GG writers
Moderator
அத்தியாயம் - 12
கண்கள் எட்டும் தூரம் வரை இருளே சூழ்ந்திருந்திருக்க, எவ்வளவு நேரம் தேடி பார்த்தும் வெளிச்சத்தை கண்டறிய முடியாமல் அந்த இருளை விட்டு வெளிவர முடியாமல் தவித்தாள் அவள். அவளின் மனதில் இருந்த நம்பிக்கை எல்லாம் வற்றிப்போக, இனி அவ்வளவுதான் இருளோடு மட்டுமே தன் பயணம் என அந்த இடத்தில் ஒரு ஒரமாக ஒடுங்கி அமர்ந்துவிட்டாள்.
அதேநேரம் அவளுக்கு எதிர் திசையில் வெகு தொலைவில் சூரியனின் பிரகாசத்தை கொண்ட தீபம் ஒன்று மெல்ல அவளை நோக்கி வர துவங்கியது அவளுக்கு தெரியவில்லை. தூரத்தில் சிறிதாய் வந்த தீபம், இப்போது அவளை நெருங்கி வந்தது. சிறு தீபம் அவளை நெருங்க நெருங்க பெரிய அக்னி ஜுவாலயாக மாறியது. வேகமாய் வந்த அக்னி ஜுவாலை வந்த வேகத்தில் அவள் மீது மோத, என்ன ஆச்சரியம் அந்த எரிந்த தீ குளிர் காற்றாய் அவளை தழுவிக்கொண்டது.
இருளில் இருந்து தான் தப்பிக்கும் ஒளியாக வந்த எரிதழல் எப்படி சில்லென்ற தென்றல் காற்றாய் தன்னை தழுவியது என அவள் யோசிக்கும் போதே அந்த அக்னி ஜுவாலை மெல்ல மனித உருவில் மாற, அதன் உருவம் கண்டு "அகஸ்டஸ்" என்றாள் லைரா ஆச்சரியத்தில்.
அகஸ்டஸிடம் இருந்து மிளிர்ந்த அபரிமிதமான பிராகாசத்தில் அவன் எதிரே நின்றிருந்த லைரா செதுக்கி வைத்த சிலையாக தெரிந்தாள். அந்த இருளிடமிருந்து லைராவை காக்கும் பொருட்டு தன் கைகளை புன்னகையுடன் அவன் நீட்டி நிற்க, அகியின் முகத்தில் தெரிந்த தேஜஸ் லைராவை அவனுடன் போக சொல்லியது. அவள் மனதின் சொல்லை ஏற்று அவன் கைகளை அவளும் பற்றி, தானும் புன்னகைத்து நின்றாள்.
திடீரென்று என்னவானதோ இவ்வளவு நேரம் இவர்களை சூழ்ந்திருந்த இளந்தென்றல் இப்போது தகிக்கும் அனலாய் மாற, லைராவின் முன் நிற்கும் அகஸ்டஸின் புன்னகை சிந்தும் உருவம் மெல்ல காற்றில் கரைய துவங்கிட துடித்துப் போனாள் அவள்.
"அகி உங்களுக்கு என்ன ஆச்சு... அகி போகாதீங்க"
காற்றில் கரையும் அவன் உருவத்தை கண்டு உயிர் போகும் வலியில் துடித்துப்போன பேதை அவள் அழுது கரைய.. பாவம் அவள் கதறல் எதையும் கேட்காமல் அகியின் உருவம் பாதி கரைந்தேபோனது. மீதியும் கரையும் முன் "அகி.. அகி.. அகி" என கதறிதுடித்து தூக்கத்திலிருந்து எழுந்தாள் லைரா.
முகம் முழுவதும் பயத்தில் வியர்த்து போயிருக்க மனம் பதட்டமாக துடித்துக் கொண்டிருந்தது. எதற்காக இப்படி ஒரு கனவு அதுவும் அகி அவன் அப்பா சொன்ன வேலைகளை முடிக்க சென்றிருக்கும் போது.. அகிக்கு எதுவும் பிரச்சினை வரப்போகிறதோ.. அதை சொல்லவே இந்த கனவு வந்ததோ என பலவாறு யோசித்த லைராவுக்கு மனதே பாரமானது.
அகஸ்டஸையும் அவளுக்கு வந்த கனவையும் மாற்றி மாற்றி நினைத்த லைரா, நினைவு வந்தவளாக அவள் கையில் இருந்த பாதுகாப்பு கயிற்றை வேகமாக பார்த்தாள். அகிக்கு எதுவும் பிரச்சினை வந்தால் அந்த கயிறு அவளுக்கு உணர்த்திவிடுமே. இப்போது அந்த கயிற்றில் எந்த சலனமும் இல்லாமல் இருக்க, அகி பாதுகாப்பாக இருக்கிறான் என அமைதி ஆன லைரா மீண்டும் படுத்துக் கொண்டாள்.
