GG writers
Moderator
அத்தியாயம் - 11
எடோனிஸ் ஆண்ட்ரோனிக்கஸின் அறிவுரைப்படி ஐந்து வாரிசுகளும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வேலையை செய்ய புறப்பட்டுவிட்டனர். எதிரிகளின் நடவடிக்கை ஆல்ப் மலைத்தொடரின் பக்கம் அதிகமாக இருக்கிறது என இவர்களின் ஸ்பை முலம் இன்பர்மேஷன் வந்திருக்க, கும்பலாக கிளம்பிய ஐவரும் ஆல்ப் மலையின் இவர்களுக்கு தெரிந்த விட்ச் வசிக்கும் ஒரு கிராமத்தை வந்தடைந்தனர்.
"இன்னும் எவ்ளோ நேரம் போறது.. ஆஆஆ எனக்கு டையர்டா இருக்கு கைஸ்.. தோரா ஆட்கள் இருக்க இடத்துக்கு வந்தோமா இல்லையா"
தன் டேபை நோண்டியபடி சலித்துக் கொண்ட ஜேம்ஸை மற்ற நால்வரும் முறைத்து வைக்க...
"ஜேம்ஸ் இன்னும் நாம நமக்கு இன்பர்மேஷன் தந்த விச்ட் இருக்க வீட்டுக்குகூட போகல மேன்.. அவங்கல பார்த்தப்புறம்தான் இங்க என்ன நடக்குதுன்னே நமக்கு தெரியும். அதுபோக இந்த ஆல்ப் மௌன்டைன் 1200 கி.மீ.. இதுல அந்த தோரா ஆட்களை அவங்களுக்கு சந்தேகம் வராம நாம தேடப்போறோம்.. சோ இங்க நமக்கு ரொம்ப முக்கியமான விஷயம் பொறுமை.. அதனால சலிச்சுக்காம வா மேன்"
அகஸ்டஸ் தங்களின் நிலையை விளக்கி சொல்ல "என்னாது.. 1200 கிலோமீட்டரா" மற்றொருபுறம் அதிர்ந்தான் லூகாஸ்.
அவன் அதிர்ச்சியை எல்லாம் கணக்கில் எடுக்காது அந்த கிராமத்திற்குள் நுழைந்தனர் அனைவரும். நம்மூர் கிராமத்தைப்போல் அங்கே வீடுகள் வரிசையாக ஒன்றும் இருக்கவில்லை.. மாறாக அந்த அழகிய ஆல்ப் மலைத்தொடரின் சரிவில் ஆங்காங்கே வீடுகள் அழகுற அமைந்திருந்தன.
அவர்களை சுற்றியிருந்த இயற்கையை மெல்ல ரசித்தபடி அங்கிருந்த ஒரு வீட்டின் முன் வந்து நின்று கதவை தட்டினான் அகி.. அவன் தட்டியதும் கதவை திறந்தார் நாற்பது வயதுமிக்க ஒரு பெண். அகி அவன் தந்தை தந்திருந்த ஆண்ட்ரோனிக்கஸ் பரம்பரையின் சிம்பல் பதித்த காயின் ஒன்றை அவரிடம் காட்டி அர்த்தம் பொதிந்த பார்வையை பார்க்க..
"உள்ள வாங்க இந்த இடத்தை கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டபட்டுடீங்களா" என கேட்டபடி இவர்களை உள்ளே வர அனுமதித்தார் அப்பெண். உள்ளே வந்து அமர்ந்தவுடன் "எதாவது சாப்பிடுறீங்களா" என அந்த விட்ச் கேரன் கேட்க,
"மிஸ்.கேரன் நோ பார்மாலிட்டிஸ்.. நீங்க நேரா எங்களுக்கு தந்த இன்பர்மேஷனோட டீட்டெய்ல்ஸ் மட்டும் தாங்க.. நாங்க வேலைய ஆரம்பிக்கிறோம்" சிரில் சுற்றி வளைக்காமல் தாங்கள் வந்த வேலை குறித்து பேச்சை துவங்கிவிட்டான்.
