வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இருள் பூவின் ஒளிச்சுடரே! - 8

GG writers

Moderator
அத்தியாயம் - 8

மைய காட்டின் பயங்கர அமைதிக்கு சற்றும் சளைக்காது பூரண அமைதியை தத்தெடுத்து இருந்தது அந்த அறை. அந்த அறையின் நடுவே நின்றிருந்த அகஸ்டஸையும் அவன் எதிரே அச்சத்தில் கண்களை விரித்து நின்றிருந்த சாயாவையும் அந்த அமைதி ஆக்கிரமித்திருந்தது.

"என்ன சாயா மேடம், சாரி சாரி லைரா. நான் சொன்னது சரிதானே"

அகஸ்டஸ் அவளின் உண்மையான பெயரை சரியாக சொல்லி நிறுத்த, பயத்தில் படபடவென வந்தது சாயா சாரி லைராவுக்கு. (சாயா இனி லைராவாக வருவாள்)

"சார் நீங்க என்ன பேசுறீங்க.. எனக்கு ஒன்னும் புரியல. யாரு இந்த லைரா" மனதிலிருந்த பயத்தை மறைத்துக் கொண்டு மெல்ல லைரா கேட்டாள்.

'லைரா குட்டி எக்காரணம் கொண்டும் உன்னோட உண்மையான பேரை யாருக்கும் சொல்லிடாத. ஊரு உலகத்தை பொறுத்தவரை நீ சாயா புரியிதுல்ல'

கல்லூரியில் சேர வரும் போது அவள் தாத்தா ஜான் சொன்ன வார்த்தைகள் இப்போதும் அவள் காதுகளில் ஒளிப்பதைப்போல் இருந்தது.

லைரா கேட்டதற்கு மெல்ல புன்னகை சிந்திய அகி

"பாருடா இவ்ளோ நேரம் உன் வாயில இருந்த முத்து உதிந்திருச்சு போல" நக்கலடித்த அகி

"இங்க பாரு லைரா நீ யாரை வேணாலும் ஏமாத்தலாம்‌, ஆனா நான் அகஸ்டஸ். உன்னை ரெண்டு வயசுலையே பாத்தவன், என்னை உன்னால ஏமாத்த முடியாதுமா"

விளையாட்டாய் சொல்வது போல் இருந்தாலும், அகியின் கண்களில் தெரிந்த தீவிரம் அவன் சொல்வது உண்மை என்று சொல்லாமல் சொல்லியது. ஆனாலும் எதையும் முகத்தில் காட்டாமல் அகி பேசுவதை இன்னும் புரியவில்லை என்பதை போலவே பார்த்திருந்தாள் லைரா.

"இல்ல எனக்கு நீங்க பேசுற எதுவுமே புரியலை"

பாவம் போல் அவள் கேட்டு வைக்க, அவள் கைகளை பிடித்து தன்னுடைய கைக்குள் வைத்த அகி

"பதினாறு வருஷத்துக்கு முன்ன உன்னோட ரெண்டு வயசுல உன் லைஃப்ல ஒரு பெரிய விஷயம் நடந்துச்சு, அதைப்பத்தி உன் தாத்தா உன்கிட்ட சொல்லாம இருக்க வாய்ப்பே இல்ல"

லைராவின் கண்களை பார்த்தபடி மிக மென்மையான குரலில் அகி கேட்க, அவன் கண்களில் சிக்குன்ட லைர்வும் ஆம் என தலை அசைத்தாள்.

"பரவாயில்லையே உடனே ஒத்துக்கிட்ட" என சிரித்தவன் "உனக்கு என்ன நடந்ததுன்னு சொன்ன உன் தாத்தா உன்ன காப்பாத்துன இந்த அகிய பத்தி உன்கிட்ட எதுவுமே சொல்லையா"

லைராவிடம் விளையாட்டு போல் கேட்டாலும் அவன் கேள்வியின் சாராம்சம் புரிந்ததும், அவளின் கண்கள் இரண்டும் ஆச்சரியத்தில் சாசர் போல் விரிந்தநு. அவள் கண்கள் விரிந்த அழகில் மொத்தமாக விழுந்த அகி, அவள் கழுத்தின் அருகே சென்று ஆழ்ந்து தன் மூச்சை இழுத்துவிட்டு அவளை நெளிய வைத்தான்.

