GG writers
Moderator
அத்தியாயம் - 4
நாட்கள் எப்போதும்போல் போய்க் கொண்டிருக்க, அகஸ்டஸ் சாயாவின் மீது கொண்ட காதல் ஏன்னென்றே தெரியாமல் அவன் மனதிற்குள் விருட்சமாய் வளர்ந்ததைப்போல், இந்த இரண்டு மாதங்கள் அவன் சைட் அடிக்கும் பணியும் அம்சமாய் நிறைவேறியது. அந்த வகுப்பில் இருக்கும் சில மாணவர்களுக்கே இவனின் செயலில் சிறிதாக சந்தேகம் வர ஆரம்பித்துவிட்டது. அந்த அளவு இறங்கி வழிய ஆரம்பித்துவிட்டான் வாத்தி.
சாயாவின் நினைப்பில் ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்த அகியின் முன் நிழலாட 'யாருடா அது' என சலிப்பாய் நிமிர்ந்து பார்த்தான். கல்லூரியின் மாணவர்கள் குழு பிரசிடெண்ட், அவனை சுற்றி இன்னும் சில மாணவர்கள் நின்றிருந்தனர்.
தன் கனவு கலைந்த கடுப்பில் "என்னங்கடா" என விட்டால் கடித்துவிடுவேன் எனும் தொணியில் அகி கேட்க
'ஆத்தாடி சார் செம கடுப்புல இருப்பாரு போலையே' பயந்துபோன அந்த மாணவன் சட்டென பின்வாங்கினான். பின்னால் நகர்ந்த அவனை பின்னே நின்றிருந்த மற்ற மாணவர்கள் மீண்டும் பிடித்து முன்னே தள்ள, அவர்களை மனதிற்குள் அசிங்கமாக திட்டியவன் மெல்ல அகியிடம் பேசினான்.
"அது வந்து சார், இந்த வருஷம் இண்டர் காலேஜ் கல்சரல்க்கு சர்கில் வந்திருக்குன்னும், அதை உங்ககிட்ட வாங்கிக்கவும் தினேஷ் சார் சொன்னாரு. அதான் சார்"
எச்சிலை விழுங்கி பயத்தில் நின்ற அந்த பாவப்பட்ட மாணவன் சொல்ல அதற்கு அப்புறமே நம் ஐயாவுக்கு நினைவு வந்தது, அவன்தான் இந்த வருட கல்சுரல் இன்சார்ஜ் டீச்சரென. அவன் மறந்ததை வெளியே காட்டிக் கொள்ளாத அந்த கேடி வாத்தி கெத்தாய் பேச ஆரம்பித்தான்.
"ஆமா நான்தான் தினேஷ் சார்ட்ட சொல்லி உங்கள வர சொன்னேன். இந்தாங்க இந்த சர்குலர்ல எல்லா டீடெயில்ஸும் இருக்கு. நீங்க டீமா பிரிஞ்சு எல்லா டிப்பார்ட்மெண்டுக்கும் போய் ஈவண்டுக்கு ஸ்டூடன்ட்ஸ் நேன் கேதர் பண்ணிடுங்க"
முதல்கட்ட வேலைகளை மாணவர்களிடம் பகிர்ந்து தந்த அகி "இன்னைக்கு லஞ்ச்குள்ள இந்த வொர்க்க பினிஷ் பண்ணிட்டு, ஆப்டர்னூன் நேம் தந்த ஸ்டூடன்ட்ஸ் எல்லாரையும் ஆடிட்டோரியம் வர சொல்லிடுங்க. நான் மீட் பண்ணி இன்ஸ்ட்ரக்ஷன் தந்திடுறேன். நாளைல இருந்து பிராக்டீஸ் ஆரம்பிச்சிடலாம். ஓகே தானே"
கை தேர்ந்த ஆசிரியனாய் சரளமாய் மாணவர்களுக்கு தேவையான தகவல்களை பகிர்ந்துவிட்ட அகி அனைவரையும் அனுப்பி வைத்தான். சிறிது நேரத்தில் பெல் அடித்துவிட அடுத்த வகுப்பிற்கு சென்றுவிட்டான்.
