"இந்த நேரத்திலையா" பெண்ணவள் தயக்கத்துடன் வினவ, அவளது முகத்தில் விரவியிருந்த அச்சத்தை உள்வாங்கிக்கொண்டவர்,
"இதுல பயப்பட என்னடா இருக்கு நான் தான் கூட வரேன்ல வா, நீ இன்னைக்கு அழகா டான்ஸ் ஆடினல அதுக்காக உன்னை சேர்மென் வைஃப் நேர்ல பார்த்து பாராட்டனுமாம் , அவங்களுக்கு நாளைக்கு காலையில பிளைட்டாம் அதான் சேர்மென் சார் இப்பவே கூப்பிட்டு விட்டுருக்காங்க" என்று கூறிய வார்டன் பெண்ணவளின் கரத்தை பிடித்துக்கொள்ள,
"ஓகே மேம்" என்றவளுக்கு முதலில் இருந்த தயக்கம் இப்பொழுது இல்லை, அதுவும் அவரது மனைவி அவளை பாராட்டுவதற்காக அழைத்திருக்கிறார் என்று கூறியதும் அடுத்த கேள்வி கேட்க்காமல் தான் தங்கியிருக்கும் ஹாஸ்டலின் வாசலில் ஏற்கனவே அவர்களுக்காக காத்திருந்த வெள்ளை நிற ஆடி காரில் வார்டனுடன் ஏறி அமர்ந்தாள்.
'சேர்மென் மனைவிக்கு என் நடனம் பிடித்திருக்கின்றதாம், அவருக்கு என்னை நேரில் சந்திக்க வேண்டுமாம்!' பெண்ணவளின் மனம் உற்சாகத்தில் துள்ளி குதித்தது. போதாக்குறைக்கு வார்டன் மேம் வராங்க ஏன் பயப்பட வேண்டும் என்று எண்ணினாளோ என்னவோ மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் காரில் அமர்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள்.
அரைமணிநேர பயணத்தின் முடிவில் கார் பிரம்மாண்டமான அந்த பங்களாவின் வாசலில் வந்து நிற்க, காரில் இருந்து இறங்கிய அஜூத்தியாவின் கண்கள் அந்த மாளிகையின் தோற்றத்தை கண்டு ஆச்சரியத்தில் விரிந்துகொள்ள, அவர்களின் அருகில் வந்த காவலாளி, வார்டனிடம் விசாரித்துவிட்டு அவர்களை மேலே அனுப்ப, அஜூதியாவை அழைத்து கொண்டு வந்த வார்டன், ஒரு அறையின் வாசலில் கைகளில் துப்பாக்கியுடன் நின்றிருந்த காவலாளிகளிடம் வந்து சேர்மென்னை பார்க்கணும் என்று கூற, அஜூதியாவை மட்டும் உள்ளே அனுமதித்தவர்கள் அந்த வார்டனை வெளியேவே இருக்க சொல்ல,
"போயிட்டு வா அஜூதியா நான் வெளில தான் இருக்கேன்" என்றவர் அஜூதியவை உள்ளே அனுப்பினார்.
வெள்ளை நிறத்திலான வேலைப்பாடுகளாலும் கலை பொருட்களாலும் அலங்கரிக்க பட்ட அந்த அறை இன்னும் அழகாக இருக்க, கண்களில் ஆர்வம் மின்ன அங்கிருந்த புகைப்படங்களையும் கலை பொருட்களையும் பார்வையிட்டு கொண்டிருந்தாள்.
அப்போழுது ஒரு புகைப்படம் அவளது கவனத்தை வெகுவாக ஈர்க்க அதன் அருகே இன்னும் நெருங்கி சென்று கூர்ந்து பார்த்தவளுக்கு 'சீ' என்றாகிவிட்டது. அதன் பிறகு தான் அனைத்து புகைப்படங்களையும், சிறிய சிறிய சிலை வடிவில் இருந்த கலை பொருட்களையும் கூர்ந்து பார்த்தாள். அதை பார்க்க பார்க்க பெண்ணவளுக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட, முகத்தை சுளித்தவள், திரும்பி வந்து கதவை திறக்க முயற்சி செய்த பொழுது கதவு திறக்க வில்லை.
