GG writers
Moderator
அஸ்திரம் 57…
என் வாழ்வின் வசந்தமவள்!...
அத்தியாயம் 8…
சரியாக பன்னிரண்டு மணிக்கு தன்னவன் தனக்கு அழைத்து வாழ்த்து கூறுவான் என எண்ணி கொட்ட கொட்ட முழித்தவாறு கைபேசியை கையில் பிடித்துக்கொண்டு மெத்தையில் நகம் கடித்தபடி அமர்ந்திருந்தாள் அவள்…மதி…
அவள் எப்போதும் அப்படித்தான் வருடா வருடம் தேவா இந்நேரம் சரியாக அழைத்து விடுவான் இல்லை என்றால் அவனை உண்டு இல்லை என்று பண்ணி விடுவாள் மதி….
முதல் வருடம் இதுபோல் பன்னிரெண்டு மணிக்கு வாழ்த்து கூற வேண்டும் என அவள் அன்பு கட்டளை விடுக்க அவனும் அழைத்து இருந்தான்….
ஆனால் அச்சமயத்தில் அவளுக்கு அவளது தோழி அழைத்து வாழ்த்து கூறிக் கொண்டிருந்ததால் பிசி என வந்தது…எனவே தேவா காலையில் சொல்லிக் கொள்ளலாம் என திரும்ப அழைக்க முயலவில்லை …..
ஆனால் மறுநாள் காலையில் வந்த மதி தேவாவை உண்டு இல்லை என ஆக்கிவிட்டாள்…. அவனும் தன்னிடம் இவ்வாறு உரிமை எடுத்துக் கொண்டு பேசுகிறாளே என புன்னகையுடன் நின்றிருந்தான்….
அதற்கு அடுத்த வருடத்தில் சரியாக பன்னிரெண்டு மணிக்கு தேவா அழைத்து வாழ்த்து கூற அவளோ தனக்காக வாங்கிய பரிசினை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு ஒரே தொல்லை…..அவனும் அவளுக்கான பரிசினை புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்க அதை பார்த்ததும் மதி துள்ளி குதிக்காத குறையாய் அவனிடம் சிரித்து சிரித்து பேசினாள்….
இது இறுதி வருடம் என்பதால் நிச்சயம் தேவா தனக்கு மிகப்பெரிய பரிசினை தர நினைத்திருப்பான்… ஏனெனில் பார்ட்டி வேண்டாம் என்பதால் தன் மனம் நோகக்கூடாது என அவன் தன்னை சந்தோஷப்படுத்துவதற்காக ஏதேனும் பெரிதாய் செய்திருக்கலாம் என மனக்கோட்டை கட்டிருக்க ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக அவன் அழைத்து வாழ்த்து கூட கூறாததால் எரிமலையாய் வெடித்து கொண்டிருந்தாள் உள்ளுக்குள்…
ஏன் தேவா தனக்கு அழைக்கவில்லை என திரும்பத் திரும்ப பைத்தியம் போல் தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தவள் அவனுக்கு அழைக்க அவனும் இனியாவிடம் பேசிவிட்டு கைபேசியை பாக்கெட்டில் வைத்த அடுத்த கணம் தவறுதலாய் அணைக்கப்பட்டு விட்டது….
அதன் காரணமாக தேவாவிடம் மதியால் பேச இயலவில்லை அதேபோல் தேவாவிற்கும் மதி அழைத்தது எதுவும் தெரியவில்லை….
அவனும் அழைத்து வாழ்த்து கூறவில்லை தான் அழைத்தும் அணைக்கப்பட்டுள்ளது என வந்திருப்பதை அறிந்ததும் மதிக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்தது….
அவன் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பதாக ஏதேதோ கற்பனை செய்தவள் அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்….
மறுநாள் காலையில் அவனை சென்று நாக்கு பிடுங்குவது போல் கேட்க வேண்டும் என முடிவு செய்தவளாய் உறங்கச் சென்று விட்டாள்....
மறுநாள் விடிந்ததும் இனியா தான் முதலில் கண்விழித்தது... எப்போதும் கண் விழித்ததும் இன்னும் இரண்டு நிமிடம் உறங்கலாம் என மனம் சோர்வாக இருக்கும்…
ஆனால் இன்று தான் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு அனைத்தையும் மறந்து அவள் உறங்கியதால் உற்சாகமாகவே எழுந்தாள்…
எழுந்ததும் அவள் கண்டது சோபாவில் ஒரு பக்கமே தலை சாய்த்து சின்னதாய் வாய் திறந்தபடி உறங்கிக் கொண்டிருந்த தேவாவை தான்….
