GG writers
Moderator
அத்தியாயம் - 6
அன்று லஞ்ச் பிரேக்கில் காதலை சொல்ல வந்து முடியாமல் போனதில் இருந்து மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்தான் அகஸ்டஸ். அதன்பிறகு என்னென்னவோ தில்லாலங்கடி வேலைகளை பார்த்துவிட்டான், எங்கே அகஸ்டஸால் ஐ லவ் யூவில் உள்ள ஐயை கூட சொல்ல முடியவில்லை. இதையெல்லாம் அவன் நண்பன் ஐநரிடம் புலம்ப மட்டுமே முடிந்தது.
வார இறுதி அன்று, எப்போதும்போல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் நாலு பரம்பரையின் வாரிசுகளும். அதுவும் சோல் ஆஃப் ஹார்ட் கல் அவர்களை எந்த சக்தி கொண்டு உருவாக்கியதோ அந்த சக்தியை வைத்து பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதை அவர்களே அறியாததுதான் விந்தை.
இவர்கள் பயிற்சி செய்வதை இதுவரை நன்றாக கவனித்திருந்த எடோனிஸ், அனைவரின் முன் வந்தார்.
"பசங்கலா டிரைனிங் எப்படி போகுது" பொதுவாக அவர் ஆரம்பிக்க, நல்லா போகுது என்றனர் ஐந்து பேரும்.
"சரி இன்னைக்கு நல்லா பிராக்டிஸ் பண்ணிட்டு வீட்டுக்கு போங்க. அடுத்த வாரம் உங்களுக்கு போட்டி இருக்கு. எல்லாரும் தயாரா இருங்க, அப்புறம் போட்டி உங்களுக்குள்ள இல்ல நாலு பரம்பரைல இருந்து சில சக்திவாய்ந்த விசார்ட்ஸ வர சொல்லி இருக்கோம். அவங்க கூட தான் நீங்க போட்டி போட போறீங்க"
திடீரென எடோனிஸ் பெரியதாய் ஒரு குண்டை போடவும்
"டேடி உண்மையவா சொல்றீங்க" சிரில் உறுதிபடுத்த கேட்டான்.
"ஆமா மை சன். நீங்க அஞ்சு பேரும் ஒரு டீமா சேர்ந்து உங்க எதிர்ல வரப்போற அஞ்சு பேர தோக்கடிக்கனும். முடிஞ்ச அளவு உங்க சக்திகள் என்னென்னு நல்லா தெரிஞ்சிக்கிட்டு அதுல உங்கள ஸ்ட்ராங் பண்ணிக்கங்க. இதெல்லாத்தையும் விட முக்கியமான விஷயம் உங்களுக்குள்ள இருக்க ஒற்றுமை, அதை மட்டும் எப்பவும் மறந்துறாதீங்க. அப்புறம் யாரு வரப்போறாங்கனுலா சொல்லமுடியாது பசங்கலா. பிராக்டிஸ கண்டினியூ பண்ணுங்க பாய்"
எடோனிஸ் தர வேண்டிய தகவலை மட்டும் தந்துவிட்டு கிளம்பிவிட ஐவருக்கும் இந்து புது சவாலை நினைத்து குதூகலமாய் இருந்தது. பாவம் ஐந்து பேருக்கும் எங்கே தெரியப்போகிறது இவர்கள் வரும் அந்த மந்திரவாதிகளிடம் ஊமை அடி வாங்கப்போவதை.
"கைஸ் டேடி சொன்னத கேட்டீங்கல, நாம ஒன்னா சேர்ந்து இந்த போட்டியில வின் பண்ணனும். சோ இனி தனியா பிராக்டிஸ் பண்ணாம சேர்ந்தே பிராக்டிஸ் பண்ணுவோம்"
எடோனிஸ் சென்றவுடன் அனைவரிடமும் பேசிய சிரில் "அதுக்கு முன்ன நாம எதுல ஸ்ட்ராங்னு மொதல்ல கண்டுபிடிக்கனும். அதுக்கு ஒன்-ஆன்-ஒன் மேட்ச் வச்சுக்கலாம். அதை வச்சு ஒருத்தங்களோட பலம் என்ன பலவீனம் என்னன்னு தெரிஞ்சாதான் எதிர்ல வரப்போறவங்கலோட நாம மோத முடியும்"
ஒரு கல்லூராயின் பிரின்சிபாலாக மற்றவர்களை வேலை வாங்கியது இப்போது சிரிலுக்கு பெரிதும் உதவியது. அவனின் குரலில் இப்போது தெரிந்த கம்பீரம் அனைவரையும் வேறெதுவும் கேட்காமல் அப்படியே பின்பற்ற சொன்னது. யாரும் சொல்லாமலே அந்த குழுவின் தலைவன் பொறுப்பில் வந்துவிட்டான் சிரில்.
