வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என்னுள் உன்னை கண்டேனடா - டீசர்

Status
Not open for further replies.
#பிரம்மாஸ்திரம்_2023
#அஸ்திரம்_2

#என்னுள் உன்னை கண்டேனடா

ஹாய் நண்பர்களே... ❤️❤️❤️

மாறிட்டே இருக்கும் டிரண்டு...
நான் தான் அஸ்திரம் ரெண்டு...

ஆளுக்கு முன்ன பேர குடுத்துட்டு, அந்த பக்கம் போட்டியாளர்கள் பெயரெல்லாம் பார்த்தாலே லைட்டா... இல்ல இல்ல ரொம்பவே உதறுது. எழுத்து உலகுக்கு நான் ரொம்பவே புதுசு... கதை நகர்வில் ஏதேனும் தோய்வு இருந்தா... உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு பக்குவமா சொல்லுங்க, திருத்திக்க முயற்சி பண்றேன்.

கதையில் இருந்து சிறு துளி.....

"எந்த லவ் மேரேஜுக்கு நான் தகுதியே இல்லனு நீங்க சொன்னீங்களோ, அதே லவ் மேரேஜை பண்ணிட்டு உங்க முன்னாடி நான் வந்து நின்னு காட்டுவேன், காட்டுவேன், காட்டுவேன்." என்று மூன்று முறை எக்கோ போல் கூறியவள் "அதுவரைக்கும் இந்த சரண்யா வாயில பச்ச தண்ணி அய்யய்யோ அது வேண்டாம் ரொம்ப கஷ்டம் ஈஸியா ஏதாவது சபதம் இருக்கா..." என்று சத்தமாக தொடங்கி முனுப்பாக முடித்தவள் தந்தை புறம் திரும்பி 'அப்பா ஈஸியான சபதம் எதாவது இருக்கா பா...?" என்று வினவ

அர்ஜுனோ சிரிப்புடன் "குள்ள கத்திரிக்கா மௌன விரதம்வேனா இருந்து பாரேன்..." என்று ஆலோசனை வழங்க

"நீ சும்மா இருடா அப்பா அப்பா ஈசியா ஏதாவது ஒரு சபதம் சொல்லுங்கப்பா ப்ளீஸ்பா, நான் ஏன் சபதத்தை முடிக்கணும்..." என்று வினவ "உலகத்திலேயே யார்கிட்ட சபதம் போடுறீயோ அவங்க கிட்டயே என்ன சபதம் போடுறதுன்னு கேட்டது நீ ஒருத்தி தாண்டி..."

************************************************

"நம்ம பெருசால்லாம் ஒன்னும் கஷ்டப்பட வேண்டாம், அவ பிளான் படியே நாமளும் போவோம். அவனை பார்த்து கண்ண மூடி பல்லிளிச்சுட்டு நிப்ப இல்ல அதுதான் நமக்கான டைம் அந்த டைம் ஃபிக்ஸ் பண்ணி தான் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல புகுந்து அவளுக்கு நா தாலி கட்டி அவளை தொக்க தூக்குறோம். அவ தானே சொன்னா தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன்னு நம்ம தாலி கட்டி தூக்கிட்டு போவோம் அதுக்கு பிறகு இருக்குடா அந்த அர்ஜுனுக்கும் சரண்யாவுக்கும் இந்த கார்த்திக் யாருன்னு புரிய வைக்கிறேன் அவர்களுக்கு என்றவனின் மனது முழுக்க கோபம் கோபம் கோபம் மட்டுமே".

***********************************************

"நாளைக்கு இதே நேரம் அவ கழுத்துல தாலியோட கலங்கி போய் என் முன்னாடி நிப்பா..." என்றவனின் நினைப்பை மெய் ஆக்குவது போல் இதுவரை இருந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் அடங்கியவளாய் தன் கழுத்தில் கிடந்த தாலியையே வெறித்துப் பார்த்தபடி கண்கலங்கி நின்றிருந்தாள் சரண்யா.
 
Status
Not open for further replies.
Top