"யங் மேன் உங்க ஆர்வம் அவசரம் எல்லாம் எனக்கு புரியுது.. ஆனா இந்த ஆல்ப் மௌன்டைன் ரொம்ப பெருசு. தோராவோட வேலைகள நீங்க கண்டுபிடிக்க இந்த அவசரம் உங்களுக்கு கைக்கொடுக்காது. சோ பீ காம்.. நான் உங்களுக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்"
சிரிலின் பேச்சை கேட்டு புன்னகைத்த கேரன் அகி கூறியதையே தானும் நிதானமாக பேசி சென்றார். அவர் சொன்னதை கேட்டு "ப்ச்" என சிரில் சலித்துக் கொள்ள, "காம் டௌன் சிரில்" என அகஸ்டஸ் தான் அவனை சாந்தப்படுத்தினான்.
கேரன் அவர்கள் உணவுகளை எடுத்துக் கொண்ட பிறகே அவர் கூற வேண்டிய தகவல்களை பகிர துவங்கினார்.
"பசங்கலா தோரா வம்சத்தோட நடமாட்டம் இங்க ஆல்ப்ல கொஞ்ச நாளா இருந்துட்டே இருக்கு.. அவங்க இங்க எதையோ தீவிரமாக தேடுறாங்கனு நல்லா தெரியுது.. ஆனா அது என்னன்னு என்னால கண்டு பிடிக்க முடியலை. அதான் மிஸ்டர். ஆண்ட்ரோனிக்கஸ்கிட்ட இந்த விஷயத்தை கொண்டு வந்தேன்"
கேரன் சொன்னதை கேட்டபின் சிரில் அவன் சந்தேகத்தை கேட்டான்.
"மிஸ்.கேரன் அவங்க ஆல்போட எந்த பகுதியில இருக்காங்க எதாவது கெஸ் இருக்கா"
"அவங்க முதல்ல வடக்கு பகுதியில் இருந்தாங்க, அப்புறம் தெற்கு பகுதியில் இருந்ததா தகவல் வந்தது. இப்போ மேற்கு பகுதியில் சுத்திட்டு இருக்காங்கன்னு நேத்து என்னோட பிரண்ட் ஒருத்தர் சொன்னாரு. ஆனா ஒரு இடத்துல இல்லாம எதுக்கு இப்படி இந்த மலைய சுத்திட்டு வராங்கனு எனக்கு தெரியலை" என்றார் கேரன்.
கேரன் சொன்னதை கேட்டதும் ஐவருக்கும் 'சோல் ஆஃப் ஹார்ட்' இந்த பெயரே முதலில் நினைவுக்கு வந்தது. அவர்களுக்கு புரிந்துவிட்டது எதற்காக தோராவின் ஆட்கள் இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என.
"அப்புறம் உங்களுக்கு பர்ஸ்ட் புளோர்ல இருக்க ரூம்ஸ கிளீன் பண்ணி வச்சிருக்கேன். நீங்க நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு உங்க வேலைய ஆரம்பிங்க.. வாங்க உங்க ரூம காட்டுறேன்" கேரன் ஐவரும் ஓய்வெடுக்க அறைகளை காட்டிவிட்டு அவரும் தன் அறைக்கு சென்றுவிட்டார்.
கேரன் சென்றபின் அடுத்தநாள் என்ன செய்யவேண்டும் என தங்களுக்குள் பேசி முடிவெடுத்த பின்னர் ஐவரும் அவர்களுக்கு தரப்பட்ட அறைக்குள் நுழைந்தனர்.
----------------------------
"ஜேம்ஸ் எதாவது ஆல் நடமாட்டம் தெரியுதா. இன்னும் அங்க என்ன நோண்டிட்டு இருக்க"
டேபை தீவிரமாக நோண்டிக்கொண்டிருந்த ஜேம்ஸிடம் சகித்துக் கொண்டான் சிரில். அவர்கள் ஐவரில் ஜேம்ஸ் மட்டுமே கம்ப்யூட்டரில் கொஞ்சம் வல்லவன். சரியான டெக் பித்து என்று கூட சொல்லலாம். எனவே அவனை வைத்து அவர்கள் டெக்னாலஜி சம்மந்தப்பட்ட வேலைகளை பார்த்துக் கொள்கின்றனர்.
