வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இருள் பூவின் ஒளிச்சுடரே! - 2

GG writers

Moderator
அத்தியாயம் - 2

"என்னடா பாப்பா அமைதியா இருக்க. உன்னோட பர்ஸ்ட் டே காலேஜ் எப்படி இருந்ததுனு தாத்தாகிட்ட சொல்லமாட்டியா"

போனின் வீடியோ காலில் சிறுபிள்ளை ஆர்வத்தில் கேட்கும் தன் தாத்தவை பார்த்து மென்னகை பூத்த சாயா "உங்ககிட்ட சொல்லாம வேற யார்ட்ட சொல்லப்போறேன் தாத்தா. ஆனா அதுக்கு மொதல்ல நீங்க என்ன பேசவிடனுமே" என்றாள்.

சாயாவுக்கு போன் போட்டதில் இருந்து அவள் தாத்தா ஜான் இவளை பேசவிடாது அவரே பேசினால், பாவம் அவளும் எப்படி பேசுவாள்.

"சரி தாத்தா பேசல வாய சிப் போட்டு மூடிக்கிறேன். இப்ப சொல்லு அந்த காலேஜ் உனக்கு புடிச்சிருக்கா, இன்னைக்கு நெறைய பிரண்ட்ஸ் கிடைச்சாங்கலா" ஜான் கேட்டு நிறுத்த

"இந்த காலேஜ் எனக்கு பிடிச்சிருக்கு தாத்தா. எல்லாருமே ரொம்ப பிரண்ட்லியா பழகுறாங்க. எனக்கு புதுசா பிரீத்தானு ஒரு ஃபிரண்ட் கூட கிடைச்சிருக்கா தாத்தா. அப்புறம் புரபர்சர்லாம்"

என்று துவங்கிய சாயாவின் கண்முன் தன்னை கண்டு மயங்கி நின்ற ஒருவனின் தோற்றம் வந்து போக சற்றே தடுமாறிதான் போனாள் ஜானின் பேத்தியும்.

"பு..புரபர்சர்சும் நல்லாவே பழகுறாங்க தாத்தா. எனக்கு ரொம்ப கம்பர்டபுலா இருக்கு" தடுமாறியபடி சொல்லி முடித்தாள் சாயா.

அவள் தடுமாறியதை கவனிக்காத அவளின் தாத்தா வேறு சில விஷயங்களை பேசிவிட்டு‌,

"பாப்பு தாத்தா மறுபடியும் சொல்றேன், நீ யாருன்னு மட்டும் யார்கிட்டேயும் சொல்லிடாதடா. அவங்களுக்கு தவறிகூட நீ யாருன்னு தெரிஞ்சிடகூடாது, முக்கியமா யாரையும் நம்பவே நம்பாத புரியுதாடா. உனக்கே எல்லாம் தெரியும் ஆனாலும் சொல்ல வேண்டியது என் கடமை சரிதானே, தாத்தா வச்சிடட்டா"

ஜான் அழுத்தி கூறியதும் முகம் சுருங்கிக் போன சாயா சரி என்றாள். ஒரு பெருமூச்சுடன் அங்கு ஜான் போனை வைத்துவிட, சில நிமிடம் எதையோ யோசித்த சாயாவிற்கு திடீரென காலையில் நடந்த நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வந்தது.

சாயா ஐந்தடியில் செதுக்கி வைத்த அழகு‌ சிலை. அந்த சிலை அதோடு அவன் அடிக்கடி சிக்கி திணறும் அந்தப் லேவேண்டர் மலரின் நறுமணத்தோடு வந்து தன் வகுப்பின் முன் நின்றதில் அகஸ்டஸ் ஸ்தம்பித்துதான் போனான். அவன் தன்னை பார்த்து உறைந்து நிற்பதை உணர்ந்த சாயா மீண்டும் "சார்" என்று சங்கடத்துடன் கூப்பிட, அதன் பின்னரே அவளை உள்ளே வர அனுமதித்தான்.

"உள்ள வாங்கமா! இண்ட்ரோ தான் போயிட்டு இருக்கு, சோ நீங்களும் உங்கள அறிமுகப்படுத்திட்டு போய் உக்காருங்க"

தன்னை நிதானப்படுத்திய அகஸ்டஸ் எதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் சாயாவை பார்த்து வைக்க "ஹாய் நான் சாயா" என்றதில் அவன் முகம் பியூஸ் போன பல்பாய் சுருங்கியது. அதற்குமேல் சாயா சொன்ன ஒரு வார்த்தை கூட அவன் காதில் ஏறவில்லை.

