GG writers
Moderator
அத்தியாயம் - 10
"நான் சொன்னது என்னாச்சு நோவா.. கண்டுபிடிச்சிட்டாயா"
தன் முன்னால் நின்றிருந்த மகனிடம் கேட்டார் வில்லியம்.
"நீங்க சொன்ன அடையாளங்கள வச்சு அந்த பொண்ண நானும் ஒரு வாரமா பாலோ பண்ணிட்டேன் டேடி. அந்த பொண்ணு காலேஜ்ல டூர் போனப்ப, அவங்க போன பஸ்ஸ டைவர்ட் பண்ணி நம்மலோட மாளிகைக்கு அந்த பொண்ணை வரவச்சேன். அங்க வச்சு பார்த்ததுல என்னால நூறு பர்சண்ட் சொல்லமுடியும் அந்த பொண்ணு ஒரு விட்ச் இல்லனு. அதனால நீங்க எதையும் மனசுல போட்டு வொரி பண்ணாம அடுத்த வேலைய பாருங்க"
அவ்வளவு உறுதியாக நோவா சொல்வதை கேட்டு திருப்தி பட்டு கொண்ட வில்லியம் நோவாவுக்கு வேறு ஒரு வேலையை தந்து சென்றார். அவர் இருக்கும் வரை சிரித்து பேசிய நோவா, வில்லியம் அவனிடம் பேசிவிட்டு சென்றப்பின் இப்போது வெறுப்புடன் பார்த்திருந்தான்.
'டேடி இன்னும் எவ்ளோ நாள் நீங்க சொல்றதை கேக்குற ஜடமா நான் இருக்கப்போறேன்னு தெரியலை.. ஆனா நான் உங்களுக்கு எதிரா நிக்கிறப்ப உங்களால மட்டுமில்ல இந்த மொத்த தோரா வம்சத்துல ஒருத்தரால கூட என் கிட்டயும் நெருங்க முடியாது.. அப்ப தெரியும் இந்த நோவா வில்லியமோட மகனா.. இல்ல கேத்ரினோட மகனானு.."
மனதிற்குள் வன்மமாக நினைத்துக் கொண்ட நோவா தற்போது அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையை பார்க்க கிளம்பினான்.
------------------------
செங்கதிரோன் வானின் உச்சிக்கு நகர்ந்து அவன் கதிர்களால் பூமியை சுட்டெரித்து கொண்டிருந்த நேரம்.. சுளீரென வெயில் மண்டையை பிளந்த உச்சிப்பொழுதை பனி விழும் இரவைப்போல் நினைத்து ஒரு ஜோடிமட்டும் அந்த கல்லூரியின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தனர். வேறு யாரு நம் கேடி வாத்தி அகஸ்டஸ் மற்றும் அவன் அழகு காதலி லைராதான் அங்கிருந்தது. தங்களை சுற்றி மந்திர வளையத்தை போட்டபின்னர் யாரும் தங்களை பார்த்துவிடுவார்கள் என்ற பயமின்றி இருவரும் காதல் கடலில் மூழ்கி இருந்தனர்.
"அகி என்னப்பா ரொம்ப அடியோ.. இன்னும் வலி ஹெவியா இருக்கும்போல "
பாவம் போல் தன் மடியில் படுத்திருந்த அகஸ்டஸிடம் லைரா கேட்டாலும், அவள் இதழின் ஓரம் சிறு புன்னகை குடிக்கொண்டிருந்தது. தான் அடி வாங்கியதை சொன்னால் தன் காதலி சிலபல முத்தங்களை அள்ளி தருவாள் என ஒரு சின்ன பிளானில் பிட்டை போட்டு பார்த்தான் கேடி வாத்தி. ஆனால் அவன் காதலிக்கா அவன் பிளான் புரியாது.
கடந்த ஒரு வாரமாக அடிவாங்கியதை காட்டி அவசர முத்தங்களை அள்ளவா பெற்று செல்கிறான். எப்போதும்போல் அவனுக்கு ஆறுதல் சொல்வதைப் போல் மேலும் அவனை சீண்டி கொண்டு இருந்தாள் லைரா.
"பீல் பண்ணாதீங்க அகி.. அவங்க நாலு பேரும் ரொம்ப திறமையான மந்திரவாதிங்க.. எடுத்த உடனே அவங்கல தோக்கடிக்கிறது நடக்காத விஷயம்.. ஆனா நீங்க ஜஞ்சு பேரும் அவங்கட்ட ஒருமணி நேரம் சிக்கி தர்மடிவாங்குனாலும் தாக்குபிடிச்சதே பெருசுதான்"
லைரா சொன்னதை கேட்டு திடுக்கென அவளை திரும்பிப்பார்த்து அவளை பொய்யாய் முறைத்து வைத்தான் அகி. பின் இது வழக்கமாய் நடப்பதுதானே என அந்த மேட்டரை டீலில் விட்டு அடுத்த டாப்பிக்கிற்குள் தாவிவிட்டான்..
