வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஊனமென்பது குற்றமா? அத்தியாயம்-1(கதையின் முன்னோட்டம்)

Status
Not open for further replies.
அத்தியாயம்-1(a)




மிகவும் ஏழ்மையான குடும்பத்தின் பெண் தான் நம் கதையின் நாயகி மிருதுளா..


குடிகார தந்தையின் அலட்சியத்தால் போலியோவால் பாதிக்கப்படும் நாயகி..

அக்காவின் குறையை தனக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ளும் அடங்காத அடாவடி தங்கையாக இனியா..


மூத்த மகளை நினைத்தே வாழ்க்கை முழுக்க கவலையில் மூழ்கிக் கிடக்கும் குடும்பத்தின் தலைவியும் நாயகியின் தாயாக செண்பகவள்ளி..


சிறிய வயதிலேயே பழைய சாதத்தில் தண்ணீர் ஊற்றி சாப்பிட்டு வளரும் அக்குடும்பத்தின் கடைக்குட்டி குடும்பத்திற்கேற்ப்ப தன் ஆசைகளைத் துறத்து சிறிய வயதில் கல்லூரி படித்துக் கொண்டே சென்னையில் புகழ் பெற்ற பிரபல ஸ்டூடியோ ஒன்றில் பகுதி நேரம் வேலை செய்யும் அழகான ஆண்மகனும் பொறுப்புள்ள தம்பியாக சிவா..


ஏழ்மை குடும்பமாக இருந்தாலும், தன் பெற்றோரை தன்னோடு வைத்தே பார்த்துக்கொண்டார் செண்பகவள்ளி ..


செண்பகவள்ளியை பெற்றவர்கள் அதியமான் -கோசலை தம்பதிகள்.

ஆண் பிள்ளைகள் யாரும் கிடையாது ஒரே ஒரு பெண் செண்பகவள்ளி தான் இந்த மூத்த தம்பதிகளுக்கு இருக்கும் சொத்து..


மூன்று ஏக்கர் காணியில் பயிரை வைத்து தான் இந்த குடும்பத்தில் பிழைப்பு ஓடுகிறது..


அந்த மூன்று ஏக்கர் காணியும் தனது ஒரே மகளான செண்பகவள்ளியின் பெயருக்கு எழுதி வைத்தார் அதியமான்..


அந்த வயதான மூத்த தம்பதிகளுக்கு மிருதுளாவின் மீது உயிர்..


இவர்கள் தான் மிருதுளாவின் குடும்பத்தில் உள்ளவர்கள்..


மிகவும் ஏழ்மையான குடும்பம்.. மூன்று பக்கம் சுவரில் மட்டும் செங்கல்லை அடுக்கி அதற்கு சிமெண்ட்க்கு பதிலாக சுண்ணாம்பு அடித்து பனைஓலையால் வேயப்பட்ட சிறிய குடிசை அது..


குடிசையில் மூன்று அறை மட்டுமே இருக்கும்.


குடிசைக்கு வெளியே சற்று பெரியதான ஓட்டு போட்ட வீட்டை போல் இருக்கும் இடத்தில் தான் மிருதுவின் அறையும், அவளின் தாத்தா பாட்டி தங்கிக் கொள்வதற்காக ஒரு சிறிய அறையும், சிறியதாகக் ஒரு சின்ன சமையலறையும் உள்ளடங்கியது..



குடிசை சுற்றி சிறிய சிறிய மலர் செடிகள், அவரை கொடி கொத்தவரைக்காய் கொடி, வெண்டைக்காய்,கத்திரிக்காய், மிளகாய், தக்காளி போன்று காய் செடிகளும், பலாமரமும், அத்திப்பழம் மரமும், வாழை மரமும் அழகாக காயோடு நிமிர்ந்து நிற்கிறது..





மிருதுளாவின் தந்தை மோகன் ஓயாத குடிகாரர்.. தினக்கூலியாக வேலைக்கு சென்றாலும் அதில் வரும் பணத்தை முக்கால்வாசியை குடித்துவிட்டு தினமும் 200 ரூபாய் மட்டுமே வீட்டிற்கு கொடுப்பார்..


அவரின் மனைவி செண்பகவள்ளி. தினமும் கறி குழம்பு இருந்தால் தான் மோகனுக்கு சோறே இறங்கும். கறிக்குழம்பு இல்லையெனில் அன்று செண்பகவள்ளிக்கு கன்னம் பழுத்திடும் மோகனின் கை வண்ணத்தால்..


கணவர் அடிக்கும் அடியை வாங்கி பழகி விட்டதால் வலியொன்றும் அவருக்கு பெரியதாக தெரியவில்லை..

தங்களின் விழிகளின் முன்னால் மருமகன் மகளை அடிப்பது வயதானவர்களுக்கு வேதனையாக இருக்கும். தினமும் தட்டி கேட்க முடியவில்லை. தட்டி எதிர்த்து கேட்டு பார்த்தும் திருத்தாத மருமகனவனிடம் என்ன பேசி புரிய வைக்க முடியும் அந்த வயதானவர்கள்…



ஆனால் தினமும் கண்ணீரோடு தான் அவரின் வாழ்க்கையே. அவரின் வாழ்க்கை நினைத்து கண்ணீர் வடிப்பதை விட அவரின் மூத்த மகளான மிருதுவை நினைத்து கண்ணீர் வடித்த நாட்கள் தான் எண்ணிலடங்காதது.