பேசி முடித்தப்பின் சாயா ஒரு பெஞ்சில் போய் அமர, "நான் அகஸ்டஸ் உங்க கிளாஸ் இன்சார்ஜ் புரபசர் நான்தான். சோ இந்த வருஷம் புல்லா என்ன பிராப்ளம் வந்தாலும் நீங்க என்ன ரீச் பண்ணிக்கோங்க. இந்த செமஸ்டர்ல ஒரு கோர் சப்ஜெக்டான ஆர்கிடெக்சரல் டிசைன் நான்தான் எடுக்கப்போறேன்.

பர்ஸ்ட் டே சோ ஒவ்வொருத்தரா உங்கள இப்போ இண்ட்ரோ பண்ணிக்கோங்க" ஆரவாரமாய் வகுப்பை துவங்கி வைத்தான் அகஸ்டஸ்.

அவன் சொன்னதைப்போல் ஒவ்வொரு மாணவராக தங்களை அறிமுகப்படுத்த, இடை இடையே காமெடியாக பேசி வகுப்பை ஜாலியாக கொண்டு சென்றான் அகி. வந்த முதல் நாளிலே இந்த புரபசரை அனைத்து மாணவர்களுக்கும் பிடித்துப்போனது. ஆனால் அந்த புரபசருக்கே இங்கு ஒரு பெண்ணை பிடித்து போனது என்றால் அது நம் சாயாதான்.

கிளாஸ் முடிவதற்குள் எதேர்ச்சியாக திரும்பி பார்ப்பதைத் போல் பலமுறை அவளின் முகத்தை பார்த்து அதை நன்கு தன் மனதில் ஏற்றிக் கொண்டான் அந்த கேடி வாத்தி.

இது சாயாவுக்கு தெரியவில்லை என்றாலும், புரபசரின் பார்வை தன்மீது படும்போது அந்த பார்வையில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிகிறதென கண்டுக்கொண்டாள். 'இது நல்லதுக்கா இல்லை கெட்டதுக்கான்னே தெரியலையே' காலையில் அகி நினைத்ததை இப்போது சாயாவும் நினைத்து வைத்தாள்.

அகஸ்டஸ் அவன் வகுப்பு முடிந்து வெளியே சென்றாலும், அன்றைய நாள் முழுவதும் சாயாவை பார்ப்பதற்கு அடிக்கடி அவர்கள் வகுப்பை கடந்து சென்றான் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் தாத்தாவிடம் பேசி முடித்த சாயாவின் மனதிற்குள் இன்னும் காலையில் தன்னை பார்த்து உறைந்து நின்று அந்த பேராசியனின் முகமே.

'எதுக்கு அப்படி பாத்திருப்பாரு?' தனக்குதானே கேள்வியை கேட்டுக் கொண்டாள் அந்த பேதை.

'அவரு எதுக்கோ பாத்துட்டு போகட்டும், நாம இங்க வந்தது படிக்க. அதைமட்டும் பாப்போம். வேற எதையும் யோசிக்கவே கூடாது சாயா' மனதிற்குள் ஒரு தீர்மானத்தை எடுத்த பின்னரே சற்று தெளிந்தாள் சாயா. ஆனால் அவன் அந்த முகத்தை தன் மனதிற்குள் இருந்து அவளால் வெளியேற்ற முடியவில்லை என்பது தனிக்கதை.

---------------------------------

மாலை மங்கி சூரியன் தன் கதிர்களை உள்ளே இழுத்து முடித்திருக்க, சந்திரன் தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்கியிருந்த நேரமது. ஒரு அடர்ந்த வனத்தில் வழி தவறிய மான் ஒன்று போகும் வழி தெரியாது தடுமாறிக் கொண்டிருக்க, அதை இரண்டு விழிகள் பார்த்துபடி இருந்தது.

அந்த மானின் ரெத்த வாடை அந்த விழிகளுக்கு சொந்தகாரனின் நாசியை வந்தடைய சாதாரணமாக இருந்த அவன் விழிகள் இரண்டும் ரத்த சிவப்பாய் மாற, அவன் வாயிலிருந்து இரண்டு பற்கள் வெளியே நீண்டது.

தன் இரையாகிய அந்த மானை வேட்டையாட சரியான தருணம் வந்துவிட்டதென உணர்ந்த அவன், தன் தாக்குதலை துவங்க நினைத்த நேரம் அவன் தோளை ஒரு கை தொட்டது.

அவ்வளவுதான் எதோ பூமியே
ரெண்டாக பிளந்துவிட்டதைப் போல் "அம்மே! என்ன விட்டுருங்க" என பயத்தில் அலறியடி விழுந்தான் அவன்.

தன் முன்னால் பப்பரப்பேவென விழுந்து கிடக்கும் தன் நண்பனை கண்டு தலையில் அடித்துக் கொண்ட அகஸ்டஸ் "ஏய் நான்தான்டா! எதுக்கு இப்ப உயிரே போன மாதிரி கத்துர" கடுப்பாய் கடிந்துக் கொண்டான்.