"சிரில் என்னோட ஸ்பை பட்டர்பிளை சுத்திட்டே இருக்கு, ஆள் நடமாட்டம் தெரிஞ்சா உடனே காட்டிடும்.. கொஞ்சம் பொறுமையா இரு மேன்"
இது இப்போதைக்கு முடியாது என்று உணர்ந்து ஹாயாக அமர்ந்திருந்த அகி மற்றும் லூகாஸோடு போய் இப்போது தானும் சிரில் அமர
"என்ன ப்ரோ நீ வேகமா ஜேம்ஸ்ட்ட போறத பாத்து, வேலைய உடனே முடிச்சிட்டு வருவன்னு பாத்தேன்.. என்ன முடிஞ்சுதா"
அகஸ்டஸ் கிண்டலாக கேட்க, அவன் தோளில் லேசாக அடித்து "பேசாம இருடா" என்றபடி சிரில் அமர, அவனின் கடுகடுக்கும் முகத்தை பார்த்து அகியும் லூகாஸும் சிரித்து வைத்தனர். இவர்களை சற்றும் கண்டுக்கொள்ளாமல் லிடியா அவள் கையில் இருந்த புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.
தோராவின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க இரவு ஓய்வெடுத்து விட்டு, விடிந்தும் விடியாத காலை வேலையில் ஐவரும் கிளம்பியிருந்தனர். ஆல்ப் மலையின் மேற்கு திசையில் ஒரு மறைவான இடத்தில் டெண்டை போட்டு வேலை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
"கைஸ் கைஸ் சீக்கிரம் வாங்க.. இங்க பாருங்க ஒரு குரூப் சிக்கியிருக்கு.."
ஜேம்ஸ் அவசரமாக கூப்பிடவும் நால்வரும் அந்த திரையில் யார் தெரிகிறார்கள் என பார்க்க, அங்கே ஒரு குரூப் டெண்ட் போட்டு இருந்தது தெரிந்தது. ஆனால் இவர்கள் தோராதானா என தெரியாது குழம்பினர்.
"அங்க இருக்கவங்கள பாத்தா ஒருத்தரும் தோரானு சொல்ற மாதிரியே இல்ல.. அவங்க தோரா பரம்பரையானு எப்படி கண்டுபிடிக்க போறோம்.." ஜேம்ஸ் குழப்பமாக மற்றவர்களை பார்த்து கேட்டான்.
"அங்க இருக்கவங்க தோராவா இல்லையான்னு நாம நேர்ல போய் பார்த்தா மட்டும்தான் தெரிஞ்சுக்கு முடியும்.. எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க.. ஜேம்ஸ் அவங்க இருக்க லொக்கேஷன நாம ரீச் பண்ண கரெக்ட்டா எவ்ளோ நேரம் ஆகும்"
ஜேம்ஸின் கேள்விக்கு லிடியா சொன்ன பதிலை கேட்டு தங்களின் பொருட்களை மற்றவர்கள் மூட்டைக்கட்ட, "இங்கிருந்து சுமார் அறுபது கிலோமீட்டர் நாம போனா அவங்கல மீட் பண்ண சான்ஸ் இருக்கு" என்றான் ஜேம்ஸ்.
இடம் மாற்றும் மந்திரத்தை போட்டு அந்த குரூப் இருக்கும் இடத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன்னால் போய் இறங்கினர்.
"கைஸ் இங்கயிருந்து அந்த லொக்கேஷனை நாம ரீச் பண்ண மேக்சிமம் அரை மணிநேரம் ஆகலாம்.. அங்க போய் அவசரப்பட்டு யாரும் உங்க மேஜிக்க யூஸ் பண்ணிறாதீங்க.. சிரில் உனக்குத்தான் முக்கியமா சொல்றேன்.. அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாத"
அகஸ்டஸ் முன்னெச்சரிக்கை செய்ய, சிரில் சரியென்றப்பின் அந்த இடத்தை நோக்கி மெல்ல முன்னேறினர் ஐவரும். இருநூறு மீட்டர் தூரம் இருக்கும்போதே நின்றுவிட்டு, அங்கே என்ன நடக்கிறது என இங்கிருந்தே ஜேம்ஸின் ஸ்பை பட்டாம்பூச்சியின் மூலம் கண்காணிக்க துவங்கினர்.
