வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என் வாழ்வின் வசந்தமவள்!...முன்னோட்டம்

Status
Not open for further replies.
அஸ்திரம் 57

தனது மேடிட்ட வயிற்றுடன் மூச்சு வாங்கியபடி வேகமாக நடந்து வந்துக்கொண்டிருந்தாள் பெண்ணவள்....அவளை தாண்டி செல்வபவர்கள் அவளை விசித்திரமாக பார்ப்பதை அவள் அறிந்தாலும் கவலைக்கொள்ள நேரமில்லை அத்தோடு மனதில் தெம்பும் இல்லை....ஏனெனில் கேள்விப்பட்ட விடயம் அவளை பலவீனமாக்கி இருந்தது....தன் புடவை தலைப்பால் வியர்வை மொட்டுக்கள் அரும்பி இருந்த கன்னங்களையும் கழுத்தையும் துடைத்த படி வந்தவள் அந்த பார்ட்டி ஹாலுக்குள் காலை எடுத்து வைக்கும் நொடி அனைத்து தெய்வங்களையும் விழிகள் மூடி வேண்டியவாறே உள்ளே நுழைய....சரியாக அங்கு குழுமி இருந்த கூட்டம் கைத்தட்டி ஆரவாரப்படுத்தியபடி இருக்கவும் தலையை எக்கி எக்கி அவள் மேடையை நோக்கினாள்...


அங்கு அவள் கண்ட காட்சி உயிரை எடுத்து விட்டு அவ்விடத்தில் இரும்பு குண்டை அழுத்தி வைத்தவாறு கனம் உண்டானது....விழியில் நீருடன் தளர்ந்து போனவள் மொத்தமாய் உடைந்துவிட்டிருந்தாள்....தன் கண் முன்னே தனது காதல் கணவனுக்கும் அவனது முன்னால் காதலிக்கும் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றுக் கொண்டிருப்பதை எந்த பெண்ணால் தான் தாங்கிட இயலும்....!


என் வாழ்வின் வசந்தமவள்!IMG-20230130-WA0015.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top