அகஸ்டஸ் சொல்லியதை போலவே எல்லா டிபார்ட்மெண்ட்களிளும் சுற்றி திரிந்து போட்டிகளுக்கு பேரை எழுதி வந்து, அவர்களை ஆடிட்டோரியத்தில் கொண்டு சென்று சேர்ந்தனர் சீனியர் மாணவர்கள் குழு.
எல்லா வேலையையும் முடித்து இவர்கள் ஹப்பாடா என அமர்ந்த நேரம் சரியாக வந்து நின்றான் நம் அகஸ்டஸ்.
"ஹாய் ஸ்டூடண்ட்ஸ், ம்ம் ப்ர்ஸ்ட் இயர்ஸ் நிறைய பேர் இருக்கீங்க போல சூப்பர்! இது என்ன காம்படீஷன் என்னென்ன ஈவண்ட் இருக்குன்னு உங்க சீனியர்ஸ் சொல்லிருப்பாங்கனு நம்புறேன்.
சோ டேரெக்டா நாம மத்த டீடெயில்ஸ் பாத்திடலாம். இந்த காம்படீஷன் வேற காலேஜ்ல தான் நடக்கப் போகுது, அண்ட் அது நடக்க இன்னும் ஒன் மந்த் டைம் இருக்கு. அதனால நீங்க பிராக்டீஸ் பண்ண கண்டிப்பா நிறைய டைம் இருக்கு, பிரம் டுமாரோ யூ கைஸ் கேன் ஸ்டார்ட் யுவர் பிராக்டிஸ். எல்லாரும் அவங்கவங்க ஈவண்ட்ல வின் பண்ணி நம்ம காலேஜக்கு ஓவரால் டிராபி வாங்கி தருவீங்கன்னு நம்புறேன்.
பார்டிசிபேட் பண்ண வந்த எல்லாருக்கும் என்னோட வாழ்த்துக்கள். எதாவது டவுட்ஸ் இருந்தா எப்பவேணா என்ட்ட கேட்கலாம். இப்ப யாருக்காவது டவுட்ஸ் இருக்கா" மாணவர்களை பார்த்து அகி கேட்க அனைவரும் இல்லை என தலையசைத்தனர்.
"தென் தடஸ் ஆல் ஃபார் டுடே அண்ட் எவ்ரிஒன் கோ டூ யுவர் கிளாஸ்" என்றதோடு முடித்துக் கொண்டு அனைவரையும் கிளப்பிவிட்டான்.
அதில் அவன் வகுப்பு மாணவர்கள் இருவரும் மட்டும் பின்னே தேங்கினர். தயங்கி கொண்டே தன்னை நோக்கி வந்த அவன் மாணவர்களை கண்டு புருவம் சுருங்கிய அகஸ்டஸ் "என்னங்கடா" என்றான்.
அதற்கு அந்த மாணவர்களில் ஒருவன் "சார் இந்த இன்டர் காலேஜ் பெஸ்ட்ல பியூட்டி கண்டெஸ்ட் இருக்கில்ல சார்" என ஆரம்பிக்க, ஆமென அவனும் தலையை ஆட்டினான்.
"அதான் சார் அந்த கண்டெஸ்ட்ல நம்ம கிளாஸ் சாயாவ கலந்துக்க சொல்லலாமே சார். நான் சீனியர்ட்ட சொன்னேன் பட் அதுக்கு வேற சீனியர் அக்கா பார்ட்டிசிபேட் பண்ணபோறதா சொல்லிட்டாங்க. நீங்க அவங்கட்ட சொல்லுங்க சார். நம்ம சாயா கலந்துக்கிட்டா அவ அழகுக்கு கண்டிப்பா வின் பண்ணிட்டு வருவா சார்"
அகஸ்டஸ் முன்னால் ஒருவித எதிர்ப்பார்ப்புடன் அந்த மாணவன் கேட்டு நின்றான். ஏனெனில் அந்த மாணவனுக்கு அகி சாயாவை பார்த்து ஜொள்ளை லிட்டர் கணக்கில் ஊத்துகிறானோ என சிறிது சந்தேகம் இருந்தது.
அதை வைத்து எப்படியும் சாயாவுக்கு சாதகமாக அகி பேசுவான் என அந்த மாணவன் நினைத்திருக்க, அகியோ முறைத்த முறைப்பில் விட்டால் அந்த மாணவனை கண்களால் எரித்திடுவான்போல். அப்படிதான் இருந்தது வாத்தியின் பார்வை.