அன்று பயிற்சி முடிந்தபின் மற்ற நால்வரையும் அழைத்த சிரில் "கைஸ் நெக்ஸ்ட் வீக் எண்ட் நமக்கு போட்டின்னு டேடி சொன்னாரு, ஆனா நாம சேர்ந்து பிராக்டிஸ் பண்ணவே இப்பதான் ஆரம்பிச்சிருக்கோம். நமக்குள்ள கோ-ஆர்டினேஷன் ரொம்ப கம்மியா இருக்கு, இதோட அடுத்த வாரம் போட்டிக்கு போனா நாம அடி வாங்கிட்டுதான் வருவோம்" சிரில் நிறுத்த
"அதுக்கு என்ன பண்றது சிரில். இனி வீக் டேஸ் நமக்கு வேலை இருக்குல்ல" அகஸ்டஸ் இடையிட்டான்.
"ஆமா எல்லாருக்குமே வேலை இருக்கு, அதான் ஒரு ஐடியா பண்ணியிருக்கேன். எல்லாம் இந்த வீக் எங்க வீட்ல ஸ்டே பண்ணிக்கோங்க. மார்னிங் அப்புறம் வேலைய முடிச்சிட்டு ஈவ்னிங் இங்க வந்து பிராக்டீஸ் பண்ணலாம். எல்லாருக்கும் ஓகேவா"
சிரில் சொல்வது அகஸ்டஸை தவிர்த்து மற்ற மூவருக்கும் ஆதலால், அவர்கள் சிறிது நேரம் யோசித்தனர். அவர்களுக்கும் இது சரியெனபட இங்கே வர ஒத்துக் கொண்டனர்.
"ஆன் சிரில் என்னால நாளைக்கு மார்னிங் வர முடியாது"
சைடிலிருந்து அகஸ்டஸ் குரல் கொடுக்க "ஏன்டா, பிராக்டீஸ் வரதுல உனக்கு என்ன பிரச்சினை" சிரில் கடுகடுத்தான்.
"ப்ச் மறந்துட்டியா நாளைக்கு என் கிளாஸ் பசங்கல ஃபீல்ட் டிரிப் கூட்டிப்போறேன். நாங்க போறது மைசூர் பக்கம். ஏர்லி மார்னிங் போயிட்டு ஈவ்னிங் லேட்டாதான் வருவோம். உன்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுதானே எல்லா அரேஜ்மெண்டும் பண்ணுனேன்"
அகஸ்ட்ஸ் சொன்னதற்கு பிறகே சிரிலுக்கும் அந்த நினைவு வர ஒருநாள் அவனுக்கு மட்டும் விலக்கு அளித்தான். ஆனால் மற்றவர்கள் கட்டாயம் பயிற்சிக்கு வரவேண்டும் என்றுவிட்டான்.
---------------------------
"இன்னைக்கு இந்த பீல்ட் டிரிப்ப யூஸ் பண்ணி என் காதலை உன்கிட்ட சொல்ல போறேன் சாயா. அதுக்கு நீயும் ஓகே சொல்லதான் போற பாரு"
கண்ணாடியின் முன் தலையை வாரியபடி தனக்கு தானே பேசிய அகி, உற்சாகத்துடன் கிளம்பினான். காலை மூன்று மணிதான் ஆகிறது, ஆனால் இப்போது கிளம்பினால் மட்டுமே அங்கு சரியான நேரத்திற்கு போய் சேர முடியுமென அனைத்து மாணவர்களையும் ஒன்று திரட்டியிருந்தான்.
எல்லா மாணவர்களும் வந்ததை உறுதிபடுத்திக் கொண்டு "ஓகே ஸ்டூடன்ட்ஸ் எல்லாருமே அசம்பல் ஆகியாச்சுதானே, சீக்கிரம் பஸ்ல ஏறுங்க குவிக்"
எல்லோரையும் பஸ்ஸினுள் அடைத்து பயணத்தை ஆரம்பித்தனர். காலை நேரம் நன்கு விடிந்து மணி ஒன்பது ஆகும் போதெல்லாம் மாணவர்கள் அந்த அரண்மனை வாயிலில் நின்றிருந்தனர்.
"ஓகே பசங்கலா எல்லாரும் வந்தாச்சா. மொத்தமா ஐம்பது பேர் இருக்கீங்க, ஒரு ஐஞ்சு ஐஞ்சு பேரா முதல்ல டீம் சேந்துக்கோங்க. வாங்க மீதிய உள்ள போய் பாக்கலாம்"
மாணவர்களை குழுக்களாக பிரித்து அனைவரையும் உள்ளே அழைத்து சென்றான். நல்ல பிரம்மாண்டமான இருந்தது அந்த மைசூர் அரண்மனை. இன்னும் மக்களின் பார்வைக்காக மிகவும் அழகாய் அரசு பராமரித்து வருகிறது. அந்த அரண்மனையின் அழகு, கலைநயம் கட்டிடம் கட்டியிருந்த பாங்கு என அனைத்தும் அந்த கட்டிடக்கலை மாணவர்களை வெகுவாக ஈர்த்தது.
