வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இருள் பூவின் ஒளிச்சுடரே! - 3

GG writers

Moderator
அத்தியாயம் - 3

நண்பன் ஐநரிடன் விடைபெற்று இடமாற்ற மந்திரத்தை போட்ட அகஸ்டஸ் வந்து நின்ற இடம் அவன் வீடு. எப்போதும் போல் அவன் வீடு பூரண அமைதியை தத்தெடுத்திருக்க, "சிரில் எங்க இருக்க" என்றபடி உள்ளே நுழைந்தான் அகி.

"அகி கம்டூ லைப்ரரி"

சிரிலின் குரல் எங்கிருந்தோ ஒலிக்க அந்த குரல் வந்த திசையை நோக்கி சென்றான் அகி. இவர்கள் வீட்டின் இடதுகை ஓரம் படிக்கட்டுகள் இருக்க, அதன் அருகே சென்ற அகஸ்டஸ் தன் கையை அசைத்தான். அவனின் கை அசைவில் அந்த படிக்கட்டுகளின் பின்புறமாக மேலிருந்து கீழிறங்கும் வண்ணம் வரிசையாக படிக்கட்டுகள் தெரிந்தன.

அந்த படிகளின் வழியை கீழே இறங்கிய அகி அவர்களின் வீட்டின் லைப்ரரியை சென்றடைந்தான். வீட்டின் தரையில் இருந்து கீழே கிட்டத்தட்ட இருபது அடி ஆழத்தில் இருந்தது அந்த லைப்ரரி.

அதோடு வீட்டின் மொத்த அகலத்திற்கும் அந்த லைப்ரரி இருக்க, அந்த அறை முழுவதும் பலவித மந்திர புத்தகங்களால் நிறைந்திருந்தது.

அந்த அறையின் மத்தியில் ஒரு பெரிய மேஜேயை சுற்றி எடோனிஸ், சிரில் அதோடு மேலும் சிலரும் இருந்தனர். அதில் எடோனஸின் உடன்பிறந்த தம்பியான நேத்தன் ஆண்ட்ரோனிகஸ் இருந்தார். ஆனால் அவரின் ஒரே மகள் நடாஷா மற்றும் அவர் மனைவி பெத்தனி அங்கில்லை.

எடோனஸின் அருகே ஒரு வயதான பெண்மணியும், ஒரு இளவயது பெண்ணும் அமர்ந்திருக்க,

'என்ன இது சித்தப்பா வந்திருக்காரு, அதோட யாரோ புதுசா ரெண்டு பேர் வேற இருக்காங்க என்ன விஷயமா இருக்கும்'

மனதிற்குள் நினைத்தாலும் வெளியே முகத்தில் எதையும் காட்டாது சிரிலின் அருகே அமர்ந்தான் அகி.

எடோனஸின் முன்னால் ஒரு பெரிய புத்தகம் திறந்திருந்தது. அதன் பக்கத்தை திருப்பி பார்த்திருத்துக் கொண்டிருந்தார் அவர்.

'என்னா புக் அது' எட்டி பார்த்த அகிக்கு அந்த புத்தகம் புதிதாய் இருந்தது. சின்ன வயதிலிருந்து அண்ணன் தம்பி இருவரும் அந்த லைப்ரரியில் இருந்த நிறைய புத்தகங்களை படித்திருக்கின்றனர். ஆனால் இது இந்த லைப்ரரியில் பார்க்காத ஒரு புத்தகமாக இருந்தது.

இப்போது அனைவரும் பார்க்கும்படி எடோனிஸ் அந்த புத்தகத்தை திருப்பி மற்றவர்களுக்கு காட்ட, அதில் எறியும் அக்னி ஜுவாலையின் மத்தியில் இதய வடிவ கல் ஒன்று அழகாய் வீற்றிருந்தது. மேலோட்டமாக பார்த்தால் அது ஒரே கல் போல் தெரியும், ஆனால் சற்று உற்று பார்த்தால் அந்த கல் ஐந்தாக பிளவுபட்டு இருப்பதை காணலாம்.

"இது என்ன ஸ்டோன் டேடி" இவ்வளவு நேரம் தன் ஆர்வத்தை அடக்கி வைத்திருந்த சிரில், இப்போது ஆர்வம் தாங்காமல் கேட்டு விட்டான்.

"சொல்றேன் சிரில், அதை பத்தி சொல்ல தானே உங்க எல்லாரையும் இங்க வரவச்சிருக்கேன். அதுக்கு முன்ன இங்க இருக்க ரெண்டு பேரைபத்தியும் சொல்லிடுறேன்.