"இங்கபாரு தம்பி நேம் லிஸ்ட் எடுக்கிறது சீனியர்ஸ் வேலை அவங்க அதை பண்ணிட்ட அப்புறம் நான் அதுல தலையிட்டு வேற யாருக்கும் பேவர் பண்றது எத்திக்ஸ் கிடையாது"
ரூல்ஸ் ராமானுஜனாய் மாறி அகி அட்வஸை அள்ளி தெளித்து செல்ல, பாவம் அந்த அப்பாவி மாணவனும் 'நாமதான் சாரை தப்பா நினைச்சிட்டோம் போல' என நினைத்துக் கொண்டான்.
ஆனால் அகஸ்டஸின் மனமோ 'என் ஆள பியூட்டி காண்டெஸ்டுல எறக்கி ஊரையே வேடிக்கை பார்க்க விட சொல்லுறான். என்ன தவிர வேற எவனும் அவள பாக்க கூடாதுடா' என பொசபொச பீலிங்சில் பொங்கியது அவன் மட்டுமே அறிந்த விஷயம்.
ஒருபக்கம் இன்டர் கல்சுரல் வேலை, மறுபக்கம் வார இறுதியில் மற்ற மந்திர பரம்பரை வாரிசுகளுடன் பயிற்சியென அகஸ்டஸுக்கு நிறைய வேலை. ஆம் என்று லேடி கயா இவர்களிடம் பேசி சென்றாரோ அதன்பின் வார இறுதி நாட்களில் அண்ணன் தம்பி இருவரும் மற்ற மூவரோடு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதோடு இப்போது இந்த போட்டியும் சேர்ந்து கொள்ள அகஸ்டஸால் முன்பு போல் தன் காதலியை காண முடியவில்லை. அவன் மாணவர்கள் எல்லாம் போட்டிக்கு பயிற்சி எடுக்க சரியாக வந்துவிட இவனால் அங்கும் இங்கும் அசைய முடியாது போனது.
இன்று ஞாயிற்றுக்கிழமை கல்லூரி விடுமுறை. எனவே நான்கு பரம்பரையின் வாரிசுகள் ஐந்து பேரும் தீவிர பயிற்சியில் இருந்தனர். அவர்கள் பயிற்சி செய்யும் இடம் அகஸ்டஸ் வீட்டின் கார் ஷெட்டுக்கு கீழ் இருக்கும் இவர்களின் பயிற்சி அறையில். கலர் கலரான ஒளிகள் எல்லோர் கையில் இருந்து வந்து கொண்டிருக்க, இங்கு ஒருவன் அர்னால்டுக்கு அக்கா மகள் போல் இருந்த லிடியாவை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.
வேறு யாராக இருக்க முடியும் எல்லாம் அகியின் அண்ணன் சிரில்தான். சிரில் சைட் அடிப்பது அங்கிருந்த எல்லோருக்கும் நன்றாகவே தெரியும், ஆனால் ஒருத்தரும் கண்டுக் கொள்ளவில்லை.
இது திடீரென நடப்பதாய் இருந்தால்தானே இவர்கள் கண்டுக் கொள்வர், இதுதான் பயிற்சி தொடங்கிய நாளிலிருந்தே நடக்கிறதே. பயிற்சிக்கு சற்று இடைவேளை எடுத்து ஆறு பேரும் அமர்ந்தனர்.
"லிடியா இந்தா எனர்ஜி டிரிங். ரொம்ப டையர்டா இருப்ப இதக்குடி"
சிரில் லிடியாவிடம் ஒரு பாட்டிலை நீட்டி நிற்க, அதை சிறிதும் சட்டை செய்யாத லிடியா "வேணாம் எனக்கு தண்ணியே போதும்" என்றவாறு திரும்பிக் கொண்டாள்.
எப்போதும் போல் தோல்வியை தழுவி பாவமாய் தலையை தொங்கப்போட்டு வரும் சிரிலை பார்த்து மற்ற மூவரும் சிரித்து கொண்டிருந்தனர். அதில் ஒருவன் பெர்னார்ட் பரம்பரை வாரிசு ஜேம்ஸ், ஒருவன் இவாண்டர் பரம்பரை வாரிசு லூகாஸ். இவர்களோடு அகியும் அவன் அண்ணனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான். சில காலம் ஒன்றாக பயிற்சி செய்ததில் இவர்கள் நால்வரும் நல்ல நண்பர்களாகி விட்டனர்.