ஆனால் அவளை விட்டுப்போன தூக்கம் தான் அவளுக்கு மீண்டும் வருவேனா என்றது. அகியின் நினைவிலே உழன்றவள் விட்டதை வெறித்தபடி அந்த இரவை கடத்திட, மனமோ அகிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என இடைவிடாது பிரார்த்தித்தது..
-----------------------------
தன் முன்னால் நின்றிருந்த நான்கு பரம்பரையின் வாரிசுகளை கண்டு புருவம் உயர்த்திய நோவா,
"வாவ்! நாலு பரம்பரையோட வாரிசுகள்.. இங்க அதுவும் இந்த அத்தாந்திர காட்டுக்குள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"
கொஞ்சமும் பயம் இல்லாமல் தைரியமாய் நின்றிருந்த வாரிசுகளை பார்த்து பொய்யாக ஆச்சரியப்பட்டான் நோவா. அவர்கள் நோவாவை பார்த்து முறைத்தாலும் யாரும் எதுவும் பேசவில்லை, நோவாவின் முன்னே வருவதற்குமுன் அகி சொன்னது அவர்கள் காதுகளில் மீண்டும் விழுந்தது.
"கைஸ் ஃபைட் பண்ண ரெடியா இருங்க.. ஆனா நாம முதல்ல ஆரம்பிக்க கூடாது, அவன் எதாவது பண்ணினா மட்டும் நாம எதிர்ப்போம்.. முடிஞ்சவரை பெரிய பிரச்சினை வராம நாம திரும்பனும்" என்றிருந்தான் அகி. அவன் அறிவுரையின்படி ஐவரும் சற்று சாந்தமாகவே நின்றிருந்தனர்.
"என்னாச்சுபா ஏன் எதுவும் பேச மாட்டேங்கிறீங்க.. உங்களுக்கு காதுல எதுவும் பிராப்ளம் இருக்கா.. இல்ல நாலு பரம்பரையோட வாரிசுகளுக்கு இந்த தோரா வம்சத்த எதிர்த்து நிற்க தைரியம் இல்லையா.."
நக்கலாக அவர்களை சீண்டும் பொருட்டு வேண்டும் என்றே நோவா பேசி வைக்க, இங்கே கோபத்தில் ஐவரின் நரம்புகளும் புடைத்தன. ஆனால் அவர்களை அமைதியாக இருக்கும் படி மீண்டும் அகி சைகை காட்ட பல்லை கடித்து கொண்டு நின்றிருந்தனர்.
"நோவா.. அதுதானே உன் பேரு. நாங்க எதுக்கு நோவா பயப்படனும், எங்க நாலு பரம்பரை மேல இருக்க பயத்தாலதானே இப்படி கமுக்கமாக வேலை பாக்குறீங்க உங்க தோரா வம்சமே.. இதுலையே தெரியலை யாரு தைரியசாலி யாரு கோழைனு"
ஆனால் எல்லோரையும் முந்திக்கொண்டு வழக்கம்போல் சிரில் நோவாவை பார்த்து நக்கலாக பேசி வைக்க, நோவா சிரித்தபடி நின்று அமைதி காத்தாலும் அவன் பின்னால் நின்ற தோரா இன மந்திரவாதி ஒருவர் கோபத்தில் பொங்கி அவர்களை நோக்கி முதல் தாக்குதலை தொடுத்தார்.
அதன்பின்னர் மற்ற தோரா மந்திரவாதிகளும் ஒவ்வொருவராக தாக்குதலை ஆரம்பித்துவிட, ஐந்து வாரிசுகளும் இப்போது எதிர் தாக்குதல் நடந்த ஆரம்பித்துவிட்டனர். இங்கே முதல் தாக்குதல் வந்தவுடனே, காற்றை இழுத்து ஐவருக்கும் பாதுகாப்பு வளையத்தை ஜேம்ஸ் போட, தோரா ஆட்களை விட்டு சற்று தூரம் சென்று தங்கள் தாக்குதலை தொடர்ந்தனர் ஐந்து வாரிசுகளும்.
இருபக்க தாக்குதலும் அந்த இடத்தை பெரிய போர்களமாய் காட்டியது. ஐந்து வாரிசுகளும் சேர்ந்து தொடுத்த போரை கண்டு நோவா ஆச்சரியப்பட்டுதான் போனான். மஞ்சள் நிற ஒளியானது அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் சரமாரியாக சென்றுக்கொண்டிருக்க இதுவரை சண்டையிடும் எண்ணம் இல்லாமல் இருந்த நோவா,
அவர்களின் மந்திர தாக்குதலை கண்டு இதற்கு மேல் தாமதித்தால் ஐவரும் சேர்ந்து இவர்கள் கும்பலை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவர் என்று புரிந்து தானும் தீவிரமாய் சண்டையை தொடர்ந்தான்.