இவங்க கயா பரம்பரைய சேர்ந்தவங்க. அந்த பரம்பரையின் தற்போதைய தலைவர் லேடி கயா, பக்கத்துல இருக்கிறது அவங்க பேத்தி லிடியா. இந்த ஸ்டோன பத்தி இவங்க சொல்வாங்க" என்ற எடோனிஸ் அமைதியாகிவிட்டார்.

இப்போது கயா வேறெதும் பேசாமல் அவர் எதற்கு அங்கே வந்திருந்தாரோ அந்த விஷயத்தை பற்றி நேராக பேச துவங்கினார்.

"இந்த படத்துல இருக்கிற ஸ்டோனோட பேரு 'சோல் ஆஃப் ஹார்ட்'. இதை பத்தி நீங்க கேள்விபட்டிருக்க வாய்ப்பு ரொம்ப கம்மிதான். பல ஆயிரம் வருஷத்துக்கு முன்ன இந்த உலகம் உருவானப்ப அதோட சேர்ந்து உருவானதுதான் இந்த சோல் ஆஃப் ஹார்ட்"

கயா மேலும் பல கதைகளை கூற துவங்கனார். இந்த பிரபஞ்சத்தில் இருக்க சக்திகள் உதாரணத்துக்கு நீர் நெருப்பு இதைப்போன்று. அதை எல்லாம் கட்டுப்படுத்தும் ஒரு மாபெரும் சக்தி இந்த சோல் ஆஃப் ஹார்ட் கல் ஆகும்.

பல நூற்றாண்டுகளாக இந்த உலகத்தில் இருக்கும் எல்லா ஜீவராசிகளையும் பாதுகாக்கும் ஒரு மிகப்பெரிய கருவியாக இந்த கல் இருந்து வந்தது. அந்த கல் உருவான போது அது தன்னை பாதுகாக்க ஒரு காவலனையும் தேர்வு செய்தது. அவனே உலகின் முதல் மந்திரவாதி!

அவனால் பல புதுவிதமான பொருட்கள் உயிரினங்கள், ஏன் புது உலகைக் கூட அவனால் உருவாக்க முடியும். ஆனால் அந்த கல்லை தன் சுயநலத்திற்காக பயண்படுத்தாமல் வெறும் காவலாளியாக மட்டுமே அவன் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் அவனை அழித்துவிட்டு வேறொரு காவலனை அந்த கல் தேர்வு செய்து கொள்ளும். இந்த கல்லின் ரகசியம் காலம் செல்ல செல்ல மனித இனத்திற்குள் பரவ ஆரம்பித்தது.

உலகை வெல்லும் பேராசை குணம் கொண்ட பலர் இந்த கல்லை எடுக்க முயற்சி செய்ததுண்டு. ஆனால் அந்த காவலனை தாண்டி யாராலும் அந்த கல்லை நெருங்க முடியாது போனது. ஒரு காவலன் மரணித்தால் அடுத்த காவலனை அந்த கல் தேர்வு செய்துவிடும். அது எப்படி என்பதும் யாரும் அறியாத விஷயமே.

காலங்கள் உருண்டோடின. சில நூற்றாண்டுகளுக்கு பின், கி.பி அறுபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்க இனத்தின் தலைவனுக்கு இந்த கல்லை பற்றிய ரகசியம் தெரியவந்தது. அதுவரை நன்றாய் இருந்த பூமிக்கு ஆபத்து வரும் நேரம் அதுவானது.

"அப்போ ஒரு பெரிய கலவரமே நடந்ததா சொல்லப்படுது. அந்த நேரம்தான் எதோ ஒரு காரணத்தால் இந்த சோல் ஆஃப் ஹார்ட் ஸ்டோன் தானாகவே ஐஞ்சு பாகமா பிரிஞ்சதாவும், அதன் மூலமா நம்ம உலகத்துல‌ இப்ப இருக்க இந்த ஐஞ்சு விசார்டு ஃபேமிலி உருவானதாவும் ஹிஸ்டரி இருக்கு. அதோட அந்த ஸ்டோன் தன்னோட இயல்பு உள்ள இடங்கள தேர்வு செஞ்சு பிரிஞ்சிட்டதாவும் சொல்லப்படுது‌. அதாவது அந்த ஸ்டோன் இப்ப அஞ்சு இடத்துல இருக்கு"

ஒரு சிறிய ஹிஸ்டரி கிளாஸை எடுத்து முடித்த கயா "இதை நான் ஏன் உங்களுக்கு இப்ப சொல்றேன்னா, சில வருஷங்களாவே இந்த சோல் ஆஃப் ஹார்ட் ஸ்டோன திருட ஒரு விசார்ட் குடும்பமே முயற்சி பண்றதா தகவல் வந்திட்டு இருக்கு"

கயா இதை சொன்ன நேரம் அவர்கள் மனதிற்குள் தோன்றிய ஒரு பெயர் "தோரா". ஏனெனில் கிட்டத்தட்ட பதினாறு வருடத்திற்கு முன்னே நடந்த நிகழ்வுகளை யாராலும் மறக்க முடியாதே. அப்படியே யாராவது மறந்தாலும் அகஸ்டஸால் மறக்கவே முடியாதே.

