அத்தியாயம் 5
ஷியாம் சொன்ன அனைத்தையும் கேட்ட ஸ்டீவ் நேராக போய் நின்றது ஷ்யாமின் அனுஜனும் அவனின் மித்திரனும் ஆன ஷ்யாமள ருத்ரனிடம் தான்.
“ருத்ரா… ருத்ரா…” என அழைத்துக் கொண்டே அவனின் அலுவல் அறைக்குள் நுழைய… கையில் உள்ள கோப்பினை பார்த்துக் கொண்டிருந்தவன் , இடதுக் கை சுட்டு விரலினால் தான் அணித்திருந்த ரிம் லஸ் கண்ணாடியினை ஏற்றிவிட்டவாறு, தன் புருவம் சுருக்கி அவனை கேள்வியாக நோக்கினான்.
ஸ்டீவோ மனதிற்குள் இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என கருவியவன். “லுக்கு எல்லாம் நல்லா தான் இருக்கு…”என நொடிக்க…
“ வேற என்ன நல்லா இல்லையாம்…”என பதில் கேள்வி கேட்டான் ருத்ரன்.
“ என் நிலைமை தான்டா நல்லா இல்ல…”என்றான் ஸ்டிவ்.
தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்த ருத்ரா, ஸ்டீவ்வை முன்னும் பின்னும் சுற்றி திருப்பிப் பார்த்தவன் … “ஏன் நல்லா தானே இருக்க, அடி ஒன்னும் பலமா இல்லையே…” என சிறு இடைவெளிவிட்டவன் “ ஒருவேளை எல்லாம் உள் காயமோ…” என்றான் பொய்யான பதற்றத்துடன்.
‘தான் சொல்ல வரும் விசயம் என்ன…? ஏது…? என கேட்காமல்… தன்னை சொல்லவும் விடாமல்… தன்னை கேலி செய்யும் ருத்ராவின் செய்கையில் பொருமை இழந்த ஸ்டீவ்.
“ என் நிலைமை புரியாமல் விளையாடாத ருத்ரா. ப்ரோ இந்தியால இருந்து கால் பண்ணி இருந்தாங்க, தனக்கு நடந்த விபத்த பற்றி முழு ரிபொர்ட் கேட்குறரு அவரு…” என பதட்டமாக கூறினான் ஸ்டீவ்.
தன் அண்ணன் அழைத்தான் என்றதும் சிறு பதட்டமான ருத்ரா, அவன் விபத்தினை பற்றி விசரித்ததாக ஸ்டீவ் கூறவும்… “ அக்ஸிடெண்ட் பத்தி ரிபொர்ட் கேட்ட கொடுக்க வேண்டியது தானேடா…” என கூலாக சொன்னான் ருத்ரா.
அவனின் பதிலில் கடுப்பான ஸ்டீவ்…” டேய்… டேய்…என் வாயில் நல்லா வந்துரும்… எதாவது சொல்லிட போறேன்… அவரு அக்ஸிடெண்ட் பற்றி மட்டும் கேட்கலை கூடவே யாரோ ஒரு பொண்ணை பற்றியும் விசரிக்க சொல்லுறரு…” என்றான்.
“வாவ் இன்ட்ரஸ்டீங்க, யாரு அந்த பொண்ணு…” என ஆர்வமாக வினாவினான் ருத்ரா.
“யாருக்கு தெரியும், போட்டோ அனுப்புறேன்னு சொல்லி இருக்குறரு…” என சலித்தவன், நாம தப்பு பண்ணிட்டோமோன்னு பயமா இருக்கு ருத்ரா முன்னாடியே நாம ப்ரொ கிட்ட பொறுமையா அந்த பொண்ணை பத்தி சொல்லி இருந்திருக்கணும்… என்றான் ஸ்டீவ்.