"கைஸ் வேடிக்கை பாத்தது போதும் எல்லாம் கொஞ்சம் கவனிங்க, இந்த பேலஸ் பத்தி ஒரு சின்ன இண்ட்ரோ. இந்த பேலஸ் வடியர் டைனாஸிட்டிய சேர்ந்தது. இந்த பேலஸ டிசைன் பண்ணியவரு ஹென்றி இர்வின், கிட்டத்தட்ட பதினைந்து வருஷமா இந்த கட்டிடத்தை கட்டியிருக்காங்க.
அண்ட் நீங்க இதுல நோட் பண்ண வேண்டிய முக்கியமான பாய்ண்ட் என்னன்னா இதுல இருக்க ஸ்டைல். யாருக்காவது அது என்ன ஸ்டைல்னு தெரியுமா"
பேசிக்கொண்டே தன் மாணவர்களிடம் அகி கேட்டு நிறுத்த, ஒருவர் கூட வாயை திறக்கவில்லை. அதை கண்டு கடுப்பான அகி
"என்ன பசங்கலா எல்லாரும் சைலண்டா இருந்தா என்னடா அர்த்தம். போன வாரம் தானே தொண்ட தண்ணி வத்த கிளாஸ் எடுத்தேன். யாராவது சொல்லுங்கடா"
அகஸ்டஸ் முறைத்தபடி கேட்டும் கூட எல்லோரும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து வைத்தனரே தவிர பதில் தரவில்லை.
"ஆக ஒருத்தரும் கிளாஸை கவனிக்கலை, இருக்கட்டும் அதை அப்புறம் பாத்துக்கிறேன். இப்பயாவது நான் சொல்றதை கவனிங்க. இந்த பேலஸ் கட்டியிருக்கிறது முழுசும் காத்திக் ஸ்டைல் புரிஞ்சுதா"
அகஸ்டஸ் சொல்லி நிறுத்திய நேரம் வேகவேகமாக மாணவர்கள் நோட்ஸை எடுத்துக்கொண்டனர். அதோடு அவர்களிடம் தன் பேச்சை முடித்துக் கொண்ட அகி, அவர்களை குழு குழுவாக பிரிந்து சென்று அரண்மனையை சுற்றி பார்த்து வர சொன்னான்.
"பசங்கலா நல்லா சுத்தி பாத்து நோட்ஸ் எடுத்துக்கோங்க. எதாவது டவுட்ஸ் இருந்தா நோட் பண்ணி வச்சுக்கோங்க, நாளைக்கு கிளாஸ்ல டிஸ்கஸ் பண்ணிப்போம். அப்புறம் இன்னைக்கு நீங்க இங்க பாக்குறத வச்சு எனக்கு ஒரு அசைமெண்ட் எழுதி தரப்போறீங்க.
அதனால விளையாட்டா இருக்காதீங்க, அண்ட் கரெக்டா பன்னென்டு மணி வரைதான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள சுத்தி பாத்துட்டு அகைன் இதே இடத்துல அசெம்பிள் ஆகி இருக்கனும். ரொம்ப சேட்டை பண்ணாதீங்க கேர்புல்லா இருங்க அதே நேரம் நல்லா ஜாலியா சுத்தி பாருங்க. கோ அண்ட் என்ஜாய் கைஸ்"
தேவையான அறிவுரைகளை தந்து மாணவர்களை சுற்றி பார்க்க அனுப்பிவிட்ட அகஸ்டஸ், அவன் ஒருபுறம் அரண்மனையை சுற்றிப்பார்க்க கிளம்பினான். அவன் சொன்னது போலவே சமத்தாக அரண்மனையை சுற்றி தேவையான நோட்ஸ் போட்டோ அனைத்தையும் எடுத்துக் கொண்ட மாணவர்கள், அகஸ்டஸ் சொன்ன நேரத்திற்கு எல்லாம் அவன் சொன்ன இடத்தில் வந்து நின்றுவிட்டனர்.
எல்லா மாணவர்களும் சரியாக இருக்கிறார்களா என சரிபார்த்துக் கொண்டு, அப்படியே மதிய உணவிற்கு அழைத்து சென்றுவிட்டான். சாப்பிட்டு முடித்ததும் அடுத்து காலேஜுக்கு செல்வது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்ததைப் போல் இவர்கள் வந்த வாகனம் சென்னையை நோக்கி புறப்பட்டது.