"சரி அதைவிடு செல்லம்.. நம்ம மேட்டர்க்கு வருவோம்.. நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்"
காதலை சொல்லி முழுதாக ஒருமாதம் கூட முடியாத நிலையில், இதுதான் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அகிக்கு என்று சாயா லைரா என்ற உண்மை தெரிந்ததோ.. என்று அவன் காதலை அவளிடம் சொல்லி சம்மதம் பெற்றானோ.. அன்றிலிருந்து கேட்க ஆரம்பித்து விட்டான்.
"என்ன அகி நாம லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணி முழுசா ஒரு மாசம் ஆகல, நீங்க அதுக்குள்ள கல்யாணம் பண்ணலாம்னு சொன்னா என்ன அர்த்தம்"
லைரா சலித்துக் கொண்டாலும் அகஸ்டஸின் காதல் வெறும் டைம் பாஸுக்கு இல்லை.. அவன் இதயத்தை நிரந்தரமாக அவளுக்கு அவன் தந்துவிட்டான் என நினைத்து சந்தோஷமே கொண்டாள்.
"இல்ல லைரா இப்ப சூழ்நிலை சரியில்லை.. எப்ப வேணாலும் நம்ம இனத்துக்குள்ள போர் வரமாதிரி ஒரு சூழ்நிலை இருக்கு.. அதுபோக உன்னோட நிலமையும் நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியது இல்ல..
இப்படி நம்ம வாழ்கையே அந்தரத்துல தொங்குது.. இதுல நம்ம லவ் லைப நான் காம்ளீகேட் பண்ணிக்க விரும்பலடி. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் நாம மேரேஜ் பண்ணியே ஆகனும்"
அகஸ்ட்ஸ் லைராவிடம் இப்படி பேசினாலும், அவளுக்கு வெறும் பதினெட்டு வயது ஆவது அவனுக்கே ஒரு மாதிரிதான் இருந்தது.
அவன் சொல்வதில் இருந்த உண்மை லைராவுக்கும் புரியவே செய்தது. ஆனால் அகி இவள் சரியென்றால் நாளையே வா ரெஜிஸ்டர் ஆபிஸ் போகலாம் என சொல்லும் நிலையில் அல்லவா இருக்கிறான்.
"நீங்க சொல்றது எனக்கு புரியாம இல்ல அகி.. ஆனா எனக்கு..."
சிறிதே தயங்கிய லைரா "என் தாத்தா ஓகே சொல்லனும் அகி" என அவள் மனதில் இருந்ததை சொல்லிவிட்டாள்.
"அவ்ளோதானே... ரைட் இந்த மேட்டரை என்கிட்டவிடு நானே உன் தாத்தாகிட்ட பேசறேன்.. ஓகே வாங்குறேன்.. ஆனா உன் தாத்தா சொன்ன நீ ஓகே செல்லுவியா"
அகி அவளை ஒத்துக் கொள்ள வைக்க அதுஇதுவென மாற்றி மாற்றி பேச, அவன் பேச்சு சுழலில் சிக்கிய லைராவும் கடைசியில் அவன் சொன்னதற்கு எல்லாம் சரியென தலையை ஆட்டிவிட்டாள். அவள் பதிலில் மகிழ்ந்து போன அகஸ்ட்ஸ் அவள் மடியில் இருந்து எழுந்து "யாஹூ" என கத்தி ஆர்பாட்டம் செய்தபடி அவள் இடுப்பை தன் கைகளுக்குள் புகுத்திக்கொண்டான்.
"தேங்க்ஸ்டி.. தேங்க்ஸ் செல்லம்.." வார்த்தைக்கு வார்த்தை நன்றியை கூறி அவன் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி, மெல்ல அவளின் நெற்றியில் முத்தத்தை இட்டான்.. அடுத்து அவளின் இதழையும் திருட்டு பூனையாக சுவைக்க ஆரம்பித்து, இதழ்வழியே அவளின் மொத்த எனர்ஜியையும் எடுத்து முடித்தே ஓய்ந்தான் அந்த திருட்டு வாத்தி.
