GG writers
Moderator
அத்தியாயம் - 13
"அச்சச்சோ இப்படி அநியாயமா வந்து என்கிட்ட மாட்டிக்கிட்டீங்களே! நீங்க சாகப்போறது நாலு பரம்பரைக்கும் பெரிய அடி. அதை நினைச்சா எனக்கு பாவமாதான் இருக்கு.. ஆனா அதேநேரம் உங்கள காலி பண்ணினா மட்டுமதான் என் வேலைல இடைஞ்சல் வராதுன்றப்ப எனக்கும் வேற வழி தெரியலை"
ஐவரையும் பார்த்து போலியாக பரிதாபப்பட்ட நோவா, அவர்களை கொல்ல போவதை சொல்லி உச்சுக்கொட்டினான். என்னதான் தைரியம் உள்ளே டன் கணக்கில் இருந்தாலும், சுத்தமாக சக்தி எல்லாம் ஓய்ந்து போன நிலையில் பரிதாபமாக கிடந்த வாரிசுகளுக்கு நோவாவின் பேச்சில் சிறிது பயம் எழவே செய்தது.
"இங்க பாரு நோவா உங்க பரம்பரை ஆட்கள் செய்ற வேலை சுத்தமா சரியே கிடையாது.. நீங்க இயற்கைக்கு மாறான ஒரு விஷயத்தை செய்ய முயற்சி பண்றீங்க.. இதை இத்தோட விட்டிருங்க, அதுதான் உங்களுக்கு நல்லது.. இல்ல எங்களை கொன்னு மேல ஏறி போறதுன்னு முடிவு பண்ணீட்டீங்கனா, தோரா ஒரு பரம்பரை மீதி இருக்க நாலு பரம்பரையோட பகைக்கு பலியாக வேண்டியதுதான்"
அகஸ்டஸ் நோவாவை எச்சரிக்கை செய்ய, அவன் சொன்னதை ஏளன சிரிப்புடன் கேட்டுக்கொண்ட நோவா
"அப்படியா உங்கள கொன்னா எங்க இனம் அழிஞ்சு போயிருமா.. அதையும்தான் பாக்கலாம்" என்றான்.
அவன் முன்னால் கிடந்த ஐவரையும் கொல்லும் எண்ணத்துடன் கையை உயர்த்திய நோவா அகியின் முகத்தை கண்டு மனதிற்குள் சற்று தடுமாறினான். அவனை பார்க்கும் போது அன்று மாளிகையில் அவனுடன் வந்த பெண்ணின் முகம் முன்னே வந்து செல்ல, நோவாவால் சட்டென அவர்களை கொல்ல கை வரவில்லை.
ஆனாலும் அவர்களை கொல்லும் முடிவை உறுதிபடுத்தி, அவன் கையை உயர்த்திய நேரம், வைலட் பூவின் மனம் காற்றில் வந்து அகியின் நாசியில் மோதியது. அகிக்கு திடீரென வந்த வைலட் பூவின் வாசம் எதையோ உணர்த்தும் நேரம், அவர்கள் இருந்த இடத்தை தங்க நிற ஒளி ஒன்று ஆக்கிரமித்தது. அங்கே அவன் முன் தங்க நிற ஒளியாக வந்திறங்கினாள் அகியின் லைரா.
"எவிக்ட்டியஸ்!"
வாரிசுகளை கொல்வதற்காய் நோவா அதேநேரம் போட்ட மந்திரம் அகியிடம் வந்து சேர்ந்தது. ஆனால் அது அவன் முன் அரனாய் வந்து அமர்ந்திருந்த லைராவின் முதுகில் பட்டு விட, நோவா அகி இருவரும் பதறிப்போய் விட்டனர்.
போட்ட மந்திரத்தை திரும்ப எடுக்க முடியாததால் அங்கு நோவா பதற, இங்கு தன் காதலி திடீரென வந்து நின்றதில் அதுவும் கொல்லும் மந்திரம் அவள் மேல் பாய்ந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தான் அகஸ்டஸ்.