“புலம்புறதை முதல்ல நிறுத்து ஸ்டீவ்… அந்தப் பொண்ணை பத்தி, என்னன்னு சொல்லி இருப்பீங்க சார்…, முக்கிய செலபிரிடி அண்ட் பிக் ஷொட்ஸ்க்கு ஹெட் பாடி கார்ட்ஸ் டிரைன் பண்றவர், எந்த கேஸா இருந்தாலும் அதில் எவ்வளவு சிக்கல் இருந்தாலும் ஷொர்ட் பீரியட்ல சல்வ் பண்ற தி பெமஸ் லீடிங்க் கிரைம் இன்வெஸ்டிகேஷன் ஆபிசர் ஸ்டீவ் வெய் லாங்ன்னால, அந்த பெண்ணோட பெயரையாவது கண்டு பிடிக்க முடிஞ்சுதா … அவங்களை பத்தி எந்த இன்ஃபர்மேஷனும் இல்லாமல் என்னன்னு உன் ப்ரொகிட்ட சொல்லி இருப்ப…” என கோபமாக கத்தியவன்.
“ டாக்டர் சொன்னதை மறந்துட்டியா ஸ்டீவ், அண்ணாவோட ஹெல்த் கண்டிசனுக்கு அவர் ரொம்ப யோசிக்கவோ தன்னை குழப்பிக்கவோ கூடாது… அவருக்கு வலுகட்டாயமா எந்த ஒரு விஷயத்தையும் திணிக்க கூடாது அப்படின்னு சொன்னதை கூட நின்னு கேட்ட தானே…?
நாம் அந்த பெயர் தெரியாத பொண்ண பத்தி சொல்லி இருந்தா… அண்ணா அவங்க யாரு என்னான்னு யோசிச்சி… யோசிச்சி அவருக்கு ஸ்ட்ரெஸ் தான் ரொம்ப அதிகமா ஆகியிருக்கும்…” என்ற ருத்ரனின் குரலில் அவ்வளவு வருத்தம்.
“நமக்கும் இதுவரை எந்த ஒரு விஷயமும் அவங்களை பத்தி கிடைக்கலை, நமக்குத் தெரியாத விஷயத்தை அவருகிட்ட சொல்லி மேலும் அவரை குழப்பக் கூடாதுன்னு தானே அவர்கிட்ட இருந்து அந்த விஷயத்தை மறைச்சோம்… இதுல எதுவும் தப்பு இருக்கிறதா எனக்கு தோணலை என்றவன் தொடர்ந்து இத்தனை நாளும் தனக்கு நடந்த விபத்தை பற்றி கேட்காதவர் இப்ப கேட்கிறார் என்றால் அவருக்கு ஏதாவது நியாபகம் வந்துருக்கணும் இல்ல ஹீ வில் ஃபீல் சம்திங் ஸ்டிரேன்ஞ்… சோ அண்ணா முதல்ல போட்டோ அனுப்பட்டும், அப்புறம் அவங்க யாரு, என்னன்னு, விசாரிக்கலாம்…” என்றவன்.
விஷமம் அவன் குரலில் வழிய “சொல்ல முடியாது, என் அண்ணன் அனுப்புற போட்டோல இருக்குற பொண்ணும் நாம தேடுற பொண்ணும் ஒண்ண இருக்க கூட சான்ஸ் இருக்கு…” என ருத்ரா ஆருடம் சொல்ல, அவன் தோள் பற்றிய ஸ்டீவ்…” ருத்ரா அப்படியும் இருக்குமா…? என ஆர்வமும், மகிழ்ச்சியுமா வினவினான்.
“சொல்ல முடியாது அப்படியும் இருக்கலாம், எப்போதுமே நமக்கு எல்லாம் தோன்ற இன்டியூஷனை விட, அவனுடைய இன்டியுஷன் ஸ்ட்ராங்கா அண்ட் கரெக்ட்டா இருக்கும்…ஹோப் ஃபார் தி பெஸ்ட் என்றான் ருத்ரன் ஸ்டீவின் தோளை தட்டி, ஸ்டீவும் ருத்ரன் சொன்னவரே இருக்க வேண்டும் என அவனின் மனமும் ஆசை கொண்டது.
கோத்தகிரி
ஸ்டீவிடம் பேசிவிட்டு வந்த ஷ்யாம் கண்டது, உறங்கும் தன் தங்கையின் அருகில் அமர்ந்து விழி அகலாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவினை தான்.
விஷ்ணுவை நெருங்கி அவனின் தோளை தொட, அதில் தன் உணர்வு வந்தவன்,திரும்பி ஷ்யானை நோக்கியவன் விழிகளில் மெல்லிய நீர்படலம்.
தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவன். “எங்க பாப்பா இப்படி அமைதியா தூங்கி பல மாசம் ஆச்சு ஷியாம், அப்படியே தன்னை மறந்து ஒரு சில மணி நேரம் தூங்கினாலும் திடீர்னு பதறி எழுச்சி உட்கார்ந்து எதையோ வெறிச்சு பார்த்துகிட்டு இருப்பா, அவளுக்கு இந்த நிலைமையில் தூக்க மருந்தும் கொடுக்க முடியாது… என தன்னைப் போல பேசிக்கொண்டு இருந்தவன் தன் முகத்தினை அழுந்து துடைத்து கொண்டு, ஷ்யாமின் கரங்களைப் பற்றியவாறு நான் இப்படி கேட்கிறது அபத்தம் தான்னு அறிவுக்கு புரியுது ஆனா மனசு கேட்கலை நீ… நீ… நீங்க உ… உங்க… உங்களுக்கு எங்க பாப்பாவை முன்னாடியே தெரியுமா..?” என திக்கித் திணறி ஒருவழியாக தன் மனதினை உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியினை கேட்டு விட்டான் விஷ்ணு.
ஷ்யாமிற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. விஷ்ணுவின் கேள்விகள் தானே அவன் மனதிலும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதனால் அவன் மறுமொழி எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.
ஷ்யாமின் அமைதியில்… “எங்கே தான் கேள்வியை அவன் தவறாக எடுத்துக் கொண்டனோ…” என பதறிய விஷ்ணு… “சாரி ஷ்யாம் நீங்க ஒரு NRIன்னு தெரிஞ்சும் நான் இப்படி கேட்டது தப்பு தான்… அதுவும் இல்லாமல் நான் கேட்கமலையே எனக்கு உதவ வந்த உங்க்கிட்ட இப்படி நான் கேட்டது ரொம்ப ரொம்ப தப்பு தான்” என மன்னிப்பு வேண்டினான் .
தனக்கும் பெண்ணவளுக்கும் இடையில் நடந்த நிகழ்வுகள் என்ன என தானே தெளிவில்லாமல் மன குழப்பத்தில் இருக்கும் இந்நிலையில் விஷ்ணுவின் மன்னிப்பு ஷ்யாம் மனத்தினை வருத்தியது.அதனால் பேச்சை மாற்றும் விதமாக பெண்ணவளின் இந்நிலைக்கு என்ன காரண காரியம் என விசாரிக்க தொடங்கினான்.
விஷ்ணுவிற்கு நடந்தது என்ன என நூறு சதவீதம் தெரியாது என்றாலும், ஷ்யாம் கேட்ட கேள்விக்கு தனக்கு தெரிந்தவரை விஷ்ணு அளித்த பதில்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்றுபொருந்த என்ன நிகழ்ந்தது என அறிந்து கொள்ளும் ஆர்வமும் , பரபரப்பும் ஷ்யாம் மனதில் அதிகரிக்க தொடங்கியது.
ஸ்டீவிடம், பெண்ணவளின் புகைப்படத்தினை அனுப்புவதாக சொல்லிவிட்டவனுக்கு, விஷ்ணுவிடம் அவன் தங்கையின் புகைப்படத்தினை கேட்பதற்கு வாய் வரவில்லை. அவனிடம் எவ்வாறு கேட்பது என யோசனையில் இருந்தவனுக்கு, அப்பாத்தா விஷ்ணுவை அழைத்தது பெரும் வாய்ப்பாக அமைய, மேட்டர்னிட்டி உடையில் சிறுபிள்ளை போல் உறங்கும் அவளை தன் அலைபேசியில் படம் எடுக்கத்தவனுக்கு அப்படத்தினை ஸ்டீவிற்கு அனுப்ப தான் மன ஒப்புக் கொள்ளவில்லை, அப்படத்தினை தன் தனிபட்ட கேலரியில் சேமித்து வைத்தவன். அறையின் சுவரில் மாட்டி இருந்த பெண்ணவளின் புகைப்படத்தை தன் அலைபேசியில் பதித்துக் கொண்டவன், அதனை ஸ்டீவிற்கு “மேக் இட் பாஸ்ட்…” என்ற குறுஞ்செய்தியுடன் அனுப்பி விட்டவன். ஸ்டீவின் அழைப்பினை ஒவ்வொரு நொடியும் ஏதிர்பார்த்து காத்திருந்தான் ஷ்யாம்.
ஷ்யாம் அனுப்பிய போட்டோவை பார்த்த ஸ்டீவ், அவனை அலைபேசியில் தொடர்பு கொள்ளாமல், “ப்ரோ நீங்க கேட்ட டீடைல்சோட நாளைக்கு மார்னிங் உங்களை நான் நேரில் பார்க்கிறேன்…” என குறுஞ்செய்தி மூலம் பதில் தகவல் அனுப்பி இருந்தான்.
ஷ்யாமின் மனமோ, “இவனை டீடைல்ஸ் கேட்டா இவன் எதுக்கு இப்ப இந்தியா கிளம்பி வரான்…”என எண்ணியவன். ஸ்டீவ்விற்கு அழைக்க அவனின் அலைபேசியோ அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
ம்ச்… என தன் அதிருப்தியை உச்சிக் கொட்டி வெளியிட்டவன், விஷ்ணுவிடம் சொல்லிக் கொண்டு ஹோட்டல் வரை சென்று விட்டு வரலாம் என நினைத்து, பெண்ணவளை பார்க்க, அவளோ உறங்கிக் கொண்டிருக்க, அவள் விழித்தெழுந்தாள் தன்னை செல்ல விட மாட்டாள். அதலால் அவள் உறக்கம் கலைந்து எழுவதற்குள் ஹோட்டல் அறைக்கு சென்று திரும்பி விடலாம் என எண்ணி அறையின் கதவு நோக்கி சென்றான்.
சரியாக அந்நேரம் கண் விழித்த பெண்ணவள் கண்டது அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் ஷ்யாமினை தான்.
அவன் தன்னை விட்டு செல்வதை கண்டவள். இத்தனை நாள் தன்னை மறந்து, தன்னுணர்வு இன்றி இருந்தவள், தன் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினை கவனிக்க தவறியவளாக, தற்போழுது தான் இருக்கும் நிலைமையையும் மறந்து வேகமாக எழ முயன்றாள்.
தன்னால் எழ முடியாமல் போகவே, “மையூயூயூ…” என சத்தமாக கத்தி அழைக்க… நிறைமாத வயிற்றோடு அவள் எழ சிரமப்படுவதை கண்டவன்.
“ ஈஸி…ஈஸி… கியூட்டி பை…” என்றபடி அவளை இரெண்டெட்டில் அடைத்தவன். பெண்ணவள் எழ தன் ஒரு கரம் நீட்டியவன், மறு கரம் கொண்டு மெல்ல அவளை அணைத்தவாறு எழுப்பி அமர வைத்தான்.
நீட்டிய அவன் கரத்தினை பற்றி படி எழுந்தவள், அவனை இடையோடு கட்டிக் கொண்டு “மையூ… மையூ என விசும்ப…” பெண்ணவளின் குரல் கேட்டு வந்த அவள் குடும்பத்தாரின் கண்களுக்கு இக்காட்சி விருந்தாக, விஷ்ணு அவர்கள் இருவர் இருக்கும் நிலையினை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் பெரியவர்கள் இருவருக்கும் அக்காட்சி உவப்பனதாக இல்லை என்று அவர்களின் பார்வை உணர்த்த… அவனுக்கு யார் சொல்லுவது , அது அதிருப்தி இல்லை, அச்சம் என்று.
ஏற்கனவே ஒருவன் பிள்ளை தன்னுடையது என உறவு கொண்டாட, இத்தனை நாள் ஜடமாக இருந்தவள் உணர்வு வந்ததும் அந்நியன் ஒருவனிடத்தில் உரிமை கொள்வதை நல்லது என ஏற்பதா..? கெட்டது என தவிர்பதா…? என நிலைகொள்ளாமல் தத்தளித்தது அவ்விரு முதியவர்களின் மனம் .
தன் இடையினை கட்டிக் கொண்டு அழுபவளின் கையினை மென்மையாக தன்னிலிருந்து பிரித்தவன், அவளை சரியாக கட்டிலில் அமர வைத்து, “கியூட்டி பை, இந்த மாதிரி நேரத்தில் இப்படி வேகமா எழுந்திரிக்க கூடாது, பேபி பயந்துடும் என்றான்…அவளின் வயிற்றை சுட்டிக்காட்டி, அவன் சொல்லியதன் பொருள் புரியாமல் பாவை விழிக்க… பெண்ணவள் பாவனையில் ஷ்யாமளனின் உதடுகளில் முறுவல் தோன்றியது.
அப்புன்னகையுடனே கலைந்திருந்த அவள் குழல்களை காதின் ஒரம் சொருகியவன்… அவளின் வல கையினை எடுத்து மேடிட்டிருக்கும் வயிற்றில் பதிக்க, இத்தனை நாள் அன்னை தன்னை கண்டுக் கொள்ளவில்லை என்ற கோபமோ அல்லது பல நாள் கடந்து தாயின் ஸ்பாரிசம் கிட்டிய உவகையா தெரியவில்லை…குழந்தை துள்ள, பெண்ணவள் அணிந்திருக்கும் உடையினை தாண்டியும் சிசுவின் அசைவை கண்டான் ஷ்யாம்.
இதுவரை எந்த உணர்வும், அசைவும் இன்றி ஜடமாக இருந்தவள் முதல் முறையாக குழந்தை துள்ளிவதை உணர்ந்து பயம் கொண்டு தன் இரு கை கொண்டு தன் பெருத்த வயிற்றை பற்றியவள்.
“ அ… அ… மை…மை… மையூ… மையூ… எ… என்… வ… வயத்துகுள்ள…” என தான் உணர்வதை உரைதிட முடியாமல் மங்கை அவள் மருள, பெண்ணவளின் நிலை உணர்த்த ஷ்யாம்.
“ ஈஸி… ஈஸி… பேப், ஒன்னும் இல்லை பயப்படாதே… உன் வயற்றில் இருக்குற பேபி மூவ் பண்றாங்க… அவ்வளவு தான்” என விளக்கம் அளித்தான்.
பெண்ணவளோ, தன் வயிற்றினை பயப்பார்வை பார்த்தவாறு, “ என் வயத்துக்குள்ள எனக்கு தெரியாம பேபி எப்படி போனாங்க…?” என கேள்வி கேட்க, அங்குள்ள அனைவரின் பார்வையும் பாவை மீது பாய, அவர்கள் விழிகளிலும் அக்கேள்வியே நிறைந்திருந்தது.
இந்த கேள்விக்கு அங்குள்ள யாரால் பதில் கூற முடியும், ஷ்யாம் என்ன சொல்வது என தெரியாமல்… “ அது… அது…” என தயங்க, பெண்ணவளோ அவனை நோக்கி விரல் நீட்டி… “ நான் தூங்கும் பொழுது எனக்கு தெரியாம நீ பேபியை என் வயற்றில் வெச்சிட்டியா மையூ…” என்றவளின் கேள்வியில் ஷ்யாம் உறைந்து நின்று விட, பெரியவர்கள் பொருள் அறியாமல் தன் பேத்தி கேட்ட கேள்வியில் மனம் வெதும்பி அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து அமர்ந்து விட்டனர். விஷ்ணுவோ “பாப்பா, என்ன பேசுற…” என்றவனின் குரலில் கோபத்தினை விட அற்றாமையே நிறைந்திருந்தது.
ஏனெனில் சற்று நேரத்திற்கு முன்பு, இதே கேள்வியை தானே தானும் மாற்றி கேட்டோம்… இப்பொழுது இளையவளும் அதையே கேட்க… உதவ வந்தவன் மீது வீண் பழி சுமத்துவதாக ஷ்யாம் தங்களை தவறாக கருதி விடுவனோ என்ற அற்றாமையில் சத்தமாக கத்தி விட்டான்.
விஷ்ணுவின் கத்தலில் பெண்ணவளின் உடல் அதிர கட்டிலில் அமர்ந்திருந்தவள் சட்டென எழுந்து தன்னை விட்டு விலகி நின்றிருந்த ஷ்யாமை நெருங்கி அணைத்துக் கொள்ள…
பெண்ணவளின் ஸ்பாரிசமும், விஷ்ணுவின் சத்தமும், கோதையின் கேள்வியில் உறைந்த நின்றிருந்தவனை நிகழ்விற்கு அழைத்து வந்தது.
தன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவளின் உடல் பயத்தில் நடுங்குவதை உணர்ந்த ஷ்யாமின் ஒரு கரம் அவள் முதுகினை மெல்ல வருடி கொடுக்க… தாய் அவள் பயந்ததில் சேய்யும் பயந்ததோ என்னவோ, மீண்டும் சுற்றி சுழல… இம்முறை பார்வையில் அல்லாது ஸ்பாரித்தின் மூலம் சிசுவின் அசைவை உணர்ந்தவனின் கரம், சுற்று சுழலும் பிள்ளையினை மெல்ல வருடியவன்.
“பேப்… நான் என்ன சொன்னேன் வேகமா எழுந்த பேபி பயப்படுவங்கன்னு சென்னேன் தானே… அதையே மறுபடியும் பண்ண என்ன அர்த்தம்…” என செல்லமாக கடித்துக் கொள்ள, மங்கையவளோ அவன் மார்பினிலிருந்து தன் முகத்தினை மெல்ல நிமிர்த்தி அவன் முகம் பார்த்தவள், திரும்பி விஷ்ணுவின் புறம் தன் கரம் நீட்டி “யாரு அவங்க…? அவங்க தீடிர்ன்னு சத்தமா பேசவும் நா.. நான் பயந்துட்டேன்…” என ஷ்யாமளனுக்கு விளக்கமளிக்கின்றேன் என்ற பெயரில் விஷ்ணுவை போட்டுக் கொடுத்தாள்.
ஏற்கனவே விஷ்ணுவை குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழி வீச்சில் அனலை அதிகரிக்க செய்தது கோதையவளின் கூற்று.
கண்களில் கனலும், வார்த்தைகளில் கடுமையும் வெளிபட்டாலும், சிறிது தன் குரலை உயர்த்தாமல் பெண்ணவளை அணைத்தவாறு… “விஷ்ணு, அவகிட்ட இப்படி தான் சத்தமா கத்துவீயா…? பாரு பயத்தில் அவள் உடம்பு எப்படி உதறுது…” என்றவனுக்கு விஷ்ணு “அது… பாப்பா…” என பதிலளிக்க முயன்றவன் ஷ்யாம் பார்த்த பார்வையில் அவன் வார்த்தைகள் அப்படியே பாதியில் நின்றுவிட்டன.
“நானும் அதை தான் சொல்றேன், இப்ப அவ ஒரு குழந்தை மாதிரி, அவ என்ன சொன்னாலும், செஞ்சாலும் நாம பெருச எடுத்துக்க கூடாது, அதுக்கும் அர்த்தமும் கண்டு பிடிக்க கூடாது… அவ தெரிஞ்சி எதையும் பண்ணலை… ஆனா நாம சொல்றதும், செய்றதும் அவ மனசில் பெரிய பாதிப்பை உண்டாக்கும்… சோ இனிமே அவ எதிரில் எதை பேசுனாலும், செஞ்சாலும் கொஞ்சம் பார்த்து பன்ணுங்க என அனைவருக்கும் பொதுவாக சொல்லியவனின் வார்தைகளில் வன்மையிருந்தாலும் அவனின் கரங்கள் மென்மையாக இளையவளை வருடிக் கொண்டிருந்தன.
மெல்ல மெல்ல ஷ்யாமளனின் வருடலில் தாயும் சேயும் அமைதிக் கொள்ள… அவளின் மனத்தினை திசை மாற்ற அங்கு அமர்திருந்த முதியவர்களை சுட்டிக் காட்டியவன் “ இவங்க யாருன்னு தெரியுதா…? என கேட்க, இளையவளோ “இல்லை…” என மறுப்பாக அவன் மார்பினிலிருந்து தன் தலையினை விலக்காமல் இட வலமேன அசைக்க… அவளின் முக மென்மையினை தான் அணிந்திருக்கும் உடையினை தாண்டி உணர்ந்தவனுக்கு … தன் நெஞ்சில் முகம் புதைத்திருக்கும் மங்கை அவளின் மலர் வதனம் பற்றி முத்தமிட்டு சற்று முன்பு தான் உணர்ந்த மென்மை உண்மையா என தன் உதடுகள் மூலம் உறுதிபடுத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகரிக்க, தன் மன போகும் திசை அறிந்தவனுக்கு அந்த மலையகத்தின் குளுமையிலும் அவனுள் வெம்மை பரவியது.
இவ எனக்கு அடி வாங்கி கொடுக்காம விட மாட்டா போலிருக்கே… ஏற்கனவே இவ மையூ… மையூன்னு கட்டிக்கவும், இவ ஃபமிலில இருக்குறவங்க எல்லாம் என்னை ஒரு மாதிரி பார்க்குறங்க…
சிறியவளின் நெருக்கத்தில் தன் மனம் முழுதாக அவளிடம் சரண் புகுவதை உணர்ந்தவன்… இதுல நான் வேற ஏதாவது எக்கு தப்பா செஞ்சி வெச்ச என்னை பற்றி என்ன நினைப்பாங்க…
நோ, இந்த லிட்டில் டெவில் கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கனும், என மனதில் உறுதி எடுத்து கொண்டிருந்தவனின் கன்னம் பற்றியவள்.
“மையூ, என்னால நிக்க முடியாலை… கால்… கால்…” என சொல்லியவள் நிற்க முடியாமல் தடுமாற… தான் எடுத்த உறுதி மொழியை காற்றில் விட்டவன்… சிறுபிள்ளையினை தூக்குவதுப் போல் தன் இருக்கரங்களில் அள்ளியவன் கட்டிலில் சாய்வாக அமர்த்தி பெண்ணவளின் பாதங்களை அராய, அவளின் பாதங்களில் நன்றாக நீர்க் கோர்த்து வீங்கி இருந்தன.
ஷ்யாம் அவள் பாதங்களை அராய்வதை கண்ட அப்பத்தா, வெளியில் சென்று ஒரு பாத்திரத்தில் வெந்நீரும் துண்டும் கொண்டு வந்தவர், இளையவளுக்கு ஒத்தடம் கொடுக்க முயல, பெண்ணவளோ அவரை கண்டு பயந்தவளாக தன் கால்களை பின்னுக்கு இழுக்க முயன்றவளின் எண்ணம் புரிந்த ஷ்யாம் அவளின் பாதங்களை இறுக பற்றியவன் “பேப், எதுக்கு பயம் அவங்க உன் அ… அப்…” என தடுமாற, அவன் தடுமாறுவதை கண்ட சிவசு தாத்தாவோ… “ உன்ற அப்பத்தா ராசாத்தி…” என கூற, சிறியவளோ ஷ்யாமினை பார்க்க, அவனும் ஆமாம் என்னும் விதமாக தலை அசைக்க… அதில் திருப்தியடைந்தவளாக பெண்ணவளும் “அப்பத்தா…” என சொல்லி பார்த்தாள்.
“ ஆமாம் ராசாத்தி, நான் உன்ற அப்பத்தா தான்.” என்றவர் பல நாள் இல்லை இல்லை பல மாதங்கள் கழித்து தன் பேத்தி வாய் திறந்து பேசுவதை கண்டு ஆனந்தம் அடைந்தவராக.. விழிகளில் கண்ணீர் வழிய இளையவளை நெருங்க, அவரின் நெருக்கத்தில் முதலில் பயம் கொண்டு விலக நினைத்தவளின் மனத்தினை முதியவரின் கண்ணீர் எதோ செய்ய, அவரின் முகம் பார்த்து “அப்பத்தா…” என அழைக்க, அவ்வழைபிற்காகவோ காத்திருந்தது போல் பூங்கோதை நாச்சியரோ சிறியவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள… பெண்ணவளும் பெரியவரின் அணைப்பில் பந்தமாக அடைக்கலம் ஆனாள்.
சொன்னது போலவே ஸ்டீவ், மறுநாள் காலையில் ஷ்யாமளனை நேரில் காண வந்தவன், புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் தற்போதிய நிலையினை கண்டவன், தான் எண்ணி வந்தது போல் விசயம் எளிதானது அல்ல என அதிர்ந்து நின்றுவிட்டான்.
தொடரும்