ஒரு முறையல்ல ஒன்று இரெண்டு மூன்று என்று அவள் "மேடம் யாரவது இருக்கீங்களா" என்று சத்தமாக அழைத்தபடி கதவை திறக்க முயற்சி செய்து கொண்டிருக்க, "அஜூதியா" என்று அவளுக்கு பின்னால் இருந்து மிக அருகில் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பியவளுக்கு, நரைத்த முடியும் பெருத்த உடலுமாக தன் முன்னே வெறும் முட்டி வரை உள்ள பாத்ரோபில் நின்றிருந்த தன் கல்லூரி சேர்மென்னை பாத்ததும் ஒருமாதிரி ஆகிவிட, வலுக்கட்டாயமாக சிரித்தவள்,
"ஹெலோ சேர் மேம் வர சொல்லிருந்தாங்களாம் அவங்கள எங்க?" என்று கேட்க,
"மேம் தானே வருவா வருவா முதல்ல நீ வா" என்றவரின் வாயில் இருந்த வெண்குழலும் இதழில் ஒட்டியிருந்த கோணல் புன்னகையும் உள்ளுக்குள் கிலியை உண்டாக்க பெண்ணவளின் மூளை அவளுக்கு விடுத்த எச்சரிக்கையில் இதயம் தடதடக்க நின்றிருந்தவள்,
"நான் வீட்டுக்கு போகணும் சார் கதவை திறந்துவிடுங்க" என்றவள் அவரது முகத்தை பார்க்காது திரும்பி நின்றுகொண்டு கதவை திறக்க முயற்சி செய்துகொண்டிருக்க,
சத்தமான சிரிப்பை தொடர்ந்து, "நீ என்ன செஞ்சாலும் கதவு திறக்காது அஜூ, வா வா வந்து என் பக்கத்துல உக்காரு சீக்கிரமே போய்டலாம்" என்று சொல்லி அவளை பார்த்து சிரிக்க, விழிகளில் அனல் தெறிக்க அவரை பார்த்தவள்.
"சார் உங்க பேச்சும் சரியில்ல பார்வையும் சரி இல்லை வந்து கதவை திறந்து விடுங்க இல்லை நான் சத்தம் போடுவேன்" என்றவள் கத்தியபடி வார்டனை அழைக்க, அவரோ காதில் ஹெட் செட்டை மாட்டிக்கொண்டு, ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி காரில் அமர்ந்திருந்தார்.
கதவை தட்டி தட்டி சோர்ந்து போனவளுக்கு ஒருவித இனம் புரியாத பயம் ஒன்று அவளின் இதயத்தில் தோன்ற, அப்பொழுது தன் கரத்தில் இருந்த வெண்குழலை அஷ் ட்ரேவில் போட்டு நசுக்கிவிட்டு மெல்ல அஜூதாவை நோக்கி அவர் வர வர அஜூத்தாவின் கால்கள் பயத்தில் தள்ளாடியது.
அவர் அவளை நெருங்கி அவளது கரத்தை பிடிப்பதற்குள் விலகியவள்,
"சார் என்ன இது உங்கள என் அப்பாவாதான் பார்த்தேன். ப்ளீஸ் என்னை விட்டுடுங்க" என்றவள் அவர் நெருங்கவும் அவரை தள்ளிவிட முயற்சி செய்ய, கோபம் கொண்டவர், "ஹவ் டேர் யு" என்று கத்தியபடி அஜூத்தாவின் கன்னத்தில் ஓங்கி அறைய, சுவற்றை பிடித்துக்கொண்டு தன்னை நிலைப்படுத்தி கொண்டாள்.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கதை பேசும் தன் விழிகளுக்கு மையிட்டவள், கண்ணாடியில் தன் ஒப்பனையை ஒரு முறை சரிபார்த்து கொண்டாள். பின்பு மேசையில் இருந்த மரப்பெட்டியை திறந்து அதனுள் இருந்த சலங்கையை தன் கையில் எடுத்து மென்மையாக அதை வருடினாள். அவளது இதழ் அழகாக விரிந்து கொள்ள சலங்கையை அப்படியே தன் நெஞ்சோடு அழுத்தி பிடித்தபடி தன் கண்களை மூடிக்கொண்டாள்.