அவர்கள் மட்டுமின்றி சிரில், லிடியா, ஜேம்ஸ் மற்றும் லூகாஸ் என வாரிசுகளும் பதறி போயினர். ஆனால் இவர்கள் பதறியதற்கு மாறாக இவர்கள் எதிர்பார வண்ணம் நோவா ஏவிய மந்திரம் லைராவின் முதுகில் பட்டு வெடித்துச் சிதறியது.
லைராவிடம் தன் மந்திரம் வேலை செய்யாததை கண்டு ஆச்சரியமடைந்துபோய் நோவா நிற்க, சீறும் பெண் வேங்கையாய் எழுந்து நின்றாள் லைரா.
"நோவா நீ ரொம்ப எல்லை மீறி போயிட்ட.. அவர் என்னோட அகி.. நீ அவர் மேலையே கைவைக்க நினைச்சுட்டல்ல.. அந்த அளவு உனக்கு தைரியம் வந்திருச்சா"
லைராவின் இரும்பு குரலில் சற்று ஆடிப்போன நோவா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான். அவனை கண்டு இகழ்ச்சியாக உதட்டை சுழித்த லைரா
"வில்லியமோட வாரிசு நீ என்ன வேறமாதிரியா இருப்ப.. ஆனா இங்க நடந்ததுக்கு நீ கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும் நோவா.. நான் சொல்ல வைப்பேன்"
நோவாவிடம் கடுமையை கூட்டி சொல்லி முடித்த லைரா வலியில் கிடந்த ஐவரை நினைத்து விரலை சொடுக்க, அடுத்த நொடி வாரிசுகள் ஐவரும், லைராவும் அந்த இடத்திலிருந்த காற்றைவிட வேகமாய் காணமல் போயினர். அவர்கள் இருந்த இடத்தில் இப்போது தூசி பறக்க, என்ன நடந்தது என தோரா ஆட்களுக்கு சிறிதும் புரியாது போனது.
நோவாவுக்கோ லைரா கடைசியாக பேசி சென்ற வார்த்தைகள் மனதிற்குள் வந்து போக, தவறு செய்துவிட்டோமோ என அவன் மனம் காலம் தாழ்த்தி சுட்டி காட்டியது.
இங்கு ஆல்ப் மலைத்தொடரில் இருந்து காற்றில் காணமல் போன லைரா அகி மற்றும் வாரிசுகள், கண் இமைக்கும் நேரத்தில் எடோனஸின் வீட்டில் இருந்தனர்.
வீட்டில் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்த எடோனிஸின் முன் அவர் பிள்ளைகளோடு சேர்த்து ஐந்து வாரிசுகள் மட்டுமின்றி இன்னுமொரு புது பெண்ணும் திடீரென வந்து இறங்கியிருக்க ஒன்றும் புரியவில்லை அவருக்கு.
"என்ன ஆச்சு பசங்கலா.. வேலைய அதுக்குள்ள முடிச்சுட்டீங்கலா என்ன.. நேத்து போயிட்டு இன்னைக்கு வந்துட்டீங்க"
குழப்பத்துடன் கேட்ட எடோனிஸை பார்த்து பல்லை கடித்த அகி "டேடி முதல்ல எங்களை எல்லாம் கொஞ்சம் கைதாங்கலா தூக்கி உக்கார வைங்க.. அதுக்கப்பறம் என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு விலாவரியா சொல்றேன்" என அவன் சொன்ன பின்னரே தன் பசங்கலிடம் தெரிந்த வித்தியாசத்தை கவனித்தார் எடோனிஸ்.
"என்ன பசங்கலா இவ்ளோ அடி வாங்கிருக்கீங்க.. அச்சோ வாங்க வாங்க முதல்ல உக்காருங்க"
எடோனிஸின் எக்ஸ்பிரஸனை கண்டு அகிக்கும் சிரிலுக்கும் கடுகடுவென வந்தது. பின்னே அண்ணன் தம்பி முதற்கொண்டு இப்படி அடிவாங்க அனுப்பிய அவர்களின் தந்தை ஒன்றும் தெரியாததைப்போல் கேட்டால் எப்படி கோபம் வராமல் இருக்கும். பின் அவரும் லைராவும் சேர்ந்து மெல்ல ஒவ்வொருவரையும் சோஃபாவில் கிடத்தினர்.
