வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இருள் பூவின் ஒளிச்சுடரே! - 9

GG writers

Moderator
அத்தியாயம் - 9

"சார் இது யார் வீடு? இங்க எதுக்கு நாம வந்திருக்கோம்"

அந்த மாளைகையில் இருந்து புறப்பட்ட அகஸ்டஸ் லைராவை கல்லூரிக்கோ அல்லது அவன் வீட்டுக்கோ அழைத்து வராது, எதொவொரு காட்டு பங்களாவுக்கு அழைத்து வந்ததில் குழம்பிப்போய் கேட்டாள் லைரா.

அதற்கு சிறிய புன்னகையை தந்த அகி "லைரா இது என்னோட ஃபிரண்ட் வீடுதான். இந்த நைட் டைம் நாம போக வேணாம், இப்போ இங்க தங்கிட்டு காலைல காலேஜ்க்கு போயிடலாம். அப்புறம் காலேஜ்ல மட்டும் இந்த சார் எல்லாம் வச்சுக்கோ, இனி என்ன அகின்னுதான் கூப்டனும்" ஸ்டிர்க்டாய் சொல்லியபடி போய் அந்த வீட்டின் கதவை திறந்து என்னவோ அது தன் சொந்தக் வீடு என்பதைப் போல் உள்ளே நுழைந்தான் அகி‌.

அவன் பின்னால் வீட்டிற்குள் நுழைந்த லைராவுக்கு அங்கு அவள் பார்த்த காட்சியில் கண்கள் இரண்டும் வெளியே தெரிந்துவிடும் அளவு விரிந்தது. பின்னே இருக்காதா வீட்டின் நடுவே ஜம்மென அமர்ந்திருந்த ஐநர் கொரியன் சீரிஸை பார்த்துக்கொண்டு, ஒரு லிட்டர் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருந்தானே.

அதுவும் அவனின் இரண்டு கண்களும் டீவியில் வந்த ரொமான்ஸ் சீனை கண்டு மகிழ்ச்சியில் ரத்த நிறம் கொண்டிருந்தது. இது போதாதா அவன் ஒரு வேம்ப்பயர் என சொல்வதற்கு‌.

"சார் சார்.. உங்க பிரண்டு ஒரு வேம்பயரா?"

அகியின் கையை சுரண்டி பயத்தை மறைத்துக் கொண்டு கேட்டாள் லைரா.

"ப்ச் எத்தனை டைம் சொல்றது இந்த சார விட்டுட்டு என்னை அகின்னு கூப்பிடுனு"

என்னவோ அதுதான் இப்போது பெரிய பிரச்சினை போல் அகி சலித்துகொண்டான். அப்புறமே அவளின் கேள்வி நினைவு வர

"ஆமாமா என் பிரண்டு ஒரு வேம்பயர்தான். ஆனா பயப்படாத அவன் நம்ம பிளட் எல்லாம் குடிக்க மாட்டான். பையனுக்கு அவளோ திறமை இல்ல.."

அகி பேசி முடிக்கும்முன் ஒரு தலையனை அவனை நோக்கி பறந்துவர, லைராவை பார்த்துக்கொண்டிருந்தாலும் பறந்து வந்த தலையனையை சரியாக கேட்ச் பிடித்து, அதை தூக்கி எறிந்த தன் நண்பனை கண்டு பொய்யாய் ஒரு சிரிப்பை உதிர்த்தான்.

"சொல்லல பையனுக்கு திறமை பத்தாதுன்னு" என்றான் மீண்டும் அதை அவன்மீதே தூக்காப்போட்டு.

"என் வீட்ல என்னடா பண்ற. நிம்மதியா ஒரு டீவிய கூட பாக்க விடமாட்டேங்குறான்"

நேரில்தான் யாரிடமும் ரொம்ன்ஸ் செய்ய முடியவில்லை, டீவியிலாவது பார்க்கலாம் என பார்த்தால் அதுக்கு நடுவில் நந்திபோல் வந்ததுமின்றி, வந்ததும் வராததுமாக தன் இமேஜை டேமேஜ் செய்தால் பாவம் என்னதான் செய்வான் அவனும். அதுவும் ஒரு அழகான பெண்ணிடம் டேமேஜ் செய்ததில் கடுப்பான ஐநர் பொறுமினான்.