"இதுவரை சொல்ற மாதிரி எந்த மூவ்மெண்டும் அவங்ககிட்ட தெரிலபா.. ஒருவேளை இவங்க தோரா இல்லையோ"
இவ்வளவு நேரம் அவர்கள் நடமாட்டத்தை கண்காணித்த லூகாஸ் கூற, அது உண்மைதானா என காண அவன் கையில் இருந்த டேப்பை வாங்கி ஒவ்வொருவரும் அங்கு என்ன நடக்கிறது என கவனித்தனர். லூகாஸ் சொன்னதைக் போல் அங்கு சந்தேகிக்கும்படி யாரும் எதுவும் செய்யவில்லை, காலை உணவுக்கான ஏற்பாடுகள்தான் அங்கு நடந்துக் கொண்டிருந்தது.
இப்போது டேப் அகஸ்டஸின் கைக்கு மாறிட, அங்கிருந்தவர்களை பார்த்துக் கொண்டே வந்தவனுக்கு அந்த கூட்டத்தில் ஓரமாய் காபி கப்புடன் நிற்கும் உருவம் ஒன்று கண்களில் விழுந்தது. எங்கையோ பார்த்ததுபோல் இருந்த அந்த உருவத்தை நன்கு சூம் செய்து பார்த்த அகிக்கு திக்கென்றது.
"கைஸ் அங்க இருக்கிறது தோரா ஆட்கள்தான்"
ஆணித்தரமாக சொன்ன அகியை சூழ்ந்த மற்றவர்கள் எப்படி என கேட்க, அவன் அந்த உருவத்தை காட்டினான்..
"கைஸ் இங்க நல்லா பாருங்க இங்க நிக்கிறவன.. இவன் நோவா தோராவோட அடுத்த வாரிசு.."
அகஸ்ட்ஸ் சொன்ன பின்னரே அங்கு நின்றிருந்த நோவாவை கூர்ந்து கவனித்தனர் மற்ற நால்வரும்.
"ஆமா உனக்கு எப்படி இவன பத்தி தெரியும் அகி"
சிரில் சட்டென கேட்டபின்னர் அகிக்கு பகீரென்றது. அவன் மாளிகையில் வைத்து நோவாவை பார்த்ததும் நோவா தோராவின் பரம்பரை என அறிந்து கொண்டாலும், வெளியே வந்து அவன் யாரென விசாரித்து அவனே அடுத்த வாரிசு என தெரிந்துக் கொண்டதையும் அவன் அண்ணனிடம் எப்படி சொல்லுவான்.
எனவே "எப்படியோ தெரியும்.. இப்ப அதுவா முக்கியம், முதல்ல அங்க என்ன நடக்குதுன்னு பாப்போம்" என பேசி மற்றவர்களின் கவனத்தை வெற்றிகரமாக நோவாவின் புறம் திருப்பிவிட்டான்.
வெகுநேரமாக அங்கிருந்தவர்களை ஐவரும் மாற்றி மாற்றி நோட்டம்விட, கொஞ்ச நேரத்தில் இவர்கள் காத்திருப்பிற்கான பலன் கிடைத்தது. ஆம் அங்கிருந்த கும்பல் அவர்கள் டென்டுகள் பைகள் எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமாக, அகஸ்டஸின் குரூப்பும் கொஞ்சம் இடைவெளி விட்டு அவர்களை பின்தொடர தயாராகினர்.