"அகி நீயா! நான்கூட வேற யாரோன்னு நெனைச்சு பயந்துட்டேன்"

ஒன்றும் நடவாதது போல் தன் மேல் இருந்த தூசியை தட்டியபடி அவன் கீழிருந்து எழ, "ஏன் ஐநர், அப்படி வேற யாராவது வந்தாக் கூட என்னடா. நீ ஒரு வேம்பயர் அவங்ககிட்ட இருந்து உன்ன உன்னால காப்பாத்திக்க முடியும். அதை மறந்துட்டியா" என்றான் அகஸ்டஸ்.

"அட ஆமால்ல அது அப்பப்ப மறந்து போயிறுது மச்சான். சரி அதவிடு இங்க இருந்த மான் எங்கடா" என்று கேட்ட தன் நண்பனை கேவலமாக பார்த்த அகஸ்டஸ்

"அதுவா நீ ஊரே கேக்குற மாதிரி கத்திக்கிட்டு விழுந்தல்ல, அது அப்பவே தெறிச்சு ஓடிருச்சு. ஆனா எனக்கு ஒரு டவுட்டு மச்சான், ஒரு கைய வச்சதுக்கே பயப்படுற இந்த லட்சனத்துல நீ மான வேட்டையாட போறியா. எதாவது அசிங்கமா சொல்லிட போறேன், ஒழுங்கா வந்துரு"

அகஸ்டஸ் ஐநரின் கையை பிடித்து "டிரான்ஸ்பெரோ" பல்லை கடித்துக் கொண்டு உச்சரிக்க, இப்போது இருவரும் ஐநரின் வீட்டினுள் இருந்தனர். அடர்ந்த காட்டின் மத்தியில் அமைந்திருந்தது அந்த இரண்டு அடுக்கு மாளிகை.

"என்ன அகி ரொம்ப நாள் கழிச்சு இந்த வேம்பயர் பிரெண்டோட ஞாபகம் வந்திருக்கு. என்ன விஷயம்?"

பிரிட்ஞிலிருந்து ஒரு பாக்கெட் இரத்தத்தை எடுத்து உறிஞ்சியபடி கேட்டான் ஐநர்.

"ஐ நான் அந்த பொண்ண பாத்துட்டேன்னு நினைக்கிறேன்" அகஸ்டஸ் கூறியதுதான் தாமதம் ஒரு செகண்ட் முடிவதற்குள் தன் நண்பன் முன் நின்றான் ஐநர்.

"என்ன சொல்ற, பாத்துட்டியா. என்ன நடந்ததுன்னு ஒன்னுவிடாம இப்பவே முழுசா சொல்லு" ஆர்வ மிகுதியில் ஐநர் கேட்டு நிறுத்த

"இன்னைக்கு காலைல எங்க காலேஜ்லதான். அந்த பொண்ணு பர்ஸ்ட இயர் ஆர்கிடெக் சேந்திருக்கா" இடையில் கொஞ்சம் கேப்விட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டான் அகி.

"அதான் அந்த பொண்ணு உன் கிளாஸ்லையே வந்து சேந்திருக்காளே, அப்புறம் என்ன அகி இவ்ளோ சலிச்சுக்கிற" ஐநர் கேட்டதற்கு

"ஆனா எனக்கு இந்த பொண்ணுதான் அந்த பொண்ணான்னு பெரிய டவுட் இருக்கு ஐ" பெரிய குண்டாய் தூக்கி போட்டான் அகி.

"ப்ச் அகி பிட்டுபிட்டா சொல்லாம முழுசா சொல்ல போறியா இல்லையா. வேம்பையர் பையன் பொறுமைய சோதிச்சுக்கிட்டு" சிறிதும் பொறுமை இன்றி பொறிந்தான் ஐநர்.

"குறுக்க குறுக்க பேசாம கொஞ்ச பொறுமையா இரு ஐ" ஐநரை கடிந்தபடி காலையில் நடந்ததை எல்லாம் வரிசையாக சொல்லிய முடித்த அகி, தன் மனதில் இருந்த பயத்தையும் அதோடு சேர்த்து சொல்லியிருந்தான்.

"அதோட யாருக்கும் தெரியாம அந்த பொண்ணு மேல ஒரு ஸ்பெல் கூட போட்டு பாத்தேன். அட்லீஸ்ட் அவ ஒரு விசார்டுனு புரூவ் பண்ற மாதிரி ஒரு ரிப்பலிங் வேவ்கூட வரலடா" சோகமாக தன் நண்பன் சொன்ன அனைத்தையும் கேட்டு முடித்த ஐநர்

"ஆக அந்த பொண்ணுட்ட லேவேன்டர் வாசம் வந்திருக்கு, ஆனா பொண்ணு பேரு சாயா ம்ம்ம்" இதை சொல்லிவிட்டு எதையே யோசிக்கும் பாவத்தில் ஹாலை குறுக்கில் ஒருமுறை நடந்தவன், அகியின் முன்னே வந்து அவன் முகத்தை குறுகுறுவென பார்த்து வைத்தான்.