'ஹப்பாடா வந்த டிரிப் நல்லபடியா முடிஞ்சது, இந்த டைம் எந்த பிரச்சனையும் வரல. பசங்க நல்லா கோ-ஆப்பரேட் பண்ணிட்டாங்க'
இவ்வாறு எண்ணி பெருமூச்சு விட்ட அகஸ்டஸுக்கு இப்போதுதான் ஒரு விஷயம் மூளையில் உரைத்தது. மாணவர்களை பத்திரமாக அழைத்து சென்று வரவேண்டும் என்று கவனத்துடன் இருந்ததில், இந்த டிரிப் முடியும்முன் எப்படியாவது தன் காதலை சாயாவிடம் சொல்ல வேண்டும் என்று அவன் நினைத்திருந்ததை மறந்தே விட்டான்.
அது இப்போது நினைவு வர தன்பின் அமர்ந்திருந்த மாணவர் கூட்டத்தில் அவன் ஆசை காதலியான சாயாவை தேடினான். சாயா அவள் தோழி பிரீத்தாவிடம் என்னவோ பேசி சிரித்துக் கொண்டிருக்க, பாவம் அகியின் முகம்தான் புஸ்ஸென காற்று போன பலூனாக தொங்கி போனது.
'போச்சா இன்னைக்கும் அவ்வளவுதானா. ஏன் எனக்கு மட்டும் இப்படி.. ஒரு லவ்வ சொல்லதானோ ஆசைப்பட்டேன்'
அகஸ்டஸ் மனது கீழே விழுந்து கதறி அழுக, அதை சமாதானம் செய்யக்கூட அவனால் முடியவில்லை.
'மறுபடியும் எப்ப வேற சான்ஸ் கிடைச்சு, நான் எப்ப லவ்வ சொல்லி வெளங்குச்சு' அகியின் மனது சலித்துக் கொண்டது. ஆனால் இனி வேறு வழியும் இல்லையே என அமைதியாய் அமர்ந்தவன் அப்படியே தூங்கிப்போனான்.
மதியம் மூன்று மணி இருக்கும் தன் தூக்கத்திலிருந்து அகஸ்ட்ஸ் மெல்ல எழுந்து ஜன்னலின் வழியே வெளியே பார்த்தான். இவர்கள் சென்ற பேருந்து ஒரு காட்டின் நடுவே நிற்க இவனுடைய மாணவர்கள் எல்லோரும் கீழே இறங்கி நின்றிருந்தனர்.
'என்ன ஆச்சு ஏன் வண்டி நிக்குது, சுத்தி காடா வேற இருக்கு' யோசித்த அகஸ்டஸ் என்ன நடந்ததென டிரைவரிடம் சென்று கேட்டான்.
இவர்கள் சென்ற மெயின் ரோட்டில் எதோ விபத்து நடந்திருக்க வண்டியை வேறுபக்கம் போலீஸ் திருப்பிவிட்டிருந்தனர். அந்த வழியில் வாகனம் சென்றுக் கொண்டிருந்த நேரம், இடையில் இந்த இடம் வந்தவுடன் வண்டி தானாகவே நின்றுவிட்டதென கூறினார்.
அகஸ்டஸ் கீழே இறங்கி பார்க்க, இவர்கள் எதிரே காட்டின் இருள் சூழ வானை முட்டி நிற்கும் மரங்களுக்கு இணையாய் நின்றிருந்தது அந்த மாளிகை. மாணவர்கள் எல்லாம் அந்த மாளிகையை தான் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இவர்கள் வண்டிக்கு முன்னாலும் சரி பின்னாலும் சரி வேறு ஒரு வண்டிக்கூட வரவில்லை.
'என்னவோ இங்க தப்பா இருக்கு. இங்க இனிமேலும் இருக்கிறது ஆபத்து'
அகியின் மனது அடித்து சொல்லியது. இதற்கு மேல் இங்கே இருந்தால் ஆபத்து என்றுணர்ந்து டிரைவர் அசந்த நேரம் "எக்ஸ்சார்சியோ" என்றான்.
பேருந்தை இப்போது டிரைவர் இயக்க அது பழையபடி ஓடியது. உடனே மாணவர்களை வண்டியில் ஏற்றி வண்டியை கிளப்ப வைத்தான் அகி. இவர்கள் வண்டி சிறிது தூரமே சென்றிருக்க, பேருந்தினுள் சலசலப்பு. என்னவென அகஸ்டஸ் அவர்களிடம் கேட்க,
"சார் சாயா சாயாவ காணோம் சார்.. அவ பஸ்ல ஏறல போல சார்"
மாணவர்கள் பதறியடித்து சொல்ல, அகஸ்டஸின் மனம் பந்தையக் குதிரையின் வேகமெடுத்தது தன் உயிரின் மீதியை எண்ணி.
-தொடரும்