"பசங்கலா"
எடோனிஸ் ஆரம்பிக்கும்முன்னரே அவரின் முன் கையை நீட்டி நிறுத்திய அகஸ்டஸ்,
"மறுபடியும் ஆரம்பிக்காத டேடி நானே சொல்லிடுறேன். நீ எங்களை எல்லாம் ஒரு கூட்டத்தை பாலோ பண்ண சொல்லி மிஷன்கு அனுப்பி வைச்சியே, அது சாதா கூட்டம் இல்ல டேடி சரியான கொலைகார கூட்டம். அவங்கட்ட நாங்க போட்ட சண்டைலதான் இப்படி எங்க உடம்பு புண்ணா போய் கெடக்கு"
நொந்து போய் அகஸ்டஸ் சொன்னதை மெய்ப்பிக்கும் வகைகள் மற்ற நால்வரின் அமைதியும் இருக்க, அதற்கெல்லாம் பொரிதாக கவலைப்படவில்லை எடோனிஸ். ஏனெனில் வாரிசுகள் தான் உயிருடன் வந்துவிட்டனரே. இப்போது அவரின் ஒரே கவனம் இவர்கள் ஐவரையும் அள்ளி வந்த லைராவின் மீதுதான்.
"அதைவிடு அகி இந்து பொண்ணு யாரு? அதை முதல்ல சொல்லு"
அவரின் மனம் நினைத்ததை தன் பிள்ளையிடம் கேட்டு வைக்க, இப்போது அகிதான் முழிக்கும்படி ஆனது.
"அது வந்து டேடி.."
அகஸ்டஸ் மென்று முழுங்க, அவனை சிரில் குறுகுறுவென பார்த்திருந்தான். இந்த பெண்தான் அவன் தம்பி காதலிக்கும் பெண்ணா என. அவன் சந்தேகத்தை உண்மையாக்கும் வண்ணமே அடுத்து பேசிய அகியின் பேச்சும் இருந்தது.
"டேடி அவ நான் லவ் பண்ற பொண்ணு..."
எடோனிஸின் முகம் ஆச்சரிய பாவத்தை காட்டியது. தன் மகன் காதலிக்கிறான், அதைவிட அவர் பிள்ளையை காதலிக்க அந்த பெண் ஒத்துக் கொண்டு இருக்கிறாளே அதுதான் தந்தைக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
"எம்மா என் புள்ளையவா நீ லவ் பண்ற"
அப்போதும் சந்தேகம் தீராமல் லைராவிடம் அவர் கேட்க, அவளும் ஆம் என தலையசைத்ததில் எடோனஸுக்கு அவ்வளவு அதிர்ச்சி. பின்னே தன் பிள்ளை கமிட் ஆவது எல்லாம் அதிசயம் என அந்த பெத்த உள்ளத்திற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனவே அதை மீண்டும் மீண்டும் கேட்டு அவர் உறுதிபடுத்த, அதை பார்த்த அவர் பிள்ளைக்கு தான் கடுகடுவென வந்தது.
"டேடி ஏன் இவ்ளோ டவுட்? இப்படி வளைச்சு வளைச்சு கேட்குற.. நான் லவ் பண்றேன்னு சொன்னா நம்பேன்"
கடைசியில் அகி கடுப்படித்த பின்னரே அமைதியானார் எடோனிஸ்.