"என்ன சார் பண்றீங்க.."

அவள் கைகள் அவனுடைய கைகளில் சிக்கிதவிக்க, இப்போது அவனுடைய மூச்சு காற்று வேறு அவளுள் சென்று என்னவோ செய்தது.

"என்ன பண்றனா.. பதினாறு.. முழுசா பதினாறு வருஷம் நான் காத்திருந்தேன்டி இந்த லாவேண்டர் பொண்ணுக்காக.."

போதை ஏறிப்போன குரலில் பேசிய அகிக்கு, அவனுடைய பதினாறு வருட தவம் இன்று அவன் கண்முன் நனவாய் நின்றதில் சொல்ல முடியா ஆனந்தம். அகஸ்டஸ் உளறுவதை புரியாது லைரா முழிக்க

"என்னடா இவன் என்னென்னவோ உளறிட்டு இருக்கான்னு பாக்குறியா. பதினாறு வருஷத்துக்கு முன்ன உன்ன நான் அந்த இடத்தில இருந்து காப்பாத்தி உன் தாத்தாகிட்ட விட்டேன். அன்னைக்கு ஆரம்பிச்சதுடி எல்லாம். உன்மேல‌ வந்த அந்த லாவேண்டர் வாசனைல இருந்து உன் அந்த கண்ணு வரை ஒரு ஒரு விஷயத்தையும் மறக்க முடியாம நான் தவிச்சிருக்கேன்டி.

ஒரு வயசுக்கு மேல நீதான் என் வாழ்க்கைனு முடிவு எடுத்து உன்ன தேடி வந்தேன். ஆனா உன் தாத்தா உன்ன கூட்டிட்டு வேற இடத்துக்கு போயிட்டாரு. ஆனாலும் உன்னை தேடுறதை நான் விடல. நீ என் கிளாஸ்லையே வந்து சேர்ந்து என் கண்ணு முன்னாடி நிக்கும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா. அப்படியே உன்ன எங்கையாவது கண்காணாத இடத்துக்கு தூக்கிட்டு போயிரலாம்னு என் மூளை கெடந்து துடிச்சது எனக்குதான்டி தெரியும். உன் பேர வேனா நீ மாத்தி இருக்கலாம், ஆனா உன் மேல வந்த இந்த வாசம் நீ யாருன்னு எனக்கு காட்டி குடுத்திருச்சுமா"

மூச்சை இழுத்து மீண்டும் தன் சுவாச குழாயை நிரப்பிய அகஸ்டஸ், ஆழியைப்போல் தன்னை விழுங்கும் அந்த விழிகளில் தன்னை தெரிந்துதான் தொலைத்தான்.

"இந்த வாசனையை என் வாழ்நாள்ல மறக்க மாட்டேன்டி. லைரா இந்த பேரை என் மனசுக்குள்ள எத்தனை லட்சம் தடவை சொல்லிப் பாத்திருப்பேன் தெரியுமா. அவ்ளோ லவ் வச்சிருக்கேன்டி உன்மேல, தெரியுமா உனக்கு. உனக்கு எப்படி செல்லம் தெரியும் நான்தான் மறந்துட்டேன்"

எதையோ முடிவு செய்தவன்போல் மூச்சை இழுத்து விட்டவன்

"இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ நான் உன்ன லவ் பண்றேன்டி ரொம்ப ரொம்ப. ஐ லவ் யூ சோ மச் பேபி"

ஹஸ்கி வாய்சில் தன் மனதில் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த காதலை இவ்வளவு நேரம் அவளை காண முடியா ஏக்கம், இத்தனை ஆண்டுகள் லைரா என்ற பெண் மீது அவன் கொண்ட ஆசை காதல் எல்லாம் சேர்த்து கோர்வையாக கொட்டி தீர்த்தான் அகஸ்டஸ்.

எப்படி தன் காதலை சொல்வது என பலநாள் யோசித்து பலவிதமாய் முயற்சி செய்தும் தோல்வி அடைந்திருந்த அகஸ்டஸ், இப்போது எந்தவொரு முன்னேற்பாடும் இன்றி மனதில் தோன்றிய காதலை எளிமையாக சொல்லி நின்றான்.

தன் புரபஸர் எதோ தன்னை சும்மா பார்க்கிறார்‌, இல்லை இது அனைவருக்கும் பருவத்தில் வரும்‌ சாதாரண காதல் போல் என எண்ணியிருந்த லைராவுக்கு அகி பேசியிருந்ததை கேட்டு மனதிற்குள் பெரும் பூகம்பம். இப்படி ஒருவன் தன்னை பதினாறு வருடங்களாக நினைத்துக் கொண்டிருப்பானென அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

இத்தனை ஆண்டுகள் அன்பு செலுத்த யாரும் இல்லாது, தன் தாத்தாவின் துணையை மட்டுமே கொண்டு வாழ பழகியிருந்த லைராவுக்கு இந்த உணர்வுகள் எல்லாம் மிக புதிதாக இருந்தது.

லைராவின் நெற்றியின் மீது தன் நெற்றியை அழுத்தியபடி, அவள் கைகளை பிடித்துக்கொண்டு உணர்ச்சி பெருக்கில் பெரிய பெரிய மூச்சுகளை விடுத்து நின்றிருந்தான் அகி. அவனின் இந்த பேச்சு லைராவின் மனதில் புதுவித ஹார்மோன்களை எல்லாம் தூண்டிவிட்டது.

அவளின் அமைதி அகிக்கு இப்போதுதான் உரைக்க தன் தலையை பின்னால் நகர்ந்தி அவளை பார்த்தான். குழப்பத்தில் அவள் முகம் சுருங்கியிருந்தது.

மெல்ல லைராவின் கையை விடுத்து அவளின் முகத்தை தன் கைகளுக்குள் கொண்டு வந்தவன் "ஏன்டி எதுவும் பேச மாட்ர, என்ன குழப்பம். என்னய‌ பிடிக்கலையா" என்றான்.

அதற்கு ஆம் என்றோ இல்லே என்றோ தலை அசைக்காது லைரா நிற்க, அவளின் அலைப்பாய்ந்த கண்களை கண்டு சிறிது பாவமாக போனது அகிக்கு.

"லைரா இங்க பாரு.. என்ன பாருடி.. பயமா இருக்கா.." அவளின் கவனத்தை தன்புறம் திருப்பியவள், மெல்ல அவள் கண்ணத்தை வருடியபடி

"லைரா உனக்கு நடந்த விஷயம் எல்லாம் ரொம்பவே கொடுமையானதுதான், அதை நான் இல்லைன்னு சொல்லலை. அது ஏன் நடந்துச்சு எதுக்கு நடந்துச்சு, இது எதுவும் எனக்கு தெரியாது. உன்னை யாரு அந்த சிக்கல்ல மாட்டிவிட பாத்தாங்கனும் எனக்கு தெரியாது. ஆனா ஒன்னு ஏழு வயசுலையே உன்ன அந்த இடத்துல இருந்து காப்பாத்தி தூக்கிட்டு வர தெரிஞ்ச எனக்கு, இந்த இருபத்தஞ்சு வயசுல மொத்த உலகமே உனக்கு எதிரா வந்தாலும் அவங்கல எதிர்த்து உன்னை காப்பாத்த தெரியும் அதுமட்டும் ஞாபகம் வச்சுக்க"

அகஸ்டஸின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்டதில் லைராவின் கண்கள் தானாக கண்ணீரை சிந்தியது.

'இவ்வளவு நாள் நான் தனியா தவிக்கும் போதுலாம் நீ எங்கடா இருந்த' அவளின் மனம் பூரிப்பில் கேட்டு கொள்ள

"இப்ப சொல்லு நான் உனக்கு ஓகேவா" மீண்டும் கேட்டான் அகி.

'ஆம்' என வேகமாக தலை அசைத்த லைரா "எனக்கும் உங்கள பிடிச்சிருக்கு" என்றாள் மென்மையாக.

"ஆனா என்.. என் பேரைக்கூட உங்களால வெளிய சொல்ல முடியாது, அ..அப்புறம்"

லைரா சொல்ல ஆரம்பிக்க, அவள் முகத்தை தன் அருகே இழுத்தவன் "பரவால்ல" என மெல்ல ஆனால் அழுத்தமாக நெற்றியில் முத்தமிட்டன்.