சிறிய வயதில் போலியோவால் தாக்கப்பட்ட மிருதுளா தற்போது இருபத்தி மூன்று வயது பருவ மங்கையாய் இருசக்கர நாற்காலியில் அமர்ந்தே அவளின் வாழ்க்கை முழுவதும் கழித்து வருகிறாள்..


பிறக்கும்போது நன்றாக தான் பிறந்தாள் மிருதுளா..


குழந்தை வளர வளர மோகனின் குடிப்பழக்கம் அலட்சியத்தால் குழந்தைக்கான போலியோ தடுப்பூசி போடாமல் விட்டதன் விளைவு,நரம்பு மண்டலத்தின் கடுமையான வைரஸ் தொற்று நோய் பரவ, இரண்டு வயதிலேயே போலியோ நோய் அவளை தொற்றிகொண்டது..


சிறிய வயதிலிருந்து அவளை வளர்க்க முடியாது எங்கேயாவது அனாதை ஆசிரமத்தில் விட்டு விடலாம் என்று மோகன் கூறிய போது அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை செண்பகவள்ளியால்.


திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்து தவமாய் தவமிருந்து பெற்று பிள்ளை தான் மிருது.




கணவர் கூறிய வார்த்தையை கேட்டு தாயுள்ளம் பதறியது, " முடியாது என்னால் முடியாது. கடவுள் கொடுத்த தவத்தை அனாதை ஆசிரமத்தில் விடுவதற்கும் , அதைக் குப்பைத் தொட்டியில் வீசுவதற்கும் சமம். நான் எப்படி கஷ்டப்பட்டாவது இந்த குழந்தையை வளர்த்து படிக்க வைத்து பெரிய ஆளாக்குவேன்" அன்று மனைவியின் வார்த்தை கேட்டு கணவரால் வேறு ஏதும் செய்ய முடியவில்லை.


குழந்தையை வைத்துகொண்டு மனைவி படும் கஷ்டத்தை கண்ணால் பார்த்தாலும் உதவி ஏதும் செய்யாமல் முகம் சுழித்துக் கொண்டு சென்று விடுவார்.


வெளியில் வயல் வேலைக்கு செல்லும்போது மகளை குளிப்பாட்டி உடை உடுத்தி தலைவாரி முகத்தில் பவுடர் அடித்து அலங்காரம் செய்து இடுப்பில் அமர வைத்து கொண்டு செல்வார் தாயானவர்.வீட்டில் எங்கேயும் தனியாக விடமாட்டார் மிருதுளாவை.


அவளின் பாட்டி தாத்தாவிடம் தான் அதிகம் இருப்பாள் மிருதுளா..


மிருது வளர வளர அவளுக்கு மூன்று வயதாகி இருக்கும் போது தான், செண்பகவள்ளி மீண்டும் கருவுற்றார்.


தாயின் வயிற்றை ஆசையாக தினமும் தடவிப் பார்த்தே அவளின் நாட்கள் மிகவும் சந்தோஷமாய் சென்றது..


அவளின் தங்கை இனியா தாயின் கருவறையை விட்டு உலகத்திற்கு எட்டிப் பார்க்கும் வரை தான் மிருதுவின் இறுதி சந்தோஷமான நாட்கள் ..


குடிகார தந்தையால் மிருதுவுக்கு எந்த கஷ்டமும் இல்லை.. ஆனால் அவர் ஒருபோதும் ஒருநாளும் மிருதுவை தூக்கி கொஞ்சுனது கிடையாது..

குடிகாரனாக இருந்தாலும் குடும்பத்தின் மேலுள்ள அக்கறையை அவருக்கு அதிகம். ஆனால் அவருக்கு மிருதுவை கண்டாலே பிடிக்காது. இரண்டாவது பெண்ணாக பிறந்த இனியாவை தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்.

எந்தக் குறையுமின்றி அழகாய் சிவப்பாய் பிறந்திருக்கிறாள் இனியா.


காலங்கள் செல்ல செல்ல இடையில் ஒரு மகனவனை பெற்றெடுத்தார் செண்பகவள்ளி..


குடும்பத்தின் வாரிசாக சிவா பிறந்ததும் கண்டு கொள்ளவில்லை மோகன் .

மகனை விட மகள்

இனியாவிற்கே அதிக சலுகை இருந்தது அந்த வீட்டில்..

காரணம் கேட்டால்

இரண்டாவது மகள் உலக அழகியாம்.

உலகில் இல்லாத பேரழகியாம்..


அவள் என்ன பொருள் கேட்டாலும் உடனே வாங்கி வந்து கொடுப்பார் மோகன்.


