வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இருள் பூவின் ஒளிச்சுடரே! - 1

GG writers

Moderator
அத்தியாயம் - 1

"அகி இன்னும் என்ன யோசிட்டு நிக்குற, போ போய் டேடி சொன்ன வேலைய முடிச்சிட்டு வா. என்ன செய்யனும்னு உனக்கு எல்லாம் ஞாபகம் இருக்குல்ல"

தன் முன்னால் நின்றிருந்த ஏழு வயது சிறுவனான அகஸ்டஸிடம் அவன் அண்ணனான பத்து வயது சிரில் கேட்க, அகஸ்டஸ் தன் அண்ணனை பார்த்து ஆம் என்னும் விதமாய் தலை அசைத்தான்.

சிரில் அவன் தம்பிக்கு தன்னால் முடிந்த அளவு தைரியத்தை தந்து அந்த இடத்திற்குள் அனுப்பிவிட்டு, "அக்கல்சர்" என உச்சரிக்க அவனை சுற்றி வெள்ளை குமிழி ஒன்று உருவாகி அவனை வேறு யாரும் பார்க்காதவாறு மற்றவர்களிடமிருந்து மறைத்தது. அதன்பிறகு அங்கே யார் வருகிறார்கள் போகிறார்களென அந்த இடத்தை சுற்றி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான்.

இங்கு உள்ளே சென்ற அகஸ்டஸ் அவனை சுற்றி பார்க்க, பல நாடுகளை சேர்ந்த ஆட்கள் அந்த பெரிய ஹாலை நிறைத்திருந்தனர். எல்லாருமே மந்திரவாதிகள் என பார்த்தவுடன் கண்டுக்கொண்டான் அகஸ்டஸ். ஆனால் அவர்களை சிறுதும் கண்டுக் கொள்ளாத அகஸ்டஸோ தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

மெதுவாக நகர்ந்து ஹாலை கடந்து அருகிலிருந்த அறைகளை ஒவ்வொன்றாக சென்று பார்க்க, அவன் எதிர்ப்பார்த்து வந்த விஷயம் அங்கே இல்லை‌.

'என்ன நாம தேடி வந்ததை எங்கையும் காணோம்' மனதிற்குள் சலித்த படி அந்த ஏழு வயது சிறுவன் ஒரு அறையின் கதைவை மெல்ல திறக்க, அங்கே நிரம்பியிருந்ந லேவேண்டர் பூவின் மனம் அவனை சுண்டி இழுத்தது.

அதை நன்கு நுகர்ந்த அகஸ்டஸ், ஏதோ மந்திரத்திற்கு உட்பட்டதைப்போல் அந்த நறுமணம் வந்த இடத்தை நோக்கி மெல்ல நகர்ந்தான். அந்த வாசம் வந்த இடத்திற்கு வந்து பார்த்தால் அங்கே பொம்மைகளுக்கு நடுவில் பொம்மையை போன்றே ஒரு சிறு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

'ஒருவேளை அப்படி இருக்குமோ' என நினைத்த அகஸ்டஸுக்கு மனது பதறியது.

அந்த குழந்தையை நெருங்கிய அகஸ்டஸ் 'கடவுளே நான் நெனச்சதாமட்டும் இருக்கவே கூடாது' என இறைவனை வேண்டியபடி அருகே சென்று "லைரா" என்றழைத்தான். பால்மனம் மாறா தூய புன்னகையை சிந்திய அந்த குழந்தை "ஆன் நானுதான் லைதா. நீ யாது" என மழலை மொழி மாறாது கேட்டு வைத்தது‌.

நேற்று தன் தந்தை பேசியது, அவர் தனக்கு கொடுத்த வேலை என அனைத்தையும் எண்ணிப் பார்த்த அகஸ்டஸ், மெல்ல அப்படியே அந்த பிஞ்சு குழந்தையையும் பார்த்தான். எதுவோ சொல்லமுடியா பாரம் ஒன்று அவன் மனதில் ஏறிக்கொண்டது.

'ஆண்டவா இதை நான் எப்படி இந்த சின்ன பாப்பாக்கு செய்யப்போறேன்'

மனதிற்குள் மிகவும் வருந்தியபடி நின்றிருந்தான் அவன். அவன் தயங்கி நின்ற நேரம், அவன் முன் புகையாய் ஒரு உருவம் தோன்றியது. அது வேறு யாரும் இல்லை அகியின் அண்ணன் சிரில்தான்.

