடைக்க போனவன் பின் என்ன நினைத்தானோ சட்டென்று அவளது இதழ் நோக்கி குனிந்தான்.

அவன் குனிந்த சில நொடிகளில், "ஹ்ம்" என்று சிறு செருமலுடன் கண்விழித்தவள், 'கனவா ச்ச' என்று தன் கரங்களை தலைக்கு மேல் தூக்கி நெட்டி முறிக்க, அப்பொழுது எதையோ யோசித்தவளாய் தன் இதழை லேசாக தொட்டு பார்த்தவள்,

"கனவுல கிஸ் பண்ணினா கூட லிப்ஸ் வெட் ஆகுமா என்ன?" என்று தனக்குள் கூறுவதாக நினைத்து வாய்விட்டே கூறியவள், "ஹெலோ நல்லா தூங்கி முடிச்சாச்சா" என்ற ராவணனின் கணீர் குரலில் பதறி குரல் வந்த திசை நோக்கி பார்க்க, ஃபிரிட்ஜ் அருகே தன் கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு அவளை தான் அழுத்தமாக பார்த்து கொண்டிருந்தான் ராவணன்.

இப்பொழுது அவனது கேள்வியையும் அதுக்கு தான் சொல்ல வேண்டிய பதிலையும் மறந்தவள் வேறு எங்கோ மிதந்து கொண்டிருந்தாள்.

ஈரமாக இருந்த அவன் சிகையில் ஆங்காங்கே இருந்து நீர் சொட்டி கொண்டிருக்க, வெறும் ட்ராக் பேண்ட் மட்டும் அணைந்திருந்தவனின் வெற்று மார்பும் பரந்த தோளும் அவளை அறியாமலே அவனை ரசிக்க வைக்க. அவனது விழிகளின் கூர்மை வேறு அவளை காந்தமாக அவனை நோக்கி இழுக்க, அவனிடம் இருந்து விழிகளை பிரிக்க முடியாமல் சிலையாக எத்தனை நொடிகள் அமர்ந்திருந்தாளோ

"நல்லா பார்த்து முடிச்சாச்சுன்னா எதுக்கு வந்தன்னு சொல்லிட்டு கிளம்பு" என்ற அவனின் கேலி குரலில் சுயம் பெற்ற அஜூதியா, "ஹான் அது" என்று என்ன சொல்வதென்று புரியாமல் தவிக்கவும், அஜூதியாவை அழுத்தமாக பார்த்தபடி அவளை நோக்கி இராவணன் நடந்து வர, பெண்ணவளின் இதயம் வெளியே வந்துவிடும் அளவிற்கு வழக்கத்தை விட அதிகமாக துடிக்க, 'ஐயோ கொல்றானே! டேய் இப்படி எல்லாம் என் முன்னாடி வந்து என்னை படுத்தாத டா' என்று உள்ளுக்குள் புலம்பியவள் அவன் தனக்கு மிக அருகில் வரவும்,

"அது வந்து நான்" என்று தடுமாற, "ஹான்" என்று தன் வலிய கரங்களால் சோஃபாவின் இரு விளிம்புகளையும் பற்றியவன் அவளது முகத்திற்கு வெகுநெருக்கமாக தன் முகத்தைக் கொண்டு சென்றபடி வினவ, தன் நாசியை தீண்டிய தன்னவனின் பிரத்யேக மணம் அவளை எங்கோ கடத்தி செல்லப் பெண்ணவளின் இதயத்திற்குள் இன்ப படபடப்பு.

தன் அருகாமை பாதிப்பதால் பதில் சொல்ல முடியாமல் தடுமாறியவளின் பரிதவிப்பும், விழிகளுக்குள் இருந்து கொண்டு நடனமாடிய அவளின் கருவிழிகளும், துடித்துக்கொண்டிருந்த அவளது இதழ்களும், அவனை ஏதோ செய்ய சுயம் தொலைத்தவன் அவளது இதழ் நெருங்கிய தருணம்.

அவனது விழிகளை பார்த்தபடி "தேங்க் யு" என்றாள் அஜூதியா. ஒரு அறைவினாடி தாமதித்திருந்தாலும் இதழும் இதழும் நெருங்கியிருக்கும் என்ற தருணத்தில் அவன் செவியில் கேட்ட அவளது குரல் அவனை சுயம் பெற செய்ய, தான் நிற்கும் நிலையை உணர்ந்தவன்.

அவளுக்காக உருகிக்கொண்டிருக்கும் தன் மனதை அவளிடம் காட்டாது, "ஓ அதுக்காக தான் வந்த?" என்று அழுத்தமாக கேட்டுக்கொண்டே எழுந்து அவளை விட்டு தள்ளி நிற்க,

"ம்ம்" என்றபடி தலையசைத்தவள், பிறகு யோசனை வந்தவளாய் தன் கை பையை தேடி எடுத்து அதில் பின்னல் உள்ள சிறிய ஜிப்பை திறந்து உள்ளே இருந்த அவனது வாலெட்டை எடுத்தவள் அதை அவனிடம் நீட்டி,

"இன்னைக்கு மார்னிங் கார்ல ஏறும் பொழுது மிஸ் பண்ணிடீங்க, தேங்க்ஸ் சொல்லி இதையும் கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்" என்று சொல்ல, அதை அவளிடம் இருந்து வாங்கியவன்,

"ஓகே அவ்வளவு தானே" என்று கேட்க, அவளது தலையும் அவ்வளவு தான் என்பது போல தானாக தலையசைத்து வைக்க, "தென்" வந்த வேலை முடிந்தது என்றால் கிளம்பலாம் என்பது போல அவன் தன் அறையின் வாயிலை காட்டவும், பெண்ணவளின் முகம் நிஜமாகவே அனிச்சமாய் வாடி விட்டது.


சிறையெடுப்பானா ?
For Comments Please Click Here
 
Status
Not open for further replies.
Top