வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஊனமென்பது குற்றமா? கதையின் திரி

Status
Not open for further replies.
வணக்கம் செல்ல குட்டிஸ் நான் தான்..

உங்களோடு பிரம்மஸ்திரத்தில் நானும் எனது கதையின் நாயகியான சிங்கப்பெண்ணின் அஸ்திரமாய் களம் இறங்கிருக்கிறேன்...

"ஊனமென்பது குற்றமா?"

ரொம்ப ரொம்ப அழுத்தமான வித்தியாசமான கதைக்களமிது..

ஊனம் என்பது உடலில் தான் இருக்குமா? ஏன் மனதில் இருக்காதா?

உடலில் இருக்கும் குறையொன்று வெளியே தெரிந்தாலும், அதைக் கண்டு அலட்சியம் படுத்தி கேலி கிண்டல் பேசும் மக்களுக்கு மட்டும் வெளியே தெரியாமல் உள்ளே குறையொன்று இருக்கத்தான் செய்கிறது..


மணமேடை வரை வந்து பாதியில் நின்றது திருமணம். அனைத்து உண்மைகளையும் கூறியப்போது சரி சரி என தலையாட்டிய மாப்பிள்ளை. திருமணத்துக்கு வந்த உடன்படித்த நண்பர்களின் கேலி கிண்டலை கண்டு மனம் மாறும் மாப்பிள்ளையவன் . மண மேடைக்கு வரை வந்து தன் பேத்தியின் திருமணம் பாதியில் நின்று போனதை கண்டு நெஞ்சுவலியால் உயிர்போகும் நாயகியின் அன்பு தாத்தா..


பிறகு ஒரு வருடம் கழித்து மீண்டும் ஆரம்பமானது நாயகிக்கு வரன் பார்க்கும் படலம்..

ஆனால் வெளியே தெரிந்த குறையை கண்டு நாயகியை திருமணம் செய்ய மறுக்கும் ஒருவன். ஒருவன் மட்டுமல்ல 50 க்கு மேற்பட்டவரன்கள் பார்த்தும் குறையைக் குத்தி காட்டி செல்லும் வரன்கள்..

மனதளவில் உடைந்து போன நாயகி, அவளின் ஒரே கனவான கலெக்டர் படிப்பில் கவனம் செலுத்துகிறாள்.

திருமண ஆசையை ஓரம் தள்ளிவிட்டு, மகளின் ஆசைக்காக துணை நிற்கும் பெற்றோர்கள்..

அவளின் கனவு நிறைவேறியதும் குத்திக் காட்டு விட்டு சென்ற 50 வரங்கள் தேடி வந்தால் அதில் ஒருவனை தனது மன்னவனாக தேர்ந்தெடுப்பாளா நாயகி?

நிஜத்தில் இன்னார்க்கு இன்னார் என்று கடவுள் சொல்லி வைத்தார்ப்போல் நாயகியின் மனதை கொள்ளை அடிக்கப் போகும் நாயகனவன் யார்?

நிறைய கதையில் படித்திருப்பீர்கள் வில்லன் ஒருவன் கதையில் இருப்பான்..

ஆனால் நம்ம கதையின் நாயகிக்கு வில்லியே உள்ளது..

சொந்த ரத்தமே வில்லியானால் மனதளவில் தாங்குவாளான நம் நாயகி?

என்பதே கதையின் களம்…


உங்களின் ஆதரவால் தான் இந்த போட்டியில் நான் கலந்து கொள்கிறேன்..

போட்டியில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பளித்த பிரியங்கா சகோதரிக்கு எனது நன்றிகள்..ei9C2CL62997.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top