காதலுக்கு லைரா சம்மதம் சொல்லியதே போதுமென, கிடைக்கும் கேப்பில் எல்லாம் அவள் வாயை கடித்து வைத்து விடுபவன், இப்போது திருமணத்திற்கே சம்மதம் சொன்னாள் சும்மா விடுவானா அவன்.. தன் முத்திரையை அவள் இதழில் ஆழப் பதிந்தே ஓய்ந்தான். இதற்கு என்னதான் லைரா வெளியே அவனிடம் கோபித்துக் கொண்டாலும், அவளுக்கும் அவன் தரும் இந்த திருட்டு முத்தங்கள் பிடித்துதான் இருந்தது.
"ஆமா நான் உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சிட்டே இருந்தேன்.. அன்னைக்கு மாளிகைல வச்சு பாத்தோமே நோவா அவனை எங்கையாவது நீ பார்த்தா அவன்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இருடி.. அவன் ஆளே சரியில்லை, அவன் உன்னை பார்த்த பார்வையும் சரியில்லை.. அதோட அவன் தோரா வம்சத்த சேர்ந்தவன் அவன் நல்லவனா இருக்க வாய்ப்பு ரொம்பவே கம்மி.. அவன்னு மட்டும் இல்ல தோரா இன விசார்ட் விட்ச் யாரையும் நம்பாத ஜாக்கிரதை"
அவர்கள் இருந்த மோனநிலையை கலைப்பதைப்போல் அகி இடையில் நோவாவை இழுத்து, அவளை நோவாவின் பக்கம் போக வேண்டாமென்றான். அவன் பேசியதில் தன்நிலை வந்த லைரா, அவனை ஒருமாதிரி பார்த்திருந்தாள்.
அவள் பார்வையின் அர்த்தம் புரியாது "என்னடி எதுக்கு அப்படி பாக்குற" என்றான் அகி..
"இல்ல தோரா வம்சம்றதால அவன் கெட்டவான்னா, நானும் தோரா வம்சத்த சேந்தவதான் மறந்துட்டீங்களா. அப்போ நானும் கெட்டவளா என்ன"
விளையாட்டாக லைரா கேட்டிருக்க, அகஸ்டஸின் முகம் இன்னும் சீரியஸ் மோடுக்கு போனது.
"நான் மறக்கலமா.. நீ தோரா வம்சத்த சேந்தவன்றதையும், அந்த தோரா வம்சம் தன்னோட சொந்த ரத்தமான உனக்கு செய்ய துணிஞ்சதையும்... நான் எதையும் மறக்கல... அப்புறம் நீ கெட்டவ இல்லடி, உன்னதான் சில கெட்ட ஆளுங்க ரொம்ப தீவிரமா தேடிட்டு இருக்காங்க தெரியும்ல.. அதனால நான் சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு பாதுகாப்பா இருக்க வழிய பாரு"
மிகமிக கடுமையான குரலில் எச்சரித்தான் அகி. இந்த மோதலில் அவன் காதலோ, அவன் காதலியோ பலியாவதை சிறிதும் விரும்பவில்லை அகி. அதனாலே இவ்வளவு கடுமை காட்டினான்.
அகஸ்டஸ் ஏன் இவ்வாறு பேசுகிறான் என புரிந்த லைரா வெளியே ஒன்றும் பேசவில்லை என்றாலும், மனதிற்குள் அவன் வார்த்தைகளை கேட்டு பூரித்துதான் போனாள்.
"லைரா அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... அ.அது ஒரு ஒன் வீக் நான் காலேஜ் வரமாட்டேன்டி"
இதுநேரம் வரை வீராவேசமாக பேசிய அந்த காதலன் இப்ப பம்மிக்கொண்டு நின்றான் அவன் காதலியின்முன். உண்மையை சொல்லவேண்டும் என்றால் அவனின் ஒருவார அப்ஸ்காண்டை குறித்துதே லைராவிடம் பேச வர சொல்லியிருந்தான். ஆனால் முதலில் இதை எதற்கு ஆரம்பித்து அவளை சங்கடப்படுத்துவானேன் என இவ்வளவு நேரம் ஊரை சுற்றி ரயில் ஓட்டிக் கொண்டிருந்தார் ஐயா.
"என்ன சொல்றீங்க அகி.. ஒரு வாரம் வரமாட்டேன்னா என்ன அர்த்தம்.. எங்க போக போறீங்க.." குழப்பத்தில் நெற்றி சுருங்க கேட்டு நின்றாள் அவன் காதலி.
லைராவிடம் சொல்லலாமா வேண்டாமா என பலமுறை யோசித்த அகி, முடிவில் தன் காதலியிடம் சொன்னால் என்ன என முடிவெடுத்து சொல்ல ஆரம்பித்தான்.
"தோரா வம்சம் எதோவொரு தப்பான விஷயம் செய்ய போறதா இன்பர்மேஷன் வந்திருக்குடி. அதான் டேடி எங்க ஐஞ்சு பேரையும் அவங்கல பாலோ பண்ணி போக சொல்லிருக்காங்க.."