ஆனால் அது எதுவும் என் காதில் விழவில்லை என்பதை போல் கேசுவலாக லைராவுடன் உள்ளே வந்த‌ அகஸ்டஸ், ஐநரின் அருகே அக்கடா என்று அமர்ந்து விட்டான். இன்றைய நாள் முழுவதும் சுற்றிய களைப்புத்தான் அது.

தன் அருகே காலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் நண்பனை முறைத்து வைத்த ஐநர், அவன் அருகில் முழித்துக் கொண்டிருந்த லைராவை 'யார்ரா இது' என பார்த்திருந்தான். அவன் மனதில் தோன்றிய சந்தேகத்தை அப்படியே அகியிடம் கேட்டும் வைத்தான்.

ஐநர் கேட்கதான் காத்திருந்ததைப்போல் அவன் காதலி லைராவில் ஆரம்பித்து, இங்கு இவர்கள் ஒரு மாளிகைக்குள் சென்றது வரை சொல்லி முடித்தான் அகி.

"நீதான் அந்த பொண்ணு சாயாவா‌மா. புண்ணியவதி அவனுக்கு ஓகே சொல்லிட்டியா"

பாவமான முகத்தோடு ஐநர் கேட்டு நிறுத்த, ஆம் என தலை அசைத்தாள் லைரா. 'எதுக்கு கேக்குறாரு' என அவள் மனம் கேட்ட கேள்விக்கு, அவன் அடுத்து பேசியதில் பதில் கிடைத்தது.

"அப்பாடா இனி நான் தப்பிச்சேன். இனிமே விடிய விடிய போனை போட்டு 'மச்சான் என் ஆளு என்னை திரும்பி கூட பாக்கலைடா' அப்டின்னு புலம்ப மாட்டான்' என பெருமூச்சு விட்டான்.

"ஆமா மச்சான் அந்த மாளிகைக்குள்ள மாட்டுனீங்களே, எப்படிடா வெளிய வந்தீங்க"

அகஸ்டஸ் சொல்லி பாதியில் நிறுத்திய இடத்தை பற்றி தெரிந்துக்கொள்ள ஐநர் கேட்டதற்கு லைராவும் அகியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கண்கள் நாலும் தனியாய் எதுவோ செய்தியை பரிமாறிக்கொள்ள, இங்கு அகி தொடர்ந்தான்‌.

"அப்படி ஒன்னும் பெருசா நடக்கலை மச்சான். நாங்க வெளியே வரப்ப அங்க இருந்த ஆளை பாத்து ஷாக் ஆகிட்டேன். ஏன் கொஞ்சம் விட்டிருந்தால் நான் அவன்கிட்ட சண்டைக்கு கூட போயிருப்பேன். ஆனா லைராதான் நாங்க டூர் வந்த இடத்தில வழி தெரியாம இங்க வந்து மாட்டிக்கிட்டோம்னு அந்த செகண்ட் அவனை சாமர்த்தியமா சமாளிச்சு என்னைய வெளியே இழுத்துட்டு வந்துட்டா. நாங்க அந்த மாளிகைய விட்டு வெளியே வரும்போது நல்லா இருட்டி போச்சு. இந்த அன்டைம்ல வீட்டுக்கோ இல்ல காலேஜ்கோ இவளை எப்படி கூட்டிப்போறதுன்னு தான் உன் வீட்டுக்கு வந்துட்டேன்" என்றான் அகி.

அதன்பிறகு ஐநரிடம் களைப்பாக இருக்கிறது என சொல்லி இருவரும் ஐநர் காட்டிய அறைக்கு உறங்க சென்றனர். வெகு நேரம் தூக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டிருந்த லைரா அந்த தளத்தில் இருந்த பால்கனியின் பக்கம் வந்தாள். அங்கே இவளுக்கு முன் அகஸ்டஸ் வந்து தீவிர யோசனையில் அமர்ந்திருந்தான்.

அகிக்கு எப்படியும் அந்த தோராவின் மாளியை பற்றி தந்தையிடம் சொல்லியே ஆகவேண்டும் என தோன்றியது. ஆனால் இதில் லைராவும் சம்மந்தப்பட்டிருக்க, சொல்லலாமா வேண்டாமா என்றிருந்தது‌. வெகு நேரம் அமர்ந்து யோசித்தவனுக்கு, வேண்டாம் என்று தோன்றியது.

"சா.. அ.அகி"

அந்த நேரம் தன் பின்னே மெல்ல கேட்ட குரலில் திரும்பி பார்த்து அகி "என்னடி இன்னும் தூங்கலையா" என்றான்.

அதற்கு இல்லை என தலை ஆட்டிய லைரா, "நீங்க தூங்காம என்ன பண்றீங்க" என்றபடி அவன் அருகே அமர்ந்தாள்.

"சும்மாதான்டி தூக்கம் வரல. அப்புறம் உன்ட்ட ஒரு விஷயம் கேக்கனும்னு நெனைச்சேன் கேக்கட்டா?" அகி இவ்வாறு கேட்கவும் லைராவும் சரி என்றாள்.

"நீ ஒரு விசார்ட்னு தெரியுது, நீ மாளிகைல வச்சு என் கைய கட்ட ஸ்பெல் போட்ட ஆனா உன்மேல இருந்து எந்தவொரு மேஜிக் வேவ்சும் வரலையே எப்படி செஞ்ச"

ஆர்வமாய் அகஸ்டஸ் கேட்டு அமர்ந்திருக்க, அவனை தயக்கத்துடன் பார்த்த லைரா "அது‌ வந்து.. தாத்தா என்னோட அடையாளம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு, என்மேல ஒரு ஸ்பெல் போட்டிருக்காரு" என்றாள்.

எதனால் லைராவுக்கு அவர் தாத்தா இதை செய்திருப்பார் என அவள் சூழ்நிலையை தெரிந்த அகிக்கும் புரிந்தது. அதன்பிறகு வந்த நொடிகளில் இருவரும் இடையில் மௌனமே நீடிக்க, அகியின் விரல்களோ லைராவினதை இறுக பற்றியிருந்தது. இனி இவர்கள் வாழ்வில் இந்த அமைதி கிடைக்குமா? பார்க்கலாம்.

---------------------------

நான்கு பரம்பரையின் ஐந்து வாரிசுகளும் தங்களுக்குள் தீவிரமாக எதையோ பேசிக்கொண்டிருக்க, அவர்கள் எதிரில் நான்கு பரம்பரையின் தலைவர்களான, மிஸ்டர்.ஆண்ட்ரோனிக்கஸ், மிஸ்டர்.பெர்னார்ட், மிஸ்டர்.இவாண்டர் மற்றும் லேடி கயா மென்னகையுடன் நின்றிருந்தனர்.

"அகி சிரில் இப்ப நாம என்ன செய்ய போறோம், என் அப்பா அந்த பக்கம் நிக்கிறாரு. அவரை எதித்து நான் எப்படி சண்டை போடுறது. அதோட அவருதான் எங்க பரம்பரைலையே மிகப்பெரிய விசார்ட் நான்லாம் அவரோட ஐஞ்சு நிமிஷம் தாக்குபிடிக்கிறதே பெருசு"

முகத்தில் டன் கணக்கில் கலவரத்தை சுமந்தபடி கேட்டான் ஜேம்ஸ். அவனுக்கு சற்றும் குறையாத கலவரத்தையே சுமந்து மற்றவர்களும், லிடியாவோடு சேர்த்து நின்றிருந்தனர். பின்னே இருக்காதா, எடோனிஸ் சிறந்த மந்திரவாதிகளோடு போட்டி என்று சொன்னார்தான். ஆனால் அவர்கள் எல்லாரும் அந்தந்த பரம்பரையின் தலைவர்களாக அல்லவா இருக்கின்றனர்.

