ammu kutty
Moderator
அத்தியாயம் 39
பவ்யாவோ மீட்டிங் நடக்கும் இடத்துக்கு வர, அங்கே எற்கனவே மீட்டிங் ஆரம்பமாகி இருந்தது.
பவ்யாவும் அமைதியாக நழுவி, யஷ்வந்துக்கு அருகில் இருந்த தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்.
ஆனால் யஷ்வந்தோ அவளை கண்டு கொள்ளவே இல்லை.
அவனது வேலையில் கவனமாகவே இருந்தான்.
ஒரு வழியாக மீட்டிங் முடிய, அங்கே யஷ்வந்த், பவ்யாவை தவிர யாருமே இருக்கவில்லை.
யஷ்வந்தோ சற்று இறுக்கத்துடனேயே பைலை புரட்டிக் கொண்டிருக்க, அவன் பக்கத்திலிருந்த பவ்யாவோ 'இவர் கிட்ட எப்படி பேசுறதுன்னே தெரிலயே!' என்று பயந்த படி,
"சார்..." என்றாள் மெல்லிய குரலில்.
வழக்கம் போல அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவள் அழைத்தது கூட அவனுக்கு கேட்டதா என்பதே சந்தேகம் தான்.
பெண்ணவளுக்கோ சற்று கடுப்பாக, "என்னங்க" என்றாள் அழுத்தமாய்.
அவளின் 'சார்' என்ற வார்த்தை இப்போது 'என்னங்க' என்று மாறியதும் அவன் புருவங்கள் சற்று இடுங்க,
விழிகளை நிமிர்த்தி அவள் மீது பார்வையை செலுத்தினான்.
பவ்யாவோ எச்சிலை கூட்டி விழுங்கிய படி, "நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்" என்றாள் புதிராக.
அவனும் அவள் முகத்தையே பார்த்து கொண்டு "வாட்?" என்றான் கர கரப்பான குரலில். அவன் பேச்சில் இன்னுமே அந்த கோபம் தொனித்தது.
அவளும் அதை புரிந்து கொண்டவளாய், பெரு மூச்சு ஒன்று விட்டவள்,
"இந்த வாரத்துக்குள்ள நான் சஞ்சனா வீட்டுல இருந்து கிளம்பிடணும்னு ஹவுஸ் ஓனர் சொல்லிட்டாங்க." என்று மெல்லிய குரலில் கூறினாள்.
ஏனோ அவனிடம் வெளிப்படையாக தன் மனதில் உள்ளதை சொல்ல முடியாமல் இப்படி சுற்றி வளைத்தாள்.
ஆனால் யஷ்வந்தோ நெற்றியை நீவிய படியே, இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டே, "சோ வேற வீடு பார்க்க போறியோ?" என்றே வினவ,
அவளோ சட்டென அவனை ஏறிட்டு பார்த்தவள், "நான் எதுக்கு வேற வீடு பார்க்கணும்?" என்று கேட்டே விட்டாள்.
அவள் எதிர் பார்த்தது என்னவோ இந்த பதிலை அல்லவே! அவன் தன் வீட்டுக்கு வா என்றே அழைப்பான் என நினைத்தாள்.
யஷ்வந்தோ இதழை கடித்து புன்னகையை அடக்கிய படி, "அப்போ தெருவுலயா இருக்க போற?" அவன் கிண்டலாக வினவ,
பவ்யாவோ 'இவருக்கு நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா இல்லையா?' என்று நொந்து கொள்ள,
அவள் முக மாற்றத்தை பார்த்து உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டவனுக்கோ அவள் எண்ணம் எப்போதோ புரிந்து விட்டது.
ஆனால் வேண்டும் என்றே தெரியாதது போல நடித்தான்.
அவளோ கடுப்பாகி இருக்கையில் இருந்து எழுந்தவள் "நான் எதுக்கு தெருவுல இருக்கணும்? நான் உங்க பொண்டாட்டி தானே! என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டிங்களா?" என்று விலுக்கென கேட்டாள்.
அதற்கு மேலும் பொறுமை அவளுக்கில்லை.
அவனோ அவளை நக்கலாக பார்த்து கொண்டே, "சோ நான் இப்போ உன்ன என் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு ஆசை படுற?" என்று புருவத்தை ஏற்றி, இறக்கி நிதானமாக வினவ,
அவளோ எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
அவன் வேண்டும் என்றே தன்னை சீண்டி பார்க்கிறான் என்று அவளுக்கு புரிந்து விட்டது.