"என் பிரச்சினை என்னன்னு எனக்கே தெரியாது. வாழ்க்கை பூரா ஒருவித பயத்துலதான் நீங்க வாழனும்" என்க

அவள் கண்ணம் இரண்டிலும் முத்தங்களை தந்தவன் "இருக்கட்டும்" என்றான்.

"நீங்க என்ன தேர்ந்தெடுந்தா உங்க கூட இருக்கவங்கல இருந்து, இந்த உலகத்தில பல பேர் உங்க எதிரியா நிப்பாங்க" தன் கவலையை பகிர்ந்தாள் லைரா.

"இவ்ளோதானா இல்ல இன்னும் சொல்ல வேற எதுவும் காரணம் வச்சிருக்கியா. இங்க பாருடி நீ என்ன காரணம் சொன்னாலும் நீதான் எனக்கு, நான்தான் உனக்கு"

அழுத்தம் திருத்தமாக சொன்னவன் அவன் காதலை இன்னும் அவளுக்கு புரிய வைக்கும் பொருட்டு, அவள் தன் காதலை ஒத்துக்கொண்ட தைரியத்தில் அவள் இதழ்களை நெருங்கினான். மெல்ல அவள் இதழ்களை கவ்விய அகி, அருகில் இருந்த சுவற்றில் அவளை சாய்த்து தன் கைக்குள் அவளை கொண்டு வந்தான். தாங்கள் இருக்கும் சுற்றம் சூழல் மறந்து அவளின் இதழிலில் மட்டும் தன்னை தொலைத்து, முத்தமிடுவது எப்படி என தன் மாணவிக்கு பயிற்றுவித்தான் அந்த ஆசிரியன்.

எவ்வளவு நேரம் அந்த முத்தயுத்தம் நீடித்ததோ, அவர்கள் இருந்த அறை ஜன்னலில் எதோ ஒரு பறவை வந்து அடித்த சத்தத்திலே இருவரும் தன்னிலை வந்து பிரிந்தனர். அகியால் வெட்கத்தில் முகம் சிவந்த லைராவோ அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள, கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது

அவர்களுக்குள் நிலவிய அந்த மௌனம் கூட ஒரு சுக உணர்வை தர, தன் நெஞ்சில் சாய்ந்து இருந்தவளை தான்னோடு சேர்த்து நன்றாக அணைத்து கொண்டான் அகஸ்டஸ்.

"லைரா..‌ நீ ஓகேவா"

சில நிமிடம் கழித்து சற்று தெளிந்துவிட்டு அகி கேட்டதற்கு "ம்ம்" என்று மட்டும் லைரா முணுமுணுக்க

"அப்ப நாம கெளம்பலாம். இங்க இருக்கிறது நமக்கு ஆபத்து"

அவன் என்னதான் ரொமான்ஸ் செய்யும் மூடில் இருந்தாலும் அவர்கள் இருக்கும் இடம் ஒன்றும் அவ்வளவு பாதுக்காப்பானது இல்லையே. எனவே உடனே வெளியேற முடிவெடுத்தான் அகி.

அவர்கள் இருந்த கதவை திறந்து இருவரும் வெளியே வந்த சமயம்

"அதுக்குள்ள எங்க போறீங்க.."

என்றொரு குரல் கேட்க, அதிர்ந்த இருவரும் குரல் வந்த திசையை பார்க்க, கதவின் அருகே இருந்த சுவற்றில் சாய்ந்து இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன். அவன் சற்று நேரத்திற்கு முன் அந்த மந்திரவாதி கூட்டத்தில் எல்லோருக்கும் தலைவன் போல் வந்தவனே.

'ஐயோ இவன் இன்னும் போகலையா. ஆண்டவா லைரா மேல இருந்த ஆர்வத்துல யாரு வரா போறான்னு கூட நான் கவனிக்காம இருந்திருக்கேன். இதுல உலகமே எதிர்த்து வந்தாலும் உன்ன காப்பாத்துவேன்னு டயலாக் வேற விட்டோமே'

காதல் போதையில் வெளியே ஒரு ஆள் வந்ததுக்கூட தெரியாமல் இருந்த தன்னை தானே திட்டிக்கொண்டான் அகி. இப்போது எப்படி இந்த புதியவனிடமிருந்து தப்பிப்பானோ!

-தொடரும்
 
Top