'டக் டக்' கருப்பு நிற ஷூ ஒலியெழுப்ப அறையின் கதவை திறந்து கொண்டு புன்னகையுடன் அவளை நோக்கி உள்ளே வந்தவன் மயில் இறகை கொண்டு அவளது வதனத்தை நெற்றி துவங்கி மெதுவாக வருட, தேகம் தளிர்ந்தவள் இன்னும் தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள,
"அஜூ அஜூதியா" என்ற அழுத்தமாக குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், "டைம் ஆச்சு டி இப்போ உன் டான்ஸ் தான் மறுபடியும் பகல் கனவா வா சீக்கிரம் ரெடியாகு" என்ற தன் தோழியின் குரலில் சுயம் பெற்றவள் தன்னை தானே கடித்துக்கொண்டு, தன் கையில் இருந்த சலங்கைக்கு ஒரு அழுத்தமான முத்தம் வைத்து அதை தன் காலில் அணிந்துகொண்டு அவள் வெளியே வரவும் அவளது பெயரை சொல்லி அழைக்க, மேடை ஏறி அனைவருக்கும் வணக்கம் சொன்னவள்,
"தக தக தக
தின தின தின
நக நக நக
திக்கிட தான தான தான
திக்கிட திக்கிட தகின தான
தாக்குடு தான
திக்கிட்டு தக்கட்ட தி தி தி
தாணு தாணு கென் தனான
தாணு தாணு கென் தனான
தாணு தாணு கென் தனான
அதிநவநீதா அபிநயராஜா
கோகுலபால கோடிபிரகாஷா
விரக நரக ஸ்ரீ ரக் ஷக மாலா
எத்தனைமுறை நான் ஏங்கி சாவேன்
இத்தவனை எனை ஆட்கொள்வாயா
சூடிய வாடலை சூடிய வா
களவாடிய சிந்தை திரும்பத்தா
பூதகியாக பணித்திடுவாயா
பாவை விரகம் பருகிடுவாயா
ஆயர்தம் மாயா நீ வா
மாயா மாயா
ஆயர்தம் மாயா நீ வா
மாயா மாயா
ஆயர்தம் மாயா நீ வா
மாயா மாயா
உன்னை காணாது
நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னை காணாது
நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே" என்று ஒலித்த பாடலுக்கு ஏற்ப அவளது விரிந்த விழிகள் அபிநயம் பேச தன் தேகத்தை நளினமாக வளைத்து, ஆடி கொண்டிருந்தாள்.
அரங்கத்தில் உள்ள அனைவரும் அவளது நடனத்தை ரசித்தபடி அவளையே பார்த்து கொண்டிருக்க, கருப்பு நிற கோட் சூட்டில் அழுத்தமான காலடிகள் தரையில் பட்டு ஒலியெழுப்ப விழாவின் உரிமையாளர் எழுந்து சென்று அவனை வரவேற்க தன் சகாக்களுடன் உள்ளே நுழைந்தவன் அவனுக்காக ஒதுக்கி வைத்திருந்த விஐபி என்று ஒட்டப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
"உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே" என்ற வரி ஒலிக்கும் பொழுது, சபையினரை பார்த்து புன்னகைத்தபடி நடனமாடிக்கொண்டிருந்தவளின் கருவிழிகள், நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி சாவகாசமாக அமர்ந்துகொண்டு தன்னையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்த அந்த சாம்பல் நிற விழிகளை கொண்டவனை பார்க்க ஒருகணம் பெண்ணவள் நிஜமாகவே தடுமாறி போனாள். இதயம் நின்று துடிக்க தன் தடுமாற்றத்தை மறைத்தபடி ஆடியவளின் மொத்த பார்வையும் அவன் மீது நிலைத்திருக்க அவனும் அவளை தான் பார்த்தான் பார்த்துக்கொண்டே இருந்தான்.
!!!!!!!!!!!!!!!!!!!!