என்னதான் ஐந்து வாரிசுகளின் சக்திகள் சாதாரண மந்திரவாதிகளின் சக்தியை விட அதிகமாய் இருந்தாலும், எதிரே இருந்த கிட்டத்தட்ட முப்பது தோராவின் ஆட்களின் பலத்தின்முன் கொஞ்சம் கம்மியாகவே போனது.
அதுவும் அங்கு நோவாவின் தாக்குதல் பயங்கரமாக இருக்க அவன் ஒருவனை சமாளிக்கவே அகஸ்டஸின் பங்கு சரியாய் போனது. எனவே மீது இருந்த நான்கு பேர் அங்கிருந்த முப்பது பேரிடம் போட்ட சண்டையில் அவர்களின் சக்தி வேகமாக குறைய துவங்கிட, சீக்கிரமாகவே சோர்ந்து விட்டனர் ஐவரும்.
'என்ன இவனோட ஸ்பெல் எல்லாம் இவ்ளோ பவர்புல்லா இருக்கு'
அகி மனதிற்குள் நினைத்த நேரம் "அகஸ்டஸ் இன்னைக்கு நீயா நானான்னு பாத்துடலாம்" என நோவாவின் குரல் அகியின் மூளைக்குள் கேட்டது.
'எப்படி இவனால மத்தவங்க மூளைக்கு கேக்குற மாதிரி பேச முடியுது' அகி யோசித்தாலும் சண்டையை வேகப்படுத்தினான்.
"கைஸ்.. மு...முடில! என்னால சுத்தமா முடில.. என்னோட சக்தி சுத்தமா குறைஞ்சு போச்சு.. நம்மல சுத்தி இருக்க பாதுகாப்பு வளையத்தை இன்னும் எவ்ளோ நேரம் மெயின்டெய்ன் பண்ணுவேன்னு தெரியல.. நாம சீக்கிரம் சண்டைய முடிக்கல இதோட நம்ம நிலைம அவ்ளோதான்"
தன்னுடைய நிலையை எடுத்து சொல்லிய ஜேம்ஸ்க்கு வெகுவாக மூச்சு வாங்கியது. அவன் சொல்லாமலே மற்றவருக்கும் அவர்கள் நிலை நன்றாகவே புரிந்தே இருந்தது. அகியும் வெகுவாகவே தன் சக்தியை எல்லாம் பயன்படுத்தி இருந்தான், அவனுக்கும் பலமாக மூச்சு வாங்கியது.
தன்னுடன் சண்டையிட்ட மற்ற வாரிசுகள் தங்கள் சக்திகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதை பார்த்த கயாவின் வாரிசான லிடியா என் நினைத்தாளோ, மற்ற நால்வரையும் நோக்கி அவள் கையை உயர்த்தினாள்.
அவள் கையில் இருந்து வந்த மஞ்சள் நிற ஒளி நால்வர் மேலும் பட, நால்வரும் உடலிலும் சரி மனதிலும் சரி புதுபலம் கிடைத்ததைப் போல் உணர்ந்தனர். ஆனால் இதை எப்படி லிடியா செய்தாள் என அவளுடன் இருந்த நால்வருக்கும் புரியவில்லை.
இழந்த சக்திகள் மீண்டபின் ஒவ்வொருவரின் சண்டையும் முன்பைவிட வீரியமாக இருந்தது. சண்டையிடும்போது இவர்களிடம் இருந்து வெளிவரும் சக்திகளை கண்டு நோவா திணறித்தான் போனான்.
அதுவும் ஜேம்ஸ் கையில் இருந்து முதலில் வந்திருந்த காற்றால் ஆன பாதுகாப்பு வளையம் இப்போது நெருப்பாய் மாறியது. அந்த நெருப்பின் உள்ளே வரும் எதுவும் எறிந்து சாம்பல் ஆக, நோவா அவன் ஆட்களை மேலும் ஏவி சண்டையை இன்னும் தீவிரமாக்கினான்.
வெகு நேரம் இந்த சண்டை நீடிக்க, தோராவின் ஆட்கள் எல்லாம் குறைய ஆரம்பிக்க, நோவாவின் மனதில் இப்போது சிறிய பயம் வர துவங்கிற்று. இதற்குமேல் இவர்களை விட்டுவைக்க கூடாது என அவன் முடிவெடுத்த நேரம், இவர்களுக்கு அரணாய் நின்ற ஜேம்ஸை முதலில் வீழ்த்த நினைத்து, அகஸ்டஸை தாக்குவதை நிறுத்தி ஜேம்ஸின் மீது வெறித்தனமான தாக்குதலை தொடுத்தான்.