"அகி உள்ள நீ இன்னும் என்ன செய்ற. அந்த பெண் குழந்தைய பாத்துட்டியா"

தன்னை சுற்றிப்பார்த்தபடி கிசுகிசுப்பான குரலில் சிரில் கேட்க "ஆன் இ.. இன்னும் இல்ல சிரில்" மெல்ல பதிலளித்தான் அகி.

"என்ன பண்ணிட்டு இருக்க அகி! சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வா. யாரும் பாக்குறதுக்கு முன்ன நாம இங்க இருந்து கெளம்பியே ஆகனும்" சிறிய பதற்றத்துடன் அவனை சிரில் அவசரப்படுத்த, அகி சரி என்றதில் சிரில் விடைப்பெற்றான்.

சிரிலின் உருவம் மறைந்ததை கண்டு பெருமூச்சு விட்ட அகஸ்டஸுக்கு, தன் தந்தை முதல்நாள் சொன்ன அனைத்தும் அவன் மூளைக்குள் வந்து போனது.

'விஷச்செடின்னு தெரிஞ்சே அத வளரவிட்டா அது நாளைக்கு பெருசா வளந்து இங்க இருக்க எல்லாருக்கும் பெரிய ஆபத்தா வந்து நிக்கும். டேடி சொன்னதுதான் சரி, இனி இரக்கமே பாக்கக்கூடாது'

கடைசியில் தன் மனதுக்கு ஒப்பவில்லை என்றாலும் அவன் தந்தையின் சொல்படி ஒரு முடிவை எடுத்த அகி, அவனுடைய வலது கையை தூக்கி கண்களை மூடி "இக்னிசியஸ்" என்றான். அவன் கண்களை திறந்தநொடி அவன் கையை சுற்றி ஒரு சிகப்பு நிற ஒளி தோன்றிட மனதை கல்லாக்கிக்கொண்டு அந்த ஒளியை குழந்தையின் பக்கம் வீசினான்.

அவன் எறிந்த ஒளி தீயாய் மாறி திகுதிகுவென அந்த இடம் முழுவதையும் ஆக்கிரமிக்க, அதை கண்டு அதிர்ச்சியில் கண்களை விரித்த அகஸ்டஸையும் அந்த நெருப்பு சூழ்ந்தது. இது எதுவும் புரியாது, தன் குட்டி கைகளை தட்டி தன்முன் எரிந்த நெருப்பை ஆச்சரியமாய் பார்த்து வைத்தது குழந்தை லைரா.

அதை கண்டு அகி மனம் வருந்தும் நேரம் அந்த நெருப்பின் வெப்பத்தை தாங்காமல் உயிர் போகும் வலியை தானும் உணர்ந்த அகி வியர்த்து வழிந்து எழுந்து அமர்ந்தான்.

சில நிமிடங்கள் எதுவுமே புரியாது அமர்ந்திருந்த அகஸ்டஸ் தன்னை சுற்றி பார்த்தான். அவன் இருந்தது அந்த நெருப்பு எறிந்த அறையில் அல்ல, மாறாக அவன் வீட்டில், அவன் அறையில், அவன் மெத்தையில். அப்போதுதான் அகிக்கு புரிந்தது அவனுக்கு வந்தது அனைத்தும் கனவென்று.

நிஜமாக நடந்ததை போலவே தத்துருபமாக வந்த கனவை எண்ணி பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து பருகினான் அகி. கனவில் வந்த அகிக்கு ஏழு வயதென்றால், கனவை கண்ட அகஸ்டஸுக்கு இப்போது இருபத்தைந்து வயது.

இந்த கனவு சிறு வயதிலிருந்தே அகியை பலநாள் தூங்கவிடாது செய்த ஒரு கனவு. கடந்த சில வருடங்களாய் வராது இருந்த இந்த கனவு மீண்டும் வந்ததில், அகியின் மனதில் பல கலவையான உணர்வுகள். அவன் மனதிற்குள் குற்றவுணர்வு வந்து குறுகுறுக்க செய்தது.

"இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கான்னே தெரியலையே" என வாய்க்குள் முணுமுணுத்த அகிக்கு அந்த கனவை தொட்டு பல நினைவுகளும் வந்துப்போக, தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டான் அவன்.

அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தவன் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தெளிந்துவிட, சற்று திரும்பி மணியை பார்க்க அது நான்கு என காட்டியது. இதற்குமேல் படுத்தாலும் தூக்கம் வராதென எண்ணியவன் மெல்ல எழுந்து அவனுடைய தினசரி காலை ஓட்டத்திற்கு தயாரானான்.

எப்போதும் கிளம்பும் நேரத்தைவிட ஒருமணி நேரம் முன்பே ஓட துவங்கியவன், தன் எண்ணம் போன போக்கில் ஓடினான். தன் மனதில் இருந்த சஞ்சலம் எல்லாம் மறையும் வரை ஓடிமுடித்துவிட்டு, கடைசியாக தன் கையில் இருந்த வாட்சை பார்த்தான்.