"அப்ப நல்லதுதான். உன் மேல் இருந்து பலமா மேஜிக் வேவ்ஸ் வருது.. அப்ப கண்டிப்பா நீ ஒரு விட்ச்தான். சொல்லு உன் பேர் என்ன, எந்த பரம்பரைய சேர்ந்த பொண்ணுமா நீ"
ஆர்வமாய் எடோனிஸ் இங்கு கேட்கவுமே அகிக்கு புரை ஏற லைராவோ முழித்து வைத்தாள். ஆல்ப் மலையில் நோவா போட்ட கொல்லும் மந்திரம் பட்டு லைராவிற்கு அவள் தாத்தா போட்டிருந்த பாதுகாப்பு வளையம் உடைந்து போயிருக்க, இப்போது அவள் ஒரு மந்திரவாதி என எடோனிஸ் எளிதாக கண்டுக்கொண்டார்.
பதினாறு வருடத்திற்கு முன் செத்திருக்க வேண்டிய தோரா பரம்பரை பெண் நான், இப்போது உயிருடன் இருப்பதற்கு காரணம் உங்கள் பிள்ளை என்றா சொல்லுவாள். எனவே முழித்து தான் நின்றாள் லைரா.
"அவ பேரு சாயா..! அவ இனிமே நம்மளோட பரம்பரை மந்திரவாதி"
லைராவை முந்திக் கொண்டு அகஸ்டஸ் சொல்ல, வெகு நேரம் சிரில் மனதை அறித்த சந்தேகம் இப்போது அவன் மனதில் வலுப்பெற்றது.
"அகி உன்னை கல்யாணம் பண்ணிட்ட அப்புறம் அந்த பொண்ணு நம்ம பரம்பரைக்குள்ள வந்திருவாதான். ஆனா இப்போ அந்த பொண்ணு எந்த பரம்பரைய சேர்ந்தவ.."
"அது எதுக்கு உனக்கு சிரில், அவள நான் எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சனோ அப்பவே டிசைட் பண்ணிட்டேன், அவ நம்ம பரம்பரைய சேர்ந்த பொண்ணுன்னு. அதனால இந்த விஷயத்தை இதோட விடு சிரில்" சிரிலுக்கு காட்டமாகவே பதிலளித்தான் அகி.
"எப்படி அகி இதை இப்படியே விடுறது.. எனக்கு ரொம்ப நேரமாவே இந்த டவுட் இருக்கு, நீ லவ் பண்ற பொண்ணு நம்ம காலேஜ்ல படிக்கிற சாதாரண பொண்ணுன்னு சொன்ன. ஆனா இந்த பொண்ணு ஒரு விட்ச். அதோட நோவாவை எப்படி இந்த பொண்ணுக்கு தெரியும்?"
சிரில் வார்த்தைகளில் உள் அர்த்தத்தை வைத்து பேச,
"அது உனக்கு தேவையில்லாத விஷயம் சிரில், நீ உன் வேலைய மட்டும் பாரு. என் விஷயத்துல தலையிடாத" எச்சரித்தான் அகி.
எடோனிஸ்கு தன் பிள்ளைகளின் பேச்சு போகும் திசை புரியவில்லை. ஆனால் என்னவோ இதில் இருக்கிறது என புரிய, அவர் முகம் யோசனையை தத்தெடுத்தது. சிறிது நேரத்திற்கு முன் இருந்த இனிமையான சூழல் மாறி சற்று இறுக்கமாக மாறியது அந்த இடம்.
"அகி ஆர் யூ சீரியஸ், அந்த பொண்ண பார்த்து முழுசா மூனு மாசம் இருக்குமா.. அவளுக்காக நீ என்னையே எதிர்த்து பேசற"
இத்தனை நாட்கள் தான் சொல்வதை மட்டும் கேட்ட தன் தம்பி இப்போது எதிர்த்து பேசுவது கோபத்தை கிளப்பியது சிரிலுக்கு. அங்கே இருந்த மற்ற வாரிசுகளுக்கோ இப்போது வாங்கிய அடி எல்லாம் ஒன்றும் இல்லை என்பதைப்போல் இருந்தது இந்த அண்ணன் தம்பி சண்டை.
"சிரில் காம் டவுன், பொறுமையா பேசலாம். அந்த பொண்ணுதான் நம்ம எல்லாருடைய உயிரையும் காப்பாத்துச்சு அதையும் மனசுல வச்சுட்டு பேசு" அமைதியாய் இருந்த ஜேம்ஸ் பேசினான்.