"உன் மூஞ்ச பாத்தா அந்த பொண்ணு பாத்த உடனே குப்புற விழுந்தா மாதிரிதான் இருக்கு. மூஞ்சியும் பத்து கோட்டிங் பெயிண்ட் பூசுன மாதிரி பளிச்சுன்னும் இருக்கு. சோ நாளைக்கு என்ன நடக்க போகுதோ அப்புடின்னு உன் மூளை பயமுறுத்தல தூக்கி போட்டுட்டு, உன் மனசு சொல்றபடி அந்த பொண்ண லவ் பண்ணு அகி‌‌"

பிரீயாய் கொடுப்பது அட்வைஸ் மட்டுமே என தன் இஷ்டத்துக்கு அள்ளிவீசினான் ஐநர். நண்பன் சொன்னதை கேட்ட அகி

"ஐ ஒருவேளை இந்த பொண்ணு அந்த பொண்ணா இல்லைனா என்னடா பண்றது" சஞ்சலத்துடன் மீண்டும் அகி கேட்க, அவன் தோளில் கையை வைத்து அழுத்திய ஐநர்

"மச்சா அந்த பொண்ணு யாரா வேணா இருந்துட்டு போகட்டும் உனக்கு பிடிச்சிருக்கில்ல. அப்ப லவ் பண்ணு அந்த பொண்ணையும் லவ் பண்ண வை சிம்பில்" ஒரே வரியில் முடித்துவைத்தான் ஐநர்.

ஐநர் சொன்னதில் இருந்த உண்மை அகிக்கு புரிய "கரெக்ட்தான் ஐ! என் மைண்ட இப்ப கொஞ்சம் கிளியர் ஆகிருச்சு" என்றான் நிறைவுடன்.

"அவளுக்கு என்ன எப்படி பிடிக்க வைக்கிறது, நான் ஒரு விசார்டுனு தெரிஞ்சா அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா இதெல்லாம் நெனச்சாலே அல்லு விடுது மச்சி"

இவ்வாறு கூறிய அகஸ்டஸுக்கு தெரியவில்லை அவன் ஏற்கனவே சாயாவின் சிந்தனைக்குள் வெற்றிகரமாக நுழைத்துவிட்டான் என.

"அகி எங்க இருக்க, சீக்கிரம் வீட்டுக்கு வா. டேடி எதுவோ இம்பார்டனான விஷயம் பேசனும்னு சொல்றாரு" அகி பேசிமுடித்த நேரம் திடீரென அகியின் அண்ணனான சிரில் புகையாய் அவன்முன் தோன்றி பேசினான்.

மந்திரவாதிகள் எங்கிருந்தாலும் வேறொரு மந்திரவாதியுடன் பேசுவதற்கு இந்த பேசும் மந்திரித்தைதான் அதிகம் உபயோகிப்பர். அதையே இப்போது சிரிலும் உபயோகித்திருந்தான்.

"டேய் உன்ன பிரெண்டா வச்சிக்கிட்டு, ஏன்டா போன்லா இருக்கே அதுல கூப்பிட மாட்டானா உன் அண்ணன் பொசுக்குன்னு பேய் மாதிரி புகையா வரான்"

சிரில் புகையாய் தோன்றியதில் நெஞ்சை பிடித்துக் கொண்டு பயந்து போய் ஐநர் பேச, இது எப்போதும் நடப்பது போல் தன்னுள் சிரித்துக் கொண்ட அகஸ்டஸ்,

"நான் கிளம்பறேன் மச்சா. ஆன் ஐ சொல்ல மறந்துட்டேன், உனக்கு ரெண்டு டசன் பிளட் பாக்கெட் உன் பிரிட்ஜில வச்சிருக்கேன். இப்ப நான் கிளம்புறேன் மேன், நீ பாத்து இருந்துக்கோ. மறுபடியும் மான வேட்டையாட போறேன் முயல வேட்டையாட போறேன்னு போய் எக்குதப்பா மாட்டிக்காத. அப்புறம் காப்பாத்த நான் வரமாட்டேன் புரிஞ்சுதா"

போகும் போது தன் நண்பனை வாரிவிட்டு அவனை கடுப்பாக்கியே கிளம்பினான் அகஸ்டஸ். நண்பர்கள் வேவ்லெண்த் அப்படி!

-தொடரும்
 
Last edited:
Top