"எவ்ளோ நேரம்தான் இப்படி தூர இருந்தே உன் கேமராவ போக்கஸ் பண்ணுவ ஜேம்ஸ், இங்க குடு"
ரொம்ப நேரமாக நோவாவை பின்தொடர்ந்து கலைத்துப்போன சிரில் ஜேம்ஸின் கையிலிருந்த பட்டாம்பூச்சி கேமராவின் இயக்கும் கருவியை வாங்கி, அதை நோவாவின் அருகே பறக்க விட்டான்.
இங்கு நோவா அவன் அழைத்து வந்திருந்த ஆட்களை அவனை பின்தொடர சொல்லிவிட்டு முன்னே இருந்த அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்திருந்தான். அவன் கைகளில் வழிகாட்டும் கருவியைப்போல் என்னவோ ஒன்று இருக்க, அதை அவ்வப்போது மேலே உயர்த்தி பார்த்துக்கொண்டே நகர்ந்தான்.
அப்படி அவன் ஒருமுறை மேலே பார்க்கும்போது பட்டாம்பூச்சி ஒன்று அவர்களுக்கு மேல் பறப்பதை கண்டு அவன் புருவங்கள் யோசனையில் சுருங்கிற்று. அவர்கள் டென்ட் போட்டிருந்த இடத்தில் கூட இதே பட்டாம்பூச்சியை பார்த்த நினைவு வர, நோவா தன் பின்னால் வந்தவர்களை எல்லாம் அப்படியே நிற்க சொல்லிவிட்டு கையை மேலே பார்த்து நீட்டினான்.
அந்த பட்டாம்பூச்சி தானாக அவன் கைகளில் சென்று அமர, இங்கு டேபில் அதை பார்த்த ஐந்து வாரிசுகளுக்கும் பகீரென்றது. அதுவும் நோவாவின் முகம் குழப்பத்திலிருந்தது மெல்ல நீங்கி, அவன் இதழ்கள் நக்கலாக வளைந்த நொடி இவர்களுக்கு புரிந்துவிட்டது.. நோவா தங்களை கண்டுக்கொண்டான் என. இப்போது சிரிலைதான் மற்ற நால்வரும் பயங்கரமாக முறைத்திருந்தனர். அவனுடைய அவசரத்தால் மாட்டிக் கொண்டோம் என நால்வருக்கும் கடுகடுவென வந்தது.
"யாரோ நம்மல பாலோ பண்ணிட்டு வராங்க"
அலட்டிக்கொள்ளாமல் சின்ன புன்னகையுடன் நோவா சொல்ல, அவன் பின்னாலிருந்த கும்பல் முழுவதும் உடனே சண்டைக்கு தயார் ஆனது. அதை எல்லாம் அந்த பட்டாம்பூச்சி வடிவில் விட்டிருந்த கேமராவின் வழியே பார்த்த அகஸ்டஸுக்கு, இனி இவர்கள் அமைதியாய் சென்றாலும் நோவா விடமாட்டான் என புரிந்து போனது.
நோவா கண்ணை மூடி வாய்க்குள் ஸ்பெல் ஒன்றை உச்சரிக்க, இங்கு ஐவருக்கும் யாரோ தங்கள் தலையை சுத்தியலால் அடித்ததைப்போன்று பயங்கரமாக வலித்தது.
"என் பின்னாடி வந்த நீங்க யாரா இருந்தாலும் இப்ப என் முன்னாடி வாங்க.. ஏனா எனக்கு எப்பவும் நேருக்கு நேரா மோதிதான் பழக்கம்"
நோவாவின் குரல் இவர்கள் மண்டைக்குள் ஒலிக்க, இது எப்படி சாத்தியம் என வாரிசுகள் ஐவரும் அதிர்ச்சியாய் இருக்க ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அதேநேரம் அந்த நோவா தங்களைவிட மந்திரத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கிறான் என்று ஐவருக்கும் புரிந்தது. வரப்போகும் ஆபத்தை எப்படி எதிர்க்கொள்வது என ஒவ்வொருவரின் மூளையும்
தனித்தனியே கணக்கிட, இறுதியில் நோவாவை எதிர்க்கொள்வது என ஐவரும் எதிரியின் பலம் அறியாது முடிவெடுத்தனர்.
-தொடரும்