அதுபோக அந்த இளையவர்களின் தந்தை பாட்டி என முறையே அங்கு இருந்தவர்கள் இருக்க, இங்கே பசங்களுக்கு தூக்கிவாரி போட்டது. சிரில் அகிக்கும் அங்கு நின்றிருந்த அவர்கள் தந்தையை கண்டு உள்ளுக்குள் நடுங்கவே செய்தது. அதை வெளியே காண்பிக்காமல் அப்படியே உள்ளுக்குள் வைத்துக் கொண்டனர்.

"இங்கு பாருங்க கைஸ், முதல்ல பயப்படுறத நிறுத்துங்க. அவங்க நம்ம அப்பா பாட்டி அது எதையும் மனசுல வைக்காம அங்க நிக்கிறது நம்ம எதிரின்ற மட்டும் மனசுல வச்சுக்கிட்டு வாங்க. அவங்க நம்மல ஒன்னும் செய்ய மாட்டாங்க புரியுதா"

அகஸ்டஸ் மிக சீரியசாக தன்னை சுற்றி நின்றவர்களுக்கு தைரியத்தை தர, கொஞ்சம் முகம் தெளிந்தனர்.

"கைஸ் அகி சொல்றது கரெக்ட்தான். தைரியமா இருங்க, எப்படியும் நம்மால அவங்கல வின் பண்ண முடியாது. இப்ப நமக்கு அவங்கல வின் பண்ணவேண்டிய அவசியம் இல்ல. நம்ம டார்கெட் ஒரு மணி நேரம் பின்வாங்காம அவங்க கூட ஃபைட் பண்ணனும் அவ்ளோதான். அப்புறம் நாம மொதல்ல பைட்ட ஸ்டார்ட் பண்ணனும், ஸ்டார்ட் சொன்ன உடனே ஐஞ்சு பேரும் சேர்ந்து ஆரம்பிச்சிருவோம். அப்பதான் அவங்கல நம்மால கொஞ்சம் டையர்ட் ஆக்க முடியும்"

சிரில் சிம்பிளாய் அவர்கள் ரூலை சொல்லி அவர்கள் செய்ய வேண்டியதையும் சொல்லி நிறுத்த, உள்ளே மலை அளவு பயம் இருந்தாலும் இது தங்களுக்கான போர் என மனதில் சொல்லிக்கொண்டு தைரியமாய் முன்னே சென்று நின்றனர்.

ஐவரும் தங்களுக்குள் பேசிவிட்டு வந்து அந்த நான்கு தலைவர்களின் முன்னே நிற்க, அவர்களின் முகத்தில் தெரிந்த உறுதியை மனதிற்குள் மெச்சி கொண்டனர் அந்த பெரியோர்கள்.

"பசங்கலா ஆரம்பிக்கலாமா"

எடோனிஸ் ஐவரையும் கேட்டபடி, அவர்கள் இருந்த இடத்தை சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மந்திர தடுப்புகளை போட்டார். என்னதான் இவர்கள் காட்டின் நடுவே சண்டையை வைத்திருந்தாலும், அது வெளியே எங்கும் தெரியாமல் இருக்க தடுப்பை ஏற்படுத்திவிட்டார் மனிதர்.

நேரம் துவங்கியது, ஐவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டு அவர்கள் பேசி வைத்திருந்ததின்படி போட்டியை முதலில் துவங்கினர்.

"இக்னீசியஸ்" ஐந்து பேரின் வாயில் இருந்தும் ஒரே மந்திரம் சொல்லப்பட, நெருப்பு பந்து பிரகாசமாய் உருவானது. அது இப்போது எதிரே நின்ற நால்வரின் பக்கம் வீசப்பட, ஜேம்ஸின் தந்தை மிஸ்டர்.பெர்னார்ட் கை அசைக்க அந்த நெருப்பை தண்ணீர் வந்து அணைத்தது.

அடுத்து இவர்கள் காற்றிலே அம்புகளை எய்ய, பூமியிலிருந்து பாறைகள் மேலெழும்பி அதை சுக்குநூறாக உடைத்து எறிந்தது. இப்படி அரை மணி நேரம் பெரியவர்களுக்கும் வாரிசுகளுக்கும் போட்டி நடந்துக் கொண்ட போனது.

சிறியவர்கள் ஐவரும் அரை மணி நேரத்திலே தங்கள் சக்தியை இழந்துதான் போயினர். இத்தனைக்கும் பெரியவர்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை, இவர்கள் அனுப்பும் மந்திரத்திற்கு எதிர் மந்திரம் மட்டுமே போட்டு அசால்டாக நின்றிருந்தனர்.

'இது சரிவராது‌, இப்படியே போன இன்னும் அரை மணி நேரம் நம்மால தாக்கு பிடிக்க முடியாது' என உணர்ந்த அகி மற்றவர்களிடம் கண்கணை காட்ட, அதை புரிந்தார் போல் இப்போது ஐவரும் வேறு யூகத்திற்கு சென்றனர்.

எப்படியும் இவர்கள் போடும் மந்திரத்திற்கு எதிர் மந்திரம் மட்டுமே அவர்கள் போடுவார்கள் என ஐந்து பேரும் சேர்ந்து நான்கு நபர்களில் ஒருத்தரையாவது பின்னடைய செய்யலாம் என முடிவு செய்து, தங்களின் மந்திரத்தை முதலில் நின்ற மிஸ்டர்.ஆண்ட்ரோனிக்கஸான எடோனிஸின் மீது செலுத்தினர்.

எடோனிஸை சுற்றி மந்திர வலை பின்னப்பட்டது. மற்ற மூன்று பெரியோர்கள் சுதாரிக்கும் முன் அதே மந்திரத்தை போட்டு மற்றவர்களையும் மந்திர வலைக்குள் அடைத்தனர் சிறியவர்கள்.

அந்த மந்திர வலைக்குள் இருந்து மற்ற மூவரும் வெளியே வரும் முன் ஆண்ட்ரோனிக்கஸின் மீது தொடர்ந்து தாக்குதலை விட்டனர் ஐவரும். இவ்வளவு நேரம் சிறு பிள்ளைகளோடு விளையாடுவதைப்போல் விளையாடிக் கொண்டிருந்த பெரியவர்களின் கண்களில் இப்போது சிறு மெச்சுதல் வந்தது.

தங்களை சுற்றி இருந்த வலையை சுலபமாக உடைத்துவிட்ட நால்வரும், இப்போது முதல் தாக்குதலை இவர்கள் தொடுத்தனர். இதை எதிர்ப்பார்க்காத சிறுவர்கள் ஒரே தாக்குதலில் நிலைக்குலைந்து போயினர்.

அதன்பிறகு பெரியவர்களின் தொடர் தாக்குதலை சமாளிப்பது இப்போது சிறியவர்களின் முறையானது. தட்டு தடுமாறி வெற்றிகரமாக தர்ம அடிகளை வேண்டும் வேண்டாங்க வாங்கி ஐந்து பேரும் ஒரு மணி நேரத்தை கடத்தி களைப்பில் அப்படியே கீழே விழுந்தனர்.

"பரவாயில்லையே பசங்க ஒரு மணி நேரம் நம்மல தாக்கு பிடிச்சிடாங்க. சபாஷ் நம்ம வாரிசுனா சும்மாவா"

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல் மிஸ்டர்.இவாண்டர் மற்ற மூவரிடம் பேசி செல்ல, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் ஏன் பேசக்கூட முடியாமல் முறைத்து மட்டும் வைத்தனர் சிறியவர்கள்.

-தொடரும்
 
Top