"சிரில் நீயும் வாராவாரம் ஒரு பிட்ட போட்டு பாக்குற, அந்த லிடியா பொண்ணு உன்ன திரும்பி கூட பாக்க மாட்டேங்குதே" இது ஜேம்ஸ்.
"ஆனா இவ்ளோ வருஷம் நீ ஒரு ஹாட் ஹெட். எதாவது ஒரு தப்பு உன் கண்ல பட்டா தலைக்குமேல கோபம்தான் முன்ன வரும். எந்த காரியத்தையும் செஞ்ச அப்புறம்தான் யோசிக்கவே செய்வ. இப்படி நாங்க உன்னை பத்தி கேள்வி பட்டது என்ன, இப்ப நீ நடந்துக்கறது என்ன" இது லூகாஸ்.
"நீ சொன்னது உண்மைதான் லூகாஸ், ஆனா என் அண்ணனையும் மாத்த ஒரு ஆள் வரும்னு நான் நெனச்சது இல்லை. இப்ப பாரு அவன் ஒரு பொண்ண லவ் பண்றான், ம்ம் இந்த பிரச்சினை எல்லாம் முடிஞ்ச உடனே அவன் குடும்பஸ்தன் ஆகிருவான். நாமதான் சிங்கிலா சுத்தப்போறோம்"
நெஞ்சில் கையை வைத்து ஓவர் ஆக்டிங் செய்து அகி பேசி சிரிலை கிண்டல் செய்தான். பாவம் அவன் அறியப்போவதில்லை அவன் அண்ணனுக்கு முன் இவன் குடும்பஸ்தனாய் மாறப்போவது.
இப்படி ரகளையாய் இவர்கள் பயிற்சி முடிய, தன் அறைக்கு வந்து அக்கடா என படுத்த அகஸ்டஸின் மனது முழுவதும் அவன் சாயாதான்.
கல்லூரியில் இன்டர் காலேஜ் பெஸ்ட் இன்னும் இரண்டு நாளில் நடக்க இருக்க, அகியால் வகுப்புக்கு கூட போக முடியவில்லை. வேலை கழுத்தை நெறித்தது. முன்பெல்லாம் வார இறுதியில் யாரும் அறியாமல் தன்னை மறைத்துக் கொண்டு சாயாவின் ஹாஸ்டலுக்கு சென்று அவளை பார்த்து வருவான். இப்போது இந்த பயிற்சியால் அதுவும் பாழாய் போனது.
'இன்னும் ஒன் வீக் மட்டும் வெயிட் பண்ணு சாயா செல்லம், மாமா ஓடி வந்திடுறேன்'
ஆசையாய் தனக்குள் சொல்லிக் கொண்ட அகி, இனிமேல் கொஞ்சமும் தாமதிக்காது அவளிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டான்.
இங்கே வீட்டில் சாயாவை எண்ணி அகி தடுமாற, அங்கே கல்லூரி ஹாஸ்டலில் இருந்த சாயாவின் மனதிற்குள்ளும் நம் அகஸ்டஸின் நினைவுதான்.
'ரெண்டு மாசமா வெறிக்க வெறிக்க பாத்த மனுஷன், இப்ப ஒரு மாசமா எங்க போனாருன்னே தெரிலையே. என்னதான் காம்படீஷன் இருந்தாலும் வீக் எண்ட் ஹாஸ்டல் பக்கம் வருவாரே. என்னவா இருக்கும்?'
அகி ஹாஸ்டல் பக்கம் சுற்றுவது யாருக்கும் தெரியாது என நினைத்திருக்க, அதையும் சாயா பார்த்திருந்தாள்.
'ஒருவேள சார் எதார்த்தமா பாக்குறத நாமதான் தப்பா எடுத்துக்கிட்டமோ. ஆண்டவா ஒன்னும் புரியலையே'
பலவாறு யோசித்த சாயா மிகவும் குழம்பித்தான் போனாள். வகுப்பில் சாயாவை பார்த்து பார்த்து அவள் மனக்கதவை தட்டியவன், இப்போது பார்க்காமல் இருந்து அவளது மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டான்.
-தொடரும்

Last edited: