வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என் உள்ளம் யான் நீயே - கதை திரி

Status
Not open for further replies.
உள்ளம்- 16

அவள் மனமோ 'அவனோட குழந்தைனு பொய் சொன்னதுக்கே இப்படி கெஞ்சுறானே, ஒருவேளை உண்மையாவே இவனோட குழந்தையை சுமந்துட்டு இருந்து இருந்தேனா பேசியே என் மனசை கரைச்சி இருப்பான் போலவே. லாயருனு கரெக்ட்டா காட்டுறான். ஒருத்தரோட மனநிலையை பேசியே மாத்திடுறான். அய்யோ சாமி இவன் நமக்கு சுத்தமா செட்டாக மாட்டான்டா. முதல இவனை கழட்டி விடணும். அப்புறம் வயித்துல வளர்ற சனியனை கலைக்கணும்' என்று நினைத்தவள் உத்தமனின் கரத்திலிருந்து தன் கரத்தை உருவி எடுத்து,

"உத்தமன் என்னால ரொம்ப நேரம் இங்கேயே நிக்க முடியல. தலையெல்லாம் சுத்துற மாதிரி இருக்கு. நம்ம நாளைக்கு இதை பத்தி பேசுவோம். நான் பேசுற வரை நீ அப்பா கிட்ட இதை பத்தி எதையும் பேச வேணாம். நானே அப்பா கிட்ட பேசி புரிய வைக்கிறேன்" என்றவள் அங்கே இருந்து விலக போக,

மீண்டும் ராதிகாவை தடுத்தவன், "இரு ராதி நானே உன்னை ட்ராப் பண்றேன். இப்படி கன்சீவ்வா இருக்கிற நேரம் தனியா எல்லாம் எங்கும் போக கூடாது" என்று கட்டாயப்படுத்தி ராதிகாவை காரில் ஏற்றி அவள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றான் உத்தமன்.

போகும் வழியெல்லாம் உத்தமனின் பேச்சு குழந்தையை பற்றியே தான் இருந்தது. ராதிகாவுக்கோ தலைவலியே ஏற்பட்டு விட, இருக்கையில் கண்களை மூடி தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்து விட்டாள்.

ராதிகா உறங்குகிறாள் என்று நினைத்த உத்தமனோ ஒற்றை கரத்தால் அவள் வயிற்றின் மீது தன் கரம் வைத்தவன்,

"பாப்பா பயப்படாம அம்மா வயித்துல இருங்க. அப்பா இருக்கேன். பாப்பாவுக்கும் அம்மாவுக்கும் எதுவும் நடக்க விடாமல் அப்பா பார்த்துப்பேன். இந்த உத்தமனோட புள்ளை எப்போவும் தைரியசாலியா தான் இருக்கணும். நீங்க என்னோட நேசமல்லி பாப்பா. அப்பாவுக்கு நேசமல்லி பெயர்ன்னா ரொம்ப பிடிக்கும். பாப்பா நீங்க அப்பா கிட்ட வந்ததும் அப்பா உங்களுக்கு நேசமல்லினு தான் பெயர் வைப்பேன்" என்று கண்கலங்கி மிகுந்த உருக்கமான குரலில் அவன் கூற,

நேசமல்லி என்ற பெயரை காதில் வாங்கிய ராதிகாவோ 'இது என்ன கன்றாவி நேம். நேசமல்லி குண்டுமல்லினு ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க கூட தெரியுதா. நல்லவேளை இவனை கழட்டி விடுற முடிவை எடுத்தேன். இல்லனா என் பசங்க ஃபியூச்சர் நாசமா போய் இருக்கும்' என்று தனக்குள் புலம்பிக் கொண்டு இருந்தவளின் இல்லம் வர,

அவசரம் அவசரமாக காரிலிருந்து இறங்கிய ராதிகா "பை உத்தமன்" என்று சொல்லிவிட்டு அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வேகமாக உள்ளேச் சென்று விட்டாள்.

அவள் இப்படி ஓடுவதை பார்த்த உத்தமனோ "பிரக்னண்டா இருக்கோம்னு கொஞ்சம் கூட நினைப்புல இல்ல பாரு இவளுக்கு. எப்படி ஓடுறாள்" என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன் ஒரு விதமான மனநிலையில் தான் அங்கே இருந்து சென்றான்.

வீட்டினுள் நுழைந்தவளை மிகவும் சந்தோஷமாக வரவேற்ற நாதன் "ராதிகாம்மா அப்பா உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன்" என்று சொல்லிக் கொண்டே மாப்பிள்ளையின் போட்டோவை தன் கைப்பேசியிலிருந்து எடுத்து அவளிடம் நீட்டிக் கொண்டு,

"மாப்பிள்ளை பெரிய பிஸ்னஸ்மேன். அண்ட் அவரோட அப்பா எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பன்டா. உனக்கு கூட இவங்களை தெரியும்டா. அவரோட பையனுக்கு தான் கல்யாணம் பண்ண பொண்ணு தேடிட்டு இருந்தாங்க. நான் தான் உன்னை பத்தி சொன்னேன். என் பொண்ணுன்னு தெரிஞ்ச உடனே, எதை பத்தியும் யோசிக்காம கல்யாணம் சீக்கிரம் முடிச்சிடலாம்னு சொல்லிட்டாங்க. ஏன்னா மாப்பிள்ளை பிஸ்னஸ் பண்ண யூ எஸ்க்கு கிளம்புறாராம். அதுக்கு அப்புறம் அவர் வர இரண்டு வருஷம் ஆகிடுமாம். சோ மேரேஜ் பண்ணி பொண்ணையும் சேர்த்து அனுப்புறதா ப்ளான். எனக்கு ஓகே தான். நீ என்ன சொல்ற" என்று மகளின் முகத்தை ஆராய்ந்தார்.