அவனை அவ்வாறு கண்டதும் புன்னகைத்தவள் எழுந்து குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு பின்னர் சமையலறையில் புகுந்து கொண்டாள்…. அவனுக்கும் தனக்குமான காபியை கலந்து எடுத்துக் கொண்டு வந்தவள் அவனது தோள்தட்டி எழுப்பினாள்,
" தேவன்…. தேவன்…"
தேவாவோ வழக்கமாய் வேந்தன் எழுப்புவதாகவே எண்ணி கொண்டு,
"இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்குறேன்டா மச்சா…" என தூக்கத்திலேயே உளறிட அதைக் கண்டு கிளுக்கென சிரித்தவளது சத்தத்தில் சட்டென கேட்ட பெண் சிரிப்பில் விழுந்தடித்து எழுந்தவன் கண்ணை கசக்கி கொண்டு தன் எதிரே அமர்ந்திருந்தவளை கண்டான்…
இனியா முகம் கொள்ள புன்னகையுடன் அவனையே பார்த்தவாறு அமர்ந்திருக்கவும் அவனுக்கு அப்போதுதான் நிதர்சனம் புரிந்தது…. பின்னந்தலையை கோதியபடி அவளைப் பார்த்து,
"குட்மார்னிங் இனியா…!" என்றிடவும் பதிலுக்கு,
" குட் மார்னிங் தேவன்…. சீக்கிரம் போய் பிரஷ் அப் ஆகிட்டு வா…காபி உனக்கும் சேர்த்து போட்டு வந்து இருக்கேன்" என கூறினாள்…
அவள் கூறியபடி குளியலறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவனின் முன் காபி கோப்பையை நீட்ட அவனும் புன்னகையுடனே அதை வாங்கி குடிக்கலானான்….
ஒரு சொட்டு விடாது குடித்து முடித்த தேவன் கப்பை கீழே வைத்து விட்டு எப்பவும் போல,
" காபி சூப்பரா இருக்கு உன் பெயருக்கேத்த மாதிரி இனிப்பா…!" என்றதற்கு சத்தம் வராது சிரித்துக் கொண்டவளிடம்,
"சரி டைம் என்ன ஆச்சு…?" என சுற்றும் முற்றும் பார்த்தவாறு கேட்க அவளோ அங்கிருந்து சுவற்றில் மாட்டி இருந்த கடிகாரத்தை பார்த்து,
" டைம் ஏழு ஆயிடுச்சி தேவன்"
"ஓ அப்படியா…!" என ராகம் இழுத்தவன் பின் நினைவு வந்தவனாய்,
" என்னது ஏழாயிடுச்சா…???" கைப்பேசியை எடுத்து பார்க்க அதுவும் அணைத்து இருந்தது… நெற்றியில் மெல்லமாய் தட்டிக் கொண்டவன்,
" சரி இனியா நான் கிளம்புறேன் நீ உடம்பை பார்த்துக்கோ.. இன்னிக்கு கிளாஸ்க்கு வருவியா இல்ல லீவா??..." என தலையை கோதியபடி கேட்டவனுக்கு,
" கிளாசுக்கு வரணும் தேவன்…லாஸ்ட் செமஸ்டர் வேற அடிக்கடி லீவ் போட்டா நோட்ஸ் எல்லாம் சரியா எடுக்க முடியல…"
" சரி சரி நீ பார்த்து வா.. டாக்டர் கொடுத்த மருந்தெல்லாம் சாப்பிட்டு வா…. சரியா நான் கிளம்புறேன்…டேக் கோர்…பாய்" என கூறிவிட்டு வெளியேறி விட்டான்…
வாசல் வரை வந்து நின்ற இனியா வாசல் கதவோரம் சாய்ந்து இருக்க கேட்டினை திறந்து வெளியே சென்ற தேவாவும் இரு அடிகளை தான் எடுத்து வைத்து இருப்பான்.. நின்று நிதானமாய் தலையை திருப்பி அவளைப் பார்த்தான் இருவரது முகமும் நிர்மூலமாக இருந்தது….ஆனால் இருவரும் விழிகளும் ஏதோ பேசிக் கொண்டது ரகசியமாய்… அவன் ஆட்டோ ஏறி சென்றுவிட ….பெருமூச்சுவிட்டு இனியா கதவினை சாற்றி தாழ் போட்டுவிட்டு அதன்மீது சாய்ந்து புன்னகைத்துக் கொண்டாள்….