சலசலவென சத்தத்துடன் அந்த சிற்றருவியின் கீழ் நின்றிருந்தவள் மீது சில்லென்று விழுந்த தண்ணீர் அவளுக்கு ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்த அதுவரை இறுக்கமாக இருந்த அவளது மனநிலை கொஞ்சம் மாறுபட்டிருக்க, அந்த குளிர்ந்த நீரை தன் முகத்தில் வாங்கியபடி கண்மூடி நின்றவள், குளுமை தாங்காது அருவில் இருந்து வெளியே வர பார்க்கவும் சிறிய பாறை ஒன்றில் தன் கால் தட்டுப்பட விழ போனவளை, இரு வலிய கரங்கள் இறுக்கமாக பிடித்துக்கொள்ள அவன் முகத்தை கூட பார்க்க பிடிக்காது அவனது பிடியில் இருந்து விடுபட முனைந்தவள் மீண்டும் விழப்போக,
"ஏய் கவனமா நில்லு" என்று கடிந்து கொண்டவன், இந்த முறை அவளை தன் தோளோடு அணைத்து பிடித்துக்கொள்ள, இவளுக்கு தான் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. ஏற்கனவே அவன் மீது கொண்ட காதலுக்கு விடை தெரியாது தவித்து கொண்டிருப்பவளுக்கு அவன் காட்டும் இந்த நெருக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த மிகவும் சிரமப்பட்டு தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள்.
என்ன தான் அவள் தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டாலும் அவளின் நிலையை அவளது வதனம் தெளிவாக காட்டிவிட, தன் கைவளைவுக்குள் நெளிந்தபடி நின்றிருந்தவளின் சிவந்த முகத்தை வைத்தே அவளது நிலையை உணர்ந்தவனின் சிரிக்க மறந்த இதழ்கள் கூட லேசாக புன்னைக்க, தன் பிடியை இன்னும் இறுக்கியவன் அவளை இன்னும் தன்னோடு நெருக்கமாக அணைத்துப்பிடித்துக்கொள்ள, தவித்து போன பெண்ணவளோ அவனிடம் இருந்து விலக பார்க்க, அவள் புறம் சாய்ந்தவன், "என்னாச்சு?" என்று கிசுகிசுப்பாக கேட்க தேகம் சிலிர்க்க அவனது சாம்பல் விழிகளை பார்த்தவள் அதில் தொலைந்து போக துடித்த தன் மனதை சிரமப்பட்டு அடக்கி, அவன் முகம் பார்க்காது,
"போகணும்" என்று குளிரில் தன் அதரங்கள் நடுங்க கூறினாள்.
பெண்ணவளின் சிவந்த முகமும் துடிக்கும் அதரங்களும் ஆணவனின் உணர்ச்சிகளை தட்டி எழுப்ப தன்னை மறந்து அவளது இதழை நோக்கி குனிந்த நேரம் அவனிடம் இருந்து சட்டென்று விலகியவள்,
"நீங்க தான் என்னை காதலிக்கலைல" என்று கேட்டாள் தன் கண்களில் நீர் திரள, கருவிழிகளும் சாம்பல் விழிகளும் ஒன்றோடு ஒன்றாக பிண்ணிக்கொண்டது. 'என்னை பிடிக்கும் என்று ஒரு வார்த்தை சொல்லு டா’ என்று பெண்ணவளின் விழிகள் கெஞ்சிக்கொண்டிருக்க, கண்களில் நீர் வடிய, இதழ் கடித்து தன் கேவல அடக்கியபடி நின்றிருந்தவளை அழுத்தமாக பார்த்தான்.
அவளும் பார்த்தாள். உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட அவனது விழிகள் வழக்கம் போல வெறுமையாக இருக்க , அங்கிருந்து செல்ல திரும்பியவளது கழுத்தை தன் கரம் கொண்டு மென்மையாக வளைத்தவன், அவளது கருவிழிகளை நேருக்கு நேராக பார்த்து,
"சரியா சொன்ன நான் உன்னை காதலிக்கலை தான், ஆனா நீ என்னை காதலிக்கிறதானே, அதான் ஹே ராவணா வந்து போர் தொடு சிறை எடுன்னு கவிதையெல்லாம் எழுத்திருக்கியே" என்று நக்கலாக சிரித்தவன், "ஸோ நீ என்ன கிஸ் பண்ணலாம் தப்பில்லை" என்றவன் நொடி பொழுது தாமதிக்காது அவளது இதழில் தன் இதழை பதித்தான்.
கதையின் டீசரை படித்து பாருங்கள் பிடித்திருந்தால் உங்களது கருத்தை கீழே உள்ள திரியில் தெரிவியுங்கள்.