ராதிகாவோ பையன் போட்டோவை பார்த்துக் கொண்டே 'செமயா இருக்கானே. போட்டோலயே இவ்வளவு ஹாட்டா இருக்கான். அப்போ நேர்ல இன்னும் செமயா இருப்பான்ல. நம்மளோட பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்புக்கு எந்த ப்ராப்ளமும் வராது. பிஸ்னஸ்மேன் வேற, மேரேஜ் ஆனதும் யூஎஸ் கிளம்பிட வேண்டியது தான். அதுக்கு அப்புறம் அந்த பூமர் உத்தமனோட தொல்லை இருக்காது. அதுக்கு முதல வயித்துல இருக்கிற சனியனை கலைக்கணும்' என்று எண்ணியவள் வர வைக்கப்பட்ட வெட்கத்துடன்,

"உங்க இஷ்டம்ப்பா" என்று சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி ஓடினாள்.

நாதனுக்கோ மகள் மறுக்காமல் சம்மதம் சொன்னது மனதிருப்தி ஏற்பட, விஷயத்தை தன் நண்பனிடம் பகிர்ந்துக் கொண்டவர், அடுத்த வாரமே திருமண நடக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்து இருந்தார்.

மறுநாளே சௌந்தர்யாவை அழைத்துக் கொண்டு வேறு ஒரு சிறிய மருத்துவமனைக்குச் சென்றவள், நிறைய பணம் கொடுத்து தன் வயிற்றில் வளரும் கருவை அழித்து இருந்தாள் ராதிகா.

கரு கலைத்ததும் தான் அவளுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

"இப்போ தான்டி நிம்மதியா இருக்கு. ஏதோ பெரிய பாரம் குறைஞ்சது போல ஃபீலாகுது" என்று பேசிக் கொண்டு இருக்கும் போதே,

அடித்து பிடித்துக் கொண்டு மூச்சு வாங்க வந்து இருந்தான் உத்தமன்.

ஆம் சௌந்தர்யா தான் "ராதிகா வேறு ஒரு மருத்துவமனைக்குச் சென்று குழந்தையை அப்பார்ட் செய்ய போகிறாள்" என்று மருத்துவமனையின் லைவ் லொகேஷன் உடன் குறுஞ்செய்தி ஒன்றை உத்தமனுக்கு அனுப்பி வைத்து இருந்தாள்.

ஆனால் என்ன மிகவும் தாமதமாக வந்து விட்டான். அவனை கடுப்புடன் பார்த்த சௌந்தர்யாவின் மனமோ 'எல்லாம் முடிஞ்சதும் வரான் லூசு பையன்' என்று திட்டிக் கொண்டாள்.

சௌந்தர்யா அனுப்பின குறுஞ்செய்தியை பார்த்ததுமே, ஒரு கேஸ் விஷயமாக நாதனுடன் பேசிக் கொண்டு இருந்தவனுக்கு திக்கென்று ஆனது. உடனே கிளம்ப தயாரானவனின் செவிகளில் ராதிகாவின் திருமண விஷயத்தை பற்றி நாதன் கூற, உத்தமன் அப்படியே உறைந்து போய் விட்டான்.

உள்ளத்தில் ஏதோ ஒன்று அழுத்த, பாரமாக உணர்ந்தவன் இதயம் படபடவென அடித்துக் கொள்ள, முகம் எல்லாம் சட்டென்று வேர்வையில் நிறைந்து வழிய, அவரிடம் தன் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ள கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு தன்னை சாதாரணமாக வைத்துக் கொண்டவன், அவசர வேலையாக வெளியேச் செல்ல வேண்டும் என்று அனுமதி வாங்கிக் கொண்டு அங்கே இருந்து புறப்பட்டு இருந்தான் உத்தமன்.

காரை அதிவேகமாக அந்த மருத்துவமனையை நோக்கிச் செலுத்தியவனின் உள்ளம் முழுவதும் இப்பொழுது நம்பிக்கை துரோகத்தின் வலிகள் மட்டுமே நிரம்பி இருந்தது.

எந்த பெண்ணை ஆசை ஆசையாக விரும்பினானோ அதே பெண்ணால் தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று நினைத்தவனுக்கு அழுகை வேறு முட்டிக் கொண்டு வர, அதே நேரம் அவனின் கைப்பேசி அழைப்பு ஒலி ஏற்படுத்த, ஆத்திரத்துடன் அழைப்பை ஏற்றவன் எரிச்சலாக "யாரு?" என்றான்.

வழமையாக எதிர்முனையிலிருந்து எந்த குரலும் கேட்காமல் போக, கடுப்பான உத்தமன் "டேய் நானே செம காண்டுல இருக்கேன். நீ வேற போன் போட்டு பேசாம எரிச்சலை கிளப்பாதே. நான் மிரட்டினதில் இருந்து இத்தனை மாசமா கால் பண்ணாம தானே இருந்த. இப்போ குளிர் விட்டு போச்சா. திரும்ப போன் பண்ணி பேசாம வெறுப்பு ஏத்துறீயா?" என்று அழும் குரலிலே உத்தமன் பேசி விட்டு சட்டென்று அழைப்பு துண்டித்தவன் கடுப்புடன் கைப்பேசியை இருக்கையில் வீசி எறிந்தான்.

ஆனால் அவன் மருத்துவமனை வருவதற்குள் இங்கே அனைத்துமே நடந்து முடிந்து இருந்தது.