அன்பும் பாசமும் அளவுக்கு அதிகமாகக் கொடுத்து வளர்த்த மகள் தான் தன்னையே கொலை செய்ய துணிய போகிறாள் என அப்போதே தந்தையானவர் அறிந்திருந்தால் மகளவளை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்க மாட்டாரோ என்னவோ…





—--------


20 வருடங்களுக்குப் பிறகு..




சென்னை மாநகரம்.


சென்னையில் மிகவும் பிரபலம் பெற்றது வர்மன் குரூப் ஆப் மாடலிங் ப்ரொடக்ஷன் அண்ட் ஸ்டூடியோ நிறுவனத்தின் சிஇஓ அவன்..



விஐபிகள் பெரும்புள்ளிகள் வசிக்கும் பகுதியது..


கிரீன் சிட்டி என்ற பகுதியில் புதியதாக கட்டிடம் அதிகமாக இருந்த அபார்ட்மெண்டில் வசித்து வருகிறான் ஆதித்யவர்மன்.


பெயருக்கு தான் அவன் உயிரோடு வாழ்ந்து வருகிறானே தவிர அவனின் வாழ்க்கையில் வந்தவளோ அவனையும் அவனின் குடும்பத்தையும் சோதித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.


சோதித்துப் பார்ப்பது அவளுக்கு அத்தனை பிடித்த விஷயம் ஒன்று. ஒருவரை சோதித்து பார்த்து சோதனைக்கு மேல் சோதனை கொடுப்பதுதான் அவளின் வாடிக்கையே..


யாருமற்ற பெண்ணாய் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு நேர்காணல் தேர்வில் தேர்ச்சி பெற்று வேலைக்கு வந்து சேர்ந்தாள் ஆதித்யவர்மனின் பிஏவாக …



நல்லவள்,அன்பானவள் அர்த்தமானவள் பொறுப்பானவள்

புரிதலானவளாக நல்ல மனைவியாக இருப்பாள் என அவளை நம்பி அவள் போட்ட அக்ரீமெண்டில் கண்ணை மூடியே கையெழுத்து போட்டானவன். அதுதான் அவனின் வாழ்க்கையில் அவன் செய்த மிகப் பெரிய பிழையே..


அந்தப் பிழை தற்போது விவாகரத்தாக கோர்ட்டில் வந்து நிற்கிறது. குற்றம் தான்யாவின் மீது இருந்தாலும், அனைத்து பழியும் அந்த அக்க்ரீமெண்டால் ஆதித்யனின் மீது வந்தது.


அக்ரிமெண்ட்டை முழுவதும் நன்றாக படிக்காமல்,அவளை நம்பி கண்ணை மூடி கையெழுத்து போட்டதின் விளைவு 30 கோடி மதிப்புள்ள சொத்து தான்யாவின் பெயருக்கு மாற்றப்பட வேண்டும் என கோர்ட் உத்தரவிட, வாழ்க்கையில் என்றைக்குமே கண்ணீர் வடியாதவன் அன்று தான் முதல் முதலில் அவனின் விழிகளில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வந்தது.


ஆரம்பத்தில் நல்லவளாக இருந்தவள் தான். அவளை வில்லியாக அரக்கியாக மாற்றியது ஆதித்யவர்மனின் தொழில்..




மாடலிங் துறை இல்லையெனில் சினிமா துறையே இல்லை.. சென்னையில் புகழ்பெற்ற அவனின் ஸ்டூடியோவில் தான் நிறைய நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணி அனேகமாக நடக்கும்..


பிஏவாக வேலை சேர்ந்ததிலிருந்து உடுப்பற்ற நிலையில் அவன் எடுக்கும் புகைப்படம் வீடியோக்கள் அருகிலிருந்தே பார்த்து முகம் சுளிப்பாளவள்.

அவள் தான் தான்யா..


உடுப்பற்ற நிலையில் புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட காரனாக இருக்கும் அவனுக்குள் தைரியமும், திறமையும் இருக்க வேண்டும். அவன் சிறிய வயதில் இருக்கும் போதே அந்தத் தொழிலை தான் செய்து வந்தார் அவனின் தந்தை மகேந்திரவர்மன். கல்லூரி படிப்பை முடித்த பிறகு அவர் செல்லும் இடத்திற்கு மகனவனையும் அழைத்து செல்வார்..


அப்போது வாலிபனாக இருந்த அவனுக்கு தந்தை செய்து வந்த தொழிலை முதல் முதலில் கண்டப்போது தந்தையின் மீது அதிர்ச்சியும் கோபமும் அடைத்தாலும், அவன் பார்த்தவரை தந்தை யாரிடமும் அத்துமீறலில் ஈடுபடவில்லை என்பது தான் உண்மையே..


மிகவும் கண்ணியமாகவும்,செய்யும் தொழிலே தெய்வமாக பார்க்கும் மகேந்திரவர்மன் எப்போதும் தொழிலில் தோல்வியடைத்தது கிடையாது..


அப்போது சிறிய ஸ்டூடியோவாக இருந்த வர்மன் குரூப்ஸ்,

தற்போது சில வருடங்களுக்கு பிறகு....
 
Last edited:
Status
Not open for further replies.
Top