அது மணி ஆறு முப்பது என காட்ட 'இரண்டு மணி நேரத்துக்கு மேல ஓடியிருக்கமா. இதுக்குமேல போன வேலைக்கு டைம் ஆகிடுமே, அப்படியே வீட்ட பாத்து நடையகட்ட வேண்டியதுதான்' என்றபடி வீட்டை நோக்கி ஓடினான் அகஸ்டஸ்.

-----------------------------

"சிரில் இந்தா இன்னொரு தோசை வச்சுக்க, வயசுக்கு தகுந்த மாதிரி சாப்பிடுடா அப்பத்தானே வயசான அப்புறமும் உன் டேடி என்ன மாதிரியே தெம்பா இருக்க முடியும்"

தன் மூத்த மகனான சிரிலை கடிந்தபடி இன்னொரு தோசையை வைத்தார் அவன் தந்தை எடோனிஸ் ஆண்ட்ரோனிக்கஸ்.

"ஐயோ டேடி முடியலை போதும் விடுங்களேன். நான் இருக்க மாதிரியே இருந்துட்டு போறேன்"

எவ்வளவுதான் முகத்தை பாவமாய் வைத்து கெஞ்சினாலும் ஸ்ட்ரிட்க் ஆபிசராய் முறைத்த அவன் தந்தை இன்னொரு தோசை வைத்தபின்னரே அமைதியானார்.

"சிரில் எங்கடா உன் தம்பிய இன்னும் ஆள காணோம். இன்னைக்கு காலேஜ் ஆரம்பிக்கிறத மறந்துட்டு ஐயா இன்னும் இழுத்து போத்தி தூங்கிட்டு இருக்கானா. எழுப்பிவிட்டியாடா அவன"

அடுத்த தோசையை வார்த்தபடி தந்தை கேள்வி கேட்டதற்கு சிரில்

"அவன் மார்னிங் சீக்கிரமே எழுந்து ஜாகிங் போயிட்டு வந்து குளிச்சிட்டு இருந்தான் டேடி, இப்ப வந்திருவான்" என்றான்.

சரியாக இவர்கள் பேசிக்கொண்டிருந்த நேரம் "மார்னிங் ப்பா! மார்னிங் சிரில்" என்றபடி உணவுண்ண அகஸ்டஸ் அமர, தந்தையும் தமையனும் பதிலுக்கு வாழ்த்து கூற தானும் உண்ண ஆரம்பித்தான் அகஸ்டஸ்.

"டேடி அந்த ஜாம எடுங்க" மலைப்போல் எடோனிஸ் சுட்டு குவித்திருந்த தோசையை சற்றும் சீண்டாமல், டேபிலில் இருந்த பிரெட்டை எடுத்து ஜாமிற்காய் கையை நீட்டினான் அகி.

"ஏன்டா காலைல சீக்கிரம் எழுந்து உங்களுக்கு தோசை சுட்டு போட்டா உன் அண்ணன்காரன் முணகிட்டே திங்கிறான். நீ என்னடான்னா பிரெட்ட கேக்குற, என்னடா நெனைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்"

எடோனிஸ் கத்தியதை சிறிதும் கண்டுக் கொள்ளாமல் "ப்ச் முடியாதுன்னா நானே எடுத்துக் போறேன், அதுக்கு இவ்ளோ லெக்சரா" அலுங்காது குலுங்காது எடோனிஸை டேமேஜ் செய்துவிட்டு, அவன் கையை தூக்க ஜாம் தானாக பறந்து வந்தது. அதை பிரெட்டில் தேய்த்து உண்ண ஆரம்பித்தான் அகி.

எடோனிஸ் ஆண்டோரனிக்கஸ் இவருக்கு சிரில், அகஸ்டஸ் இரு புதல்வர்கள். மகன்கள் இருவரின் சிறு வயதிலேயே இவர்களின் தாயின் உயிர் இப்பூவுலகைவிட்டு போய்விட தந்தையின் அன்பில் மட்டுமே இருவரும் வளர்ந்து வருகின்றனர்.

இந்த பூமியில் இன்னும் மந்திரவாதிகளின் இனம் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குள் ஐந்து பிரிவுகள் உள்ளது. அதில் முதல் பிரிவான ஆண்ட்ரோனிக்கஸ் என்ற பரம்பரையை சேர்ந்த மந்திரிவாதிகள்தான் இவர்கள் மூவரும். இந்த ஆண்ட்ரோனிக்கஸ் பரம்பரையின் தற்போதைய தலைவர் எடோனிஸ்.