"அதான் உங்களை வச்சு அதை நாம பாதுகாக்கலாமேனு நானும் லேடி கயாவும் ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்" எடோனிஸ் முடித்து வைத்தார்.

"அப்ப அந்த ஸ்டோனை நாங்க பாதுகாக்கனும் அதானே. ஆனா இந்த ஸ்டோன் எங்க இருக்கு, நாங்க எப்படி அதை கண்டுப்பிடிக்கிறது" சிரில் கேட்டான்.

"நான் இப்ப சொன்ன அளவுதான் எனக்கு, ஏன் மத்த நாலு விசார்ட் பரம்பரை தலைவர்களுக்கும் இந்த சோல் ஆஃப் ஹார்ட் ஸ்டோன் பத்தி தெரிஞ்ச விஷயம். அதோட அந்த ஸ்டோன் எங்க இருக்குன்னும் நீங்கதான் கண்டுப்பிடிக்கப்போறீங்க.
இவ என் பேத்தி லிடியா, இவளோட சேர்த்து இவான்டர், பெர்னார்ட் பரம்பரை வாரிசுகளும் உங்களோட இந்த பயணத்துல வரப்போறாங்க. அதனால நீங்க உங்கள தயார்படுத்திக்கங்க. எப்ப வேணா கிளம்புற மாதிரி இருக்கும்" என்று அவர் பேச வந்ததை பேசி முடித்தார் கயா.

"ஒருவேளை நீங்க சொல்ற மாதிரி தோரா பரம்பரை அந்த ஸ்டோன் ஆஃப் ஹார்ட்ட எடுத்துட்டாங்கனா என்ன ஆகும் பாட்டி" லிடியா தன் சந்தேகத்தை முன்வைத்தாள்.

"இந்த ஐஞ்சு பரம்பரை விசார்ட் பேமிலி உருவாக, நான் நீ எல்லாரும் விசார்ட்டா இருக்க காரணம் அந்த ஸ்டோன்ல இருக்க ஒவ்வொரு பாகம்தான். ஒருவேளை அவங்க அந்த ஸ்டோன எடுத்து நம்மலோட பாகத்தை அழிச்சா நம்ம பரம்பரையே அழிஞ்சு போயிரும்"

அவள் கேள்விக்கு ஒரு பெருமூச்சை விட்ட லேடி கயா பெரிய குண்டாக தூக்கிப்போட அதிர்ந்து போனார்கள் லிடியாவும் அகஸ்டஸும். ஆனால் இங்கு நடப்பதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பதை போல் லிடியாவின் குரலை கேட்டதிலிருந்து ஹெவியாக சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டான்‌ எடோனஸின் மூத்த கொழுந்து சிரில்.

'என்னடா தண்ணீ மேலபடுது'

தன்மேல் தண்ணீர் தெளிக்கப்பட்டதில் தெளிந்த சிரில் தன்னை சுற்றி பார்க்க, அந்த இடத்தில் சிரில் அகிலை தவிர வேறு யாரும் இல்லை.

"எங்கடா யாரையும் காணோம்" சிரில் பதறிபோய் கேட்டான் தன் தம்பியை.

தன் அண்ணங்காரனை கேவலமாய் ஒரு லுக்கைவிட்ட அகி "அது ஒன்னுமில்ல ராசா, அவங்க வந்தாங்க, பேசுனாங்க. வந்த வேலை முடிஞ்சு கெளம்பிட்டாங்க. நீங்க ஊத்துன ஜொல்லுல நம்ம லைப்ரரி மூழ்கிருமோன்னு பயந்து நான்தான் உன்மேல தண்ணிய தெளிச்சுவிட்டேன்"

அவன் அண்ணனை அப்பட்டமாய் கலாய்த்து விட்டான் நம் நாயகன். அதில் கடுப்பான சிரில் "அகி!" என பல்லைகடிக்க

"ப்ரோ உனக்கு லவ் இப்பதான் பூத்திருக்கு. சோ இது சகஜம்தான், அப்புறம் உன் லவ்ல எதாவது டவுட்னா என்கிட்ட கேளு. ஏன்னா நான் உனக்கு சீனியர் வரட்டா"

போகிறபோக்கில் அகஸ்டஸ் சொல்லி சென்றதை கேட்டு அதிர்ந்தான் சிரில். பின்னே இருக்காதா அண்ணங்காரனே இப்போதுதான் ஒருப் பெண்ணை சைட் அடிக்க ஆரம்பித்திருக்க, அதற்குள் அவன் தம்பி கமிட் ஆகிவிட்டானா என மனதிற்குள் திக்கென்றது.