யஷ்வந்தோ "என்ன பதிலையே காணோம். வாய திறந்து சொல்லுடி!" என்றான் கேள்வியாக,
பவ்யாவும் அவனை முறைத்து கொண்டே, "என்ன சொல்லுறது? அதான் தெரிதுல்ல." என்று எரிச்சலாக சீற,
அவனோ நெற்றியை நீவிய படியே, "அப்போ மேடம் மனசு மாறிட்டீங்கன்னு சொல்லுறீங்க?" என்று கேட்க,
பவ்யாவோ அதற்கு மேலும் பொறுமை இழந்தவள், "ஆமா ஆமா ஆமா... நான் உங்களை ஏத்துக்கிட்டேன். உங்க கூட வாழணும்னு இப்போ ஆசை படுறேன். போதுமா?" என்று சத்தமாக கத்தியே விட்டாள்.
யஷ்வந்தோ அவள் செயலை பார்த்து இதழ் கடித்து புன்னகையை அடக்கிய படி பார்த்து கொண்டிந்தான்.
பவ்யாவோ "இப்போ எதுக்கு என்னை இப்படி பார்க்குறீங்க?" என்று காண்டாக கேட்க,
அவனோ "இல்லை நேத்து வரைக்கும் என் கூட வாழவே முடியாதுன்னு அடம் பிடிச்சிட்டு இருந்த அந்த லூசு பொண்ணா இன்னக்கி நான் தான் வேணும்னு இப்படி ஆபிஸ்ன்னு கூட பார்க்காம கத்திட்டு இருக்காளேன்னு ஆச்சர்யமா பார்க்குறேன்" என்று ஏகத்துக்கும் நக்கலாக சொல்ல,
அவளோ "என்ன? நான் லூசு பொண்ணா?" என்று கோபமாக மேசையை தட்டிய படி சீற,
அவனோ இதழை வளைத்த படி, "அப்போ இல்லையா?" என்று பதிலுக்கு அவளிமே கேட்டான்.
ஏனோ அவளை கோப படுத்தி பார்ப்பதற்கு அவனுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது போலும்.
பவ்யாவோ "உங்க கிட்ட பேசினது என் தப்பு" என்று எரிச்சலாக கூறியவள், அங்கிருந்து செல்ல, அவனும் அமைதியாக நாடியில் கை வைத்து கொண்டு அவள் பின்னழகை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
பவ்யாவோ 'என்ன இவன் நம்மள நிறுத்தவே இல்ல' என உள்ளுக்குள் எண்ணிய படி, தன் நடையை சற்று தளர்த்தியவள், மெதுவாக அவனை திரும்பிப் பார்க்க,
யஷ்வந்தோ அவளை கொஞ்சமும் கவனியாது போல மீண்டும் பைலை புரட்ட ஆரம்பித்து விட்டான்.
அதை கண்ட பவ்யாவுக்கு ஆத்திரம் தான் வந்தது.
இத்தனை நாள் தன் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
இப்போது அவளாக மனம் மாறி தன் மனதில் உள்ளதை முன் வந்து சொல்லி இருக்கிறாள் அவன் அதை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அல்லவா அலட்சிய படுத்துக்கிறான்.
இத்தனைக்கும் அவளே தன்னை வீட்டுக்கு அழைத்து செல் என்று சொன்ன பிறகும், அவன் அதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே!
நினைக்க நினைக்க அழுகை வேறு வந்தது.
தன் முடிவை கேட்டும் அவனிடம் இருந்து எந்த மாற்றமும் இல்லையே! இன்னுமே முகத்தில் ஒரு இறுக்கத்துடன் தான் இருந்தான்.
'பாவி கண்டுக்கவே மாட்டேங்குறான். சரியான காட்டு மிராண்டி. எப்பவுமே நான் தான் இவன் கிட்ட போய் கெஞ்ச வேண்டி இருக்கு. ச்சே...' என்று உள்ளுக்குள் புலம்பியவள் விறு விறுவென கதவை திறந்து கொண்டு வெளியேறி விட,
அவள் சென்ற அடுத்த நொடி பைலை மூடி விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனோ, "எனக்கு தெரியும்டி. உன்னால நான் இல்லாம இருக்க முடியாதுன்னு." என்று கூறிக் கொண்டவன் மனம் இப்போது தான் ஒரு நிம்மதி பெரு மூச்சையை வெளி விட்டது.