உணவுண்ணும் வேலையை முடித்த மூவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி வீட்டை பூட்டிவிட்டு தங்களுக்கான வண்டி மற்றும் காரில் ஏறி கிளம்பிவிட்டனர். அப்படி இவர்கள் மூவரும் தனிதனியாய் கிளம்பினாலும் போய் சேர்ந்த இடம் என்னவோ ஒன்றுதான்.

ஆம் மூவரும் சென்றது இவர்களுக்கு சொந்தமான கல்லூரிக்கு. அது ஒரு பொறியியல் கல்லூரி, அங்குதான் நம் அகஸ்டஸ் ஆர்க்கிடெக்சர் மாணவர்களுக்கு பேராசிரியராக உள்ளான்.

அந்த கல்லூரியின் முதல்வர் சிரில் மற்றும் சேர்மேன் இவர்கள் தந்தை எடோனிஸ். இவர்கள் இருவர்மட்டும் காரில் செல்வதுண்டு. தங்களோடு காரிலே வரவேண்டியதுதானே என்று சிரில் அகியை கேட்டால், தான் பார்க்கும் வேலைக்கு பைக்தான் சரி என்பான். உடன் வேலைபார்க்கும் அனைவருடனும் சகஜமாக பழகுபவன், தான் எடோனஸின் மற்றொரு மகனென யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

வண்டியை பார்க்கிங்கில் விட்ட அகி வெளியே வர பல புது முகங்கள் கல்லூரிக்குள் இருந்தனர். 'இந்த வருஷம் புது அட்மிஷன் நிறைய இருக்கும் போல. ம்ம் டேடிக்கு செம லாபம்தான்' என நினைத்தபடி வந்தவனுக்கு சில மாணவ மாணவிகள் வணக்கம் சொல்ல பதிலுக்கு புன்னகை முகமாய் வணக்கம் சொல்லி தன் இடத்திற்கு சென்றான் அகி.

முதல் ஆண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு இது முதல்நாள் ஆதலால் இன்னும் சிறிது நேரத்தில் அனைவரும் ஆடிட்டோரியத்தில் இருக்க வேண்டும். அதுவும் அகிக்கு இன்று ஸ்டேஜில் ஒருங்கிணைக்கும் வேலை வேறு இருக்கவே அவசர அவசரமாய் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தான்.

அங்கே அவன் தேர்வு செய்திருந்த மாணவர்கள் ஸ்டேஜ் டெக்கரேஷனை ஆரம்பித்திருக்க தானும் அவர்களோடு இணைந்து கொண்டான். முதல்வரான சிரில் புதிய மாணவர்களை வரவேற்று நிகழ்ச்சியை துவங்கி வைக்க, ஆட்டம் பாட்டமென கோலாகலமாக ஆரம்பமாகியது நிகழ்ச்சி.

முதல் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் பிரஸ்ஸர்ஸ் பார்ட்டி இப்படி வெகு விமர்சியாக நடைபெற்று முடிய, முதல்நாள் வகுப்பிற்கு அனைத்து மாணவர்களும் சென்றனர்.

ஆடிட்டோரியத்தில் எல்லா வேலைகளையும் முடித்த அகஸ்டஸ் தனக்கு கொடுக்கப்பட்ட வகுப்பிற்குள் நுழைந்து, ஆர்ப்பாட்டமாக மாணவர்களிடம் ஹாய் என அவன் ஆரம்பித்த நேரம் "எக்ஸ்கியூஸ்மி சார்" என்றொரு குரல் கேட்டது. குரல் வந்த புறம் திரும்பி பார்த்த அகியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.

ஏனெனில் அவன் வகுப்பு வாசலில் ஐந்தடி அழகுச்சிலை ஒன்று நின்றிருந்தது. 'லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்' இந்த வார்த்தையை இதற்குமுன் அகியிடம் கேட்டிருந்தால் சிரித்திருப்பான். ஆனால் இப்போது அந்த பெண்ணின் வசீகரிக்கும் தோற்றத்தில் அகஸ்டஸ் மயங்கிதான் போனான். அகி பிரமித்து நின்ற நேரம், அவன் நாசியை வந்தடைந்தது அந்த பிரத்யேக லேவேண்டர் பூவின் வாசனை.

லேவேன்டர் பதுமையாய் தன் முன்னே நின்ற இந்த பெண்ணை கண்டு 'யாருடா இவ' என பேச்சற்று நின்றான் அந்த ஆறடி ஆண்மகன்.

-தொடரும்
 
Last edited:
Top