அவனிடம் இதைப்பற்றி கேட்டு, அனைத்தையும் தெரிந்துக் கொள்ளாவிட்டால் சிரில் மண்டை வெடித்து செத்துவிடுவானே. தன் தம்பியின் காதல் கதையை தெரிந்து கொள்ள வேகமாக அவன் பின்னாலே ஓடினான் சிரில். இவன் சென்றநேரம் குளிக்க பாத்ரூம் சென்றுவிட்டான் அகி.

'நீ வெளியவாடா உன் லவ்ல பத்தி தெரியாம இங்க இருந்து நான் போகமாட்டேன்' மனதிற்குள் சபதமெட்டு அங்கையே அமர்ந்து விட்டான் அந்த சகோதரன்.

தன் அண்ணனை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்த அகி, நிதானமாக அரைமணி குளித்துவிட்டு மெதுவாக வெளியே வந்தான்.

"சொல்லு அகி"

அவன் வெளியே வந்ததும் வராததுமாக கேட்டு நின்ற சிரிலை கண்டு சிரிப்பாய் வந்தது அகிக்கு. இன்னும் கொஞ்ச நேரம் சுத்தலில் விடுவோம் என முடிவெடுத்திருந்த அகி, வாயை திறக்காமல் சிரிலை வெகுநேரம் தன் பின்னால் சுத்தவிட்டான்.

இரவு உணவு முடித்து வேண்டும் என்றே தூங்க செல்வதைப்போல் சென்று இன்னும் சிரிலின் பி.பியை ஏத்தி ஜாலியாய் இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் சிரிலை பார்க்க பார்க்க பாவமாய் இருந்தது. காரணம் சிரில் அவ்வளவு‌ பாவமாக முகத்தை வைத்து அமர்ந்திருந்தான்.

அவ்வளவும் ஆக்டிங்தான், இருந்தும் தன் அண்ணனை அப்படி பார்க்க பிடிக்காமல் போனால் போகிறதென்று காலையில் இருந்து இப்போது அவன் வீடு‌ வரும்வரை நடந்த சில விஷயங்களை மறைத்து சொல்ல வேண்டியதைமட்டும் பகிர்ந்துக் கொண்டான். இப்போது கேவலமாக பார்ப்பது அண்ணனின் முறையானது.

"ஏன்டா காலைலதான் அந்த பொண்ணையே பாத்திருக்க. இதுல நான் உன்கிட்ட லவ் அட்வைஸ் கேக்னுமாம்ல. ச்சே என் பி.பிய ஏத்தவே இப்படியெல்லாம் பண்றல்ல. இருடா உன்ன பேசிக்கிறேன்"

சத்தியமாக அவ்வளவு கடுப்பில்தான் சொல்லி சென்றான் சிரில்‌. ஆனால் அவன் அறைக்கு சென்றபின் தன் தம்பியை நினைத்து சிரித்தபடிதான் உறங்கினான் அந்த பாசக்கார தமையன்.

ஆனால் தன் தம்பி அவன் வாழ்வில் நடந்த பெரியதொரு விஷயத்தை மறைத்திருக்கிறான், அதுவும் சிரில் சொன்ன காரியத்தை செய்யாது விட்டிருக்கிறான் என தெரியவந்தால், இந்த பாசம் அப்படியே இருக்குமா? பார்க்கலாம்.

-தொடரும்
 
Last edited:
ஹாய் பிரெண்ட்ஸ் 💞💞,

இந்த கதையை கொஞ்சம் நிறைய கேரக்டர்ஸ் வருவாங்க ப்ளஸ் ஒரு ஐஞ்சு பரம்பரை வருவாங்க. உங்களுக்கு குழப்பமா இருக்கும்னு நான் முக்கியமான கொஞ்ச கேரக்டர் பேரு அதோட பரம்பரையோட பேரும் சொல்லிடுறேன்.

ஐந்து பரம்பரை:

1. ஆண்ட்ரோனிக்கஸ் - சிரில், அகஸ்டஸ்
2. பெர்னார்ட் - ஜேம்ஸ்
3. இவாண்டர் - லூகாஸ்
4. கயா - லிடியா
5. தோரா - நோவா

இப்போதைக்கு இவ்ளோ டீடெயில்ஸ் மட்டுமே தர முடியும்‌‌ பிரெண்ட்ஸ் மீதியை கதையோட போக்குல தெரிஞ்சிக்கோங்க🥰🥰🥰
 
Last edited:
Top