எல்லாவற்றையும் சொல்லாமல் தேவையானதை மட்டும் அங்கங்கு கூட குறைத்து அகி சொல்லி நிறுத்த, பதட்டமானாலும் எதையோ தீவிரமாக யோசித்தாள் லைரா.
"நீங்க ஐஞ்சு பேரும் போனவாரம் கூட நடந்த போட்டில தோத்திருக்கீங்க.. அப்போ நீங்க இன்னும் இந்த மிஷன்க்குலாம் போக ரெடி ஆகலன்னுதானே அர்த்தம்.. அப்படி இருக்கும் போது எதுக்கு உங்களை உங்க அப்பா அனுப்பராரு" நியாயமாக தான் அவளும் கேட்டு வைத்தாள்.
"இதையேதான் நாங்களும் கேட்டோம்மா.. 'தலைசிறந்த விசார்டான எங்ககூடவே உங்களால ஒருமணி நேரம் தாக்குபிடிக்க முடியுதுனா உங்களோட பலம் ரொம்பவே ஜாஸ்தி. அதனால தைரியமா போய்டு வாங்க' அப்டிங்கறாரு. எங்களுக்கும் நம்பிக்கை இருக்குடி, இவ்ளோ வருஷ பிராக்டிஸ் எங்களை கைவிடாது.. நாங்க பத்திரமா போயிட்டு வந்திருந்தோம்.. ஓகே" என முடித்தான் அகஸ்டஸ்.
என்னதான் அகஸ்டஸ் தைரியம் தந்தாலும் லைராவின் மனதிற்கு என்னவோ சரியாகவே படவில்லை. வெகுநேரம் குழப்பத்திலே இருந்தவள் திடீரென "அகி உங்க கைய நீட்டுங்க" என்றாள்.. அகி புரியாமல் பார்த்தாலும் அவள் கேட்டதற்காக கையை அவள்முன் நீட்டினான்.
லைரா தானும் அவளுடைய கையை அகியின் கைக்கு மேலே வைக்க, அவளின் கையில் லேசாக கீரல் ஒன்று விழுந்தது.. அதிலிருந்து ரத்தம் கொஞ்சம் எட்டிப் பார்க்க, அந்த ரத்த துளிகளை அகியின் கைகளில் விட்டாள் லைரா.
அகியின் கையில் விழுந்த ரத்த துளிகள் மெதுவாய் ஒரு நூல் போல் மாறி அகியின் மணிக்கட்டில் சுற்றிக் கொள்ள, அதன்பின் அந்த கயிறும் அகியின் கைக்குள் மாயமானது.. லைரா செய்வதை வியப்பாய் பார்த்து நின்றான் அகி.
"என்னடி செஞ்ச.. என் கைல உன் பிளட் எப்படி கயிரா மாறி தானாவே கட்டிக்கிச்சு.. அது காணாமலும் போச்சு.. நீ ஸ்பெல் கூட போடல எப்படி"
ஆச்சரியத்தை குரலில் காட்டி அகி கேட்டதற்கு, "இது சேப்டி திரெட்.. என் தாத்தா இதை எப்படி செய்யனும்னு சொல்லி தந்தாரு.. நீங்க எங்கையாவது ஆபத்துல மாட்டிக்கிட்டா இந்த திரெட் எனக்கு காட்டிக் குடுத்திரும்.. நீங்க எங்க இருக்கீங்கனு அது எனக்கு வழிகாட்டும்.. இப்ப நான் நிம்மதியாவும் இருப்பேன்.."
லைரா அவளுக்கு அவளுடைய தாத்தா போட்டிருந்த சேப்டி திரெட்டைப்போல் அகிக்கும் ஒன்றை போட்டு பின்னர் சற்று அமைதியானாள். இதை வைத்து அகி எங்கு போனாலும் அவன் பாதுகாப்பாய் இருப்பதை லைரா இப்போது உறுதிபடுத்திக் கொள்வாளே..
லைராவின் அன்பில் உருகிய அகி, அவளுடைய அணைப்பில் இன்னும் சிறிது நேரத்தை கடத்திவிட்டு மனமே இல்லாமல் அவளை அனுப்பி வைத்தான். இனி ஒருவாரம் அவளை பார்க்க முடியாது என்ற வருத்தமே வாத்திக்கு மேலோங்கி நின்றது.. ஆனால் அவன் தந்தையிட்ட வேலைகள் கண்முன்னே வர ஒரு பெருமூச்சுடன் தன் வேலையை பார்க்க கிளம்பிவிட்டான் அகஸ்டஸ் ஆண்ட்ரோனிகஸ்...
-தொடரும்