"கைஸ் டோன்ட் வொர்ரி நாம இன்னைக்கு அவங்கல தலையால தண்ணீ குடிக்க வைக்கிறோம்"
இந்த சண்டைக்கு நடுவில் லூகாஸ் வேறு லூஸ்டாக்விட, மற்றவர்களால் அவனை முறைக்க கூட முடியவில்லை. இவ்வளவு நேரம் பாதுகாப்பு வளையத்தோடு முடிந்தவரை சண்டையிட்ட ஜேம்ஸால் நோவாவின் தொடர் தாக்குதலை தாங்கமுடியாது போக, சற்று தடுமாறிக் கொண்டிருந்தான்.
அகஸ்டஸ் மீண்டும் நோவாவிடம் போகாத படி வேறு தோராவின் மந்திரவாதிகளின் தாக்குதல் இவன்மீது வர, அங்கே கவனம் செலுத்த வேண்டிய நிலயாகிது அகிக்கு. நோவாவோடு சண்டையிட்ட ஜேம்ஸின் மனதிற்குள் பலவிதமான எண்ணங்கள் சம்மந்தம் இல்லாமல் வந்து போய் அவன் கவனத்தை சிதைக்க பார்த்தது.
'என்ன ஆச்சு மூளைக்குள்ள வண்டு குடையிற மாதிரி சத்தம் எல்லாம் கேக்குது'
குழம்பி போய் நின்ற ஜேம்ஸால் நோவாவின் மீது இப்போது கவனத்தை சுத்தமாக செலுத்த முடியவில்லை. அவன் அருகில் இருந்த யாரும் அவன் தடுமாற்றத்தை கவனிக்காமல் போய்விட,
தூரத்தில் இருந்தே அவன் தடுமாற்றத்தை சரியாக கணித்துவிட்டான் நோவா. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அடுத்து அவன் பலமாக ஒரு மந்திரத்தை போட்டு ஜேம்ஸை தாக்க.. அதில் ஒரேயடியாக பின்னால் தூக்கி வீசப்பட்டான் ஜேம்ஸ். இதில் அதிர்ந்த மற்றவர்கள் சண்டையிலிருந்த தங்கள் கவனத்தை விட்டனர்.
இவர்களின் இந்த நொடி பொழுது தடுமாற்றமே நோவாவுக்கு போதுமானதாய் இருக்க, அவர்கள் தெளியும்முன் தோராவின் பக்கம் ஒன்றினைந்து இருந்து பலமான தாக்குதல் ஒன்று வந்தது. இப்போது மீதி இருந்த நால்வரும் ஜேம்ஸ் இருந்த இடத்திற்கு அருகில் தூக்கி வீசப்பட்டனர்.
விழுந்த அந்த ஒரு அடியில் உடம்பில் இருந்த மொத்த சக்தியும் வெளியேறிது. நான்கு பரம்பரை வாரிசுகளும் திணறிய படி கீழே விழுந்துகிடக்க, அவர்களின் முன் ஆர்வமாய் சிரித்தபடி வந்து நின்றான் நோவா.
---------------------------
காலேஜில் அமர்ந்திருந்த லைராவுக்கு மனது படபடப்பாகவே இருந்தது. அதுவும் காலையில் வந்த கனவிலிருந்து அவளுக்கு அகியின் நினைவே இருக்க, பாடத்தில் கவனம் செல்லவில்லை.
புரசபர் போர்டில் எழுதி போட்டதை அவள் கண்கள் பார்த்தாலும் மூளையை எதுவும் அடைய மறுக்க, அந்த போர்டை லைரா வெறித்து பார்த்திருந்தாள். அந்நேரம் அவள் கையில் இருந்த பாதுகாப்பு கயிற்றில் என்னவோ வித்தியாசம் தெரிந்தது.
அதை கவனித்த லைரா மெல்ல வகுப்பறையை விட்டு வெளியேறினாள். பாதுகாப்பு கயிற்றில் இருந்து வந்த சிக்னல் எல்லாம் அகஸ்டஸ் பெரிய ஆபத்தில் இருப்பதாய் உணர்த்த, இதற்குமேல் தாமதிக்க கூடாது என அவன் இருக்கும் இடம் செல்ல முடிவெடுத்தாள்.
யாரும் இல்லாத இடத்திற்கு வந்த லைரா, பாதுகாப்பு கயிற்றின் மீது தன் சக்தியை செலுத்தி "டேக் மீ டூ அகி" என சொன்ன நேரம், அந்
த பாதுகாப்பு கயிற்றின் உள்ளே இருந்து வந்த தங்க நிற ஒளி அவளை முழுதாய் ஆக்கிரமித்தது.
-தொடரும்