உண்மையில் இந் நொடி அவன் மனம் எவ்வளவு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறது என்பதை வார்த்தைகளால் விபரிக்கவே முடியாது.
இத்தனை வருடம் அவனுக்கு கிடைத்த அனைத்து சந்தோஷமும் ஒரே நாளில் கிடைத்து விட்டால் எப்படி இருக்குமோ அப்படி தான் இன்று இந்த கணம் இருந்தது.
ஆனால் அவள் முன்னிலையில் அவன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
யஷ்வந்தை பற்றி தான் தெரியுமே! மிகவும் அழுத்தக் காரன் ஆயிற்றே!
அவனது உணர்ச்சிகளை அவ்வளவு எளிதில் அடுத்தவர் முன் வெளிப்படுத்தி விடுவானா என்ன?
இப்போதுகூட, அவளது முடிவு அவனுக்குள் ஏற்படுத்திய மகிழ்ச்சியை, ஒரு ரகசியப் புன்னகையாக மட்டுமே உதட்டில் தேக்கிக் கொண்டான்.
ஆனால் இது எதுவும் தெரியாத பவ்யாவுக்கு தான் அவன் தன் முடிவை அலட்சிய படுத்தி விட்டான் என்று எண்ணி கோபம் வந்தது.
அவன் குணத்தை பற்றி அறிந்து இருந்தாலும் அவளால் இதை அவ்வளவு இலகுவில் ஏற்று கொள்ள முடியவில்லை.
எப்படி அவன் தன்னை புறக்கணிப்பான் என்று எண்ணி ஆத்திரப் பட்டாள்.
அதன் பிறகு அவள் அவனிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
ஆனால் அவன் தன்னிடம் வந்து பேசுவான் என்று அவள் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் யஷ்வந்த் பற்றி தான் தெரியுமே!
அவள் எண்ணத்தை அறிந்து வேண்டும் என்றே அவளை கண்டுகொள்ளாமல் தவிர்த்தான்.
ஏனோ அவள் கோபப்படுவதை பார்த்து உள்ளுக்குள் ஒரு ஆனந்தம்.
இத்தனை நாள் அவனை எப்படி எல்லாம் அழைய வைத்தாள். அதற்கெல்லாம் சேர்த்து இன்று அவளை பழி வாங்கினான் என்றே கூற முடியும்.
அன்று சாயந்திரம் வேலை முடிய, அனைத்து பணியாட்களும் புறப்பட தயாராக, பவ்யாவும் யஷ்வந்தை ஒரு முறை முறைத்து விட்டு பையை எடுத்து கொண்டு கிளம்பத் தயாரானாள்.
யஷ்வந்தோ வேலையை நிறுத்தி விட்டு, நிமிர்ந்து அவளை பார்த்தவன், "நீ எங்க கிளம்பிட்ட?" என்று கேட்டான்.
பவ்யாவோ அவனை முறைப்பதை நிறுத்தாமல் "வேற எங்க சார் வீட்டுக்கு தான்" என்றாள் விலுக்கென.
அவள் கோபத்தில் இருப்பது அவளது பேச்சில் அப்பட்டமாக அவனுக்கு தெரிந்தது.
அவனும் அதை எண்ணி உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டவன், "அதுக்கென்ன அவ்ளோ அவசரம் லேட்டாவே போலாம். சிட்" என்றான்.
பவ்யாவோ "ஆனா நான் சஞ்சு கூட கிளம்பனும் சார். அவ எனக்காக காத்துட்டு இருப்பா" என்று எங்கோ பார்த்த படி சொல்ல,
அவனோ, "நீ அவளை கிளம்ப சொல்லு. நம்ம லேட்டா தான் போறோம்" என்றான் முடிவாக.
ஆனால் அவளுக்கோ இதற்கு மேலும் அவன் முகத்தை பார்க்க கடுகளவும் இஷ்டம் இல்லை.