"சரி பொறுமையாவே கேக்குறேன் சொல்லு அகி, அந்த பொண்ணு தோரா பரம்பரைய சேர்ந்தவளா?"
நிறுத்தி நிதானமாக தன் வெகு நேர சந்தேகத்தை அகஸ்டஸிடம் கேட்டான் சிரில். ஆனால் இப்போது எதிர்த்து கூட பேசுவதற்கு வாயை திறக்கவில்லை அகி.
"அமைதியா நிக்காம நான் கேட்டதுக்கு பதிலை சொல்லு அகி"
அவன்முன் கோபமாய் நிற்கும் அண்ணனை பார்த்து, திமிரை கண்களில் வைத்த அகி "உன் கேள்விக்குலாம் என்னால பதில் சொல்ல முடியாதுன்னு சொன்ன என்ன பண்ணுவ சிரில்" என்றான்.
அலட்சியமாய் நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என நிற்கும் தன் தம்பியை பார்த்து சிரில் பல்லை கடித்தான். இருவருக்கும் இங்கே விவாதம் காரசாரமாக மாற, அகியின் பின்னால் நின்றிருந்த லைராவுக்கு படபடவென வந்தது. எப்போது சிரில் லைராவை குறிவைத்து பேச ஆரம்பித்தானோ அப்போதே அவள் முன் அரணாய் வந்து நின்று விட்டான் அகஸ்டஸ்.
அகியையும் சிரிலையும் மாற்றி மாற்றி பார்த்த லைரா, மனதிற்குள் ஒரு முடிவை எடுத்தவளாய் பேச துவங்கினாள்.
"நிறுத்துங்க! பிளீஸ் என்னால யாரும் சண்டை போடாதீங்க.. நான் சொல்றத ஒரு நிமிஷம் கேளுங்க.."
லைராவின் குரல் சத்தமாக கேட்டதில் சண்டையிட்ட சிரிலும் அகியும் அமைதியாகினர். 'என்ன சொல்லப்போற' என கேட்கும் விதமாய் அகி புருவத்தை சுழித்து பார்க்க, அவனை பார்க்கவேயில்லை லைரா. அவனை பார்த்தால் அவளால் எதுவும் பேசமுடியாது என நன்றாக புரிந்து வைத்திருந்தாள்.
"நீ என்னத்தடி சொல்ல போற? நீ இங்க சொல்றதுக்கு ஒன்னும் இல்ல. நான் பாத்துக்கிறேன்.. நீ அமைதியா மட்டும் இரு"
அகி அவள் ஏடாகூடமாக எதையும் சொல்லும் முன்னர் இடையே புக, தன் இளைய பிள்ளையின் இந்த முகத்தை கண்டு திகைத்தார் எடோனிஸ். அவனை பார்த்து மெல்ல புன்னகைத்த லைரா
"உங்க பின்னாடியே இன்னும் எத்தனை வருஷம் நான் ஒளிஞ்சு நிப்பேன் அகி.. என் பிரச்சினைய நான் பேஸ் பண்ணி தானே ஆகனும். உங்களை தேடி வந்தா பிரச்சினை வரும்னு தெரிஞ்சுதான் வந்தேன்.. வந்திருச்சு இனிமே அதை பேஸ் பண்ணி தானே ஆகனும். நீங்க அமைதியா இருங்க நான் பாத்துக்கிறேன்" என திட்டமாக பேசிய லைராவை என்ன சொல்லி நிறுத்துவது என புரியவில்லை அகஸ்டஸுக்கு.
மெல்ல மூச்சை இழுத்து வெளியே விட்டு தன்னை சாந்தப்படுத்திக் கொண்ட லைரா
"என் பேர் சாயா இல்ல.. லைரா" என்
றாள். அந்த பேரை கேட்ட அங்கிருந்த ஒவ்வொருவரின் மனதும் ஆடிப்போக, சிரிலுக்கும் எடோனிஸிக்கும் தலையில் இடியே இறங்கியது...
-தொடரும்