உத்தமனை அங்கே எதிர்பார்க்காத ராதிகாவோ அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

'எப்படி இவனுக்கு இந்த ஹாஸ்ப்பிட்டல் தெரிஞ்சுது' என்று யோசித்தவள், தன் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு,

"உ... உத்தமன் நீ... இங்க எப்படி?" என்று கேட்டாள்.

அவனோ கடும் சினத்தோடு நேரடியாகவே "ஏய் ராதிகா எதுக்குடி என்னை நம்ப வச்சி ஏமாத்தின?" என்று கேட்க,

அவனின் அதிகார தொனியில் முதலில் திகைத்து போன ராதிகாவோ 'எப்படியோ தந்தை மூலம் தன் திருமண விஷயத்தை கேள்விப்பட்டு தான் வந்து இருப்பான். இதற்கு மேல் இவனிடம் நடிக்க வேண்டிய அவசியம் தனக்கில்லை. எப்படியோ கழட்டி விட போறது தானே. இப்போவே கழட்டி விட்டால் நமக்கு ஒரு தொல்லை முடிஞ்சிது. என்ன தாலி ஏறுனதுக்கு அப்புறம் ஒரு சிம்பதியை உருவாக்கலாம்னு நினைச்சேன். அப்பா கட்டாய திருமணம் பண்ணி வச்சிட்டாரு உத்தமன். என்னை மன்னிச்சிடுனு. பட் இப்போ நம்ம சுயரூபத்தை தான் காட்டணும் போலவே' என்று கடுமையான குரலில்,

"உன்னை யாரு நம்ப சொன்னது உத்தமன். நான் உன் கூட பழகும் போதே சொன்னேன் தானே. எனக்கு இந்த லவ் கிவ் மேல எல்லாம் இன்ட்ரஸ்டிங் இல்லைனு. நீ தான் என் பின்னாடியே வந்து தொங்கிட்டு இருந்த. சரி ஒன்டே ஸ்டே பண்ணா, என்னை நீ விட்ருவேன்னு பார்த்தேன். ஆனாலும் விடாம என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்த. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?" அலட்சியமாக வந்த வார்த்தையை கேட்டு,

வலியுடன் "அது நம்ம குழந்தைடி. இன்னும் முழுசா உருவாகி கூட இருந்து இருக்காது ராதி. அதுக்குள்ள எப்படிடி அதை கலைக்க உனக்கு மனசு வந்தது?"

"பின்ன கலைக்காம பத்து மாசம் சுமந்து பெத்துக்க சொல்றீயா? பெத்து யாரு வளர்க்கிறது உத்தமன்?"

"என் கிட்ட கொடுத்து இருக்க வேண்டியது தானே ராதிகா?"

"எதுக்கு உத்தமன் குழந்தையை வச்சி என்னை பிளாக் மெயில் பண்ணவா?"

"பிளாக் மெயிலா? என்னை பார்த்தா உன்னை பிளாக் மெயில் பண்றவன் மாதிரியாடி இருக்கேன். உன்னை எவ்வளவு சின்சியரா லவ் பண்னேன்னு உனக்கு தெரியாதா ராதிகா?"

"ம்கூம் லவ்... கருமம் பிடிச்ச லவ். நீ எதுக்கு என்னை லவ் பண்ணி என் பின்னாடியே சுத்தினனு எனக்கு தெரியாதா என்ன? என்னை வச்சி நீ பெரிய ஆளா வரணும்னு தானே லவ் பண்ற மாதிரி நடிச்ச. ஜஸ்ட் இது லவ் தானே. என்னவோ உன் சொத்தே பறிபோனது போல பிகு பண்ணுற"

"ஜஸ்ட் லவ் தானா? எவ்வளவு அசால்ட்டா சொல்ற நீ? நீ சொன்ன இந்த ஜஸ்ட் லவ்க்காக ஒரு நாள் நீ ஏங்குவ. அப்பவும் உனக்காக நான் வெயிட் பண்ணுவேன்டி. அப்போ தெரியும் என்னோட லவ் ஜட்ஸ் லவ்வா இல்லை சின்சியரா லவ் பண்ணேனானு" என்று சொன்னதை கேட்டு கேலியாக சிரித்த ராதிகா,

"கண்டிப்பா உன்னை தேடி வர மாட்டேன் உத்தமன். எப்படியோ இந்நேரம் உனக்கு விஷயம் தெரிஞ்சி இருக்கும். எனக்கு கல்யாணம்னு. சோ நான் கல்யாணம் பண்ணிட்டு ஜம்முனு போயிட்டே இருப்பேன்" என்றாள் திமிராக. சௌந்தர்யாவோ அமைதியாக உள்ளுக்குள் குதுகலமாக நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அதை கேட்டு மொத்தமாக உடைந்த போன உத்தமன், கடைசியாக ராதிகாவை ஒரு கணம் பார்த்தான்.

அப்பார்வையில் வெறுப்பும் வெறுமையும் மட்டுமே இருந்தது.

அவளிடம் சென்று தன் காதலுக்காக மன்றாட ஒரு துளி கூட அவனுக்கு விருப்பமில்லை.

இப்பொழுது கூட குழந்தைக்காக மட்டுமே ஓடோடி வந்து இருந்தான் உத்தமன்.

ஆனால் குழந்தையும் இல்லாமல் போக, பாரமாக உணர்ந்த இதயத்தின் வலியை தாங்கிக் கொண்டு அங்கே இருந்து வெளியேறி இருந்தான் உத்தமன்.


ராதிகாவை விட்டு பிரிந்து வந்த உத்தமனோ அடுத்து வந்த நாட்களில் ஏதோ நடைபிணம் போல் சுற்றிக் கொண்டு திரிந்தவன் தான், ராதிகாவின் திருமண நாளன்று மனம் தாளாமல் மது அருந்தியவன் தன் காரை எடுத்துக் கொண்டு எத்திசையில் பயணிக்கிறோம் என்று தெரியாமல் சென்றவன் தான் அங்கயற்கண்ணி என்னும் நேசமல்லியின் மீது காரை மோதினான்.
 
உள்ளம்- 17

நடந்ததை நினைத்து பார்த்த உத்தமன் நிலை மொத்தமாக உரு குலைந்து போக, அப்படியே காரில் அமர்ந்து இருந்தவனின் கன்னங்களில் அவன் கண்ணீர் தடங்கள்.

உத்தமனின் உள்ளம், தேகம், வதனம், கரங்கள் என மொத்த அங்கமும் நடுங்க ஆரம்பிக்க, அவனால் நிலை கொள்ளவே முடியவில்லை.

இப்பொழுது தான் போதையில் நடந்தவை அனைத்தும் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவனை சித்திரவதை செய்ய, போதையில் அவன் செய்த தவறுகளை எண்ணி வெட்கி போனான். உடன் அன்று இரவு அவன் ராதிகாவுடன் சேரவில்லை என்ற ஞாபகமும் வந்து போனது.

தெரியாமல் விரும்பிய பெண்ணின் வாழ்க்கையையே மொத்தமாக கெடுத்ததை எண்ணி பல நாள் தூக்கத்தை தொலைத்தவன் இவன்.

இன்று யாரென்றே தெரியாத ஒரு பெண்ணின் கற்பையே குடிப் போதையில் சூறையாடியதை நினைத்து பார்க்கும் போது மிகவும் அவமானமாக உணர்ந்தான்.

அதுவும் இப்பொழுது தன் உள்ளம் முழுவதும் நிரம்பி இருப்பவளின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டி போட்டதை எண்ணி வேதனை அடைந்தான் உத்தமன்.

சுக்கானை ( ஸ்டேயரிங்) அழுத்தமாக பிடித்தவன் "ச்சீ த்தூ நீயெல்லாம் மனுஷனாடா? குடிச்சா என்ன வேணாலும் பண்ணலாம் என்ற அளவுக்கு போய் இருக்க. அதுவும் யாருனு தெரியாத ஒரு அப்பாவி பெண்ணோட லைப்பையே மொத்தமா கொலாப்ஸ் பண்ணிட்டு எதுவுமே தெரியாம உன்னை நம்ப வச்சி ஏமாத்தினவ பின்னாடி சுத்திட்டு இருந்து இருக்க" என்று தன்னை தானே கண்ணாடியில் பார்த்து காரி துப்பிக் கொண்டவன் மனம் அதீத அழுத்தத்தில் கரங்கள் சுக்கானை தட்டியது.

'அந்த குழந்தை என்னுடைய சொந்த குழந்தை... அது கூட தெரியாத முட்டாளா இருந்து இருக்கேனே' என்று "ஆ..." எனக் கத்தினான் உத்தமன்.

'முட்டாள்... முட்டாள்' என்று தன்னை தானே அடித்தும் திட்டியும் காரி துப்பிக் கொண்டான்.

"இப்போ எப்படி என் நேசமல்லி முகத்துல முழிப்பேன். யாருனு தெரியாத என்னோட குழந்தையை சுமந்து பெத்து கொடுத்து இருக்கா. ஆனால் நான், இது எதுவுமே தெரியாம எவ பின்னாடியோ சுத்திக்கிட்டு இருந்து இருக்கேன். ச்சைக் என்னை நினைச்சா எனக்கே அவமானமா இருக்கே. இந்த வாய் தான்" என்று தன் வாய் மீது அடித்துக் கொண்டு,

"இந்த வாய் தான் அன்னிக்கு நேசமல்லி ஹாஸ்ப்பிட்டல இருந்தப்ப" 'எவனோ ஒருத்தன் கிரிக்கெட் விளையாடிட்டு போவான். அதை சுத்தம் பண்ண நான் பலியாடு ஆகணுமா? சாம்பாதிச்ச காசு எல்லாம் எவன் பொண்டாட்டி புள்ளைக்கோ செலவு பண்ண நான் ஒன்னும் அவவ்ளவு நல்லவன் இல்லடா உத்தமன்' என்ற வசனம் நினைவுக்கு வந்து போக,

"நீ உத்தமனா?" என்று தன்னை தானே நினைத்து காரி துப்பிக் கொண்டான்.

எவ்வளவு நேரம் அங்கேயே இருந்தான் என்று தெரியவில்லை. அவன் அலைப்பேசி சத்தம் எழுப்பவும் தான் சுயநினைவுக்கே வந்தான்.

யார் அழைப்பது என்று எடுத்து பார்க்க, அதில் அவனின் வீட்டின் எண்கள் வர, நேரத்தை பார்த்தான், "ச்சே டைம்மாகிடுச்சி. நேசமல்லி இருட்டுல இருக்க மாட்டாளே. பயப்படுவாளே" என்று முணுமுணுத்தவன் அவளின் அழைப்பை எடுத்து பேசும் அளவுக்கு தைரியம் இல்லாமல் போக, வேகமாக காரை கிளப்பிக் கொண்டு இல்லம் நோக்கி விரைந்தான்.

அடுத்த சிறிது நேரத்தில் அவன் பிளாட்டினுள் நுழைந்தவன் எப்பொழுதும் அவனின் கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு, மின்தூக்கி உதவியோடு வீட்டை நோக்கிச் சென்றான்.

மேலே ஏற ஏற, உத்தமனின் இதயமோ வேகமாக துடிக்க ஆரம்பிக்க, பதற்றத்துடன் நின்று இருந்தவனுக்கு முகம் உடல் எல்லாம் வியர்த்து போனது.

இதுவரை நேசமல்லி, அவனுக்கு யாரோ ஒரு பெண்.

ஆனால் இப்பொழுது, யாரோ ஒருத்தி அல்ல அவள்.

அவனின் மொத்தமாக அவள் ஒருத்தி மட்டுமே இந்த நேசமல்லி.

ஆம் இந்த உத்தமனின் நேசமல்லி.

அவனின் வீடு இருக்கும் தளத்தின் பகுதியில் மின்தூக்கி நிற்க, இதயம் படபடவென அடிக்க ஆரம்பிக்க, கால்கள் நடுங்க, செய்த தவறு அவனை கூனிக் குறுகி போக வைத்தது.

மனதை சிறிது திடப்படுத்தி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வீட்டின் வாசலில் நின்றவன் பாதம் அடுத்த அடியை எடுத்து வைக்க மறந்து போனது.

அங்கே அவனுக்காக குழந்தையை கையில் வைத்துக் கொண்டு வாசலையே பார்த்தபடி பெரும் ஏக்கத்தோடு அமர்ந்து இருந்தவளை பார்த்தவன் குற்றவுணர்ச்சி தலை தூக்க, அவமானத்தில் பெண்ணவளின் முகத்தை கூட பார்க்க முடியாமல் தலையை கவிழ்த்துக் கொண்டான் உத்தமன்.

ஒரு உயிரை சுலபமாக எடுக்கும் இக்காலத்தில் தெரியாமல் செய்த தவறை எண்ணி வெட்கி போனான் இந்த உத்தமன்.

தெரிந்தோ தெரியாமலோ, ஆனால் செய்த தவறு தவறு தானே. இந்த உலகத்தில் கிடைக்கும் பூவுடலை தன் இச்சைக்கு ருசி பார்த்து விட்டு, கசக்கி தூக்கி எறியும் இக்காலத்தில், போதையின் பிடியில் செய்த தவறை எண்ணி கொல்லாமல் கொல்லும் குற்ற உணர்ச்சிகளில் சிக்கி தவித்து போனது அவன் உள்ளம். அங்கயற்கண்ணியிடம் மண்டியிட்டு சொல்லி அழ அவன் உள்ளம் தவிக்க, எக்காரணங்களுக்காக மண்டியிட்டு இருக்கிறான் என்று சொல்ல விரும்பாத காரணத்தால் தன் தலையை தாழ்த்திக் கொண்டு அவள் முன் ஒரு குற்றவாளி போல் நின்று இருந்தான் உத்தமன்.

அதுவும் அவளை பார்க்கும் பொழுது எல்லாம் அவன் பேசிய பேச்சுக்கள் மீண்டும் வந்துச் செல்ல, தன்னை தானே வெறுத்து போய் விட்டான் உத்தமன்.

வாசலில் உத்தமனை பார்த்ததுமே குழந்தையை தூக்கிக் கொண்டு தாங்கி தாங்கி நடந்து வந்தவள் உதடோ வழக்கம் போல் "ஏன்ப்பா லேட்டு. நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா. பாப்பா அங்க பாருங்க அப்பா வந்துட்டாரு" என்று பேசிக் கொண்டே அவனை நெருங்க,

எப்பொழுதுமே அப்பா என்ற வார்த்தையை கேட்டு முகம் கொள்ளா புன்னகையுடன் குழந்தையை வாரி அணைத்துக் கொள்ளும் அவன் கரங்கள்.

இன்று அந்த 'அப்பா' என்ற வார்த்தையை கேட்டு செத்தே விட்டான் உத்தமன்.

ஒற்றை வார்த்தைக்கு இவ்வளவு வலிமை இருக்கிறதா என்று எண்ணும் அளவுக்கு அவனின் நிலை, நிலை குலைந்து போனது.

இரு ஜீவன்களின் முகத்தை பார்க்க கூட முடியாமல் தவித்து போனவன் மனம் குற்றவுணர்ச்சியில் சிக்கிக் கொண்டது.

இருவரையும் கடந்து நேராக அவன் அறைக்குள் நுழைந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

அவனின் செயலில் திகைத்து போன நேசமல்லியோ "அப்பாக்கு என்னாச்சு?" என்று குழந்தையிடம் கேட்டவள் மனம் 'ஒரே ஒரு கிஸ் தானே கொடுத்தார். அதுக்கே இப்படி நடந்துக்கிறார்' என்று யோசிக்க தொடங்கினாள் நேசமல்லி.

தூவாலைக்குழாயில் கொட்டும் நீரின் கீழ் வெகுநேரம் நின்றவனுக்கு அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.

குற்றவுணர்ச்சியில் தத்தளிக்க அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியாமல் திண்டாடி போனான்.

ஆனால் ரொம்ப நேரம் இப்படி ஓடி ஒளிய முடியாது என்று அவனுக்கு தெரியும். இருந்தும் அவனால் அவளிள் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

இதில் பிள்ளையின் முகத்தில் எப்படி முழிப்பான். பல தடவைகள் 'எவனோ பெத்த பிள்ளைக்கு நான் ஆய் துடைச்சி விடுற நிலைக்கு வந்து இருக்கேனே' என்று புலம்பி இருக்கிறான்.

ஆனால் இன்று அதை நினைத்து பார்க்கும் போது கேவலமாக உணர்ந்தான்.

அவன் மனமோ 'எவனோ பெத்த பிள்ளை இல்லை. நீ பெத்த பிள்ளைக்கு தான் ஆய் துடைச்சி ஆயா வேலை பார்த்து இருக்கிற' என்று நினைக்க,


நெற்றி பொட்டில் அடித்தது போல் இருந்தது இவ்வார்த்தைகள்.
 
Last edited:
உள்ளம்- 18

வெகுநேரமாகியும் உத்தமன் குளியலறையை விட்டு வெளியே வராமல் இருப்பதை கவனித்த நேசமல்லியோ சற்று பதற்றமாகி தான் போனாள்.

குழந்தையை கரத்தில் ஏந்திக் கொண்டு மெதுவாக படுக்கையறைக்குள் நுழைந்தவள் யோசனையுடன் "ஏன் இவரு இவ்வளவு நேரம் வெளியே வராமல் இருக்காரு. ஒருவேளை பாத்ரூமுக்குள்ள வழுக்கி விழுந்து மயங்கிட்டாரோ" என்று பதறியவள் பிள்ளையை தொட்டிலில் கிடத்தி விட்டு வேகமாக குளியலறை கதவை படார் படார் என்று தட்டி "ப்பா என்னாச்சு? மூச்சு பேச்சு ஏதாவது இருக்கா? இல்ல மயங்கி போயிட்டீங்களா?" என்று கேட்டவள் தன் மடத்தனத்தை எண்ணி நாக்கை கடித்துக் கொண்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

"ச்சைக் மயங்கி போனா எப்படி பேச முடியும்?" என்று முணுமுணுத்து மீண்டும் கதவை தட்டி "ப்பா" என்று அழைத்தாள்.

அவளின் பதற்றமான குரலை கேட்ட உத்தமன், அதற்கு மேல் நேசமல்லியை சோதிக்க விடாமல் இடுப்பில் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு கதவை திறந்து தலையை கவிழ்ந்தபடி வெளியே வந்தவனோ அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் கடந்துச் சென்றவன் மாற்று உடையை எடுத்துக் கொண்டு வெளியேறி இருந்தான்.

அவனின் இந்த திடீர் மாற்றத்தை விசித்திரமாக உணர்ந்த நேசமல்லியோ யோசனையுடன் சமையலறைக்குச் சென்று மேசையில் உணவுகளை எடுத்து வைக்க தொடங்கினாள்.

உடையை மாற்றிக் கொண்டு வந்த உத்தமனோ அவளை எதிர்க்கொள்ள முடியாமல் மீண்டும் படுக்கையறைக்குள் நுழைய போக,

"ப்பா எங்க போறீங்க?" என்று கேட்டாள்.

அவளின் அழைப்பில் நின்றவன் திரும்பி கூட பெண்ணவளின் வதனத்தை காணாமல் அப்படியே நின்றபடி "தூங்க" என்றான் ஒற்றை வரியில்.

"சாப்பிடலையாப்பா?" என்றவளிடம் இல்லை என்று மட்டும் தலையை ஆட்டி விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.

அதை அதிர்ந்து பார்த்த நேசமல்லியின் கண்களோ கலங்க ஆரம்பித்து இருந்தது.

இத்தனை மணி நேரம் அடக்கி வைத்து இருந்த கண்ணீர் அருவி போல வெளி வர தொடங்க மனமோ அனைத்தும் தவறாக எண்ண தொடங்கி இருந்தது.

'நான் என்ன அவ்வளவு அசிங்கமாவா இருக்கேன். என் முகத்தை கூட பார்க்காம பேசிட்டு போறாரு. காலையில் ஒரே ஒரு கிஸ் தானே கொடுத்தாரு. அதுக்கே இப்படி ஒதுங்கி ஒதுங்கி போறாரு. நான் ரொம்ப குண்டா இருக்கேனு அசிங்கப்பட்டு விலகி போறாரா?' என்று அப்படியே மேசையின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து முகத்தை மூடி அழ ஆரம்பித்து விட்டாள் நேசமல்லி.

உள்ளே போன உத்தமனின் நயனங்களில் அங்கே தொட்டிலில் உறங்கிக் கொண்டு இருந்த குழந்தை விழ, பட்டென்று அவன் உள்ளம் அடைத்துக் கொண்டது.

கால்கள் நடுங்க ஆரம்பிக்க, இதயம் வலியை மென்று முழுங்க வலிக் கொடுத்த பகுதியின் மீது தன் கரத்தை வைத்து அழுத்திக் கொண்டே பிள்ளையின் அருகில் வந்து தொட்டிலுக்கு நேரே அமர்ந்து தொட்டிலின் கீழே காலை நீட்டியபடி கரத்தை புடவையின் கீழே கொண்டுச் சென்று குழந்தையின் உறக்கத்தை கெடுக்காதவாறு பிடித்துக் கொண்டவன் கண்ணீர் துளி பிள்ளையின் பாதத்தில் விழுந்தது.

குழந்தையின் பிஞ்சு பாதத்தில் முகத்தை வைத்தவன் குரல் கரகரக்க,

"இந்த அப்பாவை மன்னிச்சிடுங்கடா தங்கம். நீங்க உருவானதே இந்த அப்பாவுக்கு தெரியாது. தெரிஞ்சி இருந்தா கண்டிப்பா உங்களையும் அம்மாவையும் விட்டு இருந்து இருக்க மாட்டேன். என் உள்ளங்கையில வச்சி தாங்கி இருந்து இருப்பேன். எனக்கு தெரியும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பாவம் தீராதுனு. ஆனால் மன்னிப்பு கேட்கிறதை தவிர வேற வழியும் எனக்கு தெரியல. இதுக்கு மேல அப்பா உங்களையும் அம்மாவையும் யாருக்காகவும் எதுக்காகவும் இனி விட்டுக் கொடுக்க மாட்டேன். இது உங்க மேல சத்தியம் குட்டி நேசமல்லி" என்று கண்ணீர் மல்க அந்த பிஞ்சு பாதத்தில் தன் முகத்தை வைத்து மன்னிப்பை யாசகமாக கேட்டுக் கொண்டு இருந்தவனின் செவிகளில் வெளியே பெரிய நேசமல்லியின் விசும்பல் சத்தம் கேட்டது.

அவளின் அழுகுரல் கேட்கவும் மெதுவாக பிள்ளையின் உறக்கம் கலைந்து போகாத வண்ணம் மெல்ல எழுந்தவன் தன் முகத்தை ஆழ்ந்து தேய்த்து விட்டுக் கொண்டே வெளியே வந்து எட்டி பார்த்தான்.

அவளின் விசும்பல் சிறிது சிறிதாக பெரியதாக தொடங்க, அந்த சத்தம் கேட்டு வெளியே வந்து எட்டி பார்த்த உத்தமனோ அதிர்ந்து போய்,

"ஏய் நேசமல்லி..." என்று அழைத்துக் கொண்டே அவள் அருகில் சென்றான்.

"இப்போ எதுக்கு அழுதுட்டு இருக்க?" என்று பதறிப் போய் அவன் கேட்க,

அவளோ தன் ஒற்றை கரத்தை அவனை நோக்கி உயர்த்தி "இல்ல, என் கிட்ட வராதீங்க. நான் ரொம்ப குண்டா அசிங்கமா இருக்கேன்னு தானே என் பக்கம் கூட திரும்பி பார்க்காம போறீங்க. காலையில நானா கிஸ் கொடுங்கனு கேட்டேன். ஏன் என்னை விட்டு விலகி விலகி போறீங்கனு தானே கேட்டேன். அதுக்கு நீங்க தான் அப்படி எல்லாம் இல்லனு சொல்லி கிஸ் கொடுத்தீங்க. ஆனால் கிஸ் கொடுத்த அடுத்த செகண்ட் ஏதோ ஒன்னுல உங்க உதடு பட்டு அருவெறுப்பான மாதிரி என்னை அப்படியே ஒதுக்கி விட்டு நீங்கப்பாட்டுக்கு போயிட்டீங்க. நானும் சரி ஏதோ என் பக்கத்துல வந்தா உங்களால நார்மலா இருக்க முடியலனு நினைச்சி அதை பத்தி பெருசா யோசிக்காம விட்டேன். ஆனால் திரும்ப வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் இதோ இதுவரை என் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காம இருக்கீங்க. என் முகத்தை கூட பார்த்து பேச முடியாத அளவுக்கா நான் குண்டு சட்டி மாதிரி இருக்கேன்" என்று மீண்டும் முகத்தை மூடி அழுதவள்,

"எனக்கே தெரியும்ப்பா நான் ரொம்ப குண்டா கேவலமா இருக்கேனு. உங்க கூட வெளியே ஒன்னா வந்தா அது உங்களுக்கு எவ்வளவு அசிங்கமா இருக்கும்னு புரியுது. அதுக்காக நான் என்னப்பா பண்ண முடியும் சொல்லுங்க. நான் ஏன் இவ்வளவு குண்டா இருக்கேனு எனக்கே தெரியல. என்னோட உடம்பை பார்த்து நானே பலமுறை ஃபீல் பண்ணி இருக்கேன். அவசரத்துக்கு கூட என்னால டக்குனு எழுந்துக்க முடியலையேனு ரொம்ப நாள் அதை நினைச்சி அழுது இருக்கேன் தெரியுமா. அது கூட பரவாயில்ல. ஆனால் நம்ம பாப்பா அழும் போது என்னால உடனே எழுந்து வந்து அவளை ஆசையா தூக்க கூட முடியல. அப்போ எல்லாம் என் மனசு எப்படி வலிக்கும் தெரியுமாப்பா? என்னை ஏன் இவ்வளவு பெரிய குண்டு பொண்ணா படைச்ச ஆண்டவானு அந்த சாமி கிட்ட கத்தி நிறைய டைம் அழுது இருக்கேன். என் பொண்ணையும் என்னை மாதிரி குண்டா மாத்திடாத. அப்புறம் அவளும் என்னை போல ஒவ்வொரு விஷயத்துக்கும் தயங்கி தான் நிக்கணும். அந்த வலியை மட்டும் என் பொண்ணுக்கு கொடுத்திடாத. அது மரணத்தை விட பெரிய கொடுமை" என்று அழுதுக் கொண்டே மனதில் இருப்பதை எல்லாம் வெளியே கொட்ட தொடங்கியவள்,

விழி நீரோடு உத்தமனை ஏறிட்டு பார்த்து, "நீங்க நினைக்குற மாதிரி நான் பன்னி மாடு போல தான் இருக்கேன். உங்களோட தேவையை" என்றவள் ஒரு கணம் நிறுத்தி பின் அழுத்தமாக "உடல் தேவையை என்னால திருப்திப் படுத்த முடியாம போயிடும்னு தானே என்னை கழட்டி விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டீங்கப்பா" என்று கேட்டவளை பார்த்து உறைந்து போய் நின்று விட்டான் உத்தமன்.

என்ன மாதிரியான வார்த்தைகளை எல்லாம் கொட்டிக் கொண்டு இருக்கிறாள் இவள். ஒரு பொழுதும் அவள் பேசியது போல் அவன் நினைத்து கூட பார்த்ததில்லை. சும்மா கடுப்பில் இவ்வளவு குண்டா இருக்கிறாளேனு புலம்பி இருக்கானே தவிர, ஒருகாலமும் அவனின் நேமல்லியை அவன் அசிங்கமாக பார்த்தது என்ன நினைத்தது கூட இல்லை.

அவனின் மனமே இப்பொழுது தீயில் விழுந்த புழு போல் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதில் மேலும் தீயை அள்ளி வீசி விட்டாள் அல்லவா இந்த நேசமல்லி.

ஏற்கனவே குற்றவுணர்ச்சியில் செத்துக் கொண்டு இருந்தவனுக்கு நேசமல்லியின் வலியும் வேதனைகளும் ஏக்கங்களும் அவனை மேலும் மேலும் குற்றவுணர்ச்சிக்கு தள்ள,

அதை தாங்கிக் கொள்ள முடியாமல் செய்த தவறுக்கு எப்படி அவளிடம் மன்னிப்பு வேண்டுவது என்று தெரியமால் எதை பற்றியும் யோசிக்காமல் சட்டென்று பெண்ணவளின் காலில் விழுந்து பாவ மன்னிப்பு வேண்டினான் உத்தமன்.

"ஏய் நேசமல்லி என்னை மன்னிச்சிடுடி. நான் எதுவுமே தெரிஞ்சி பண்ணல. அன்னிக்கு..." என்று ஆரம்பிக்க,

நேசமல்லியோ தன்னவன் தன் காலில் விழுந்ததை பார்த்ததுமே பதறி போய் சட்டென்று எழுந்துக் கொள்ள முயன்றவள் மார்பு பகுதி அந்த மேசையின் மீது இடித்துக் கொள்ள, அதில் வலியை கொடுக்க, தன் மார்பகத்தை பிடித்துக் கொண்டு அலற ஆரம்பித்து விட்டாள் நேசமல்லி.

அதை பார்த்து உத்தமனோ பதறி போக, "ஏய் என்னடி" என்று கேட்டுக் கொண்டு அவளை அழைத்து சோபாவில் அமர வைத்தவன் எந்த வித தயக்கமுமின்றி பெண்ணவளின் நெஞ்சின் மீது கரத்தை வைத்து தடவிக் கொடுத்தான். அதில் அவளின் தாய்ப் பால் சுரக்க தொடங்க, உடனே அருகிலிருந்த துணியை எடுத்து அதன் மீது வைத்து அழுத்தியவன் "ரொம்ப வலிக்குதா?" என்று கேட்டான்.

அவளோ விழிகளை மூடி பற்களை கடித்து வலியை பொறுத்துக் கொண்டு இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.

உத்தமனோ "நீ வேணா பாப்பாக்கு ஃபீட் பண்றீயா?" என்று கேட்க, அதற்கும் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

பின் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி குடிக்க கொடுத்தவன் மீண்டும் இடித்துக் கொண்ட பகுதியின் மீது தடவிக் கொண்டே திரும்ப,

"ரொம்ப வலிக்குதாடி?" என்று கேட்டான்.

அவளின் வலி அவனுக்கும் உணர்த்தி இருக்கும் போல். அவன் கண்களும் கலங்கி போய் இருந்தது.

அவனின் குரல் கரகரப்பை கவனித்தவள் வியப்பாக "நீங்க ஏன்ப்பா கலங்கி போறீங்க? எனக்கு தானே அடி" என்றவளை இப்பொழுது சற்று கோபத்துடன் கலங்கிய விழிகளால் முறைத்து பார்த்தவன்,

"உனக்கு வலின்னா, அது எனக்கும் வலிக்கும் தான்டி" என்றவனை பார்த்து விரக்தியாக,

"சும்மா நடிக்காதீங்கப்பா" என்றாள்.

அதில் மேலும் கோபம் கொண்ட உத்தமன் "நீயா லூசு போல ஏதாவது ஒன்னு கற்பனை பண்ணிட்டு பேசிட்டு இருக்காதடி. இப்போ என் உள்ளம் முழுக்க நிறைஞ்சி இருக்கிறது நீ மட்டும் தான்" என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தை தன் இருக்கரத்தாலும் தாங்கியவன்,

"நான் உத்தமனா இல்லையானு கேட்டா சத்தியமா எனக்கு தெரியாதுடி. ஆனால் உன் கிட்ட மட்டும் நான் உத்தமனா இல்லைனு எனக்கு தெரியும். இதுவரைக்கும் நடந்து முடிஞ்ச எல்லாத்துக்கும் என்னால இப்போதைக்கு மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை மட்டும் தான் கேட்க முடியும். உன் கிட்ட மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லாதவன் தான் இந்த உத்தமன். ஆனால் மன்னிப்பை தவிர வேற என்ன சொல்றதுனும் தெரியல. காலம் முழுக்க இப்போ உன் காலடியில விழுந்து கிடந்த மாதிரி விழுந்து இருக்க நான் தயார். என்னை தாங்கிக்க உன்னால முடியுமாடி" என்று உருக்கமாக கேட்டவனை ஆச்சரியத்துடன் பார்த்தபடி அமர்ந்து இருந்தவளுக்கு அந்நொடி அடிப்பட்ட இடத்தில் வலி கூட தெரியாமல் போனதின் மாயம் தான் என்னவோ.

அவன் எங்கும் தான் உத்தமன் என்று நிரூபிக்க போராட விரும்பவில்லை.

செய்த பாவத்திற்கான பிராயச்சித்தத்தை செய்ய விரும்பினான் இந்த உத்தமன்.
 
Status
Not open for further replies.
Top