"சார் என்னோட டியூட்டி டைம் முடிஞ்சிடுச்சு. இதுக்கு மேல என்னால இருக்க முடியாது நான் கிளம்பனும்" என்று திட்ட வட்டமாக சொல்லி விட்டு அங்கிருந்து நகரப் பார்க்க,
யஷ்வந்துக்கோ அவள் மறுத்து பேசியது கோபத்தையே கொடுக்க, மேசையை சட்டென அடித்தவன், "என்னடி நான் சொன்னது உன் காதுல விழலையா? உன்ன.... இருக்க... சொன்னேன்" என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தம் கொடுத்து சொல்ல,
பவ்யாவோ அவனின் இந்த கோபமான செயலில் பயந்து போனவள், "ஆனா நான்.... நான் எப்படி தனியா போறது? அவ கூட தான் நான் தினமும் போவேன்." என்றாள் தழு தழுத்த குரலில்
யஷ்வந்தோ ஆழ்ந்த மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்தியவன், அவளை உறுத்து விழித்த படி, "நான் உன்னை ட்ராப் பண்ணுறேன் போதுமா?" என்று கூற,
அவளோ "ஆனா..." என்று ஏதோ பேச பார்த்தவள், அவன் தன்னை முறைத்துப் பார்ப்பதை உணர்ந்து பக்கென வாயை மூடிக் கொண்டு, சரி என்பது போல தலையை ஆட்ட, அவனோ இதழ் பிரித்து லேசாக புன்னகைத்த படி, "குட்" என்றவன் மீண்டும் லேப்டாப்பில் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்.
பவ்யாவும் 'சரியான காட்டு மிராண்டி பய' என்று வாய்க்குள் முணு முணுத்த படி, சஞ்சனாவிடம் சொல்லி அவளை அனுப்பி விட்டு மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டாள்.
யஷ்வந்தை பார்க்க பார்க்க கோபம் தான் வந்தது. ஏன் இவ்வாறு எல்லாம் நடந்து கொள்ளுகிறான் என்றே புரியவில்லை.
தன்னை கஷ்ட படுத்தி பார்ப்பதே அவனுக்கு வேலையாகி விட்டது என்று எண்ணிக் கொண்டவளுக்கு தன் சொன்ன முடிவுக்கு அவன் எந்த பதிலும் அளிக்காமல் தன்னை இவ்வாறு வருத்த பட வைப்பதை நினைக்கும் போது இன்னுமே கொலைவெறி தான் வந்தது.
இவ்வாறு நேரம் இரவு பத்து மணியை தாண்டி விட, பவ்யாவுக்கோ தூக்கம் தூக்கமாக வந்தது.
'ஓ காட் சும்மா ஒக்கார வச்சி தூக்கம் வேற வருது. இப்போ தூங்குனாலும் திட்டுவானே!' என்று புலம்பலுடன் தூங்கி வழிந்த படி அமர்ந்திருக்க,
ஒரு வழியாக வேலையை முடித்த யஷ்வந்தோ லேப்டாப்பை மூடி விட்டு, திரும்பி பவ்யாவை பார்த்து, 'தூங்கினது போதும் வா கிளம்பலாம்" என்று சத்தமாக கூறி விட்டு எழுந்து செல்ல,
பவ்யாவும் கொட்டாவியை விட்ட படி, பையை எடுத்து கொண்டு அவசரமாக அவன் பின்னால் ஓடினாள்.
இருவரும் வண்டியில் சென்று கொண்டிருக்க, பவ்யாவோ தூங்கி வழிந்தாள்.
யஷ்வந்த் வண்டியை ஓட்டிக் கொண்டே, பக்கவாட்டாக திரும்பி அவளை பார்த்து, "சரியான கும்பகர்ணி. எப்படி தூங்குறா" என்று முணு முணுத்துக் கொண்டான்.
ஒரு வழியாக வீட்டுக்கு வந்து வாசலில் காரை நிறுத்த, அவளோ கண்ணை கசக்கிய படி, சுற்றி முற்றி பார்த்தவள் அந்த இடத்தை பார்த்து திகைத்து தான் போனாள்.
அவன் அழைத்து வந்தது சஞ்சனா வீட்டுக்கு அல்ல, அவன் வீட்டுக்கே தான்.
இதற்கு மேலும் அவளை விட்டு விலகி இருக்க அவனுக்கு பொறுமை இல்லை. அதனால் தான் இப்போதே கூட்டி வந்து விட்டான்.
பவ்யாவோ "இ... இது உங்க வீடுல்ல?" என்று கேட்க,
யஷ்வந்தோ "நம்ம வீடு டி" என்று திருத்தியவன் வண்டியை விட்டு இறங்கி விறு விறுவென உள்ளே சென்று விட,
பவ்யாவுக்கோ இன்னுமே சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் வரை தன்னை கண்டுகொள்ளாமல் இருந்தவன் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வீட்டுக்கு கூட்டி வந்து விட, அவளுக்கு என்ன யோசிப்பது என்றே புரியவில்லை.
