வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

உன் நிழலும் நிஜமும் நானடி - கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 1

உறங்காதவர்களையும் உறங்க செய்யும் நள்ளிரவு நேரம், கூடுதலாக உதகை மலையரசியின் குளுமையிலும் உறக்கம் வராமல் அந்த நட்சத்திர மலை குடிலில் (Hills resort) தன் அறையில் உள்ள படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தான், உலகின் தலை சிறந்த மனோதத்துவ நிபுணன் டாக்டர்.ஷ்யாமள மயூரன்.

பலருக்கு உளவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு கூறுபவன். கடந்த சில நாட்களாக இல்லை இல்லை ஒரு சில மாதங்களாக தன் உறக்கம் தொலைத்து தவிக்கிறான். இதில் பெரும் விந்தை என்னவென்றால் அதற்குறிய காரணத்தினை தான் இந்நாள் வரை கண்டறிய முடியவில்லை அந்த மருத்துவனுக்கு.

இன்றும் அது போன்றே தெளிவில்லாத பல காட்சிகள் தோன்றி அவன் துயில் கலைக்க,விதிர்த்து வியர்வை வழிய விழித்தெழுந்தவனுக்கு அறையினுள் மூச்சடைப்பது போல் இருக்க அந்த குளிரையும் இரவையும் பொருட்படுத்தாமல் அறையினை விட்டு வெளியேறியவனின் மீது கைப்பேசியில் பேசியவறே வந்து மோதினான் ஒரு புதியவன்.

“அப்பத்தா, பதட்டப்படாதீங்க பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோங்க… டாக்டர் அங்கிளை வர சொல்லுங்க… இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் அங்கு இருப்பேன்…” என பேசியப்படி வந்தவன் ஷ்யாமள மயூரன் மீது மோத ஏற்கனவே உறங்க இயலாத கடுப்பில் இருந்தவன் “ஏய்…” என தன்னெதிரில் இருந்தவனை திட்ட தொடங்கியவனின் வார்த்தைகளை ஒலிபெருக்கியின் வாயிலாக வந்த குரல் தடை செய்திருந்தது…

ஷ்யாமள மயூரன் மீது மேல் மோதியதால் நிலை தடுமாறியவனின் விரல்கள் அலைப்பேசியின் ஒலிபெருக்கியில் பட்டுவிட, அதில் “அப்புச்சி, கொஞ்சம் சீக்கிரம் வாயா… இத்தனை நாளும் விட்டத்தை வெறுச்சு பார்த்துக்கிட்டு எந்த உணர்வும் இல்லாமல் இருந்தவ இன்னைக்கு கத்தி கதறி மயங்கி விழவும் எனக்கும் உங்க தாத்தாவுக்கும் ஒன்னும் புரியலை…” என முதுமையின் தள்ளாமையோடும், பதட்டத்தோடும், உதறலாக ஒர் குரல் ஒலிக்க…

அக்குரலில் சற்று நிதானித்தவன், தன் எதிரில் இருப்பவனை பார்வையால் எடைப் போட்டான்… ஆறடி உயரம், திராவிட நிறம், அவன் முக லட்சணமும், அவன் உடுத்தி இருந்த ஆடையின் தரமும் அவன் வளத்தினை சொல்லாமல் சொல்லியது…

அப்புதியவனோ, தன்னை ஒருவன் உற்று நோக்குவதை கூட கருத்தில் கொள்ளாமல்…. அவனை இடித்ததிற்காக மன்னிப்புக் கூட வேண்டாமல் அலைப்பேசியில் பேசியவாறே ஷ்யாமை கடக்க முயல…

ஷ்யாமள மயூரனோ “மிஸ்டர்… ஒன் செக்…?” என அழைத்தான்…

அப்புதியவனோ, ஷ்யாம் மொழியின் உச்சரிப்பின் வித்தியாசத்தில் அவனை நோக்கியவன், ஷ்யாமின் விழியின் வசீகரத்திலும் அதன் வண்ணத்திலும் தான் இருக்கும் சூழலின் நிலை மறந்து அவன் நேத்ரங்களை ரசிக்க தொடங்கினான்.

தன்னெதிரில் இருப்பவனின் அசையா பார்வையில் தான், ஷ்யாம் தான் கண்ணாடி அணிய மறந்ததை உணர்ந்தவன் உதடுகளில் குறுநகை மின்ன, தன் இட கையினை அவன் முகத்தின் அருகில் அசைக்க… அதில் மீண்ட புதியவனோ, தன் செய்கையில் சிறு வெட்கம் தோன்ற “சாரி…” என்றான்.

ஷ்யாமோ “இந்த சாரி என்னை இடிச்சதுக்கா? இல்லை இவ்வளவு நேரம் என்னை சைட் அடிக்சதுக்கா…?" என்றவன் தன் ஒற்றை கண் சிமிட்டி, ”பட் நான் ஸ்டிரைட் படி” என உரைக்க
அவன் சொல்லியதன் பொருள் புரியாமல் முதலில் குழம்பிய புதியவன், பின் அர்த்தம் புரிந்ததும் சற்று சினம் தலை தூக்க “நீங்க தப்ப பு…” என விளக்கம் கொடுக்க ஆரம்பித்தவன்…

ஷ்யாமின் கண்களில் வழியும் விஷமத்தையும் பொங்கி வரும் சிரிப்பை தன் கீழ் உதடுகளை கடித்து கட்டுப்படுத்துவதிலும்… அவன் தன்னை கிண்டல் செய்வதை கண்டுக்கொண்டவன் அப்பொழுது தான் அவனை பதாதி கேசம் முதல் ஆராய தொடங்கினான்…

ஷ்யாம் என்னதான் தமிழில் தடுமாறாமல், தவறுகள் இன்றி பேசினாலும் அவன் வார்தைகளின் உச்சரிப்பில் உள்ள வித்தியாசமும், அவனின் மீசை இல்லா முகமும், அதீத வெண் தேகமும், அவனை அந்நியனாக உருவகப்படுத்தியது. புதியவனின் ஆராய்ச்சி பார்வையில் ஷ்யாமின் விழிகளில் கேலி கூடியது…

அவன் விழிகளின் பாவனையினை சரியாக புரிந்துக் கொண்ட புதியவன் “நோ... நோ… மிஸ்டர்...” என…

“ஷ்யாம்…” என்றவனின் மனநிலை சற்று நேரத்திற்கு முன்பு எவ்வளவு இறுக்கமாக, பாரமாக இருந்ததோ அதற்கு நேர்மாறாக தளர்வாக உணர்ந்தவன்…

“ஈட்ஸ் ஓகே… படி கூல்… என் கண்ணை முதல்ல பார்க்குற எல்லாரோட ரியாக்ஷனும் இப்படி தான் இருக்கும்” என்றான் ஷ்யாம்.

மற்றவருடன் இலகுவாக பழக கூடாது, தன்னிடம் நெருங்கி பழகுபவர்களை தவிர்க்க வேண்டும் என பல விதிகளை பால பாடமாக பயின்றவன், அதனை இந்நொடி வரை பின்பற்றுபவன், இன்று அதனை எல்லாம் மறந்து புன்னகையுடன் நட்பாக தன் கரங்களை புதியவனை நோக்கி நீட்டினான்.

“ஹாய் நான் விஷ்ணு மித்ரன்…” என்றவன் ஷ்யாமின் கரங்களோடு கை குலுக்கியவனின் அலைப்பேசி மீண்டும் இசைக்க… அவ்வழைப்பை ஏற்றவன் முகம், அந்த பக்கம் சொன்ன செய்தியில் சடுதியில் நிறம் மாறியது…

“இவனுகளுக்கு வேற வேலையே இல்லை… நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன் அப்பத்தா… நீங்க பதட்டப்படாதீங்க…” என்றவன், “பாய் ஷ்யாம், ஒரு எமர்ஜென்சி…” என கூறியப்படி அவனிடம் விடைப் பெற முயல…

ஏதோ சொல்ல முடியாத, புரியாத உணர்வு உந்த, “விஷ்ணு, இஃப் யூ டோன்ட் மைண்ட், நா… நான் உங்க கூட வரவா? பிகாஸ் ஐ அம் எ டாக்டர்…(Because I am a Doctor)” என திக்கி திணறி, தயங்கி என ஒரு வழியாக தான் கேட்க நினைத்ததை கேட்டு விட்டவன் தவிப்பாக விஷ்ணுவின் முகம் பார்த்தான்.

ஏனெனில் இதுவரை அடுத்தவரிடம் எதற்காகவும் அனுமதி வேண்டி பழக்கமில்லாதவன்,முதல் முறை வேண்டி நின்றான்.

விஷ்ணுவிற்கு ஷ்யாம் அவ்வாறு கேட்டதும் அவன் முகத்தில் சந்தோசமும், நிம்மதியும் தோன்ற கூடவே ஒருவித சங்கடமும் தோன்றியது.

சந்தோசமும், நிம்மதியும் அவனின் தற்போதைய மனநிலையில் தனிமையில் பயணிக்க வேண்டிய அவசியமின்றி ஓர் துணை கிடைத்ததை நினைத்து சங்கடம் இன்று அவன் வீடு இருக்கும் சூழ்நிலையினை நினைத்து மௌனிக்க…
விஷ்ணுவின் அமைதியில், பார்த்து பத்து நிமிடம் கூட ஆகாத தன்னை உடன் அழைத்துச் செல்ல கேட்ட தன் மடத்தனத்தினை உணர்ந்த ஷ்யாம்.

“சாரி… இட்ஸ் நோ ப்ராப்லம் விஷ்ணு… நீங்க கிளம்புங்க… சீ யூ லேட்டர்” என சொல்லி, தன் அறைக்குள் செல்ல திரும்பியவனின் கரம் பற்றிய விஷ்ணு…

“சரி வாங்க… ஐ அல்சோ நீட் அ காம்பனியன்” என சொல்ல, ஷ்யாமின் மனமோ காரணம் இன்றி துள்ளி குதித்தது.

அதன்பின் நொடியும் தாமதிக்காமல் இருவரும் உதகை மலையிலிருந்து கோத்தகிரி நோக்கி பயணிக்க தொடங்கினார்.

விஷ்ணு தன் ஜீப்பினை இயக்க, அந்த இரவிலும், மலை வளைவுகளிலும் சீராக வண்டி ஓட்டும் அவனின் லாவகத்தினை கண்டு வியந்த ஷ்யாமோ “யுவர் டிரைவிங் அவ்ஸாம் விஷ்ணு…”(your driving awesome Vishnu) என சிலாகித்தவன்

“இங்க இருந்து ஹாஸ்பிடல் போக டைம் டுயூரேஷன் என்ன?...” என கேட்க விஷ்ணுவோ, “ஹா… ஹாஸ்பிடல் எதுக்கு…?” என குழப்பமாக வினவினான்.

ஷ்யாமோ, “உங்க ரிலேட்டிவ்க்கு தானே ஹெல்த் இஸ்யூ…?” என கேள்வியாக விஷ்ணுவை நோக்கினான்.

விஷ்ணுவோ ஒரு பெரும் மூச்சினை வெளியேற்றியவன் “என் தங்கைக்கு தான்…” என்றான் மரத்து போன குரலில்…

அடுத்ததாக “என்ன ஹெல்த் இஸ்யூ?” என வினவ வந்தவன் விஷ்ணுவின் முகத்தில் உள்ள வலியினை உணர்ந்துக் கொண்டான். ஏனெனில் அவனிற்கும் ஒரு தங்கை உண்டல்லவா… அதனால் பேச்சை மற்றும் விதமாக…

“உங்களுக்கு போன் பண்ணது உங்க அப்…அப்… சாரி பாட்டி தானே…?" என்றான் ஷ்யாம், பாவம் அவனுக்கு தமிழ் பேச தெரியும் என்றாலும் சில வார்த்தைகள் உச்சரிக்க சிரமப்படுவான் அவன் வளர்ந்த சூழல் அப்படி.

அவன் சொல்லிய விதத்தில் விஷ்ணுவிற்கு சிரிப்பு வர, “அவங்க என் அப்பத்தா, அப்பாவோட அம்மா பூங்கோதை நாச்சியார்…” என்றான்.

விஷ்ணு அப்பெயரை சொன்னவுடன் ஷ்யாமிற்கு எங்கேயோ, எப்பொழுதோ கேட்டது போல் இருந்தது. தன்னையும் அறியாமல் அவன் உதடுகள் “நைஸ் நேம்…” என உச்சரித்தது…

ஷ்யாம் சொன்னதை கேட்டதும் விஷ்ணுவின் மனதிரையில் தன் கண்களை உருட்டி மூக்கு நுனி சிவக்க தன் தாத்தாவின் தோள்களை கட்டிக் கொண்டு “சிவசு, உனக்கு வேற பெயரே கிடைக்கலையா…” என நொடியில் பல உணர்வுகளை தன் முகத்தில் ப்ரதிபலிக்க சிறுக்குழந்தை என செல்லம் கொஞ்சுபவள். இன்று தன் உணர்வுகள் தொலைத்து, தன்னை மறந்து ஜீவன் அற்று இருப்பதை நினைத்தவனின் மனம் செங்கனல் என தகித்தது…

தன் தங்கையின் இந்நிலைக்கு காரணமானவன் மட்டும் தன் கையில் கிடைத்தால் அவனுக்கு மரணத்தை விட கொடுமையான தண்டனை வழங்க வேண்டும் என எண்ணியவனின் மனமோ, அதற்கு முதலில் உன் தங்கை உணர்வுகளுடன் இருக்க வேண்டும் என நிதர்சனத்தினை உரைக்க…
தன் ஆதங்கத்தையும், ஆற்றாமையினையும் கட்டுப்படுத்த முடியாமல் வந்த ஆத்திரத்தில் ஸ்டேயரிங்க் வீலை வலக்கையினால் ஓங்கி அடித்தான்…

அந்த நள்ளிரவு வேளையில் ஹாரன் அலறி இரவின் நிசப்தத்தினை கலைக்க…

அவ்வொலியில் ஏதோ சிந்தனையில் இருந்து தன்னுணர்வு பெற்ற ஷ்யாம்,அப்பொழுது தான் கவனித்தான் விஷ்ணுவின் கரங்களில் வாகனம் தடுமாறுவதை, நொடியில் சுதாரித்தவன் விஷ்ணுவை உலுக்க…

அதில் தன்னுணர்விற்கு வந்த விஷ்ணு வாகனத்தினை நிலைப்படுத்தி ஒர் ஓரமாக நிறுத்தி, ஸ்டேயரிங்க் வீலை இரு கைகளினால் இறுக்கமாக பற்றியவன், அதன் மீதே தலையை கவிழ்த்துக் கொண்டான்.

அவர்கள் நல்ல நேரம் அந்நேரத்தில் எதிரில் எந்த வாகனமும் வரவில்லை… கூடவே அவர்கள் விஷ்ணுவின் எஸ்டேட்டின் அருகில் வந்து விட்டிருந்தனர்.

விஷ்ணுவின் கைகள் இன்னமும் நடுங்கிக் கொண்டு தான் இருந்தது, இன்னும் ஒரு நொடி ஷ்யாம் தன்னை நிலைப்படுத்தாமல் இருந்திருந்தால் நிச்சயம் விபத்து நிகழ்ந்திருக்கும்.

‘ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகள் போதும், புதிதாக தான் ஒன்றை உருவாக்க வேண்டாம், இனி எந்நிலையிலும் நிதானம் தவறக் கூடாது' என உறுதி எடுத்துக் கொண்டான் விஷ்ணு.

விஷ்ணு, தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழியை பின்பற்றுவானா!!! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ஷ்யாமிற்கும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சில நொடிகள் தேவைப்பட்டது. தன்னை மீட்டுக் கொண்டவன், விஷ்ணுவின் நிலை அறிந்து அவன் முதுகினில் மெல்ல தட்டி கொடுத்து “ஈஸி விஷ்ணு… டோன்ட் பேனிக்(Don’t panic…)" என அவனுக்கு ஆறுதல் சொல்ல…

அதில் சற்று தெளிந்த விஷ்ணு, தன் இரு உள்ளங்கையினால் தன் முகத்தினை அழுந்த துடைத்தவாறே நிமிர அவனிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை நீட்டினான் ஷ்யாம்.

பாட்டிலை வாங்கி தண்ணீர் அருந்திய விஷ்ணு “சாரி…” என்றவன் தண்ணீர் பாட்டிலை உயர்த்திக் காட்டி “தாங்க்ஸ்…” என உரைக்க ஷ்யாமோ மென்புன்னகையுடன் அவனின் தோள்களில் சிறு அழுத்தம் கொடுத்து தட்டிக் கொடுத்தான்.

மெல்ல தன் வண்டியினை இயக்கி அவர்கள் எஸ்டேடிற்குள் நுழைந்தவன், அடுத்த இருபது நிமிடத்தில் ஒரு மாளிகையின் முன் தன் வண்டியின் வேகத்தினை குறைக்கவும், அந்த மாளிகையின் கேட் திறக்கவும் சரியாக இருந்தது.

விஷ்ணு அந்த பழங்கால பிரிட்டிஷ் கட்டிடத்தின் முன் வண்டியை நிறுத்தவும், அவனின் அப்பத்தா அவன் வண்டியினை எதிர்க் கொள்ளவும் சரியாக இருந்தது.

அவரை பார்த்தவுடன், “இந்த குளிரில் எதுக்கு அப்பத்தா வெளியில் இருக்குறீங்க…” என கடிந்தபடி வண்டியில் இருந்து இறங்கினான்.

பூங்கோதை நாச்சியாரோ, ”வண்டி சத்தம் கேட்கவும் தான் வெளியில் வந்தேன் அப்புச்சி…” என்றவரின் வார்த்தைகள் ஆறடி உயரத்தில் இருக்கும் தன் பேரனை விட உயரமாக, கண்களில் கருப்பு சட்டமிட்ட இளமஞ்சள் நிற கண்ணாடி, ஹூடியுடன் கூடிய டார்க் நெவி பிளூ ஜெர்கின் மற்றும் ஜீன்ஸ் அணிந்து நடந்து வருபவனை கண்டவர் கேள்வியாக விஷ்ணுவை நோக்க…

விஷ்ணுவோ, அவரின் பார்வைக்கு பதிலாக “என் பிரெண்ட், டாக்டர்.ஷ்யாம்…” என அறிமுகப்படுத்தியவன்...

“ஷ்யாம், இவங்க என் அப்பத்தா பூங்கோதை நாச்சியார்…” என்றான்.

“வணக்கம் பா…பாட்டி…” என ஷ்யாம் சாதாரணமாக அவரை வணங்குவதுப் போல் இருந்தாலும் அவனின் மனம் ஏற்கனவே பூங்கோதை நாச்சியார் என்ற பெயரில் குழம்பியிருக்க, தற்பொழுது அவர் தோற்றம் ஷ்யாமின் மன குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

இது எதனையும் அறியாத பூங்கோதை நாச்சியாரோ, “வாங்க தம்பி…” என ஷ்யாமை வரவேற்றவர், அவர்கள் இருவரோடும் வீட்டிற்குள் நுழைந்தார்.

வரவேற்பறையில் உள்ள சோபாவில் ஒரு முதியவர் அமர்ந்து தவிப்பாக தனக்கு எதிரில் உள்ள அறையினை நோக்க, அவருக்கு பக்கத்தில் உள்ள இருக்கையில் ஒரு நடுத்தர வயது தம்பதியும் அமர்ந்திருந்தனர்.

உள்ளே வந்த விஷ்ணு அந்த தம்பதிகளை சிறிதும் கண்டுக்கொள்ளாமல், முதியவரின் அருகில் அமர்ந்து, “உட்காருங்க ஷ்யாம்…” என அவனுக்கும் ஒரு இருக்கையினை காட்டியவன், “தாத்தா இவரு என் பிரெண்ட் டாக்டர்.ஷ்யாம்… ஷ்யாம், இவங்க என் தாத்தா சிவ சுப்பிரமணியம்…” என்றான்.

அதற்குள் அறையிலிருந்து மருத்துவர் வெளிவர, அனைவரின் பார்வையும் அவரை நோக்க, விஷ்ணுவோ அவரை நெருங்கியவன், “அங்கிள்… பாப்பா இப்ப எப்படி இருக்கா…?” என வினவ
மருத்துவரோ, ”பயப்படும் படி எதுவும் இல்லை விஷ்ணு, இரத்தத்தை பார்த்து பயந்து சத்தம் போட்டு அந்த அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான்…” எனக் கூற…

விஷ்ணு கேள்வியாக தன் அப்பத்தாவை நோக்க, அவரோ “மாசம் கூட கூட பாப்பா சரியா சாப்பிடுறது இல்லை, கால் இரெண்டும் வீக்கமா இருக்கு… நல்லா இருக்கவங்களுக்கே ஆயிரம் சங்கடம் இந்த மாதிரி நேரத்தில் ஏற்படும், இவ இருக்க நிலைமையில் அவளால சொல்லவும் முடியாது…” என்றவரின் விழிகள் கலங்கியது.தான் தூக்கி வளர்த்த தன் செல்ல பேத்தியின் நிலையினை நினைத்து.

விஷ்ணுவோ, “அப்பத்தா…” என அவர் கலங்குவதை கண்டிக்க, அதில் தெளிந்தவர், “அதனால பாப்பா சாப்பிட்டதும் கொஞ்சம் காலாற நடக்க வைக்க முன்பக்கம் அழைச்சிக்கிட்டு போனேன்… என் போதாத நேரம் கொஞ்ச நேரம் நடந்தவ,கேட் வழியா ரோட்டையே பார்த்துக்கிட்டு நின்னா கூப்பிட்டாலும் அங்க இருந்து நகரலை சரின்னு விட்டுட்டேன்… கொஞ்ச நேரத்தில் என்ன ஆச்சுன்னு தெரியலை கேட்டை பிடிச்சி உலுக்கி கத்தி அழவும் எனக்கும் உங்க தாத்தாவுக்கும் முதல்ல ஒன்னும் புரியலை, அப்புறம் தான் வாட்ச்மேன் கந்தசாமி சொன்னான் போன வண்டி நாயை அடிச்சி போட்டுட்டு போயிடுச்சுன்னு… அதை பார்த்து தான் பாப்பா அழுது மயங்கி இருக்கும்னு சொன்னான்…” என்றார்.

விஷ்ணு மருத்துவரை பார்க்க அவரும் சம்மதமாக தலை அசைக்க “மயக்கம் தெளிய இன்ஜெக்ட் பண்ணி இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்தில் கண் முழிச்சிடுவா…” என சொன்னார்.

இதுவரை அவர்கள் பேசியதை வைத்து விஷ்ணு தங்கையின் நிலையினை அனுமானித்த ஷ்யாம் “விஷ்ணு, உங்க தங்கை சிக்னஸ்க்கும் நடந்த இன்சிடென்ட்க்கும் ஏதாவது கனெக்டிவிட்டி இருக்கா?" என விசாரித்தான்.

பாவம் அவர்களுக்கு தான் அவள் நிலையின் காரண காரியம் எதுவும் தெரியாதே…

ஷ்யாமின் கேள்விக்கு விஷ்ணு “எங்களுக்கு எதுவும் தெரியாது ஷ்யாம்…” என்றவன் முகத்தில் இயலாமை அப்பட்டமாக வெளிப்பட்டது.

ஏதோ உணர்வு உந்த ஷ்யாம், “நான் உன் தங்கையை பார்க்கலாமா?” என கேட்டான்.

விஷ்ணுவோ, சரி என தலையாட்டியவன் அவள் இருந்த அறை நோக்கி அவனை அழைத்துச் செல்ல ஷ்யாமின் உள்ளமோ காரணமின்றி படபடத்தது.

அவர்கள் அவள் அறைக்குள் நுழையவும் பெண்ணவளின் மயக்கம் தெளியவும் நேரம் சரியாக இருக்க…

மயக்கம் தெளிந்தெழுந்தவள் ஷ்யாமை கண்டதும் “மையூ" என அவனை கட்டிக் கொண்டு அவன் முகம் எங்கும் முத்திரை பதிக்க, பெண்ணவளின் செயலில் அசைவற்று சிலையாக நின்றவனின் உடல், அவள் மணி வயிற்றில் ஆடும் பிள்ளையின் அசைவில் உடல் சிலிர்க்க நின்றவனின் ஒரு கரம் தன்னியல்பாக பெண்ணவளை அணைக்க, மறுகரமோ சூல் கொண்டிருக்கும் அவளின் மணிவயிற்றில் பதிந்தது.

தொடரும்❤️❤️❤️
 
ஹாய் ரீடர்ஸ்...

"உன் நிழலும் நிஜமும் நானடி 🥰🥰🥰" கதையோட முதல் அத்தியாயம் போட்டாச்சி டியர்ஸ்...

படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...


உங்கள் அஸ்திரம் 23💘💘💘
 
Status
Not open for further replies.
Top