யஷ்வந்தை பொறுத்த வரை அவன் எப்போதுமே இப்படி தானே!
அவன் நினைத்தால் அதை செய்து விடுவான். அடுத்தவரிடம் அனுமதி கேட்டு அதை நடை முறை படுத்துவது எல்லாம் அவன் பழக்கம் இல்லையே!
'இவனை சத்தியமா புரிஞ்சிக்கவே முடில்ல' என்று புலம்பிய பெண்ணவளோ பையை எடுத்து கொண்டு சற்று தயங்கிய படியே வீட்டுக்குள் சென்றாள்.
போகும் போதே, 'பாவி பய என்னை மட்டும் தனியா விட்டுட்டு அவன் பாட்டுக்கு உள்ள போயிட்டான்.' என்று அவனை திட்ட மறக்கவில்லை.
அவளோ வீட்டுக்குள் வந்தவள் சுற்றி முற்றி பார்க்க, யாருமே இருக்கவில்லை.
அனைவரும் உறங்கி இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டவள், மடியேறி அவன் அறைக்கு சென்றாள்.
அவள் அறைக்குள் வர, யஷ்வந்த் குளியலறையில் இருக்கும் சத்தம் கேட்டது.
அவளும் ஒரு பெரு மூச்சுடன் அங்கிருந்த சோபாவில் வந்து அமர்ந்து கொண்டாள்.
அந்த அறையை ஒரு கணம் சுற்றிப் பார்த்தாள். ஏனோ அதை பார்க்கும் போதே அந்த பழைய நாட்கள் ஒரு நொடி அவள் கண் முன் வந்து போக, உள்ளுக்குள் சற்று பயப்படவே செய்தாள்.
என்ன இருந்தாலும் அவள் வாழ்க்கையில் நடந்த அந்த கோர சம்பவம் அந்த அறையில் தானே நிகழ்ந்தது.
அப்படி இருக்க அதை பார்த்தவளுக்கு மீண்டும் ஒரு பதட்டம் தன்னை சூழ்ந்து தான் கொண்டது.
அதை கலைக்கும் விதமாக அவள் தொலைபேசி அலற, பையில் இருந்து அதை எடுத்து பார்த்தாள்.
சஞ்சனா தான் அழைத்தாள்.
அவள் எண்ணை பார்த்ததும் 'ஓ காட் சஞ்சு கிட்ட விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே!' என்று எண்ணிய படி,
அழைப்பை ஏற்று அவள் பேச முன்னரே, "பவி இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க? நைட் ரொம்ப லேட் ஆயிடுச்சு. சீக்கிரம் வீட்டுக்கு வா" என்று அவள் பட படவென பேச,
பவ்யாவோ "சஞ்சு நான் இப்போ.... இப்போ யாஷ் வீட்டுல இருக்கேன்டி. சொல்லாம கொள்ளாம திடீர்னு இங்க கூட்டிட்டு வந்துட்டாரு. சாரிடி டென்ஷன்ல உனக்கு போன் பண்ண மறந்துட்டேன்" என்று தயக்கத்துடனேயே சொல்ல,
அதை கேட்ட சஞ்சனாவோ "ஓஹோ அப்போ மேடமை பாஸ் நேரா வீட்டுக்கே கூட்டுட்டு
போயிட்டாரோ. காலையில இருந்து அவர் என்னை கண்டுக்கவே இல்லன்னு புலம்பிட்டு இருந்தியே! இப்போ பார்த்தியா உன் மேல லவ் இல்லாமலா உடனே உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாரு!" என்று சொல்ல,
பவ்யாவுக்கும் அது புரியவே செய்தது. அவன் என்ன தான் வெளியில் இறுக்கமாக இருந்தாலும் உள்ளுக்குள் தன்னை எவ்வளவு நேசிக்கிறான் என்பது அவனது இந்த செயலில் தெளிவாகத் தெரிந்தது.
சஞ்சனாவோ "இப்போ தான்டி எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு இனியாவது பழசை பேசி அவர் கிட்ட சண்டை போடாம நல்ல படியா நடந்துக்கோ என்ன புரிஞ்சிதா?" என்று உரிமை கலந்து கூற,
பவ்யாவும் புன்னகைத்த படி, "ம்ம் சரிடி எனக்கு புரிஞ்சிது" என்று பேசி விட்டு, தொலைபேசியை துண்டிக்கவும், யஷ்வந்த் குளியலறையில் இருந்து வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது.